Tuesday, January 10, 2012

நக்கீரனை கைவிட்ட திமுக?

நக்கீரனை கைவிட்ட திமுக?
நக்கீரன் "ஜெ"வை தாக்கி எழுதினால் அதற்கு ஆதரவாக திமுக தலைமை வரவேண்டும் அல்லவா? அதுதானே தமிழ்நாட்டு அரசியல்? இந்த முறையும் நக்கீரன் அலுவலகத்தை அதிமுக வினர் களை முதல் மாலைவரை தாக்கும்போது, திமுக தலைவர் மதியத்திலேயே ஒரு கண்டன அறிககையை கொடுத்தார் அல்லவா? ஆனால் கலிஞர் அறிக்கையே பல கேள்விகளை எழுப்பிவிட்டன. இந்த பழம் பெறும் அரசியல்வாதி ஏன் தனது மகன் மாத்திரை தினகரனை ஆள் வைத்து எரிக்கும்போது, சும்மா இருந்தார்? அப்போது ஏன் இவர் தனது மகனிடம் இதே அறிவுரையை, அதாவது " வழக்கு" போடலாம், தாக்குதல் கூடாது என்று கூறவில்லை? என்றும் கேள்விகளை பொதுமக்கள் கேட்டார்கள். ''ஊடகத்தை தாக்குவது ஜனநாயக நாட்டில் தவறான செயல் " என்று அப்போது ஏன் இவர் கூறவில்லை? என்றும் கேள்விகள் எழுந்தன.

கலைஞர் வழக்கமாக தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர்கள் பற்றி ஒன்றை கூறுவார். ''சரக்கும் முறுக்கு, செட்டியாரும் முறுக்கு " என்பார். இந்த இடத்தில் நக்கீரன் என்ற சரக்கு முறுக்காக இருந்தாலும், அதை பற்றி கருத்தை விற்பனை செய்ய வந்த செட்டியார் கலைஞராக இருந்ததால், அது "திருப்பி" அடிக்கிறதோ? ஹைதர் அலி ஒன்றை கூறினார். அதாவது பா.ஜ.க. கட்சியின் அலுவலகத்தை திமுக முற்றுகையிட்டு, தாக்கும்போது, திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகனும், பரிதி இளம்வழுதியும் முன்னே நின்று தலைமை தான்கினார்களே? அது சரியா? என்று நம்மிடம் கேட்டார். யார் செய்தாலும் தவறுதானே? மாட்டு மாமிசம் சாப்பிடுபவர்கள் உலகமெங்கும் பல கொடி இருக்கிறார்கள்: அவர்களை இழிவாக சித்தரிகிரார்களா? என்றும் வினவுயனார். அதேபோல முஸ்லிம், தலித் தோழர்கள் சிலரும் இதையே கேட்டனர். ஜெயலலிதாவை இழிவு படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அவர்கள் உணவு பழக்கத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதே வரகளது வாதம்.

ஆனால் கலைஞர் எப்படி அறிக்கை விட்டார் தெரியுமா? நக்கீரனிடமிருந்து ஒரு வேண்டுகோள் வந்த பிற்பாடு, வலியுறுத்தல் வந்த பின்பே, வெளியிட்ட செய்தியை பற்றி கோபப்பட்டு விட்டு, பிறகே அவர் அறிக்கை தந்தார் என்கிறது ஒரு செய்தி. சரி. அதன்பிறகு, நக்கீரன் அலுவலகத்தார் "தளபதி ஸ்டாலினை" அணுகி அவர் வந்து உடைக்கப்பட்ட அலுவலகத்ஜ்தை பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அடஹ்ர்கு அவர் "மறுமொழியே" சொல்லவில்லை என்றும் ஒரு செய்தி வந்துள்ளது. அப்படியானால் நக்கீரனை திமுக கை விட்டு விட்டதா?

நக்கீரன்ல உள்ள நல்லாதானே இருக்கு

அன்று சனிக்கிழமை. சனவரி ஏழாம் நாள். புதுக்கோட்டையில் இருந்தேன். அப்போதுதான் சென்னையிலிருந்து வாடகை காற்றில் திருச்சி வழியாக வந்து இறங்கினோம். பண்ருட்டி வழியில் தானே புயலுக்கு பின்னால் இரவில்; செல்ல முடியாது என ஓட்டுனர் கூறிவிட்டதால், திருச்சி வழிதான் எங்களுக்கு கிடைத்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரீப் ஏற்பாடு செய்து கொடுத்த விடுதியில் தங்கினோம். அம்பேத்கர்-பெரியார் மக்கள் கழகம் தலைவர் செல்வன் அழைத்தாரே என்று "கரம்பக்குடி" கூட்டத்திற்கு வந்திருந்தோம். கடைகளில் தொங்கிய நக்கீரன் தலைப்பி கொஞ்சம் கண்ணை ஈர்த்தது. " மாட்டு மாமிசம் சாப்பிடும் மாமி நான்" என்று தலைப்பிட்டு "விவரிக்கிறார் ஜெயலலிதா" என்று எழுதி இருந்தது. அவரே சொல்கிறாரா? என்பது நமது கேள்வியாக எழுந்தது.ஆர்வம் இருந்தும் பிறகு வாங்கிகொள்ளலாம் என்று இருந்து விட்டேன். விடுதியில் படுத்து எழுந்த பின்னால் அனகில எட்டிலிருந்து ஒரு நண்பர் தொலைபேசினார். நக்கீரன் அலுவலகம் தாக்கப்படுகிறது என்றார். ஊடகவியலாளராக வருத்தப்பட்டார்.நானும்தான்.

