Tuesday, May 24, 2011

தயா நடிப்பு கொஞ்சம் ஓவர்

தன் சம்பந்தி ஏட்டில், அதாவது " தி ஹிந்து" ஏட்டில் தனது ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட, விக்கிலீக்ஸ் கசிவான, கலைஞர் பற்றிய தனது கருத்தை, அமெரிக்க தூதர் ஹூபரிடம் கூறியதை எப்படி ஆராயாமல் வெளியிடலாம் என்று கோபபடுவது போல ஒரு நடிப்பு. அதற்கு ஒரு மறுப்பு வேண்டுதல். இல்லாவிட்டால் மான நட்ட வழக்கு ஐந்து கோடி கேட்டு என்று ஒரு வக்கீல் நோட்டிஸ். ஆஹா. இந்த நடிப்பை தமிழ்மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? என்ன?

ஒருபுறம் கலைஞரை மிரட்ட, அந்த உண்மையை வெளியிடுவதும், மறுபுறம் அதையே மறுத்து கலைஞருடன் ஓட்டிக்கொள்வதும், மின்னொரு புறம் " ஜெ" யை தான் கலைஞர் விரோதி என்று ஏமாற்றுவதும், எப்படி இந்த சகொதரர்கலாலா நடிக்க முடிகிறது?

Monday, May 23, 2011

தயாநிதி விஸ்வரூபம் இப்போது தெரிகிறதா?

கழகம் ஒரு குடும்பம் என்றார் தலைவர். குடும்பமே கழகம் என்றார் பின்னால். குடும்பத்திற்குள்ளும், கோடலிக்காம்பு இருக்கும் என்று அவர் சொல்லவில்லை. ஆனால் 2007 ஆம் ஆண்டு அத்ஜை அடையாளம் கண்டுகொண்டார் என்றுதான் எல்லோரும் நினைத்தனர். முழுமையாக வனுக எண்ணம் கொண்டவர்கள், திமுக விற்கு பொருந்துமா? திமுக கொள்கை சார்ந்த கட்சியாக இருக்க விரும்பினால், வணிகர்கள் கைக்கு அதை போகவிடலாமா? இது போன்ற கேள்விகளை திமுக வின் நண்பர்கள் சிலர் எழுப்பிக்கொண்டுதான் இருந்தார்கள். அந்த நண்பர்கள் எல்லோரும் " தமிழ் மையம்" அமைப்பில் ஒன்று சேர்ந்து இருப்பதை அடையாளம் கண்டு கொண்டது வணிக கும்பல். அதற்கு பிறகும் அவர்களது பின்னணிகளை தோண்ட மாட்டார்களா?


தனக்கு நெருக்கமாக இருக்கும் இந்திய ஆளும் கும்பலின் தலைமைப் பீடமான " சோனியா" கும்பலை கையில் போட்டு செயல்படாதா வணிக கும்பல்? அதுதான் "ஸ்பெக்ட்ரம் ஊழல்" வெளியே வார, அதை வைத்து வணிகர்களின் எதிரிகள் உள்ளே செல்ல, வழி எளிதாகி விட்டதாக வணிகர்கள் நினைத்தால், அதையும் தடுக்க ஒரு " குடும்பத் தலைவர்" இருக்கிறாரே? சரி. நமக்கு இனி திமுக சரிப்பட்டு வராது என்று எண்ணிய வணிக கும்பல், தங்களுக்கும், திமுக தலைமைக்கும் உள்ள முரண்பாட்டை, சண்டையை, பகையை பகிரங்கப் படுத்த நேரம் வந்துவிட்டது என்று இப்போது எண்ணுகிறார்கள். அதனால்தான் ஒரு முக்கிய " ரகசிய செய்தியை" இந்த நேரத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்து இன்று காலையில் வெளியிட்டு விட்டார்கள்.


இன்று காலை வணிகர்களில் இளையவர் பெண் எடுத்த வீட்டிலிருந்து வெளிவரும் அந்த " ஆங்கில பிரபல நாளேட்டில்" தங்களுக்கும், " குடும்பத் தலைவருக்கும்" உள்ள முரண்பாட்டை வெளியிட்டுவிட்டார்கள். அதாவது இன்று காலை ஆங்கில ஏடான " தி ஹிந்து" வில் முதல் பக்கத்திலேயே அந்த " அதிர்ச்சி" செய்தி. அடுத்து உள் பக்கத்தில் அடுத்த " அதிர்ச்சி" செய்தி. இவை இரண்டும் ஏன் ஒரே நாளில் வெளியிடப்படவேண்டும்? முதல் பக்கச் செய்தி, " தயாநிதி மாறன் 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க் தூதராக இந்தியாவில் இருந்த " ஹூபர்" வசம் சொன்ன செய்தி என்று அது வெளியாகி உள்ளது. அதில் " திமுக தலைமை அதிகாரத்திற்கு வந்தவுடன் ஊழல் செய்யத் தொடங்கி விட்டார்கள்" என்று அந்த அமெரிக்க அதிகாரியிடம் தயாநிதி மாறன் கூறியது வெளியாகி உள்ளது.


விக்கி லீக்ஸ் இணைய தளத்திற்கு கசிந்துள்ள இந்த செய்தியை, "தி ஹிந்து" எடுத்து போட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அந்த ஏடு விகிலீக்ஸ் கசிவுகளை பல நாட்களாக வெளியிட்டு வருகிறது. அதில் எல்லாமே அதிர்ச்சி செய்திகள்தான். பல செய்திகள் திட்டமிட்டு அமெரிக்கா தலைமை கசிய விடச் சொல்கிறதோ என்று எண்ணத் தோன்றும். இந்த செய்தி, " தயாநிதிக்கு" எதிரான செய்திபோல தோன்றினாலும் எந்த நேரத்தில் வெளி வந்திருக்கிறது எண்பதை அவித்தே யாருக்கு சாதகமான வெளியீடு என்று கணிக்க வேண்டும். இப்போது திமுக வில் தயாநிதி தனக்கு போட்டியாக டில்லி பிரதிநிதியாக வரும் கனிமொழியையும், ஆ.ராஜாவையும், ஊடகப் போட்டியாக வரும் சரத்குமார் ரெட்டியையும், திகார் சிறைக்குள் தள்ளுவதில் வெற்றி அடைந்துவிட்டார்.அடுத்த டில்லி திமுகஅதிகாரபூர்வமான பிரதிநிதி என்ற பதக்கத்தை பெறவேண்டிய சூழல்.


