Thursday, March 10, 2011

கருணாநிதிக்கு எதிராய் சிதம்பரம் குத்திய கத்தி.

கருணாநிதிக்கு எதிராய் சிதம்பரம் குத்திய கத்தி.
பயன்படுத்திய ராஜபக்சே
கருணாநிதியின் தேர்தல் தந்திரங்கள், கூட்டணி தந்திரங்கள் ஆகியவற்றை உணர்ந்த காங்கிரஸ் இந்த முறை விழிப்போடு இருந்து அதிக தொகுதிகளும், ஆட்சியில் பங்கு கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தி விட வேண்டும் என்று எண்ணித்தான், டில்லி காங்கிரஸ் காய் நகர்த்தியது.அதில் மௌன அடிமையாக இருந்த தங்கபாலுவை விட, ஜெயந்தியை விட, வாசனை விட, வேகமாக இருந்தவராக சிதம்பரம் கவனிக்கப்பட்டார். ஸ்டாலின் அவர்களை அவமரியாதை செய்தபோதும், துரைமுருகன் நக்கல் செய்து கிண்டலடித்தபோதும், அதிக ஆத்திரப்பட்டவர் சிதம்பரம்தான். அதுகூட ஒரு கார்பொரேட் தந்திரமா என்று தெரியாது.

அத்தகைய சூழலில், மூன்று வாரங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம்கள் வைத்திருப்பதாகவும், அதில் பயிற்சி பெற்ற புலிகள் தலைவர்களை கொள்ள இருப்பதாகவும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது என்று தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியிட்டிருந்தார்கள். அதை உடனடியாக தமிழக அரசின் டி.ஜி.பி. மூலம் மறுத்து அறிவுப்பு வெளியிட்டார்கள். அது காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசுக்கும், தி.மு.க.வின் மாநில அரசுக்கும் உள்ள போர் என பலரும் அக்கறையற்று இருந்துவிட்டனர். காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கட்சிகளின் உள்முரன்பாடுதானே என்று கூட பலரும் சும்மா இருந்துவிட்டனர்

அதுவே இப்போது விஸ்வரூபம் எடுத்து விட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் பிரதமர் ஜெயரத்னே, விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் பயிற்சி முகாம்களை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் ஒன்று ருத்திரகுமரால் நடத்தப்படும் நாடு கடந்த தமிழீழ அரசு என்றும், இன்னொன்று நர்டியவன் தலைமையிலான முகாம் என்றும், பிரிதொன்று போட்டு அம்மான் வழிகாட்டலில் இருந்த விநாயகம் என்றும்,புகழேந்த்ரா என்று அவர் அழைக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார். இந்த செய்தியை இலங்கை அரசுக்கு இந்திய மத்திய உளவு அமைப்பான "ரா"கொடுத்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் உள்துறை தி.மு.க. அரசு மீது சேற்றைவாரி எறிய தமிழ்நாட்டில் விடுதலை புலிகளது முகாம் இருப்பதாக கூறியது.

தி.மு.க.விற்கும் காங்கிரசுக்கும் காய் விட்டுக்கொண்ட நேரத்தில் அத்தைகைய குற்றச்சாட்டை காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஏற்பாட்டில் செய்தார்கள். இது இந்தியாவின் மத்திய அரசு வழமையாக செய்துவரும் ஒரு தந்திரம்தான்.அதாவது மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் முரண்பட்டு வந்த நேரத்தில் எல்லாம் மத்திய உள்துறை இப்படி மோசமான குற்றச்ச்காட்டை வெளியிடும். அதுகண்டு மாநில கட்சிகள் அசைவர். இதே தந்திரத்தை 2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நடக்கும் போது மத்திய அரசு செயது பார்த்தது.அப்போது ஜெயலலிதாவிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டது.அப்போது சிவராஜ் பட்டீல் உள்துறை அமைச்சராக இருந்தார்.

