Saturday, March 10, 2012

See Jaya T.V. ??

நாளை மார்ச் 11 ஞாயிறு இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு ஜெயா டி.வி.யில்

அரைமணிநேரம் நேர்முகம் நிகழ்ச்சியில் நானும், ரபி பர்நாடும் அய்.நா.வில் இலங்கை மீதான

போர்குற்ற விசாரணைக்கான அமெரிக்கா தீர்மானம் மீது விவாதிக்கிறோம். நாடு கடந்த

தமிழீழ அரசாங்க புத்தகம் பற்றியும், அதன் பிரதமர் விசவனாதன் உரூதரகுமார் பற்றியும்

நான் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறேன்.முடிந்தால் பார்க்கவும்.--------மணி

Thursday, March 8, 2012

தோழர் குறுஞ்சி அவர்களுக்கு,

தோழர் குறுஞ்சி அவர்களுக்கு,
நீங்கள் அறிவித்துள்ள மாநாடு ஆய்வு கூட்டம் நல்ல முயற்சி. நான் வரமுடியவில்லை என்றாலும் எனது கருத்துக்களை இங்கே உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். அவற்றில் பயனுள்ளவற்றை எடுத்துக் கொண்டு, பயனற்றவற்றை நீக்கி விட வேண்டுகிறேன். ஏன் என்றால் நாம் எல்லோரும் ஒரே நோக்கத்தில் அணு உலை எதிர்ப்பில் பணியாற்றினாலும், நமக்குள் ஒவ்வொருவரும் பல்வேறு அனுபவங்களில் இருந்து வருவதால், வேறுபட்ட கோணங்களும், பார்வைகளும், கருத்துக்களும் இருக்க வாய்ப்புள்ளது.

முதலில் அந்த சென்னையில் நடத்தப்பட்ட மாநாடு ஒரு நல்ல முயற்சி. சரியான நேரத்தில் நடத்தப்பட்டது. அப்படி ஒரு மாநாட்டை தலைநகர் சென்னையில் நடத்த திட்டமிடும்போது, எனக்கும் பல தோழர்களுக்கும் சென்னையில் உள்ளோருக்கு தெரியாமலேயே திட்டமிடல் திருச்சியில் நடந்து விட்டதே என்ற வருத்தம் உண்டு. தெரிந்திருந்தால் திட்டமிடலில் இருந்தே நாங்களும் கலந்து கொண்டு இருக்கலாமே. பரவாயில்லை. மாநாடு வெற்றிகரமாக நடந்தது. அதில் மூன்று அமர்வுகளாக நடத்தப்பட்டதும் சிறப்பு. அதிலும் ஒவோருவரையும இனைக்க வசதியாக பேச்சாளர்களை கருத்த்ரங்கு , பேரணி, வெளி அரங்கு என பிரித்து நடத்தப்பட்டது வெற்றிகரமாக நடந்தேறியது.. அந்த ஆலோசனைகளை பாராட்ட வேண்டும். பல தரப்பட்டவர்களுகும் நேரம் பிரித்து நடத்தப்பட்ட முறையும் சில தலைவர்கள் விசயத்தில் மீறி சென்றாலும் ந்ல்ல முயற்சி.அதேபோல பேரணி சென்னை ஊடகத்தாருக்கு படங்கள் போட உதவியாக அமைந்தது. அது கூவம் கரையருகே நடத்தப்பட்டதை காவல்துறை அனுமதி என்ற பெயரில் நாம் ஏற்றுக் கொண்டாலும் மாற்று ஆலோசனை பேசியிருக்கலாம். பரவாயில்லை.

அனேகமாக எல்லோருமே அணு உலை எதிர்ப்பில் பக்வேறு க்ருத்துகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.அதுவும் மாநிலமெங்கும் இருந்து வந்திருந்த அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. பல மக்கள் பிரிவினர் மத்தியிலும், ஊடகத்தார் மத்தியிலும் அமைச்சர் சிதம்பரம் போன்றவர்கள் கிளப்பி விட்ட பொய் செய்தியான அணு உலையை கட்டி முடித்தபின் ஏன் எதிர்க்கிறார்கள்? என்பதும், என்பத்தி எட்டு காலத்திலிருந்தே ஏன் எதிர்க்கவில்லை? எனபதும் முக்கியமாக் சரியான பதிலுடன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு தனி அமர்வு ஏற்பாடு செய்து மாநாடு கொடுத்திருந்தால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்ப என்பத்தி ஆறு காலம் தொட்டு, குறிப்பாக என்பத்தி ஏழாம் ஆண்டு மூதல் உருவான கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு வரலாற்றில் உள்ள பல்வேறு முக்கிய படிக்கட்டுகளை சொல்ல உதவியிருக்கும். பல்வேறு வெற்றிகள் மத்தியில் விடுபட்ட விசயமாக அதை வைத்துக கொள்ளலாம்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு எப்படி நீண்ட வரலாறு கொண்டதோ அதேபோல அந்த இயக்கம் மக்களின் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது என்பதும், மக்கள் இயக்கமாக நடக்கிறது எனபதும் அதை தனிநபர் இயக்கம் போல கட்ட முயலும் ஆளும் கும்பலின் தந்திரத்தை மறுப்பதற்கு மேலும் அழுத்தம் தந்திருக்க வேண்டும். நம்மை திசை திருப்ப அது தனிநபர் சார்ந்தது போல சித்தரிப்பது டில்லியின் தந்திரம். அணு உலை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதத்தை திசை திருப்ப பிரதமர் முதல் முயர்சிப்பதை நாம் கவனமாக மறுக்க வேண்டும்.அவர்கள் நம்மை நிதி பற்றி பேசி திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அவர்கள் அந்த போராட்டம் வரலாறு கொண்டதல்ல என கூற முயற்சிக்கிறார்கள். நாம் வரலாற்றை கூறி அதை மறுக்க ஆவண செய்ய வேண்டும்.