அடுத்து கலைஞர் டி.வி. பார்த்தேன். அதில் நக்கீரன் அலுவலகம் உள்ளே தாக்கப்பட்ட காட்சிகளை, வெளியே ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகளை காட்டினார்கள். அடஹ்ர்குள் த.ம.மு.க. போது செயலாளர் ஹைதர் அலி தொலை பேசினார். நக்கீரன் என்பதால் எனக்கு பேசினார். மாட்டு இறைச்சி ச்டப்பிட்டால் இழிவா? என்ற தோரனையில் இருந்தது அவரது குரல். கலைஞர் அறிக்கை கலிஞர் டி.வி.யில் கட்டப்பட்டது என்றேன். எண்ண சொன்னார்? என்றார். நீதிமன்றம் சென்று அவதூறு வழக்கு போடவேண்டியதுதானே? என்று கேட்டிருக்கிறார் என்றேன். இதே கருத்தை தனது மகனுக்கு ஏன் அவர் "மதுரை தினகரன்" தாக்கப்பட்ட போது கூறவில்லை? என்று கேட்டார். அதுவும் சரியாகத்தானே இருக்கிறது என எண்ணினேன்.அடுத்து உடனேயே நக்கீரன் அலுவலகம் தொடர்பு கொண்டு காமராஜிடம் பேசினேன். உள்ளே "பாசிடிவாகத்தான்" எழுதியிருக்கிறோம் என்றார். எண்ண எழுதி இருக்கிறீர்கள்? என்றேன். மாட்டு இறைச்சி சாப்பிடுவது பற்றி எம்.ஜி.ஆர். கூறியதை ஜெயலலிதாவிற்கு ஆதரவாகத்தான் போட்டிருக்கிறோம் என்றார்.


அ[ப்படியானால் ஏன் அட்டையில் "நெகடிவாக" போட்டீர்கள்? என்றேன்.மாவிற்கு, மா போடவேண்டும் என்று எண்ணியதால் "கெடுத்துக்கொண்டோம்" என்றார். அவர் நக்கீரனின் இணையாசிரியர். அவரது கூற்றை அதிகாரபூர்வமாக எடுத்துக் கொண்டேன். அப்போது அவரது தொலைபேசி மூலம் வெளியே முழக்கம் போடும் சத்தம் கேட்டது. மதுசூதன் ஆட்கள் இப்போது வந்து முழக்கமிடுகிறார்கள் என்றார். "வெளியே காவலர்கள் காட்சி ஊடகத்தில் நிற்பது தெரிந்ததே? எப்படி உள்ளே வந்து உடைத்ததை களைஞர் டி.வி. காட்டினான் "என்றேன்.. முதலில் பத்து பேர் வந்து உள்ளே நுழைந்து எங்கள் வாகனங்களை உடைத்து அலுவலகம் உள்ளே வந்து பல பொருட்களையும் உடைத்து போட்டு விட்டனர். நாங்கள் அவர்களை வெளியே தள்ளி கதவை ப[ஊட்டி விட்டோம் என்றார். அதற்கு பிறகுதான் காவல் துறை வந்தது. வாசலில் நிற்கிறது.ஆனாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது என்றார். ஒவ்வொரு கூட்டமாக அதிமுக வினர் வந்து முழக்கமிட்டு, கள் எரிந்து விட்டு போகிறார்கள் என்றார்.

அதிமுக வினர் மாநிலமெங்கும் நக்கீரன் புத்தகத்தை கடைகளில் பிடுங்கி எரித்து வருகிறார்கள் என்றார். அதேபோல பிற இடங்களிலிருந்தும் கேள்விப்பட்டேன். மறுநாள் காலை தி ஹிந்து, தினத்தந்தி, போன்ற ஏடுகள்; உட்பட திமுக வினர் செய்த அராஜகத்தை படம் பிடித்து வெளியிட்டனர். அன்று காவல்துறை அதாவது ஞாயிற்று கிழமை சிறிது "அடக்கி" வாசித்தாங்க போலிருக்கிறது. உள்ளே போட்டதை படித்து பார்த்து வெளியே போட்டதை ஓரந்தள்ளி பார்க்க அரசியல் கட்சிகாரர்களுக்கு "பொறுமையில்லையோ?". அது அவர்கள் வேலையில்ல்யோ? சரி.இப்படித்தானே மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட போது, முதலில் மேயர் தேன்மொழி தனது படையுடன் சென்று வாசலில் முழக்கமிட்டு சென்றார். அடுத்து வந்த திமுக குழு வந்து கள் எறிந்துவிட்டு சென்றது. அடுத்து வந்த அட்டாக் பாண்டி குழு உள்ளே புகுந்து அடித்து நொறுக்கி, மூன்று பேர் சாகா காரணமாக ஆகிவிட்டது. இரு கட்சியிலும் தலைமைக்கு விசுவாசம் கட்ட ஒவ்வொரு குழுவாக இப்படித்தான் வந்து தாக்குதல் நடத்திவிட்டு செல்லவேண்டுமோ?

Thursday, January 5, 2012

கருணை எனபது ஒரு ஆளின் பெயரா?-நூல் ஏற்படுத்திய சர்ச்சை.

நேற்று தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பேரா சுமதியின் கவிதை தொக்குப்பான "அருகன்" நூல் வெளியிடப்பட்டது. வழக்கம்போல தமிழச்சி, சந்திரசேகர், மற்றும் நண்பர்கள் வரவேற்க, வழக்கம்போல , சிற்றுண்டி,தேநீர் ஆகியவற்றுடன் அவர்கள் குடும்ப வழமை உபசரிப்பில் சிக்கியபின், மாடி ஏறி அரங்கிற்குள் நுழைந்தோம். கலாப்ரியா என்ற சோமசுந்தரம் முதல், ஓவியர் மருது,வி.மங்கை,அரசு,தங்கம் தென்னரசு, ஜெயராம், ஆயிரம்வில்லக்கு ஹுசைன்,அமீர் அப்பாஸ்,லல்லி, சரஸ்வதி, ராஜேந்திரன், பாமரன், அமுதன்,கார்திகைசெல்வன், கோசல்ராம், எஸ்.பி.லட்சுமணன்,இளையபாரதி, எல்லோரையும் ஒருசேர கண்ட மகிழ்ச்சியை விட, ஸ்ரீஜித் தான் டில்லி நாடக பள்ளியில் செர்கப்பட்டுள்ளேன் என்று கூறிய செய்தி அதிகம் இனித்தது.