முதல்வர் செல்வி.ஜெயலலிதாவை கொள்ள இரண்டு பெண் புலிகள் வந்திருப்பதாக அப்போது உள்துறை அறிக்கை கூறியது. விசாரித்ததில் அதுபோன்ற ஒரு புகார் வந்ததாகவும், அதை ஐ.பீ.என்ற மத்திய உளவு நிறுவனம் சம்பவம் பற்றி கூறப்பட்ட மணப்பாக்கம் சென்று பார்த்ததாகவும் அவை அத்தனையும் போய் என்றும் அப்போதே உள்துறைக்கு செய்தி அனுப்பி விட்டதாகவும் கூறினார்கள்.ஆனால் அதே விஷயத்தை உள்துறை ஜெயலலிதா ஆட்சி பற்றி கெட்ட பெயரை உருவாக்கவும், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக மத்திய அரசுக்கு அறிக்கை தரவும், அந்த குற்றச்சாட்டை பயன்படுத்த முயன்றது. அதை ஜெயலலிதா அரசு கடுமையாக எதிர்த்து அறிக்கை விட்டதாலும், ஜெயா தொலைக்காட்சியில் அது பற்றி விரிவாக விவாதம் செய்து அம்பலப்படுத்தியதாலும், அந்த தந்திரத்தை காங்கிரஸ் மத்திய அரசு கைவிட்டது.


அந்த நேரத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றில் ஆண்டு அறிக்கையில் மத்திய உள்துறை இவ்வாறு கூறியிருப்பதை கேள்வி கேட்டது. அதாவது அதற்கு முந்திய ஆண்டு ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி தனது ஆண்டு அறிக்கையில் தமிழ்நாடு பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டை எழுப்பாத போது, ஓராண்டிற்குள் எந்த ஒரு வன்முறையும் தமிழ்நாட்டில் ஈழப்போராளிகளால் நடக்காத போது, எப்படி காங்கிரஸ் அரசு இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறுகிறது என்று அந்த ஆங்கில ஏடு சென்னை பதிப்பில் தீட்டியிருந்தது. அப்போதே மத்திய உள்துறை மாநில அரசுகளை மிரட்ட இப்படி புலிகள் பெயரால் மிரட்டல்களை செய்வதை பழக்கமாக கொண்டுள்ளது என்பது அம்பலமானது.

இப்போது கருணாநிதி அரசுடன் அல்லது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு பிரச்சனைகள் எழுந்துள்ள நேரம். இன்னமும் சொல்லப்போனால் மத்திய அரசில் சிதம்பரம் உள்துறைஅமைச்சராக பொறுப்பேற்றுள்ள நேரம்.சிதம்பரத்தின்செயல்பாடுகளில் தி.மு.க.அரசுக்குஎதிராக ஒவ்வொரு காய்களும் நகர்த்தப்பட்டபோது, விடுதலை சிறுத்தை கட்சியின் ஒரே சட்ட மன்ற உறுப்பினரான ரவிக்குமார் முதல்வர் கருணாநிதியை வழக்கம் போல பார்க்கசெல்கிறார். அப்போது தேத்தலில் தோற்றுப்போன சிதம்பரத்தை எதற்க்காக வெற்றி பெற்றதாக அறிவிக்க வைத்தீர்கள் என்று வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் நானா செய்தேன்.என் பய்யன் செய்துவிட்டான் என்று விடையளித்துள்ளார். அந்த அளவிற்கு சிதம்பரத்தின் ச்யல்பாடுகளில் கருணாநிதி சந்தேகம் கொண்டிருந்தார்.

அதே சித்ம்பரம்தான் இப்போது தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிகளின் எண்ணிக்கை பற்றியும், ஆட்சியில் பங்கு பற்றியும் முரண்பாடுகள் வந்தபோது, துரைமுருகன் கேலி செய்தார் என்றும், ஸ்டாலின் நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்து போனார் என்றும் அதன்மூலம் தன்னையும் காங்கிரசையும் அவமானப்படுத்தி விட்டதாக எண்ணி கடும் அக்டுப்பு கொண்டு தி.மு.க. பற்றி கண்டபடி சோனியாவிடம் எடுத்து சொன்னவர். காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வை விட்டு பிரியும் நிலைமை வரும் என்று முன்கூட்டியே அவதானித்த சிதம்பரம் அதற்குதான் இப்படி புலி கதையை தி.மு.க. அரசுக்கு எதிராக கிளப்பிவிட்டார்.atharku அவர் பயன்படுத்திய உள்துறை அறிக்கையில் சென்னை அருகே வளசரவாக்கத்தில் புலிகளின் பயிற்சி நடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் அப்போது தமிழ்நாடு காவல்துறை தலைமை அதிகாரி லத்திகாசரண் மறுத்திருந்தார்.

