Thursday, September 29, 2011

"அன்னையர் முன்னணி" அறுதியிட்டது இன்று.

மூன்று தமிழர் உயிர் காக்கும் முயற்சியாக " மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு" ஒழுங்கு செய்து வரும் "தொடர் பட்டினிப் போராட்டம்" இன்று பேராசிரியர் சரஸ்வதி தலைமையிலான "அன்னையர் முன்னணி"யால் நடத்தப்பட்டது. பேராசிரியரின் அழைப்பை ஏற்று, பல்வேறு பெண்கள் அமைப்புகளின் "பங்களிப்புடன்" சிறப்பாக நடைபெற்றது. அதில் "மக்கள் மன்றம்" ஒரு முக்கிய பங்களிப்பை, தனது "முப்பத்தைந்து பெண்களுடன்" செளுத்ஹ்டியது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மன்றத்தின், ஜெசி, மகேஷ், மகா, மேகலா, உமா,சிறுவன் பகத்சிங்,நாத்திகன், மற்றும் பல கிராமப்புற பெண்களுடன் "கலந்து" கொண்டது அனைவரையும் ஈர்த்தது.

கலந்துகொண்ட ஆர்வலர்கள், "பேச்சாளர்களாக" மாறி உரைகளை நிகழ்த்தினர். அமைப்பு சார தொழிலாளர் சங்கத்தின் கெத்சி, தனது தோழியர்கள் பத்து பேருடன் வந்து கலந்து கொண்டார். அற்புதம்மாள், பத்மா,மணிமேகலை, அகிலா, சரோஜா, அஜிதா, ஒவியா, கீதா போன்ற பெண் தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர். இடையில் அருகே இருந்த அரங்கில், "மரணதண்டனை" பற்றிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. செங்கொடி இறுதி ஊர்வல திரைப்படமும் காண்பதற்கு "உருக்கமாக" காட்டப்பட்டது.

அன்னையர் முன்னணி "தொன்னூறின் " தொடக்கங்களில் தமிழ்நாட்டின் தெருக்களில் முழங்கிய முழக்கங்கள் நினைவுக்கு வந்தன.ஈழத்தின் விடுதலைப் போரில் "வீரச்சாவடைந்த" கண்மணிகளின் "தாயார்கள்" ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை கண்டு மிரளாமல் " தெருவுக்கு" வந்து போராடிய "நிகழ்வுகள்" , அன்னையர் முன்னணியின் "பதாகையின்" கீழ்தானே நடத்தப்பட்டன என்ற நினைவுகள் நமது நெஞ்சில் ஒலித்தது. "தமிழீழத் தேசியத் தலைவரின்" போர்த்தந்திரங்களுக்கு "வலுவூட்டும்", "ஒத்துழைக்கும்" "உதவி செய்யும்" செயல்தந்திரன்களை, "வெகுமக்கள்" அரங்கில், "வீரச்சாவடைந்த" மாவீரர்களின் தாயார்கள் "அன்னையர் முன்னணி" மூலம்தான் நடைமுறைப்படுத்தினார்கள்.இன்று சென்னையில் "பட்டினிப்போர்" நடத்தியது, "தமிழ்நாட்டு அன்னையர் முன்னணி". இந்த "சிருபோறியே" தமிழ்பெண்கள் மத்தியில் "பெரும் காட்டு தீயென" படரட்டும். தமிழ்ப்பெண்களின் வீர முழக்கங்களை இந்த நாடு கேட்க, "வீராங்கனைகளை" உருவாக்கட்டும்.

Wednesday, September 28, 2011

முதல் போர்குற்றவாளியின் "குற்றப்பட்டியல்"

நமக்கு தெரிந்த அளவில், அந்த "போர்க்குற்றவாளி" வட இந்தியாவிலிருந்து வந்திருந்தாலும், தமிழ்நாட்டு "அய்.பி.எஸ். அதிகாரியின்"மகளை திருமணம் செய்தார்.பிறகு இவரது "கொடுமை" தாங்க முடியாமல் "மனைவி" சித்தரவதைகளுக்கு "விடை" கொடுக்க, விலகி நின்றார். மாமியார் காங்கிரஸ் கட்சியில் நின்று "ச.ம.உ." ஆனார். இது "பெண்களுக்கு எதிராக" அய்யா செய்திருக்கும் "முதல் குற்றம்".