சீமான் பேச்சும், திருமா பேச்சும் சிறப்பு. அதில் திருமா இந்த போராட்டம் இருபத்தைதாண்டு வரலாறு கொண்டது, ஆனால் ஊடகங்கள் தான் அதில் தாமதமாக பதிவு செய்துள்ளன என்று கூறியது ஒரு விதத்தில் சாட்டையடி. அதை மதுரை சிம்மக்கல் பாண்டியன் பேசும்போது, அன்று போராட்டத்திற்கு முகமாக ஆண்டன் கோம்ஸ் இருந்தார் , இன்று உதயகுமார் முகமாக இருந்க்கிறார் என்றும், நாளை எந்த குமாராகவும் இருக்கலாம் எனவும் ,ஆனால் போராட்டம் தொடரும் என்று கூறியது சிறப்பு. அதேசமயம் தனது பங்கு இந்த போராட்டத்தில் எப்படி என்று அவர் பதிவு செய்ய எண்ணி "தான் அடிபட்ட செய்தியை கூறும்போது, தனது போராட்டத்துடன் ஆன்டனும் இணைந்து வந்தார் என்று கூறியது விஷயம் தெரிந்தவர்களுக்கு சிரிப்பை வரவழைத்து. உள்ளபடியே ஆண்டன் கோம்ஸ் தலைமையில் ஜி.ரமேஷ், ஐகப் சாமி, சீ.ஏன். தெய்வநாயகம், நான் ஆகியோர் தலைமை குழு பணிகளை செய்து வரும் வேளையில், இந்திய மக்கள் முன்னணி சார்பாக நெல்லை சங்கரபாண்டியன் தலைமையில் நாங்கள் ஏற்பாடு செய்த சைக்கிள் பேரணியில், தூத்துக்குடி முதல் நெல்லை வரை செல்லும்போது, கூடங்குளத்தில் அணு உலை ஆதரவு உழுவாக அன்று செயல்பட்ட காங்கிரஸ், சீ.பி.எம். குழுவினர், சைக்கிள் பேரணியின் கடைசியில் வந்த விளாத்திகுளம் சங்கர்ராஜ், பாண்டியன் ஆகியோரை அடித்து சைக்கிளை பஞ்சர் செயுததை முன்னால் சென்று விட்ட ஆண்டன், நான், சங்கரபாண்டியன் ஆகியோர் அடிபட்டவர்கள் நீண்ட நேரம் கழித்து கூடங்குளம் ஊரை தாண்டி நாங்கள் செல்லும்போது வந்து கூறியதால் மட்டுமே உணரமுடிந்தது. அப்போதும் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மோதல் உருவாகாமல் நாங்கள் தவிர்த்தோம். ஏன் என்றால் அதை ஒரு சாதி மோதலாக உருவாக்க எதிரிகள் திட்டமிடலாம் என்பதால். இத உண்மையை முழுமையாக கூறினால் அது அனுபவமாக ஆகிவிடும். ஒருவர் தன்னை மட்டும் முன்னிறுத்த அந்த உணமைகளை அறை குறையாக கூறினால் அது இயக்கத்திற்கு உதவாது. அன்று ஆண்டன் தலைமையிலான இயக்கம் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் , கேரளாவிலும் நடைபெற்றது.

அந்த பெயருக்கு அத்தனை வரலாறு இருக்கிறது. அதை விடுத்து ஏன் இரண்டாயிரமாவது ஆண்டுகளில் உருவான புதிய பெயரை சிலர் தொங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதே விலக வில்லை. அதனால் அணு உலை ஆதரவாளர்களுக்கு இது இப்போது ஆரம்பித்த போராட்டம் என்று முத்திரை குத்த வசதியாக போயிருக்கலாம். பரவாயில்லை. இன்று களத்தில் அந்த இடத்தில் நிற்பவர்கள் எண்ணுவது போலவே நடக்கட்டும். ஆனால் அங்கேயே கூடங்குளம் ஊரில் உள்ள நாடார் சமூகம் மத்தில்யில் ஊராட்சி தலைவராக இருக்கும் சண்டல்முத்துராசும், போராட்டத்தை ஆறு ஆண்டுகளாக நடத்தும் ரவி என்ற முன்னோடியும், "கூடங்குளம் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்" என்ற பெயரில்தான் போராட்டங்களை நடத்துகிறார்கள் என்பது அண்மைக்கு சொல்லப்படுகிறதா? அந்த ரவி, சாண்டல் ஆகியோரது போராட்டங்களை எனக்கு ஆண்டன் அவ்வப்போது கூற நான் அதை வின் காட்சி ஊடகத்தில் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து கூறி வருவது எத்தனை பேருக்கு தெரியும்? நிச்சயமாக ந்த வட்டார அதாவது கூடனுலம் வட்டார மக்களுக்கு அவர்கள் தொடர்ந்து வின் டி.வி. பார்ப்பதால் தெரியும். அனுபவங்களை தெரிந்து கொண்டு தொடர்வதே ஒரு இயக்கத்திற்கு ஆரோக்கியமானது. ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி கொண்டு இயங்குவது சிறப்பு. அதேசமயம் தங்களை "தொடக்கம் என்று எண்ணாமல் தொடர்ச்சி" என்று புரிந்து கொல்வது ஒரு இயக்கத்திற்கு நல்லது.