ஆனால் " தாத்தா" அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாறாக " டி.ஆர்.பாலு" வை அந்த இடத்திற்கு அனுப்பி, ஐ.மு.கூ.வின் இரன்டாவது ஆட்சியில் கூட்டணி கட்சி திமுக சார்பாக " தயாநிதி கிடையாது. பாலுதான்" என்று பதிவு செய்து விட்டார். டில்லியில் இதுவரை " தயா" கிளப்பி வந்த வதந்திகள் எல்லாம் தவிடுபொடி ஆகிவிட்டன. திமுக என்றால் ஆங்கிலத்தில் "தயாநிதி மாறன் கழகம்" என்று பலரிடம் டில்லியில் சொல்லி, அதில் தானும், தன் மாமா ஸ்டாலினும்தான் தலைமையில் இருப்போம் என்று உறுதிபட சொல்லிவந்தார். அதற்கு இப்போது அடி விழுந்து விட்டது. அதுவும் நேற்று அதாவது இருபத்தொன்றாம் நாள் காலை கோபாலபுரம் வீட்டிடில் கூடிய உயர் மட்ட தலைவர்களுடன் " குடும்பத் தலைவரை" கலப்பதில் "தயாநிதி"யும் இருந்தார். கனிமொழி கைது விவகாரத்தில் காங்கிரஸ் மீது கலைஞர் எவ்வளவு தூரம் கோபம் கொண்டுள்ளார் எண்பதை தயா நேரடியாக அறிந்துவிட்டார். இனி தனக்கும் டில்லி திமுக தலைமை கிடைக்காது என்றும் அனுமானித்து விட்டார். பாலுவும் ராஜாத்தி குழுதான் என்பது தயாவின் பார்வை.


இனி தான் செள்ளவேர்ந்டிய இடன் சொநிஆவிடம்தான் எபதில் தெளிவாகி விட்டார். அதை தானே பகிரங்கமாக செய்தால், கழகத்தில் உள்ள தனது அணியை கலைக்க முடியாது என்று எண்ணுகிறார். ஆகவே அதை ஒரு வித்தியாசமான முறையில் செய்ய தலைப்பட்டார். தனது " சம்பந்தி" ஏட்டின் மூலம் தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் அமெர்க்க அதிகாரியிடம் கூறியதை விகிலீக்ஸ் மூலம் எடுத்த் அந்த "தி ஹிந்து" ஏட்டில் இன்று வெளியிட வைத்தார். அதில் " ராகுல் தலைமைதான்" சரியானது என்று தயா கொர்ரியதும் வெளியாகி உள்ளது. உள்ளே அதை விட மோசமாக, கருணாநிதியை கிழித்துள்ளார். காங்கிரசுக்கு எதிராக கலைஞர் எடுக்கும் " அஸ்திரம்" " ஈழத் தமிழர்" பிரச்சனை எனபது காங்கிரசுக்கும், தயாவிற்கும் டேஹ்ரியும். ஆகவே அதுபற்றி தான் கூறிய மொன்ன்றாண்டு முன்னுள்ள கருத்துக்களையும் வெளியிட வகை செய்து ள்ளார்.


அதில் 2008 ஆம் ஆண்டில், அதாவது "வ்ன்னிப் போர்" நடக்கும் போது,கருணாநிதி இருந்த பட்டினிப் ஓர் உட்பட, " நாடாளுமன்ற உறுப்பினர்கள்" ராஜினாமா என்ற இலங்கை தமிழர் மீது அக்கறை இருப்பதாக காட்டிக்கொண்டது அனைத்துமே ஒரு " திசை திருப்பும் நாடகம்" என்று பகிரங்கமாக அந்த அமெரிக்க தூதர் ஹூப்பர் வசம் " தயாநிதி " தெரிவித்தார் என்பது வெளியாகி விட்டது இப்போது கலைஞர் வசமாக மாட்டிக் கொண்டார். அம்பலப்பட்டு உலகத் தமிழர் மத்தியில் நிற்கிறார். " தயாநிதி" இனி அழியும் திமுக வில் தனக்கு வேலை இல்லை என்ற நிலை எடுத்து விட்டார்.

Sunday, May 22, 2011

சின்னக்குத்தூசி உடல் எரியூட்டப்பட்டது.

ஒரு பிரபல எழுத்தாளன் உடல் இன்று மாலை ஐந்தரை மணிக்கு மயிலாப்பூர் மயானத்தில் எரியூட்டப்பட்டது. நக்கீரன் அலுவலகத்தீலிருந்து புறப்பட்ட "இறுதி ஊர்வலத்தில்" , முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, இந்நாள் மேயர் மா.சுப்பிரமணியம், தி.க.தலைவர் கி.வீரமணி, மதிமுக மல்லை சத்தியா, நக்கீரன் கோபால், காமராஜ், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பெரியார் திக. விடுதலை ராஜேந்திரன், மற்றும் கட்சி எல்லைகளைத் தாண்டி பல பெரியார் தொண்டர்கள், நடந்து வந்தனர். மயிலாப்பூர் இடுகாடு வரை வந்த அனைவரும், சின்னக் குத்தூசியின் " அர்ப்பணிப்பை" பற்றியே பேசிக் கொண்டு வந்தனர்.


