உலகமெங்கிலும் ஒரே நேரத்தில் கணிசமான மக்களை, புண்படுத்திய நிகழ்வு இப்போது நடந்துள்ளது. இத்தகைய அதிர்வை ஏற்படுத்திய பாதிரியார், அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறிய திருச்சபையின் பிரதிநிதி. அவர் பெயர் டெர்ரி ஜோன்ஸ். அவர் டோவ் வேர்ல்ட் அவுட்ரீச் மையம் என்ற திருச்சபையின் பாதிரி. இவரது திருச்சபையில் இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கையோ ஐம்பதுக்கும் குறைவு. இப்படி 50 பேர் கூட இல்லாத ஒரு திருச்சபையின் பாதிரியார், உலகில் உள்ள எல்லா முஸ்லிம் மக்களையும் ஒரே நேரத்தில் புண்படுத்தி அதிர்ச்சியடையச்செய்யமுடியும் என்றால், இது என்ன கூத்து என்று கேட்கத்தோன்றும். அந்த பாதிரி செப்டம்பர் பதினோராம் நாள் நடத்தப்பட்ட அல்-கொய்தா தாக்குதலை கண்டிப்பதற்காக, அதேநாளில் உலக அளவில் குரானை எரிக்கும் போராட்டம் நடத்தவேண்டும் என்று அறிவித்ததை ஒட்டியே இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. அந்த பாதிரியும் அதற்க்கான ஊடவியலாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அதில் அமெரிக்காவின் மீது அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் நாளில், அந்த அல்-கொய்தாவின் நம்பிக்கை எங்கிருந்து வருகிறதோ அந்த குரானை எரிக்கவேண்டும் என்பதாக ஒரு வாதத்தை முன்வைத்து, அதற்காக உலகம் முழுவதையும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தார். இப்படி மிகச்சிறிய எண்ணிக்கையில் உள்ள ஒரு திருச்சபையை நடத்தும் ஒரு பாதிரிர் செய்ததால் இது திட்டமிட்டு தனது பெயர் பிரபலமாவதற்க்காக செய்கிறார் என்றும் தெரிகிறது. அதைத்தான் அமெரிக்காவின் கூட்டு ராணுவ தளபதியும், அமெரிக்க அதிபர் ஒபமாவும் கூறியுள்ளனர். இப்படி நாடகமாடும் முதலில் இந்த பாதிரியை கடுமையாக கண்டித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அறிக்கை விடுத்தார். அப்போதும் இந்த பாதிரி இறங்கிவரவில்லை. அதற்குப்பின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டு ராணுவ தளபதி இது ராணுவத்தில் உள்ள தங்கள் வீரர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் ஏறு எச்சரிக்கை விடுத்தார். அடஹ்ர்க்கும் இந்த பாதிரி இணங்கவில்லை. எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சியின் சார பாலின், சினிமா நட்ச்சத்திரம் ஏஞ்செலினா ஜோலி ஆகியோர் கூறியும் இந்த பாதிரி கேட்டபாடில்லை. பிறகு ஒபாமாவே இது பற்றி கடுமையாக எச்சரித்தார். இந்த பாதிரியின் அறிவிப்பு, பல நாடுகளில் குறிப்பாக பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரப்படுத்தி அவர்களை அல்-கொய்தாவில் சேரும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்று கூறினார். அதுமட்டுமல்ல அவர்கள் தங்கள் உயிரைகொடுத்து அமெரிக்க நகரங்களையும், ஐரோப்பிய நகரங்களையும் தாக்க முன்வருவார்கள் என்றும் எச்சரிக்கை செய்தார். அதன்பிறகு இந்த பத்திரி நடிகன், தன்னை வெள்ளை மாளிகையோ, அமெரிக்க அதிபரோ கேட்டுக்கொண்டால் தான் தனது எரிப்பு திட்டத்தை கைவிடத்தயார் என்றான். அதற்குள் அமெரிக்காவின் உள்நாட்டு உளவுத்துறையான எப்.பி.ஐ. தனது ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அவசர ஆலோசனை குழுவை அமேரிக்கா கூட்டியது. அதில் எங்கெல்லாம் இந்த பாதிரி அர்விப்புக்கு எதிராக அல்-கொய்தா திட்டமிடுகிறார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் எந்த இடத்திலும் அல்--கொய்தா அப்படி எதுவும் திட்டமிடவில்லை என்று தெரிய வந்தது. அதன் பிறகு இப்போது அந்த பாதிரி தனது திட்டத்தை கைவிட்டிறிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அடிபப்டையில் எப்படி ஒரு நம்பிக்கை மீது நடத்தப்படும் தாக்குதல் அல்லது நடத்தப்படப்போவதாக அறிவிக்கப்படும் ஒரு தாக்குதல், உலகை உலுக்கிவிடும் என்று காட்டக்கூடிய நிகழ்வு. இந்த அறிவிப்பை இந்திய றரசு உடனடியாக எதிர்த்து அறிக்கை விட்டது. அதுவும் நமது உளவுத்துறை உடனடியாக இது இந்தியாவில் உள்ள மக்களை மதரீதியாக பிரிப்பதில் கொண்டுபோய் விடும் என்று எச்சரித்துள்ளது. அதேசமயம் இதை ஊடகங்கள் பெரிது படுத்தி பிரச்னையை ஏற்படுத்திவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது. உலக மக்கள் பல மதங்களின் நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கைகளையும் எதிர்த்து எதையும் செய்வதற்கு யாருக்குமே இந்த உலகில் உரிமை கிடையாது. மனித உரிமைகளில் மத நம்பிக்கைகளும் ஒரு இடத்தை பிடித்துள்ளன. ஐ.நா. சபையின் பிரபஞ்சம் தழுவிய மனித உயரிமைகள் பிரகடனத்தில், மத உரிமைகள் மனிதனின் அடிப்படை உரிமைகள் ஆகவே இது மனத்தளவில் மட்டுமல்ல, மனித உரிமை என்ற அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. அடுத்தவர் மத நம்பிக்கைகளை பறிக்கவோ, கேலி செய்யவோ, எதிர்க்கவோ, இந்த ப்போவுலகில் யாருக்கும் உரிமை கிடையாது. அப்படியிருக்க மேற்கண்ட பாதிரியார் ஏன் இவ்வாறு செய்தார்? அவரும் ஒரு மத நம்பிக்கை கொண்டவர்தானே? அவரது மதமான கிறித்துவத்தில் எத்தனையோ பிரிவுகள் உள்ளனவே? அதில் இவர் ஒரு மிகச்சிறிய பிரிவை சேர்ந்தவர்தானே? வர இப்படி பிரச்னையை கிளப்பியதர்க்கும், அமெரிக்க உளவுத்துறைக்கும் சம்பந்தம் உண்டா? இவ்வாறு பல கேள்விகள் எழும்பினாலும், அடிப்படையில் மத நம்பிக்கைகள் கொண்டோரும், மத நம்பிக்கைகள் இல்லாதோரும் சேர்ந்து இது போன்ற செயல்களை எத்ரிக்க வேண்டும.
இங்கே நமது தமிழ்நாட்டில் இதே போல ஒரு பிரச்சனை உள்ளது. அது விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் ஊர்வலம் சம்பந்தப்பட்டது. அத்தகைய ஊர்வலத்த்ளும் பத்து ஆண்டுகளுக்குமுன்னால் கலவரம் வெடித்தது. அதுவும் கூட தூண்டிவிடப்பட்டதுதான். தமிழர்கள் மத்தியில் அமைதி நிலவிவந்த சூழ்நிலையில், அதுவும் குறிப்பாக முஸ்லிம், கிருத்துவர், இந்து என்ற பகை உணர்வு இன்றி அமைதி நிலவி வந்த சூழ்நிலையில், இந்த விநாயகர் ஊர்வலங்கள் திடீரென இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரிதாக நடத்த திட்டமிடப்பட்டன. அப்படி நடத்த ஆர்வம் காட்டியவர்கள் சென்னை வந்து வணிகம் செய்துவரும், வடநாட்டு மார்வாடி சமூகத்தினராக இருந்தனர். அவர்களுக்கு இந்த விநாயகர் சதுர்த்தி மீது மட்டும் அப்படி அக்கரைவந்ததால் இநத்தகைய ஊர்வலங்களை கட்டமைத்தர்களா? அப்படித்தெரியவில்லை. ஏன் என்றால் அவர்கள் வணிகம் செய்யும் இடங்களான சௌகார்பேட்டை போன்ற பகுதிகளில், முஸ்லிம்கள் இவர்கள் செய்துவரும் அதே தொழிலை செய்துவருகிறார்கள்.