திட்டமிடலிலும், அதை அறிவித்தலிலும் புறக்கணிக்கப்பட்டதாக எண்ணி நாங்கள் விலகி நின்றபோது எங்களை அரவணைத்து அந்த மாநாட்டிற்கு அழைத்து வந்த பெருமை கொளத்தூர் மன்யு அவர்களுக்கே சாரும். இன்னமும் போராட்டங்களின் மத்தியில் இருக்கும் நாம் மக்கள் பிரதிநிதிகளை முன் நிருத்ஹ்டி, தொண்டு நிறுவன தோழர்கள் சற்று பின் நின்று உதவினால் போராட்டம் மேலும் வலு பெரும். நன்றி, தோழரே. ஏற்கவேண்டும் எனப்டர்காக அல்ல, பதிவு செய்ய எவ்ண்டும் என்பதற்காக எனது கருத்துகளை சிறிய அளவே பதிவு செய்துள்ளேன். நன்றி. -------தோழன்,டி.எஸ்.எஸ்.மணி.

Friday, March 2, 2012

கலைஞரின் கூற்று பொய்த்து விட்டதா?

நேற்று அதாவது ,மார்ச் முதல் நாள் ஏடுகளில் கலைஞர் கொடுத்த உரை வெளியாக்கி உள்ளது. அதில் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்க சிரமம் எடுத்து கொண்டு கல்பாக்கம் அணு உலை ஆபத்து எதையும் தரவில்லையே என்றுகூறியுள்ளார். தினகரன் ஏழாம் பக்கத்தில் அது வெளியாகி உள்ளது. நெரடிஆதரத்திர்காக அவரது பாணியிலேயே பேசினால், அவரது முரசொலி ஏட்டிலேயே அது சிறப்பாக வெளி வந்துள்ளது. அதாவது மார்ச் முதல் நாள் முரசொலி ஏடு. அதன் மூன்றாம் பக்கம். தலைவர் கலைஞர் உரை என்ற தலைப்பில், மூன்றாவது பத்தியில் அது வெளியாகி உள்ளது. "கூடங்குளத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு பக்கபலமா?. அல்லது பேரத்தின் அடிப்படையில் நடைபெறுகின்ற பலமா? என்ற தலைப்பில் அது வெளியாகி உள்ளது. அது கல்பாக்கம் அணு உலை பற்றியது. மூன்றாம் பத்தியில் இரண்டாம் பாரா.

நம்முடைய சென்னைக்கு பக்கத்தில் கடற்கரையோரத்தில் இருகின்ற இதைப்போன்ற அணு மின் நிலையம் கல்பாக்கத்தில் இருக்கிறது இப்படி அதில் கலைஞர் தொடங்குகிறார். அந்த அணு மின் நிலையம் எத்தனையோ ஆண்டுகளாக இருக்கிறது. இவர்கள் சொல்கின்ற ஆபத்துக்கள் என்றைக்காவது ஏற்பட்டது உண்டா? அப்படி ஏதாவது ஆபத்துகள் ஏற்பட்டு அதை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருந்தது உண்டா? இப்படியாக கலைஞர் தொடர்கிறார். ஒரு கல்ப்பாக்கதை சென்னையின் அருகிலே அனுமதித்திருக்கின்ற நாம் கடற்கரை ஓரத்தில் அனுமதித்திருக்கின்ற நாம் ஒரு கோடந்குலத்தைஎதிர்ப்பதர்க்கு மறைமுகமாக ஆதரவு காட்டுகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது. மாநில அரசு என் இதுவரை மவுனமாக இருக்கிறது? என்று அந்த பாராவில் எழுதுகிறார் கலைஞர்.அதாவது கலைஞருக்கு கல்பாக்கம் ஆபத்தானதுதான் என்று நிரூபித்தால் அதை வைத்து அவரே அணு உலைகள் வேண்டாம் என்ற அவரது பழைய நிலைப்பாட்டிற்கு வந்துவிடுவார் என நாம் எதிர்பார்க்கலாமா?

இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்பாக்கம் அணு உலை அருகே அந்த விபத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன என்பதை நாம் கலைஞர் அவர்களுக்கு தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளோம். ஏற்கனவே டாக்டர் புகழேர்ந்தியும், டாக்டர் ரமேஷ் என்பவரும் சேர்ந்து எழுதிய புத்தகத்தில் கல்பாக்கம் அணு உலை அருகே ஒரு எரிமலை கடலுக்குள் இருக்கிறது என்று எழுதியுள்ளார்கள். அதற்கு அனைத்து நாட்டு புவியியலாளர்கள கூற்றையும் மேற்கோள் காட்டியுள்ளனர். அந்த புத்தகம் அணு உலை எத்ரிப்பு மாநாட்டில் சென்னையில் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தை இரண்டு நாள் முன்பு முதல்வரை சந்திக்கும்போது, டாக்டர் ரமேஷ் கொடுத்துள்ளார். அந்த எரிமலை வெடித்த சிறிய வெடிப்பு இப்போது நமக்கு தெரிந்துள்ளது. இரண்டு மாதம் முன்பு கல்பாக்கம் அருகே உள்ள "பரமான்கேணி" என்ற மீனவ கிராமத்தில் உள்ளோர் நாற்பது படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது கடலுக்கு மத்தியில் ஒரு புகை கிளம்பி பெரிதாக வந்துகொண்டு இருந்தது. இவர்கள் பாய்ச்சிய நங்கூரம் ஒரு படகில் அறுத்து கொண்டு வந்துள்ளது. தண்ணீர் சுட தொடக்கி விட்டது பயந்துபோன மீனவர்கள் கரைக்கு திரும்பி உள்ளனர். அதை நான்கு மீனவ குப்பங்களை சேர்ந்தோர் கரையில் நின்று கண்டுள்ளனர். அந்த சுடு தண்ணீரில் தன்கள் கைகளில் கொப்புளம் வந்ததையும் அந்த மீனவாகள் கூறுகின்றனர்.


மேற்கண்ட செயல்களை மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் அப்துல் சமது கானொளியில் எடுத்து வந்துள்ளார். கலைஞர் அவர்களே இப்போது கூறுங்கள்? இப்போது நீங்களும் எங்களுடன் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வருகிறீர்களா? அல்லது தங்கள் கூற்று பொய் என்று அம்பலப்பட்டுவிடாதா?

Wednesday, February 29, 2012

கலைஞர் மீது கோபப்படும் தமிழர்களுக்கு.....

கடைசியாக "பூனை பையை விட்டு வெளியே வந்துவிட்டது".இதுதானே கலைஞர் அவர்களது கூடங்குளம் பற்றிய அறிக்கைக்கு பிறகு தமிழர்களது கருத்து? கூடங்குளத்தில் அணு உலை வரவேண்டும் என்று கலைஞர் கூறியதையும், ஜெயலலிதா என் மொவுனமாக இருக்கிறார் என்று கலைஞர் கேட்டத்தையும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ."பின்புல்கமாக" இருக்கிறாரா? என்று ஜெயா பற்றி கலைஞர் கேட்டதையும், கேள்விப்பட்ட தமிழர்கள் அனைவரும் கோபப்படுகிறார்கள். இதுவரை கருத்து சொல்லாத திமுக இப்போதாவது கருத்து கூறியிருக்கிறதே? என்று மகிழ்ச்சி அடையுங்கள். கலைஞருக்கு அணு உலை பற்றி தெரியாதா? அதன் தீமை புரியாதா? ஏற்கனவே இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு அவரது ஆட்சி காலத்தில் கூடங்குளம் சென்று அணு உலைக்கான அடிக்கல்லை நட்ட முயன்றாரே? அப்போது அதை எதிர்த்து ஆண்டன் கோம்ஸ் தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டதால் அதை கை விட்டாரே? அதை மறந்துவிட்டாரா? அப்படியொன்றும் இல்லை. அவருக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் இன்று மின்சாரம் தடை செய்யப்படுவது அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்களில் பெரும்பாலோர் எந்த மின்சாரம் பற்றிய அறிவும் இல்லாமல், எந்த ஒரு மின் உற்பத்தி முறைகளை பற்றிய அறிவும் இல்லாமல், கூடங்குளம் அணு உலை உற்பத்தியை ஆரம்பித்தால் போதும், உடனேயே எல்லோருக்கும் ம்ன்சாரம் கிடைத்து விடும் என்ற பொய் பரப்பலை நம்பி அணு உளையாவ்து வரட்டும், மின்சாரம் வேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அடுத்தவர் ஆட்சி மீது "தவறாகா " ஒரு அதிருப்தி கிளம்பினாலும் பரவாயில்லை என்ற "புத்தியை" வைத்து கொண்டு காய் நகர்த்துகிறார்

ஆனால் 1987 இல் நடந்தது என்ன என்பதை நாம் மக்கள் முன்பு சொல்லியாக வேண்டும். அப்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கருத்துகள் சென்னையில் மையங்கொண்ட நேரம். டாக்டர் சி.என்.தெய்வநாயகம் அந்த அணு உலையை எதிர்த்து அதனால் உருவாகும் "புற்று நோய்களை" விளக்கி "காணொளி" மூலம் எங்களை எல்லாம் உருவாக்கி வந்த காலம். யு.என்.ஐ. செய்தி நிறுவன ஜி.ரமேஷ் ஜார்ஜ் பெர்ணன்டஸ் மூலம் அணு உலை எதிர்ப்பையும் கற்றுக் கொண்டு, எங்களை திரட்டி வந்த நேரம். அப்போது ஜூனியர் விகடனில் ஜி.ரமேஷ் "நாகார்ஜுன்" என்ற பெயரில், ஏ.எஸ். பன்னீர்செல்வம் அணு உலகை ஆபத்தை பற்றி தொடர் எழுதிய காலம். அப்போது திமுக வின் முரசொலி ஏடு, ஒரு வார ஏடு கொண்டு வந்தது. அதற்கு பெயர் "புதையல்" . அந்த ஏட்டிற்கு ஞானி ஆசிரியராக இருந்தார். அந்த எட்டில் அணு உலைகளின் ஆபத்தை பற்றி பக்கம், பக்கமாக எழுதினார். அப்போது முரசொலி மாறனிடம் அணு உலயுகளின் ஆபத்து பற்றி ஞானி பெசினார்ட். மூன்று மணி நேரம் பேசியதாக இப்போதும் நினைவாக கூறுகிறார். அதை முரசொலி மாறன் ஏற்றுக் கொண்டு, திமுக செயற்குழுவில் அணு உலயுகளின் ஆபத்து பற்றி விளக்கினார். அதையொட்டி திமுய்க விற்கும் அணு உலைகளை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதையொட்டியே கலைஞர் வழிகாட்டலில் வைகோ நாடாளுமன்றத்தில் அணு உலயுகளின் ஆபத்தை பற்றி உரையாற்றினார். அதன்பிறகு திமுக தனது செயற்குழு தீர்மானத்தில் அடுத்த ஆண்டே "பாதுகாப்பான அணு உலைகள் வேண்டும்" என்று மாற்றி எழுதியது. இந்த சந்தர்ப்பவாத மாற்றம் ஏன் என்று ஞானி முரசொலி மாறனிடம் கேட்டுள்ளார்.அடஹ்ர்கு மாறன் வெளிப்படையாக உங்களுக்கு தெரியாதா ஞானி? மத்திய பாதுகாப்பு அமைச்சரவையிலிருந்து நெருக்கடி கொடுத்து விட்டார்கள் என்று பதில் சொல்லியிருக்கிறார். இந்த தகவலை ஞானியே சென்ற வாரம் நடந்த வழகக்ரிஞர்களின் அணு உலை எதிர்ப்பு கூட்டத்தில் கூறினார். . இதுதான் திமுக.