ஆண்ட திமுக தலைவரான முதல்வருக்கு மிக, மிக, நெருக்கமாக் இருந்தும்கூட, ஒரு சிறிய துரும்பைக் கூட தனக்காக பெற்றுக் கொள்ளாத பெருந்தகை என்பதையே எல்லோரும் கூறினர். பல ஊடகவியலாளர்கள் அவரது " அறையை" " நூல் நிலையமாகவும்" " ஆவண காப்பகமாகவும்" பாவித்ததை நினைவு கூறினர்.சின்னக் குத்தூசியின் " நினைவாற்றலை" பயன்படுத்தி, அவரிடம் வரலாற்று செய்திகளை கற்றுக் கொண்டவர்கள் அங்கே பரிமாறிக் கொண்டனர். பெரியார் பெருந்தொண்டர் என்று குறுஞ்செய்திகள் அவர் பற்றி பறந்தன. நக்கீரன் இதழ் சார்பாக, இரண்டு வித சுவரொட்டிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தின. " தினமணி", "தினமலர்" ஏடுகளுக்கு பதில் கொடுக்க, அவர்களை " பார்ப்பனர்கள்" என்று திட்டுவதற்கு, கடந்த ஓராண்டாக முதல்வர் கலைஞருக்கு, சின்னக் குத்தூசியின் எழுத்துக்கள் பயன்பட்டன என்றும் அதற்காகவே " முரசொலியில்" அவரது கட்டுரைகள் எழுதப்பட்டன என்றும் ஒரு மொத்த பெரியார் தொண்டர் எடுத்துச் சொன்னார்.


வருகிற மே 29 ஆம் நாள், " மாலை ஐந்தரை மணிக்கு, "பெரியார் திடலில்" சின்னக் குத்தூசிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும், அவ்வமயம் அவரது படத்திறப்பும் நடைபெறும் என்று நக்கீரன் கோபால் அறிவித்தார்.

கலைஞர் வருந்தினால் தாங்காமல் உயிர் நீத்த நண்பர் சின்னகுத்தூசி.

இன்று காலை அந்த மாபெரும் எழுத்தாளர் திடீரென மாரடைப்பு வந்து மறைந்துபோனார். மருத்துவமனையில் ஓராண்டாகவே படுக்கையில் இருந்தாலும், ஒவ்வொரு நாளும், தவறாமல் "முரசொலிக்கு" கட்டுரைகள் எழுதிக் கொண்டே இருந்தார் சின்னக் குத்தூசி அய்யா. அய்யாவின் இயற்பெயர் "தியாகராஜன்" அவர் கலைஞரின் பால்ய கால நண்பர். அவரது ஊர்காரர். கலைஞர் மீதான அவரது ஈடுபாடு அளவற்றது. கலைஞரின் குடும்பத்திலோ, கழகத்திலோ இந்த அளவுக்கு அய்யா சின்னக் குத்தூசி வைத்த அளவுக்கு கலைஞர் மீது பாசத்தை, நேசத்தை, வைத்திருப்பவர் உண்டா என கேள்வியே கேட்கலாம்.


அப்படிப்பட்ட " சின்னக் குத்தூசி" மறந்துவிட்டார். அவர் முரசொலியில், " கொக்கிரகுளம் சுல்தான் முகமது" என்ற பெயரிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். பெரியார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு, திமுக வின் வரலாற்றை மனதில் கொண்டு, அவர் கலைஞர் எடுக்கும் எந்த நிலைப்பாட்டையும் ஆதரித்து எழுதி வந்தவர். கலிஞரின் " பகுத்தறிவு" கொள்கையை கடைசிவரை நம்பி வாழ்ந்துவந்தவர். கலைஞருக்கு யார் கேள்வி எழுப்பினாலும், கலைஞருக்கு யார் பதில் கொடுத்தாலும், சின்னக் குத்தூசி அய்யாவின் எழுத்தாணி அவர்களை, மறுநாளே "முரசொலியில்" பதம் பார்த்துவிடும்.

அந்த " சின்னக் குத்தூசியால்" கலைஞர் இப்போது பெற்ற மாபெரும் தேர்தல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடிகிறதா எண்பதை விட, அந்த தோல்வி கலைஞரை பாதிக்குமோ என்ற கவலை சின்னக் குத்தூசியாய் பாதித்திருக்கும். கனிமொழி கைது செய்யப்பட்டது பாதித்திருக்குமா என்பதைவிட, கனிமொழி கைது கலைஞரை பாதித்து விட்டதே என்று, சின்னக் குத்தூசியாய் பாதித்திருக்கும். அதுவே அவருக்கு, " மாரடைப்பாக" வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி கலைஞர் மீது " பாசம்" ம்ட்டுமே வைத்திருந்த ஒரு உண்மை நண்பர் சின்னக் குத்தூசி தனக்கு என்று திமுக ஆட்சியிலோ, கலைஞர் குடும்பத்திலோ பெற்றதில்லை.


அவரது எழுத்துக்களை வெளியிட்டு வந்த " நக்கீரன்" ஏடுதான் அவரது வாழ்க்கையை அதாவது உணவு, மருத்துவ செலவு என்ற அடிப்படை தேவைகளுக்கு பார்த்துக் கொண்டது. இப்போது அவரது உடலையும் நக்கீரன் அலுவலகம்தான் தாங்கி வருகிறது. திருமணம் செய்து கொள்ளாத சின்னக் குத்தூசி, ஒரு சிறிய அறையில் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். அவரை பல, பல ஊடகவியலாளர்கள் சென்று எப்போதும் சந்தித்து பல செய்திகளை கேட்டவண்ணம் இருப்பார்கள். பல ஊடகவியலாளர்களுக்கு வரத்தான் ஆசான் என்றால் சரியாக இருக்கும். தனது அறையில் எப்போதுமே பல பத்தாண்டுகளாக வெளிவந்த "செய்திகளை" ஆவண காப்பகம் போல வைத்திருப்பார். அதிலிருந்து எடுத்து நிறைய பேருக்கு வரலாற்றை புள்ளி விவரத்துடன் கொடுப்பார்.

