Thursday, February 2, 2012

பிரான்சிட்ட வாங்கினா, இங்கிலாந்து கோபப்படுத்து?

மன்மோகன்சிங் சமீப காலமாக நடத்தும் அரசாங்கத்தை பல அந்நிய நாடுகளின் கார்பொரேட் சந்தைதளமாக காணவேண்டும். அவர் அணு உலைகளை வாங்கவும், அதற்கான எரிபொருளான யுரேனியத்தை வாங்கவும் அமெரிக்காவுடன் முதலில் ஒப்பந்தம் போட்டார்.அதற்கு முன்பே இந்திய அரசு அமெரிக்காவிடம் அந்த காலத்திலேயே தாராபூர் அணு உலை உற்பத்திக்கு யுரேனியம் வாங்கி வந்தது. இந்திரா-வாஜ்பாய் கைங்கரியத்தினால் "அணு குண்டு" சோதனை நடத்தி போக்ரான்களை உருவாக்கி அமெரிக்காவிடமும், மற்ற ஐரோப்பிய நாடுகளிடமும் கேட்ட பெயர் வாங்கினார்கள்.அதனாலேயே அய்.அ.எ.ஏ. என்ற அணைத்து நாட்டு அணு சக்தி கழகத்தின் மூலம் உலக அளவில் அணு குண்டு தயாரிக்கும் இந்தியாவிற்கு, அணு குண்டு சோதனையை தடை செய்யும் உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு, நான் ப்ராளிபெரசன் ஒப்பந்தம், சீ.டி.பி.டி. ஒப்பந்தம் ஆகியவற்றை கையெழுத்திட மறுக்கும் இந்தியாவிற்கு அணு உலைக்கான எரிசக்தி கிடையாது என்று தடை செய்து வந்தன. அது வெள்ளை ஜார்ஜ் புஷ் வசம் பேசி, அமெரிக்காவுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தம் போட்டார் மண்ணு மோகன்.அமெரிக்காவை துணைக்கு அழைத்துக்கொண்டு, அய்.ஏ.இ.ஏ.என்ற அந்த அகழகத்தின் நற்பெயரை பெற்று அவர்கள் மூலம் உலகம் முழுதும் உள்ள குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள அந்த அணு சக்தி விநியோக நாடுகளிடம் யுரேனியம் பெற ஒப்பந்தம் போட்டார்.

அதன்பிறகு அவர்கள் சொன்னபடி,அணு உலை விபத்து இழப்பீடு சட்டம் கொண்டு வந்தார். இங்குள்ள ஊடக அமபலப்படுதளால், அந்த சட்டத்தில் சில வரிகளை சேர்த்து அமெரிக்க கார்போரேட்களின் பங்கை மறைக்க முயன்றும் முடியவில்லை. அதை ஈடுகட்ட ஒரு "விதிகளை" கொண்டுவந்து இந்தோனேசியா சென்று பாலியில் கருப்பு புஷ் ஒபமாவை சந்தித்து அமெரிக்க கார்போறேட்களை சமாதனப்படுத்த முயன்றார்.அதுவும் முடியவில்லை. இந்தியா திரும்பிய பின், அந்த விதிகளை இணைப்பதை இங்கு உள்ள வரத்து அமைச்சரவையே ஒப்புக்கொள்ளவில்லை. இது மன்மோகனுக்கும், சோனியாவிற்கும் உள்ள முரண்பாடு. இந்திய அணு விஞ்ஞானிகளும் மன்மோகனை எதிர்த்து அமெரிக்க சார்பை மறுக்கிறார்கள்.அதனால் வு வழியில்லாமல் "அணு குண்டு" தயாரிக்கும் ஒரே நோக்கத்தில், அடுத்து நான் ப்ராளிபரேசன் ஒப்பந்தத்தை வற்புறுத்தாத "ஆஸ்ட்ரேலியா,ரசியா" போன்ற நாடுகளுடன் அணு ஒப்பந்தம் செய்து எபப்டியாவது யுரேனியம் பெற்று தொடங்கி விட்டால் அமெரிக்கா தானாக வரும் என்ற எதிர்பார்ப்பில் செயல்படுகிறார். அதில்தான் அவருக்கு கூடங்குளம் முக்கியத்துவமாகிறது. என் என்றால் அது ரஷியா சார்பு.அடுத்து பிரான்ஸ் நாட்டையும் இதேபோல சார்கிறார் மன்மோகன். அவர்களிடம் "ஜைதாபூர்" அணு உலைகளை வாங்க ஒப்பந்தம் செய்கிறார்.