இப்போது புரிகிறதா? கலைஞர் யார் என்று புரிய நமக்கு இத்தனை தூரம் சென்று நிரூபிக்க வேண்டுமா? இப்போது சிதம்பரம் கலைஞரை தொடர்பு கொண்டு நீங்கள் அணு உலை எதிர்ப்பு நிலை எடுக்காதீர்கள் என்றும், ஜெயாவிற்கு நெருக்கடி கொடுங்கள் என்றும் கூறியதிலிருந்து தான் திமுக களத்தில் இப்போது குதித்து காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராக வரும் புயலை நிறுத்தி வைத்து காங்கிரஸ் அரசை காப்பாற்ற பேசுகிறது. அதில் மக்களின் பின்தங்கிய உணர்வுகளை பயன்படுத்த திமுக எண்ணுகிறது. இது மீனவ மக்களை மட்டுமல்ல, எல்லா தமிழர்களையும் திமுக விற்கு எதிராக மீண்டுமொருமுறை திருப்பிவிடும் என்று கலைஞர் எண்ணி பார்த்தாரா?

Tuesday, February 28, 2012

யாரை குறிவைக்கிறார் கலைஞர்?

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழா என்பதாக கலைஞர் தலைமையில் அன்பழகன், கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் முழங்க இன்று முரசொலி முக்கியமாக வெளியிட, நமக்கெல்லாம் எதோ வரலாற்று செய்திகளை அளிக்க இருக்கிறார் என்று எண்ணினால், இது வேறு எங்கோ செல்வதுபோல தெரிகிறது. .திராவிடமே தமிழ் என்றும் தமிழே திராவிடம் என்று அப்போது கலைஞர் அறிவித்தார். 1942 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் நாள் "திராவிட நாடு" நாளிதழை தொடக்கி வைத்து அண்ணா அதில் எழுதிய ஐந்து நாள் தொடர் தலையங்கத்தில், "தமிழ்நாடு என்றால் திராவிடநாடு என்றும், திராவிடநாடு என்றால் தமிழ்நாடு என்றும்" நாம் எடுத்து காட்டவேண்டிய அவசியம் சிறிதும் இல்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன, என்பதாக ஆன்னாவை மேற்கோள் காட்டுகிறார் கலைஞர். ஜெம் டிக்சனரி யில் 440 தாவது பக்கம், ஐந்தாவது வரியில் திராவிட என்பதற்கு தமிழ்நாடுஎன்று போடப்பட்டுள்ளது என்றார் கலைஞர். இப்படி பல உதாரணங்களை காட்டி அவர் என் இன்று இந்த அளவு அன்று கூறிய கருத்துகளை கூறி வாதாட தேவை எழுந்துள்ளது?


