Tuesday, February 21, 2012

கலைஞரை நேரு ஏமாற்றினாரா? கலைஞர் நம்மை ஏமாற்றினாரா?

முன்னாள் அமைச்சரும், திமுக வின் முக்கிய புள்ளியுமான கே.என்.நேரு தனது மகனின் திருமணத்தை திருச்சியில் நடத்தினார். அதில் கலைஞர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது கலைஞர் பேசிய உரை திமுக தொண்டர்களுக்கு ஒரு வரலாற்று பாடமாக அமைந்தது. பெரியார் வழி, அண்ணா வழி என்ற வழக்கமான பாடலுக்கு அங்கங்கே இசை அமைத்து அழகாகவே பாடினார். தமிழ்நாட்டில் கல்யாணம் என்ற சொல்லை இப்போதெல்லாம் திருமணம் என்று சொல்ல வைத்துள்ளது திமுக என்று அவர் கூறும்போது, மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆசீர்வாதம் என்ற சொல்லின் பழக்கத்தை மாற்றி தமிழில் வாழ்த்துக்கள் என்ற சொல்ல வைத்தது திமுக என கலைஞர் கூறும்போது புல்லரித்தது தமிழர்களின் வரலாறு, பண்பாடு என்பதை எப்படி மீட்டு எடுத்துள்ளோம் என்று அவர் வாயார புகழ்ந்து அதை பெருமைப்பட்டு கூறிய பொது நாமும் பெருமைப்பட்டோம். பெரியார், அன்னமா வழி என்று அவர் கூறும்போது மூடநம்பிக்கைகளை ஒழித்து பகுத்தறிவு வழி என நாம் பெருமைப்பட்டோம். சேர,சோழ, பாண்டிய என்று நமது மூதாதையரை கூறும்போது, தமிழர்களாக அனைவரும் நிற்கிறோம் என்று கலைஞர் கூறினார்.

அதேநேரம் கே.என். நேரு தனது சொந்தங்களுக்கும், வணிக உறவுகளுக்கும் அனுப்பிய திருமண அழைப்பிதழ் நமது கைகளில் தவழ்ந்தது. அதில் தனது மூதாதையரான காலம் சென்றவர்களை "வானிருந்து வாழ்த்தும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இது மூட நம்பிக்கை இல்லையா? பெரியார் வழியில் யாராவது வானிருந்து வாழ்த்துவார்களா? அப்படி வாழ்த்துபவர்கள் என்று அச்வரால் அந்த மணவிழா அழைப்பிதழில் குறிக்கப்பட்டவர்கள் அவரது தாத்தாக்களும், கொள்ளு தாத்தாக்களும். அவர்களை நேரு எப்படி அழைக்கிறார் தெரியுமா? சர, சோழ, பாண்டிய வம்சங்களாக தமிழர் பாரம்பரியமாக அழைக்க வில்லை. மாறாக "நாராயணன் ரெட்டியார், லட்சுமணன் ரெட்டியார்" ஆகியோரின் பெயர்த்தான் என தனது மகனையும், லட்சுமண ரெட்டியாரின் பெயர்த்தி என்று அந்த மணப்பெண்ணையும் அந்த மணவிழா அழைப்பில் அச்சிட்டுள்ளார். இப்படி ஒரு அழைப்பிதழை தாங்கள் காணவில்லையே என்று கலைஞர் வீட்டார் கேட்டனர். நேரு அச்சடித்த ஒரு அழைப்பிதழில் "முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல் தளபதி ஸ்டாலின் வழியாக கனிமொழி வரை" பெயர்களை அச்சிட்டுள்ளார். அது அந்த திமுக தலைமை குடும்பத்திற்கு காட்டும் விசுவாசம் எனலாம். அப்படியானால் ரெடியார் என விளித்து அச்சிடப்பட்டது யாருக்கு காட்டும் விசுவாசம். அவரது குழுவினரை அடிக்கடி சென்னையில் உள்ள ரெட்டியார் சங்க கூட்டங்களில் கண்டவர்கள் அதை "சாதி விசுவாசம்" என்கின்றனர்.

அப்படி ஒன்று திமுக வில் இருக்கிறதா? வானிருந்து வாழ்த்தும் என்ற நேருவின் நம்பிக்கை பெரியாரின் கருத்துகளுக்கு உள்ள விசவாசமா? மூடநம்பிக்கை கொண்ட சதிகாரர்களுக்கு மேல் உள்ள விசவாசமா? இந்த கேள்விகள் எல்லாமே எழாத வண்ணம் அவர் பெரும் பிளக்ச்களை திருச்சி எங்கும் வைத்த்சு விட்டார். அதில் கலைஞர், தளபதி, அவரது மனைவி சாந்தா, அவரது மகன் உதயநிதி, அவரது மனைவி, அவரது குழந்தை எல்லோரையும் படங்கள் போட்டு பதாகை வைத்து விசுவாசத்தை காட்டியுள்ளார். அதேபோல அழகிரி, அவரது மனைவி காந்தி அவர்களது பிள்ளைகள் என பதாகை. அதேபோல ராஜாத்தி, கனிமொழி என பதாகைகள். கலைஞர் வீட்டில் ஒரு நாய் பாசமாக கண்ணா என எல்லோராலும் அழைக்கப்படுமே அதை அவர் போடவில்லை என்று சில தொண்டர்கள் கூறினார். அவர் ஸ்டாலின் குழு என்பதால் கனிமொழியின் மகன் ஆதித்தனை படமாக போடவில்லை என்று இன்னொரு தொண்டர் சிலாகித்தார். எபப்டியோ, விச்வாசங்கள் திமுகவின் வாடிக்கை என்பதே தெரிகிறது. இந்த இரண்டு அழைப்பிதழ்களை தலிவரிடம் காட்டாமல் நேரு ஏமாற்றினாரா? அல்லது அதுவும் தெரிந்து கலைஞர் நம்மை ஏமாற்றினாரா?

Monday, February 20, 2012

பழம்பெரும் நடிகை மறைவு தரும் மறைக்கப்பட்ட வரலாறு.