ஆண்டு:-1996 . அய்யா "மணிமுத்தாறு ஆயுதப் படையின்" தலைவராக இருந்தார். தூத்துக்குடியில் மீனவர் கோரிக்கைகளுக்கான "சாலை மறியல்" நடந்தது. அப்போது "துணை ஆட்சித் தலைவராக" இருந்த டாக்டர். ராதாகிரூஷ்ணனின் பேரன் இப்போது கூப்பிட்டாலும் "சாட்சி" கூறுவார். அந்த "சப்-கலெக்டர் " மாட்டிக்கொண்டார் என்பதே அப்போது "காவல்துறையின்" குற்றச்சாட்டு. ஆனால் "மீனவர்கள்தான்" தன்னை காப்பாற்றினார்கள் என்று "அந்த சப்-கலெக்டர்" கூறினார். அதற்குள் "தேவாரம்" வழக்கம் போல உத்தரவிட்டார். ராஜெஷ்தாஸ் "மீனவர்கள் மீது" சுட்டார். நிராயுதபாணியான மீனவ இளைஞர் "குண்டடி" பட்டு செத்தார். நாடு சாலையில், இறந்த தன் தபியின் உடலை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, அண்ணன்காரன் "ராஜெஷ்டாசை" நோக்கி கேள்வி கேட்கிறான். அவர் "அண்ணன்காரனின்" நெற்றியில் தனது "துப்பாக்கியால்" குறி பார்த்து "சுட்டுக் கொல்கிறார்" இது "இரண்டாவது" குற்றச்சாட்டு.

ஆண்டு:- 1997 . சட்டமன்ற உறப்பினர் டாக்டர். கிருஷ்ணசாமி "தேனீ மாவட்டம்" செல்கிறார். அங்கே ராஜெஷ்டாச்தான் அப்போது "மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்". "கண்டமனூர்" ஊரில் உள்ள "தேவர் சிலையை" அகற்ற கிருஷ்ணசாமி வருகிறார் என்று சொல்லி திடீரென "எஸ்.பி. ராஜெஷ்தாஸ் " கிருஷ்ணாசாமியை அதிகாலை 'தேனீ விடுதியில்" இருந்து வெளியே வரும்போது "கைது" செய்கிறார். தென்மாவட்டங்கள் எங்கும் "பேருந்துகள்" நிருத்தபடுகின்றன. கோவில்பட்டி அருகே " ரயில்வண்டி" நிறுத்தப்படுகிறது.". நாடே 'அல்லோல, கல்லோல" படுகிறது. தேனியிலிருந்து "இரபத்தாறு" கிலோமீட்டர் தூரத்தில் உள்ள "கண்டமநூருக்கு" கிருஷ்ணசாமி போக வேண்டிய தேவையே இல்லை என்ற "வாதம்" போராட்டக்காரர்களால் முன்வைக்கப்படுகிறது. ஏற்கனவே கண்டமநூருக்கு "எட்டுகிலோமேட்டர்" அருகே உள்ள கிராமத்திற்கு சென்று விட்டுத்தான் முந்திய நாளே "கிருஷ்ணசாமி" தேனிக்கு "திரும்பி" வந்துள்ளார் என்பது நிரூபிக்கப்படுகிறது. அந்த "ஆதாரங்களை" பெற்றவர் அன்றைய "புலனாய்வுதுறை துணைத்தலைமை அதிகாரியும், இன்றைய காவல்துறைத் தலைவருமான" பெரிய அதிகாரி.அது "மூன்றாவது குற்றம்".

மறுநாளே இந்த "உண்மைகள்" முதல்வர் கலிஞர் வசம் "கொண்டுசெல்லப்படுகின்றன". அன்றைய "உளவுத்துறை தலைவர்" அலெக்சாண்டர் "ராஜெஷ்டாசை" தொலைபேசியில் திட்டுகிறார். "பச்சை பனியன் " பொட்டுக் கொண்டு ஏன் கிருஷ்ணசாமியை கைது செய்தாய்? என்று கேட்கிறார். "உடுப்பு" போட்டுக்கொண்டு வேலை செய்ய தயாரில்லையா? என்று வினவ்புகிறார்.இவாறு கடமையை செய்ய மறுக்கும் "ராஜெஷ்தாஸ்" செய்தது " நான்காம்" குற்றம். உன் வீட்டு முன்பு "காவல் அரண்" போட்டு "தடுப்பு" வைத்திருகிராயாமே? என்று மீண்டும் அலெக்சாண்டர் திட்டுகிறார். அதிலிருந்து "உள்ளூர் உளவுத்துறையில்" மேலே செய்திகளை சொல்லும் அதிகாரிகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்று ராஜெஷ்தாஸ் "கற்றுக் கொளகிறார்".

அடுத்து மீண்டும் தூத்துக்குடிக்கு "ராஜெஷ்தாஸ் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக" மாற்றப்ப்டுகிறார்.அப்போது அந்த நகரில், 'பசுபதிபாண்டியன்" வசித்த தெருவில், அவரது சகோதரர், "வின்சென்ட்" என்ற "நகராட்சி உறுப்பினர்" காவல்துறையின் "காவலில்" மரணமடைகிறார். அவரை "கொன்றது" எஸ்.அய். ராமகிருஷ்ணன் என்பதை மக்கள் 'குற்றமாக" சொல்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பு, "பஞ்சாயத்து" நடக்கிறது. கொலைகார ராமகிருஷ்ணனை "எஸ்.பி.ராஜெஷ்தாஸ் " நியாயப்படுத்துகிறார். அவர் "காசு" வாங்காதவர் என்கிறார். அப்போது "மனித உரிமையாளர்கள்" அடித்துக் கொள்ளும் "மனித உரிமை மீறல்" காசு வாங்குவதை விட மோசமான "ஊழல்" என்று பதில் கொடுக்கிறார்கள். ராஜெஷ்தாஸ் "பத்தி சொள்ளவழியிலாமல்" மௌனமாகிறார். அது அவர் செய்த "ஐந்தாவது" குற்றம்.

