Saturday, April 7, 2012

Is Cho creating Law & Order problem?

துக்ளக் சோ அராஜகமா?
இன்று ஆட்சியாளர்களை தங்கள வலைக்குள் பிடித்து வைத்திருப்பதாக துக்ளக் சோ நேரடியாக சொல்கிறார்களோ இல்லையோ, பார்பனர்களில் சில நரித்தந்திரசாளிகள் சென்னையில் களவாணித்தனம் மூலம் பணம் சேர்த்த கூட்டம் ஒன்று பரப்பி வருகிறது. சசிகலாவை விரட்டினால், பார்பனர் கோட்டையாக தோட்டம் மாறிவிட்டது என்பதும், சைகலாவை மீண்டும் சேர்த்து கொண்டால் கள்ளர் கோட்டையாக மாற தோட்டம் துடிக்கிறது என்றும் கதை கட்டி விட்டு அதிலே லாபம் தேடும் கூட்டம் ஒன்று செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட கூட்டத்தை சேர்ந்தவர்தான் மதிப்பிற்குரிய "அலையன்ஸ் பதிப்பக" உரிமையாளர் திருமிகு. சீனிவாசன் என்ற பார்ப்பனர் என்று சந்தேகம் வந்துள்ளது.

மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு எதிரே இருக்கும் குலம் மிகவும் பிரபலமானது. அதனால் அங்குள்ள பேருந்து நிறுத்தமும் பிரபலமானது. அதன் அருகே இந்த அலையன்ஸ் பதிப்பகத்தார் பெரிய கடை வைத்திருப்பதும் அனைவரும் அறிந்ததே. அந்த கடையை இடித்து மிக பெரியதாக கட்டி வருகிறார் அதன் முதலாளி என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த கடைக்கு அருகே ஒரு பட்டாணி கடை இருப்பதும், அந்த பட்டாணி கடையின் சுவர்களை இந்த அலையன்ஸ் முதலாளி சீனிவாசன் என்ற பார்பனர் இடித்து வருவதும், அதற்கு அந்த பட்டாணி கடைகாரர் எதிர்ப்பு தெரிவித்து அலறுவதும் யாருக்கும் தெரியாது. பட்டாணி கடை வைத்திருக்கும் பெண்மணி தனது குடும்பத்தை நடத்த கடினப்பட்டு வணிகம் செய்வதும், இந்த சீனிவாசன் என்ற பார்ப்பனருக்கு உரைக்காத ஒன்று.


ஏற்கனவே இந்த சீனிவாசன் என்ற பார்ப்பனர் எழுத்தாளர் கு.பா.ராஜகோபாலன் என்ற பிரபலத்தின் எழுத்துக்க்களை புத்தகங்களாக வெளியிட்டு அந்த ஏழை எழுத்தாளரின் குடும்பத்திற்கு எந்த காசும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால், அந்த எழுத்தாளரின் குடும்பம் இன்று நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை என்று ஒரு ஊடகத்தார கூறினார். அந்த அளவுக்கு தான் செய்யும் வணிகத்திலே "களவாணித்தனம்" செய்து பிறரை குடும்பத்துடன் அழித்துவரும் இந்த சீனிவாசனிடம் எத்தகைய கரிசனத்தை நாம் காண முடியும்? அதுபோலவே இந்த பட்டாணி கடை பெண்மணியிடமும், சீனிவாசன் பாராமுகம் காட்டி கொடுமை படுத்துகிறான். பட்டாணி கடை பெண்மணி மைலாபூர் காவல்நிலையத்தில் சென்று புகார் கொடத்த பின்னர், இரு காவலர்கள் வந்து சத்தம் போட்டு சென்ற பின்னால் அந்த சீனிவாசன் என்ற கொடியவன் மேல் அதிகாரிகளை பார்த்து தான் துக்ளக் சோவின் ஆள் என்பதுபோல அளந்து விட்டிருக்கிறார். எதைகன்டாலும் பயந்து நடுங்கும் இன்றைய காவல்துறை அதிகாரிகள், இதை கேட்டு பயந்து போய், புகாருடன் மீண்டும் மீண்டும் வரும் பட்டாணி கடை பெண்மணியை விரட்டி விட தொடங்கி விட்டனர்.

இதை ஒரு தனியார் தொலைகாட்சி ஊடகம் படம் எடுக்க வந்த போது, சீனிவாசன் கும்பல் வேலைகளை நிறுத்தி விட்டு ஓடிவிட்டனர். அதன்பிறகு படம் எடுத்தவர்கள் சென்ற பிறகு, மீண்டும் அங்கே வந்து வேலை செய்ய தொடங்கிவிட்டனர். இவை எல்லாமே முதல்லை சீனிவாசனின் உத்தரவில் நடந்து உள்ளது. பிறபடுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை வாங்கி கொண்டு ஆட்சிக்கு அவரும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு அவன்த பின்ன்னர், பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்டோர் மீது நடத்தும் அராஜகங்களை ஏன் தட்டி கேட்பதில்லை.? இந்த நிலை சென்னையிலேயே தொடர்ந்தாள் பரியார் மண்ணில் இந்த சில்லறை புத்தி கொண்ட பார்ப்பனர்களுக்கு தொடர்ந்து மரியாதை கிடைக்குமா? இதை இந்த மண் ஏற்றுக்கொள்ளுமா? துக்ளக் சோ இருக்கும் தைரியத்தில் இந்த அலையன்ஸ் சீனிவாசன் துல்லுகிறான் என்றால், துக்ளக் சோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறாராம். பாடியானால் காவல்துறை ஏன் தைரியமாக நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?

Wednesday, April 4, 2012

மாவோவாதிகளின் கடத்தலை, கொச்சைப்படுத்த கிளம்பியிருக்கிறார்களா?

மாவோவாதிகள் ஓடிசாவில் ஆதிவாசிகளின், மற்றும் தலித் இன மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசு இயந்திரத்தின் மாபெரும் போருக்கு எதிராக ஒரு ஆயுதம் தாங்கிய போரை நடத்தி வருகிறார்கள். அத்தகைய போரில் பல புரட்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தியாவின் இதயப்பகுதியில் கனிம வளங்களை காப்பதற்கும், அதை சூறையாட வந்துள்ள கார்போரேட்களின் கயவாளித்தனத்தை எதிர்க்கவும், போராடும் போர் உள்ளபடியே ஒரு நாட்டுப்பற்றாளர்களின் போர். அத்தகைய போரில் பல யார்த்த பலிகள் நிகழும். அவ்வாறு போரில் அவர்கல்பரிகொடுத்த உயிர்களான கிஷன்ஜி, ஆசாத், போன்ற மறையாத தியாகிகளை எண்ணி மீண்டும், மீண்டும் தனகளது போரை கூர்மைப்படுத்த வேண்டியது புரட்சியாளர்களுக்கு கடமையாக இருக்கிறது. இந்த சூழலில் ஒரு இத்தாலிய பயணிகள் கடத்தல் நடக்கிறது. அரசு இயந்திரம் அதை கொச்சைப்படுத்த பல கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது.