அந்த "சின்னக் குத்தூசி" ஒருமுறை கலைஞருடன் சிறிய மாறுபாடு கொண்டபோது, கோபத்தில் கலிஞர் அவரி வராதே என்று கூறிவிட்டாராம். அது நண்பர்களுக்குள் நடக்கக் கூடிய ஒரு ஊடல்தான். ஆனால் அதை வெளிப்படுத்திய கலிஞர் என்ன சொன்னாராம் தெரியுமா? அந்த "பாப்பானை" என்று திட்டினாராம். ஆமாம், சின்னக் குத்தூசி பிறந்தது பார்ப்பனக் குடும்பத்தில்தான். ஆனால் அவர் அந்த குடும்பத்துடன் வாழாமல் தன்னை கலைஞரது அரசியலுக்காக, அதாவது கலைஞரின் " பார்ப்பன எதிர்ப்பு அரசியலுக்காக" அர்ப்பணித்துக் கொண்டவர். அப்படிப்பட்டவரை இப்படி திட்ட யாரால் முடியும். கலைஞர் கோடுள்ள " மனப்பான்மையால்" மட்டுமே முடியும்.

தயாவின் ஆசையில் மண் போட்டாரா கலைஞர்?

தயாநிதியைப் பொறுத்தவரை, ஆ.ராஜாவை உள்ளே தள்ளியாச்சு. அரசியல் போட்டியாக தாத்தாவால் கொண்டுவரப்பட்ட கனிமொழியையு, உள்ளே தள்ளியாச்சு. சோனியா வகையராக்களிடமும், நற்பெயர் எடுத்தாச்சு. திமுக வின் ஆங்கில அர்த்தமே, "தயாநிதி முன்னேற்ற கழகம்" என்று தான் காங்கிரஸ்காரர்களிடம் கூறியதையும் வலுப்படுத்தியாச்சு. கோபப்பட்ட தாத்தாவிற்கு மனம் மகிழ, "ஹெட்லைன்ஸ் டுடே" யில் கருத்துக் கணிப்பு என்ற பெயரல் பொய்யையும் வெளியிட்டாச்சு. இனி எல்லாமே தான்தான் என்று இருக்கும் போது, இந்த "சீ.என்.என்.--ஐ.பி.என். தனது வெளியீட்டில் அடுத்து வரும் "ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகையில்" தயாநிதி பெயரும் வர இருக்கிறது என்று போடுவது கண்டு தயாநிதி கோபப்பட்டாராம்.


அந்த காட்சி ஊடக பொறுப்பாளரிடம், தொலைபேசி, திட்டினாராம். எஸ்.சீ.வி. யில் சீ.என்.என். ஐ காட்டமாட்டோம் என்றாராம். அவரும் வெட்டிவிடுங்கள், நாங்களும் உங்கள் பங்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்ன எண்பதை வெளியிடுகிறோம் என்றாராம். இப்போது திமுக தலைவர் தனது மகள் கைது ஆனபின்பு, அதிக மனவருத்தத்தில் இருக்கும்போது, ஐ.மு.கூ. அரசின் ஆண்டு விழாவிற்கு யார் போவது அல்லது போகாமலிருப்பது என்று முடிவு செய்வதற்கான "ஆலோசனை" கலைஞர் வீட்டில் நடந்தது. அதில் தாவும், ஸ்டாலினும் எதிர்பார்த்தது போல, " தயாநிதி மாறன் ஐ.மு.கூ. ஆண்டு விழாவிற்கு செல்லேண்டும்" என்ற கருத்து எடுபடவில்லை.



காங்கிரஸ் செய்த "துரோகம்" விவாதிக்கப் பட்டது. அதனால் ஐ.மு.கூ. அரசின் ஆண்டுவிழாவிற்கு திமுக சார்பாக யாரும் செல்லக் கூடாது என்று கலைஞருக்கு சார்பான கருத்துக்கள் வந்தன. தயாவும்,ஸ்டாலினும் வற்புறுத்தி, காங்கிரசை இந்த நேரத்தில் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆலோசனை கூறிய பிறகு, குடும்பத் தலைவர் செவி மடுக்கிறார். ஒரு பிரதிநிதியை திமுக, ஐமுகூ ஆண்டுவிழாவிற்கு அனுப்பலாம் என்று முடிவாகிறது. தன்னை அனுப்புவார்கள் என்று தயா எதிர்பார்க்கிறார். அதன்மூலம் தனது கனவை நனவாக்கலாம் என்று எண்ணுகிறார்.


ஆனால் "குடும்பத் தலைவருக்கு" அந்த சூழ்ச்சியும் தெரியும். ஆகவே கழகத்தின் ஒரே பிரதிநிதியாக, டி.ஆர்.பாலுவை அனுப்ப முடிவு செய்கிறார். அதற்கு ஒரு விளக்கமும் கொடுக்கிறார். டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற திமுக கட்சித் தலைவர் என்ற கோதாவில் சென்று கலந்து கொள்ளட்டும் என்கிறார். மாட்டார் திமுக மத்திய அமைச்சர்கள் எல்லோரும் அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவிக்கிறார். தான் டில்லி சென்று கனிமொழியை சிறையில் பார்க்க கழகத்த்தலைவர் விரும்புகிறார். அதற்கான பயணம், திங்கள் கிழமை என்கிறார். அப்போது சோனியாவை சந்திக்க மாட்டேன் என்கிறார்.

சோனியா தான் சீ.பி.ஐ. மூலம் தனது குடும்ப உறுப்பினர்கள் மேல் கைதுகளை ஏவி விடுபவர் என்ற உண்மை, கழகத்தளைவருக்கு தெரியும். அதேநேரம் கூட்டணியில் குழப்பமில்லை என்று கூறுவதும் அவருக்கு தெரியும். அதே பாணியை தானும் எடுத்து இந்த முடிவை எடுக்கிறார். சோனியாவிற்கு இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உதவி செய்துவருபவர் தயாநிதிதான் என்பதும் கலைஞருக்கு தெரியும். இப்போது " தயாநிதியால் பாதிக்கப்பட்ட டாட்டா, தனது ஆட்களை உள்ளே அனுப்பிய தயாநிதியையும் உள்ளே அனுப்ப ஏற்பாடு செய்வதும் தாயாவிற்கு தெரியும். இப்ப எப்புடி இருக்குது?