அதில் இருசாராருக்கும் வணிகப்போட்டி உண்டு. அந்த வணிகபோட்டி இந்த ஊர்வலங்களில் எதிரொலித்ததா? ஆம். ஏன் என்றால் இந்த ஊர்வலங்கள் திருவல்லிகேணியில் வரும்போது, ஐஸ் ஹவுஸ் முன்பு உள்ள மச்சொதி முன்பு திட்டமிட்டு மத்தளம் அடித்து ஓசையை கிளப்பினார்கள். அது தொழுகை நேரம். ஆகவே முஸ்லிம்கள் எரிச்சல் அடைந்தனர். அதுவே கலவரமாக மாறியது. இது திட்டமிட்டு செய்யப்பட்டது. இதுவும்கூட ஒரு மத நம்பிக்கை மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி அதன்மூலம் ஆதாயம் பெற முயர்ச்சிப்பதுதான். அப்போது அந்த கலவரம் போலிசின் துப்பாக்கி சூடுவரை கொண்டுவிட்டது. அதில் இரண்டு முஸ்லிம்கள் இறந்துவிட்டனர். அதுபோன்ற கலவர் நடத்துவது திட்டமிட்டு நடத்தப்பட்டதும, அதை நடத்தியவர்கள் தங்களது வணிக நோக்கத்திற்காக செய்தார்கள் என்பதும் தெருய வந்த பிறகு, இந்து மக்கள் இதுபோன்ற விநாயகர் ஊர்வலங்களில் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டனர். அதன்பிறகு விநாயகர் ஊர்வலங்களை நடத்தும் அமைப்புகள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர். அனாலும் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி ஊர்வலனகளின் போதும் ஒருவிதமான பதட்டம் இப்போதும் நிலவுகிறது. இது தேவையற்ற நிலைதானே? எதற்க்காக ஒருவருடைய மத நம்பிக்கைகள் மீது இன்னொருவர் தலையிடவேண்டும்? மத நல்லிணக்கம் இந்த மக்கலதி வரலாற்று ரீதியான பண்புதானே? அதை பின்பற்ற ஏன் எல்லோரும் சேர்ந்து ஒத்துழைக்க மறுக்கிறார்கள்?
Friday, September 10, 2010
Thursday, September 9, 2010
மாவோ நினைவு ஒருநாள் மட்டுமா?

செப்டம்பர்-9 ஆம் நாள், உலகம் முழுவதும் மா-சே--துங் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் உலகம் முழுவதும் புரட்சியாளர்கள், சீனப்புரட்சியில் மாவோவின் பங்கைப்பற்றி பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்; பரிமாறிக்கொள்கிரார்கள். ஆனால் இந்தியாவில் இன்று மாவோ என்ற பெயர் அடிபடாத நாளே இல்லை. தாளே இல்லை. அந்த அளவுக்கு மாவோ என்ற சொல் இந்தியாவின் வயல்வெளிகளிலும், மலைகளிலும், காடுகளிலும், அதில் வாழும் பழங்குடியினர் மத்தியிலும், பிரபலமாக இருக்கிறது. அதன்விளைவாக பழங்குடியினரை அடக்குவதற்காக அங்கே சென்றுள்ள மத்திய துணை ராணுவம் மத்தியிலும், மாவோ என்ற பெயர் ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் பெயராக இருக்கிறது. அதேபோல மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மத்தியிலும் மாவோ என்ற பெயர் இன்று ஒருவிதமான கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது. அவ்வாறு மாவோ ஏன் இன்று இந்திய அளவில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்? சீன நாட்டில் மா-சே-துங் தலைமை தாங்கிய புரட்சி, அந்த நாட்டில் ஆண்டாண்டு காலமாக வேரூன்றியிருந்த நிலப்பிரபுத்துவத்தை, வேரடி மண்ணோடு பிடுங்கி தூக்கி எறிந்தது. அதுமட்டுமின்றி சீன நாட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த சியாங்-கே-ஷேக் ஆட்சியதிகாரத்தை விரட்டியடித்தது. அதுமட்டுமின்றி சீனாவை ஆதிக்கம் செலுத்த வந்த, ஜப்பான் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, மாவோ நடத்திய புரட்சியின் மூலம் ஒரு சுதந்திர சீனாவை உருவாக்கிக்கொடுத்தார். அதனால் அவர் நடத்திய புரட்சி, புதிய ஜனநாயகப்புரட்சி என்று அழைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் இணைத்து நடத்தப்பட்ட புரட்சி என்பதால், சீனப்புரட்சியும் புதிய ஜனநாயகப்புரட்சி என்று அழைக்கப்பட்டது. அதாவது மாவோ முன்வைத்த தத்துவ விளக்கத்தின்படி, நிலப்பிரபுத்துவத்தை அழிக்கும் புரட்சியை, முதலாளித்திவ புரட்சி என்று அழைக்கவேண்டும். சீனத்தில் நடந்தது ஒரே நேரத்தில் நிலபிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கும் புரட்சி என்பதால் இந்த முதலாளித்திவ புரட்சி புதிய வகையானது என்பதால் அதை புதிய ஜனநாயக புரட்சி என்று அழைக்கிறோம் என்றார் மாவோ. அதுமட்டுமின்றி நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு வழமையாக உலகம் முழுமையிலும், முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்டு நடத்தப்பட்டதால், முதலாளித்துவ புரட்சி என்று பெயர் பெற்றது. ஆனால் சீனாவில் நடத்தப்பட்ட புரட்சி, பாட்டளிவர்க்கத்தின் தலைமையில் கம்யுனிஸ்டு கட்சியால் நடத்தப்பட்டதால், அது புதிய ஜனநாயக புரட்சி என்று அழைக்கப்பட வேண்டும் என்று மாவோ கூறினார். அதுவே உலகம் முழுவதும் உள்ள கமயுனிச்டுகளால், காலனி நாடுகளின் புரட்சியில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது அவர்கள் கூற்றுப்படி, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அரசியல் சுதந்திரத்திர்க்கான போராட்டத்துடன், நிலவுடமைக்கு எதிரான ஜனநாயக புரட்சியும் சேரும்போது, அதை பல உலக நாடுகளும் மாவோ வழி என்று பின்பற்றுகிறார்கள்.
அத்தகைய மாவோ வழி, பண்ணை அதிகாரமான நிலவுடமை ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தும் போரை, மக்கள் போர் என்று அழைக்கிறது. அதற்க்கான செயல்தந்திரத்தை, கிராமப்புறங்களை விடுதலை செய்து, நகர்ப்புறங்களை சுற்றி வளைத்து விடுதலை செய்தல் என்பதாக அழைக்கிறது. அதற்க்கான போரை கிராமப்புரங்களிளிருந்து தொடங்குகிறது. அதையேதான் இந்தியாவில் உள்ள மாவோவாதிகளும் பின்பற்றுகிறார்கள்.
அதனால்தான் அவர்கள் முதலில் நக்சல்பாரி என்ற கிராமத்தில், விவசாயிகளை அணிதிரட்டி அங்குள்ள பண்ணைத்திமிங்கிலங்களிடம் உள்ள ஆயுதங்களை பிடுங்கி அதன்மூலம் அங்குள்ள நிலங்களை மீட்டு, அந்த கிராமங்களை விடுதலை செய்தனர். அதையே அவர்கள் ஆந்திராவிலும் பின்பற்றி பல இடங்களை தங்கள் செல்வாக்கிற்கு கீழ் கொண்டு வந்தார்கள். அத்தகைய கிராமப்புற போர்களை, பீகார், ஒரிஸ்ஸா, மேற்குவங்கம், மத்திய பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் எழுபதின் தொடக்க ஆண்டுகளில் அவர்களால் செயல்படுத்த முடிந்தது. அதை ஆளும்வர்க்கம் கடுமையாக அடக்கியது. மத்திய அரசின் துணை ராணுவ படைகள், மத்திய சிறப்பு காவல் படை, எல்லை பாதுகாப்பு படை, கிழக்கு எல்லை துப்பாக்கி படை, போன்றவை ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு, மாவோவாதிகளை அடக்குவதற்காக பயன்படுத்தப்பட்டன. நாட்டை பாதுக்காக உருவாக்கப்பட்ட துணை ராணுவத்தை எப்படி உள்நாட்டு போரை அடக்க பயன்படுத்தலாம் என்ற விமர்சனம் எழுந்தது. ஆனாலும் அத்தகைய விமர்சனகளுக்கு செவிமடுக்காமல், மத்திய அரசு பல மாநிலங்களிலும் நக்சல்பாரிகளை கொன்று குவித்தது. அதன்மூலம் இரு பத்தாண்டுகளுக்கு மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் பிரபலம் அடையாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்து வந்தன. இப்போது நிலைமை அப்படி இல்லை. இந்தியாவின் இதயப்பகுதியில் அந்த புரட்சியாளர்களது செயல்பாடுகள் தீவிரம் அடைந்தவுடன், அதுவே நாடெங்கிலும் பெரும் பிரச்சனையாக பேசப்படுகிறது.