அதில் ஒன்று பாண்டா என்ற சப்யசாச்சி தனது தலைமையை நிறுவிக்கொள்ள அந்த கடத்தலை செய்தார் என்பது. அதற்கு அடுத்து ஒரு எம்.எல்.ஏ.வை கடத்துகிறார்கள். சம்பந்தமில்லாமல் போரில் மாவிஒவாதிகட்கு ஒத்துழைத்தாக கருதி ஆதிவாசி மக்களை சிறையில் தள்ளியுள்ள ஓடிஸா அரசு, அந்த கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது ஒரு முக்கிய கோரிக்கை. அதுமட்டுமின்றி மாவோவாத இயக்கத்தின் தலைவர் சப்யசாச்சி யின் மனைவியை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். அவரையும் விடுதலை செய்ய கோரியுள்ளனர். இவை எல்லாமே நியாயமான கோரிக்கைகள் என்பதை எந்த சனநாயக வாதியும் இந்த நாட்டில் ஒப்புக்கொள்வார்கள். ஆந்திராவின் புரட்சியாளர்கள் தலைமைக்கும், ஓடிசாவின் தலைமைக்கும் ஒரு முரண்பாடு இந்த கடத்தல் விசயத்தில் இருக்கிறது என்பது அரசு ஊடகங்கள் மூலம் கிளப்பி விடும் அடுத்த திசை திருப்பும் வேலை.

அதற்கும் மாவோவாதிகள் பதில் கூறி விட்டார்கள் .அதாவது புரட்சிகர காலப்போரில் இருக்கும்போது இரண்டு மாநில மைப்புகளுக்குள் வேறுபாடுகள் வருவதும் இயற்கையே என்றும் அதை நனகல்புரிய வைத்து கொள்வோம் என்றும் பதில் கூறி விட்டார்கள்.ஆளும்வர்க்கம் ஓடிஸா மாநிலத்தின் ஆட்சியாளர்களுடன் டில்லியில் இருந்து கொண்டு எல்லா அவிசயத்திலும் ஒரே சிந்தனையுடன் செயல்படுகிறார்களா? ஏன்? பயங்கரவாத தடுப்பு மையம் உருவாக்கும் விசயத்தில் கூட குடுமி பிடி சண்டை போட்டுக் கொள்ளவில்லையா? அபப்டிப்பட்ட ஆளும்வர்க்கத்திற்கு புரட்சியாளர்கள் மத்தில் வரும் முரண்பாடுகல்பற்றி பேச என்ன "நா" இருக்கிறது? பச்சை வேட்டை என்ற பெயரில் புரட்சியாளர்களை ஒடுக்க என்று கூறிவிட்டு, நமது நாட்டின் பூர்வ குடி மக்களை கொடூரமாக பாடுகளை செய்யும் இரத்த வெறி பிடித்த ஆளும்கூட்டமே, உனக்கு என்ன தகுதி இருக்கிஉஅர்து நீ கடத்தல் பற்றி கருத்து சொல்ல என்று சனநாயக வாதிகள் கேட்க வேண்டும்.

ஆனால் நம்மூரில் நிலைமையே வேறு. இங்கே யார் சனநாயக வாதிகள் யார் பிழைப்பு வாதிகள் என்பதை இனம் கண்டு கொள்வதே கடினம். பச்சை வேட்டை என்பதை எத்ஜிர்த்து எல்லோரும் தமிழ்நாட்டில் பேச தொடங்கிய போது, வேறுபாடு இல்லாமல் பல நீரோட்டங்களிளிருந்து வெளிவந்த பல கூறப்படும் அறிவுஜீவிகள் தாங்களும் பச்சை வேட்டியை எதிர்ப்பதாக கூறிவந்தார்கள். அந்த அளவுக்கு அது நல்ல காரியம்தான். ஆனால் சிலர் இப்போது மாவோவாதிகளின் போர் கடுமையாக அரசால் ஒடுக்கப்படும்போது, அதுவும் வனங்களில் வாழும் ஆதிவாசி பெண்களை ஆட வைத்து அதன்மூலம் அந்நிய நாட்டு சுற்றுல்லா பயணிகளை குளிர்விக்க அரசு இயந்திரம் செயல்படும்போது, அந்த அந்நியநாட்டு பயணிகளை எங்கள் அமண்ணின் மைந்தர்கள் உங்களுக்கு பண்பாட்டு காட்சிகளா? என்று கேட்டு, அதை ரசிக்க வந்த "ஆண் ஆதிக்க" சுரண்டல்கார அந்நிய நாய்களை, கடத்தி அதிலேயே தனகது மோரிககியையும் இணைத்து வைத்து, ஆதிவாசி பெண்களை ஆடவிட்டு ஆன்னிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் அரசின் கொச்சைப்படுத்தலுக்கு முற்று புள்ளி வைக்க அதே காடுகளில் சுற்றுலா வந்த இத்தாலிகாரர்களை கடத்தி இந்த உலகுக்கு புரிய வைத்துள்ளார்கள்.


அங்குள்ள நிலைமையை இதைவிட எளிதாக புரியவைக்க முடியாது. அதை ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. மக்கள் பக்கத்திலும்,புரட்சியாளர் பக்கத்திலும் , இழப்பு ஏற்பட்டால் அதையும் ஆளும் வர்க்கம் பக்கத்தில் இழப்பு ஏற்பட்டால் அடஹியும் ஒன்றென பார்க்கும் பார்வை யாரிடம் வந்தாலும் அவர்கள் ஆளும்வர்க்கத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ சேவை செய்பவர்கள் என்றே பொருள். அறிவுஜீவிகள் அதை செய்தால் அவர்கள் ஆளும்வர்க்க அறிவுஜீவிகள் என்றே பொருள். ஆனால் இங்கே ஒரு காட்சி ஊடகத்தில் ஒரு அறிவுஜீவி அதேபோல மாவோவாதிகளின் கடத்தலை கொசசைப்படுத்தி பேசியிருப்பது வெளியே வந்துள்ளது. அதாவது ஒரு காவல்துரைகாரர் மகனை தேடி சென்று, கிடைக்காதபோது, அப்பனை கைது சேது வந்து விடுவது போல இந்த கடத்தலும் என்று ஒப்பிட்டு பேசியுள்ளார். இத்தகைய பேச்சுக்கள் நாக்கில் நரம்பில்ல்லாமல்
பேசுவது என்ற வகையையே சாரும். இதன்மூலம் நடுத்தர வர்க்கத்தில் நமுட்டு சிரிப்புக்கு வேண்டுமானால் தீனி போடலாம். அனால் புரட்ச்சியாளர்களின் செயலுக்கு நியாயம் செய்யாமல் ஒதுங்கி கூட நிர்கமால் நக்கல் செய்வதாகவே ஆகும். அதாவது ஆளும்வர்க்கத்தின் அறிவுஜீவிகளின் வேலையை செய்வதாகவே பொருள்.