எஸ்.என்.லட்சுமி நேற்று நள்ளிரவுக்கு மேல் மரணமடைந்தார். சென்னையில் சாலிகிராமத்தில் அவரது வீட்டில், தேவகி மருத்துவமனையிலிருந்து உடல் கொண்டுவரப்பட்டது. அவர் எங்கள் தோழர் பாவல் சங்கரின் "அத்தை" என்பதால் நாங்களும் அங்கே இன்று முழுவதும் நின்றோம். நடிகர்கள், இயக்குனர்கள் என திரையுலகினர் பலர் வந்து போய்கொண்டு இருந்தாலும், காவல்துறை முதல்வர் ஜெயலலிதா வருவதாக எண்ணி செய்த பரபரப்புதான் அதிகம். மூன்று மணி நேர பரபரப்புக்கு பிறகு முதல்வர் வரவில்லை என தெரிந்த பிறகுதான் அந்த காவல்துறை அடங்கி அவரவர் வேலையை பார்க்க வெளியே சென்றனர். அதுவரை அந்த வீட்டிற்குள் எதுவும் தெரியாவிட்டாலும் வெளியே சாலையில் அவர்கள் பரபரப்பு காணப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் எஸ்.என்.லட்சுமி ஒரு வரலாறு என்பதை அங்கே உணர்ந்தோம். அவர் விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடி என்ற கிராமத்து பெண். மறவர் சமூக பின்னணி கொண்டவர். அந்த கிராமத்தில் வரத்து சொந்த தோட்டத்தில் அடக்கம் செய்தான் அவரது உடலை இன்று இரவு அங்கே கொண்டு சென்று காலை முதல் மாலை வரை மக்கள் பார்வைக்கு வைத்திருந்து பிறகு அடக்கம் செய்யபோகிறார்கள்.


எஸ்.என்.லட்சுமி ஏற்கனவே கேரளாவிலுள்ள ஒரு சிவானந்தா ஆசிரமத்தில் "வித்தை" வாங்கி இருக்கிறாராம். . அதனால் அவர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படும். அவர் தனது பதின்மூன்று வயதில் வீட்டில் சண்டை போட்டு கொண்டு, அதாவது பட்டினி வாழ்க்கையை எதிர்த்து சென்னை வந்தாராம். வந்தவர் நாடக சபாக்களில் நடித்துள்ளார். 1500 திரைப்படங்களில் நடித்ததையும், 5000 க்கு மேல்நாடகங்களில் நடித்ததையும் விட்டார் கூறுகிறார்கள். என்.எஸ்.கே. நாடக மன்றம், கே.பி.யின் அமைச்சூர் நாடக மன்றம், என பல நாட்க மன்றங்களில் நடித்த பெருமை அவருக்கு உண்டு. .ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டிலிருந்து ஐம்பதாம் ஆண்டிற்குள், சில ஆண்டுகள் அவர் நடத்தி வந்த "பெண்கள் மட்டுமே கொண்ட நாடக குழு" மிகப்பெரிய வரலாறு. இன்று பெண்கள் மட்டுமே கொண்ட நாடகங்கள் முயற்சி செய்யப்படுகின்றன. மங்கை இயக்க வ.கீதா எழுத, பேராசிரியர் சரஸ்வதி தொடங்கி, கவின்மலர், பூங்குழலி, தமிழச்சி, ஓவியா, என எல்லா பெண்ணியவாதிகளும் இணைந்து நடிக்கும் புதிய முயற்ச்சிகளை காண்கிறோம். ஆனால் அன்றே எஸ்.என்.லட்சுமி பெண்கள் மட்டுமே உள்ள நாடக குழுவை நடத்தி வந்தார் என்ற வரலாறு இனிக்கிறது. அன்றைய காலத்தில் ஆண்கள் மட்டுமே பங்கு கொள்ளும் நாடக சபாக்கள் உண்டு. அவற்றில்பேன் வேடத்தில் நடிக்க கலைஞர்களில்லா நிலை. அதனாலான்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள். அதுபோல சிவாஜி கணேசன் கூட நடைத்துல்லத்தை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பெண்கள் மட்டுமே உள்ள நடாக குழுவில், ஆண் வேடமிட்டு நடிக்க ப்ர்ந்களே முன்வந்து நடித்தது எஸ்.என்.லட்சுமி காலை மன்றத்தில்தான். அதுவும் எஸ்.என்.லட்சுமியே ஆண் வேடமிட்டு நடித்தார்.


எஸ்.என்.லட்சுமியின் அண்ணன் சக்திவேல்தேவர் விருதுநகரில் ஒரு நாடக குழு வைத்திருந்தார். அதில் வந்து எஸ்.என்.லட்சுமி ஆண் வேடமிட்டு நடித்தார். திருமணம் செய்து கொல்லாமல்தனது எண்பத்து ஆறு வயதில் இப்போத்சு தனது உயிரை விட்டிருக்கிறார். சகோதரர்கள் குடும்பதிற்காக வாழ்ந்திருக்கிறார். இடையில் கத்தோலிக்க சபையில் சேர்ந்து சகோதரியாக முயன்றதாகவும், அதிலும் உடன்படாமல் வெளியே வந்து விட்டார் என்றும் கூறுகிறார்கள். ஐந்து நாட்கள் முன்பு தனது சகோதரி மரணத்திற்கு அரியலூர் சென்றவர் விடுதியில் குளியலறையில் தடுக்கி விழுந்ததால் இடுப்பிளுடைய, ச்ஹெனை கொண்டுவந்து தேவகி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமானது போல இருந்தது என்று அவரத்சு மருமகன் பாவல் சங்கர் கூறினார். நேற்று நள்ளிரவில் திடீரென நிலைமை மோசமானது என்றார். அவர் திரையுலகிற்கு மட்டுமின்றி, வாழ்க்கைக்கும், தனியாக வாழும் பெண்களுக்கும், சவாலை எதிர்கொல்லும்பேன் கலைஞர்களுக்கும், ஒரு முன்னாதாரணம் என்று கூற தோன்றுகிறது. வடிவுக்கரசி வரத்து உடல் அருகே நின்று கொண்டு அழுது கொண்டிருந்தார். எஸ்.என்.லட்சுமியின் தந்தையின் தாயார் ஒரு ஜமீனால்பஞ்சம் பிழைக்க வந்த போது, ஒரு குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டவர் என்றும் ஒரு வரலாறு இருக்கிறது. அதிகமாக ஆய்வு செய்து இவரது முழு வரலாற்றில்தமிழகத்தின் கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார் நிலைமையையும், அதிலிருந்து வெளிவரும் குழந்தைகளின் வாழ்நிலை போராட்டமும் அதில் அவர்கள் அடைந்த வெற்றியும் தொகுக்க பட வேண்டும்.