அந்த பிரான்ஸ் அப்படியானால் "விமானபடைக்கும்" எங்கள் விமானங்களை வாங்கு என்கிறது. சரி என்றார் மன்மோகன். அதுதான் பிரான்ஸ் நாட்டின் "டசால்ட் ரபேல் "என்ற ரக விமானங்களை வாங்கி குவிக்க முடிவு செய்தது. அதை பிரான்ஸ் அதிபர் சர்கொசிஸ் வரவேற்கிறார். ஆனால் இப்போது இங்கிலாந்து அதிபர் அதாவது பிரதமர் டேவிட் கேமேரான் பயங்கரமாக எதிர்கிறார். இங்கிலாந்து நாடு உங்கள் இந்தியாவிற்கு "பல லட்சம் பவுண்டுகளை" நிதி உதவியாக கொடுத்தோமே? என்று அவர் வினவுகிறார். இங்கிலாந்து நாட்டு "டைபூன்" என்ற ரக விமானத்தை வாங்கு என்று அவர் கூறுகிறார். அதை அவர் அவர்கள் நாட்டு :"ஹவுஸ் ஆப் காமன்ஸ்" சபையிலேயே சொல்லிவிட்டார். அவரது "கண்செவடிவ்" கட்சி இந்தியாவை கடிக்கிறது. "தொழிலாளர் கட்சியும்" அதுபற்றி பேசுகிறது. பிரான்ஸ் நாடு இங்கிலாந்து அளவுக்கு உதவி நிதி கொடுத்தார்களா? என்று அவர்கள் வினவுகிறார்கள். இன்னமும் பிரான்ஸ் நாட்டு "டசால்ட் ரபேல்" உடன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று இங்கிலாந்தில் சமாதனம் பேசுகிறார்கள். அதேசமயம் தங்கள் இங்கிலாந்து நாட்டு "டைபூன்" ரக விமானத்தையும் இன்னமும் மறுக்கவில்லை எனவும் கூறுகிறார்கள். இப்படியாக உலக சந்தையில் "சந்தை மன்னன்" மன்மோகன் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். ஆகவே நேநேகள் யாரும் வார ஏதோ இந்தியாவின் நன்மைக்காக பல வெளிநாடுகளுடன் வணிக ஒப்பந்தம் பெசுகயார் என தவறாக அவரது "பொருளாதார் திட்டங்களை" மதிப்பீடு செய்யவேண்டாம். அவர் உலக சந்தையில் எந்த வல்லரசுக்கு அடிமையாக இந்தியாவை ஆக்கலாம் எனு கணக்கு போடுவதில் ஒரு சிறிய "பிணக்கு". அவ்வளவுதான்.

இரண்டு அலைவரிசை உரிமம் ரத்து போதுமா?

உச்சநீதிமன்றம் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. நமது ஆ.ராஜா உள்ளே போய் ஒரு வருடம் ஆன பிறகு அனைத்து இரண்டு அலைவரிசை உரிமங்களையும் அதாவது நூற்று இருபத்து இரண்டு உரிமங்களையும் ரத்து செய்யவும், டாடா, ஸ்வான், போறோருக்கு ஐந்து கொடு அபராதமும் மற்றவர்களுக்கு ஐம்பது லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கொடுத்துள்ளது. இதில் ராஜா கால டாடா குழு வகையாறக்கள் சிக்கி கொண்டனர். தயாநிதி காலத்தில் உரிமம் வழங்கப்பட்ட ரிலையன்ஸ் குழ்மங்கள் தப்பிததுகொள்ளுமா? என்று கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. சரி. அந்த ரிலையன்ஸ் கும்பலுக்கு எந்த அபராதமும் கிடையாதா? என்று கேட்டாலும் நம்மிடம் பதில் இல்லை. நீதியரசர்கள் அனைத்தும் அறிந்தவர்கள், ஆகவே அவர்களை எதிர்த்து கேள்வி கேட்ககூடாது என்று வேண்டுமானால் நாம் கூறலாம்.


அடுத்து அதே நீதியரசர்கள் இன்னொரு முடிவை அறிவித்துள்ளனர். அதாவது இந்த இரண்டாம் தலைமுறை அலைவரிசை உரிமங்கள் இனி "ஏலம்" மூலம் கொடுக்க பாட வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி ஏல முறையில் உரிமங்களை கொடுக்கும்போது, ஏற்கனவே நடந்த பாணியை மீண்டும் பின்பற்றாமல் இருக்க எந்த ஒரு தஹ்டுப்பும் கூறப்படவில்லை. ஆதாவது வெளிநாட்டு கார்பொறேட்களுக்கு உரிமம் கொடுக்க கூடாது என்று கூறப்படவில்லை. உரிமம் பெற்றவர்கள் அந்நியாய வில்லிக்கு வெளிநாட்டு கார்போறேட்களுக்கு விற்பதை "தணிக்கை" செய்யவோ, தடுக்கவோ, வடிகட்டவோ எந்த ஒரு உபாயத்தையும் இந்த நீதிமன்றம் கோரவில்லை. அதுபற்றி கூறவும் இல்லை.