இப்போது "இம்மானுவேல் சேகரன்" நினைவு நாள் வருகிறது என்று "வன்முறை" செய்ய தயார் ஆகிறார். திட்டமிட்டு "ஜான்பாண்டியனை" நெல்லையிலேயே " தனது தென்மண்டல அய்.ஜி. பதவியை" பயன்படுத்தி தடுக்கிறார்.வன்முறையை எதிர்பார்த்து "டி.அய்.ஜி.அய். தயார்"செய்கிறார். அதை மேலிடத்திற்கு "சொல்லவிடாமல்" பரமக்குடியில் "உளவுத்துறை எஸ்.அய். யாக இருந்த சுபாஷ் என்பவரை" உச்சுப்புளிக்கு மாற்றுகிறார். "துப்பாக்கி சூடு" முடியும்வரை சென்னையில் உள்ள " உள்துறை செயலாளருக்கு"செய்தியை சொல்லவிடாமல் தடுக்கிறார். சென்னையில் உள்ள "உளவுத்துறைக்கும், டி.ஜி.பி.க்கும் " செய்தி போகவிடாமல் தடுக்கிறார். இந்த "குற்றவாளி" செய்தது தேவேந்திரகுல மக்கள் மீதான "போர்குற்றம்" அல்லாமல் "வேறென்ன?"..

.

"போர்" அறிவித்துள்ளார்களா " அதிகாரிகள்?".

பரமக்குடியில் நடந்த "இனப் படுகொலை" ஏதோ சாதாரணமாக "காவல் துறை" நடத்தும் "அழக்கமான" படுகொலைகளை ஒத்தது அல்ல. "தேவேந்திர குல வேளாளர்" மக்கள் ஒரு "போர்குணமிக்க உழவர் படை". அந்த போர்குணமிக்க "உழவர்கள்" தமிழ்நாட்டில் இருக்கும் "உழவர் கூட்டத்திலேயே" முன்னோடிகளான உழைக்கும் மக்கள். தமிழர் திருவிழா என்று "பொங்கல்"நாளை கொண்டாடும் வழக்கமே, அது " அறுவடைத் திருநாள்" என்பதால்தான். அந்த அறுவடைத் திருநாளுக்கு "யாருக்கு" நன்றி சொல்லவேண்டும் என்று தமிழர்கள் எண்ணும் போதெல்லாம் "உழவர்களுக்கு " என்று பதில் வரும். அத்தகைய "உழவர்களில்", நிலமற்றவர், சிறு நிலம் உடையவர், நடுத்தர விவசாயி, பணக்கார விவாசாயி என்ற வகைகள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த "தேவேந்திர குல வேளாளர்கள்" எனப்படுவோர், "உழைக்கும் விவசாயிகளாவர்". அதாவது அவர்கள் "சிறு, நடுத்தர, பணக்கார விவசாயிகளின்" பிரிவுகளில் வருவார்கள். அவர்களில் "நிலமற்றவர்கள்" இருந்தாலும், அனேகமாக " சிறிய அளவு நிலம் வைத்திருக்கும்" விவசாயிகள் "அதிகமாகவே" இருப்பார்கள்.


அப்படிப்பட்ட "ஒரு போர்குணமிக்க" விவசாயிகளுடன் "நீ" மோதுகிறாய் என்பதை, சம்பந்தப்பட்ட "அதிகாரிகளுக்கும்", அவர்களைப் பாதுகாக்கும் "அரசுக்கும்", அந்த மக்களின் "வாக்குகள்" மூலம் "ஆட்சிக்கு" வந்திருக்கும் கட்சிக்கும் நாம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய "உழைக்கும் விவசாயிகளின்" உழைப்பால் தானே "உன்னுடைய" வீட்டில் "அரிசி" உலையில் வேகவைக்கப்படுகிறது? இந்த கேள்வியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாம் கேட்க வேண்டும். "உழவன் சேற்றில் கால் வைக்காவிட்டால்", நீ "சோற்றில் கை வைக்க முடியாது" என்று வீர வசனம் பேசும் "ஏ,தமிழகமே" நீ பரமக்குடி துப்பாக்கி சூட்டில் எழு பேர் அன்னிய்யயமாக "படுகொலை " செய்யப்ப்பட்ட போது எங்கே போயிருந்தாய்? விவசாயத்தை பாதுகாக்கும் ஒரு "படையை" நீ புறக்கணித்தால் "நாளை" சோறு, தண்ணீ இல்லாமல் அலையமாட்டையா? மானங்கெட்டவன் மட்டுமே இன்னமும் "நிம்மதியாக" தூங்குவான். மரமண்டை மட்டும்தான் "மனித உரிமையை" சிந்திக்காமல் இருப்பான். இப்போது "அரசுக்கும், தேவேந்த்ரகுல மக்களுக்கும்" நடக்கும் "போரில்" நீ எந்தப் பக்கம்?