அதற்கு கலைஞர் வழக்கம்போல பல உதாரணங்களை காட்டுகிறார். அதில் முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு, ராதா மணாளன் எழுதிய திராவிட இயக்க வரலாறு, திருநாவுக்கரசு எழுதிய நீதிக்கட்சி வரலாறு, வரதராஜுலு நாயுடு எழுதிய நீதிக்கட்சி இயக்கம், என்று தொடக்கி பல ஆதாரங்களை காட்டுகிறார். டி.எம்.பார்த்தசாரதி எழுதிய "திமுக வரலாறு" என்ற புத்தகத்தை கலைஞர் கவனமாக மறந்துவிட்டார். அதில் கருணாநிதி பெயர் முக்கிய பெயர்களில் இல்லை என்பதால் அதை கூறமாட்டார் என்று நாம் கூறத்தயாராயில்லை. ஆனால் இன்று தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் ஒரு தமிழின அடையாளம் "சரியாகவோ, தவறாகவோ" பறப்பட்டு வருகிறது அதில் "திராவிடர்" என்பது கர்நாடகம், கேரளா, ஆந்திரா ஆகியவற்றை குறிப்பது என்றும் அந்த மாநிலங்கள இப்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கின்றன என்றும் ஆகவே தமிழனை தமிழன் என்றே விளியுங்கள் என்று கூறுவது ஒரு பரிமாணப் போக்கு என்று அவரால் கூறமுடியவில்லை. ஒருபுறம் நூற்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கே தமிழ்நாட்டில் வந்து தமிழர் ஆண்களையோ, தமிழ் பெண்களையோ மணமுடித்தவர்கள் ஆந்திராவில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வந்திருந்தாலும் அவர்கள் "தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும்" பயன்படும் அளவிலும், அதற்கான வேலை திட்டத்திலும் பங்கு கொள்ளும்போது தமிழர்கல்லா காணப்பட வேண்டும் என்ற நமது அடையாளப்படுத்தலில் இருக்கும் அறிவியல் கண்ணோட்டத்தை எடுத்து கொண்டு பேச கலைஞர் தயாராக இல்லை. மாறாக அந்த காலத்தில் திராவிடர் என்றால் தமிழர் என்ற புரிதல் இருந்தது என்பதை இந்த காலத்தில் அண்டை மாநிலங்களான திராவிடர் மாநிலங்கள் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பொது அதை விளக்க முடியாமல் பேசுவது, கீறல் விழுந்த இசைத்தட்டாகவும், பழைய கள்ளை கொடுத்து அதில் வெற்றி பெற முடியாமையையும் காட்டும்.

அதேநேரம் டைம்ஸ் ஆப் இந்தியா எட்டில் இன்று ஒரு கட்டுரை கலைஞரது கூற்று பற்றி வெளிவந்துள்ளது. அதில் சாதியை மீண்டும் கையிலெடுத்து கலைஞர் திராவிடம் பேசுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது "பார்ப்பனர், பார்பனர் அல்லாதோர்" என்ற பழைய கால தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த சரியான, முற்போக்கான முழக்கத்தை மீண்டும் நினைவு படுத்துகிறார் என்கிறது அந்த கட்டுரை. இன்று கலைஞர் குடும்பத்தில் உள்ள பேரங்கள் ஒவ்வொருவரும் பார்ப்பன குடும்பத்தில் பெண் எடுத்திருப்பதை மாட்டும் வில்லாகி பார்க்கிறதா? என்ற கேள்வி எழாத தமிழ் உள்ளங்கள் இல்லை. இது ஜெயலலிதாவை தாக்கிதான் என்று கூறுவாரும் உண்டு,. இல்லை. இது காஷ்மீர் பண்டிட் குடும்பமான நேரு குடும்ப சந்ததிகளை சுட்டி காட்டுகிறது என்று விள்ளக்குவோரும் உண்டு. அப்பப்பா. கலைஞரின் திராவிட யக்க வராலற்றுக்கு இத்தனை விளக்கங்களா?

Thursday, February 23, 2012

திருபாதியை துரத்தும் தனுஷ் பாடல்.

வேளச்சேரியில் ஐந்து வடநாட்டு பையன்களை சென்னை காவல்துறை ஆணையர் திருபாதி சுடச்சொன்னதும், சொன்னார், இப்போது அவரை தனுஷ் பாடல் துரத்திக் கொண்டு இருக்கிறது. ஊடகவியலாளர்களை கண்டாலே தன்னை துரத்தி கொண்டு வருவதாக அவர் அவதானிக்கிறார். அதுவும் ஒவ்வொரு ஊடகவியலாளரும் தன்னை பார்த்து "ஏன் இந்த கொலைவெறி, கொலைவெறி" என்று பாடிக் கொண்டு வருவது போல அவருக்கு தெரிகிறது. இன்று காலை ஆங்கில ஏடுகளில் அவர் நேற்றுய் கொடுத்த செய்திகளை வெளியிட்டிருந்தார்கள். அதில் ஒன்று மகாராஷ்டிரா காவல்துறையிடம் அனுபவங்களை பரிமாறிக் கொண்டு வருகிறோம். அவர்கள் இதே போல கொள்ளையர்களை வங்கிகளில் குறிப்பாக தேசியமயமாகப்பட்ட வங்கிகளில் கொள்ளையடித்தவர்களை பிடித்திருக்கிறார்கள். ஏன் என்றால் தேசியமயமாகப்பட்ட வங்கிகளில் அந்த படம் எடுக்கும் கேமராக்கள் கிடையாது. இப்படியெல்லாம் ஒரு செய்தி. அதில் மறைந்து இருப்பாக்கும் செய்தி இன்னொன்று. என்ன என்றால் மகாராஷ்ட்ராவில் மும்பையில் எந்த கொள்ளையனையும் அவர்கள் பிடித்ஹ்டு பிறகு, "போலி துப்பாக்கி சூட்டில்" போட்டு தள்ளிவிடுவார்கள். இதை ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வில்லை போலும்.