இதுவே காட்சி ஊடகம் மூலம் பல லட்சம் மக்களை அடையும் போது பேசுவது டேஹ்ரியாமல் அல்லது தஹ்ர்செயளாக பெசுயயது என்று ஆகாது. அதுவே டேஹ்ரிந்து புரட்சியாளர்களையும், அவர்கது புரட்சிகர நடவடிககிய்டையும் கொச்சை படுத்துவது என்றே பொருள். தமிழ்நாட்டில் மட்டும்தான் எந்த சனநாயக உணர்வுகளையும் மதிக்காமல் எதிர்ப்புரட்சிகர கருத்துக்ககளை தஹிரியமாக ஒளிபரப்பும் அளவுக்கு பேசமுடியும். அதேசமயம் பேசுபவர்களை வேறு காரணங்களை கூறி சிறப்பாக விளக்குகிறார் என்பதற்காக இன்னொரு புறம் பாராட்டி உச்சி மோர்ந்துய் கொள்ள முடியும். யாரயும் என்ன பேசுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள் என்பதையும் தாண்டி என்ன செய்துள்ளார்கள், யாருக்கு சாதகமாக ஏயலப்ட்டுல்லார்கள் என்று கவனித்தி மதிப்பீடு செய்யும் பழக்கம் தமிழர்கள் மத்தியில் இல்லாதபோது, அல்லது எடுபடாத போது, இப்படி போகிற போக்கில் பேசிவிட்டு செல்வது நிகழத்தான் செய்யும்.

Monday, April 2, 2012

பார்வார்டு பிளாக் கட்சியும் நமக்காக.....

சென்ற வாரம் கொல்கத்தாவில் நடந்த அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் மத்திய குழுவில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தொழிற்சங்க தலைவர் ஆனந்த முருகன் ஒரு சிறப்பான தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழீழ தசிய தலைவர் பிரபாகரனை, நேதாஜியின் வழி வந்தவர் எனபதையும், நேதாஜி மீது அளவிள்ளபற்று கொண்டவர் எனபதையும் விளக்கினார். அதை ஒட்டி போர்குற்றங்களை தமிழர்கள்மீது இழைத்த சிங்க கொடியவன் ராஜபக்சேவை அனைத்து நாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார். அதை ஒட்டி அந்த மத்திய குழு இலங்கைக்கு தங்கள் கட்சி சார்பாக ஒரு குழு சென்று உண்மை நிலை அறிந்து தமிழர் நிலைமை பற்றிமத்திய அரசுக்கு வேண்டுகொல்கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அகில இந்திய பொது செயலாளர் பிஸ்வாஸ் கொண்டு வந்தார்.

அந்த குழுவில் பார்வார்டு பிளாக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாட்டு செயலாளர் கதிரவன் எம்.எல்.ஏ.வும், அகில இந்திய செயலாளரும், கட்சியின் வெளிவிவகார பொறுப்பாளருமான தேவராஜும், இலங்கை சென்று வார திட்டமிடப்பட்டது. அதை ஒட்டி கதிரவன் எம்.எல்.ஏ. வுடன், ஆனந்தமுருகனும் இன்று "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மைய அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதியை வந்து சந்தித்து அளவளாவினர். வழக்கறிஞர் பாண்டிமாதேவி அவ்வமயம் அவர்களிடம் இலங்கையிலுள்ள ஈழ தமிழர்கள் மீதான தாக்குதல்களின் தன்மைகளை எடுத்து விளக்கினார். இந்திய அரசு கொடுத்துள்ள உதவிகலான டிராக்டர்கள், வீடுகள் ஆகியவை யாருக்கு சென்றுள்ளன என்றும் வினவ கோரினார். அவை தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படுவதற்காக இந்திய அரசால் கொடுக்கப்பட்டாலும், சிங்கள மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன என்ற வாதத்தை இலங்கை நாடாளுமனரத்திலேயே பதிவு செய்யப்பட்டதையும் சுட்டி காட்டினார். பார்வார்டு பிளாக் கட்சியினரும் அக்கறையுடன் கேட்டு கொண்டனர்.விரைவில் அவர்களிலன்கைக்கு பயணம் ஆவார்கள்.

Sunday, April 1, 2012

நாளை போஸ்கோ வரலாறு கேட்கலாம் வாங்க.

ஏப்ரல் 2 ஆம் நாள், திங்கள் கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் போஸ்கோ ஆலைரகசியங்களை கேட்கலாம். சனிக்கிழமை காலை ஊடகங்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை தந்தன. கொரியா நாட்டு மூலதனத்தில் ஓடிஸா மாநிலத்தில் ஒரு பெரும் எக்கு ஆலை திட்டமிடப்பட்டுள்ளது. அது ரூ.52000 கோடி மூலதனத்துடன் இறங்குகிறது. நமது காடுகளையும், கனிம வளங்களையும், மண் வளத்தையும் அதை வைத்து பிழைக்கும் ஆதிவாசி, தலித் மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் அழித்து அந்த ஆலை கொண்டுவரப்படுகிறது. அதை எதிர்த்து அந்த பாரம்பரிய மக்கள் போராடுகின்றனர். இப்போது இந்திய மத்திய அரசின் "சுற்று சூழல் மற்றும் வன இலாகா" அமைச்சகம் கொடுத்த அனுமதியை, "பசுமை தீர்ப்பாயம்" இடைக்கால ரத்து செய்துள்ளது. அவ்வாறு ரத்து செய்வதற்கான அடிப்படை காரணங்களை இந்திய அரசு நியமித்த "நிபுணர் குழு" அறிககையை கொண்டே முடிவு செய்துள்ளனர். அந்த நிபுணர் குழு மத்திய அரசின் சுற்று சூழல் இலாக்கா கொடுத்த அனுமதியையும், அதற்கான ஆதரங்களையும் கடுமையாக எதிர்த்தது.