இன்றைய இந்தியா ஏன் மாவோவாதிகளுக்கு உகந்த இடமாக இருக்கிறது என்பது கவனிக்கப்படவேண்டும். மாவோ கூறிய நிலபிரபுத்துவம் இந்திய யதார்த்தத்தில், சாதிகட்டுமானத்துடன் இருக்கிறது. இது மிகவும் கொடியது. சாதிகளது ஆதிக்கத்திற்காக அந்த ஆதிக்க சாதிகளாலேயே, பழமை நிலவுடமை பாதுகாக்கப்படுகிறது. முற்ப்பட்டோர் என்ற ஆதிக்க சாதிகள், தங்கள் கைகளில் உள்ள நில உடமைகளால், தங்கள் அதிகாரத்தை கிராமங்களில் நிறுவிக்கொள்கிரார்கள். அதனால் மிகவும் ஒடுக்கப்பட்ட தலித் சமுதாயம் மட்டுமின்றி, மற்ற பிற்ப்படுத்தப்பட்ட சமுதாய மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களும் இணைந்து பண்ணை ஆதிக்க சாதியவாதிகளை எதிர்த்து போராட வருகிறார்கள். அதுதான் பீகார் மாநிலத்தில் யாதவர் சமுதாய விவசாயிகள் கிராமங்களில் மாவோவாதிகளுடன் சேர்ந்திருப்பதற்கு காரணமாக அமைகிறது. அவர்களுடன் கூலி விவசாயிகளாக உள்ள தலித் மக்களும், மாவோவாதிகளின் செம்படையில் இணைந்து செயல்படுகிறார்கள். அதேபோல இந்தியாவில் இன்னொரு சூழல் மாவோவாதிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. கிராமங்களில் உள்ள ஆதிக்க சாதி பண்ணையார்கள், இந்துமத சார்பாகவும் இருக்கிறார்கள். அதனால் முஸ்லிம்களும், கிருத்துவர்களும் அவர்களுக்கு எதிரிகள் போல தோன்றுகிறார்கள். அதவும் மாவோவாதிகளுக்கு சாதகமாக போய்விட்டது. பீகார் மாநிலத்திலும், உத்திரப்பிரதேச மாநிலத்திலும், மாவோவாதிகளின் ஆதரவு அணியில், தலித்துகளுடன், யாதவர்களும், முஸ்லிம்களும் இருப்பதை காண முடிகிறது. அதேநேரம் அவர்கள் இறங்கி வேலை செய்யும் பழங்குடி மக்கள் பகுதிகளில், பண்ணை அதிகாரத்திற்கு பதில் இப்போது கார்பரேட் என்று அழைக்கப்படும் பெரும் வணிக குழுமங்கள் அந்த பழங்குடி மக்களின் எதிரிகளாக இருக்கிறார்கள். அவர்கள் இந்திய அரசுடன் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தங்கள் மூலம், பழங்குடி மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய காடுகள், மற்றும் மலைகளில் உள்ள மூலப்பொருள்களை கொள்ளையடிக்கின்றனர். அதுவே அந்த பழங்குடி மக்களை மாவோவாதிகள் பக்கம் தள்ளிவிட்டது. அதாவது இந்த கார்பரேட்டுகள் எனும் பன்னாட்டு பெருவணிக குழுமங்கள்தான் ஏகாதிபத்தியத்தின் பாத்திரத்தை நேரடியாக வகிக்கின்றன. அதனால் இங்குள்ள ஆதிவாசி கிராமங்களில், ஏகாதிபத்தியவாதிகள் நேரடியாக நில உடமையாளர்களாக அல்லது நில ஆக்கிரமிப்பலர்களாக ஆகிவிட்டதால், இங்கே இதுவே மாவோ கூறியபடி புதிய ஜனநாயக புரட்சியாக மாறிவிட்டது. இவ்வாறு இந்திய யதார்த்தம் மாவோவாதிகளின் தத்துவத்திற்கு ஏற்றவகையில் அமைந்துவிட்டது. ஆகவே இங்கே மாவோ நினைவு என்பது ஒரு நாள் கடைப்பிடிப்பாக இல்லாமல், ஆண்டு முழுவதும் முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும் கடைப்பிடிக்கும் ஒரு நினைவாக மாறிவிட்டது. இந்திய வரலாறு, மாவோயிசத்தை ஏற்றுக்கொள்ளபோகிறதா? அல்லது கார்பரேட் நலன்களை விடுத்து, நாட்டு சுதந்திரத்தை காப்பற்றபோகிறதா?

Wednesday, September 8, 2010
எதிரி சொத்து மசோதா, அவசரச்சட்டமாகக்கூட ஆகவில்லை
சமீப நாட்களில் நாடாளுமன்றத்தில் எதிரி சொத்து மசோதா என்று ஒரு சட்டமுன்வரைவு விவாதத்திற்காக வைக்கப்பட இருந்தது. பிறகு அதன்மேல் கடுமையான அதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் இருப்பதை உணர்ந்த ஆட்சியாளர்கள் அதை நிறுத்தி வைத்தனர். ஊடகங்களில் வந்த இந்த செய்தி சிலரை புருவம் உயர வைத்தது. சிலரை புதிரில் தள்ளியது. சிலருக்கு விளங்கவில்லை என்பதால் அலட்சியப்படுத்த உதவியது. எதிரி சொத்து என்றால் என்ன என்ற கேள்வி நமக்குள் எழவேண்டும். எதிரி சொத்துக்களின் பாதுகாவலன் என்ற பெயரில் நமது இந்திய அரசாங்கத்தில் ஒரு துறை இருக்கிறது. இந்தியாவில் வாழ்ந்து வந்து, பிறகு பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் சென்ற குடிமக்கள், யாரெல்லாம் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு இந்தியாவில் சொத்து இருக்குமானால், அந்த சொத்துக்களை பாதுகாக்க மத்திய அரசின் துறை உதவ வேண்டும் என்பதே. அதுதான் இந்த மேற்குறிப்பிட்ட எதிரி சொத்து பாதுகாப்பு துறையின் வேலை. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நாடாக ஆங்கிலேயனின் ஆதிக்கத்திற்கு கீழ் இருந்தன. அப்போது சில தலைவர்களின் பிரிந்து செல்லும் கோரிக்கையை, ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொண்டதால், இரு நாடுகளும் பிரிக்கப்பட்டன. அப்படி பிரிப்பதை எதிர்த்தும், ஆதரித்தும் சமூக மோதல்கள் ஏற்ப்பட்டன. இரண்டு புறத்திலும் அதிகமான அளவில் உயிர்சேதங்களும், பொருள்சேதங்களும் ஏற்பட்டன. அந்த மோதல்கள் மதமோதல்களாக வெடித்ததால், பாகிஸ்தான் பகுதியில் இருந்த இந்துக்கள் பாதுகாப்பு இன்றி இந்திய பகுதிக்குள் ஓடி வந்தனர். அதில் லால்கிஷன் அத்வானி முதல், குல்தீப்நாயர் வரை கணக்கிடலாம். அதேபோல இந்திய பகுதியில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் பலரும் பாகிஸ்தான் பகுதிக்கு ஓடினர். அதில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பல பணக்கார முஸ்லிம்களை குறிப்பிடலாம். அப்படி ஓடியவர்கள் தங்கள் சொத்துக்களை தூக்கிக்கொண்டோ, விற்றுவிட்டோ ஓடமுடியாது. அவர்களில் பலர் உயிரை காப்பற்றுவதர்க்காக ஓடியவர்கள். அவர்கள் தங்கள் சொத்துக்களை யாரவது உறவினர் வசமோ, அலது நண்பர்கள் வசமோ, ஒப்படைத்துவிட்டுத்தான் ஓடியிருக்கமுடியும். அப்படித்தான் ஓடியிருக்கிறார்கள். அவர்களது சொத்துக்களை பராமரிப்பது சம்பந்தமாகத்தான் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.
அதேபோல காஷ்மீர் பிரச்சனையும் இப்போது இதில் இழுக்கப்படுகிறது. காஷ்மீர் பகுதி ஆங்கிலேயன் ஆட்சியில் சுதந்திரமாக ஒரு இந்து மன்னர் தலைமையிலான ஆட்சியின் கீழ் இருந்தது அதை இந்தியாவுடன் சேர்ப்பதா, அல்லது பாகிஸ்தானுடன் சேர்ப்பதா என்ற இரு நாடுகளின் விருப்பங்களைத்தாண்டி, காஷ்மீர் மக்கள் தனியான சுயாட்சியை விரும்பினார்கள் என்பது வரலாறு. ஆனாலும் அன்று எழுந்த புதிய சூழ்நிலையில், நிபந்தனைகளுடன் இந்தியாவில் காஷ்மீர் இணைக்கப்பட்டது. அப்போது அங்கே இருந்த காஷ்மீர் மக்கள் என்ன செய்வார்கள்? ஒரு பகுதி காஷ்மீர் பாகிஸ்தானுடன் சென்று விட்டது. ஒரு பகுதி இந்தியாவுடன் இருக்கிறது. பாகிஸ்தானுடன் சென்று விட்ட பகுதியை காஷ்மீரிகள், ஆசாத்காஷ்மீர் என்று அழைக்கிறார்கள். அதையே இந்திய அரசு, பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கிறது. அதேபோல இந்திய பகுதி காஷ்மீரத்தை இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பாகிஸ்தானில் அழைக்கிறார்கள். அப்படியானால் இந்தியாவிற்கோ, பாகிஸ்தானுக்கோ முழு காஷ்மீரமும் சொந்தமாக இன்றுவரை இருக்கவில்லை என்பது புரியப்படவேண்டும். சாதாரணமாக இந்திய காஷ்மீரத்தில் இருப்பவர்களின் சொந்தங்கள், பாகிஸ்தான் காஷ்மீரத்தில் இருப்பார்கள். அவர்கள் அங்கேயும், இங்கேயும் போய்வருவர். அது இன்றும் நடக்கிறது. அப்படியானால் அந்தப்பக்கம் உள்ளவருக்கு இந்தப்பக்கமும், இந்தப்பக்கம் உள்ளவருக்கு அந்தப்பக்கமும் சொத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அதுவும் தானாகவே புரியப்படவேண்டும். இந்தநிலைதான் இந்தியா பக்கம் இருக்கும் பஞ்சாபிற்கும், பாகிஸ்தான் பக்கம் இருக்கும் பஞ்சாபிற்கும் இருக்கும் என்பதும் விளங்கப்படவேண்டும். சிந்திஇன மக்கள் இருபுறமும் வாழ்கிறார்கள். அகவே அவர்கள் மத்தியிலும் இதுபோன்ற சொத்து பிரச்சனை இருக்கும். இந்த சொத்து பிரச்னையை எப்படி பார்ப்பது என்பதே இப்போது பிரச்சனை.