உள்ளே பேரா.ராமானுஜம் நடத்திய அரங்கேறும் கவிதைகளின் "நிகழ்த்துகலை" வழக்கம் போல உள்ளம் கவர்ந்தது. பின்னால் பேசிக் கொண்டு இருந்தவர்கள், கைபேசியில் உரக்க பேசியவர்கள் ஆகியோரை வழக்கம்போல வி.அரசு கோபப்பட்டு திட்டியதும் ஒரு சுவைதான்.ரவி தனது கர்நாடக இசை வழியில்,ஒரு கவிதையை பாட கொஞ்சம் மெய்மறந்தோம். நடிகை ரோகினி கவிதையை வாசிக்க முயன்றார்.அதுவும் ஒரு அழகுதான். அதன்பின் ராமானுஜத்தின் மாணவ, மாணவிகள் அவர் வீட்டு குழந்தைகள் ஆடி, பாடி ஒவ்வொரு கவிதையையும் உயிர் கொடுத்து அவைக்கு காட்ட, அதை மங்கை எடுத்து சொல்ல, எனக்கு பக்கத்தில் அவர்கள் ராமானுஜத்தின் பயிற்சி பெற்ற எங்க ஊர் { தஞ்சாவூர்} குழந்தைகள் என்று அரசு கூறி கொண்டே இருந்தார். நால்லாதான் இருந்தது.

புத்தகம் வாங்கிய உடனே கலாப்ரியா என்னிடம் தான் முன்னுரை எழுதியிருக்கிறேன் என்று கூறியிருந்ததால் அதை முதலில் படித்தேன்."வார்த்தைகளால் கவரப்பட்ட மவுனம்" என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.கவிதை நூலிற்குள் சென்றேன். "மியூசிகல் சேர்" என்ற கவிதை "காளியாய் இருக்கின்ற இருக்கைகள்" என்று தொடங்கி , எழுதப்பட்ட ஒவ்வொரு வரியும் ஆங்கில பேராசிரியராய் இருந்தவர் தலைவர் கூறியதை நம்பி, கழகத்தில் சேர்ந்து, முதல் தொடக்கமே இளைஞர் மாநாட்டில் எங்கள் ஊரில் {நெல்லையில்} கொடி ஏற்றி பெருமை சேர்த்தாலும், அதன்பின் வந்த ஒவ்வொரு வாய்ப்பிலும் இருக்கைகளை தவற விட்டதை எண்ணி பார்த்ததால் அது இதற்கு பொருந்துமா என பார்ப்பது "அதிகப் பிரசங்கித்தனம்" என்பதால் எனக்கு அந்த பொருத்தி பார்க்கும் வேலை வேண்டாம் என இருந்து விட்டேன்.

அந்த மே 18 2010 கவிதை முந்தைய ஆண்டின் நிகழ்வை நினைக்காமல் அன்றாட வாழ்க்கையை இயந்திரம் போல கழிக்கும் நடுத்தர வர்க்கத்தை "தன் சாடல்" செய்வதை அமைந்திருந்தது. "அன்றும் எழுந்தோம், பல் துலக்கி, உடை உடுத்தி," என்று துவங்கும்போது, ஜூலியஸ் பூசிக் தனது "தூக்குமேடை குறிப்புகளில்" சிறைக்கு வெளியே நடக்கும் மனிதர்கள், சந்தை, ஆகிய அன்றாட வாழ்க்கை பற்றிய விவரிப்பு நினைவுக்கு வந்தது. "முள்ளிவாய்காலை மறந்து" என்று அவர் கூறியிருந்தாலும் அரசியல் நிகழ்வுகள் உலகில் அதை மறக்க விடவில்லை. "எள்ளுபூ நாசியும், அரேபிய தேசத்தின் வாசனை திரவியமும்" என்ற கவிதையில், அந்த ஆப்கான் "ஆயிஷா" பாலின உறவுக்காக "மூக்கறுபட்டதை" நிகழ்த்து கலையில் அப்படியே காட்டி கவிதை உரையில் இரத்தம் உறைய வைத்து விட்டார்."எங்கெல்லாம் ஒரு பெண் அநீதியாக வதைக்கப்படுகிறாளோ ", "அங்கெல்லாம் அறுபட்ட உனது மூக்கின் எச்சங்கள் நீதிக்கு முன்னால் சென்று முறையிடட்டும் " என்ற வரிகள் "கவித்துவம்" இருக்கிறதா என்ற கவலையை விட்டுவிட்டு, "ஆவேசம்" இருத்தல் வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. செய்திகளில் இருந்து எடுத்து "வழித்து போடுவது" அவரது பாணி. "எங்கள் சூர்பனகையின் அறுபட்ட முலையும், மூக்கும், இத்தனை யுகங்களுக்கு பின்னரும் உன்னில் தொடரும்" என்ற வரிகள் "எல்லா காலத்திலும் , எல்லா நாட்டிலும் இப்படிதானா?" என்று எண்ணுவதற்கு பதில் "அந்த இராமாயண காலநிலம்தானே இன்றைய ஆப்கானும் " என்று என்ன தோன்றுகிறது. அதில் ஒரு ஆரிய வாடை இருக்கிறதோ? அதைத்தான் பார்பனீயம் என்று நாம் "பாலின ஒடுக்கலாக" புரிந்து கொள்கிறோமோ? இத்தனை சிந்தனைகளை அந்த வரிகள் நமக்கு எடுத்து கொடுத்தது.


" இலக்குவனின் ஆண்திமிரை ,அரேபிய தேசத்தின் அத்தனை வாசனை திரவியங்களும் மறைக்கமுடியாது தோற்றோடும்". இப்படி எழுதியவர் இன்று சவுதியில், இராக்கில், இரானில், சூடானில் என பெண்கள் வாகனம் ஒட்டவும், வாக்கு அளிக்கவும், அதிகாரத்திற்கு போட்டி போடவும எத்தனை கடினங்களை சுமந்து போராடி அந்த உரிமைகளை பெற்று இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது.முள்ளிவாய்க்கால் குறித்து மேக்கப் கவிதை எழுதியதாக குறிப்பிட்ட தோழருக்கு என்று ஒரு கவிதை.அதன் பெயர் "கழு மரம்". "ஏன் கண்ணீரின் உப்பை கண் மையை கொண்டு வடிகட்டாதீர்கள்". " உள்ளக் குமுறலை உதட்டு சாயத்தை வைத்து அளவிடாதீர்கள்". "ஏன் கவிதையை மட்டும் கொஞ்சம் தணிதிருக்க விடுங்கள்".இப்படி எழுதிய சுமதியை யார் புரிந்து கொள்ளாவிடினும் அந்த ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தாலும் புரிந்து கொண்டுள்ளனர்..