Saturday, May 21, 2011

கனிமொழி கைது, தயாநிதிக்கு வெற்றியா?

கனிமொழிகைதுஎன்பது,கருணாநிதிக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததா, இல்லையா என்பது செய்தியல்ல. ஆனால் அந்த கைதை செயல்படுத்த, நடந்த " பின்சதிகள்" எங்கிருந்து ஏவப்பட்டன என்பதே செய்தி. அதை இந்திய ஊடகங்கள் வெளியிட தகுதி இருக்கிறதா என்பது அதைவிடப் பெரிய செய்தி. நடந்த ஸ்பெக்ட்ரம் கதை ஒரு கார்பரேட் மோதல். அதவாது மக்களது வரிப்பணத்தையும், சந்தையையும் வளைத்துப் போட்டு, அதில் சிக்கிய அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் வைத்து, சீ.பி.ஐ. மூலம், கைகளை நகர்த்தி, ஒரு "செஸ்" விளையாட்டு இங்கே நடைபெற்று வருகிறது.

கைபேசிகளில் அலைக்கற்றை ஒதுக்கீடு, ஆரம்பத்தில் கேட்பாரற்று கிடந்தது. அது 2001 ஆம் ஆண்டும், அதற்கு முந்திய ஆண்டுகளும் காட்டும் படம். அதற்குபிறகு, சிறிது, சிறிதாக நமது நாட்டு மக்களும், கைபேசியில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். அதனால் அது சந்தையில் எடுபடத் தொடங்கியது. முதலாளிகள், பெரு முதலாளிகளாக மாறி, அவர்களும் பன்னாட்டு முதலாளிகளாக, காற்பரேட்களாக மாறிவரும் காலகட்டத்தில், " சந்தையைப்" பற்றி ஒரு தீர்க்கமான பார்வை அந்த நிறுவனகளுக்கு கிடைக்கத் தொடங்கின. இந்தியாவில் இதுபோன்ற புதிய வளரும் தொழில்களில், போட்டி போடும் நிலையில், டாடாவும், ரிலையன்சும், சுனில் மிட்டலும், முதன்மையாக நிற்பதும் தெரிந்த செய்திதான்.

திடீர் பணக்காரனாக ஆகவேண்டும் என்று எண்ணிய, முரசொலி மாறன் வாரிசுகள் கலாநிதியும், தயாநிதியும், மத்திய அமைச்சரவையில் புகுந்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் காலம் அது. தனத்தை மாறன், தோஹா உலக வர்த்தக அமைப்பின் மாநாடு சென்று, இந்திய வணிக அமைச்சர் என்ற கோதாவில், கையெழுத்திட்டு, அந்நிய ஏகபோகங்க நிறுவனங்களை " தாரளமயமாக்கல்" மூலம் இந்த நாட்டிற்குள், கண்டபடி இறக்க ஏற்பாடு செய்தார். அதை நன்கு கவனித்த வாரிசு மாறன்கள் அதன் பலனை பற்றிக் கொள்ள திட்டமிட்டார்கள். அதற்காக மத்திய அமைச்சரவையில் இடம் பெறத் துடித்தார்கள்.

முரசொலி மாறனின் மறைவுக்காக காத்திருந்த கருணாநிதி, உடனடியாக பி.ஜே.பி. கட்சி உறவை தூக்கி எறிந்துவிட்டு, காங்கிரசுடன் கை சேர்த்தார். இதற்கான ஏற்பாட்டையும் கார்பரேட்கள் கற்றுக் கொடுக்க, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர்பில் இருந்த முரசொலி மாறனின் மைந்தர்கள் போட்ட திட்டம்தான் என்று அப்போது கலைஞருக்கு தெரியவில்லை. அமெரிக்க பி.ஜே.பி.யைவிட காங்கிரசை கையாள்வது எளிது என்ற எண்ணம் கொண்ட நாடு. பி.ஜே.பி.யுடன் கூட்டணியில் இருந்த அல்லது அந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமை வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஒரு அமெரிக்க எதிரி என்ற கருத்தே அமெரிக்காவிற்கு மேலோங்கி இருந்தது.

அவரும் அவ்வாறே நடந்துகொண்டார். இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய 1991 இல் ராஜீவ் கொலைக்கு பிறகு வந்த நரசிம்மராவ் ஆட்சியே காரணம் என்று ஜார்ஜ்கூறிவந்தார். அமெரிக்க பொருளாதார கொள்கைகளை அந்த ஆட்சி அனுமதித்ததால்தான் இந்திய பொருளாதாரம் கேட்டுவிட்டது என்று ஜார்ஜ் பரப்புரை செய்து வந்தார்.

ஆகவே ஜார்ஜ் தலைமையிலான என்.டி.ஏ. என்ற " தேசிய ஜனநாயக கூட்டணியை" விட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியே தங்களுக்கு சாதகமானது என்று அமெரிக்க கருதியர்கு, திமுக எப்போதுமே அமேரிக் சார்பு நிலை எடுக்கும் கட்சி என்பதால், அவர்கள் காங்கிரஸ் தலைமயிலான கூட்டணியையே விரும்பினர். தவிர தோஹா புகழ் முரசொலி மாறனின் மைந்தர்கள், தந்தையின் உணர்ச்சிமிகு பி.ஜே.பி. உறவை அறுத்தெறிந்து, சோனியா காங்கிரஸ் உறவை எடுக்க, கலைஞரைவற்புறுத்தினர்.அதனால் யு.பி.ஏ. என்றஐக்கியமுற்போக்கு கூட்டணியில் திமுக சேர்ந்தது. நியுயார்கை சார்ந்து வணிக உறவுகளை பலப்படுத்தி வந்த கலாநிதி அதையே விரும்பினார். .