அந்த நிபுணர் குழுவில் சென்னையை சேர்ந்த தமிழ்நாடு பி.யு.சீ.எள். தலைவராக இருந்த வழக்கறிஞர் சுரேஷ் செயல்பட்டார். அவர் தனது ஆதாரங்களை நம் முன்பு விரிவாக்க விளக்க ஒப்புக்கொண்டுள்ளார். திங்கள் கிழமை காலை பதினோரு மணிக்கு, உயர்நீதிமன்ரம் எதிரே உள்ள "லிங்கி செட்டி தெருவின் முதல் குறுக்கில் உள்ள எரரபாலா தெரு முக்கில் உள்ள வி.ஏன்.கே. கட்டிடத்தில், இரண்டாவது மாடியில், நடைபெறும். அனைவரும் வரலாம். தங்களால் வருகை உவகை டஹ்ரும். ---டி.எஸ்.எஸ்.மணி .9444905151

சிங்கள அரசின் இனவாத அணுகுமுறையில், சிங்கள புரட்சியாளர் தலைவருக்கும், தமிழ் புரட்சியாளர் தலைவருக்கும் உள்ள வேறுபட்ட அணுகுமுறை.

கொல்லப்பட்ட பாலசந்திரனும் காப்பாற்றப்பட்ட றோகணவின் மகன் உவிந்துவும்

Monday, 26 March 2012 10:49

சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட 'தண்டிக்கப்படாத குற்றங்கள் ' ஆவணப்படத்தில் பிரபாகரனுடைய இளைய மகனான 12 வயது பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருந்த தகவல்

போர்க்குற்ற ஆதாரமாகச் சுட்டப்பட்டிருந்தது. இந்தியத் தொலைக்காட்சி விவதாம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த சுப்ரமணியசுவாமியும் போரில் கொல்லப்பட்ட பல பிள்ளைகளில் பிரபாகரன் மகனும் ஒருவர். அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது போன்று சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் தரப்பில் இருந்தும் பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தன.

இவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் colombotelegraph வெளிவந்திருக்கிறது இக் கட்டுரை. இக் கட்டுரையை எழுதியிருக்கும் உவிந்து குருகுலசூரிய ஒரு சிங்களர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும், கொழும்பு ரெலிகிராப் தளத்துக்கும், இதனை தமிழில் மொழியாக்கம் செய்த குளோபல் தமிழ்ச் செய்திகளின் தேவ அபிரா ஆகியோருக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

கொல்லப்பட்ட பாலசந்திரனும் காப்பாற்றப்பட்ட றோகணவின் மகன் உவிந்துவும்

“ ஒரு நாகரீகமடைந்த தேசமாக, எதிர்காலச் சந்ததிக்காக, எதிர்காலத்தில் நிகழக்கூடிய இனக் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய இன நல்லிணக்கம் அவசியமாகிறது. தமிழ் அரசியலைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல் தெற்கு அரசியலின் குருட்டுத்தனமானதும் இறுக்கமானதுமான அரசியல் காரணமாக தமிழ் அரசியல் எவ்வாறு மாற்றமடைந்து வந்துள்ளதென்பதைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.”

- உவிந்து குருகுலசூரிய.

“இங்கே கொள்கைகள் இருக்கின்றன இங்கே உண்மைகளும் இருக்கின்றன. கொள்கைகள் மாறுபடலாம் ஆனால் எப்படியிருப்பினும் உண்மைகள் மறுக்கப்படமுடியாதவை. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இளையவர்கள் முதியவர்கள் என்ற பாகுபாடின்றித் தாக்கப்பட்டார்கள். இன்னும் குழந்தைகள் கூடத் தாக்கப்பட்டார்கள். தமிழர்கள் தங்களுடைய வாகனங்கள் உடமைகள் கட்டிடங்கள் வீடுகள் தொழிற்சாலைகள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டதைக் கண்ணுற்றார்கள். அவர்கள் அவமானப்பபடுத்தப்பட்டு நாதியற்றவர்களாக அகதிகளாகப் பயத்துடன் வாழ விதிக்கப்பட்டார்கள்”

இதயத்திலிருந்து வரும் ஒரு அழுகை…. 1983ம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்தது என்ன? (ஆயர் லக்ஷ்மன் விக்கிரமசிங்கவின் கடிதத்திலிருந்து

சனல் நான்கின் “கொலைக்களம்” விவரணப்படத்தின் இயக்குனர் கொலம் மக்றே சென்ற கிழமை இவ்வாறு எழுதுகிறார்: 12 வயதுச் சிறுவன் நிலத்தில் விழுந்து கிடக்கிறான். இடுப்பிற்குமேல் நிர்வாணமாக்கப்பட்டு மார்புப் பகுதியில் அய்ந்து குண்டுத் துளைகளைக் கொண்டிருந்த அவன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வனான பாலசந்திரனாவான். அவனுக்கருகில் அவனது அய்ந்து மெய்ப்பாதுகாவலர்களின் உடல்களும் கிடந்தன. அவர்கள் நிர்வாணமாகவும் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் சுடப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. மேலும் சாட்சியங்களை வைத்துப்பார்க்கும் போது இலங்கை அரசு சரணடைந்த புலிகளின் தலைவர்களையும் விடுதலைப்புலிப் போராளிகளையும் அது குழந்தைகளாக இருந்தபோதும் கூடக் கொல்வதில் ஒரு தெளிவான திட்டமிடலை அணுகுமுறையை கொண்டிருந்தது புலப்படுகிறது.

இதுவேதான் இலங்கை அரசுக்குள்ள பிரச்சினையும் ஆகும் எனேனில் இந்தக் கொலை ஒரு தற்செயலான அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவமாக இருக்கவில்லை என்பதுதான். அவ்வாறு இருந்திருந்தால் இதனை கோபம் கொண்ட இராணுவத்தினரின் எழுந்தமானமான நடவடிக்கை என்று புறந்தள்ளியிருக்கலாம். இங்கே பாலச்சந்திரன் பிரபாகரனின் மகனாக இல்லாதிருந்தால் சிலவேளை இன்றைக்கு உயிருடன் இருந்திருக்கக்கூடும் என ஒருவர் நினைப்பதற்கும் இடமுண்டு.

டெய்லிமிரரில் கடந்த புதன்கிழமை வாசகர் ஒருவர் பின்வருமாறு பின்னூட்டமிட்டிருந்தார்.