நிலம் "சார்ந்த" உழைப்பு, அதனால் வரும் "சுயம் சார்ந்த" நினைப்பு, அதனால் வரும் "சுய மரியாதை" இருப்பு, அதனால் "எழும்" "வீரமிகு" விறைப்பு, அத்தனையும் கொண்ட ஒரு "உழவர் குடியிடம்" விளையாடுகிறாய்? மண்ணில் நிற்பவன், "மண்ணுக்கு சொந்தக்காரன்". "வந்தேறிக்கூட்டம்" கையில் "துவக்கு" இருப்பதால், "காக்கை, குருவியை" சுடுவதுபோல, "எத்தனை நாள்" சுட்டுவிடும்? பார்ப்போமா? இதுதான் அன்று, "வெள்ளையன்" வேட்டைக்காடாக "தமிழ்மண்ணை" ஆக நினைத்தபோது, வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு ஒரு "தளபதியை" மாவீரன் "சுந்தரலிங்க குடும்பன்" தனியாகவே "படை" நடத்தினான். தன் மாமன் மகள் "வடிவுடன்" வெள்ளைக்காரனின் "ஆயுதக் கிடங்கில்" வெடியாகி "எரித்து" அழித்தான். அவன் "முதல் தற்கொலைப்படை போராளியாக" இன்று வரை பாராட்டப்படுகிறான். அந்த " முதல் கரும்புலியின்" வாரிசுகள்தான் இப்போது, "தேவேந்திர குல" மக்களாக "பரிணமிக்கிறார்கள்". எண்ணிப்பார்க்க வேண்டாமா? சிவகங்கை சீமையை ஆண்ட " வேலு நாச்சியார்" படையில் வெள்ளையனை எத்ரித்து, களம் புகுந்து, "வீரச்சாவை" எட்டிய " பெண் கரும்புலி" யார்? அவர் "குயிலி" என்ற தேவேந்திர குல வீர மங்கை. தெரியுமா உனக்கு என்று அந்த "சின்னப் புத்தி" அதிகாரிகளை கேட்காமல் இருக்க முடியுமா?


தென் மண்டல "அய்.ஜி. ராஜேஷ் தாஸ்" இந்த 'அருவெறுக்கும் போரின்" முதல் குற்றவாளி. ராமநாதபுரம் டி.அய்.ஜி. என்ற "சந்தீப் மிட்டல்" இந்த "போர்குற்றத்தின்" இரண்டாவது குற்றவாளி. அவர்களுக்கு "எடுப்பு வேலை" செய்த "செந்தில் வேலன்" மூன்றாவது குற்றவாளி. இந்த "போர்குற்றவாளிகளை" கூண்டிலேற்றாமல், எந்த "மனித உரிமையும்" தமிழ்நாட்டில் "மயிரைக் கூட" பிடுங்க முடியாது. இப்போது அதிகாரிகள் அறிவித்திருக்கும் "போரை" எத்ரிகொள்ள மக்கள் "தயார்". எந்த அளவுக்கு உங்கள் நாட்டின் 'அரசியல் சட்டமும், ஜனநாயகமும்" தயார் என்பதை "வெளியே" வந்து அரசியல் கட்சிகள் கூறட்டும். இனி நாமும் "வேடிக்கை" பார்பவர்களாக இருந்தால் "கூண்டோடு " அழிந்து விடுவோம்.

Monday, September 26, 2011

சிதம்பரத்தை "மோசடி" வழக்கு "தீண்டாதா?".

ராஜா மீது "இந்திய இசை" ஏமாற்றியதாகவும், "மோசடி" செய்ததாகவும் "குற்றம் "சுமத்தியுள்ள "சீ.பி.ஐ" இப்போது "பாட்டியாலா" நீதிமன்றத்தில், ஆ.ராஜாவின் வழக்கறிஞர் கேட்டபடி, "சாட்சிகளாக" சிதம்பரத்தையும், மன்மோகனையும் கொண்டு வந்து நிறுத்துவார்களா? உங்கள் "சமூகம்" தீண்டத்தகாதவர்" என்று எங்களை "முத்திரை" குத்தும். நீங்கள் மட்டும் "குற்றங்களில்" இருந்து "தீண்டத்தாகதவர்களா?". இந்த கேள்வியை இன்னமும் "இந்திய மக்கள்" கேட்காததால்தான், இவர்கள் எல்லாம், ஜன்பத் சாலை பத்தாம் எண்ணில், கலந்து பேசி, உண்மைகளை குழி தோண்டி புதைக்க விரும்புகிறார்கள்.