இப்போது அதே குற்றச்சாட்டை ராஜபக்சே அரசின் பொம்மை பிரதமர் ஜெயரத்னே இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். அதாவது தி.ஹிந்து ஏடு இன்று காலை வெளியிட்டுள்ளபடி,தமிழ்நாட்டில் ருத்த்ரகுமார் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்று முகாம் வைத்திருப்பதாகவும், நெடியவன் தலைமையிலான புலிகள் முகாம் ஒன்று இருப்பதாகவும், பொட்டம்மான் வழிகாட்டலில் வளர்ந்த புகழேந்திரன் தலைமையிலான புலிகள் முகாமில் முக்கிய ரசியல்வாதிகளை கோளை செய்ய பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் அந்த இலங்கை இபிரதமர் பிதற்றியுள்ளார். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் இதை இந்திய அரசிடம் தெரிவித்தீர்களா என்று கேட்டதற்கு வாய் மூடி மௌனியாக அந்த அமைச்சக உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். இந்த செய்தி இந்திய உளவு நிறுவனமான "ரா" கூறிய அறிக்கையே தவிர வேறு எதுவும் இல்லை.

இபடி ஒரு அறிககையை "ரா" தயார் செய்யவேண்டிய அவசியம் என்ன? தி.மு.க. காங்கிரசை விட்டு வெளியே வந்து தனது கூட்டணியை கட்டி செயல்பட தயாராகி வருகிறது என்று தாயாநிதி மாறன் காங்கிரஸ் தலைமையிடம் ஏற்கனவே கூறிவிட்டார். அப்படி செய்யும்போது தி.மு.க.தலைமை தமிழர் பிரச்னையை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எடுக்க திட்டமிட்டுள்ளது என்றும் மத்திய அரசுக்கு சித்தி பறந்தது. அதன்விளைவே தி.மு.க. அரசு புலிகளுக்கு சரணாலயம் தர்ய்வதாக குற்றம் சாட்ட சிதம்பரம் போட்ட திட்டம் என்ற சிதம்பர ரகசியம் வெளியாகி உள்ளது. ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தலைவர்கள் இறந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்துள்ள சீ.பி.ஐ.யின் செயலை செய்த அதே மத்திய அரசு இது போன்ற கபட நாடகங்களை அரங்கேற்றும் போது எல்லாமே அம்பலமாகி நிற்கிறது.

Wednesday, March 9, 2011

மன்னர் மண்டியிட்டாரா?

தன்னை ராஜ ராஜ சோழனின் வாரிசு என்று அழைத்துக்கொண்ட, கேரளாவின் மாவேலி அரசரின் ஆட்சி போல ஆளும் மன்னர் என்று பெருமைப்பட்டுக்கொண்ட ஒருவர், தமிழ் மன்னர்கள் மக்களாட்சியை நடத்தத் வந்தனர் என்று மன்னர்களை அவர்களது ஆட்சிகளை நியாயப்படுத்தி வாதிட்ட ஒருவர் இன்று சோனியா என்ற காங்கிரஸ் தலைவியிடம் மண்டி இட்டுவிட்டாரா? இருக்கவே முடியாது. காங்கிரசிடம் கேட்ட தொகுதிகளை கொடுத்திருக்கலாம். காங்கிரசிடம் பணம் எதிர்பார்த்து தமிழ்நாட்டு மன்னர் செல்லவேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் வாக்குகளில்தான் தமிழ்நாட்டில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையும் தி.மு.க.விற்கு இல்லை.பின் எதற்காக தி.மு.க. தலைமை காங்கிரசிடம் மண்டியிடவேண்டும்?