யுத்தம் ஒன்றில் நிகழும் குழந்தை ஒன்றின் மரணம் அவலமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாலச்சந்திரனின் மரணத்திற்கு தேவையில்லாமல் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கடந்த முப்பது வருடப் போரில் கொல்லப்பட்ட குழந்தை பாலச்சந்திரன் மட்டுமே என்னும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த முனைகிறது. ஆனால் நடந்து முடிந்த போரில் எண்ணுக்கணக்கற்ற குழந்தைகள் இறந்து போனவர்களினதும் பாதிக்கப்பட்டவர்களினதும் பட்டியலில் அடையாளமற்றவர்களாக இருக்கிறார்கள்.

பிரபாகரனின் மகனைக் கொல்வது என்பது மேற்குறித்தது போல ஒரு சாதாரணமான விடையமா?

நடந்து முடிந்த இரத்தக்களரியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான் ஆனால் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டது சாதாரணமான விடையம் என நான் கருதவில்லை.

இது போர்க்குற்றம் என்ற ஒரு குற்றச்சாட்டிற்கு அப்பால் இந்தக் கொலையை இலங்கைச்சமூகத்துள் நிலவும் வன்முறையான கலாசாரக்கட்டமைப்பை வெளிப்படையாகக் காட்டும் ஒரு அசாதாரணமான சம்பவமாகக் கருதுகிறேன்.

முரண்பாடுகளைத் தீர்க்கும் வல்லுனர்கள் சொல்வது போல் இராசதந்திரிகள் சமரசப் பேச்சாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் உலகில் நிலவும் முரண்பாடுகளை கடந்த 50 வருடங்களாக ஆராய்ந்து முரண்பாடுகள் நிலவும் சமுகங்களில் நிலவும் வன்முறைகள் பற்றித் தெளிவான நுண்மையான கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள்.

முரண்பாட்டுக்கும் வன்முறைக்குக்கும் உள்ள தொடர்பை விளக்கும் கோட்பாட்டைப்பற்றி முதலில் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

எல்லாவிதமான முரண்பாடுகளும் வன்முறையை வெளிப்படுத்துபவை அல்ல. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது முரண்பாடுகள் தோன்றுகின்றன. சிலர் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுவார்கள் மற்றவர்கள் எதிர்ப்பார்கள். இந்த உடன்பாடின்மை அல்லது முரண்பாடு என்பது அமைதியான முறையில் வழிநடத்தப்பட்டால் அது முன்னேற்றகரமான நடைமுறையாக இருக்கும். ஆனால் ஒரு முரண்பாடு சரியான முறையில் வழிநடாத்தப்படாவிட்டால் அது வன்முறையாக மாறுகிறது. முரண்பாடு ஒன்றில் வன்முறை கைக்கொள்ளப்படும் போது மக்கள் அச்சமடைகிறார்கள். மக்கள் தமது பாதுகாப்பிற்கு இருப்பிற்கு ஆபத்து ஏற்படுவதை உணர்கிறார்கள்.

பொதுவில் முரண்பாடு என்று சொன்னாலேயே வழமையாக வன்முறை நிறைந்த முரண்பாட்டைச் சுட்டுவதாகவே ஆகிவிடுகிறது…

பௌதீக ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் வெளிப்படையானவை எல்லோராலும் அறிந்து கொள்ளப்படக்கூடியவை. தனிநபர்கள் அல்லது குழுக்கள் தம்முள் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஒருவரை ஒருவர் காயப்படுத்தவோ கொல்லவோ முயற்சி செய்கிறார்கள் இதனால் பலர் பாதிக்கப்படவும் செய்கிறார்கள்

ஆனால் இவற்றுக்கப்பால் ஒரு சமூகத்தை ஆழமாகப் பாதிக்கின்ற பல்வேறு வகையான வன்முறை வடிவங்களும் இரக்கக்கூடும். இவற்றை கண்டு கொள்வதும் ஆராய்வதும் விளங்கிக் கொள்வதும் மக்களுக்கு கடிமனாக இருக்கும். இவை மறைந்திருக்கும் வன்முறைகளாக இருக்கும். கலாச்சார ரீதியான வன்முறைகளையும் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளையுமே இங்கே குறிப்பிடுகிறேன்.

பல ஆண்டுகளாக ஒரு குழு இன்னுமொரு குழு மீது கலாச்சார ரீதியான வன்முறையைப் பிரயோகித்திருக்கக் கூடும். பௌதீக ரீதியான வன்முறையை நியாயப்படுத்துகின்ற பேச்சுக்கள் உரையாடல்களை ஒரு குழு நடத்தியிருக்கலாம். வன்முறையைத் தூண்டுகிற விம்பங்களை பரப்பி இருக்கலாம்.

வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுக்களைப் பேசுதல் தமது சமூகத்தைச் சாராதவர்கள் மீதான வெறுப்புணர்வை வளர்த்தல் போர்வீரம் பற்றிய ஜதிகங்களை பரப்புதல் வளர்த்தல் பாலியல் ரீதியான ஒடுக்குமுறைகளை போரை நியாயப்படுத்தும் சமயக் கருத்துக்களை ஊக்குவித்தல் போன்றவை கலாச்சார ரீதியான வன்முறைகளைச் சார்ந்தவை.

ஒரு குழுவினது அல்லது சமூகத்தினது மரபுரீதியான பழக்க வழக்கங்களில் அல்லது அவர்களது சட்டங்களில் இருக்கக்கூடிய வன்முறையைக் கட்டமைக்கப்பட்ட வன்முறையாகக் கருதலாம்.

இத்தகைய வன்முறைகள் மிகவும் பாதிப்புக்களை உண்டுபண்ணக்கூடியவை. இவை இயல்பாகவே அந்தச்சமூகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் அல்லது கண்டும் காணாமல் விடப்பட்டிருக்கும். நிறுவனமயப்பட்ட நிறவாதம் அல்லது பாலின ஒடுக்குமுறையை இங்கே உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அரச அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் வாய்ப்புக்களை வழங்கும் போது நட்புக்காக உறவுக்காக தகுதி உள்ளவர்களை புறக்கணித்தல்; ஊழல் செய்தல்; வறுமை ஏற்படுத்தல் கொடூரமான சுரண்டலைச் செய்தல்; பால் அல்லது இனரீதியான ஒடுக்குதலைச் செய்தல் குடியேற்றவாதத்திற்குத் துணைநிற்றல் போன்ற இன்னோரன்ன விடையங்களைச் செய்வதற்காக சட் டத்தைப் பேணுவதிலும் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும் பாரபட்சம் காட்டுதலைக் கட்டமைக்கப்பட்ட வன்முறையின் ஒரு பகுதியாகக் கருதலாம்.

இந்த வன்முறைகள் மிகமிக முக்கியமாக அடையாளம் காணப்பட வேண்டியவை. ஏனேனில் இவைகள்தான் பௌதிக ரீதியான வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருப்பவை.