2003 ஆம் ஆண்டு "தொலைத் தொடர்பு அமைச்சராக" இருந்த ஜஸ்வந்த் சின்க்தானே "ஏலம்" விடாமல் "உரிமம்" ஒதுக்கும் "கொள்கையை" கொண்டு வந்தார்? இந்த கேள்வியை ராஜாவின் வழக்கர்ஞர் கேட்ட பிறகுதான் "இந்தாயாவிற்கு" புரியுமா? சிதம்பரமும், மன்மோகனும், "குற்றம் செய்தார்கள்" என்று கூறவில்லை. ஆஅனால் அவர்களை "சாட்சிகளாக" விசாரிக்க வேண்டும் என்றுதானே ராஜா கேட்கிறார்? ராஜாவையும், மற்றவர்களையும், எப்படியாவது "ஆயுள் தந்தைக்கு" தள்ளிவிட விரும்பும் சீ.பி.ஐ.யின் செயலுக்கு "பின்னணியில் " இருப்பவர் யார்? இப்போது "பி.எஸ்.ஏந.எல்." அய் தவறாக பயன்படுத்தினார் என்று "திர்ஹயாநிதியையும்" சீ.பி.அய். கூறி விட்டதே? மொத்தமாக் இந்த "கும்பல்" உள்ளே செல்லவேண்டியதுதானா?


சிதம்பரத்தை "தப்பிக்க" வைக்க "பிரணாப்" மூலமே அவர் "காங்கிரசிற்கும், அரசாங்கத்திற்கும்" தூண் போன்றவர் என்றும், "மதிப்புமிக்கவர்" என்றும் கூறவைத்த சோனியா, சிதம்பரம் "நேர்மையாளர்" என்ற வார்த்தையை பிரணாப் மூலம் சொல்லவைக்க முடியவில்லையே? இந்த "இடம்தான்" கவனிக்கத் தக்கது.

காஷ்மீரில் அம்பலத்திற்கு வந்த "இனப்படுகொலைகள்".

இலங்கைத் தீவில் "தமிழினப் படுகொலைகளை" நடத்த துணையிருந்த "இந்திய ராசு" அதில் தப்பித்திருக்கலாம். ஆனால் காஷ்மீரில் நடத்தப்பட்ட "இனப் படுகொலைகளில்" இப்போது மாட்டிக் கொண்டுவிட்டார்கள். இன்று "ஜம்மு--காஷ்மீர்" மாநிலத்தின் "மாநில மனித உரிமை" அமைப்பு கண்டுபிடித்துள்ள, " சுடுகாட்டு புதைகுழிகள்" இந்திய அரசின் "உண்மை முகத்தை" படம் பிஒடித்து காட்டியுள்ளது. தொடர்ந்து " காணமல் போனவர்கள்" என்ற பெயரில் "ஒவ்வொரு வீட்டிலும்" தாய்மார்கள், "பிள்ளைகளை" இழந்தும், பெண்கள் "கணவன்மார்களை" இழந்தும், குழந்தைகள் "தந்தையரை" இழந்தும், சகோதர்களை இழந்து தவிக்கும் சிறுமிகளும், "சகோதரிகளை" இழந்து அலறும் " ஆண்களும்" சில பத்தாண்டுகளாகவே அதிகமாகிக் கொண்டு இருந்தார்கள்.

இப்போது "மாநில மனித உரிமை கவுன்சில்" கண்டுபிடித்துள்ள, 2000 ௦௦ புதை குழிகளில், "எலும்பு கூடுகள்" கிடப்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இவை "முப்பத்தெட்டு" இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 'அறிவிக்கப்படாத" இடுகாடுகளாக அவை இப்போது அறிவிக்கப்படுகின்றன. அவற்றில் இருக்கும் எலும்புக் கூடுகள் அனைத்தும் "போராளிகளுடையது" என்று சொல்லல தாங்கள் தயாரில்லை என்பதே மனித உரிமை ஆணையத்தின் முடிவு. அதற்காக அந்த உடல்கள் மீது, "டி.ஏன்.ஏ. சோதனை" நடத்தப்பட வேண்டும் என்பதே மனித உரிமை ஆணையம் வந்திருக்கின்ற முடிவு. அதனால் "தங்கள் உறவினரது" உடலா என்ற "ஆர்வத்தில்" மனிதர்களைத் தொலைத்தவர்கள் இருக்கிறார்கள்.

இது சம்பந்தமான அறஈகையை "சட்டமன்றத்தில்" எதிர்க்கட்சித் தலைவரான "மக்பூபா முப்டி " கிழித்துப் போட்டுள்ளார். முதல்வர் "உமர் அப்துல்லா" மாட்டிக் கொள்வார் என்கின்றனர். ஆனால் "கொலைகளை" செய்தவர்கள் அங்கே நிலை கொண்டு இருக்கும் "இந்திய இராணுவமே" என்பது கண்கூடு. 'ஐ.நா. சபையில் "மஹிந்தாஅரசை" போற்குற்றங்களில் இருந்து "காப்பாற்ற" துடிக்கும் "இந்திய ராசு" இப்போது, "காஷ்மீர் தேசிய இன" பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்கு "ஊழல் குற்றச்சாட்டில்" சிக்கியுள்ள சிதம்பரம் பதில் சொல்வாரா?,

செங்கோடிக்கு "மக்கள் மன்றம்" செய்த "அஞ்சலி".