பேரறிவாளன் அம்மா அற்புதமாளுக்கு என்று " அவ்வெண்ணிலவில்"என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார். அதில் "தன் இளமையை தனிமையில் தொலைக்கப்போவதர்கான அறிகுறிகள் அற்று, அவன் தனது பத்தொன்பதாவது பிறந்த நாளை கொண்டாடி இருந்தான். முன்னேச்சரிக்கையற்ற இருட்குகை ஒன்றில்,எதிர்காலம் இடறிவிழுந்தபோதும் கூட, அவனது அடுத்த பிறந்த நாளுக்கான இனிப்பை அவனது அம்மா நம்பிக்கையோடு தயாரித்த படி, இருந்தாள்". இந்த வரிகள் "அற்புதம்மாலை" அப்படியே படம்பிடித்து காட்டுகின்றது. "கருணை மனுக்கள் மீதும் நம்பிக்கை இழந்த அவள்,இறுதியாக தன் வயோதிகத்தை கொஞ்சம் தள்ளிப் போடும்படி காலத்திடம் கருணை கூறியிருக்கிறாள்". இந்த வரிகள் தமிழச்சிக்கு ஒரு குறிப்பிட்ட நிலைமையை சொல்லுமானால், நமக்கு, அதுவும் "தெருப்பாடகனுக்கு" வேறு வார்த்தைகளை "கோர்த்து " கொடுக்குமல்ல்லவா? "கருணை ஒரு ஆளின் பெயர் அல்ல. அது சட்டப்பேரவை தீர்மானம். கருணை நிதியை என்றுமே தேடவில்லை.அது நீதிமன்றத்தில் அரசின் பதில்மனுவாக வந்து விழுந்தது".இது தெருப்பாடகனின் கூற்று. அது "வந்து விழுந்த திசையை நோக்கி, இன்று அந்த தாய் கண்ணீர் மல்க நன்றி சொல்கிறார்". இதுதான் அந்த "எசப்பாட்டின்" குரல்..


"அவங்கவங்க வீட்டுக்கு, அவரைக்காய் சோத்துக்கு".இப்படிஒரு தலைப்பு. "அக்கரையில் இருக்கும் அத்தீவில் எள் அள்ளி தெளிக்காப்ல, எங்கேயும் விதவைகள் தானாம்""கருப்பைகளும், முலைகளும் அற்ற ஒரு மொண்ணை பிறப்பிருந்தா, ஒரு வேளை, கோநேஸ்வரியும், பென்னம்பேரியும்,அங்கே அச்சமின்றி மீண்டும் பிறக்கலாம். காதலை போல, போருக்கும் வயதில்லை. கைமைக்கும் கூடத்தான்".இந்த வரிகள் அங்கே உள்ள போரின் விளைவில் பெண்களை, விவதைகளை எப்படி கூட்டம், கூட்டமாக ஆக்கி கொடுத்துள்ளது என்பதை நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி நிலை குலைய வைக்கிறது. இந்த அளவுக்கு இந்த தொகுப்பு அன்னை எழுத வைத்து விட்டது..


"e

Wednesday, January 4, 2012

ஆங்கில ஏடுகளின் பாலின இம்சை.

இன்று காலை ஏடுகளில் வந்துள்ள செய்திகளில் டில்லி பாடியாலா ஹவுசில் இருக்கும் சீ.பி.அய். நீதிமன்றத்தில் நடக்கும் இரண்டாவது அலைவரிசை ஊழல் வழக்கில் சிறைக்குள் உள்ள ஆ.ராஜாவை பற்றி அவரது முன்னாள் உதவியாளர் ஆசிர்வாதம் ஆசாரி கூறிவரும் செய்திகளையும், அவற்றை ராஜா மறுப்பதையும், சீ.பி.அய். மீது ராஜா குற்றம் சாட்டுவதையும், அதற்கு ஆசீர்வாதம் மறுப்பு கொடுப்பதையும் ஒட்டி, எழுந்துள்ள வாத, பிரதிவாதங்களை "சூடாக" போடுவதில், தொடர்ச்சிகாட்டியுள்ளன. சரி. அவர்களுக்கு அந்த ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கும், அதன் விசாரணையும் "சுவை" யானதாக இருக்கும் அதனால் அவற்றை வெளியிடுகிறார்கள். அதுபோன்ற சுவைகளை வாசகர்களும் ஆர்வமாக படிப்பார்கள், அதனால அவற்றை வெளியிடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்பது நமக்கும் புரிகிறது.

அந்த விவாதத்தில் இன்று ராஜா, அந்த ஆசீவாததிடம் கூறியதாகவும், அல்லது ராஜா சென்ற இடமெல்லாம் தனக்கு தெரியும் என்ற ரீதியில் ஆசீர்வாதம் எடுத்த "வாந்தியையும்" எழுதியிருக்கிறார்கள். சரி. அதுவும்கூட, ராஜா மீது குற்றம் சாட்டும் கூட்டத்திற்கு தேவைதான் என்பதால் எழுதுகிறார்கள் என்று வைத்து கொள்வோம். இந்த ஆசீர்வாதம் பற்றி ஏற்கனவே சென்ற ஆண்டே அதாவது 2009 இலேயே நாம் எழுதி இருந்தோம்.அதாவது இந்த ஆசீர்வாதம் உண்மையில் ராஜாவின் உதவியாளராக இருந்த போது, ரயில்வே துறையில் அதிகாரியாக இருந்தவர் என்பதும், ஏதோ தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் ராஜா அவரை நம்பி தனது உதவியாளராக போட்டார் எனபதும், அவர் திருச்சி மாவட்ட லால்குடி ஊரை சேர்ந்த உடையார் சமூக பின்னணி கொண்டவர் எனபதும், அவரை "தயா" அழைத்தார் எனபதும், அவரும் ராஜா வீட்டில் உள்ள போடோ படங்கள் உட்பட வெளிநாட்டு காரர்கள் உடன் ராஜா எடுத்து கொண்ட படங்களுடன் "தயா தயவு" நாடி சென்று விட்டார் எனபதும் நாம் ஏற்கனவே அப்போதே எழுதி இருந்தோம். அவரைத்தான் இப்போது சீ.பி.அய்.கொண்டுவந்து ராஜாவிற்கு எதிராக நிறுத்துகிறது என்பதிலிருந்து நீங்களே புரிந்து கொள்ளவேண்டியது ஏராளம்.