இவ்வாறு வரலாற்று காரணங்களால் மக்களது சொத்துக்கள் பிரச்சனையாகுமானால், அதை அரசாங்கங்கள் எப்படி பார்க்கவேண்டும்? ஒரு நாட்டு குடிமகனுக்கு, அண்டை நாட்டில் சொத்து இருப்பது இந்த இந்திய--பாகிஸ்தான் விசயத்தில், மக்களது குற்றம் அல்ல. இந்த இரு நாடுகளும் திடீரென பிரிந்தால் அதற்கு மக்கள் என்ன செய்வார்கள்?அவர்களது சொத்துக்கு எப்படி பாதுகாப்பு இல்லாமல் போகலாம்? இரண்டு நாடுகளுமே சொத்துரிமையை அடிப்படை உரிமையாக கொண்ட நாடுகள். அப்படியானால் குடிமக்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது அரசாங்கங்களின் பொறுப்பு அல்லவா? ஆனால் இப்போது அதுவே மத ரீதியாக பார்க்கப்படுகிறது என்றால் எவ்வளவு ஆபத்தானது? பாகிஸ்தானை விட்டுவிடுங்கள்; அதுதான் ஒரு மதச்சார்பு அரசு. இந்தியாதான் மதச்சார்பற்ற நாடு ஆயிற்றே? இங்கே மதம் எப்படி சொத்து விசயத்தில் குறுக்கே வரலாம்? இப்போதுவந்துள்ளது என்பதுதான் இதில் உள்ள சிக்கலே. 1965 இல் நடந்த இந்திய-பாக் போருக்கு பிறகு, இந்த எதிரி சொத்து சட்டம் 1968 இல் அமுல்படுத்தப்பட்டது. எதற்காக இதை எதிரி சொத்து என்று அழைக்கிறார்கள் என்பது நமக்கு புரியவில்லை. பாகிஸ்தான் அரசையே எதிரி அரசு என்று இந்திய அரசு அழைக்க தயாராயில்லை. அப்படி இருக்கும் போது, மக்களது சொத்துக்களை எதிரி சொத்து என்று அழைப்பது எந்த வகையில் நியாயம் என்பதை இந்திய அரசியல்வாதிகளோ, அல்லது ஊடகங்களோ அல்லது இந்திய மக்களோ கேட்டதாக நமக்கு தெரியவில்லை. அடுத்தநாட்டு குடிமக்களின் சொத்து என்று சொல்வதற்கு பதில், எதிரி சொத்து என்று தொடர்ந்து அழைபபார்களானால் அவர்களது பார்வையிலேயே குறை இருக்கிறது என்று பொருள்படாதா?
மேற்கண்ட சட்டம் ஒரு எதிரி சொத்துக்கு, ஒரு பாதுகாவலனை மற்றும் உதவிக்கு ஒன்றோ அல்லது மேற்பட்ட துணை அல்லது உதவி பதுகாவலர்களையோ நியமிக்கும் பொறுப்பை மத்திய அரசிடம் கொடுத்துள்ளது. அது இந்திய பாதுகாப்பு சட்டம்-1962 மற்றும் 1971 இன் கீழ் அனுமதிக்கப்படுகிறது. 1947 க்கு முன்னால், அந்த குடிமக்கள் ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்தவர்கள் என்பதுமட்டுமே நிபந்தனை.1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில், அதை பாதுகாவலராக நியமிக்கப்பட்டவர் கைகளில், இந்திய அரசு ஒப்படைத்தது. அதில் எல்லா அசையா சொத்துக்களும், வங்கி இருப்புகளும், பிராமிசரி நோட்டுக்கள், சந்தைப்பங்குகள், வணிகங்கள் அனைத்தும் சேர்க்கப்படும். இந்திய குடிமக்கள் யாரும் இந்த அறிவிக்கப்பட்ட எதிரி சொத்துக்களில், வாங்க, விற்க, எடுக்க என்று எந்தவகையிலும் அனுமதிக்கப்படமாட்டார்கள். மும்பையில் இதற்க்கான அலுவலகம் செயல்படும். அதன் கிளை கொல்கத்தாவில் செயல்படும். இந்த சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டு வர இப்போது நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி முயன்றது. அதற்குத்தான் பா.ஜ.க. விடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இடதுசாரிகளும், லாலு கட்சியும், முலாயம் கட்சியும், பா.ஜ.க.விற்கு எதிர்ப்பு கொடுத்தனர். அதையொட்டியே அந்த சட்டத்திருத்த முயற்சி தள்ளிவைக்கப்பட்டது. இந்த திருத்தங்களை , ப.சிதம்பரத்தின் உள்துறைதான் கொண்டுவந்தது. அதற்கு எதிரி சொத்துக்கள் சட்ட திருத்தங்கள்- 2010 என்று பெயர். அதை கொண்டுவரவிடாமல் பா.ஜ.க. முயன்றபோது, காங்கிரசு கட்சி அதற்கு ஏன் பணிந்தது என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கவேண்டும். அந்த சட்டத்தில் உள்ள விசயங்கள், எந்த ஒரு தனி மனிதனையோ, அல்லது சொத்தின் சொந்தக்காரனையோ, அல்லது அதன் வாரிசுதாரரையோ, பாதிக்க கூடாது என்பதே திருத்தமாக கொடுக்கப்பட இருந்தது. நீதிமன்றமோ, அதற்க்கான அதிகாரமோதான் அதை தீர்மானிக்கவேண்டும் என்றும் அந்த திருத்தம் இருந்தது. அதைத்தான் பா.ஜ.க. எதிர்த்தது . இது மதம் சார்ந்த எதிர்ப்பு என்பதால், உடனடியாக ஒரு அவசரச்சட்டம் கொண்டுவரலாமா என்று திட்டமிடப்பட்டது. அதையும் கடைசி நேரத்தில், பிரதமரும், நிதி அமைச்சரும் தடுத்துவிட்டனர். அதை சட்டமாக ஆக்குவதற்கு, அவசரச்சட்டம் தடையாக இருக்கும் என்று காரணமும் கூறியுள்ளனர். எது எப்படி இருந்தாலும், உலக மக்கள் மீதான, அல்லது அன்றைய ஒன்றுபட்ட இந்திய மக்கள்மீதான, அல்லது உண்மையில் சொத்தின் சொந்தக்கார மக்கள் மீதான ஒரு உரிமை விசயத்தில் மதம் பெயரிலும், கட்சிகள் பெயரிலும் அரசியல்வாதிகள் அனாவசியமாக தலையிட்டு விளையாடுகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. நாமாவது அந்த சட்டத்தை இனியாவது எதிரி சட்டம் என்று அழைக்கக்கூடாது என்று குரல் கொடுப்போமா? .

Tuesday, September 7, 2010
பஞ்சம் துரத்துமா? துரத்தப்படுமா?
பீகார் மாநிலத்தில் நடந்த காவலர் கடத்தல்கொலைவிடுவிப்பு என்ற மாவோயிஸ்டுகளுக்கும், அரசாங்கத்திற்கும் நடந்த கயிறு இழுக்கும் போட்டியில், கடைசியில் வென்றது மாவோயிஸ்டுகள் என்பதாக ஆகிவிட்டது. அதற்குப்பின்னால் இருக்கும் உண்மைகள் வேறுவிதமாக உள்ளன. வெளியிலிருந்து பார்க்கும் யாருக்குமே மாவோயிஸ்டுகளுக்கு பலத்தச் செல்வாக்கு இருப்பதையும், அரசாங்கத்தால் அவர்களுக்கு எதிராக சாதிக்க முடியவில்லை என்பதையும் காட்டப்படுகிறது. ஆகஸ்ட் 29ம் தேதி மாவோயிஸ்டுகள் ஒரு துப்பாக்கிச் சண்டையில் 7 பீகார் ராணுவ காவல்படை என்ற மத்திய இணை ராணுப்படையினரை கொன்றுவிட்டு, 4 காவலர்களை தூக்கிச்சென்றனர். அபய்யாதவ், ரூபேஷ்குமார் சின்கா, ஈஷான்கான் மற்றும் லூகாஸ்டிட்டே ஆகிய கடத்தப்பட்ட காவல் அதிகாரிகளில், லூகாஸ்டிட்டேயை கொன்றுவிட்டனர். அதன்பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கதறல் காட்சி ஊடகங்களில் காட்டப்பட்டது. அதுவே மாவோயிஸ்டுகளுக்கு ஆதராவாகயிருந்த மக்கள் மத்தியிலும் எதிரொலித்தது. அந்த பிரதிபலிப்பு மாவோயிஸ்டுகளின் படைக்குள்ளும் பாதித்தது என்று ஒரு ஆங்கில அச்சு ஊடகம் வர்ணிக்கிறது. காவலர் ஒருவரின் கொலையையொட்டி, மாவோயிஸ்டுகள் மத்தியில் பிளவு ஏற்பட்டதாகவும், கருத்து மோதல் கருவி மோதலாக மாறியதாகவும் அந்த ஏடு வர்ணித்துள்ளது. கொல்லப்பட்ட லூகாஸ்டெட்டி ஒரு கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பழங்குடியினர் என்றும், அதனால் மாவோயிஸ்டு பழங்குடி படைத் தளபதி பிர்பல்முர்மூ அதை எதிர்த்தார் என்றும் அந்த செய்தி கூறியது. அதற்கு பதிலாக கடத்தப்பட்டுள்ள மற்ற 3 காவலர்களையும் கொன்றுவிட முர்மூ கூறியதாகவும், அதை அந்த பகுதியின் மாவோயிஸ்டுப் படைத் தளபதி அரவிந்த் யாதவ் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது. மாறாக அரவிந்த் யாதவ் என்ற மாவோயிஸ்டு தளபதி அபய் யாதவ் என்ற பிடிப்பட்ட காவலர் உயிரை காப்பாற்றி, விடுதலை செய்ய விரும்பினார் என்றும் அதில் எழுதியுள்ளது. அதையொட்டி கடந்த ஞாயிறு இரவில் காட்டிற்குள் 2 குழுவினருக்கும் மத்தியில், துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கண்டச் செய்தியில் உண்மை இருக்கிறதோ, இல்லையோ ஓரிசா, சத்திஸ்கர், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் தளபதிகளும், போர் வீரர்களும், பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து வளர்ந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். அதேசமயம் பீகார் மாநிலத்திலிருக்கும் மாவோயிஸ்டு