அதனாலேயே தங்குதடையின்றி தயாநிதி முக்கிய அமைச்சர் பதவியை பெறமுடிந்தது. அதற்கும், அன்றே டில்லி சென்ற மு.க. மூன்று நாள் உட்கார்ந்து, தயாநிதி கெட்ட, ஐ.டி.அமைச்சரவையை விடாப்பிடியாக போராடி பெற்றது நினைவுக்கு வரவேணும். அந்த அளவுக்கு அந்த அமைச்சகத்தில் உள்ள "கொள்ளை வாய்ப்புகளை" தயா அறிந்தே வைத்திருந்தார். அதனால்தான் அதையே கலைஞரிடம் முரண்டு படித்து வாங்கினார். அதற்கு தங்களது தொழிலான " காட்சி ஊடகம்" சம்பந்தப்பட்டது என்று போய் கூறினார். கலைஞரும் அதை நம்பிவிட்டார். தன்னிடம் கொடுக்கப்பட்ட அந்த ஐ.டி. அமைச்சகம் மூலம், ஒரு புறம் ஸ்பெக்ட்ரம் வணிகமும், மறுபுறம் டி.ஆர்.ஏ.ஐ.மூலம் ஊடக இத்து விளையாட்டுகளையும் தயா நடத்தத் தொடங்கினார். அனைவரும் அவரது காட்சி ஊடக சார்பு சித்து விளையாட்டுகளையே கவனித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அவர் சிறிது, சிறிதாக " ஸ்பெக்ட்ரம்" பெரும் அளவில் கொள்ளையடிக்க ஏதுவான தொழில் என்பதைப் புரிந்து அதன் உரிமங்களை, கார்பொரேடகளுக்கு பழைய அடிமாட்டு விலையில் விற்கத் தொடங்கினார். அதற்காக பிரதமர் மன்மோகனை தன் கையில் போட்டுக் கொண்டார்.


சோனியாவை " அத்தை" என்றும், மன்மோகனை " மாமா" என்றும் தயாஅழைக்கத் தொடங்கினார். இளம் " தயா" வின் அந்த அங்கில அழைப்பிலேயே அவர்கள் மயங்கிவிட்டனர். அமைச்சரவை ஒப்புதல் என்று கூறி, பழைய 2001 ஆம் ஆண்டு விலைக்கே உரிமங்களை அவர் விற்றதையாரும்கண்டுகொள்ளவில்லை. கிடைக்கும் லாபங்களில், சோனியா குழுவினரையும் கவனித்து வந்தார்.


இந்தியாவில் பாரம்பரிய முதல்லை "டாடா". அவர் எந்த புதிய தொழில் வந்தாலும் அதை ஆக்கிரமிக்க எண்ணுவார். மிகவும் தாமதமாக புரியப் பட்ட, கைபேசி தொழிலின், ஸ்பெக்ட்ரம் உரிமத்தை அவரும் வேண்டினார். ஆனால் புதிய திடீர் பணக்காரர் " ரிலயன்ஸ் அதில் நுழிந்து போட்டியிட்டது. அம்பானி சகோதரர்கள் " எதை கொடுத்தாலும்" அதிக கமிசன் கொடுத்து உரிமம் வாங்குவதில் கெட்டிக்காரகள். அதனால் அவர்கள் "தயா" வை பிடித்துவிட்டார்கள். சுனில் மிட்டல் தயாவிற்கு வேண்டியவரானார்.


"டாடா" விற்கும், "தாயா"விற்கும் தகராறு ஏற்பட்டது. அதை ஊடக வணிக முரண்பட்டுஎன்று அப்போது தமிழகத்தில் வர்ணித்துக்கொண்டார்கள்.அது ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தப்பட்டது என்பது அப்போது அமபலத்திற்கு வரவில்லை.


உரிமம் கிடைக்காமல் கோபமடைந்த "டாடா" , திமுக குடும்ப "தாத்தா"வை தொடர்புகொள்ள ஆரம்பித்தார். அப்போதே உதவியவர் "நீரா ராடியா". அவர் தனது முதலாளிக்கு விசுவாசமாக "அரசியலில் தரகு வேலை" செய்வதில் கெட்டிக்காரராக இருந்தார். அதனால் "டாடா" சார்பாக மு.க.விற்கு, "தயா"வை ஓரங்கட்ட "அறநூறு" கோடி கொடுக்கப்பட்டது. அதை வாங்கிய கலிஞர், " ஓடுமீன் ஓட, உறுமீன் வரும் வரையில், வாடி இருக்குமாம் கொக்கு" எண்பதை உணர்ந்தவர்.


அவருக்கும் சாதகமாக் நிகழ்வுகள் வந்தன. "தினகரன்"ஏட்டின் "கருத்து கணிப்பின்" மூலம், மூத்தவன் அழகிரிக்கும், கே.டி. சகோதரர்களுக்கும், சண்டை மூண்டது. கே.டி. சகோதரர்களின் "வைக்கோல் கன்னுக்குட்டி" போல இளையவர் ஸ்டாலின் செயல்பட்டு வந்தார். அதனால் அப்படி ஒரு கருத்துகணிப்பின் மூலம், ஸ்டாலினுக்கு நிறைய மதிப்பெண் என்றும், அழகிரிக்கு இரண்டு அம்திப்பேன் என்றும் "தயா" போட்டுவிட்டார். அப்போதே "கருத்து கணிப்பு" மூலம் "கருத்துருவாக்கம்" செய்யும் அமெரிக்க கலையை "சகோதரர்கள்" அமுல்படுத்தி வந்தனர்.இன்றுவரை, "ஊடகங்களை" அவ்வாறு தவாறாக பயன்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளனர்.


