Saturday, February 11, 2012

ஐரோப்பிய யூனியனுடன் ஒரு கையும், ஈரானுடன் இன்னொரு கையும்?

மன்மோகன்சிங் ஒரு சிறந்த சர்கஸ் வித்தைகாரர்தான். ஒரு கையில் சாட்டையும் , இன்னொரு கையில் ஆட்டையும் சிங்கத்தின் வாய் அருகே காட்டும் ஒரு சர்கஸ் வீரன் போல நடந்து கொள்கிறாரே? ஐரோப்பிய யூனியனின் ஆணைய தலைவரும், கவுன்சில் தலைவரும் டில்லி வந்துள்ளபோது, நேற்று அவர்களுடன் கை குலுக்குகிறார். சமீபத்தில் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் சேர்ந்து ஈரானுக்கு எதிராக "பொருளாதார புறக்கணிப்பை" அறிவித்த போது, அதை இந்தியா ஏற்கவில்லை. ஈரானுடன் தான் இந்தியா சமையல் எரிவாயு குழாய்களை அமைத்து செயல்படும் என்றபதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. ஐரோப்பிய யூனியன் ராணுவ வழி தீர்வை விரும்பவில்லை என்றும், பொருளாதார தடை மூலம் ஈரானை அதனது அணு சக்தி கொள்கையிலிருந்து இரங்கி வர வைக்கவே விரும்புகிறோம் என்றும் வந்தவர்கள் கூறியும் கூட, மன்மோகன் இந்திய அரசின் கொள்கையாக அத்தகைய ஒரு பொருளாதார தடைக்கு தாங்கள் ஒப்புகொள்ள இயலாது என்றார்

. அதேசமயம் ஈரான் அணு சக்தி விசயத்தில் சிறிது சிக்கலான நிலையை எடுப்பதாகவும், ஆனாலும் இந்தியாவின் முக்கிய எரிசக்தி உதவியாளரும், நண்பனுமான ஈரான் என்றும் கூறினார். இந்தியர்கள் அறுபது லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்கிறார்கள் என்பதையும் மன்மோகன் கூறி, ஆகவே சமாதனம்தான் இந்திய அரசு விரும்புவது என்றார்.அதாவது ஐரோப்பிய யூனியனுடன் இந்திய அரசு ஈரான் விசயதில் மாறுபட்டு நிற்பதை டில்லிகாரர்கள் மறுக்க முடியவில்லை. என்னதான் அமெரிக்க அடிவருடியாக இருப்பதையே மன்மோகன் விரும்பினாலும், ஈரான் மூலம் இந்தியாவிற்கு தேவையான எரிசக்தியை தொடர்ந்து பெற்று வருவதால் இந்த டில்லிகாரர்களால் ஈரானை விட்டு விலகி நிற்க முடியவில்லை. ஆனாலும்கூட, நாம் பழைய நிகழ்வுகளை மறக்கமுடியாது. அதாவது ஈரானுடன் எரிவாயு குழாய்களை போடா இந்திய அரசு முயன்ற போது அதை எதிர்த்த அமெரிக்கா அப்போது மன்மோகன் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் கட்ட ஆட்சியில் நடந்தது. அப்போது நட்வர்சிங் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிவாயு குழாய்களை போடா திட்டமிட்டதர்காக் அமெரிக்காவால் நிற்பந்தப்படுதபட்டு அமைச்சரவையிளிருந்தே தொக்கி எறியப்பட்டார்.அதேவேலையை அடுத்து எண்ணைவள அமைச்சராக வந்த மணிசங்கர் ஐயர் செய்தவுடன் அவரையும் அமேரிக்கா விருப்பத்திற்காக மன்மோகன் மைச்சர்வையிளிருந்தே நீக்கினார். இரண்டாவது ஐ.மு.கூ. ஆட்சியில் மன்மோகனின் இந்த அமெரிக்க சார்பு நிலைப்பாடு, உலக சூழலின் மாற்றத்தில் எடுபடாமல் போய்விட்டது.

அதேபோல சிரியா விஷயம் வந்தது. அதில் அமெரிக்காவின் நிலைபாட்டை இந்திய அரசு ஆதரிக்கிறது என்றார் மன்மோகன். அதாவது சிரியா மேல்றாணுவ தாக்குதலை கட்டவிழ்த்து விட ஆதரிக்கிறது என்று பொருள்.ஐநாவின் பாதுகாப்பு அவையிலேயே இந்தியா அமெரிக்காவின் நிலைபாட்டை ஆதரித்து சிரியா மீது ராணுவ தாகுதல் நடத்த ஆதரவு கொடுத்தாலும் சீனாவும், ரஷியாவும் அதற்கு தடையாக வீடோ அதிகாரத்தை பயன்படுத்தி விட்டனர். ஆனாலும் இந்திய அரசு ஐரோப்பிய தலைவர்களிடம் தாங்கள் சிரியாவிற்கு எதிராக இருப்பதை மறு உறுதயு செய்துவிட்டார்.இவ்வாறு இந்திய அரசு தனது தன்னலம் காரணமாக தான் சில நேரங்களில் அமெரிகைன் நிலைக்கு எதிர் நிலை எடுக்குமே தவிர எப்போதும் அமெரிக்கா பக்கம்தான் என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறது.