பௌதீகரீதியான வன்முறையை அடையாளம் கண்டு நிறுத்துவது மட்டும் போதாது ஏனேனில் சமூகத்துள் மறைந்துள்ள கட்டமைக்கப்பட்ட கலாச்சார ரீதியான வன்முறைகளை களையாவிட்டால் பௌதீக ரீதியான வன்முறைகள் மீளவும் தலையெடுக்கவே செய்யும்.

போரை வென்றபின் ராஜபக்ச அமைதி வந்துவிட்டதாகக் கூறினார். உண்மையிலும் அவ்வாறு அமைதி ஏற்பட்டுவிட்டதா?

இப்போது பாலசந்திரன் கொல்லப்பட்ட நிகழ்வை இலங்கையில் நிலவுகின்ற கட்டமைக்கப்பட்ட வன்முறை என்னும் கருத்தியலுடன் இணைத்துப் பார்க்க முடிகிறதா?

உங்களுக்கு அவ்வாறு முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஒரு நாகரீகமடைந்த தேசமாக, எதிர்காலச் சந்ததிக்காக, எதிர்காலத்தில் நிகழக்கூடிய இனக் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய இன நல்லிணக்கம் அவசியமாகிறது. தமிழ் அரசியலைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல் தெற்கு அரசியலின் குருட்டுத்தனமானதும் இறுக்கமானதுமான அரசியல் காரணமாக தமிழ் அரசியல் எவ்வாறு மாற்றமடைந்தது வந்துள்ளதென்பதைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.

அரச வன்முறையாகட்டும்சரி அல்லது அரசு அல்லாத குழுக்களின் வன்முறையாகட்டும் சரி அது மக்களுக்கு எதிரானது என்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடு இருக்க முடியாது.

அரசதலைவராகவும் அரசஇராணுவத்தின் தலைவராகவும் இருந்த இலங்கையின் எல்லா அரசியல்வாதிகளும் கொலைகளுக்கான உத்தரவை வழங்கியே இருந்தனர். அதுபோல புரட்சி அமைப்புக்களின் தலைவர்களாக இருந்த விஜயவீரவும் பிரபாகரனும் கூடக் கொலைகளுக்கான உத்தரவுகளை வழங்கியே இருந்தனர்.

தமிழ்ப்போராளிகள் கொண்டிருந்த பயங்கரவாதம் அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே ஏற்பட்டிருந்தது. இது ஒரு எதிர்விளைவாகும். 1983ம் ஆண்டு காலிமுகத்திடலில் தமிழர்களால் நடாத்தப்பட்ட அமைதியான போராட்டம் அந்நாளைய பிரதமர் பண்டாரநாயக்காவின் (S.W.R.D Banadarnaike.) உத்தரவின் பேரில் தாக்கப்பட்டு இரத்தக்களரியாக்கப்பட்டது.

அன்றைய பிரதமரினால் எவ்வாறு தாக்குதல்களுக்கான உத்தரவு வழங்கப்பட்டது என்பதை அன்றைய IGP ஆன த.சில்வா (S. W. O de Silva) 1958 ம் ஆண்டு ஜூன் மாதம் பொலிஸ் தலைமையகத்தில் நிகழ்ந்த இரகசிய கூட்டத்தில் DIG களுக்கு கூறியிருந்ததை யாவரும் அறிவர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து 20 வருடங்களின் பின்பு தமிழ்ப் போராளிகளின் பயங்கரவாதம் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப்புலிகளைத் ஸ்தாபித்ததுடன் தோன்றியது. அரசல்லாத சிங்களப் போராளிகள் கடைப்பிடித்த பயங்கரவாதம் என்பது அரச வன்முறையின் விளைவாக வந்ததல்ல பதிலாக அரசைக் கைப்பற்றுவதற்கான வன்முறையாக அது உருவெடுத்தது.

இது றோகண விஜிய வீர JVP யை ஸ்தாபித்ததுடன் தோன்றியது. 1971ம் ஆண்டு JVP இன் பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு தனது பயங்கரவாதத்தைக்கட்டவிழ்த்து விட்டது.

இன்னொரு மொழியில் சொல்வதானால் தமிழ் போராளிகளின் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் தொடங்கியதன் பின்னரே தொடங்கியது. ஆனால் சிங்களப் போராளிகளின் பயங்கரவாதம் அரசு தொடங்கமுன்னரேயே தொடங்கிவிட்டது.

இன்றைக்கு அரசு அல்லாத இரண்டு பயங்கரவாதக்குழுக்களின் தலைவர்களும் உயிருடன் இல்லை. மேலும் இவர்கள் இருவரும் அரச பயங்கரவாதத்திற்கு பலியாகியும் உள்ளனர். இருவரும் தமது நோக்கங்களை அடைய முடியாமல் எதிர்வன்முறைக்குப் பலியாகியுள்ளனர்.

றோகண விஜிய வீர கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதையும் பயங்கரமாக்கிக் கொண்டே அரசுக்குக்கெதிராகப் போர் செய்துகொண்டிருந்தார். றோகண விஜிய வீர தனது மனைவி மக்களுடன் கைது செய்யப்பட்ட போது நாவலப்பிட்டியில் உள்ள பண்ணையொன்றின் உரிமையாளராக அத்தநாயக்க என்ற பெயரில் வசித்துக் கொண்டிருந்தார். அதே வேளை ஆயிரக்கணக்காகன ஜே.வீ.பி போராளிகள் அரசுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால் பிரபாகரன் கடைசி நேரம் வரையும் அரசாங்கத்துடன் போர்க்களத்தில் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.

விஜிய வீர எப்படிக் கொல்லப்பட்டார்? பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார்? என்பதுவெல்லாம் அரச இரகசியமாகவே உள்ளன. பொதுமக்களுக்கு இவை ஒருபோதும் தெரியப்போவதில்லை. ஆனால் இங்கே பல கேள்விகள் எழுகின்றன.

இருதலைவர்களினது குடும்பங்களின் எதிர்காலம் எப்படி இருக்கின்றது?

அரசு விஜிய வீரவின் மனைவியையும் (சித்திராங்கனி) பிள்ளைகளான உவிந்து சுபுன் சகா, தசுன் எகா மற்றும் மூன்று பிள்ளைகளையும் எவ்வாறு நடாத்தியது?

பிரபாகரனின் மனைவியான மதிவதனி மற்றும் பிள்ளைகளான சார்ஸ் அன்ரனி,( சார்ஸ் அன்ரனி போர்க்களத்தில் ஆயுததாரியாக இருந்தார் எனவே அவரை விட்டுவிடுவோம்) பாலச்சந்திரன், துவாரகா ஆகியோரை எப்படி நடாத்தியது?