அப்படியானால் அண்டை நாடுகளை சேர்ந்த "முன்னாள் மாக்கள் விடுதலை படையின் தலைவரின் தனியார் நிறுவனமோ", அந்நிய நாட்டின் உளவு நிறுவன தலைவர்களின் தனியார் நிறுவனமோ" இந்த உரிமத்தை ஏலம் எடுத்த சக்திகளிடமிருந்து பெறுவது தவிர்க்க பாட வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை. அதாவது இந்த அலைவரிசை ஊழலை பயன்படுத்தி எந்த அந்நிய நாடும் இந்தியாவின் ரகசியங்கள் மீது :உளவு: வேலை பார்க்க்க வாய்ப்பு கொடுக்கப்படுவதை தடுக்க கூட அந்த நீதியரசர்களின் சிந்தனை செல்ல வில்லை. எபப்டியோ சிதம்பரம் கதைக்கு இரண்டு வாரத்திற்குள் முடிவு செய்து சீ.பி.அய். நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கலாம் என்று கோரியுள்ளது. அதனால் "மானம்" பெரிது என்று நினைத்து சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்வார் என்று நாம் எதிர்பார்க்க வில்லை. அவர் நான்காம் நாள் நெல்லையில் நடக்க உள்ள அணு உலை ஆதரவு பொதுக்கூட்டத்திற்கு எப்படிதொண்டர்களை ஊக்குவித்து வன்முறை மூலம் ஜெயலலிதா ஆட்சிக்கு தொல்லை கொடுக்கலாம் என்று சிந்தித்து கொண்டிருப்பார்.

Wednesday, February 1, 2012

ராஜபக்சே பல்டி.கோதபாயே கெஞ்சல்

இன்று காலை சென்னையிலிருந்து வெளிவரும் ராஜபக்சே ஆதரவு ஆங்கில ஏடு, இதுவரை ராஜபகசெவிற்கும்,இந்திய வெளிவிவகார துறைக்கும் ஆதரவான செய்திகளைமட்டுமே அதாவது தமிழர் விரோத செய்திகளை மாத்திரமே வெளியிட்டுவந்தத ஏடு, ஒரு "மாற்று" செய்தியை வெளியிட்டுள்ளது. அதுதான் தி ஹிந்து ஆங்கில நாளேடு.சிலநாட்கள் முன்னாள் எஸ்.எம். கிருஷ்ணா என்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்று வந்தார். அவரது பயணம் பற்றி எல்லா ஏடுகளும் ஒரே செய்தியை வெளியிட்டன. அதுவும் எஸ்.எம்.கிருஷ்ணா கொடுத்த செய்தி.அதில் ராஜபக்சே தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கொடுக்க தயாராக இருக்கிறார் என்று வெளியிட்டன. அதை ராஜபஜ்செவே கிருஷ்ணாவிடம் கூறியதாக கிருஷ்ணா ஊடகங்களுக்கு தெரிவித்த செய்தி அது.

அந்த செய்திய வழக்கம் போல அந்த ஆங்கில ஏடான தி ஹிந்து நாளேடும் பெரும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டிருந்தது. அதில் பதின் மூன்றாவது சட்ட திருத்தத்தை நிறைவேற்ற தயார் என்று ராஜபக்சே கூறியதாக கிருஷ்ணா கூறியிருந்தார். அதுகண்டு இந்திய ஊடகங்கள் கும்மாளம் போட்டன. இங்குள்ள தமிழீழ அதரவு தராத சக்திகளும் எப்படியோ தமிழர் பிரச்சனை தனி தமிழீழம் கொடுக்காமல் முடிவடைய போகின்றது என்று கொக்கரித்தனர். நாம் அமட்டும் அது ஒரு போய் என்று கூறி பார்த்தோம். ஆனாலும் காங்கிரஸ் காரர்களுக்கு அது தென் போல இனித்தது. அது தென் தடவிய தோட்டா என்பதை நாம் கூறி பார்த்ததோம். அதன்பின் மறுநாளே தமிழக மீனவர்களை அடித்துபிடிப்பதை எடுத்து சொன்னோம். ஆனாலும் மீனவர்கள் மறுபடி விடுதலை ஆனதை காட்டி அவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.