Friday, February 10, 2012

சிதம்பர கலைஞர் கூட்டு நடவடிக்கை?

கூடங்குளம் அணு உலையை எப்படியாவது கொண்டுவர பிரதமர் அலுவலகம் ஒரு வேலையை உள்துறை சிதம்பரத்திடம் ஒப்படைத்துள்ளது. அதை செவ்வென செய்ய உள்துறையும் கலைஞரை நம்பி அடி எடுத்து வைத்துள்ளது. திமுக கூடங்குளம் அணு உலையை எதிர்க்காமல் இருந்தா போதும் என்றும், தாங்கள் ஜெ அரசுக்கு நிர்பந்தம் தர திட்டமிடலாம் என்றும் சிதம்பரத்திடம் கைஞர் கூறியுள்ளார் என்பதே தகவல். அதற்கு பிரதி உபகாரமாக புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் ஜெ வின் திட்டத்திற்கு மதிய அரசின் தடையில்லா சான்றிதழை தடுத்து விடுகிறோம் என்றாராம் அந்த உள்துறை. அதையொட்டியே கலைஞரும் தனது கட்சியின் உயர்நிலை குழுவிலும், பொது குழுவிலும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கவும் இல்லை, எதிர்கவும் இல்லை. இவ்வளவு பெரிய கட்சியான திமுக வின் பொது குழுவிற்கு அணு உலை பற்றிய ஒல்கையும இல்லை. கூடங்குளம் பற்றி நிலைபாடும் இல்லை மாறாக தமிழக அரசு விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று இருக்கிறது. இதுதான் திமுக வின் உண்மை நிலையா?

1988 இல் இதே கூடங்குளம் அணு உலை வரபோகிறது என்று அரசு முடிவு செய்த நேரத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பின் அன்றைய தலைவர் ஜி.ஆண்டன் கோம்ஸ் தலைமையில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடந்த போது, முரசொலி ஏட்டின் வார ஏடான "புதைஒயல்" ஏட்டின் அன்றைய ஆசிரியர் ஞானி ஒரு கட்டுரையை கூடங்குளம் அணு உலைக்கு எதிராக எழுதி, அதை படித்த பின் ஞானி முரசொலி மாறனிடம் அது பற்றி பேசி, மாறனும் கலைஞரிடம் எடித்து சொல்லி, அதன் விளைவாகவே அன்றைய கலைஞர் வைகோ விடம் பேசி அவரும் நாடாளுமன்றத்தில் முழங்கியதும அதை அன்றைய கே.பி கந்தசாமியின் தினகரன் ஏடு முதல் பக்கத்தில் அச்சிட்டதும் பசுமையாக நினைவுக்கு வருகிறது. அப்படியானால் எப்படி இப்போது அதே கலைஞரிடமிருந்து இப்படி ஒரு வெளிப்பாடு வருகிறது?

அதுவும் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவது என்பதாக வருகிறது? பிபரவரி ஒன்பதாம் நாள் முரசொலியில் முதல் பக்கத்தில் கலைஞரே எழுதும் கேள்வியும் நானே, பதிலும் நானே பகுதியில் ஒரு செய்தியை எழுதியுள்ளார் கலைஞர். அது கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக மதுரையில் போராடிய காங்கிரஸ் வழக்கறிஞர் பூசை துறையை தமிழக காவல்துறை எப்படி கைது செய்யலாம் என்று கலைஞர் கேட்கிறார். அதை விளக்கும் போது 1986 இல் கூடங்குளம் அணு உலைக்கு அடிக்கல் நாட்டும் போது என் உதயகுமார் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று ப்பூசைதுரையை சாக்கா சொல்லி கலைஞர் கேட்கிறார். அய்யா கலைஞர் அவர்களே, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே எங்களது எதிர்ப்பையும் அதில் உங்களது பங்களிப்பையும் சற்று எண்ணிப்பாருங்கள் அய்யா. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு களிப்னர் அவர்களே நீங்கள் இதை எதிர்க்கும் போதும், தங்கள் வலது கரத்தில் உள்ள ஆசிரியர் வீரமணி அவர்கள் தனது வார ஏடான உண்மையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு கொடுத்ஹ்டு பல கட்டுரைகளை வெளியிட்ட போதும், எங்களுடன் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பில் திராவிடர் கழகம் கலந்து கொண்டதும் எந்த அந்நிய பணத்தை வாங்கி கொண்டோ, அல்லது எதிர்பார்த்தோ என்று விளக்க முடியுமா???