விஜிய வீரவின் குடும்பம் கொல்லப்படவில்லை. அவர்கள் அரசினால் நன்றாகப் பராமரிக்கப்பட்டார்கள். அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.

சித்திராங்கனி விஜிய வீர யு.என்.பி கட்சி கூட தங்களுக்கு நன்கு உதவியதாக கூறி இருந்தார். 2004ம் ஆண்டு ஜூன் 20 ம் திகதி சித்திராங்கனி சண்டே லீடருக்கு அளித்த பேட்டியில் மறைந்த சனாதிபதி ரணசிங்க பிரேமதாச கூட தங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்ததாகக் கூறினார். எங்களுக்கு உதவி முக்கியமாகத் தேவைப்பட்ட கணத்தில் அவர் அதனைக் கவனமெடுத்துச் செய்ததாகவும் மட்டக்களப்புப்பல்கலைக்கழகத் திறப்பு விழாவுக்கு ஜூனில் வரும்போது திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்ட தங்களைச் சந்திக்க வருவதாகக் கூறியிருந்ததாகவும் ஆனால் அவர் அந்த ஆண்டு மே மாதத்தில் கொல்லப்பட்டுவிட்டதால் அது நிகழவில்லை எனவும் கூறியிருந்தார்.

எப்படி இருப்பினும் பிரபாகரனின் மனைவி பிள்ளைகளுக்கு (சார்ஸ்சைத் தவிர) உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பது எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியாது.

தீர்க்கப்பட்ட வெடிகுண்டுகளில் முதலாவது குண்டு பிரபாகரனின் மகனை நோக்கியே இருந்திருக்கவேண்டும் என்பதாக பிரித்தானியத் தடயவியல் நிபுணரான கலாநிதி பவுண்டர் கூறுகிறார். சிறுவனின் மார்பில் உள்ள குண்டு துளைத்த அடையாளங்களைப் பார்க்கும் போது சிறுவன் இரண்டு அல்லது மூன்று அடி இடைவெளிக்குள்ளேயே சுடப்பட்டிருக்க வேண்டும் எனப் புலனாகிறது. தன்னைச் சுடவந்த துப்பாக்கியினை எட்டிக் கரங்களால் தொட்டிருக்கக்கூடிய நிலையிலேயே அவன் சுடப்பட்டிருக்கிறான்.

விஜிய வீரவின் குடும்பத்துடன் ஒப்பிடும் போது பிரபாகரனின் குடும்பம் பாரபட்சமான முறையிலேயே நடாத்தப்பட்டிருக்கிறது. ஏன்?

இதற்கு காரணம் இலங்கையில் நிலவும் கட்டமைக்கப்பட்ட வன்முறை. ஏனேனில் பிரபாகரன் தமிழன்.

நன்றி:கட்டுரையாளர்: உவிந்து குருகுலசூரிய.

uvindu@jouranalist.com

நன்றி: மொழியாக்கம்: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் தேவ அபிரா

நன்றி: Wijeweera family vs. Prabakaran’s family :colombotelegraph

Saturday, March 31, 2012

பிரஷாந்த் பூஷன் இடிந்தகரை வந்ததால் எழும் கேள்விகள்.

இன்று பிரஷாந்த் பூஷன் இடிந்தகரை வருகிறார். சரி. இதே உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மூன்று மாதங்கள் முன்னாள் ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். யாருக்காக? எதற்காக? இந்திய தேர்தல் ஆணையத்தின் இரண்டு முன்னாள் தலைவர்களான நெல்லை மாவட்ட கடையம் கோபாலசாமி ஐயங்கார், நெல்லை மாவட்ட திம்மராஜபுரம் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, மற்றும் முன்னாள் கப்பல்படை தளபதி அட்மிரல் ராமதாஸ்,மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளரும்,பிரதமர் அலுவலக செயலாளருமான ஒருவர், மற்றும் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணிய முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து போட்ட வழக்கு அது. அதில் நாடாளுமனறத்தில் நிறைவேற்றப்பட்ட "அணு சக்தி ஆபத்து இழப்பீடு சட்டத்தை" ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. உடனடி தடையை உச்சநீதிமன்றம் கொடுக்க வில்லை.ஆனால் வழக்கு நிலுவையில் இருக்கிறது.


இந்த கோபாலகிருஷ்ணன் ஏற்கனவே அமெரிக்க-இந்திய அணு சக்தி ஒப்பந்தமான 123 ஒப்பந்தம் கைஎஷுத்தாகும் வேளையிலேயே அதுபற்றி எழுதும்போது, அது இந்திய இறையாண்மையை உடைத்துவிடுமேன்ரும், அமெரிக்க உளவாளிகளை இந்தியாவிற்குல் நுழைத்து, அணு சக்தி மற்றும் அணு அயுதம் பற்றி அனைத்து ரகசியங்களையும் எடுத்து சென்றுவிடும் ஆபத்து உள்ளது என்றும் அந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சம் பற்றியும் எழுதியுள்ளார். அதற்கு மாற்றாக இந்தியா எந்த நாட்டிலிருந்தும் யுரேனியும் வாங்காமல், இந்தியாவிலேயே கிடைக்கும் "தொரிய்ஜ்ம்" மூலம் அனுகுயண்டு தயாரிக்க உதவாத யுரேனியும் எரிபொருளை மின்சாரம் தயாரிக்க ஆக்கத்திற்கான அணு சக்தியாக பயன்படுத்தலாம் என்று எழுதியவர். இவர் போன்ற நாட்டுப்பற்று கொண்ட அறிவுஜீவிகள், முன்னாள் அதிகாரிகள், ஒய்வு பெற்ற தேசபகதர்கலான இந்திய மூத்த அறிவுஜீவிகளினைந்து போட்ட வழக்கு தான் அது.


இதே கொபாலகிருஷ்ணந்தான் இடதுசாரிகளால் ஜைதாபூர் அணு உலைக்கு எதிராக அமைக்கப்பட்ட அதாவது பிரான்ஸ் நாட்டு அணு உலைக்கு எதிராக போடப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ளார். ஆகவே இந்திய அறிவுஜீவிகளினைந்து இந்திய அரசின் அணு சக்தி கொள்கைக்கு எதிராக திரண்டு வருகின்றனர். அதாவது இந்திய அரசின் அணு சக்தி கொள்கையே கேள்விக்கு உள்ளாகி உள்ளது.இத்தகைய சூழலில் கூடங்குளம் அணு உலையை இந்த அரசு எப்படி செயல்படுத்த முடியும்? தொடர்ந்து போராடுவதன் மூலம் மக்கள் போராட்டம்தான் வெல்லுமென்று வரலாறு நிரூபிக்கும்.