இப்போது எல்லாமே அமபலத்திற்கு வந்துவிட்டது. நேற்று ராஜபக்சே சுய ரூபத்தை காட்டி விட்டார். இன்று காலை அதே தி ஹிந்து நாளேடு, ராஜபக்சே பல்டி என்று செய்தியை தலைப்பிட்டு போட்டுள்ளது. இப்படி ராஜபக்சேவை அந்த ஏடு அமபலப்படுத்தியது சமீபத்தில் நன்கு ஆண்டுகளாக நடக்க வில்லை. என் இந்த தடுமாற்றம்? அந்த செய்தியில் ராஜபக்சே பதின் மூன்றாம் சட்ட திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என்கிறார். நாடாளுமன்ற நிலைக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியதை போட்டுவிட்டார்கள். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தந்து முன்வைப்பை யார், யார் வைக்க போகிறார்கள் என்று கூறவில்லை என்று ராஜபக்சே அதில் கூறியுள்ளார். அதே ராதாகிருஷ்ணன் இதை எழுதியுள்ளார். அப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன அதிகார பகிர்வை முன்வைக்கிறார்களோ, தாய் நாடாளுமன்ற நிலை குழு முடிவு செய்யும் என்கிறார் இப்போது ராஜபக்சே.


இலங்கை நாடாளுமன்றத்தில் எத்தனையோ கருத்துகள் இந்த விவகாரத்தில் உள்ளன என்றும், அதனால் நாடளுமன்ற நிலை குழு முடிவு செய்யும் என் இப்ப்போது தெரிவிக்கிறார்.இது பற்றி அந்த ஏட்டின் நிருபர் ராஜபக்சேவிடம் கேள்வி கேட்கிறார். அப்படியானால் நீங்கள் பதின் மூன்றாவது சட்ட திருத்தத்தை அமுல்படுத்தி, அதைவிட அதிகமாக அதிகார பகிர்வு கொடுக்க போகிறீர்கள் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியது பொய்யா? என்று ராஜபக்சேவிடம் கேட்கிறார்கள். அதற்கு நானா எப்போதும் அதற்காக இருக்கிறேன், ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் பல கருத்துகள் இருக்கின்றன என்று கூறி நாடாளுமன்ற நிலை குழு முடிவு செய்யும் என்கிறார் அவர். அதை எழுதும்போது, 1987 இல் ராஜிவ்காந்தி- ஜெயவர்தனே ஒப்பந்தம் அடிப்படையில் இந்த பதின் மூன்றாம் சட்ட திருத்தும் இருக்கிறது என்று எழுதுகிறார்கள். அதில் "வடக்கு-கிழக்கு" இணைப்பு பற்றி எழுதப்பட்டுள்ளது என்று இப்போது அந்த ஏடு குறிப்பிடுகிறது.அந்த சொல்தான் இன்றைய ராஜபக்செபல்டிக்கு பிறகு இந்திய அரசின் கருத்து என்பதாக நாம் கொள்ளலாம்.

அதாவது நாம் ஏற்கனவே கூறியது போல இந்த மாதம் பிப்ரவரி கடைசியில் அய்.நா. ஆடுகப்பு கூட்டத்தில் ராஜபக்சேவின் போர்குற்றம் பற்றிய விசாரணை வரும்போது, இந்திய எந்த பக்கம் நிற்கும் என்ற கேள்வியை வைத்து, கிருஷ்ணாவின் நிர்பந்தத்திற்கு ராஜபக்சே பணிந்து இவ்வாறு பதின்மூன்றாம் சட்ட திருத்தத்தை விட கூடுதலான் அதிகாரம் தமிழருக்கு என்று "கதை" கூறினாரா? எனத்தான் நாம் நினைத்தோம்.இப்போது அதுகூட இல்லை என்று ஆகிவிட்டது. இதனால் கோபம்வந்த இந்திய அரசு பழைய ஒப்பந்தம் பற்றி ஊடகம் மூலம் பேசுகிறது. அதுமட்டுமின்றி, வேறொரு செய்தியும் வெளியாகி உள்ளது. ராஜபக்சே அய்.நா.முன்னால் "இறுதி யுத்தம் பற்றிய அறிககையை" வைக்க முடியாது என்று கொர்ரியுள்ளார் என்பதும் வெளியாகி உள்ளது. இதுவும் சேர்த்து இந்திய தஹ்ரப்பை கோபம் கொள்ள வைக்கும். இந்த கோபம்தான் அந்த ஏட்டின் மூலம் சிங்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


சிங்களம் புரிந்து கொண்டு செயல்பட் தொடங்கி விட்டது. இப்போது இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயே ராஜபக்சே ஒரு குழுவுடன் டில்லி நோக்கி பறந்து வந்துள்ளார். அதாவது கோபம் கொண்ட இந்திய அரசை கேஞ்சியாவ்து சமாதனப்படுத்த விரைந்து வந்துள்ளார். டில்லி இப்போது என்ன செய்ய போகிறது?

Monday, January 30, 2012

உள்துறை என்பது உள்குத்து அமைச்சகமா?