ஆனால் அதற்காக இன்று ஏடுகளில் நேற்று நீதிமன்றத்தில் ஆசீர்வாதம் கூறியதாக, ஆ.ராஜா யாரையெல்லாம் நேரில்போய் அவ்வப்போது சந்திப்பார் என்ற விவரங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் பல திமுக எம்.பி.களையும் அவ்வப்போது சந்திப்பார் என்றும், கோயங்கா உட்பட, கார்பொரேட் முதலாளிகளையு, அதிகாரிகளையும் சந்திப்பார் என்றும் கூறியுள்ளார். அப்பை கூறும்போது, கனிமொழியையும் அவரது வீட்டில் போய் சந்திப்பார் என்றும்கூறியுள்ளார். இதில் ராஜா சந்தித்த திமுக எம்.பி.கள் பட்டியலில் கனிமொழியும் வருகிறார். இதில் ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் கனிமொழி திமுக தலிவரின், மற்றும் தமிழக முதல்வரின் மகள் என்ற காரணத்தால் அந்த சந்திப்பில் "ஆரசியல் சதி" இருக்கலாம் என்று கூற எத்தனிப்பதும் கூட நடக்கும். ஆனால் அந்த ஆச்செர்வாதம் என்ற ஒய்வு பெற்ற ரயில்வே அதிகாரி கூறும்போது, கனிமொழியை வீட்டில் சந்திக்க போகிறேன் என்று ராஜா சொல்லி சென்றுள்ளார் என்றும் கூறுகிறார். அது ராஜாவின் "தந்திரம்" என்று யாரும் எண்ணிப்பார்க்கவில்லை.


தான் செய்யும் காரியங்களுக்கு ஒரு அமைச்சர் அதனது தலைவரின் "ஒப்புதல்" இருக்கிறது என்று காட்ட விரும்பி இருக்கிறார். அது இந்த " மூட கிழவனுக்கு" புரிந்ததா என்பது நமக்கு தெரியாது. ஆனாலும் ஏன் ஒரு அரசியல் முக்கியத்துவ பிரமுகரை சந்திக்க செல்வதை ராஜா என்ற மனிதர் சொல்லி செல்கிறார் என்று எண்ணினால் புரிந்து விடும். அதையும் தாண்டி, ராஜா கனிமொழியை சந்திக்க செல்லும்போது, "தொந்திரவு" செய்யவேண்டாம் என்று கூறியதாக இந்த ஆசீர்வதாம் கூறியுள்ளார். இந்த கூற்றில்தான் "பாலின இழிவுபடுத்தல்" இருக்கிறது. ஒரு ஆண், ஒரு பெண்ணை சந்திக்க சென்றால் இந்த "ஆணாதிக்க" உலகத்திற்கு அது "வக்கிரபுத்தியுடன் தான்" தெரியும். அதிலும் ஒன்று ஆசீர்வாததினுடைய புத்தியோ, அல்லது அவர் சொல்வது உண்மையானால் ராஜாவினுடைய புத்தியோ "வக்கிர" சிந்தனைக்கு வழி வகுக்க வேண்டும் என்றே கூறப்பட்டதாக இருக்க வேண்டும். திமுக கட்சிக்குள்ளும், ஆட்சியிலுள்ள அய்.மு.கூ. ஆட்சிக்குள்ளும் தான் முக்கிய பிரமுகர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக காட்டிக் கொல்வது ராஜாவிற்கு "தேவைப்ப்பட்டிருக்கலாம்".

அதாவது தான் செய்யும் "கள்ள" காரியத்தை மறைக்க ராஜாவிற்கு முக்கிய இடத்தில் தான் இருக்கிறேன் என்று கூறவேண்டிய "கட்டாயம்" இருந்தது என்பது நமக்கு புரிகிறது. ஏன் அப்படி? முதலில் "தான்தான்" அந்த அய்.டி.அமைச்சராக வந்து "கால்வாங்க" போகிறோம் என்றால் அபப்டி ஒரு "தேவை" வந்திருக்காது. ஆனால் ஏற்கனவே இந்த "தொழிலில்" கேட்டிகார்ராக செயல்பட்ட "தொழிலில் வெற்றி பெற்ற" ஒரு அமைச்சர்னா தாயாவிடம் இருந்து தலைவர் கலைஞர் "தன்னிடம்" இந்த களவாணி இலாகாவை "பிடிங்கி" கொடுத்துள்ள நிலையில் அதில் களவான்கும் போது, தான் பெரிய இடத்து "ஆள்" என்று காட்டவேண்டிய புத்தி ராஜாவிற்கு இருக்கும் என்பதை நாம் புரிந்துய் கொள்ள வேண்டும்.அதனாலேயே ராஜா, கனிமொழி வீட்டிற்கு செல்லும்போது அப்படிகூற முற்பட்டுள்ளார். ஆனால் அதை இந்த ஏடுகள் எப்படி புரிந்து கொள்ளவேண்டும்?