தளபதிகள் யாதவர் சமூகத்தையும், கோயரிஸ் சமூகத்தையும் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதாவது வடக்கு பீகாரிலும், சீமாஞ்சல் பகுதியிலும், மத்திய மகத் மற்றும் கைமூர்சோனேபத்ரா பகுதியிலும் அவர்களது செல்வாக்கு விரிந்துள்ளது. அது உத்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு உள்வரை நீண்டு செல்லும் செல்வாக்காகும். ஏற்கனவே மாவோயிஸ்டு படை வரிசையில், பீகார் மாநிலத்தில் 2வது கட்ட தளபதிகளில் யாதவர்களும், பிற பிற்படுத்தப்பட்டோரும் அதிகமாக இருக்கிறார்கள் என்று திபங்கர் பட்டாச்சாரியா கூறியிருந்தார். அதேபோல யாதவர் வாக்குவங்கியை குறிவைத்து, லாலுவும், நிதீஷ்குமாரும் மாவோயிஸ்டுகள் மீது ஒரு மென்மையான அணுகுமுறையை வைத்திருப்பதாக சுவாமிஅக்னிவேஷûம் கூறியிருந்தார். அத்தகைய சூழலில், பீகார் அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் கடத்தப்பட்ட காவலர்களை விடுதலைச் செய்வதில், தடை ஏற்படுத்துவது போல அந்த காடுகளின் எல்லைகளில் முற்றுகையிட்டிருந்தனர். இதனிடையே கடத்தப்பட்ட காவல் அதிகாரி அபய் யாதவின் மனைவியை, அவர்களது கிராமத்தில் சந்தித்த மாவோயிஸ்டுத் தலைவர், ராக்கி கட்டிக்கொண்டு சகோதரரானதும், கடத்தப்பட்ட காவலர்களை விடுதலை செய்வோம் என பேட்டிக் கொடுத்ததும் காட்சி ஊடகங்களில் காட்டப்பட்டன. அதுவே கிராமப்புற மக்கள் மீது, செல்வாக்கு கொண்டவர்கள் யார் என்பதை தெளிவுப்படுத்தியது. கஜ்ராசானன் காடுகளின் எல்லையில் லக்கோ கிராமத்தின் அருகே, பெங்குசராய் மாவட்டத்தில் அரசப்படைகளின் கண்களில் பொடிகளைத் தூவிவிட்டு, மாவோயிஸ்டுகள் கடத்தப்பட்ட காவலர்களை விடுதலைச் செய்தனர். மேற்கண்ட நிகழ்ச்சி மாவோயிஸ்டுகள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியதாகவும், அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்தை ஏற்படுத்தியது. வருகிற சட்டமன்ற தேர்தலில், நவம்பர் மாதத்தில் பீகாரில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மண்டலங்களில், வாக்குகளை பெறுவதற்கு லாலுவும், நிதீஷûம் போட்டிப் போட்டுக் கொண்டிருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. அந்த வட்டாரத்தில் குறிப்பாக சத்திஸ்கர் மாநிலத்திலிருந்து, சென்னைக்கு வந்திருந்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அகில இந்திய துணைத் தலைவர் டாக்டர். பினாயக்சென், தனது உரையில் சில செய்திகளை கூறினார். தாங்கள் எந்த விதமான வன்முறையையும் ஆதரிக்கவில்லை என்று கூறிய அந்த மனித உரிமை ஆர்வலர், பொதுச் சொத்துக்கள் மீதான உரிமைகளை பறிப்பதுதான், இன்று உள்ள உணவு பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றார். அதேசமயம் ஒரு புறத்தில் தானியங்களை குவித்து வைத்தலும், இன்னொரு புறத்தில் பஞ்சத்தின் விளிம்பிலிருத்தலும் இந்திய சூழலாகயிருக்கிறது என்கிறார் பினாயக்சென். இந்தியாவில் இருக்கின்ற குழந்தைகளில் பாதிப்பேர் சத்துணவின்றி இருக்கின்றனர் என்று அந்த மருத்துவர் கூறினார். ஐதராபாத்திலுள்ள தேசிய சத்துணவு கண்காணிப்பு மையத்தின் சார்பாக எடுக்கப்பட்ட ஆய்வில், பாடிமாஸ் இன்டக்ஸ் என்ற உடல் எடை அறிகுறி மூலம், குறிப்பாக நிலைமை கண்காணிக்கப்படுகிறது என்று விளக்கினார். 18.5%க்கு கீழ் 37% ஆண்களும், 39% பெண்களும் இருக்கிறார்கள் என்ற கண்டுபிடிப்பை சுட்டிக் காண்பித்தார். அதுவே நாட்டின் கணிசமான மக்கள் தொகை, போதுமான உணவின்றி தவிப்பதை இது வெளிப்படுத்துகிறது. இந்த நாட்டில் உள்ள பழங்குடி மக்களில் 50%ம், தலித் மக்களில் 60%ம் போதுமான உணவு கிடைக்கப்படாமல், வறுமையில் உழல்கின்றனர் என்று மருத்துவர் பினாயக்சென் கூறினார். அதாவது பஞ்சம் நம்முடன் இணைந்து வந்து கொண்டிருக்கிறது என்றார். பட்டினியின் விளிம்பிற்கு செல்லும் இந்தியாவில், உணவுக் கிடங்கில் இருக்கும் தானியங்களை, வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக விநியோகிக்க கூறிய, உச்சநீதிமன்ற உத்தரவை, தலைமை அமைச்சர் எதிர்த்து பேசியிருப்பது இங்கே நடைமுறையாக இருக்கிறது. அரசாங்க கொள்கைகளில், உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என்று மன்மோகன் மிரட்டுகிறார். அதனால் பஞ்சம் நம்மை துரத்துகிறதா? அல்லது பஞ்சத்தை நாம் துரத்தப்போகிறோமா என்பதே கேள்வி.
Saturday, September 4, 2010
மாவோயிஸ்டுகளின் காவலர் கடத்தல், அரசு நடவடிக்கை-எது மனிதாபிமானம்?
பீகாரில் மாவோயிஸ்டுகள் ஆகஸ்ட் 29ம் நாள் துணை ஆய்வாளர்கள் ரூபேஷ்குமார், ஆபாய்பிரசாத் யாதவ் மற்றும் பீகார் ராணுவ தலைமைக் காவலர் எடேஷாம்கான், உதவி துணை ஆய்வாளர் லூகாஸ்டேடே ஆகியேரை கடத்திச் சென்றார்கள் என்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அன்று கஜுரா காவல்நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 8 காவலர்கள் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட பிறகு, அந்தக் கடத்தல் நடந்திருக்கிறது. கடத்தலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் அரசாங்கத்தின் முன்னால் ஒரு கோரிக்கையைவிடுத்துள்ளனர். அதில் பீகார் சிறையிலிருக்கும் 8 மாவோயிஸ்டு முன்னோடிகளின் விடுதலையை கோரியுள்ளனர். மாவோயிஸ்டுகள் முன்வைத்த பேச்சுவார்த்தைக்கான கெடு முடியும்வரை, அரசாங்கம் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. அதன்விளைவாக துணை ஆய்வாளர் அபாய்பிரசாத்தை அவர்கள் கொலைச் செய்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதுவே பிறகு மறுக்கப்பட்டது. அரசுத் தரப்பிற்கு பீதியை கிளப்பவே அப்படி தவறானச் செய்தியை முதலில் அறிவித்ததாக கூறினார்கள். மீண்டும் காலக்கெடுவை செப்டம்பர் 3ம் நாள் காலை 10 மணிக்கு என்று தள்ளிப்போட்டிருந்தார்கள். அதற்குள் அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், கடத்தப்பட்டவர்களின் உயிர் பறிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். அதிகாரி லூகாஸின் உடல் குண்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. மீதி 3 காவலர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், உடனடியாக தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும், மாவோயிஸ்டுகள் அறிவித்தனர். மேலே குறிப்பிட்ட சர்ச்சைகள் காட்சி ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன. அதையும்கூட மாவோயிஸ்டுகள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் என்ற கருத்து நிலவியது. மக்கள் சிவிலுரிமைக் கழகம் சார்பாக பேசியவர்களும், சுவாமிஅக்னிவேஷûம், கடத்தலையும், கொலையையும் கண்டிக்கும் அதேநேரத்தில், மாவோயிஸ்டுகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அரசை, ஊடகங்கள் மூலம் வலியுறுத்திவந்தனர். அதேசமயம் அரசுத் தரப்பு, கடத்தப்பட்ட காவலர்களின் குடும்பத்தவர்கள் பேட்டிகளை, ஊடகங்களில் வெளியிட்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பரப்புரையை தொடர்ந்து செய்துவந்தனர். மத்திய அரசு தேவைப்படும் ஒத்துழைப்பை கொடுக்கவில்லை என்பதாக, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்தார். கடத்தப்பட்ட காவலர்கள் பீகார் ராணுவ காவல்படையை சேர்ந்தவர்கள். அந்தப் படை மத்திய அரசின் துணைராணுவப் படை. ஆகவே அதற்கான கட்டளைத் தலைமை, மத்திய அரசின் உள்துறையிலிருந்து தான் வரவேண்டும். பீகார் முதல்வரின் கருத்து மட்டுமே, இந்த விஷயத்தில் செயலுக்கு உதவாது. ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு மாவோயிஸ்டுகளின் மீது, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கட்டவிழ்த்துவிட்ட பச்சை வேட்டையை எதிர்த்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கடுத்து ப.சிதம்பரம் கூட்டிய நக்சல்பாரி பகுதிகளின் முதலமைச்சர்கள் கூட்டத்திற்கும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செல்லவில்லை. அத்தகைய அணுகுமுறைகளை எதிர்த்து, மத்திய உள்துறை இந்த கடத்தல் விவகாரத்தில் பீகார் மாநிலத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதாக ஒரு விமர்சனம் ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டது. பீகார் மாநிலத்திலுள்ள லக்கிசராய் என்ற பகுதியில் தான் மேற்கண்ட மோதல் நடந்துவருகிறது. பங்கா, கைமூர், ஜாமுய், லக்கிசராய் ஆகிய அடுத்தடுத்த மாவட்டங்களில் உள்ள, வனப்பகுதிகளில் அரசப்படைகள் இறக்கிவிடப்பட்டு, மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பொதுமக்கள் மத்தியில் சோதனை நடத்தப்படுகிறது. மத்திய அரசு இந்த பிரச்சனையையும், வெறும் சட்டஒழுங்கு பிரச்சனையாக அணுகக்கூடாது என்ற குரல்கள் எழுகின்றன. வாஜ்பாய் அரசாங்கத்தில், ஆப்கானிஸ்தானிலுள்ள கண்டகர் விமான நிலையத்தில், இந்திய விமானத்தை கடத்தி அதன்மூலம் தங்களது படை தளபதிகளை இந்திய சிறைகளிலிருந்து விடுதலை செய்யச் செய்த, பாகிஸ்தானில் இருந்து இயங்கும் முஜாஹுதீன் படையினர் மூலம் கிடைத்த அனுபவத்தை மத்திய அரசு, முன்மாதிரியாக எடுத்து செயல்பட வேண்டும் என்ற ஆலோசணையும் அரசுத் தரப்புக்கு சொல்லப்பட்டது. ஒருபுறம் மனித உரிமை ஆர்வலர்கள், பேச்சுவார்த்தையின் மூலம் மாவோயிஸ்டுகள் பிரச்சனையை தீர்க்கச் சொல்லும் போது, இன்னொரு புறம் அடக்குமுறை மூலம் மாவோயிஸ்டுகள் ஒடுக்கச் சொல்லும் அதிகாரவர்க்க அறிவுஜீவிகளின் கருத்துக்களும் அரசுக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாவோயிஸ்டுகள் எதற்காக தங்களது 8 முக்கிய தோழர்களை விடுதலைச் செய்ய கோருகின்றனர் என்பதையும், ஊடகங்கள் ஆய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளன. அதில் ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு தயாராகி, அதில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்டுத் தலைவர் ஆசாத்தை, கைது செய்து சுட்டுக்கொன்ற மத்திய அரசின் அணுகுமுறை, தற்போது பீகார் சிறையில் உள்ள 8 முக்கிய தலைவர்கள் விஷயத்திலும் நடக்கவிருப்பதாக அவர்கள் அறிந்ததால்தான், இப்படிப்பட்ட கடத்தலையும், அதையெட்டிய 8 தலைவர்களின் விடுதலைக் கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர் என்பதாக விரிவாக ஊடகங்கள் விளக்கியிருந்தன. அப்படியானால் இங்கே வான் அளவுக்கு பேசப்படும், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை என்பதும், அதன்மூலம் காணப்பட வேண்டிய அரசியல் தீர்வு என்பதும் உண்மையில் கேள்விக்குறியதாகவும், அதன்மூலம் கேலிக்குறியதாகவும் ஆகிவிட்டதா? இங்கே பரஸ்பரம் ஒரு நம்பிக்கையின்மை நிலவுகிறது. ஆயுதம் தாங்கிய அரசப்படைகள் மூலம் செயல்ப்பட்டு வரும் மத்திய அரசும், ஆயுதம் தாங்கிய செம்படைகள் மூலம் செயல்ப்பட்டு வரும் மாவோயிஸ்டுகளும், தங்களுக்குள் பரஸ்பர நம்பிக்கையின்மையை வைத்துக் கொண்டிருந்தால், அத்தகைய பகுதிகளில் அமைதி திரும்புவது எப்போது? இப்போது பீகார் முதல்வர் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், லாலு கட்சியும், பஸ்வான் கட்சியும் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள். அந்த மாநிலத்தின் பெரும் தலைவர்களுக்குள் [ மூவரும் முன்னாள் மத்திய அமைச்சர்கள்] பரஸ்பர நம்பிக்கையில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த நாட்டின் தேர்தல் கட்சிகள் இது போன்ற மக்களின் உயிர் பிரச்சனையில், வருகிற பொதுத்தேர்தலை மனதில் வைத்து செயல்பட்டால், தேர்தலில் நம்பிக்கை இல்லாத மாவோயிஸ்டுகளுடன் எப்படி பரசபர நம்பிக்கை ஏற்படும்? ஏற்கனவே சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறைக்கும் மத்தியில், இதே பிரச்சனையை கையாள்வதில் ஒரு பரஸ்பர அவநம்பிக்கை நிலவுகிறது. அதைக்கூட தீர்க்காத ஒரு சூழலில், எப்படி மத்திய அரசு மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை தீர்க்கப் போகிறது என்ற கேள்விக்கு பதில் கூற வேண்டிய இடத்தில் உள்துறை அமைச்சகம் இருக்கிறது.
Friday, September 3, 2010
சித்ரவதை தடுப்பு மசோதாவை,இந்தியாவும் ஏற்றுக்கொண்டது.
கடந்த வியாழக்கிழமை மத்திய அமைச்சரவை நீண்ட காலமாகவே எடுத்துக் கொள்ளப்படாத சித்ரவதை தடுப்பு மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. அதையொட்டி அந்த மசோதா சட்டமாக்கப்படுவற்காக நாடாளுமன்றத்தின் முன்னால் வைக்கப்படும் சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா பகுதியில் நடந்த படுகொலைகள் மற்றும் சித்ரவதைகள் சம்பந்தமாக, அந்த வட்டாரத்தில் இறக்கி விடப்பட்டுள்ள மத்திய துணை ராணுவப் படையினர், இத்தகைய மசோதாவை அங்கீகரிப்பதன் மூலம் தங்களது தார்மீக உணர்வுகளை இழந்துவிடுவார்கள் என்றும், நமது நாட்டின் பாதுகாப்புப் படையினர் கடமையாற்றுவதில் செயலிழந்து விடுவார்கள் என்றும் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட தடங்கல் ஆலோசனைகளை மீறி மேற்கண்ட மசோதாவிற்கு தலைமை அமைச்சர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.ஐ.நா. சபையில் முக்கிய ஒப்பந்தமாக இந்த சித்ரவதை சட்டம் கருதப்படுகிறது. கொடூரமான, மனிதத் தன்மையற்ற தண்டனைகள் மற்றும் காவலில் வைக்கப்படும் நபர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் இந்த சட்டத்தின்மூலம் தடுக்கப்படும். நாடெங்கிலும் காவல் சித்ரவதைகள், காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நேரத்தில், இத்தகைய மசோதா மனித உரிமை ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. இந்தியா மனித உரிமைகளை மதிக்கிறது என்றும், இங்குள்ள அரசாங்கம் தவறு செய்பவர்களை தண்டிக்க தயாராய் இருக்கிறது என்றும் புரிந்து கொள்வதற்கு இந்த மசோதா சட்டமாக வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது என்பதாக மன்மோகன் கூறியுள்ளார். கடந்த ஒராண்டாக இதற்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தில் சில மாற்றங்களை செய்தால் போதும் என்றும், மேற்கண்ட சித்ரவதை தடுப்பு சட்டம் தேவையில்லை என்றும் உள்துறை அமைச்சகத்தில் கருத்துக்கள் நிலவின. சாட்சிகள் சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்றும் விவாதிக்கப்பட்டன. இவ்வாறு மூன்று அல்லது நான்கு சட்டங்களை மாற்றுவதற்கு பதிலாக, புதிய சட்டத்தை கொண்டு வருவதற்காக பிரதமர் முடிவெடுத்துள்ளார்.ஐ.நா. சபையின் ஒப்பந்தத்தில், சித்ரவதை தடுப்பு சட்டத்தை கொண்டு வருவோம் என்று கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியா உள்பட சில நாடுகள் மட்டுமே இன்னமும் அதற்கான சட்டத்தை இயற்றாமல் இருக்கிறார்கள்.இந்திய குற்றவியல் சட்டங்களில் இதுபோன்ற அம்சங்கள் இருந்தாலும் கூட, ஐ.நா.