Sunday, February 10, 2013

அப்சல் குரு படுகொலை தரும் பாடங்கள்.


     காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு,  "மரண தனடனைகளை" கூட தனது அரசியலுக்கு பயன்படுத்துகிறது என்றால், அது இந்திய சூழலின் பரிதாபம். 2001 இல் நாடாளுமன்ற கட்டிடம் மீதான தாக்குதல் இன்னமும் "மர்மமாகவே" இருக்க, அவர்கள் அன்றைய பா.ஜ.க.அரசை காப்பாற்ற உதவி இருக்கலாம். அது அவர்களது அரசியல் கள்ள கூட்டு. ஆனால் ஞாயிறு காலை "தி ஹிந்து" ஆங்கில ஏடு வெளியிட்டுள்ள, நடுப்பக்க கட்டுரையும், தலையங்கமும் பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. அஞ்சலி மோடி தனது கட்டுரையில், "நியாயமான சந்தேகங்களை தாண்டி,ஒரு மனிதன் தூக்கிலடப்பட்டான்" என்று நடந்த நீதிமன்ற விசாரணை எப்படி "நேர்மையற்றது" என்பதை தெளிவு படுத்தியுள்ளார் தனக்கு முறையான வழக்கறிஞரை நீதிமன்ற விசாரணையில் வைத்துக் கொள்ள முடியாத நிலையில், வாய்த்த வழக்கறிஞர்களும் இடையிலேயே ஓடிவிட,[ கசாபிற்கு ஏற்பட்டதை போல} வந்த வழக்கறிஞரும் ஊசி போட்டு கொலை செய்வதை ஆதரிக்க, சாட்சிகள் இல்லாமலேயே, அப்சல் குருவிற்கு மரண தண்டனை பரிசாக வழங்கப்பட்டது.[ இந்திய உளவு துறை இப்படித்தான் நீதிமன்ற விசாரணையை வழக்கறிஞர் வைக்க விடாமல் கூட சதி செய்து நீதியையே குலைப்பார்களோ?"} நாடாளுமன்ற கட்டிட தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கொலை செய்யப்பட்ட நிலையில்,சாட்சிகளை யாரையுமே அரசப்படை உயிரோடு இருக்க விடாத நிலையில், அப்சல் கருவுடன், தண்டனை வழங்கப்பட்டது. அவரது கூட்டாளிகளாக வர்ணிக்கப்பட்ட கிலானியும், அபசன் என்பவரும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட நிலையில், அப்சல் குரு தண்டனை மட்டும் எப்படி மறு உறுதிக்கு உள்ளாகும்? 

     ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற நேற்றைய கால ஆயுதம் தாங்கிய படையில் இருந்த அப்சல் குரு 1991 இலேயே சரணடைந்துவிட்டார்?  அதன்பிறகு உங்களது, மத்திய சிறப்பு காவல் படையின் முகாம்களில், வழமையாக கையெழுத்து போட்டு வந்தாரே? எப்படி அவர் டில்லி கட்டிட தாக்குதலில் " மூளையாக" உங்கள் கண்காணிப்பில் இருக்கும்போதே ஈடுபட முடியும்? அதுவும் அவரது முந்தைய "ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி" இப்போது ஆயுதம் தாங்கிய போரை நடத்த வில்லையே?  அதனால்தான் அவரை வேறு ஒரு புதிய போராளி அமைப்பான "ஜெய் -சே-முகமது" போராளி என்று குற்றம் சாட்டியுள்ளிர்க்ளா? அப்படியானால் அந்த தாக்குதல் உட்பட எல்லாமே அரசின் "திட்டமிட்ட நாடகமா?" அதைதான் ஞாயிறு "தி ஹிந்து" ஏட்டில், 12 ஆம் பக்க கட்டுரையில் "அருந்ததி ராய்" கேட்கிறார். நாடாளுமன்ற தாக்குதல் பற்றி உண்மைகளை தேடுபவர்கள், அப்சல் குருவின் வழக்கு விசாரணை குளறுபடிகளை காண வேண்டும் என்கிறார்.பதினோரு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இவர்களுக்கு என்ன அவசரம்? இந்த "தி ஹிந்து"ஏட்டு தலையங்கத்தில், "பழிவாங்குதல்  நீதி தருவதல்ல" என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார்கள்.அப்படியானால் இது "பழிவாங்குதல்" தானா?