Sunday, February 19, 2012

சிதம்பரத்திற்கு பதில் கொடுத்த ஆண்டன் கோம்ஸ் ?

நேற்று சென்னையில் நடந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் டில்லியிலிருந்து ஒரு விஞ்ஞானி அதுவும் தமிழர் வந்திருந்தார். அவர் பெயர் ஸ்ரீதர். அவர்தான் வைகோ வுடனும், நீதியரசர் ராஜேந்திர சச்சார் உடனும் , பெண் கவிஞர் மாலதி மயிதிரி ஏற்பாட்டில் சென்ற மாதம் டில்லி ஊடகங்களை சந்தித்து கூடங்குளம் அணு உலை ஏன் கூடாது என்று எடுத்து சொன்னவர். அவரும் நெல்லையை சேர்ந்தவர் என்பதால் அதிக அக்கறை போலும். இந்த ஸ்ரீதர் "அணு சக்தி துறை" என்ற டி.ஏ. ஈ.எனும் சுயாட்சியுடன் யாருக்கும் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் மத்திய அரசின் நிறுவனத்தில் பணியாற்றியவர். அந்த அணு சக்தி துறை தான் இன்று அணு உலை ஆதரவாளர்கள் "துள்ளுவதற்கு" ஒரே காரணம். அந்த அணு சக்தி துறையின் விஞ்ஞானிகள் தான் .அணு உலைக்கு ஆதரவாக பொய்களையும், புரட்டுகளையும் அள்ளி வீசுபவர்கள். அந்த அணு சக்தி துறையில் "புவியியல் நிபுணராக" பணியாற்றி மனதுக்கு பிடிக்காமல் வெளியே வந்தவர்தான் இந்த ஸ்ரீதர் என்ற தமிழர். நேற்று அவர் கூறிய பல செய்திகளும் அணு சக்தி துறையால் மறுக்க முடியாத கூற்றுகளாக இருந்தது. அவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு " தேர்தெடுத்த மறதி வியாதி" என்று கூறியது நியு இந்தியன் எக்ஸ்பிரசுக்கு செய்தியாக போய்விட்டது. இந்தியாவிற்கு மேற்கத்திய நாடுகளில் காலாவதியான அணு உலை கருவிகளை அவர்கள் தள்ளி விட்டு விடுகிறார்கள் என்று ஸ்ரீதர் கூறினார்.அதை இன்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டு இருந்தது. ஐ.எஸ்.ஆர்.ஒ. ஊழல் இப்போது இரண்டு லட்சம் கோடி நட்டம் என்று வெளியே வந்தது போல சீக்கிரத்தில் அணு சக்தி துறையின் ஊழலும் வெளியே வரும் என்று அவர் கூறியவுடன் ஊடகத்தாருக்கு பெரும் அதிர்ச்சி.

அந்த கூட்டத்தில் ஆண்டன் கோம்ஸ் உரையை நான்கு பக்கங்களில் அடித்து கொண்டு வந்து கொடுத்தார். அததனையும் வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றிய புள்ளி விவரங்கள். அதை சிதம்பரத்திற்கு பதிலடி என்றும், இருபத்தைந்து ஆண்டுகாலமாக நடிபரும் போராட்டம் என்றும் தினத்தந்தி இன்று வெளியிட்டது. சிதம்பரம் எண்பத்து எட்டாம் ஆண்டு என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று பாளையம்கோட்டை பொது கூட்டத்தில் கேட்டார். அதற்கு ஆண்டனின் பதில் நெத்தியடியாக இருந்தது. 1986 முதலே ஆண்டன் கோம்ஸ் எடுத்த முயற்சிகள் மீனவ கிராமங்களிலும், மற்றும் மற்றைய பகுதிகளிலும் எப்படி ஆலோசனை கூட்டங்களை நடத்தினோம் என்று கூறியிருந்தார். பிறகு "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டபைப்பு" என்ற பெயரில் அடுத்த ஆண்டிலேயே இடிந்தகரையில் பொதுக்கூட்டம் போட்டதையும் அதில் கலந்து கொண்டவர்களையும் வரிசைபடுத்தி இருந்தார். அடுத்த ஆண்டில் தூத்துக்குடி பொதுகூட்டத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தையும், ஜார்ஜ் பெர்ணனட்ஸ் உட்பட, தி.க, பா.ஜ.க., சி.பி.ஐ.[எம்.எல்.} இந்திய மக்கள் முன்னணி மற்றும் பல அமைப்புகளையும் குறிப்பிடுகிறார். டாக்டர் குமாரதாஸ், அய்யாவழி அடிகளார், மனோ தங்கராஜ் உட்பட பேச்சிபாறை விவாசயிகள் சங்கம் மூலமும், எல்லைகள் எடுப்பு போராட்டத்தையும் நடத்தியதை குறிப்பிடுகிறார். இந்திய மக்கள் முன்னணி நடத்திய சைக்கிள் ஊர்வலம் சந்தித்த இடையூறுகளை குறிப்பிடுகிறார்.