அடுத்து ஆணையர் கொடுத்த தகவல் அனைத்து சி.சி.டி.வி.கேமராவிலும் ஒரு மனிதனின் படம் மட்டுமே அதிகமாக பதிவு ஆகியுள்ளது. அவன்தான் கொள்ளையர் தலைவன் என்கிறது ஆணையம். இந்த செய்தி எல்லா ஊடகங்களிலும் இன்று காலை வெளியிடப்பட்டு விட்டது. அதாவது அவரது காவல்துறை ஆணையம் புலனாய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டிடார்கள் என்று பொருள். அதாவது அந்த செய்தியை பார்த்து நீங்கள் காவல் ஆணையத்தை பாராட்டவேண்டும். அந்த செய்தி வெளிவரும் நேரத்தில் அவர்கள் அந்த கொள்ளையர்களை கொலை செய்திருக்க வேண்டும். ஆனால் அந்த கொலை செய்யப்படும் செய்தியை அந்த ஏடுகள் குறிப்பாக அசச்சு ஊடகங்கள் அதிலும் குறிப்பாக ஆங்கில அச்சு ஊடகங்கள் வெளியிடாமல், தான் கொடுத்த குற்றவாளியை கண்டுபிடித்த செய்தியை மட்டுமே வெளியிட்டிருக்க வேண்டும். அதற்காகவே கொடுக்கப்பட்ட நேற்றைய நேர்காணல் அது. அதேசமயம் அவரது அடுத்த ஆபரேஷனான குற்றம் சாட்டப்பட்டவர்களை அல்லது சந்தேகப்பட்டவர்களை போட்டு தள்ளுவது என்ற திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். அதற்காக காவல் ஆணையம் நேரம் பார்த்தூ கொண்டு இருந்திருக்கிறது. அச்சு ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில அச்சு ஊடகங்கள் அச்சிடப்படும் கடைசி நேரமான இரவு ஒரு மணி வரிக்கும் தங்களது கொலை நடவடிககியை வெளியே விடக்கூடாது. என்னே சூப்பர் ஐடியா?


திட்டமிட்டபடி சம்பவ இடத்திற்கு அதாவது வேளச்சேரி அடுக்கு மாடி குடியிருப்பின் தளப்பகுதிக்கு காவல்துறையினர் இரவு பத்து மணி சுமாருக்கே சென்றதாக தெரிகிறது. பதினோரு மணி சுமாருக்கு அவர்கள் அந்த ஐந்து வாடா இந்தியர்களை போட்டு தள்ளியிருப்பார்கள் என்று தெரிகிறது.ஆனாலும் ஆங்கில அச்சு ஊடகங்களின் அச்சிடும் நேரமான ஒரு மணி வரை அந்த செய்தியை மாநகர காவல் ஆணையம் வெளியிடவில்லை. சூப்பர், திருபாதி அவர்களே என்று நம்மால் கூறாமல் இருக்க முடியவில்லை. அதன்பிறகு இந்த காட்சி ஊடகங்கள் தனகது போட்டிக்காக அனைத்தையும் வேர்லியே கொண்டுவந்து விட்டன. அற்ற்ஹனால் முழு மாநிலமும் இன்று காலையிலேயே அந்த போலி துப்பாக்கி சூடு என்று கருத வாய்ப்புள்ள செயலை வெளியே கொண்டுவந்துவிட்டன. கலையில் எல்லா ஊடகவியலாளர்களும் திருபாதியை மொய்க்க ஆரம்பித்தனர். அவரும் ஜகா வாங்கினார். முதலில் காலையில் ஊடகத்தரை சந்திப்பேன் என்று கூறியவர் பிறகு அதை மாலைக்கு தள்ளி போட்டார். அதற்குள் சிறிது தயார் செய்து கொள்ளலாம் என்பது அவரது அவா. ஆனால் மாலையிலும் அவரால் ஊடகங்களை எதிர்கொள்ள முடியவில்லை. அவசர, அவசரமாக ஊடகங்களுக்கு ஒரு செய்தி அறிவிப்பு போல கொடுத்து விட்டு கேள்விகளை அதிகம் எதிர்கொள்ளாமல் தப்பி ஓட முயன்றுள்ளார். இதுவே அவரை ஊடககார்கள் எல்லாம் தனுஷ் பாடலுடன் படிக் கொண்டே வருவது போன்ற தோற்றத்தை கொடுத்து விட்டது.

காலையில் அரிவாளால் வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது சந்தேகப்பட்டவர்கள் பற்றி கூறிய காவல்துறையினர் தலைவர் அதாவது ஆணையர் மாலையில் அவர்கள் சுட்டார்கள் ஆகையால் நாங்களும் சுட்டோம் என்று மாற்றி சொல்ல வேண்டி வந்து விட்டது. ஊடகத்தார்கள் ஒரு டி.சி. இடம் இறந்தவர்கள் வீடுகளுக்கு தெரிவித்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு தொலைபேசியை ஆப் செய்த நிகழ்ச்சியும் நடந்தது. அந்த அளவுக்கு அவர்களுக்கு தனுஷ் பாடல் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. சுட்ட பிறகு தானே யாரை சுட்டோம் என்று ஆய்வு செய்கிறார்கள்? இது வரலாற்றிலேயே இல்லாத ஒரு போலி துப்பாக்கி சூடு. ஏன் என்றால் இதுவரை காவலர்களுக்கு யாரை பிடித்து சுடுகிறோம் என்று தெரியும். இந்த முறை யாரை சுடுகிறோம் என்று தெரியாமலேயே சுட்டு கொன்று விட்டார்கள். எது எப்படியோ நமக்கு யாரவது சாலையில் ஹிந்தியில் நாலு பேர் பேசிக் கொண்டு சென்றால் இன்றெல்லாம், அவர்கள் கைகளில் ஏதாவது ஆயுதம் இருக்கிறதா? என்று பார்க்க தோன்றுகிறது.