காத்திருந்த கருணாநிதி, தயாவை குறிப்பிட்ட மைச்சகத்திளிருந்து கழட்டுவதர்ககவே, கட்சியிலிருந்தும், அதையொட்டி மத்திய அமைச்சரவியிளிருந்தும் கழட்டினார். குடும்பத்திற்குள், " ராஜாத்தி" எதிர்ப்பில், "தயாளுவின் பிள்ளைகளான "அழகிரியும், ஸ்டாலினும்" ஒன்றாக இருந்துவந்தனர். ஸ்டாலினுக்கு "தயா" ஆதரவு என்பதால் பதிக்கப்பட்ட அழகிரி, புதிய கூட்டணியை" கனிமொழி"யுடன் கட்டிக் கொண்டார். '


மீண்டும் "தாத்தா"வுடன் சேர்வதற்காகவும் , மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காகவும் "தயா" தயாளு மூலம் ஒரு அறநூறு கோடியை " தட்சிணையாக" செலுத்தினார். அதற்குள் "டாடா" மூலம், "தாத்தா"விற்கு அந்த செய்தி போய் சேர்ந்தது. 2004 முதல் 2007 வரை, ஸ்பெக்ட்ரம் ஊழலில், "தயா" அடித்த கோடிகள் பற்றிய செய்தி "குடும்ப தலைவர் " வசம் போய் சேர்ந்தது. அந்த ஸ்பெக்ட்ரம் ஆசை அவரையும் தொற்றிக் கொண்டது.


திமுக தலைவர் ஏற்கனவே மருமகன் "முரசொலி மாறனிடம்" " கரையடிமையாக " அதாவது பினாமியாக இருந்த ஆ.ராஜாவையே தேர்ந்தெடுத்தார். ஐ.டி. அமைச்சகம் மீண்டும் திமுக விற்கு வேண்டும், அதுவும் தனது பினமிக்கே வேண்டும் என்பது தலைவரின் ஆசை. அதுதான் ராஜாவிடம் அது வந்து சிறந்த கதை. அடஹ்ர்கு முழுமையாக பயன்பட்டவர்" ராஜாத்தி அம்மையார்". அவர் தனது மகளையும் அதற்கு பயன்படுத்திக் கொண்டார்.


இலக்கியத்திலும, பெண்ணுரிமையிலும் லயித்துவந்த கனிமொழியை, மெல்ல, மெல்ல கருணாநிதி, "அரசியலுக்கு" இழுத்து கரைக்க தொடங்கினார். "தாய்--தந்தையின்" அழுத்தத்தில் மகள், ஒழ்ழல் அரசியலில் கரையத்தொடங்கினார். "டாடா" அந்த மன்னர் குடும்பத்தின் முழு ஓத்துழைப்பாளராக மாறினார். அதுவே " சாத்தான்குளம் தைடேனியும் திட்டத்தில் எதிரொலித்தது. அந்த தைடேனியும் கொண்டு வர, கலைஞர் பட்ட பாடு நாடு அறியும். அதில் வர வெற்றிபெற வில்லை.


இப்போதும் "டாடா" கொடுத்த "வோல்டாஸ்" நிலம், அண்ணாசாலையில் குடும்பத்தின், சீ.ஐ.டி. காலனியை ஆட்டுவித்து வருகிறது. அதுவே கனிமொழி மீது இன்னொரு வழக்காக வரும். "டாடா:விற்கு "தாத்தா" கொடுக்கும் சலுகைகள், "ராஜா" மூலம் வலுப்பெற்றன. இப்போது "டாடா" ஆட்கள் "நீரா", ராஜா"," மும்பை பால்வா", கனிமொழி" என்று வரிசையாக மாட்டிக்கொண்டார்கள். அவர்களும் திஹார் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். இடையில் "அழகிரியை" சமாதானம் ஆனபிறகு, தன்வசம் இழுத்துக் ஒண்டார் "தயாநிதி" அதுவே " ராஜாத்தி--ராஜா-கனிமொழி" கும்பலுக்கு எதிராக இன்றுவரை அழகிரியை நிறுத்திவிட்டது.


" தயா"வின் எத்ரிகள் இப்படி வரிசையாக மாட்டினால், அதை 2007 ஆம் ஆண்டில், தான் ஏமாற்றப்பட்ட போது, தனது "தினகரன்" நாளேட்டிலும், "சன்" காட்சி ஊடாத்திலும், முதலில் மபலப்படுத்தியது, தயாநிதிதான் எண்பதை யார் மறப்பார்கள்? அந்த "சதி" தாத்தாவிற்கும் தெரியும், ராஜாவிற்கும் தெரியும், கனிமொழிக்கும் தெரியும், ராஜாத்திக்கும் தெரியும், டாடாவிற்கும் தெரியும். அதனால் அவர்களும் பதிலடி கொடுக்காமல் விடப்போவதில்லை.

Thursday, May 19, 2011

காஞ்சியில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்.

மே 18 . "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" ஏற்பாட்டில், காஞ்சிபுரம் நகரில் மாலையில், "முள்ளிவாய்க்கால் போர்குற்ற நாள்" என்ற தலைப்பில் பெரியார் தூண் அருகே வீரச்சாவடசிந்த தியாகிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தி, மலரஞ்சலி மூலம் இரண்டாவது ஆண்டு நினைவை கடைப்பிடித்தார்கள். த.வி.ராகவராஜ், " தமிழர் உலகம்" சார்பாக தலைமை தாங்க, தமிழினியன், காஞ்சி அமுதன், வழக்கறிஞர் சந்தோஷ், ஆகியோர் உரையாற்றினர்.சென்னையிலிருந்து வந்திருந்த பேராசிரியர் சரஸ்வதி, வழக்கறிஞர் பாண்டிமாதேவி, டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் விளக்க உரைகளை நிகழ்த்தினர்.