அகில இந்திய கத்தோலிக்க பல்கலைகழக சங்கமான "அய்கப் "மாணவர் அமைப்பு ஆலோசகர் சாமியை குறிப்பிடுகிறார். தினமணியில் டி.என.கோபாலன் எழுதிய கட்டுரை அணு உலையின் ஆபத்தை தனக்கு முதலில் தட்டிவிட்டது என்கிறார். யு.என.ஐ. செய்தி அமைப்பின் நிருபர் ரமேஷ் இன்று ஆம்நெஸ்டி இண்டர்நேசணலில் இருப்பவர் எப்படி தங்களுக்கு அடி எடுத்து கொடுத்தார் என்பதை கூறுகிறார். ஊடகவியலாளர் ஞானி இடிந்தகரை வந்து கூட்டத்தில் கலந்து கொண்டதை கூறுகிறார். நெல்லை ஊர்வலம், மற்றும் பொது கூட்டத்திற்கு தங்கள் அழைப்பின் பேரில் எஸ்.எஸ்.ஐ. என்ற சமுத்துவ சமுதாய அமைப்பை நடத்திவந்த ஓய டேவிட் பெரும் அளவில் பனை மாற தொழிலாளர்களை அழைத்து வந்து கலந்து கொண்டதையும் அதன்பின் அவரும் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தில் தொடர்ந்து கலந்து கொண்டதையும் குறிப்பிடுகிறார். கூடப்ன்குலத்தில் இன்றைய ஊராட்சி தலைவர் சாண்டல் முத்துராஜ், மற்றும் ரவி போன்ற போராளிகள் கடந்த "ஆறு ஆண்டுகளாக " தினசரி போராட்டம் நடத்துவதை குறிப்பிடுகிறார். கடந்த சில ஆண்டுகளாக இந்த போராட்டத்தில் உதயகுமாரும் இணைத்து கொண்டு இன்று ஒருகினைப்பாலராக பணியாற்றுவதை குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் ராஜ், பாலிமார், தமிழன், வின், போன்ற பல காட்சி ஊடகங்களும் வெளியிட்டன. கலைஞர் டி.வி. குறிப்பாக் ஆண்டன் கோம்ஸ் கூறிய செய்தியான அரசு எந்த முடிவை .எடுத்தாலும் போராட்டம் நிற்காது என்றும், அணு உலையையும் அணு கூண்டையும் நாங்கள் எப்போதும் எதிர்ப்போம் என்றும் அதில் "சமரசமில்லை " என்றும் கூறியதை ஒளிபரப்பியது.

அதேபோல தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெரும் அளவு நிலத்தில் விவசாயம் செய்யும் பண்ணையாரும், தொழில் அதிபருமான, சென்னையில் வணிக சங்கத்தில், உணவு பொருள் விற்பனையாளருமான, உலக தமிழர் பேரமைப்பின் பொருளாளரான சந்திரேசன் அந்த ஊடகவியலாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் பேசும்போது, நெய்வேலி அனல் நிலைய உற்பத்தியில் முப்பது விழுக்காடு மட்டுமே தமிழகத்திற்கு கொடுப்பதை, ஐம்பது விழுக்காடு தமிழகத்திற்கு என்று கொடுத்தாலே தமிழகத்தின் மின் தேவை தீர்ந்திடும் என்றார். மொத்தத்தில் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற இருபத்தைந்தாண்டு வரலாறு கொண்ட அமைப்பின் பெயரை முதலிலேயே டேஹ்ரியப்படுத்தி இருந்தால் சிதம்பரங்கள் குட்டையை குழப்பாமல் இருக்க உதவியிருக்குமே? என்று தோன்றியது. எப்படியோ இந்த போராட்ட வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்ல சிதம்பரம் வந்து தூண்டி விடவேண்டுமா?

Thursday, February 16, 2012

டில்லியில் வெடித்த காந்த குண்டு ஏன்? எதற்காக?

டில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரி பிள்ளைகள் படிக்கும் பள்ளி செல்லும்போது பின்னால் சிவப்பு நிற மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஒருவர் வந்தாராம். அவர் எதோ காந்தம் போன்ற பொருளை அந்த வாகனத்தின் பின்னே ஒட்டினாராம். அதுவே வாகனத்தின் முன்னே இறுகும் பேநெட்டில் வெடித்து சிதறியதாம். அதுவும் இஸ்ரேல் தூதரகம் அருகே, கனடிய தூதரகம் அருகே அதுவும் நமது இந்திய தலைமை அமைச்சர் வீட்டிற்கு அருகே. அய்யகோ, அப்படியொரு ஆபத்தா? இப்படி நாம் அலறி துடிக்கையிலே, நமது அரசாங்கமோ யாரையும் நான்கள் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எந்த நாட்டையும் இந்த குண்டு வெடிப்புக்கு நாங்கள் குறை சொல்ல தயாராயில்லை. இப்படி அறிவித்துள்ளதே? இந்திய மக்களாகிய நாம் நமது அரசாங்கம் சொல்வதை விடவா அதிகமாக சிந்திக்க முடியும்? ஆனாலும் ஊடகங்களும், பதிக்கப்பட்ட நாடான இஸ்ரேல் உளவு துறையும் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்லவா? அப்படி பார்த்தால் அவர்கள் ஈரான் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்காவும், நெஸ்ட நாடுகளும் சேர்ந்து ஈரான் மீது குற்றம் சுமத்தி, படையெடுக்க வேண்டும் என்று கூறும்போது, இந்திய அரசு ஈரான் பக்கம் நின்றதே? அப்படிப்பட்ட இந்தியாவிற்கு "தொல்லை" தர ஈரான் நாடு முயற்சி எடுக்குமா? இப்படி ஒரு சந்தேகமும் நமக்கு எழுகிறது.

சந்தேகப்படுவது இஸ்ரேலும், அமெரிக்காவும். ஆமாம். அதனால் நீங்கள் பதில் சொல்லாமால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு விருப்பம் இந்திய தலைமை அமைச்சரின் அலுவலகத்தில் எதிரொலிப்பது உண்மைதான். ஏன் என்றால், இதே ஈரான் நாட்டுடன் "எரிவாயு" வணிகத்தில், குழாய் மூலம் கொண்டு வரும் ஒப்பந்தம் செய்யவேண்டாம் என்று நமது தலைமை அமைச்சர் கூறினாரே? அத்தகைய அமெரிக்க சார்பு பேச்சை கேட்காமல் நட்வர்சிங் ஈரானுடன் ஒப்பந்தம் செய்து குழாய் மூலம் எரிவாயு வரும் என்று அறிவித்தாரே? அதற்காக அவரே தூக்கி அடிக்க பட்டாரே? அந்த முன்னாள் பெற்றோலிய அமைச்சர் என்ற இலாகாவை வைத்திருந்த மணிசங்கர் ஐயர் அதேபோல ஈரானுடன் குழாய் மூலம் வரும் எரிவாயு கொண்டுவரப்படும் என்றாரே? அதற்காக அந்த இலாகாவிலிருந்து அவரும் தூக்கி அடிக்கப்பட்டாரே? இப்படி ஈரான் பற்றிய அமெரிக்க எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் யாராவது பேசினால் அவ்வளவுதான். இப்படி பயமுறுத்தி வைத்திருந்த இந்திய தலைநகரில் எப்படி ஈரானுடன் நல்லுறவு கொள்ள கொள்கை முடிவு எடுக்க முடியும்? அதனால்தான் இப்படி டில்லியை மிரட்டுகிறார்கள் என்று யாரும் எண்ணிப்பார்க்கவில்லை.