சனிக்கிழமை சென்னைக்கு வந்த "காஞ்சி மக்கள் மன்றம்" வீரமகள் செங்கொடித்தோழர் "தியாக மகள்" ஆனதற்கு " நினைவேந்தலை" படத்திறப்புடன், "தலைவர்களை" அழைத்து, "இப்படி ஒரு காட்சி" இதுவரை இல்லை என்று சொல்லும்படி, நடத்திக்காட்டினார்கள். ராயப்பேட்டை அவைசன்முகம் சாலையில், அதிமுக அலுவலகத்தை அடுத்த கட்டிடமான "ஹேமமாலினி" கல்யாண மணடபத்தில், மாலை சரியாக "நாலரை மணிக்கு" கலை நிகழ்ச்சிகளை தொடங்கினார்கள். செங்கொடியுடன்"தோழமையாக" வளர்ந்து,செங்கொடியுடனே, பல "நடனங்களையும், பாடல்களையும்" நடத்திக் காட்டிய "சக தோழிகள்" அங்கே "நடனங்களின்" மூலம் செங்கொடிக்கு "அஞ்சலி" செலுத்தினர்.

பெரும் அரங்கு. அதுபோலவே பெறும் 'சுவரொட்டிகள்". ஆயிரக்கணக்கில் "துண்டறிக்கைகள்' . அத்தனையும் "மக்கள் மன்றத்தின் தோழமை சக்திகள்" சென்னையிலிருந்து "ஏற்பாடு" செய்திருந்தனர். மக்கள் மன்றத்தின் "கிராமப்புறக் கிளைகள்" தாங்களே "வாகனங்களை" ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்தனர். நூற்றுக் கணக்கில் மக்கள மன்றத்தினர் வார, சென்னைவாசிகளும், நூற்றுக் கணக்கில் கலந்து கொண்டனர். கலைப்புலி தாணு, டாக்டர் கலாநிதி என்று "பிரபல புரவலர்களும்" அந்த நிகழ்வுக்கான உதவிகளை அளித்திருந்தனர். ஆனாலும் மக்கள் மன்றம் "எந்த நிதியையும்" தங்கள் இயக்கத்திற்கு என்று வாங்குவதாக இல்லை. செங்கொடி "நினைவு மண்டபம்" எழுப்ப, கலந்து கொண்டோரிடம் "நிதி" திரட்டப்ப்டட்டது. "செங்கலும், சிமிட்டியும், மணலும்,"வாங்கித் தருபவர்கள் வரவேற்கப்பட்டனர். மக்கள் மன்றம் "ஒரு கம்யூன்" என்றழைக்கப்படும் "கூட்டு வாழ்க்கை". அதற்கு " நிதி" என்பது அதன் " கடமையை" சிரிதாக்கிவிடக்கூடாது என்பதே அதன் "குறிக்கோள்".

இப்படி :"கொள்கை" வீராங்கனையாக வளர்ந்ததால்தான் "செங்கொடி" இன்று "உயர்ந்து நிற்கிறார்". செங்கொடி "நடத்திய" நடன நிகழுவுகளின் "காணொளிகள்" திரையில் காட்டப்பட்டன. அதுகண்டு " உருகாத" உள்ளமே இருக்க முடியாது. செங்கொடியின் "நளினம்", "கால்களை எடுத்துவைக்கும் பாங்கு"," கைகளை சுழட்டும் பக்குவம்", "கண்களை மிரட்டிக் காட்டும் பார்வை" " கண்களில் நடனம் காட்டிய நர்த்தனம்", "ஒயிலாட்ட முறையில் கைகளை உயர்த்தி கீழிறக்கி, வளைத்து" நிகழ்த்திய காட்சிகள், எல்லாமே "காண்பவரை" இழுத்து, தனது "காலடியில்" நிற்க வைத்த அந்த "இளம் தோழி" எல்லோர் கண்களையும் "குளமாக்கிவிட்டார்" அதில் அசந்துபோன கவின்மலர் தனது "பேஸ்புக்" வர்ணித்துள்ளார். முன்கூட்டியே வந்து மர்ந்துர்ந்த தலைவர்கள் "சிலர்" மட்டுமே அந்த "காட்சியை" பெரிய திரையில் "காண முடிந்தது". அதில், கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன், பேரா.சரஸ்வதி, நெடுமாறன், ஜான்பாடியன்" ஆகியோர் அடங்குவர்.அந்த "திரை நிகழ்வை" கருவிகள் மூலம் இயக்கிக் காட்டிய, செங்கொடியின் "இன்னொரு அக்கா" ஜெசி அத்தனை "நிழற்படங்களையும்" இயக்கியதை யாருமே "காணத்தவறவில்லை".