இப்போது தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க எண்ணி கலைஞர் அவர்களே நீங்கள் கோவையில் உள்ள "சிறு தொழில் கூட்டமைப்பை" தூண்டி விட்டு "மின்வெட்டை" எதிர்த்து போராட்டத்தை தூண்டி விட்டு அதை முரசொலியில் பிபரவரி ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், பதினோராம் நாளும் தலைப்பு செய்தியாக போட்டு, அதன்மூலம் "மின்சாரம் வரவேண்டும் என்றால் அணு உலை வரவேண்டும்" என்ற ஒரு "வக்கணையான" சிதம்பரம் சூத்திரத்தை விற்பனை செய்து வருகிறீர்களே? இது நியாயம்தானா? இப்போது தமிழ்க்ஹா மக்களை மின் வெட்டிற்கு எதிராக தூண்டி விட்டு அதையே அணு உலைக்கு சாதகமாக திருப்பி விட இந்த இரு தலைவர்களும் திட்டமிட்டுள்ளார்கள். அதுவே எழுத்தாளர் சோலையின் கட்டுரை வடிவில், நக்கீரனில் இப்போது வெளி வந்துள்ளது. அதிலும் அமெரிக்கா தோண்டலில் என்று எழுதும் சோலை "மன்மோகனும், திமுகவும்" சேர்ந்து தான் அமெரிக்க- இந்திய அணு ஒப்பந்தத்தை ஆதரித்தவர்கள் எனபதை ஏனோ மறந்து விட்டார். இதே நக்கீரனில் பழைய அணு உலை எதிர்ப்பாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் திமுகவின் நிலையை ஆதரிக்க வேண்டி, அமெரிக்காவுடனான அணு உலை ஒப்பந்தத்தை ஆதரித்து எழுதினர் எனபதையும் ஏனோ மறந்துவிட்டார். எல்லாமே கலைஞரின் உறவுக்கார, செயலாளர் ராஜமாணிக்கம் கூறியதால்தான் சோலை அப்படி எழுதுகிறார் என்று நாம் எப்படி சும்மா பார்த்து கொண்டு இருக்க முடியும்?

Wednesday, February 8, 2012

சிதம்பரம் பேச்சுக்கு தவணை முறையில் மறுப்பு

கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்ற குரல் இந்தியா முழுவதும் கேட்டபின் நாடு முழுவதும் உள்ள வார இருக்கும் அணு உலைகளை எதிர்க்கும் போக்கை அது ஏற்படுத்துகிறது என்று உணர்ந்த பின், தலைமை மைச்சர் அலுவலகம் விழித்து கொண்டு இதை விடகூடாது என முடிவு எடுத்து அதற்கு பிறகு உள்துறை வசம் அந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளது. உள்துறை தமிழ்நாட்டு காங்கிரசி தனக்கு செல்வாக்கு இல்லையே என்ற நிலையில் முதலில் இணை மைச்சர் நர்ரயன்சாமியை அனுப்பி எதிர்க்க சொன்னது. அதாவது அணு உலையை ஆதரிக்க சொன்னது. அந்த மனிதன் தன்னை தபால்காரர் போல காட்டி கொண்டதால் தமிழக மக்களிடம் தனிப்பட்டு விட்டார். பிறகுதான் நெல்லை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான வாசன் குழுவை சேர்ந்த ராம்சுப்புவை பிடித்ஹ்டு அணு சக்தி துறை அவருக்கு "காசுகள்" கொடுத்து அவர்மூலம் பல "வேலையற்ற பேச்சாளர்களை" அழைத்து வந்து கூட்டம் போட, பட்டினிப்போர் நடத்த என்று நாடகம் ஆடினார்கள். அதுவும் எடுபடாத நிலையில் சிதம்பரமே நேரில் வர ஏற்பாடு செய்தார்.

பிரதமர் அலுவலக வற்புறுத்தலில் இணை சேராத தமிழக காங்கிரசின் குழுக்கள் இணை சேர்ந்தன.சிதம்பரம் இரண்டாம் அலைகற்றை வரிசை ஊழலில் சிக்கி "மூஞ்சி" வெந்துபோன நிலையில் இந்த பிரதமர் அலுவலக வற்புறுத்தலுக்கு ஒப்புகொண்டார்.அதுவே பாளையம்கோட்டை ஜவர் மைதானம் பொது கூட்டமாக நாலாம் நாள் அதாவது சிங்களர்களின் தேசிய தினத்தில் போடப்பட்டது. அதாவது தமிழர்களுக்கு எதிரானது அந்த அணு உலை என்று உணர்ந்த சிதம்பரம் தமிழர்களுக்கு எதிரானவர்களின் தேசிய நாளை தேர்வு செய்தது பொருத்தமானதே. அந்த கூட்டத்தில் அவர்கள் பேசிய பெசுகளை ஒவ்வொன்றாக எடுத்து கொண்டு பதில் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