Friday, March 30, 2012

ராமஜெயம் கொலையாளிகள் யார்?

முன்னாள் அமைச்சரும், திமுக வின் முக்கிய பிரமுகரும், கட்சிக்குள் ஸ்டாலின் குழுவின் ஒரு வலுவாய்ந்த பிரமுகரும், திருச்சியின் முடிச்சூடா மன்னருமான கே.என்.நேருவின் நிழலான ராமஜெயம் நேற்று காலை நடைபயிற்சி செல்லும்போது, அவரது வீடு உள்ள தில்லைநகரின் பத்தாவது குறுக்கு தெருவிலிருந்து அதிக தொலைவு செல்லும் முன்பே, நிறைய பேர் நடபயிர்ச்சி செய்யும் வேளையிலேயே கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேருவிற்கு பணம் சேர்க்கும் பலம், வணிகம் செய்யும் பலம், அடியாள் சேர்க்கும் பலம், தேர்தல் பனி செய்யும் பலம், திருச்சி நகர் எங்கும் மாவட்டம் எங்கும் காவல்துறையை செல்வாக்கு செலுத்தி அனைத்தையும் ஆளும் ஆள் பலம் தம்பி ராமஜெயம்தான். அப்படிப்பட்ட ராமஜெயத்தை தூக்கி சென்று கொலை செய்து விட்டார்கள்.எதற்காக? என்ற கேள்விக்கு ஆளாளுக்கு ஒரு கதையை சொல்கிறார்கள்.

முதலில் நேற்று முட்டை ரவி குழுவினர் என்றனர். முட்டை ரவி கள்ளர் சமூகத்தவர். அவரைகாவல்துரை ரவுடி என்றது. காவல்துறையே "போலி துப்பாக்கி சூட்டில்" சுட்டு கொன்றது. அது நடந்தது திமுக ஆட்சியில்.முட்டை ரவி ஸ்ரீதர வானடையாருக்கு தேர்தல் பனி ஆற்றியவர். அவருக்கு எதிராக நேரு செயல்படுவதை கண்டித்தவர். அதற்காக வரத்து கொலையை காவல்துறை மூலம் தூண்டி விட்டவர் என்று, ராமஜெயத்தை குற்றம் சாட்டினால், அந்த முட்டை ரவி இறந்த பிறகு அவரது ஆள் என்று குணா சிறையில் இருந்து கொண்டே திட்டமிட்டிருப்பார் என்றனர். அதுவும் வெறும் கற்பனை என்று ஆகிவிட்டது. அடுத்து திருச்சி அருகே மணப்பாறை அருகே வையம்பட்டியில் ஒரு காருடன் இரண்டு ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் ஐது ஆண்டுகளுக்கு முன்பு எரித்து கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் சிறையில் இருந்த " குடமுருட்டி சேகர்" இரண்டு நாள் முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு கொடுத்த வாக்குறுதி படி ராமஜெயம் கொலையை செய்ய சொன்ன உடனே கொடுத்த பணம் தவிர மீதி பணம் கொடுக்க வில்லை, என்பதால் அவரது பழி வாங்கும் நடவடிக்கை என்றனர். அதுவும் இல்லை என்றாகி விட்டது.

நேருவையும், ராமஜெயத்தையும் நில மோசடி வழக்கில் கைது செய்யாமல் இருக்க ஐந்து மாதம் முன்னாள், ராவணனிடம், அவர் கேட்ட பத்து கோடி கொடுக்காமல், தான் ஒப்புக்கொண்ட ஏழு கொடியையும் கொடுக்காமல், இரண்டு கோடி மட்டுமே ராமஜெயம் கொடுத்தார் என்பதால், கோவை சிறையிலிருக்கும் சசிகலா சொந்தம் ராவணன் ஏற்பாடு செய்து, கூலி படை வைத்து கொன்று விட்டார் என்றனர். அதற்கும் ஆதாரம் இல்லை. திருச்சி அறிவாலயம் கட்ட அடுத்தவர் நிலத்தை பறித்ததால், பறி கொடுத்தவர் ஏற்பாடு என்றனர். அதுவும் இல்லை என்று கூறிவிட்டார்கள். சொந்தகாரர் நெப்போலியன் பெரம்பலூர் தொகுதியை ராமானுஜத்திற்கு கிடைக்காமல் ஆ.ராஜா மூலம் பிடுங்கி விட்டார். பிறகு மத்திய மைச்சராகவும் ஆகிவிட்டார். இது அந்த வட்டார திமுகவிற்குள் உள்ள உல் முரண்பட்டு. தனது தாயார் சாவுக்கு வந்த நேபோலியானை இழிவு படுத்தி ரானஜெயம் அனுப்பினார். அதேபோல சொந்தகார ரெட்டியார்கள் முன்னாள் அசிங்கம் செய்ற்ற்ஹு இன்னொரு முறை அனுப்பினார். அகவே நேபோலியானுக்கு ராமஜெயம் மீது கோபம். நெப்போலியன் தனது குடும்பத்தை அமெரிக்காவில் நிரந்தரமாக் தானாக வைத்து விட்டு, இப்போது அமெரிக்க "பச்சை அட்டை" வாங்கி விட்டு போய்விட்டார். ஆகவே அவர்தான் ஆள் வைத்து செய்தாரா? என்றனர். அதுவும் இல்லை என்றாகி விட்டது.


சமீபத்திய அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் வந்த இடை தேர்தலில், ,நேரு மீண்டும் நின்றபோது, ராமஜெயம் பத்து கோடி செலவழித்ததால் ஆத்திரப்பட்ட ஆளும் தரப்பினர் என்றார்கள். அதுவும் இல்லை என்றாகி விட்டது. எப்படியோ காவல்துறையினர் போலத்தான் இருந்தார்கள் என்று கடத்தல்காரர்கள் பற்றி வட்டார் சாட்சிகள் கூறுகின்றன. நடைபயிற்சியில் கொலை செய்வது என்பது, அரசியல்வாதிகட்கு,வழமையான் ஆபத்துதான் என்றால், எம்.கே.பாலன் சென்னையில், தா..கிருஷ்ணன் மதுரையில், ஆலடி அருணா நெல்லையில் இப்போது ராமஜெயம் திருச்சியில் என்றால், ஊருக்கு ஒருவராய் கொலை செய்வார்களோ? என்று எண்ண தோன்றும். ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி கொடுத்தால் எத்தனைகொலைகள் விழும்?