செங்கொடி 'நினைவை" மரண தண்டனை "எதிர்ப்பு கூட்டமாக மக்கள் மன்றம் நடத்தியது. பேராசிரியர் சரஸ்வதி "தலைமை" தாங்கினார். பெரியார் திராவிடர் கழத் தலைவர் கொளத்தூர் மணி "செங்கொடியின்" படத்தை திறந்து வைத்தார். மக்கள் மன்றத்தின் மேகலா வரவேற்றார். மக்கள் மன்றத்தின் மகேஷ் அவ்வப்போது விளக்கங்களை அளித்தார். இறுதியில் மக்கள் மன்றத்தின் மகா நன்றி கூறினார். "பழ நெடுமாறன், சரஸ்வதி, கொளத்தூர் மணி, மக்கள் மன்றம் மகேஷ், மேகலா, மகா, டி.எஸ்.எஸ்.மணி, தியாகு, ஜான் பாண்டியன், வழக்கறிஞர் பார்வேந்தன்,டாக்டர் கிருஷ்ணசாமி, வைகோ ஆகியோர் உரையாற்றினார்கள்.

தோழர் நல்லகண்ணு, பெயர் அறிவித்திருந்தும் வர இயலவில்லை. அவர்களுக்கு 'உள்ளாட்சி தேர்தலில்" அணி மாற்றம் என்ற குழப்பம், தொகுதி பங்கீடு என்ற சிக்கல் இருந்திருக்கும் என்று தெரிகிறது. வெள்ளையன் ஏதோ வரவில்லை. டாக்டர் ராமதாஸ், ஏற்கனவே வடிவேல் இராவணன் பெயரை கொடுத்திருந்தார். ஆனால் அவரும் வரவில்லை. இயக்குனர் மணிவண்ணன் கொசையில் மருத்துவ சிகைச்சியில் இருந்துவிட்டார். தொல் திருமாவளவன் 'வெளிநாடு " செல்ல இருப்பதால் முதலில் சிந்தனை செல்வன் பெயர் இடம் பெற்றது. பிறகு வெளிநாடு செல்லவில்லை என்று, "திருமாவளவனே" அவ்ருவதாக இருந்தார். கடைசிவரை உறுதியாக வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக அவர்கள் கட்சியின், "பார்வேந்தன்" பேசினார். இப்படியாக "மக்கள் மன்றத்தின்" முதல் சென்னை நிகழ்ச்சி "வெற்றிகரமாக" நடந்தேறியது.

"செங்கோடிக்கு" இதுபோல ஒரு "மரியாதயை" யார் தர முடியும் என எல்லோர் மனதிலும் "செங்கொடி" நிறைந்து இருந்தார். இனி ஒவ்வொரு "விடுதலை எழுச்சியும்" செங்கொடியின் "நிழலில்"தான் எண்பதை அந்த கூட்டம் "கட்டியம்" கூறியது

பரிதாப உணர்ச்சியே மேலோங்குகிறது???

இனத்துரோகம், காட்டிக் கொடுத்தல்,தன்னல வெறி,இயக்கத்தை அழித்தல், கொள்கைகளை புதைத்தல், குற்றத்தை மறைத்தல், இரக்கமற்ற லாபவெறி, பொருள்சேர்க்கும் வெறி, பதவி மோகம், பாசாங்கு செய்தல், பாலின இழிவு, நண்பர்களை உடைத்தல், தன்னை முன்னிலைப்படுத்தல், துணிந்து பொய்கூறல், பிறர் பொருள் கவர்தல், இத்தனை " நற்குணங்களையும் "ஒருங்கே" கொண்ட ஒருவருக்கு, "பெறும் சிக்கல்" வந்துள்ளது. டில்லியில் நீதிமன்றத்தில், இரண்டு தலைமுறை அலைவரிசை ஊழல் வழக்கில், அடுத்த "குற்றப் பத்திரிக்கை" தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது "நச்சீட்டி" என கலைஞரது "நெஞ்சை" குத்தும்.

ஆ.ராஜ்விற்கு அடுத்தடுத்த "குற்றச்சாட்டு" வழக்கு பிரிவுகள். கனிமொழிக்கு "எதிர்பாராத" வழக்கு பிரிவுகள். கலைஞர் டி.வி. விவகாரத்தில் "கனிமொழிக்கு" சம்பந்தம் இல்லை என்று "பல முறை" தந்தையே, அதாவது "கலைஞர் டி.வி." இன் உண்மையான "மூளையே" கூறியபிறகும், குடும்பத்திற்குள்ளேயே இருக்கும் "அமிர்தம்" கூறிய "போய்" சாட்ச்சியை "அடிப்படையாக" கொண்டு, கனிமொழி மீது "மேலும்" பல குற்றச்சாட்டுகளை சீ.பி.ஐ. கூறியுள்ளது. 120 பி என்ற "ராஜா துரோக" வழக்கு பிரிவிலும், 409 என்ற பிரிவில் ஏமாற்றியதாகவும், கனிமொழி மீது இப்போது சீ.பி.ஐ. குற்றச்சாட்டுகளை "புனைந்துள்ளது".