ஆணாதிக்க வெறி பிடித்த ஆங்கில ஏடுகளும், அதில் சில குறிப்பிட்ட ஏடுகளில் உள்ள அரசியல் சக்திகளின் எடுபிடிகளும் அந்த செய்தியை படு அசிங்கமாக் போட திர்ஹயர எனபதை காட்டியுள்ளன. உதாரணமாக டெக்கான் கிரோனிகள் என்ற ஆங்கில ஏடு இன்று காலையில், அந்த செய்தியை முதல் பக்கத்தில், " தொந்திரவு செய்யாதீர்கள், அவர்கள் ஒன்றாக இருக்கும்போது" என்பதாக வெளியிட்டுள்ளது. இது கேவலமான ஒரு "ஆணாதிக்க வெறி பிடித்த" அரசியல் சதிகாரர்களின் செயல்பாடு எனபது எத்தனை பேருக்கு தெரியும்? இத்தகைய வெளிப்பாடு. வரும்போது, அதை இந்த சமூகம் எதிர்க்க வேண்டும். தளபதி ஸ்டாலினுக்கு வேண்டியவர்கள் அந்த குறிப்பிட்ட ஏட்டில் இருக்கலாம். அது வேறு. அந்த ஏட்டின் முக்கிய ஆள், கனிமொழியுடன் ஒரு காலத்தில் நண்பராக இருந்தவர் இல்லையா? என்றும் மக்கள் கேட்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் இப்படி எழுதுகிறார்கள்?


ஒரு பெண் பிரபல அதிகாரம் படைத்த குடும்பத்தில் இருந்து வரும்போது, அவர் எளிதில் சாதரணமாக மக்களுடன் பழகும் நற்குணத்தை கொண்டிருக்கும் போது, அவருடன் "இலக்கியம்" பேசிக்கொண்டும், "பெண்ணுரிமை" பேசிக் கொண்டும் ஒரு ஆண் தன்னையும் பிரபலமாக ஆக்குவதற்கு பழக முடியும். அது "அறிவுஜீவிகளின்" நட்பு என்று இந்த ஆணாதிக்க உலகம் சொல்லிவிடும். அதே பெண் அதிகாரம் இழந்ததாக் கருதப்படும் சூழலில், "திஹார் சிறையில்" மாட்டும் போது, அவரை பற்றி இழிவாக எழுத,பேச இந்த உலகம் தயார் என்றால் இது எப்படிப்பட்ட உலகம்? ஒரு எழுத்தாளன் அந்த பெண் பெயரை சொல்லி தன்னை பிரபலப்படுத்தி கொள்வான், அதேசமயம் அந்த பெண் சிறையில் வாடினால் நக்கல் செய்து எழுதுவான். அவன் எந்த வகை? இப்போது இப்படி ஆங்கில ஏட்டில் எழியுல்லவர் எந்த வகை? அத்தகைய சூழலை ஏற்படுத்தி தான் செய்யும், அல்லது செய்த தவறுகளுக்கு "பிரபல பிரமுகர்களுடன் நெருக்கம்" என்ர்பதுபோல சித்தரிக்கும் அரசியல்வாதி எந்த வகை? இவர்களை கேள்வி கேட்டு "திணறடித்து" அதன்மூலம் அம்பலப்படுத்தும் வேலையை செய்தால் மட்டும்தான் "பெண்ணியம்" பேசும் பெரியார் மண் நிம்மதி பெறும்.

Monday, January 2, 2012

தானே வந்ததா? தானே கொண்டுவந்ததா?

"தானே" என்றொரு புயல் வந்தது. ஜெ ஆட்சியில் இந்த புயலினால் வந்த சேதங்களை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது முரசொலியின் அறிவிப்பு. நமக்கு தெரியும் இந்த முறை மட்டும்தான் புயல் வ்ருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே, அரசு அறிவித்து குறிப்பிட்ட நாளில் புயல் வரும் அதுவும் ஒவ்வொரு கடற்கரை ஓரமும் எந்த அளவில் வரும் என்று "எண் கூண்டு எட்டு, பத்து, பதினொன்று" இப்படி அறிவிப்பு கூண்டுகள் ஏற்றப்பட அதை காட்சி ஊடகங்கள் படம் பிடித்து காட்ட, நாமும் அடஹ்ற்கான விளக்கத்தை எடுத்து சொல்லி வந்தோம். இப்படி முன்கூட்டி சொல்லியும் கூட, இயற்கை தனது கோபாவேசத்தை கட்டாமல் விட்டு விட்டதா? என்றால் இல்லை.

அந்த புயலால் அதிக பாதிப்பு புதுச்சேரிக்கு என்றால், அதன் ஒட்டிய பகுதியான கடலூருக்கு அதிக பாதிப்பு இருந்தே ஆகும் என்பது கண்கூடு. ஆதியோ சிறிது பார்ப்போமா? குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சமுட்டிகுப்பம், ராமாபுரம், வழிசொதனை, பாளையம், ஆகிய ஊர்களில் முழுமையாக "முந்திரி தோப்புகள்" மழை வெள்ளத்தில் அடியோடு அழிக்கப்பட்டு, இனி இருபது ஆண்டுகளுக்கு முந்திரி தோப்பே இருக்காது என்ற ம்னயுலமை உருவாக்கி உள்ளது. இது விளையாட்டல்ல. முந்திரி தோப்புகள் எப்போதுமே நடப்பட்டு, இருபது ஆண்டுகள் கழித்துதான் விளைச்சலை கொடுக்கும்,. இப்போது இருக்கும் முந்திரி தோப்புகளின் அழிவு என்பது அடியோடு வேரோடு பிடுங்கி அழிந்திருக்கும் நிலையில், இனி அடுத்த தலைமுறை அந்த முந்திரி தோப்பையே காண முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ள்து. ஆண்டுக்கு அறநூறு மூட்டை முந்திரி விளைந்துவந்த ஒரு பகுதியில் அது அழிக்கப்படுவ்து எத்தனை பெரிய விஷயம்? இது மாபெரும் இழப்பு
.

இது தவிர பண்ருட்டி பகுதியில் "பலா மரங்கள்" அடியோடு சாய்ந்துள்ளன. நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன,. பலா, வாழை தோட்டங்கள் அப்படியே கவிழந்துள்ளன.தாழங்குடா என்ற மீனவ கிராமத்தில் "நூறு கண்ணாடி இழைப்படுகுகளை" காணவில்லை. மழையும், புயலும் அடித்து கொண்டு சென்று விட்டன. தேவனாம்பட்டினம் என்ற இன்னொரு மீனவ கிராமத்தில், 5000 தலைக்கட்டு மீனவர் வீடுகள் உள்ளன. அவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து படகுகளும் அழிக்கப்பட்டுள்ளன. வளைகள அனைத்ஹ்டும் காணாமலும், அழிக்கப்பட்டும் போய்விட்டன. கண்ணாடி இழைப்படகுகள், பெய்ய படகுகள் எனப்படும் "நாற்பத்திரண்டு அடி " படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. "ஆயிரத்து இரநூறு" வலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மீனவர் வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்ட்டுள்ளது.