ஐநா பாதுகாப்பு சபைஒயில் சிரியா பற்றிய விசாரனையில் அமெரிக்காவுடன் கைகோர்த்த இந்திய அரசு ஈரான் விசயத்தில் மட்டும் எப்படி அமெரிக்காவை எதிர்த்து ஐநாவில் முடிவு எடுக்க முடியும்? அதனால்தான் சி.ஐ.ஏ, மற்றும் மொசாத், போன்ற உலக புகழ் வாய்ந்த அமைப்புகள் இப்படி ஒரு நடவடிக்கையை நடத்தினால் டில்லி ஒழுங்காக வழிக்கு வரும் என்று எண்ணலாம் அல்லவா? . சென்ற ஆண்டு ஈரான் நாட்டின் தலைசிறந்த அணு விஞ்ஞானி இதேபோல இரண்டு பேர் சேர்ந்து வைத்த காந்த குண்டில் காலியானார் என்பதால், அது மொசாத் செய்த வேலை என்று தெரிந்ததால், இந்த டில்லி குண்டும் அதே மொசாத் செய்திருக்கலாம் அல்லவா? என்பதும் ஒரு கேள்வி. ஆகவே இந்த குண்டு வெடிப்புக்கும் ஈரான் பற்றிய இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் உறவு உள்ளது என்பதே புரிய வேண்டிய செய்தி.இப்போது மொசாத் ஆட்டக்காரர்கள் புதிய கதை ஒன்றை கூறுகிறார்கள். அதாவது மொசாத்திற்கே இந்த குண்டுவெடிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாம். சென்ற ஆண்டு ஈரானின் அணு விஞ்ஞானியை கொன்றற்ற்ஹற்கு ஈரான் இந்தியாவில் பழி தீர்ப்பார்கள் என்று இஸ்ரேல் எண்ணவில்லை என்பதே அந்த செய்தி. இதில் சென்ற ஆண்டு ஈரானில் விஞ்ஞானியை கொன்றது மொசாத் தான் என்பதே செய்தி.

உண்மையில் அவர்கள் அதாவது மொசாத் கூறும் ஹிஸ்புல்லா குழுவினர் இருக்கும் இடம் சிரியாதான் ஆகவே ஹிஸ்புல்ல செய்திருந்தாலும் அது சிரியா விசயத்தில் இந்திய அரசு ரஷியா, சீனா அரசுகளுக்கு எதிராக அமெரிக்க அரசுடன் கைகோர்த்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் ராணுவ நடவடிக்கையை சிரியா மீது கட்டவிழ்த்துவிட உடன்பட்டு போனது. அதுவே காரணம் என்றாலும் தேவை இல்லாமல் எதற்காக் அமெரிக்க ஆதரவை இந்தியா ஐநா சபையில் எடுக்க வேண்டும் ? எதற்காக இன்னொரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை எடுக்க உதவ வேண்டும்? இத்தகைய அமெரிக்க ஆதரவுதானே உலக பயங்கரவாத சக்திகளிடம் இந்தியாவை பகை நாடாக் ஆக்குகிறது ? இந்திய வெளிநாட்டு கொள்கையில் இப்படி அமெரிக்க சார்பு தேவையா? ஹிஸ்புல்லாவும் ஷியா குழுதான். ஈரானும் ஷியா குழுதான். அதனால்தான் இரண்டையும் போட்டு குழப்ப இஸ்ரேல் அம்ற்றும் அமெரிக்காவால் எளிதாக முடிகிறது. எப்படியோ இந்தியாவிற்கு இது தேவையற்றது.

Tuesday, February 14, 2012

காதலர்களா? கழிசடைகளா?

வாலேண்டினே தினம் என்பதை நம்மூரில் காதலர் தினம் என்று அழைக்கின்றனர். அழைத்து விட்டு போகட்டும். அதை இளம் காதலர்கள் கொண்டாடுகின்றனர். கொண்டாடிவிட்டு போகட்டும். ஆனால் கலாச்சார காவலர்கள் நாங்கள் என்று ஒரு இந்துத்துவா கும்பல் அதை கொச்சைபடுத்துவதும், அண்ணனும் தங்கையும் தெருவில் போனால், தாலியை எடுத்து நீட்டுவதும் செய்யும்போது இந்த பத்தாம் பசலிகளில் யார் யோக்கியம் என்று கேட்க தோன்றும். அவர்களை கர்நாடாக சென்று அவர்களது கட்சியின் அமைச்சர்களை பிடித்து அடிக்க சொல்லுங்கள் என்று கூற தோன்றும். அப்படி கூறிவிட்டு காதலுக்கும், காமத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்களே என்று நாம் கேட்கும் போதே இன்னொரு மதம் சார்ந்த அமைப்பும் இன்று காலை செய்தி ஏட்டில் போட்டபடி "கழிசடைகள் தினம்"" என்று தங்களது பங்கை செலுத்தியுள்ளனர்.