Wednesday, February 22, 2012

சுடப்பட்டது கொள்ளையர்களை தானா?

எதற்காக இந்த நாட்டில் ஒரு அரசியல் சட்டம்? அதன்படிகைதுகள்? அதற்குபிறகு விசாரணை? அதன்பின் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிறுத்துவது? அதன்பின் நீதியரசர் முன்னிலையில் விசாரணை நடத்துவது? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் வழக்கறிஞர் வைத்து வாதாட அனுமதிப்பது? அதைகூட குறுக்கு விசாரணை என்று ஒரு நியதியை ஏற்படுத்தி உண்மையை கண்டறிய முயற்சிப்பது? அதன்பிறகே நீதியரசர் தீர்ப்பு கொடுப்பது? அதற்கு பிறகும் மேல்முறையீடு என்று அனுமதிப்பது? அதில் குற்றம் சட்டப்பட்டவர்க்கு "பிணை" கொடுக்கும் வாய்ப்பு? அதன்பின்னும் மேல் நீதிமன்றத்தில்விசாரனை" அதில் ஒரு தீர்ப்பு? அதையும்கூட மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றம் கொண்டு செல்ல அனுமதிப்பது? அங்க கொடுக்கும் தீர்ப்பை இறுதி தீர்ப்பு என கூறுவது? இத்தனை வரிசை கிராமமான அனைத்து படிக்கட்டுகளையும் நமது சென்னை மாநகர் காவல்துறை கண்காணிப்பாளர் திருபாதி "தாண்டி, தாண்டி" குதித்து "கொள்ளையர்கள்" என்று வரும், அவரது படையும் கண்டுபிடித்த ஐந்து பேரை ஒரே நேரத்தில் சுட்டு கொன்று விட்டார்களே? இத்தனை படிக்கட்டுகளை தாண்டி செல்லும் அனைத்த் வேலைப்பளுவையும், ஒரே நேரத்தில் குறைத்து விட்டார்களே? அது கெட்டிக்காரத்தனம்தானே? இதைபோய் மனித உரிமையாளர்கள் குறை சொல்கிறார்களே? இது சட்டத்தின் ஆட்சியை கெடுக்கும் என்கிறார்களே?

பொதுமக்களுக்கு தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறதே? என்ற கவலை. அதனால் அவர்கள் அப்பாடி, இப்போதாவது கொள்ளையர்களை கொன்று விட்டார்களே? என்று திருப்தி அடைவார்கள். ஆனால் கொல்லப்பட்டது உண்மையான கொள்ளையர்கள்தானா? கொள்ளையர்கள் எங்காவது வீடு எடுத்து தாங்குவார்களா? அவர்கள் வீட்டில் ஒரு கைத்துப்பாக்கி உட்பட நான்கு துப்பாகிகள் இருந்ததை காவல்துறை காட்டுகிறதே? காவல்துறை அதிகாரிகளை அரிவாள் வைத்து தாக்கியுள்ளனர் கொள்ளையர்கள் என்று அடிபட்ட காவலர்களை காவல்துறை காட்டுகிறதே? கையில் ஒன்றுக்கு நாலு துப்ப்பாகிகளை வைத்திருந்த கொள்ளையர்கள், என் முட்டாள்கள் மாதிரி அரிவாள் வைத்து தாகினர்கள் என்று புத்தியில்லாமல் கேட்டுவிடாதீர்கள். சொல்வது காவல்துறை. நம்புங்கள். இல்லாவிட்டால்? ஆமாம். பிடிபட்ட மன்னிக்கவ்ய்ம் கொல்லப்பட்ட கொள்ளையர்கள் தலைவர் எஸ்.ஆர்.எம். என்ற மாபெரும் சுய நிதி கல்லூரியின் முன்னாள் மாணவர் என்கிறார்கள். அதையே அந்த டி.வி.க்கு போட்டி டி.வி. திரும்ப திரும்ப கூறுகிறார்கள். அப்படியானால் அந்த கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு அதிகமாக் கட்டாய கட்டணம் வாங்கும் இடைத்தரகர்கள் பணியை செய்து வந்தவர்கள் இவர்களா? அதனால்தான் கொல்லப்பட்டார்களா? அபப்டியானால் அந்த கல்லூரியின் முதலாளிக்கு ஆதரவாக காவல்துறை அந்த இடைத்தரகர்களை இல்லாமல் செய்து விட்டதா? இப்படி கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே போனால் காவல்துறையின் ஈரல் கேட்டு விட்டது என்று முன்னாள் முதல்வர் பாணியில் பேச வேண்டியிருக்கும்.

எப்படியோ இப்போதிந்த நால்வரையும் கொள்ளைகாரர்கள் என்றே வைத்து கொண்டாலும், அவர்களுக்கு ஆதரவாக இங்கே இருந்தவர்களை அதிலும் அதிகாரிகள் இருந்தால் அவர்களையும், காட்டி கொடுக்க இப்போது யாருமே உயிரோடு இல்லை. எல்லா சாட்சிகளையும் கொன்று விட்டார்கள். இதற்கு பெயர் என்ன? இதுதான் சட்டத்தின் ஆட்சியா? வெளிமாநிலத்தின் ஆட்களை கட்டுமான வேலைக்கும், சுய நிதி கல்லூரிகளுக்கும், உணவு விடுதிகளுக்கும் வரவழைத்து தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கை கெடுப்பது யார்? யார்? பட்டியலிடலாமா?