வழக்கறிஞர் பாண்டிமாதேவி, தனது உரையில், ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் கூறிய செய்திகளை ஆழமாக புட்டு, புட்டு வைத்தார். போர் நேரத்தில் வயோதிகர், பெண்கள், குழந்தைகள் இருக்கும் இடங்களில் குண்டு பொழிவது விதி மீறல் எனபதுதான் பொதுவாக பார்க்கப்படுகிறது என்றார். ஆனால் இந்த அறிக்கை, அதையும் தாண்டி,பல விசயங்களை எழுதியிருக்கிறது என்றார். போர் நேரத்தில் அப்பாவி மக்கள் பட்டினி கிடக்கும்போது, அவர்களுக்கு உணவளிக்கவேண்டியதும் அரசின் கடமை. அதை ராஜபக்சே அரசு செய்ததா எண்பதை அறிக்கை ஆராய்கிறது. மூன்றரை லட்சம் மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மாட்டிக்கொண்டார்கள் எனும்போது, வெறும் பத்தாயிரம் பெற்ற்தான் இருப்பதாக இலங்கை அரசு, ஐ.நா.விற்கு கூறியுள்ளது, என்றார்.


அதன்மூலம், ஐ.நா.உதவியில், உலக உணவு பாதுகாப்பு மையம் மூலம் ராஜபக்சே அரசு எவரும் பத்தாயிரம் பேருக்கு மட்டுமே உணவு பெற்றது. அதனால் மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் பட்டினி கிடப்பதற்கும், அதில் பல முதியோரும், குழந்தைகளும் பசியால் இறந்து போகவும் இலங்கை அரசு காரணமாக இருந்திருக்கிறது என்று அறிக்கை தெளிவுபடுத்துகிறது என்றார். அவை எல்லாமே போர்விதி மீறல்கள்தான் என்றார். அதேபோல மருத்துவமனைகள் மீது குண்டு மழை பொழிந்த்ததை மட்டுமே போர் குற்றமாக நாம் பார்க்கிறோம். ஆனால் மருத்துவமனைகளில் இருந்த அல்லது இல்லாத அடிபட்ட பொதுமக்களுக்கு, அதிலும் வயோதிகர், பெண்கள், குழிகள் ஆகியோருக்கு டேஹ்வையான மருந்துகளை வழங்காமல், அதுபற்றிய தேவைகளை அனைத்துநாட்டு அரங்கில் கூறாமல்,இலங்கை அரசு இருந்ததால்தான், பலர் போதிய மருந்து இல்லாமல், அம்ருத்துவ சிகிச்சை இல்லாமல், இறந்துவிட்டார்கள் என்ற அந்த அறிக்கை செய்தியை, சுட்டிக் காட்டி அதுவும் போர்விதி மீறல்தான் என்று வ்ழக்கறிஞர் வாதிட்டார்.


டி.எஸ்.எஸ்.மணி பேசும்போது, உலக வரலாற்றில் எந்த டேஹ்சிய இனமும், தமிழ்த்தேசிய இனம் போல, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, பகுத்தறிவு, போன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை தனதாக்கிக் கொண்டு வளரவில்லை என்றார். அது தந்தை பெரியாரின் சாதனை என்றார். அதேபோல பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும்தான், பெண் புலிகளை களத்தில் இறக்கிவிட்டு, துவக்கு ஏந்திய பான் புலிகள் மூலம், பாலின சமத்துவத்தை நடைமுறையில் படைத்த ஒரே இயக்கம் என்றார். அடுத்து, உலக சரித்திரத்தில் ஒவ்வொரு டேஹ்சிய இனமும் தனது விடுதலைப் போராட்டத்தை ஆயுதப்போராட்ட கட்டத்திற்கு வளர்த்தெடுத்த போது, கொரில்லா போர்களை நடத்தியுள்ளார்கள்: தரைப் படையை அக்ட்டியுல்லார்கள். ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மட்டும்தான்," வான்புலிப் படையையும், கடல் புலிப் படையும்" கட்டியவர் என்ற சாதனையை குறிப்பிட்டார்.

இத்தகைய சாடஹ்னைகளை ஏற்ற தமழினம் தினரவேண்டிய அவசியம் இல்லை. திகைத்து நிற்க வேன்ம்டியதில்லை. அவநம்பிக்கை கொள்ள தேவையில்லை. உலக நாடுகளை மிரட்டும் அளவுக்கு தமிழ் தேசிய இனம் எழுந்து நிற்கிறது.அது முன்னேரிச்செல்வதைத்தவ்ற வேறு வ்ழியே இல்லை.என்றார். அடுத்து நிறைவாக பேசிய பேராசிரியர் சரஸ்வதி, நாடு அக்டந்த தமிழீழ அரசாங்கம் எப்படி தோற்றுவிக்கப் பட்டது எனபதை விளக்கினார். ஆயுதப் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதில் ஒரு தஹ்ர்கலைக்க பின்னடைவு வந்தபோது, அதுவே அரசியல் நகர்வுகளுக்காக, அனைத்து நாட்டு அரங்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார்


அத்தகைய உலக அரசியல் நகரவுகளில், நாடு கடந்த தமிழீழ அரசு, டேஹ்ர்கு சூடன் ஆரசால் ஆண்கீகரிக்கப் பட்டுள்ளது என்றார். அடுத்து பல நாடுகளின் அங்கீகாரம் பெற்று, ஐ.நா.வின் அங்கீகாரமும் பெரும் என்றார். ஐ.நா. நிபுணர் குழு அறிகையின் மீது, அணித்து நாட்டு விசாரணை குழுஅமைக்க வலியுறுத்தி,பலலட்சம்கையெழுத்துக்களை தமிழ்நாட்டில் பெருவதர்கு தங்கள் அமைப்பு செயல்பட்டு அவ்ருகிறது என்றார். அதற்கான எண்பத்து ஏழாயிரம் கைஎழுத்துக்களை வாங்கி தாங்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உரத்திற குமாருக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார். அவை ஐ.நா. வசம் ஒப்புவிக்கப்படும் என்றார். புலிகளின் தாகம் மட்டும் "தமிழீழ தாயகம் அல்ல அது இன்று உலகத் தமிழர்கள் அனைவரின் தாகம்" என்றார்.