இவர்களது அவசர குடுக்கைதனத்தை ஆதரிப்பவர்கள் சிலர் கடற்கரையில் என்ன ஆபாசம் செய்கிறார்கள் தெரியுமா? என்று கேட்கிறார்கள். அப்படி செய்பவர்கள் எண்ணிக்கை ஒரு பத்து விழுக்காடு கூட கிடையாதே? ஒரு மதம் சார்ந்த தொண்ணூறு விழுக்காடு சமாதானம் பேசும்போது, பத்து பேர் குண்டு வைத்தால் எப்படி அந்த மதம் சார்ந்தவர்களைஎல்லாம் பழிப்பீர்கள்? என்று கேட்க தோன்றுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டில் இன்று ஒரு ஆய்வு கட்டுரை. அதில் இளைஞர்கள் மத்தியில் மதம் தாண்டிய காதல், கல்யாணம் நடக்கிறது என்ற செய்தி. சென்ற ஆண்டு எண்ணிக்கையை விட இந்த ஆண்டு மதம் தாண்டிய திருமணங்கள் தமிழ்நாடு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இரண்டு மடங்காக ஆகியுள்ளது என்ற புள்ளி விவரம். அதை பார்த்து கோபப்பட்ட மதவாதிகள் திருமணம் முடிந்தபின், எத்தனை விவாக ரத்து தெரியுமா? என்று கேட்கின்றனர். இந்த கேள்வியை தலக் சொல்லி பிரிவதற்கு உரிமை உள்ள மதம் சார்ந்தோர் பேசலாமா என்று மறு கேள்வி. இப்படியாக இன்றைய சர்ச்சை இந்த சர்ச்சைஎல்லாம் நாங்கள் ஒவ்வொரு நாளும் நடத்தும் சித்திகளும், நிஜங்களும் நிகழ்ச்சியில் நடந்தது என்பதுதான் ஆச்சர்யம்.

நகர்மயமாதலால இளைஞர்கள் மதம் தாண்டி, சாதி தாண்டி காதல் திருமணம் புரிவது அதிகரித்துள்ளதா? அதுவும் ஒரு காரணம். இன்றைய உலகமயமாக்கலின் ஒரு விளைவு கிராமம், நகரம் வேறுபாடு இல்லாமல் இளைஞர்கள் முக்கிய நிரோட்டத்தின் பொருளாதரத்தில் இரங்கி விட்டனர். அதனால் பெற்றோரையும், அவர்கது விவசாய பொருளாதரத்தையும் நம்பி வாழவில்லை. சொந்த பொருளாதரத்தில் வாழ தொடக்கி விட்டனர். அதனால் சொந்தமாகவே தனக்கான வாழக்கை பங்காளியை தேர்வு செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பொருளாதரா வாழ்நிலைதான் முக்கியம். அதில் சாதியையும், மதமும் தலையிட இடம்கொடுப்பதில்லை. அதனால் இன்றைய பொருளாதார தேவைகளை அடிப்படையாக கொண்டு திருமண பந்தங்களை இளைஞர்கள் கட்டமைக்கின்றனர். அதற்கு வேறு வழியில்லாமல் கூட, பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர். எல்லாம் போருகாதர தேவைகளிலிருந்து தீர்மானிக்க படுகிறது. அது நகர்மயமாதளால் ஊக்குவிக்க படும்தானே? கிராம, நகர வேறுபாடு நல்லுக்கு நாள் குறைந்து வரும் தமிழ்நாட்டில் அது அதிகமாக நடக்கத்தானே செய்யும்? இப்படியாவது சாதியையும், மதமும் உடையட்டுமே?

Monday, February 13, 2012

சிதம்பரத்திற்கு தக்க பதில் தருவோம்

பாளையம்கோட்டை மைதானத்தில் கூடன்குலமனு உலைகளை ஆதரித்து பிரதமர் அலுவலக கட்டளைக்கு இணங்க மத்திய அமைச்சர்களான வாசன் மற்றும் நாராயணசாமி ஆகியோருடன் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தி அதன்மூலம் தனது இருத்தலைஉருதி செய்து கொண்ட உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசிய முக்கிய விசயமே, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த கூடன்குலமனு உலை வரும் நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்விதான். இதைதான் திரும்ப, திரும்ப ஊடகங்களும் பரப்பி வருகின்றன. அதை ஒட்டி சில அணுஉலை ஆதரவு என்னத்திற்கு வந்துள்ள மக்களும் கேட்டு வருகின்றனர். ஆகையால் நம் அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்து விட்டது.

அய்யா, சிதம்பரம் அவர்களே, நேநேகள் சொன்னதுபோல 1988 இல் என்ன சய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்விக்கு நாங்கள் 1986 இலிருந்தே என்ன செய்துகொண்டிருந்தோம் என்று பதில் கூற கடமைப்பட்டுள்ளோம். அதாவது 1986 இல் இந்த அணு உலை வரப்போகிறது என்ற செய்தியை இந்திய அரசு பரப்பிய உடனேயே, கூடங்குளம் வட்டாரத்தில் இருந்த ஆண்டன் கோம்ஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதை எதிர்க்க ஆயத்தமானார். அப்போது அவர் ஐக்கிய ஜனதா தளம் என்ற ஜார்ஜ் பெர்ணன்டஸ் கட்சியில் ஆர்வமாக இருந்தார். அந்நேரம் ஜார்ஜ் பெர்ணன்டஸ் அவர்களும் அணு உலைகளை எதிர்த்து கருத்து கூறி வந்தார். அப்போது சென்னையில் இருந்த யு.என்.ஐ.செய்தி நிறுவன ரமேஷ் இந்த கூடங்குளம் அணு உலை பற்றிய ஆராய்ச்சிகளை செய்து அதை வரவிடாமல் செய்ய போராட்டங்களை கட்டமைக்க அன்டன் கோம்ஸ் அவர்களை தொடர்பு கொண்டார். 1987 ஆம் அண்டு இதற்கான பணிகளை கட்டமைக்க ஆர்வலர்கல் நெல்லை,த்க்ஹூத்துகுடி மாவட்டங்களில் திரட்டப்பட்டனர்.