ஒரு வலை நாற்பதாயிரம் ரூபாய் என்ற விலையுள்ள "சுருக்கு வலைகள்" ஐந்து கோடி ரூபாய்க்கான வலைகள் அழிந்துள்ளன. ஆனால் அவை அதாவது சுருக்கு வலை என்ற வலைகள் "தடை" செய்யப்ப்பட்ட வலைகள். அதாவது அவை கடலில் எல்லாவற்றையும், அதாவது மணல் வரை அரித்து, எடுத்து கொண்டு வந்துவிடும். ஆகவே அது பயன்படுத்துவது "கடல் செல்வத்தை" அழிக்கும் போக்கு என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. இது மீனவர்களுக்கும் தெரியும். தேவனாம்பட்டு மீனவ கிராமத்தில் அந்த தடை செய்யப்ப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்த கூடாது என்றுதான் முதலில் கடுமையாக நிறுத்தி வைத்தார்கள். அதை எதிர்ஹ்து வந்தார்கள். ஆனால் "மீன்வள துறை"யின் முழுமையான் அஆதரவில் சில மீனவர்கள் மட்டும் அதை பயன்படுத்தி வந்தார்கள்;. அதாவது மீன்வள துறையின் அதிகாரிகள் சிலர் செய்த சேட்டை அது. அதனால் மற்ற மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். அதன் பிறகே வேறு வழி இன்றி அந்த கிராமத்தில் பல மீனவர்களும் இந்த இயற்கைக்கு விரோதமான வலையை பயன்படுத்த தொடங்கினர்.



முழுக்க, முழுக்க, அரசு அதிகாரிகளின் ஊழல் போக்கால் ஏற்பட்ட இந்த விபத்தை இப்போது வந்த "தானே" விபத்திற்கு பிறகாவது "கைவிட" வேண்டும் என்று மீன்வள துறை கடுமையான் அண்டவடிக்கையை எடுக்குமா? அரசியல்வாதிகளும்,. அதிகாரிகளும் "லாபம்" ஈட்ட தடை செய்யப்ப்பட்ட வலைகளான, "சுருக்கு வலை, இரட்டைமடி வலை" ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கும் கடல் பற்றிய சிந்தனையே இல்லாத மீன்வள திர்ஹுறை அதிகாரிகளை கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இப்போதைய மீனவ நட்பு அரசு நடவடிக்கை எடுத்து கடலை காலம் பூராவும் பயன்படுத்த மீனவர்களுக்கு உதவும் பொருட்டு "தீவிரமாக" செயல்பட வேண்டும்.

Sunday, January 1, 2012

இந்தி ஒரு அந்நிய மொழி-உயர்நீதிமன்ற உத்தரவு.

பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் 1938 ஆமாண்டு தனத்தை பெரியாரால் துவங்கி வைக்கப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், 1965 இல் மாணவர்களால் நடத்தப்பட்டு, அதனாலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதன்பின் இன்றுவரை இந்தி மொழியை உள்ளே விடாத தமிழ்நாட்டின் நீதிமன்றங்கள் அப்படி ஒரு உத்தரவை போட தீரமிக்க நிலையில் உள்ளதாக நீங்கள் தப்பு கணக்கு போட்டுவிட வேண்டாம். தமிழ்நாட்டில் உய்ரநீதிமன்ர நீதியரசர்களாக அதுவும் தலைமை நீதியரசர்களாக வருபவர்கள் அனேகமாக வட இந்திய இந்தி பேசும் மாநிலத்தவர்களாக ஐருப்படு வழமை. ஆனால் இந்த உத்தரவு குஜராத் நீதிமன்றத்திலிருந்து வந்துள்ளது.


ஐந்து நாட்கள் முன்னால், சென்ற ஆண்டின் கடைசி நாட்களில் டிசம்பர் 29 இல் குஜராத் நீதிமன்றத்தில் நீதியரசர் வி.எம்.சஹாய், இப்படிஒரு தீர்ப்பை கொடுத்துள்ளார். அதாவது இந்தி மொழி ஒரு அந்நிய மொழி. குஜராத்தில் நம்ம ஊர் போலவே "தேசிய நெடுஞ்சாலை துறை" இரண்டு வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற ஒரு திட்டத்தை முன்வைத்தது. அந்த திட்டத்தை பணம் படைத்தவர்கள், அந்த வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், ஜனகத், ராஜ்காட் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நெடுஞ்சாலை ஓரத்தில் நிலங்களை அனுபவிப்பவர்கள், அரசிடம் கூறி அல்லது லஞ்சம் கொடுத்து, மாற்றி பல ஏழை விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பு வரும் வகையில், புதிய திட்டத்தை அறிவ்த்தார்கள். அதை அந்த இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் என்ற என்.எச்,ஏ.அய். கிராம மக்களுக்கு புரியும் குஜராத் மொழியில் அனுப்பாமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் அனுப்பி உள்ளனர்.

அதை விளங்கி கொள்ள முடியாத ஜனகத் மாவட்ட சரகடா கிராம விவாசயிகள் தேசிய நெடுஞ்சாலை சட்ட பிரிவு மூன்றில் "அ " பிரிவில் மூன்றாம் எண்ணில் கூறியுள்ளபடி,வட்டார மொழியில் உத்தரவு இருக்கவேண்டும் என்ற உரிமையை கோரி நீதிமன்றம் சென்றார்கள். அதற்குதான் அந்த நீதியரசர் சஹாய், குஜராத்தில் ஆரம்ப பள்ளிகளில் கற்று கொடுக்கும் மொழி குஜராத்தி மொழிதான் என்றும் ஆகவே அந்த மக்களுக்கு புரியாத மொழியான இந்தி மொழி அவர்களுக்கு அந்நிய மொழி என்றும் தீர்ப்பு கூறி, இந்தியில் வெளியான ந்த நெடுஞ்சாலை துறையின் உத்தரவை செல்லாது என அறிவித்து விட்டார். பழைய திட்டத்தை நிராகரிக்கவும் மறுத்து விட்டார்.