முதலில் தேடிபார்த்தும் அந்த காங்கிரஸ் மத்திய மைச்சர்கள் யாருமே "அணு உலை" பற்றிய விவரங்களை பேசவில்லை. அதாவது அணு உலை கூடாது என்போரது வாதத்தையோ, அதற்கு பதிலாக அணு உலை சரிதான் என்ற வாதத்தையோ மக்கள் முன்னே வைக்க அவர்கள் முயற்சிக்க வில்லை.அவர்கல்யருகுமே அது பற்றி தெரிந்திருக்க வில்லை என்றும் எடுத்து கொள்ளலாம். சர்ச்சைக்குள்ளான கேள்விகளுக்கு விடை தெரியாது என்றும் எடுத்து கொள்ளலாம். அணு உலை பற்றி அவர்களுக்கு சந்தேகம் உண்டு என்றும் எடுத்து கொள்ளலாம். நமெகென்ன என்று அக்கறையற்றவர்கள் என்றும் எடுத்து கொள்ளலாம்.மொத்தத்தில் எந்த விதத்திலும் திருநெல்வேலி மக்களை புரிய வைக்கவோ,தெளிவு படுத்தவோ விளக்கம் அழிக்கவோ அவர்கள் அந்த கூட்டத்தை நடத்தவில்லை எனபது மட்டும் தெரிகிறது.

அப்படியானல்தமிழக அரசுக்கு "தலைவலி" கொடுக்கவே அவர்கள் கூட்டம் நடத்தினர் என்பது இதிலிருந்தே தெரிகிறது.இப்படி ஒரு உள்துறை அமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார்.அடுத்து அனர்த்த சிதம்பரம் அணு உலை எதிர்ப்பு என்ற இருபத்தைந்தாண்டு போராட்டத்தில் இன்று இடிந்தகரை பகுதியில் நாடாகும் அடையாள தொடர் போரில் பெரும் அழுவு மக்கள் பங்கு கொண்டிருக்கும் பொது, அதில்; முன்னணியில் இருப்பவர்களை மட்டும் தனிமை படுத்த முயருள்ளார் எனபது அவரது பேச்சின் முயற்சி.அதற்கு அவர் கைகொண்ட விதம் இப்போது நம்மிடமிருந்து பதிலை தூண்டி விட்டது.அதுதான் இருபத்தைந்து ஆண்டுகாலமாக "சும்மா" இருந்து விட்டு பதின்மூன்று ஆயிரம் கோடிகளை செலவழித்த பிற்பாடு என் எதிர்த்து போராடுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.அந்த இடத்தில்தான் அய்யா மாட்டிக் கொண்டார். இருபத்தைந்து ஆண்டுகளாக நடந்த போராட்டங்களை நாம் விளக்கபுரப்புடுவோம்.

Tuesday, February 7, 2012

அரசனும், புருசனும் மன்மோகனுக்கு மாறுவார்களோ?

மன்மோகன்சிங் ஒழுங்காக அமெரிக்கா இட்ட கட்டளைகளுக்கு அடிபணிந்து வேலை செய்யும் ஒரு வரலாறு படைத்த்சவர் என்றுதானே இந்த உயர் பொறுப்பை கொடுதார்கள்? அதைஒழுன்காக் செய்தாரா? அய்யா. நீங்கள்தான் இந்திய மக்கலளால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடவில்லை. அதனால்நான் என் இந்திய மக்களின் நலனை கருத்தில்கொள்ள வேண்டுமென்று நீங்கள் கேட்கலாம். நியாயம்தான்.நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதித்து நடக்கும் நாங்கள்தான் முட்டாள்கள்.உங்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகதில்னம்பிக்கை இல்லை எனபது எங்களுக்கு புரிகிறது. அதனாலதான் இந்திய வரலாற்றிலேயே இல்லாத முறையில் ஒரு பிரதமர் மீண்டும்,மீண்டும் மாநிலங்களவை மூலம் தேர்ந்தேடுக்கபடுகிறீர்கள்.சரி.நீங்கள் அமெரிக்காவின் ஆள் என்றுதானே புரிய வைத்தீர்கள்?