அதை ஒட்டி, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருபத்தி இரண்டாம் நாளில் இதே இடிந்தகரையில் வைத்து ஆண்டன் கோம்ஸ் ஏற்பாட்டில் ஒரு பொதுக்கூட்டம் போடப்பட்டது. அதில் சென்னையை சேர்ந்த ஊடகவியலாளர் ரமேஷ், ஞானி போன்றோர் கலந்து கொண்டு பேசினார். அதில் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில் ஒரு போராட்ட மைப்பு ஏற்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1988 ஆம் ஆண்டு நவம்பர் இருபத்தி ஒன்றாம் நாள் திமுக வின் அன்றைய மாநிலங்கலவை உறுப்பினர் வைகோ ஒரு மாபெரும் எழுச்சி உரையை கூடங்குளம் அணு உலை கொண்டுவரக் கூடாது என்று ஆற்றினார். அப்போது சாட்சியாக காட்டுவதற்கு ஒரு செர்நோபில் அணு உலையின் விபத்து சோவியத் யூனியனில் நடந்து உலகமே அதிர்ச்சி ஆகியிருந்தது. அதன்பின்தான் உங்கள் மத்திய அரசு ௧௯௮௮ ஆம் ஆண்டு நவம்பர் இருபத்தி ஆறாம் நாள் இந்த கேடுகெட்ட கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தந்த்தை கை எழுத்தாக்கியது.

சிதம்பரம் வர்களே, இந்த சுட்டி காட்டுதல்கள் போதுமா? இன்னமும் வேண்டுமா? உங்களுக்கு அந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு ஆண்டன் கோம்ஸ் தலைமையில் தமிழ்நாடு முழுவதும், மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும், மற்றும் கேரளாவிலும், மற்றுமிலங்கையிலும் எப்படி தகலாது பரப்புரையையும் போராட்டங்களையும் நடத்தியது என்ற சான்றுகளை அளிக்க எப்போதும் தயாராக இருக்கிறோம். என் என்றால் நாங்கள் அன்ற்ஹா கூட்டமைப்பில் பணியாற்றியவர்கள்.அதனால் உங்கள் ஒரே சண்டேஹ்கம் இருபத்தஹிந்து ஆண்டுகளாக சும்மா இருந்துவிட்டு இப்போது போராடுகிறீர்கள் என்பதுதான்.அடஹ்ர்கு விடை அளவுக்கு அதிகமாகவே எண்கள் அவசம் இருக்கிறது. உங்கள் வாயை மூடிவிட்டு, அந்த அனஊளையையும் மூடிவிடுங்கள்.

Sunday, February 12, 2012

பினராய் எறிந்த கல்லில் மாங்காய் விழுமா? கற்கள் விழுமா?

பினராய் விஜயன் கேரளாவின் சி.பி.எம். என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர். கேரளா சிபிஎம் தமிழ்நாட்டு கட்சி போல அல்ல.அங்கே அது ஆளும்வர்க்க கட்சி. அதாவது மீண்டும், மீண்டும் ஆட்சிக்கு வரும் தகுதி கொண்ட கட்சி. அதனால் அதன் செயல்பாடுகள் உங்களுக்கு ஒரு முதலாளித்துவ கட்சியை போலவே தோன்றலாம்.ஆனாலும் அது சிவப்பு கொடிகட்சி என்பதால் நீங்கள் அப்படி நினைக்க கூடாது. மாநில செயலாளர் பினராய் விஜயனுக்கும், வி.எஸ். அச்சுதானந்தன் என்ற முன்னாள் முதல்வருக்கும் என்ன தகராறு என்று நீங்கள் கேட்க கூடாது. அது "தத்துவார்த்த" பிரச்சனையாக இருக்கலாம் என்று நீங்களே நினைத்துக் கொள்ள வேண்டும். நடந்து கொண்டிருக்கும் மாநில மாநாட்டில் அச்சுதானந்தன் ஒர்ங்கட்டபட்டாரே என்று நீங்கள் கேட்க கூடாது. அச்சுதாநாதன் எழுதிய அறுபது புகார் கடிதங்களும் அரசியல் தலைமை குழுவான பொலிட்பீரோவில் விவாதிக்க பட்டதா? என்று நீங்கள் கேட்க கூடாது. பொதுவுடைமை கட்சியில் விமர்சனம், சுய விமர்சனம் இரண்டும் வரும், போகும் என்று நீங்கள் சும்மா இருக்க வேண்டும். பினராய் விஜயனை கண்டித்து அச்சுதானந்ததிற்கு ஆதரவாக, வந்திருந்த யச்சுரியும், பிருந்தாகரந்தும் பேசினார்ககளே என்று நீங்கள் திருப்தி அடைய வேண்டும். ஐந்தாவது முறையாக மாநில செயலாளராக பினராய் விஜயனை இந்த முறை முன்வைத்ததே அச்சுதானந்தன் தான் என்று நீங்கள் அறிய வேண்டும். அதுதான் கம்யுனிஸ்ட் கட்சியின் தந்திரம் என்று கூறக்கூடாது. அது சிறுபான்மையை வைத்து பெரும்பான்மை கருத்தை சொல்ல வைக்கும் கட்சி வழி என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது புதிய பிரச்சனை ஆரம்பமாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்காக பல கிளைஅமைப்புகளும், வெகு மக்கள் அமைப்புகளும் சுவரொட்டி போடுவார்கள் அல்லவா? அதுபோல ஒரு சுவரொட்டியை சி.ஐ.டி.யு.போட்டுள்ளது. அந்த சுவரொட்டியில் "ஏசுநாதரின் கடைசி விருந்து" என்ற பிரபல விருந்தை பற்றி "மாற்று முகங்களுடன்" அச்சிடப்பட்டுள்ளது. அதாவது ஏசுநாதரும், யோவானும், காஷியசும், எல்லா பதின்மூன்று சிஷ்யர்களும் இணைந்து சாப்பிட்ட உணவு சாப்பிடும் படத்தை அப்படியே மாற்றி அரசியல்வாதிகளை போட்டு அச்சடிக்கபட்டுள்ளது. அதாவது ஏசுநாதர் இடத்தில் அமெரிக்க அதிபர் பார்க் ஒபமா, மாட்டார் சீடர்கள் இடங்களில் சோனியா, மன்மோகன், ராகுல்காந்தி, ஏ.கே.அந்தோணி, ஊமன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா, எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசி ஆகியோர் இருப்பது போன்ற படம் அது. அந்த படத்தில் " முதலாளித்துவத்தின் கடைசி விருந்து" என்று எழுதப்பட்டுள்ளது. இது ஏசுநாதரின் கடைசி விருந்து என்ற மிகவும் புனிதமாக் கிருத்துவ மக்களால் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளபட்ட ஒரு படத்தை அவமானப்ப்டுத்துவது என்ற முழக்கம் இப்போது கிளம்பி உள்ளது.