உள்துறை என்பது ஆளும் மத்திய அரசியல் கட்சிகளால மாநில கட்சிகளை எதிர்த்து, சட்ட-ஒழுங்கு பிரச்சனை தொடங்கி, எல்லா விவகாரங்களிலும் "தகராறு" செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு துறை என்பதே இந்திய அரசின் செயல்பாட்டில் நாம் காணும் உண்மை. அதிலும் சிதம்பரம் என்பவர் அந்த துறைக்கு அமைச்சராக வந்தபின் அதுபோன்ற வேளைகளில் மிகவும் விவேகமாக காய் நகர்த்துபவர் எனபதும் நாட்டிற்கு தெரிந்த உண்மை. அதுவும் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மட்டும்தான் டில்லிக்கே சென்று அந்த சிர்தம்பரத்தின் முக மூடியை கிழித்து விட்டார் எனபதும், அதனால் அந்த சிதம்பரம் "பழி" வாங்கும் சிந்தனையில் மட்டுமே இருக்கிறார் என்பது கூட ஊருக்கு தெரிந்த செய்திதான்.

இப்போது அணு உலை எதிர்ப்பு தமிழுகத்தில் கூடுதலாக புறப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அதை செயல்படுத்த போதிய விவரம் இல்ல நிலையில் தமிழகத்தில் அது இருபத்தைந்து ஆண்டு வரலாற்றுடன் செயல்படுகிறது. கூடங்குளம் பேசப்படும்போது, கல்பாக்கம் அணு உலை ஆதரவு சக்திகளுக்கு ஒரு சான்றாக கட்டப்படுவதால், கல்பாக்கத்திலும் கிளம்பும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் மத்திய உள்துறையால் தாங்கி கொள்ள முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. ஆகவே அந்த அமைச்சர் தனது ஆதரவாளரான லதா பிரேமகுமார் என்ற எஸ்.சீ. எஸ்.டி. ஆணையத்தின் அகில இந்திய தலைவர் மூலம் அடுத்த அம்பை எய்துள்ளார். அதாவது கல்பாக்கம் அணு மின் நிலையம் நிர்வாகம் அந்த இடத்தில் உள்ள காவல்துறையை தன்வசம் ஆதரவாக வைத்திருந்தது. அதனால் கல்பாக்கம் பகுதி அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சாதாரன் பட்டிநிபோரட்டதிற்கு கூட அனுமதி தராமல் மறுத்து வந்தது. போராட்டகாரர்கள் நீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மூலமே அனுமதி பெற்று இன்று சனவரி முப்பத்தி ஒன்றாம் நாள் பட்டினி போராட்டம் வைத்திருந்தனர்.


திடீரென்று நேற்று ஒரு சவரிமுத்து தன்னை எஸ்.சீ.எஸ்.டி. கூட்டமைப்பபின் தலைவர் என்று கூறிக்கொண்டு உய்ரநீதிமன்ரத்தில் ஒரு புகாரை போட்டார். அதாவது அவர் ஒரு வாரம் முன்பே காவல்துறை அதிகாரிக்கு ஒரு மனு கொடுத்து அணு உலை எத்ரிப்புபட்டினி போருக்கு அனுமதி வழங்க கூடாதென கேட்டுக் கொண்டதாகவும் அதை மதிக்காமல் காவல்துறை அனுமதி கொடுத்ததாகவும் புகார் எழுப்பினார். அதை கவனித்த இரண்டாம் நிலை நீதியராசர் எலிபீ தர்மாராவ், கிருபாகரனுடன் சேர்ந்து அந்த பட்டினி ஒருக்கு "தடை" கொடுத்து விட்டார். இது ஏற்கனவே தலைமை நீதியரசர் கொடுத்த அனுமதிக்கு எதிரானது. இவாறு நீதிமன்றத்தை ஏமாற்றி சிதம்பரம் வகையறாக்கள் சனநாயக உரிமைகளை கூட தடை செய்கின்றனர்.

அதேபோல வன்முறையற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்ப்பு போராட்டத்தை நடத்தும் போராட்டக்காரர்கள் இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அப்போது சிதம்பரம் தூண்டி விட்ட காங்கிரஸ்காரர்களும், இந்தியாவை அவர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் பாஜக வினரும், இந்துமுன்னணியும் சேர்ந்த்து கொண்டு .இந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மத்திய அமைச்சரின் எதிர்காலத்திற்கு நான்கு மாதம் கெடு வைக்கப்பட்டால் அந்த அமைச்சர் தனது உள்துறையை, உள்குத்து துறையாக நடத்தி வருவது இதன்மூலம் கண்கூடு.