அமெரிக்க-இந்திய அணு உலைஒப்பந்தம் செய்தீர்கள். இந்திய மத்திய அமைச்கார்வையையோ, நாடளுமன்றதையோ கேட்காமலேயே அமெரிக்காவிற்கு தொண்டு செய்தீர்கள். அப்புறம் அவர்கள் கூறிய அனைத்து நாட்டு அணு சக்தி கழகம் உடன் பேசி அணுசக்தி விநியோக நாடுகளை கெஞ்சிநீர்கள். அவர்கள் கூறிய படி ஒரு "இழப்பீடு" சட்டம்கொண்டு வந்தீர்கள். அதில் இயக்கும் அணுஉலை நிறுவனம் இழப்பீட்டு தொகையில் பங்கெடுக்க வேண்டுமென்ற அம்சத்தை எதிர்க்கும் அமெரிக்க கார்பொரேட் நிறுவனங்களை சமாதனம் செய்ய முயன்றீர்கள் அதற்காக ஒரு விதிகள் என கூறினீர்கள். உங்கள் முயற்சியை அமெரிக்க முதலாளிகள் ஏற்கவில்லை. அதன்பின் திடீரென ரஷியா, ஆஸ்ட்ரேலியா, பிரான்ஸ் என்று அமெரிக்கா அல்லாத நாடுகளிடம் அணு உலை எரிசக்திக்கு பேசினீர்கள். அமெரிகாதானே இறங்கி வருமேன்று எதிர்பார்த்தீர்கள்.

நீங்கள் அரசனை நம்பி புருஷனை கை விடுகிறீர்களே என்று எண்ணினோம். பிறகு பிரான்ஸ் உடன் விமான ஒப்பந்தமேன்று இங்கிலாந்தை கோப படுத்தினீர்கள். சரி.நீங்கள் புருசனைகைவிடுவதால் மாட்டிகொள்வீர்களா ? என்று எண்ணினோம்..இப்போது உங்களுக்கு ஒரு வாய்ப்பு. அமெரிகாதன் ஆதரவு நாடுகளான இங்கிலாந்து,பிரான்ஸ் உடன் சேர்ந்து அய்.நா பாதுகாப்பு சபையில் "சிரியாவை" ரானுவம் கொண்டு தாக்க வழி மொழிந்தது. இந்தியா சார்பாக அதற்கு ஆதரவு கொடுத்து விட்டீர்கள்.ஆனால் உங்கள் அரசனோ.புருசனோ அப்படி இடைக்காலத்தில் இருந்த ரஷியா, சீனாவுடன் சேர்ந்து கொண்டு, அந்த தீர்மானத்தை "தள்ளுபடி" செய்து விட்டது.உங்கள் மூஞ்சியும் கரி பூசப்பட்டு விட்டது. இப்போது ரஷியா, சீனா பகலை, அமெரிக்கா நண்பனா? எதுவும் சாதாரனர்களான எங்களுக்கு புரியவில்லை.

Friday, February 3, 2012

பேச்சும், தாக்கும், ப.சீ..போக்கு

நெல்லை மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்குள், காங்கிரஸ் ஏற்பாட்டில் இந்துமுன்னணியினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவார்கள். அதை ப.ஜ.க.தலைவர் போன்.ராதாகிருஷ்ணன் ஆதரித்து இந்துமுன்னநியினருக்கு பாதுகாப்பு இல்லை என்று போய் பேசுவார். அதையும் ஆங்கில ஏடுகள் வெளியிடுவர். இன்று மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அந்த கூடங்குளம் அணு உலையை மக்கள் எதிர்க்க காரணம் என்ன என்று விளக்கமாக பேசுவார். அப்போது தாக்கிய இந்துமுன்னநியினரை கண்டிப்பார். உடனேயே கனகிராஸ் எம்.எள்.எ. தாக்கிய இந்துமுன்னநியினரை ஆதரித்து பேசுவார். இந்த எல்லா நிகழ்வுகளும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் திட்டமிட்டு நடத்தியது என்பது எல்லோருக்குமே தெரியும். சிதம்பரம் திமுக தலைமையிடம் பேசிய பிறகு, இன்று திமுக பொது குழுவில் விரைவில் கூடங்குளத்திற்கு முடிவு சொல் என்று பொதுவானவர்கள் போல ஒரு தீர்மானம் வரும். ஒரு சார்பு நிலையை திமுக எடுத்து கனைராஸ், ப.ஜ.க. பக்கம் நிற்கும். அதையும் அரசியல் என்று நாம் பார்க்காமல் "கண்களை" மூடி கொள்ள வேண்டும்.