இந்த சுவரொட்டியை சி.ஐ.டி.யு. பல இடங்களில், குறிப்பாக திருவனந்தபுரத்தில் குன்னபுழா, பேரூர் கோணம், தக்கனபுரம், ஆகிய இடங்களிலும் ஒட்டியுள்ளது. ஊமன் சாண்டி இந்த சுவரொட்டியை கடுமையாக கண்டித்துள்ளார். மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது என்றார். கேரளா கத்தோலிக்க திருசசபை, " இந்த கம்யுனிஸ்டுகள் தான் கடைசி உணவு எடுக்கிறார்கள் என்றும், ரஷியா, கிழக்கு ஜெர்மனி ஆகியவை அழிந்து விட்டன என்றும், சீனாவில் இருப்பது கம்யுனிசம் அல்ல" என்றும் கூறியுள்ளார். அதேபோல சிரோ-மலபார் திருச்சபையின் பாதிரியார் பால் தலைக்கா கடுமையாக விமர்சித்துள்ளார். கேரளா கத்தோலிக்க பேராயர்களின் மாநாட்டின் பேச்சாளர் ஸ்டீபன் அலட்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயன் இந்த சுவரொட்டி கட்சி தலைமைக்கு தெரியாமலேயே வெளிவந்து விட்டது என்றும் அதை தாங்கள் உடனேயே கிழித்து விட சொல்லி விட்டோம் என்றும் பதிலுரை கூறியுள்ளார்.

நம்முடைய சந்தேகம் எல்லாம் பினராய் விஜயனுக்கு வேண்டாத கட்சிக்குள் இருக்கும் கும்பல் செய்திருப்பார்களோ? ஏன்? எதற்காக் அவர்கள் பினராய்க்கும் கிருத்துவர்களுக்கும் "சண்டை" மூட்ட வேண்டும்? மார்க்சிஸ்ட் கட்சிதான் தன்னை எப்போதுமே மதவாத வாக்குகளை விட்டு கேரளாவில் தூரம் தள்ளி நிற்குமே? இப்போது பினராய் விஜயனுக்கும், கிருத்துவ மதவாதிகளுக்கும் இடையில் எதற்காக புதிய சண்டையை மூட்ட அவரது எதிர் அணி வேலை செய்ய எவ்ண்டும்? அதாவது எர்ணாகுளம் மாவட்டத்தின் பிரவம் தொகுதியில் மானி காங்கிரஸ் ஜேக்கப் இறந்தபின் இடைதேர்தல் வருகிறது. அதில் மானி காங்கிரஸ் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு பெரிய லாபமோ, நட்டமோ இல்லை. அதேநேரம் பினராய் விஜயனின் ஆளான முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் { மாநில மாட்டில் அச்சுதானததிற்கு எதிராக செயல்பட்டவர்} மானி இடம் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்தாராம். அதில் மானி காங்கிரசின் எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இடதுசாரி கூட்டணிக்கு வந்துவிட்டால், மானிக்கு முதல்வர் நாற்காலி உறுதி என்று கூறியுள்ளாராம். இத்தகைய காய் நகர்த்தல் மூலம் பினராய் விஜயனின் எதிரான அச்ச்தானந்ததை முதல்வராக வர விடாமல் தடுத்து விடலாம். அதேசமயம் இடதுசாரி அரசாங்கத்தை கேரளாவில் ஏற்படுத்தி விடலாம். ஊமன் சாந்தியின் காங்கிரஸ் தலைமையிலான் ஐக்கிய ஜனநாயக கூட்டணி அரசை கலைத்து விடலாம். பினராய் விஜயனும் ஒரு அமைச்சராக வந்து விடலாம். ஒரே கல்லில் எத்தனை மாங்காய்களை வேண்டுமானாலும் அடித்து விடலாம் என்பது அந்த விஜயன் குழுவிற்கு கணக்கு.

மேற்கண்ட கணக்கை முழுவதும் இந்த குறிப்பிட்ட சுவரொட்டி கலைத்து விட்டதா? இந்த சுவரொட்டி அச்ச்தானந்ததிற்கும், ஊமன் சாந்திக்கும் உதவி செய்து விட்டதா? இந்த சுவரொட்டி பற்றி சி.பி.ஐ. கட்சியின் தலைவர் ஒருவர் மார்க்சிஸ்ட் மாநாடு ஒரு "நிகழ்ச்சி மேலாண்மை" என்று கூறி விட்டார். அதற்கு பினராய் அவரை காய்ச்சி எடுத்து விட்டார். அவரோ பதிலுக்கு ஏசுநாதரை உலகம் முழுவதும் கம்யுனிஸ்டுகள் ஒரு புரட்டிசியாளராக பார்கிறார்கள். அவர் படத்தை வைத்தது தவறல்ல. ஆனால் அந்த கடைசி விருந்து சுவரொட்டியில் நீங்கள் எப்படி "முகங்களை மாற்றலாம்?" என்று கேட்டுள்ளார். அதனால் இன்று சென்னை நியு இந்தியன் எக்ஸ்ப்ரெசில் அந்த செய்தி வந்து விட்டது. தோண்டினால் அதற்கு பின்னால் இவ்வளவு செய்திகள் உள்ளன. அதேசமயம் பினராய் விஜயன் மாநாடு தொடங்கும்போதே "ஏசுநாதர் உலகின் முதல் புரட்சியாளர்" என்று வேறு கூறிவிட்டார். அதை உடனேயே மலபார் பேராயர் ஆதரித்து கூறிவிட்டார். இப்படியாக கிருத்துவ வாக்கு வங்கிகளை குறி வைத்து பேசப்படும் பேச்சுகள், நமக்கு மானி காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதும் கிருத்துவ வாக்கு வங்கி என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியவில்லை.