தலித் பட்டியலில் கிருத்துவர்களையும் சேர்த்த அரசு

இந்திய துணை கண்டத்தில் இருக்கும் மக்களை நமது அரசியல் சட்டம் வேடிக்கையாக பிரிக்கிறது. நீங்கள் முஸ்லிம் அல்லாவிட்டால், நீங்கள் பார்சி அல்லாவிட்டால், நீங்கள் கிருத்துவர் அல்லாவிட்டால் நீங்கள் ஒரு இந்து. இது எப்படி இருக்கு? யோவ். நான் நாத்திகன் அய்யா. என்னை போய் இந்து என்கிறாயே? இப்படி யாரும் கேட்க இடம் கொடுக்கவில்லை இந்த அரசியல் சட்டம். அந்த இந்துகளில் அவர்கள் "தீண்டத்தகாதவர்" என்று முத்ஹ்டிரை குத்தி வைத்திருக்கும் தலித்துகளை கரை சேர்க்க அபப்டி ஒரு இட ஒதுக்கீடு கொடுத்துள்ளார்களாம். சரி. உங்கள் நாட்டின் பார்ப்பனீய பண்பாடு அந்த தலித்துகளை எந்த மதத்திற்கு மாறினாலும் நடைமுறையில் ஒரே மாதிரிதானே கையாளுகிறது? கிருத்துவர்களாக மாறிவிட்ட தலித்துகளை நீங்கள் விட்டு விடுகிறீர்களா?

பஞ்சமிநீல மீட்பு போராட்டத்தில் உங்கள் துப்பாக்கிகள் ஏழுமலையை மட்டுமா பதம் பார்த்தது? ஜான் தாமசையும் சேர்த்து தானே பலி வாங்கியது? கொடியங்குளத்தில் உங்கள் கரங்கள் இந்து தேவேந்திரா வீடுகளை மட்டுமா உடைத்து? கிருத்துவ தேவேன்றாவையும் சேர்த்து நொறுக்க வில்லையா? மான்ஜோளையிலே உங்கள் காவல்துறை இந்து தலித்துகளுடன், இருத்துவர்களையும் சேர்த்து கொள்ள வில்லையா? அதனால் கிருத்துவ தலித்துகளுக்கும் தலித் பட்டியலில் இடம் கொடு. இதுதான் ஈனைத்து கிருத்துவ தேவாலயங்களும் எழுப்பும் முழக்கம்? அதற்கு இந்த மத்திய அரசு இதுவரை செவி சாய்த்ததா? மத்திய அரசின் கொள்கை முடிவை எடுக்காமல் அந்த தலித் பட்டியலில் கிருத்துவ தலித்துகளை சேர்க்க முடியுமா? அதை இந்த்ஹ்டுதுவா ஏற்றுக்கொள்ளுமா? அத்தகைய கோரிக்கைகளை நாமும் இந்த முறை கிருஸ்துமஸ் கொண்டாடிய முதல்வரிடம் சந்தித்த இரண்டு தலித் பேராயர்களும் வைக்க வில்லையே என்று வருந்தினோம்..

அதற்கு உடனடியாக பதில் கிடைத்து. சென்ற மாதமே அதாவது சென்ற ஆண்டின் டிசம்பரிலேயே ஒரு விளம்பரம் வந்தது.அதில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி, மற்றும் கிருத்துவ ஆதிதிராவிட மாணவ மாணவிகள் "ஊக்கத்தொகைக்கு" டிசம்பர் கடைசிக்குள் வின்னப்புயக்க்கவும் என்ற விளம்பரம் ஒன்று தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட நலத் துறையிலிருந்து கொடுக்கப்பட்டது. இப்போது தலித்துகளுக்கான "சிறப்பு சலுகைகளை" அறிவித்திருக்கும் தமிழக அரசு, சென்ற வாரம் அறிவிக்கும் போதே இதே போல "மதம் மாறிய ஆதிதிராவிடருக்கும்" என்று சேர்த்து வெளியிட்டுள்ளது. அதேபோளைன்றைய ஆளுநர் உரையிலும் அதையே குறிப்பிட்டுள்ளது. இதுதான் தலித் கிருத்துவர்களையும் தலித் பட்டியலில் சேர்த்த செயல்.

இந்துதுவா செல்வாக்கு கொண்ட இந்தியத் அரசில் மோதி பயன் இல்லை என்ற சூழலில், தமிழ்நாடு அரசு தனது அவ்ரம்பிற்குள் வருகின்ற "நிதி தரும்" இடங்களிலும், சிறப்பு திட்ட" இடங்களிலும் இப்படி ஒரு தெளிவான வரையறையை சேர்த்திருப்பது அமைதியான ஆனாலதேசமயம் மக்களுக்கு பயன்படும் வகையில் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஒரு விடையை கண்டுபிடித்ஹ்டுள்ளது என்றே படுகிறது.

விஞ்ஞானிகள் குப்பைக்கு சமமா?