சீ.பி.எம். எம்.எள்.ஏ. பாலகிருஷ்ணன் கூடங்குளம் அணு உலையை உடனே திறக்க வலியிருத்துவார். யாரும் அவருக்கு ஜைதாபூர் அணு உலைக்கு எதிராக ஒரு நிபுணர் குழுவை சீ.பி.எம். மற்றும் சீ.பி.அய் சேர்ந்து போட்டிருப்பதை நினைவு படுத்த மாட்டார்கள்.சீ.பி.அய்.யின் தலைவர் த.பாண்டியன் கூடங்குளம் அணு உலை விசயத்தில் தமிழக அரசு நிலை என்ன? என்று கேள்வி கேட்டு வீரம் காட்டுவார். அவர்கள் இருவரும் ரஷியா கொண்டுவறுக் அணு உலை என்பதற்காக ஆதரிப்பது வெள்ளிடை மலை.அவர்கள் கட்சிக்குள் ரஷியாவில் நடந்த தேர்தலில் புதின் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்றுள்ளாரே என்று யாரும் கேட்க மாட்டார்கள். நேநேகள் அந்த மோசடி பேர்வழி புதினது வெற்றியை எதிர்க்கும் ஒரு லட்சம் மக்கள் பேரணி பக்கமா? புதின் பக்கமா என்று கேட்டுவிட மாட்டார்கள்.அங்குள்ள கம்யுனிஸ்ட் கட்சியும் புதினது தேர்தல் வெற்றியை எதிர்கிறதே என்று கேட்கவில்லை..ரஷிய கமுயநிஸ்ட் கட்சியை விட, ரஷிய அரசாங்கம்தான் அதிகமாக எங்களுக்கு உதவுகிறார்கள் என்று இங்குள்ள நாடாளுமன்ற இடதுகளும் பச்சையாக கூறவில்லை.இப்படி ஒரு நாடகம் கூடங்குளம் பற்றி நடக்கிறது.

இன்று பெரியார் திராவிடர் கழகம் ஒரு ஆர்ப்பாட்டத்தை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துமுன்னநியினரை கண்டித்து நடத்தினார்கள்.அப்போது அதில் நாம் தமிழர் கட்சி சீமான், வேல்முருகன் கட்சியான வாழ்வுரிமை கட்சி, என பலரும் பேசினார்கள். பேராசிரியர் தீரன் இப்போது வேல்முருகன் கட்சியில் இருக்கிறார். அது சார்பாக பேசினார். அணு உண்டு தயாரிக்கத்தான் இந்த அணு உலைகளை கொண்டுவருகிறார்கள் என்று உண்மையை போட்டு உடைத்தார். வேல்முருகன் கிருத்துவ மிஷனரிகள் கல்விக்கு எதனை முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றன என்று கூறி, அவதரி எதிர்க்கும் இந்துத்துவா மைப்பை சாடினார்.சீமான் அணு உலைகள எப்படி ஆபத்தானவை என்றும், அணு கழிவுகளை முப்பதாயிரம் ஆண்டு முதல் ஐம்பதாயிரம் ஆண்டு வரை பாதுக்கப்பது யார் என்ற கேள்வியை எழுப்பி அருமையாக பேசினார்.நிறைவாக குளத்தூர் மணி இந்துத்துவா மைப்பு மீது காவல்துறை நடவடிக்கை போதாது என்ற பொருளில் பேசினார். காங்கிரஸ் மற்றும் சிதம்பரத்தின் கை பின்னால் இருப்பதை சுட்டி காட்ட மறந்து விட்டனர்.

இப்படிதான் பேச அழைத்து சிதம்பரம் மாவோயிஸ்ட் ஆசாத்தை சுட்டு கொள்ள செய்தார். இப்படிதான் பேச அழைத்து மாவோயிஸ்ட் கிஷஞ்சியை சிதம்பரம் விஜயகுமார் மூலம் சித்தரவதை செய்து கொள்ள செய்தார். இப்போது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும் அதே பாணியை பின்பற்றுகிறார். இதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Thursday, February 2, 2012

பிரான்சிட்ட வாங்கினா, இங்கிலாந்து கோபப்படுத்து?

மன்மோகன்சிங் சமீப காலமாக நடத்தும் அரசாங்கத்தை பல அந்நிய நாடுகளின் கார்பொரேட் சந்தைதளமாக காணவேண்டும். அவர் அணு உலைகளை வாங்கவும், அதற்கான எரிபொருளான யுரேனியத்தை வாங்கவும் அமெரிக்காவுடன் முதலில் ஒப்பந்தம் போட்டார்.அதற்கு முன்பே இந்திய அரசு அமெரிக்காவிடம் அந்த காலத்திலேயே தாராபூர் அணு உலை உற்பத்திக்கு யுரேனியம் வாங்கி வந்தது. இந்திரா-வாஜ்பாய் கைங்கரியத்தினால் "அணு குண்டு" சோதனை நடத்தி போக்ரான்களை உருவாக்கி அமெரிக்காவிடமும், மற்ற ஐரோப்பிய நாடுகளிடமும் கேட்ட பெயர் வாங்கினார்கள்.அதனாலேயே அய்.அ.எ.ஏ. என்ற அணைத்து நாட்டு அணு சக்தி கழகத்தின் மூலம் உலக அளவில் அணு குண்டு தயாரிக்கும் இந்தியாவிற்கு, அணு குண்டு சோதனையை தடை செய்யும் உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு, நான் ப்ராளிபெரசன் ஒப்பந்தம், சீ.டி.பி.டி. ஒப்பந்தம் ஆகியவற்றை கையெழுத்திட மறுக்கும் இந்தியாவிற்கு அணு உலைக்கான எரிசக்தி கிடையாது என்று தடை செய்து வந்தன. அது வெள்ளை ஜார்ஜ் புஷ் வசம் பேசி, அமெரிக்காவுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தம் போட்டார் மண்ணு மோகன்.அமெரிக்காவை துணைக்கு அழைத்துக்கொண்டு, அய்.ஏ.இ.ஏ.என்ற அந்த அகழகத்தின் நற்பெயரை பெற்று அவர்கள் மூலம் உலகம் முழுதும் உள்ள குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள அந்த அணு சக்தி விநியோக நாடுகளிடம் யுரேனியம் பெற ஒப்பந்தம் போட்டார்.