தி.மு.க. தலைமை தேர்தல்களை சந்திக்க புதிய உத்திகளை திருமங்கலம் தேர்தல் தொடங்கி நடைமுறைப்படுத்துகிறது. அது இந்திய நாடாளுமன்ற டேஹ்ர்தல்களுக்கு புதிய உத்திதான். மக்களிடம் பெற்றதை மக்களிடமே தருவது என்பது அதற்கு பெயர். நம்மை ஆட்சியி அமரவைத்த மக்களால்தான் நமக்கு அதிகமான நிதி சேர்ந்தது என்று ஒப்புக்கொள்ளும் தி.மு.க.தலைமை அதில் ஒரு பகுதியை அந்த மக்களுக்கே திருப்பி தருவது என்று நடைமுறை தந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய தர்மச்செயலை பலரும் பலமாதிரி பேசுகிறார்கள்.தேர்தல் நேரம் இல்லாதபோது, அரசு மக்களுக்கு இலவசமாக மழை, வெள்ள நிவாரணம் கொடுக்கலாம். இலவசமாகவான்ன தொலைகாட்சி பெட்டிகளை கொடுக்கலாம். சமையல் வாயு அடுப்புகளை கொடுக்கலாம். முதியோருக்கு கண்ணாடி கொடுக்கலாம். ஏழைகளுக்கு செருப்பு கொடுக்கலாம்.மாணவர்களுக்கு சிக்கொள் கொடுக்கலாம். தேர்தல் நேறத்தில் மட்டும் கொடுக்க கூடாது. இது என்னய்யா சட்டம் என்று கேட்கிறது தி.மு.க.தலைமை.

தேர்தல் நேரத்தில் மக்களிடம் பெற்றதை மக்களிடமே கொடுக்கும் தி.மு.க.தலைமையின் பெருந்தன்மையை யாரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே? அது என்ன நியாயம்? தேர்தல் ஆணையத்திற்கும் அது புரியவில்லை. மக்கள் இன்று ஏழைகளாக இருப்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரிய வேண்டாமா? அவர்களை ஒரு மன்னர் ஆட்சி ஏதோ முடிந்த அளவு தேர்தல் நேரத்திலாவது வசதியாக வைத்திருக்க முயல்கிறதே? இது விளங்க வேண்டாமா? இந்த தேர்தல் ஆணையம் எப்போதுமே மாநில கட்சிகள் சொன்னால் கேட்பதில்லை. மத்தியில் உள்ள எதிர்க்கட்சி சொன்னாலும் கேட்பதில்லை. மாறாக மத்தியில் ஆளும் கட்சி அதுவும் காங்கிரஸ் போன்ற நூறு ஆண்டு கட்சி சொன்னால் மட்டும்தான் கேட்கிறது.


அதனால்தான் எத்தனை மண்டியிட்டாலும் பரவாயில்லை, மன்னரின் மூத்த மைந்தன் கண்டுபிடித்த இந்த தேர்தல் தந்திரத்தை எப்படியாவது அமுல்படுத்தி மக்களுக்கு அவர்களது சொந்தமான நிதியில் ஒரு சிறு தொகையாவது போய்சேர வேண்டுமே என்று மன்னர் கவலைப்பட்டு தேர்தல் ஆணையஹ்திற்கு புரியும் மொழியில் அதை சொல்ல காங்கிரஸ் தலைமையுடன் மண்டியிட்டாவது கூட்டணி என்று அமைத்துக்கொண்டுள்ளார்.மன்னர்களை புரிந்துகொல்பதே இந்த தமிழர்களுக்கு கடினம் போலிருகிறது.அதுவும் தமிழ் மன்னர்களை தமிழர்கள் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறார்களே?


தொழிற்சங்கம் நடத்துபவர்களுக்கு இது புரிய வேண்டும். தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தின் ஒரு பகுதியே போனஸ் என்ற ஊக்கத்தொகை என்று கூறுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். இப்போது காங்கிரஸ் தி.மு.க.வுடன் சேர்ந்தாகிவிட்டது. இனி தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்து தி.மு.க.வின் செயல்தந்திரத்தை முறியடிக்க முடியுமா?

Tuesday, March 8, 2011

கருவிலும், உருவிலும், சிதையிலும் சிதைக்கிறாயே

உலக பெண்கள் தினம் என்பதால் எல்லா அரசியல் தலைவர்களும் நீளமான வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இன்றும் கருவில் பெண்கள் அழிக்கப்படுவது அதிகமாக பெண் உரிமை பேசும் தமிழ்நாட்டிலேயே ஒழிக்கப்படவில்லை. அதற்கு பொருளாதாரம் காரணமாக சொல்லப்படுவதும் அதை கேட்டு பலரும் அனுதாபபடுவதும் கொடுமை மனங்களை படம் பிடித்து காட்டுகிறது. உருவில் பெண்ணாக வளர்ந்தபின்னும் தொடரும் சிசுக்கொலைகள் நின்றபாடில்லை. பொதுமக்கள் இயல்பாகவே பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைப்பதிலிருந்து விடுதலை பெற்றுவிடவில்லை. அதற்கு வளர்ப்பு கூட காரணமாக ஆகிவிடுகிறது. வளர்ந்த பின்னும் பெண்களுக்கு சமூகம் கொடுக்கும் மரியாதை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