நாம் அறிவியலாளர்களை மதிக்கிறோம். அவர்களை மரியாதை செய்கிறோம். அறிவியலாளர்கள் சொகுசு வாழ்கை வாழ்வதை "தேவை" என்று கருதுகிறோம். அவர்கள் குளிர் சாதன அறைகளில் இருப்பதையோ, குளிர் சாதன வீடுகளில் வசிப்பதையோ, குளிர் சாதன வாகனங்களில் செல்வதையோ, நாம் பெருமையாக கருதுகிறோம்.அது இந்த நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவி புரியும் என்று மனதார நம்புகிறோம். அவர்களது உலகம் தனி உலகம் என்பதை கூட நம்புகிறோம். ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் ஏதோ ஒரு வகையில் சாதாரண மக்களால் சாதிக்க முடியாததை சாதிக்கும்திரமைசாளிகள் என்று நாம் க்ருதுகிறோம்.அவர்கள் சோதனை சாலைகளில் நாம் சாதரணமாக சாதிக்க முடியாததை சாதித்து "நிரூபித்தவர்கள்" என்பதால் போற்றுகிறோம். அதில்தான் நமது அறிவியல் விருப்பம் ஈடேறுகிறது.

அப்படிப்பட்ட அறிவியலாளர்களில் அதாவது விஞ்ஞானிகளில் ஒருவகைதான் விண்வெளி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளும். ஆகவே அவர்களையும் நாம் கேள்விக்கே இடம் இல்லாமல் ஆடஹ்ரிக்கிறோம்.போற்றுகிறோம்.அவர்களுக்கு தனி சிறப்பு தகுதி இருப்பதனால், அவர்களை சிறப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் நாம் கொடுக்கும் சிறப்பு தகுதிகளை "களவு" செய்வதற்கு பயன்படுத்தினால் என்ன செய்ய? இப்படித்தான் விண்வெளி ஆராய்ச்சி அறிவியலாளர் மாதவன் நாயர் வகையறாக்களின் செயலும் பார்க்கப்படுகிறது. அதனால்தான் அரசு அவர்களுக்கு இனி அரசு பதிவகள் தரவேண்டாம் என்றது.


ஆனால் இந்த அரசின் முடிவு, இந்திய தலைமை அமைச்சரின் அறிவியல் ஆலோசனை குழு தலைவராக இருக்கும் பெரிய அறிவியலாளர் சீ.என்.ஆர். ராவ் அகார்களுக்கு தவறாக படுகிறதே? அவர் இந்த முடிவை "ஜன்னல் வ்ழியே எறியப்படும் குப்பையை" போல எரிந்து விட்டார்களே என்று கூறியுள்ளார். பயோர்கு எப்படி எறிவார்கள்? நேநேகலரசின் நம்பிக்கையை உங்கள்மீது அரசு வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துவிட்டீர்களே? நீங்கள் இந்திய நாட்டு ரகசியங்களை "காசாக" முனைத்து விட்டீர்களே? நீங்கள் நாட்டு மக்களுக்கே தெரியாத ரகசிய விசயங்களை அந்நிய நாட்டிற்கு விற்க துணிந்து விட்டீர்களே? நீங்கள் நாட்டுக்கு துரோகம் இழைக்க துணிந்த பின் உங்களை என்ன செய்வார்கள்?

சீ.என்.ஆர் ராவை தொடர்ந்து அணு சக்தி விஞ்ஞானி பிரசாத் இதேபோலேரிந்து விழுந்துள்ளார். அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.சினிவாசன் இதுபற்றி வாய் திறக்க முடியாது என்கிறார்.அதாவது அணுசக்தி விஞ்ஞானிகளும் இதேபோல அரசு கொடுத்துள்ள அனைத்து வசதிகள்தவிர, நாட்டு மக்களுக்கு தெரியாமல், நாட்டின் நாடாளுமன்றத்திற்கும் தெரியாமல் மத்திய மாயச்சரவைக்கும் தெரியாமல், பிரதமரின் கீழ் மட்டுமே அனைத்து திட்டங்களை தீட்டுவதும்,அனைத்து கணக்குகளையும் ரகசியமாக வைத்திருப்பதும் செய்பவர்கள். அதனால்தான் அந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களை கேள்வி கேட்கும் பொது, அணு சக்தி விஞ்ஞானிகளுக்கு கோபம் வருகிறது. இதை எப்படி "நாட்டுப் பற்றுடன்" பார்ப்பது?

Saturday, January 28, 2012

கார்பொரேட்களுக்குள் மோதல் கட்சிகளின் மூலம் நடக்கிறதா?

திமுக எம்.பி. ஆதிசங்கர் என்றாவது வாயை திறந்து ஏதாவது பேசியிருக்கிறாரா? அபப்டியே பேசினாலும் யாரையாவது எதிர்த்து பேசிய வரலாறு படைத்திருக்கிறாரா? அப்படியே படித்தாலும் இந்தியாவின் பெரிய கார்பொரேட் நிறுவனத்தை குறை கூறி பேச தைரியம் கொண்டவரா? அப்படியே தைரியம் வந்தாலும், ஆளும் கூட்டணி தலைமை எதிர்க்கும் கேள்வியை கேட்டிருக்கிறாரா? அப்படியே கேட்டாலும் தான் அங்கம் வகிக்கும் "நாடாளுமன்ற கணக்கு குழு" கூட்டத்தில் கேட்கும் அளவு அவருக்கு வீரம் வந்தது உண்டா? இப்படி கேள்விகளை நாம் கேட்கும் அளவுக்கு ஒரு நிகழ்வு நடந்து விட்டது.

ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா-கோதாவரி படுகையில் அதிகமாக "இயற்கை வாயு" கிடைகிறது என்று முதலில் கண்டுபிடித்தது, நமது நாட்டின் பெரும் பொதுதுறையான"ஒ.என்.ஜி.சீ".என்ற "எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்". அந்த கண்டுபிடிப்பை ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கோ, அல்லது உள்நாட்டு ஏகபோக நிறுவனத்திற்கோ, விற்று விடுவது இந்த நாட்டின் கேவலமான அரசியல் ஓழக்கம். அவ்வாறு இந்த கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் படுகைகளில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை எடுப்பதற்கான குத்தகையை நமது அரசாங்கம் "ரிலையன்ஸ்" நிறுவனத்திற்கு கொடுத்து விட்டது. அதுவே பெரும் சர்ச்சைக்கு இப்போது உள்ளாகியுள்ளது. மத்திய கணக்கு பார்க்கும் குழு சமீபத்தில் அந்த ஒப்பந்தத்தால் நாட்டிற்கு எந்த அளவுக்கு நட்டம் என்பதை கணக்கு போட்டு, அமபலப்படுத்தியது. அந்த அளவுக்கு இந்த கிருஷ்ண-கோதாவரி படுகை எரிவாயு ஒப்பந்தம் அதிகமான குற்றச்சாட்டுகளை தாங்கி வரும் வேளையில், அந்த விவகாரம் நாடாளுமன்ற கணக்கு குழு முன்னும் வந்துள்ளது.

ஏற்கனவே முரளி மனோகர் ஜோஷி இது பற்றி கடும் விமர்சனத்தை காங்கிரஸ் ஆட்சி மீது கிளப்பியுள்ளார். அந்த விவகாரத்தில், இப்போது திமுக வின் ஆதிசங்கரும்,சரத் பவரின் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் அனவரும் சேர்ந்து ரிலையன்ஸ் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.ஏற்கனவே இரண்டாவது தலைமுறை அலைவரிசை ஊழலில் ரிலையன்ஸ் செயல்பாட்டிற்கு எதிராக டாடா நின்றது அம்பலமானது. அப்போது திமுக தலைமை. அதன் பிரதிநிதிகள் ஆ.ராஜா, சரத்குமார் ரெட்டி, கனிமொழி ஆகியோர் டாடா ஆதரவு என்றும் எதிர் தரப்பில் இருந்த தயாநிதி மாறன் ரிலையன்ஸ் ஆதரவு என்றும் அமபலமானது. அந்த அவ்ழக்கில் டாடா ஆதரவு சக்திகளை ரிலையன்ஸ் ஆதரவு சக்திகள் உள்ளே தள்ள ஏற்பாடு செய்ததும் அனைவரும் அறிந்ததே.அதேநேரம் டாடா ஆதரவு என்பது திமுக தலைமையுடன் மட்டுமே நிற்காமல், சரத் பவர் ஆதரவு பெற்ற "ஸ்வான்" நிறுவன பால்வா வும் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்டார்.


இப்போது கே.ஜி. படுகை எரிவாயு ஒப்பந்தத்தில் மாட்டிக் கொண்டிருப்பது ரிலையன்ஸ் நிறுவனம். ஆகவே அய்.மு.கூ. ஆட்சியின் தலைமையான காங்கிரசால் திமுக வும், சரத் பவர் கட்சியும் பாதிக்கப்பட்டதற்கு பதிலாக இவர்களும் மோதல் நடத்த வேண்டும். ரிலையன்ஸ், தயாநிதி மாறன், சோனியா, சீ.பி.அய். ஆகியோர் ஒருபுறமும், டாடா, திமுக, சரத்பவார், ஆகியோர் மறுபுறமும் என்று இந்தியாவிற்குள் நடக்கும் இந்த கார்போரெட் சண்டை இப்போது புது வடிவில் வெளிப்படுகிறது.அதுதான் நாடாளுமன்ற கணக்கு குழுவில் திமுகவும், தேசியவாத காங்கிரசும் என்றாக எழுப்பும் குரல். இப்போது மம்தா, கருணாநிதி, சரத் பவர் ஆகிய மூவரும் சேர்ந்து செயல்பட முயல்வதை நாம் காண முடிகிறது. இவர்கள் மூவரும் மத்திய ஆட்சிக்கு ஒரு முற்று புள்ளியை வைக்க விழைகின்றனர்.அதன் முதல் வெளிப்பாடு இது.