சபையின் ஒப்பந்தத்தில் இருக்கின்ற, சித்ரவதை என்ற அம்சத்தை விளக்கும் தன்மை அவற்றில் இல்லை. கலக எதிர்ப்பு நடவடிக்கைகளை அரச படைகள் மேற்கொள்ளும் போது, அப்பாவி கிராமத்தவர்கள் அதற்கு இலக்காகி விடுகிறார்கள். அதேபோல, உள்கிடை ஆதிவாசிகள் பகுதிகளிலும், மேற்குறிப்பிடும் அடக்குமுறைகள் மக்கள் மீதான சித்ரவதைகளாக அம்பலமாகி உள்ளன. அதுவே, நக்சல்பாரி இயக்கம் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்தி விடுகிறது. உதாரணமாக மேற்கு வங்கத்தில் இருக்கும், மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் லால்கர் பகுதி இன்று மாவோயிஸ்டு தளம் கொண்டது என்பதாக கருதப்படுகிறது. இந்த வட்டாரத்தில் இப்போது இயங்கி கொண்டிருக்கும் ஆதிவாசிகள் மக்கள் திரள் அமைப்பு, மேற்கண்ட காரணங்களினாலேயே வளர்ந்துள்ளது. அதற்கு காவல்துறை அராஜகங்களுக்கு எதிரான மக்கள் குழு என்று பெயர். அதையே மாவோயிஸ்டு ஆதரவு அமைப்பு என்று அரசு முத்திரை குத்துகிறது. சமீபத்தில் இந்த மக்கள் குழுவை சேர்ந்த தலைவர் ஒருவரை, காவல்துறை சுட்டுக் கொன்றது. அவர் அங்கே நடந்த ரயில் விபத்திற்கு காரணமானவர் என்பதாகவும் அரசு கூறியது. ஆனாலும் கூட ஒரு மக்கள் திரள் அமைப்புக்கு தலைவராக இருப்பவரை, வன்முறைச் செயல்களுக்கு முத்திரை குத்துவதும், பிறகு பிடித்துக் கொல்வதும் பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனென்றால் மேற்கு வங்க முதலமைச்சர் பயணத்தில் தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் முயற்சி எடுத்ததையொட்டி, அந்த வட்டாரம் முழுமையிலும் உள்ள ஆதிவாசிகள், காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டார்கள். அந்த தாக்குதலுக்கு பிறகுதான், காவல்துறை அராஜக எதிர்ப்பு மக்கள் குழு என்ற ஆதிவாசிகள் அமைப்பு உருவானது. ஆகவே, மக்கள் மீதான காவலர்களின் சித்ரவதைகளுக்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.அதே போல, ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஆயுத கலவரங்கள் நடந்து வரும் வட்டாரத்தில், பொதுமக்கள் மீதான சித்ரவதைகள் பட்டியலிடப்படுகின்றன. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க இப்படியொரு சட்டம் அவசியம் என்று மத்திய அரசு கருதுகிறது. மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கு காரணமாக, அரசப்படைகளின் அடக்குமுறைகளும், சித்ரவதைகளும் மனித உரிமை ஆர்வலர்களாலும், அறிவிஜீவிகளாலும் முன்வைக்கப்படுவதனால், அவர்களது வாயடைக்க இப்படியொரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் கருதுவார் போலும்.மேற்கண்ட சட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னால், அதற்கான சட்ட முன்வரைவை இந்தியாவின் சட்ட ஆணையம் முழுமையாக சோதித்த பிறகு தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டு ஐ.நா. சபையால், மனித உரிமைகளுக்கான பிரபஞ்சம் தழுவிய பிரகடனம் என்று ஒன்று அறிவிக்கப்பட்டது. அது நவீன கால சமூதாயத்தில் சித்ரவதைகளை தடைசெய்வதற்கான ஒரு முயற்சி. அனைத்து நாட்டு பொதுமன்னிப்பு சபை, சித்ரவதை பற்றியும் அதன் கொடூரமான, மனிதத் தன்மையற்ற, தரம் குறைந்த கையாளுதல்கள் மற்றும் தண்டனைகள் பற்றியும் 150 நாடுகளிலிருந்து 1997 முதல் 2000 ஆண்டு வரை நடந்த நான்காண்டு நிகழ்வுகளை, பட்டியல் போட்டு கொடுத்துள்ளது. 70 நாடுகளில் அரசியல் கைதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும், மேலும் 130 நாடுகளில் சாதாரண கைதிகள் மற்றும் காவலில் வைத்திருப்போர் சித்ரவதைகளும் அதில் பட்டியல் போடப்பட்டுள்ளது. அரசு தரப்பு செய்து வரும் சித்ரவதைகள் ஆவணமாக்கப் பட்டுள்ளன.சித்ரவதைகள் என்பது உண்மையை கரப்பதற்காக காவலர்களால் செய்யப்படுகின்ற செயல் மட்டுமல்ல, மாறாக பிடிபட்டவரின் மனஉறுதியை உடைப்பதற்காகவும் கையாளப்படுகிறது. அது அடக்குமுறையின் மற்றும் அதிருப்திக்கு எதிரான, அதிகார மேம்படுத்தலுக்காக பாடுபடும் சமூகங்களுக்கு எதிரான வடிவமாக இருக்கிறது. உதாரணமாக இந்தியா போன்ற நாடுகளில் மதச் சிறுபான்மையினர் மீதான அரசப் படைகளில் அடக்கு முறைகள் சித்ரவதைகளாக விளக்கப்படுகின்றன. தேடப்படும் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மீதும், குடும்பத்து பெண்கள் மீதும் சம்பந்தம் இல்லாமல் ஏவப்படும் அடக்குமுறைகள், விசாரணைகள், கைதுகள் ஆகியவை அத்தகைய சித்ரவதை வடிவங்களாக இருக்கின்றன. அதாவது சிறுபான்மை மதத்தினரான முஸ்லீம் சமுதாய மக்கள் மத்தியில், வீடுகளில் அரசப் படைகள் புகுந்து பெண்களை கரடுமுரடான முறைகளில் விசாரணை செய்வது, அவர்களது பர்தாவை தூக்கிப் பார்த்து அடையாளம் காண முயற்சிப்பது, இரவு நேரங்களில் அவர்களது வீடுகளுக்கு சென்று, விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வது ஆகியவை சித்ரவதை வகைகளாகும்.அதேபோல சாதிய ஒடுக்குமுறை இருக்கின்ற ஒரு சமுதாய அமைப்பில், ஆதிக்க சாதிகளின் நலன்களை மனதில் கொண்ட அரசப் படைகள், தலித் சமூக மக்கள் வாழும் குடியிருப்புகளில் செய்கின்ற அத்துமீறல்கள் அனைத்துமே சித்ரவதை பட்டியலில் சேருகின்றன. சாதி மோதல்கள் நடக்கும் போதெல்லாம், திட்டமிட்டு அமைப்பாக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய அரசப் படைகள், ஆதிக்க சாதி பண்ணையார்களின் நலன்களை பாதுகாக்கும் திட்டத்தோடு, ஒடுக்கப்பட்ட சாதிகளின் மீது கண்முடித்தனமாக தொடுக்கின்ற தாக்குதல்கள் இந்த வகையில் சேர்க்கப்படுகின்றன.சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மனித உரிமைகள் வேண்டி குரல் எழுப்புகின்ற அதிருப்தியாளர்கள், காவல்துறையால் சாதாரண காலங்களில் கூட ஒடுக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் ஆகியவற்றை அனுமதிப்பதில் கூட, கஞ்சத்தனம் காட்டுகின்ற காவல்துறையின் அணுகுமுறைகள் சித்ரவதைகளாகத்தான் சித்தரிக்கப்பட வேண்டும். காவல்நிலையங்களில் நடைமுறையில் இருக்கின்ற லஞ்சம், ஊழல் ஆகிய அணுகுமுறைகளும், ஏழை மக்களுக்கு சித்ரவதைகளாகத்தான் இருக்கின்றன. ஐ.நா. சபையின் அழுத்தத்தின் காரணமாக, உலக வங்கி மற்றும் அனைத்து நாட்டு நிதியம் ஆகியவற்றின் உதவிகளை பெறுதவற்காக, தாங்களும் மனித உரிமை பண்புகளை உயர்த்திப் பிடிப்பதாக காட்ட வேண்டிய பொறுப்பு அல்லது நிர்பந்தம் மத்திய அரசுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாக, இப்படிப்பட்ட நல்லதொரு மசோதாவை சட்டமாக்கினார்கள் என்றால், அதை முறையாக உணர்வுப்பூர்வமாக அமூல்படுத்துவார்களா என்ற கேள்வியும் அதனுடனேயே எழுகிறது.அங்கோலா, அர்ஜன்டினா, பிரேசில், சிலி, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, கோட்டமாலா, ஈராக், இந்தியா, இஸ்ரேல் என்று உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற சித்ரவதை நடத்தப்படுவதை மனித உரிமை ஆர்வலர்கள் பட்டியல் போடுகிறார்கள் அவ்வாறு பட்டியலிடப்படும் சித்ரவதைகள் இந்தியாவின் ஒவ்வொரு முளையிலும் நடந்து வருவதும், அதுவே ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் முன், பணிக்குழு என்ற பெயரில் விசாரிக்கப்படுவதும் நடந்து வருகிறது.சட்டமாக்கி விட்டோம் என்ற பெயரில் முதல் கட்டமாக இந்திய அரசு, உலக அரங்கில் குற்றம் சாட்டப்படுவதிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் அந்த சட்டத்தை எந்த அளவிற்கு உண்மையில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற கேள்வியும் பின்னாலேயே எழுப்பப்பட இருக்கிறது என்பதையும் எழுப்பப்பட வேண்டும் என்பதையும் முன்னாலேயே நாம் சொல்லி வைப்போம்.
Wednesday, September 1, 2010
வறுமையை கணக்குப் பார்க்கயிருக்கும் ஐ.நா. சபை.