யாராவது மானுடத்தில் பெண்கள் சரிபாதி என்று மனதார அனுமதிக்கிறார்களா? சமீபகூட்டம் ஒன்ரிபெராசிரியர் சரஸ்வதி ஒரு செய்தியை கூறினார். பெண்களுக்கு கல்வி கொட்த்தும் கூட அதற்கு மக்கள் வரிப்பணம் செலவானால் கூட, பெண்களை படித்து முடித்த பின், வேளைக்கு செல்ல அனுமதிக்காமல் கல்யாணம் கட்டிக்கொடுப்பதில் மட்டுமே கவனமாக இருக்கும் சமூகத்தை சுட்டிக்காட்டினார். உங்கள் கல்யாணமும், உங்கள் குடும்பங்களும் எவ்வளவு செய்தரினாலும், சிரித்தாலும் நீங்கள் திருந்துவதாய் இல்லை என்பதுதானே உங்கள் நிலை? உரப்படும் போங்கள்.இந்த அடிமை மனோபாவத்திலிருந்து எப்போது வெள்யே வரப்போகிறீர்கள்?

பெண்களும் மானுடத்தின் சரிபாதி என்றால் அவர்கள் வேளைக்கு செல்வதும், அவர்களே தங்கள் திருமணத்தை தீர்மானிப்பதும் உங்களுக்கு ஏற்கமுடியவில்லையா? இப்போது பெண்கள் ஆரோக்கியமான புலிக்குட்டியை பெற்றெடுத்தாலும், அவர்களது மறைவுக்கு பின்கூட அவரது சிதையில் கூட சாம்பலை சிதறடிப்போம் என்ற இனவெறி செயலை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் பார்வதியம்மாள் தனது மரணத்தின் மூலம். அதை எண்ணியாவது உலக பெண்கள் தினத்தில் ,தமிழ்பெண்கள் துவக்கெடுத்த பின்தான் தமிழீஹத்தில் சரியான சமத்துவம் பெற முடிந்தது என்பதை உலகம் புரிந்துகொண்டால் சரி.

Saturday, March 5, 2011

எந்த நிபந்தனை அடிப்படையில் ஆதரவு?

அய்யா, கலைஞர் அவர்களே. காங்கிரஸ் உங்களது சுய மரியாதையை சீண்டி பார்கிறார்கள்.உங்கள் கட்சியான தி.மு.க.வின் சுய மரியாதையை சீண்டி பார்கிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டின் சுய மரியாதையை சீண்டி பார்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். உங்களுடன் தொகுதி உடன்பாட்டில் ஒத்துவராத காரணத்தால் மட்டுமே நீங்கள் வெள்யே வந்துவிட்டீர்கள் என்று தமிழ் கூறும் நல்லுலகம் எண்ணுகிறது. நீங்கள் இவ்வளவு நாளும் எந்த அளவுக்கு புழுங்கிக்கொண்டு இருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும். அதாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்த கேரள,கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் செயல்களுக்கு பின்னால் காங்கிரஸ் இருந்தது என்று தெரிந்தும் நீங்கள் மத்திய அமைச்சரவையில் பங்கு கொண்டு "பங்கு" எடுக்கவேண்டுமே என்பதால், அதன்மூலம் தங்கள் கட்சியின் அமைச்சர்கள் வளம் பெறவேண்டுமே என்பதற்காக, தமிழ்நாட்டு நலன்கள் கூட முக்கிய அல்ல என்று பொறுமை காத்தீர்கள் என்பது எங்களுக்கு புரிகிறது.

