Tuesday, December 6, 2011

பா.ஜ.கவும், காங்கிரசும் ஒன்றுதான் எனபது கேரளாவிலும் காணலாம்.

காங்கிரஸ் கட்சிதான் இந்த முல்லைபெரியார் பிரச்சனையை ஊதி பெரிதாக்கி, பொய்யை கிளப்பி அதில் மீன் பிடிக்க, எர்நாகுல்கம் மாவட்ட, பிரவம் தொகுதிக்கான இடைதேர்தல் ஒத்திகையை பார்க்கிறது என்றால், அதற்கு போட்டி போட்டு அச்ச்தானந்தனும் அந்த தொகுதியை கைப்பற்ற அதே நாடகத்தை நடத்துகிறார்கள் என்றால், பா.ஜா.காவிற்கு எண்ண இழவு வந்தது? அவர்கள் பங்கிற்கு கோட்டயம் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற "ஐயப்ப சாமிகள்" வரும்போது அவர்களை வழி மறித்து, அதில் இரண்டு "சாமிகளுக்கு" செருப்பு மாலை போட்டிருக்கிறார்கள். அதில்தான் தொடங்கியது மோதல்.

ஆமாம். இந்த பா.ஜ க .தான் "சாமி"களை வைத்து அரசியல் செய்யும் கட்சிதானே? இவர்களே தமிழ்நாட்டு சாமிகளை கேவலப்படுத்தினால், இவர்களுக்கு உண்மையில் "சாமி நம்பிக்கை" கிடையாது என்பதும், அது வெறும் அரசியலுக்கு தான் என்பதும் இதிலிருந்து புரிகிறதே? கேரள மாநில மனித உரிமை ஆணையம் இந்த மோதலையும், அணை உடையும் என்ற பரப்புரையையும், "ஊடக, அரசியல்வாதிகளின் " கூட்டு சேட்டை என்று தெளிவாக கூறி விட்டதே? கேரள அரசு வழக்கறிஞரும் முல்லை பெரியார் அணை பலமாக உள்ளது என்று தெளிவாக நீதிமன்றத்திலேயே கூறி விட்டாரே? இவர்களும் மலயாளிகல்தானே? உண்மை சொல்லும் மலையாளி, பொய் சொல்லும் மலையாளி என்று வேண்டுமானால் பிரித்து பார்க்கலாம்.இது காங்கரஸின் திட்டமிட்ட சதி என்பது அம்பலமாகிவிட்டது.

செல்வி. ஜெயலலிதா மீது "கூடங்குளம்" விசயத்திலும் இன்ன அபிர விசயங்களிலும் மோதல் போக்கை கையாளும், டில்லிக்காரர்கள் இந்த முல்லை பெரியார் பிரச்சனையை பெரிதாக்குவதில் முழுமையாக கேரளா பக்கம் நின்று செயல்படுகிறார்கள். கடலுக்கு சென்று வீணாகும் "தண்ணீரை" கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்க தயாரில்லாத கேரள அரசியல்வாதிகள் எப்படி இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவானவர்கள்? இந்த கேள்வியை எல்லோரும் கேட்க வேண்டும்.டில்லிகாரனை பொறுத்தவரை "நீ கூடங்குளத்தில் மக்களின் அச்சத்தை" போக்க சொன்னாயல்லவா? நான் கேரள மக்கள் மத்தியில் இப்போது முல்லை பெரியார் இடையும் என்ற அச்சத்தை கிளப்புகிறேன் பார் எனபதுதான் டில்லியின் தந்திரம்.

2006 ஆம் ஆண்டு இதே டில்லியில் இருக்கும் உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியார் வழக்கில் தலைமை நீதியரசர் "சபர்வால்" கொடுத்த தீர்ப்பில் " 142 அடி உயர்த்தலாம்" என்று மட்டும் கொடுக்க வில்லை. கேரளா பயப்படுவ்பது போல முல்லை பெரியார் அணை உடைந்தால், அதிலிருந்து வெளிவரும் தண்ணீரின் அளவு "பதினோரு டி.எம்.சீ. தண்ணீர்தான்". அந்த தண்ணீர் இடிக்கி அணிக்கு வரும். இடிக்கி அணையின் கொள்ளளவு "எழுபது டி.எம்.சீ.". அதில் பெருமழை வந்த காலங்களிலேயே "ஐம்பத்தி ஏழு டி.எம்.சீ" தண்ணீர்தான் நிரம்புகிறது. அதாவது பெருமழை காலங்களிலேயே இடிக்கி அணையில் " பதினேழு டி.எம்.சீ." க்கு இடம் இருக்கிறது. முல்லை பெரியார் உடைந்தாலுமே " பதினோரு" டி.எம்.சீ.தான் வெளிவரும் என்பதால் இடிக்கி அணை தாங்கி கொள்ளும். இந்த தகவலை "அமணை பற்றிய ஆராய்ச்சியை" செய்த உச்சநீதிமன்றம் கணக்கெடுத்து கூறியுள்ளது. இது அந்த சபரிவாலது தீர்ப்பில் உள்ள செய்திகள்.

இவ்வாறு கூறிய உச்சநீதிமன்றம் நியமித்த "முன்னாள் நீதியரசர் ஆனந்த் " தலைமையிலான குழு வருகிற "ஜனவரியில்" தங்கள் "அறிககையை" வைக்க போகிறார்கள் என்று தெரிந்த கேரள காங்கிரஸ்காரர்கள் இப்போது அவசர , அவசரமாக "அணை 999 " என்று சினிமாவை வெளியிட்டு அதன்மூலம் கேரள மக்களை "பீதி" அடைய செய்கிறார்கள். இவ்வாறு செய்வதே அணை அருகே " ஆக்கிரமிப்பு செய்தவர்களும், உல்லாச விடுதி" நடத்துபவர்களுமான அரசியல் வாதிகள்தான் என்றும் செய்தி வருகிறது. புதிய அணை கட்டவும், பழைய அணையை உடைக்கவும் "ஒப்பந்தம்" எடுக்க திட்டமிட்டுள்ளார் என்றும் செய்திகள் வருகின்றன. ஆக மொத்தத்தில் கேரள மக்களை ஏமாற்றும் கேரள அரசியல்வாதிகள்தான் உண்மையான "வில்லன்கள்".

No comments:

Post a Comment