இது இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஒரு வாய்ப்பான தீர்ப்பு.உடனேயே இந்தி பேசாத தென் மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள், வடக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் எம்.பி.கள் இணைந்து குரல் கொடுத்து இந்தி மொழி திணிப்பை எதிர்த்தால் அவர்கள் கோரும் மாநிளுரிமைகளில் ஒரு சிறு முன்னேற்றம் கிடைக்கும்.

Friday, December 30, 2011

லோக்பால் மசோதா எதை அம்பலப்படுத்தியது?

மக்களவையில் யார் எதிர்த்தாலும், எத்தனை பேர் "காணாமல்" போனாலும் நிறைவேரவைப்போம் என்ற காங்கிரசின் அழுத்தத்தை அமபலப்படுத்தியது. அதையும் தாண்டி, ராஜீவ் முயற்சித்து தோற்றது போல ராகுலும் முயற்சித்து தோற்றது "அரசியல் சாசன" அங்கீகாரத்தை லோக்பால் மசோதாவுக்கு பெற முடியவில்லை எனபதை அம்பலப்படுத்தியது. அதேபோல மாநிலங்களவையில் என்ன முயன்றாலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகளே "காலை"வாருவார்கள் எனபதை அமபலப்படுத்தியது.

லோகாயுக்தா என்ற மாநிலங்கள் என்ன செய்யவேண்டுமென்பதை மத்திய அதிகார குவிதல் முடிவு செய்யமுடியும் எனபதை அனைத்து மாநில கட்சிகளும் எதிர்க்கும் என்பதை அமபலப்படுத்தியது. அந்த வரிசையில் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, சமஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி, ஆகியவற்றுடன் அய்.முகூ. அரசின் கூட்டணி கட்சிகளான மம்தாவின் திருணாமுல் காங்கிரசும், திமுகவும் சேர்ந்து கொண்டு அவற்றுடன் சீ.பி.எம். கட்சியும், பா.ஜ.க.வும்கூட இணைந்து நிற்குமென்பதை அமபலப்படுத்தியுள்ளது. திமுகவும, அதிமுகவும் ஒரே நிலை எடுத்து மாநிலங்களின் உரிமை பற்றி பேசுகின்றன என்பதை அமபலப்படுத்தியுள்ளது. மாநிலங்களின் உரிமை என்று வரும்போது மம்தாவும், சீ.பி.எம். கட்சியும் கூட சேர்ந்து நிற்குமேன்படஹியும் அமபலப்படுத்தி உள்ளது.

அதேபோல ஏகபோக மத்திய அரசின் ஒற்றையாட்சி கோட்பாட்டில் காங்கிரசும், ஆன்னா ஹசாரே யும் ஒரே இடத்தில் ஒரே அணியில், ஒரே மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்பதை அமபலப்படுத்தி உள்ளது. அதன் மூலம் அவர்கள் இருவரும் சேர முடியாத துருவங்கள் அல்ல என்பதை அமப்லப்படுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் இரு துருவம் போல ஏமாற்றி, மக்களையும் ஈடுபடுத்தி இந்த லோக்பால் சட்டத்திற்கு உரூவாக்க, ஒரு மக்கள் பங்களிப்புடன் அவர்களது தெருவிலிறங்கி போராடிய பங்களிப்புடன் . அங்கீகாரம் கிடைக்க வப்பதில்வேற்றி என்ற மிதப்பை பகிர்ந்து கொள்கிறார்கள் எனபதை அமப்ள்ளப்படுத்தி உள்ளது. அதன்மூலம் கார்பொரேட் களின் உதவியினால் தான் இந்த ஆள்வோர், மற்றும் அண்ணா வகையறா வேலைகள் நடந்தன என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.

இனி கார்போரேட்கள் தைரியமாக் இந்தியாவிற்குல்தங்களது மூலதனத்தை இறக்கலாம் என்றும், இந்திய மக்கள் கவலை பாட மாட்டார்கள் என்றும் அமபலப்படுத்தி உள்ளது..சட்டம் வதை விட்டது என்றும், இனி ஊழல் நடக்காது என்றும் பொதுமக்கள் தங்கள் "சொந்த காரியத்தை" பார்க்க போய் விடுவார்கள் என்றும் அமபலப்படுத்தி உள்ளது. இதற்காக தான் இத்தனை நாடகமும் அரங்கேறியது எனபதை அமப்லப்படுத்தி உள்ளது. கார்பொரேட்களால்தான் இத்தனை ஊழலும் நடந்தது என்று கார்போரேட்கள் மீது கோபம் கொடிருந்த மக்களை ஒருமாதிரி "சமாதனப்படுத்த" இந்த மசோதா, சட்டம் பற்றிய விவாதம் அகிலைந்திய அளவில் நடத்தி ஆகி விட்டது என்று கார்போரேட்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பதை அமபலப்படுத்தி உள்ளது.

கார்போரேட்கள் மீண்டும் இந்தியாவை கொள்ளை அடிக்க அந்நிய மூலதனத்தை உள்ளேகொன்டுவர, பொதுமக்கள் எதிர்ப்பார்களே என்பதற்காக இந்த நாடகத்தை நடத்தினர் எனபதை அமபலப்படுத்தி உள்ளது. ஒரு சட்டத்தை உருவாக்க இந்திய மக்களை ஈடுபடுத்தி ஒரு எழுச்சியை காட்டி பிறகு சட்டம் வந்தால் அந்த மக்கள் ஏமாந்து போவார்கள் என்று கார்போரேட்கள் சரியாகவே கணித்தனர் என்பதை அமபலப்படுத்திஉல்லது. எதை எடுத்தாலும் மத்திய ஒற்றையாட்சியை பலப்படுத்தத்தான் காங்கிரசும், கார்போறேட்களும் விரும்புவார்கலேனப்தை அமப்லபப்டுத்தி உள்ளது. கார்போரேட்களின் கைப்பாவைதான் அண்ணா ஹசாரேயும் எந்பதையுமமபலப்படுத்தி உள்ளது. யப்பா, இத்தனை அம்பலமா?.