அதன் பிறகு, நீங்கள் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய அஞ்சலி கவிதையை கூட தாங்காத மத்திய அரசை எதிர்க்காமல், பதிவிக்காக தொங்கிக்கொண்டு இருந்தீர்கள் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். அதன்பிறகு இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு நேரத்தில் நீங்கள் காங்கிரஸ் உடன் உள்ள உறவுக்காக ஏங்கித்தவித்ததும் தமிழினத்திற்கு தெரியும. அதேபோல இலங்கையில் தமிழின அழிப்பை முழுமைப்படுத்தவும், புலிகளை அழிக்கவும் காங்கிரஸ் அரசு முடிவு செய்தபோதுகூட, நீங்கள் பதவியால் கிடைக்கும் லாபம் உங்கள் அமைச்சர்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் தானே என்று அமைதி காத்ததும் எங்களுக்கு நினைவில் இல்லாமல் இல்லை. ஆனாலும் கூட்டணி என்றால் கொள்ளை அடிப்பதில், அதில் பங்கு பெறுவதில் என்றுதானே அர்த்தம். அதை விடுத்து ராஜாவை மட்டும் அவர்கள் சிறையில் அடைப்பது உங்களை துன்புறுத்தியது என்பது எங்களுக்கு புரிகிறது.

இப்போது உங்களிடம் நாடி நிற்கும் காங்கிரஸ் தனது கையை உயர்த்தி தமிழ்நாட்டு ஆட்சியில் பங்கு கேட்பதும், எத்தனை தொகுதி என்று கேட்பதும், தொகுதிகளை முன்கூட்டி கூறவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதும் எந்தவகையில் நியாயம் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. அதனால் நீங்கள் மத்திய அமைச்சரவையை விட்டு வெளியே வருவதும் விளங்குகிறது.அதில் உங்கள் பேரன் என்று கூறிக்கொள்பவர் கூடவெளியே வந்தாக வேண்டுமே? அவர் அதை விரும்ப மாட்டாரே? அவர்தானே இத்ததனைக்கும் காரணம் என்று உங்களுக்கு தெரியுமே? சரி. அது என்ன பிரச்சனை அடிபடையில் நிபந்தனை அற்ற ஆதரவு? எந்த பிரச்னையை சொல்கிறீர்கள்?

ஈழத்தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய பிரச்சனை அடிப்படையை எடுப்பீர்களா? ஈழத்தமிழர்களை முகாம்களிலிருந்து வெளியேற்ற பிரச்சனை எடுப்பீர்களா? ஈழத்தில் இன்று வெள்ளத்தால் தவிக்கும் மக்களுக்கு உதவ பிரச்சனை எடுப்பீர்களா? ஈழத்தமிகர் பகுதிகளை வடக்கையும், கிழக்கையும் ஒன்று சேர்க்கும் பிரச்னையை எடுப்பீர்களா? அரசியல் தீர்வு என்று பொதுக்குழுவில் எழுதினீர்களே,அது தமிழீழம்தான் என்று பிரச்சனையை காங்கிரஸ் கட்சிக்கு சொல்வீர்களா? நாடு கடந்த தமிழீழ அரசுக்கு இந்திய மத்திய அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பிரச்சனையை மத்திய அரசிடம் கூறுவீர்களா? விடுதலை புலிகள் மீதன்ன தடையை நீக்கவேண்டும் என்ற பிரச்னை அடிப்படையில் காங்கிரசை கோருவீர்களா? என்னய்யா பிரச்சனை அடிப்படை? தமிழ் கூறும் நல்லுலகம் நம்ப வேண்டாமா?.

Friday, March 4, 2011

தி.மு.க.வை குத்தும் காங்கிரஸ்.

குத்து குத்து கும்மாங்குத்து குத்தராங்கலேப்பா காங்கிரஸ். இது ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மனிதனை கடிக்கும் கதையா? முதலில் ஈழத்தமிழர்களை போராட விடாமல் சிங்களத்திற்கு உதவியது காங்கிரஸ்.பிறகு ஈழத்தமிழரின் விடுதளிக்கு போராடும் விடுதலை புலிகளை தடை செய்தது காங்கிரஸ். பிறகு விடுதலை புலிகளின் தலைவர் மீது கோளை குற்றத்தை சுமத்தியது காங்கிரஸ். பிறகு விடுதலை புலிகளின் இருத்தலே போர்க்க மாட்டாமல் அழிக்க முழு உதவியை சிங்கள பவுத்த பேரினவாத போர் வெறியர்களுக்கு செய்தது காங்கிரஸ். பிறகு ஈழ தமிழ் தேச்டிய இனத்தையே அழிக்க னைத்து உதவிகளையும் செய்தது காங்கிரஸ். அதேபோல தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முல்லை பெரியார் அணைக்கட்டு தண்ணீரை உச்சநீதிமன்றம் கொடுத்தான் கூட அதை கேரள சட்டமன்ர்டம் மூலம் தீர்மானம் போட்டு தடுத்தது காங்கிரஸ். கர்நாடக மூலம் காவேரி தண்ணீரை நடுவர் மன்ற தீர்ப்பை கூட மீறி தடுத்தது காங்கிரஸ். ஆந்திராவில் பாலாற்றுக்கு நடுவே தடுப்பணைகளை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராமல் தடுத்தது காங்கிரஸ்.