அதன்பிறகு அவர்கள் சொன்னபடி,அணு உலை விபத்து இழப்பீடு சட்டம் கொண்டு வந்தார். இங்குள்ள ஊடக அமபலப்படுதளால், அந்த சட்டத்தில் சில வரிகளை சேர்த்து அமெரிக்க கார்போரேட்களின் பங்கை மறைக்க முயன்றும் முடியவில்லை. அதை ஈடுகட்ட ஒரு "விதிகளை" கொண்டுவந்து இந்தோனேசியா சென்று பாலியில் கருப்பு புஷ் ஒபமாவை சந்தித்து அமெரிக்க கார்போறேட்களை சமாதனப்படுத்த முயன்றார்.அதுவும் முடியவில்லை. இந்தியா திரும்பிய பின், அந்த விதிகளை இணைப்பதை இங்கு உள்ள வரத்து அமைச்சரவையே ஒப்புக்கொள்ளவில்லை. இது மன்மோகனுக்கும், சோனியாவிற்கும் உள்ள முரண்பாடு. இந்திய அணு விஞ்ஞானிகளும் மன்மோகனை எதிர்த்து அமெரிக்க சார்பை மறுக்கிறார்கள்.அதனால் வு வழியில்லாமல் "அணு குண்டு" தயாரிக்கும் ஒரே நோக்கத்தில், அடுத்து நான் ப்ராளிபரேசன் ஒப்பந்தத்தை வற்புறுத்தாத "ஆஸ்ட்ரேலியா,ரசியா" போன்ற நாடுகளுடன் அணு ஒப்பந்தம் செய்து எபப்டியாவது யுரேனியம் பெற்று தொடங்கி விட்டால் அமெரிக்கா தானாக வரும் என்ற எதிர்பார்ப்பில் செயல்படுகிறார். அதில்தான் அவருக்கு கூடங்குளம் முக்கியத்துவமாகிறது. என் என்றால் அது ரஷியா சார்பு.அடுத்து பிரான்ஸ் நாட்டையும் இதேபோல சார்கிறார் மன்மோகன். அவர்களிடம் "ஜைதாபூர்" அணு உலைகளை வாங்க ஒப்பந்தம் செய்கிறார்.

அந்த பிரான்ஸ் அப்படியானால் "விமானபடைக்கும்" எங்கள் விமானங்களை வாங்கு என்கிறது. சரி என்றார் மன்மோகன். அதுதான் பிரான்ஸ் நாட்டின் "டசால்ட் ரபேல் "என்ற ரக விமானங்களை வாங்கி குவிக்க முடிவு செய்தது. அதை பிரான்ஸ் அதிபர் சர்கொசிஸ் வரவேற்கிறார். ஆனால் இப்போது இங்கிலாந்து அதிபர் அதாவது பிரதமர் டேவிட் கேமேரான் பயங்கரமாக எதிர்கிறார். இங்கிலாந்து நாடு உங்கள் இந்தியாவிற்கு "பல லட்சம் பவுண்டுகளை" நிதி உதவியாக கொடுத்தோமே? என்று அவர் வினவுகிறார். இங்கிலாந்து நாட்டு "டைபூன்" என்ற ரக விமானத்தை வாங்கு என்று அவர் கூறுகிறார். அதை அவர் அவர்கள் நாட்டு :"ஹவுஸ் ஆப் காமன்ஸ்" சபையிலேயே சொல்லிவிட்டார். அவரது "கண்செவடிவ்" கட்சி இந்தியாவை கடிக்கிறது. "தொழிலாளர் கட்சியும்" அதுபற்றி பேசுகிறது. பிரான்ஸ் நாடு இங்கிலாந்து அளவுக்கு உதவி நிதி கொடுத்தார்களா? என்று அவர்கள் வினவுகிறார்கள். இன்னமும் பிரான்ஸ் நாட்டு "டசால்ட் ரபேல்" உடன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று இங்கிலாந்தில் சமாதனம் பேசுகிறார்கள். அதேசமயம் தங்கள் இங்கிலாந்து நாட்டு "டைபூன்" ரக விமானத்தையும் இன்னமும் மறுக்கவில்லை எனவும் கூறுகிறார்கள். இப்படியாக உலக சந்தையில் "சந்தை மன்னன்" மன்மோகன் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். ஆகவே நேநேகள் யாரும் வார ஏதோ இந்தியாவின் நன்மைக்காக பல வெளிநாடுகளுடன் வணிக ஒப்பந்தம் பெசுகயார் என தவறாக அவரது "பொருளாதார் திட்டங்களை" மதிப்பீடு செய்யவேண்டாம். அவர் உலக சந்தையில் எந்த வல்லரசுக்கு அடிமையாக இந்தியாவை ஆக்கலாம் எனு கணக்கு போடுவதில் ஒரு சிறிய "பிணக்கு". அவ்வளவுதான்.