வருகிற செப்டம்பர் 20 முதல் 22 வரை அமெரிக்காவிலிருக்கும் நியுயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் உயர்மட்ட சிறிய மாநாட்டுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதில் ஐ.நா. சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்குகொள்ளும். அந்த மாநாட்டுக் கூட்டத்தில், 2000மாவது ஆண்டில், ஐ.நா. பொதுச்சபையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்களா என்ற அறிக்கையை ஒவ்வொரு நாடும் முன்வைக்க வேண்டும். உலகம் முழுவதிலும் வறுமையும், ஏழ்மையும், சமூக புறக்கணிப்பும், சிசுக் கொலைகளும், பெண் கருக்கொலைகளும், கல்வியின்மையும், எய்ட்ஸ் போன்ற நோய்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையும், வளர்ச்சியின்மையும், பெண்ணடிமையும் இருப்பதை அனைத்து உலகநாடுகளும், ஐ.நா. பொதுச்சபையில் ஒப்புக்கொண்டன. அவற்றை போக்குவதற்கும், ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவதற்கும் திட்டமிட வேண்டும் என்றும் அவர்கள் அப்போது ஒப்புக்கொண்டனர். அதையெட்டி புத்தாயிரம் வளர்ச்சி லட்சியங்கள் என்பதாக 8 லட்சியங்களை உருவாக்கினார்கள். அவை தீவிர வறுமை நிலையை ஒழிக்கவேண்டும் என்றும், பிரபஞ்சம் தழுவிய ஆரம்பகல்வியை எட்டவேண்டுமென்றும், பாலினச் சமத்துவத்தையும், பெண்கள் அதிகார மேம்படுத்தலையும், சாதிக்க வேண்டுமென்றும், குழந்தைகள் மரணத்தை குறைக்கவேண்டுமென்றும், பிரசவ மரணங்களை தவிர்க்கவேண்டுமென்றும், சுற்றுச்சூழலில் நீடித்தத் தன்மையை ஏற்படுத்தவேண்டுமென்றும், வளர்ச்சிக்கான உலக பங்களிப்பை வளர்க்கவேண்டுமென்றும் 8 வகைகளாக கூறப்பட்டுள்ளன. மேற்கண்ட லட்சியங்களை எட்டுவதற்காக 2000ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரை கால அளவு நிர்ணயிக்கப்பட்டது. அத்தகைய இலக்குகளை 10 ஆண்டுகளில் எந்த அளவிற்கு நிறைவேற்றியிருக்கிறோம் என்பதை கணக்குப் பார்ப்பதற்காக, மேற்க்கூறப்பட்ட ஐ.நா. உச்சி மாநாடு நடத்தப்படவிருக்கிறது. நாடுகள் தாங்கள் செய்ததையும், செய்யப்போவதையும் கணக்கு காட்டும்போது, ஐ.நா.வும் தனது 27 அமைப்புகள் மூலம் அது பற்றிய விவரங்களை சேகரிக்கும். அதற்காக அனைத்து நாட்டு தொழிலாளர் அமைப்பு, ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு, ஐ.நா. தொழில் வளர்ச்சி அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி, அனைத்து நாட்டு நிதியம், அனைத்து நாட்டு தொலைத்தொடர்பு யூனியன், ஆப்பிரிக்காவிற்கான பொருளாதார ஆணையம், ஐரோப்பாவிற்கான பொருளாதார ஆணையம், லத்தீன் அமெரிக்காவிற்கான பொருளாதார ஆணையம், ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார ஆணையம், மேற்கு ஆசியாவிற்கான பொருளாதார ஆணையம், எச்.ஐ.வி./எய்ட்ஸ் போன்றவற்றிற்கான ஐ.நா. கூட்டுத் திட்டம், ஐ.நா. குழந்தைகள் நிதி, வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா. மாநாடு, பெண்களுக்கான ஐ.நா. வளர்ச்சிநிதி, ஐ.நா. வளர்ச்சித் திட்டம், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம், பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நா. தொடர்பு கட்டமைப்பு, அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம், ஐ.நா. மனித குடியேற்றத் திட்டம், ஐ.நா. மக்கள்தொகை நிதி, அனைத்து நாட்டு வர்த்தக மையம், அனைத்து நாட்டு நாடாளுமன்ற யூனியன், பொருளாதார கூட்டுறவுக்கும், வளர்ச்சிக்குமான அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு நாட்டை பற்றிய புள்ளிவிவரங்களையும் சேகரிக்கிறது. எம்.டி.ஜி. என்ற புத்தாயிரம் வளர்ச்சி லட்சியங்கள் என்ற ஆவணத்தில் 212 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இன்னும் 5 ஆண்டுகளே இலக்கை எட்டுவதற்கு இருப்பதனால், உலகத் தலைவர்கள் அனைவரும் வருகிற செப்டம்பர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, முன்னேற்றத்தை துரிதப்படுத்தி இலட்சியங்களை அடையவேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூன் அறைகோல்விடுத்துள்ளார். தீவிர வறுமை என்பது உலக அளவில் உடனடி அவசரப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. வறுமை, பட்டினி, நோய், பிரசவ மரணங்கள் மற்றும் குழந்தை மரணங்கள் 2015 என்ற காலக்கெடுவிற்குள் ஒரு கட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும் என்பதே அதன் குறிக்கோள். உலகத்திலுள்ள நாடுகளில் இந்தியாவும், சீனாவும் மட்டும்தான் குறைந்தபட்சம் மேற்கூறிய லட்சியங்களை எட்டுவதில் முன்னேறியிருக்கின்றன. அதனால் மட்டுமே இந்த இரு நாடுகளின் நிலமை ஆரோக்கியமாக இருப்பதாக பொருள்கொள்ள முடியாது. இந்தியா முழுவதும் இருக்கின்ற புள்ளிவிவரங்களை எடுத்து, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை இந்த நாடு அடைந்துள்ளதா என்று கணக்குப் பார்க்கும் பணியை, அரசு சாரா நிறுவனமான “வாதா ந தோடோ அபேயன்” டெல்லியை தலைமையாகக் கொண்டு செயல்ப்பட்டு வருகிறது. அது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வியுடன் விவரங்களைத் தொகுக்குகிறது. அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் சில அரசு சாரா நிறுவனங்கள், அரசாங்கம் ஒப்புக்கொண்ட இலக்குகளை எட்டியிருக்கிறதா என்று கணக்குப் பார்க்கிறார்கள். அவ்வாறு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களையும், சம்மந்தப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய, பெண்கள் தீர்ப்பாயம் ஒன்று சென்னையில் சென்ற வாரம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அவ்வாறு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களில், கடந்த 10 ஆண்டுகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட 8 லட்சியங்களில் 37% மட்டுமே அடைந்துள்ளோம் என்பதற்கான விவரங்களை அவர்கள் தொகுத்துள்ளார்கள். வறுமையை பாதியாக குறைப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இருக்கும் நிலமையை ஆய்வு செய்திருக்கிறார்கள். 1998 முதல் 2005 வரை தமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் அளவு குறைந்திருக்கிறது என்ற அடிப்படை உண்மையை வெளியிடுகிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கீழே உள்ள அரசு அதிகாரிகளுக்கு எம்.டி.ஜி. பற்றி எதுவுமே தெரியவில்லை. சிறு விவசாயிகளின் நிலங்கள் பறிபோன நிலையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம், வேலை கொடுத்துவிட்டால் சரியாகிவிடுமா? என்ற கேள்வியும் எழுகிறது. மாநில அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படியே, 100 நாள் வேலைக்கு 54 நாட்கள் தான் வேலைக் கொடுக்கப்படுகிறது என்று தெரிகிறது. கிராமப்புற தலித் மக்களுக்கு கழிப்பறைகளும், பாதுகாப்பான குடிநீரும் கிடைக்கவில்லை. ஆனால் இலவச தொலைக்காட்சி கிடைத்துள்ளது. தலித் மற்றும் ஆதிவாசி குடும்பங்களின் ஆண் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியில் விகிதம் கூடவில்லை. பாலினச் சமத்துவம் ஆரம்ப பள்ளிகளிலும், உயர் பள்ளிகளிலும் சிறிது கூடியிருந்தாலும், கல்லூரிக் கல்விகளில் எட்டப்படவில்லை. எச்.ஐ.வி./எய்ட்ஸ் போன்றவை 15லிருந்து 41 வயது வரையுள்ள பெண்களை அதிகம் பாதித்துள்ளது. இந்திய மட்டத்தை விட கூடுதலாக தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறை 42%ஆக இருக்கிறது. 44% மக்கள் நகர்புறங்களில் வாழ்கிறார்கள். அதில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு வளர்ச்சித் திட்டங்கள் போய்ச் சேரவில்லை. கிராமங்களை சென்று அடைந்த சுகாதாரத் திட்டங்கள், இப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் மையம் கொள்வதால், கூலி மக்கள் அவற்றை அடைய முடிவதில்லை. இவ்வாறு தலித், சிறுபான்மை, தனித்துவிடப்பட்ட பெண்கள் ஆகியோரின் தமிழ்நாடு என்பது வேறுபட்டு நிற்கிறது என்று கூறும் சமூக ஆராய்ச்சியாளர்களின் கணிப்பை மாற்றுவதற்கு அரசு முயலுமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. எப்படியானாலும் வரயிருக்கின்ற ஐ.நா.வின் உச்சி மாநாடு பல்வேறு விவரங்களை அம்பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
Subscribe to:
Posts (Atom)