இத்தனையும் நடக்கும் போதெல்லாம் காங்கிரஸ் தலைமையை ஆதரித்த தி.மு.க. தலைமையை இப்போது போட்டு வாட்டி வதைக்கிறது காங்கிரஸ்.தி.மு.க தலைவர் கூறுவது போலவே தேர்தல் ஆணையம் மூலம் ஏப்ரல் பதிமூன்றே தேர்தலை வைத்து தானே கூட்டணி பேச்சுவார்த்தையை இழுத்துக்கொண்டு போய், திக்கு முக்காட வைக்கிறது காங்கிரஸ். டில்லியிலிருந்து வந்த ஆசாத் முதலில் என்பது என்றார். பிறகு ஐம்பத்து எழுவரை ஒப்புக்கொண்டார். அறுபது என்று தி.மு.க. வந்த பின்பும் இப்போது அறுபத்து மூன்று என்கிறது காங்கிரஸ். மத்திய அரசை விட்டு வெள்யே வருகிறோம் என்று கருணாநிதி இப்போது சிந்திக்கிறார். இடையில் கருணைதி, அன்பழகன், ஆற்காட்டார், துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட கருணாநிதி மேலவை திட்டம் வைத்திருந்தார். அதையும் காங்கிரஸ் தனது தேர்தல் ஆணைய வழக்கறிஞர் மூலம் பேசவைத்து முறியடித்து விட்டது.

அதேசமயம் ராஜாவை உள்ளே தள்ளி அவர் மீது அன்னிய நாட்டு உலவி துறைக்கு உதவிய வழக்கை போட முடிவு செய்கிறார்கள்.இது எல்லாமே கருணாநிதிக்கு திட்டமிட்டு காங்கிரஸ் கொடுக்கும் தொல்லைகள்தான். தமிழினத்தை பகைத்துக்கொண்டாலாவது, தனது குடும்ப நலனை பெரிதாக எண்ணிய ஒரு கிழவயது அரசியல்வாதிக்கு டில்லி கொடுக்கும் சித்திரவதை இது மட்டுமா, இன்னமும் போகுமா என்று தமிழினம் எண்ணிப்பார்கிறது

தீபஞ்சி அம்மன் கோயில் குருக்கள் மூன்று வயது சிறுமையை பாலியல் பாலாத்க்காரம்

காஞ்சி நகரில் கோவில்கள் அதிகம். அதிலும் இந்து மதத்தவர்களால் அதிகமாக ஆராதிக்கப்படும் கோவில்கள் அதிகம். அதனால் அந்த கோவிகளை வைத்து கொள்ளை அடிக்கும் கூட்டத்திற்கு கொண்டாட்டம். கலைஞர் "பராசக்தி" படத்திற்கு வசனம் எழுதியது போல, கோவில்கள் கூடாது என்பதற்காக அல்ல, கோவிகள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக,அவற்றை பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. இப்போது காஞ்சியிலிருந்து மக்கள் மன்றத்திலிருந்து வருகின்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றுவதாக உள்ளது.இன்று காலை அது நடந்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள தீபஞ்சி கோவிலில் அந்த இழி செயல் நடந்துள்ளது.