இரண்டு அலைவரிசை உரிமம் ரத்து போதுமா?

உச்சநீதிமன்றம் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. நமது ஆ.ராஜா உள்ளே போய் ஒரு வருடம் ஆன பிறகு அனைத்து இரண்டு அலைவரிசை உரிமங்களையும் அதாவது நூற்று இருபத்து இரண்டு உரிமங்களையும் ரத்து செய்யவும், டாடா, ஸ்வான், போறோருக்கு ஐந்து கொடு அபராதமும் மற்றவர்களுக்கு ஐம்பது லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கொடுத்துள்ளது. இதில் ராஜா கால டாடா குழு வகையாறக்கள் சிக்கி கொண்டனர். தயாநிதி காலத்தில் உரிமம் வழங்கப்பட்ட ரிலையன்ஸ் குழ்மங்கள் தப்பிததுகொள்ளுமா? என்று கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. சரி. அந்த ரிலையன்ஸ் கும்பலுக்கு எந்த அபராதமும் கிடையாதா? என்று கேட்டாலும் நம்மிடம் பதில் இல்லை. நீதியரசர்கள் அனைத்தும் அறிந்தவர்கள், ஆகவே அவர்களை எதிர்த்து கேள்வி கேட்ககூடாது என்று வேண்டுமானால் நாம் கூறலாம்.


அடுத்து அதே நீதியரசர்கள் இன்னொரு முடிவை அறிவித்துள்ளனர். அதாவது இந்த இரண்டாம் தலைமுறை அலைவரிசை உரிமங்கள் இனி "ஏலம்" மூலம் கொடுக்க பாட வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி ஏல முறையில் உரிமங்களை கொடுக்கும்போது, ஏற்கனவே நடந்த பாணியை மீண்டும் பின்பற்றாமல் இருக்க எந்த ஒரு தஹ்டுப்பும் கூறப்படவில்லை. ஆதாவது வெளிநாட்டு கார்பொறேட்களுக்கு உரிமம் கொடுக்க கூடாது என்று கூறப்படவில்லை. உரிமம் பெற்றவர்கள் அந்நியாய வில்லிக்கு வெளிநாட்டு கார்போறேட்களுக்கு விற்பதை "தணிக்கை" செய்யவோ, தடுக்கவோ, வடிகட்டவோ எந்த ஒரு உபாயத்தையும் இந்த நீதிமன்றம் கோரவில்லை. அதுபற்றி கூறவும் இல்லை.

அப்படியானால் அண்டை நாடுகளை சேர்ந்த "முன்னாள் மாக்கள் விடுதலை படையின் தலைவரின் தனியார் நிறுவனமோ", அந்நிய நாட்டின் உளவு நிறுவன தலைவர்களின் தனியார் நிறுவனமோ" இந்த உரிமத்தை ஏலம் எடுத்த சக்திகளிடமிருந்து பெறுவது தவிர்க்க பாட வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை. அதாவது இந்த அலைவரிசை ஊழலை பயன்படுத்தி எந்த அந்நிய நாடும் இந்தியாவின் ரகசியங்கள் மீது :உளவு: வேலை பார்க்க்க வாய்ப்பு கொடுக்கப்படுவதை தடுக்க கூட அந்த நீதியரசர்களின் சிந்தனை செல்ல வில்லை. எபப்டியோ சிதம்பரம் கதைக்கு இரண்டு வாரத்திற்குள் முடிவு செய்து சீ.பி.அய். நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கலாம் என்று கோரியுள்ளது. அதனால் "மானம்" பெரிது என்று நினைத்து சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்வார் என்று நாம் எதிர்பார்க்க வில்லை. அவர் நான்காம் நாள் நெல்லையில் நடக்க உள்ள அணு உலை ஆதரவு பொதுக்கூட்டத்திற்கு எப்படிதொண்டர்களை ஊக்குவித்து வன்முறை மூலம் ஜெயலலிதா ஆட்சிக்கு தொல்லை கொடுக்கலாம் என்று சிந்தித்து கொண்டிருப்பார்.