இது யார் செய்த "சதி?". யாருக்கு இதனால் "லாபம்?". காங்கிரச்கார்ர்களுக்கு, திமுக மீதோ, கலைஞர் மீதோ "கோபம்" என்று வைத்துக் கொள்வோம். அதற்காக இவ்வளவு தூரம் "இறங்கி வந்து" செய்ய என்ன "அவசியம்" இருக்கிறது? ஆ.ராஜாவின் வழக்கறிஞர், "பிரதமரையும், சிதம்பரத்தையும்" நீதிமன்றத்திற்கு வந்து "சாட்சியம்" கூறவேண்டும் என்று கூறியதால் "சிதம்பரம் மற்றும் மன்மோகன் தயவில் உள்ள சீ.பி.ஐ" இப்படி ஒரு "அபாண்டமான" குற்றச்சாட்டை வைக்கிறார்களா? கனிமொழிக்கும் ராஜாவின் வழக்கறிஞர்தான் வாதாடுகிறார் என்பதால், கனிமொழி சார்பாக பேசும்போதும், "கனிமொழி வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத" சிதம்பரத்தையும், மன்மோகனையும்" அவரும் "சாட்சிகளாக" இழுத்தார் என்ற செய்தி, நமக்கு இருந்தது போலவே "கனிமொழிக்கும்" அதிர்ச்சியாக இருந்ததே? அதைக்கூட கனிமொழி விரும்பவில்லை எண்பதை ஏற்கனவே நாம் கூறி இருக்கிறோமே? இப்போது "அதற்காக" கோபப்பட்டு "அவர்கள் இருவர்" மீதும் இப்படி சீ.பி.ஐ. குற்றம் சாட்டுகிறதா?

இல்லையென்றால், இத்தகைய "குற்றச்சாட்டுகளால்" கனிமொழி மேலும் "பல காலம்" சிறையிலேயே இருக்கட்டும் என்றும் "தண்டனைகூட" கிடைத்து "வெளியே" வரமுடியாத சூழல் ஏற்படட்டும் என்றும் நினைப்பது "யாராக" இருக்கும்? கனிமொழி வெளியே வந்தாள், திமுகவின் "மிக முக்கிய தலைவராக" ஆக்கப்பட்டு விடுவார் என்றும், கனியை "தலைவர்" அப்படி ஆக்கிவிடுவார் என்றும் "யார்" பயப்படுவார்கள்? யார் "டெக்கான் குரோனிகல்" ஆங்கில ஏட்டில், "ஞானியை" வைத்து ஒரு கட்டுரை எழுதச் செய்து, அதில் "கலைஞர்" கட்சி தலைமையிலிருந்து "கீழே" இறங்க வேண்டும் என்று "கருத்தை" பதிவு செய்து, அந்த "கட்டுரையை" படித்தீர்களா என்று ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டிருந்தது?

"யாருக்கு" கட்சித் தலைவர் "பதவி" உறுதியானது என்று "பட்டத்து இளவரசர்" பாத்திரம் "தயாராக" இருக்கிறது? யார் உண்மையில் "கனிமொழி" அந்த இடத்தை "பிடித்துவிடுவாரோ" என்ற "அச்சம்" அதிகம் கொண்டவாராக இருப்பது? யாருக்கு பின்னால் "டில்லியை" கழககண்ணியில் "கோர்க்கவேண்டியவராக" தான்தான் "இருப்போம்" என்ற ஆணவம் இருந்தது?, 2007 இல் "தலைவரிடம்" குட்டு வாங்கும்வரை அந்த நம்பிக்கையில் இருந்தது? "யார்" அந்த நம்பிக்கைகள் "உடைந்துவிட்டனவே" என்று கனிமொழி மீது "ஆத்திரம்" கொண்டு அலைவது? யார் முதலில் தனது "அச்சு ஊடகத்திலும், காட்சி ஊடகத்திலும்" தினசரி " இரண்டு ஜி" ஊழல் பற்றி "அம்பலப்படுத்தியது?". இப்படி நடப்பது எதுவுமே "எதிர்கட்சிகள்" செய்வது அல்ல. எல்லாமே "குடும்பத்திற்குள்" நடக்கும் " உள்குத்து" வேலைகள்தாம்.

கனிமொழிக்கு இப்போது குற்றயியல் நடைமுறை சட்டம் 437 பிரிவு "தந்திருக்கும்" பிணை வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக சீ.பி.ஐ. கூறியுள்ளது. அதுவே கனிமொழியை 'பிணையில் வார" வழிவகுக்கும். அப்போது அவர் " சிதறிவரும் திமுகவின்" சுமை தாங்கியாக மீண்டும் தன்னை "அழித்துக் கொள்வாரா?" அல்லது "புதிய வடிவம்" எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தனது "இனத்தின்" அழிவை வேடிக்கை பார்த்து "இனத்தையும்" காப்பாற்ற முடியாத ஒரு தலைவன், அதனாலேயே தனது "கட்சியையும்" காப்பற்ற முடியாத ஒரு தலைவர், தனது "குடும்பத்தையும்" அழிவிலிருந்து "காக்க" முடியாத நிலைக்கு சென்று, "கடைசியாக" இப்போது "மகளையும்" காப்பாற்ற முடியாத "ஒரு தந்தையாக" ஆகிவிட்டார். "பழி" உணர்வு வரவேண்டிய தமிழருக்கு இப்போது, "பரிதாப" உணர்வுதான் மேலோங்குகிறது