ஏற்கனவே அங்கே உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து அதன் மேலாளர் பாடுகளை செயப்பட்டார். அதற்கு முக்கிய காரணமான சுப்பிரமணி என்ற சங்கராச்ச்காரியார் குற்றம் சாட்டப்பட்டு கைதானார். ஆனால் இன்றைய அரசாங்கத்தின் ஆதரவை பெற்றதால் அவருக்கு எதிரான சாட்சிகள் உடைக்கப்பட்டு விடுதி ஆகப்போகிறார். அதுபோல ஒரு குருக்கள் தேவநாதன் என்ற பெயரில் கற்பக்கிரகத்தையே தனது பள்ளியறையாக ஆகினார். அவரும் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போது இந்த தேவராஜன் என்ற பெயருள்ள தீபஞ்சி கோவில் குருக்கள் மூன்று வயது சிறுமையை பலாத்காரம் செய்து மாட்டிக்கொண்டுள்ளார். அதை விஷ்ணு காஞ்சி கவக் நிலையத்தில் கொண்டு சென்று புகார் செய்யும் போது இப்போது நூறு பார்ப்பனரல்லாத பக்தர்கள் காவல் நிலையம் சென்று மரிக்கிறார்கள். இதுதான் இந்த நாட்டின் நீதியா?இந்த பாலியல் வெறியனான குருக்களையும் கருணாநிதி அரசு விடுதலை செய்ய துடிக்குமா?

பார்வதியம்மாள் ஒரு அடையாள குறியீடு.

வருகிற மார்ச் ஏழாம் நாள் புலிக்குட்டியை பெற்றெடுத்த தாய்ப்புலி பார்வதியம்மாளின் பதினாறாவது நாள் காரியம். பார்வதியம்மாள் சைவ நம்பிக்கை கொண்டவர். சைவ நம்பிக்கை கொண்டவர்கள் பதினாறாம் நாள் காரியத்தை கவனமாக கடைப்பிடிப்பார்கள். நாம் வைணவராகவோ,கிறித்துவராகவோ, இஸ்லாமியராகவோ,மதம் அற்றவராகவோ, நாத்திகராகவோ இருக்கலாம். ஆனால் அனைவரும் தமிழர்கள் அனைவரும் தமிழீழம் அடைவதை வாழக்கையின் ஒரு முக்கிய லட்சியமாக கொண்டிருக்கிறோம்.அதிலும் அதற்காக புறப்பட்ட புலிப்படையின் சாகசங்களையும், சாதனைகளையும்,மனதில் நிறுத்தி ஒவ்வொரு நாளும் அகமகிழ்கிறோம்.அதற்கு காரணமான அந்த மகத்தான தமிழீழ தேசியத்தலைவரை எண்ணி, எண்ணி,பஐவகை அடைகிறோம். உலகில் எந்த ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்திலும் தரைப்படையை தாண்டி, கடல் படையையும்,வான் படையையும் கட்டி வெற்றிகரமாக வழிநடத்தியதாக சரித்திரம் இல்லை. அப்படிப்பட்ட சரித்திரத்தை படைத்த ஒரு தலைவரை தனது கருவில் சுமந்து பெற்ற அந்த தாயார் பார்வதியம்மாளின் காரியம் என்றால் அதில் தமிழர்களின் பதிவு வேண்டும்.

பார்வதியம்மாள் இன்று ஒரு அடையாள குறியீடாக ஆகி உள்ளார்.அதாவது அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு கூட சிங்கள வெறியர்களின் தலைமையை ஏற்றுள்ள ஒட்டு குழுவினர் தடை செய்தார்கள். அம்மாளின் சிதையில்கூட அவர்கள் உடைப்பு வேலை செத்தார்கள். சாம்பலை கூட விட்டுவைக்க தயாரில்லை.பார்வதியம்மலின் சாம்பலில் கூட நாய்களை அறுத்து போட்டனர். கருவிலே புலியை சுமந்த ஒரு தாயாரின் சாம்பல் கூட தமிழின எதிரிகளுக்கு அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதால் பார்வதியம்மாள் ஒரு அடையாள குரீடாக ஆகிவிட்டார்.

சென்னையில் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் மீனவர் சங்கங்களின் முன்முயர்ச்சியில், நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையமும் சேர்ந்து அத்தகைய காரியத்தை நடத்திட பல இடங்களில் திங்கள் கிழமை பார்வதியம்மாள் படத்துடன் ஏழைகளுக்கு உணவு அளித்தால் என்ற காரியத்தை செய்ய இருக்கிறார்கள்.அதற்க்கான பணியை துவங்கி விட்டார்கள். நீங்கள் என்ன செய்யப்போகிரீகள்.