     இந்த அப்சல் குருவின் உயிரை வைத்துக் கொண்டு இந்திய அரசு எத்தனை ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக "சதுரங்கம்" விளையாடி வந்தது? இந்திய உளவு துறை "ரா" ஒற்றன் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி, "சர்பாஜன் சிங்" என்பவரை, குண்டு வைத்ததற்காக  மரண தண்டனை கொடுத்து பாக் சிறையில் வைத்திருக்கிறது. அவர் மீது கருணை மனு நிராகரிக்கப்ப்படும் போதேல்லாம், முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் உடனேயே, அப்சல் குரு மீது நாங்களும் கருணை மனுவை நிராகரிக்க போகிறோம் என்று மிரட்டல் விட்டு, "அரசியல் சதுரங்கம்" ஆடியது நமக்கு மறந்து விடுமா? ஐ.நா. சபை "மரண தணடனையை" சட்டத்திளிருந்தே நீக்குங்கள் என்று ஆலோசனையை, ஒரு "தீர்மானம்" மூலம் கூறிய பிற்பாடும், இங்கே மரண தண்டனையை "நாடுகள் இடையே உள்ள அரசியலுக்கு" பயன்படுத்தி வந்தார்களே? இப்போது, தேர்தலில் காங்கிரஸ் கட்சி சரியும் என்று "ஜெய்பூர் காங்கிரஸ் மாநாட்டில்" பேசிய பிறகு, சரிவை சரிக்கட்ட, பா.ஜ.க.வாக்குகளை பறிக்க இப்படி ஒரு உயிரை கொலை செய்ய வேண்டுமா?  இது அரசியல் கொலை என்பதை உலகம் கைகொட்டி சிரிக்காதா?  

  காஷ்மீர் சுய நிர்ணய உரிமைக்கு போராடிய, "ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின்" தலைவர்  "மக்புல் பட்" என்ற விடுதலை வீரரை, இதே திகார் சிறையில் இந்திரா காந்தி தூக்கிலிட்டார். ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கு போராடிய "மதச்சார்பற்ற இயக்க தலைவரை" அவ்வாறு படுகொலை செய்தார்கள். அதற்கு பிறகு அந்த விடுதலை போராட்டத்திற்கு "மதசசாயம்" குத்த முடிந்தது. அதேபோல ஒரு திரைப்படம் மூலம் தமிழர்கள் இடையே "மத வேறுபாட்டை" தூண்ட முயன்றவர்கள் "இவர்கள்" என்று சமீபத்திய வரலாறு கூட கூறுகிறது. இங்கே உள்ள "ராஜீவ் கொலை கைதிகளை" மூன்று தமிழர்களை இதேபோல காங்கிரஸ் கொலை செய்யுமா? என்று கேட்கிறார்கள்.நீதிமன்ற தடை பற்றியும் பேசுகிறர்கள். ஆனால் இந்திய நாடாளுமன்ற வராற்றிலேயே இல்லாத அளவுக்கு, ஒரு சட்டமன்றம் தீர்மானம் போட்டு, "மூன்று தமிழர்களின் மரண தணடனையை ஆயுள் தண்டனையாக குறைக்க" வலியுறுத்தியுள்ள போது , நாடாளும்னற பாதையை நம்புவதாக கூறிக்கொள்ளும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும், காங்கிரஸ் தலைமையும், மூன்று தமிழரை கொலை செய்துவிட்டு, இந்த உலகில் நடமாட முடியுமா? நாம் ஒன்று செய்யலாம். தமிழக சட்டமன்றம், 2011, ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றிய , "மூன்று தமிழர் மரண தண்டனையை குறைக்க சொல்லும் தீர்மானத்தை" நகல் எடுத்து, லட்ச்சக்கணக்கில், மக்கள் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும்,  ஒரு "பரப்புரையை" செய்யலாம். அதன்மூலம் தமிழ்நாட்டு மக்களின், குரலை தில்லிக்கு உரைக்கலாம்.
      

            

Friday, February 8, 2013

ராஜபக்சேக்கு எதிர்ப்பு -,புத்தகயாவிலும், திருப்பதியுலும், கைதுகள்.

ராஜபக்சேக்கு எதிர்ப்பு கொடுத்து,புத்தகயாவிலும், திருப்பதியுலும், கைதுகள்.
    திருப்பதியில்  தேவஸ்தான நிர்வாகம், கடுமையான காவல்துறையினரை நிறுத்தி, தமிழ்நாட்டு தொலைக் காட்சிகளை உள்ளே வரவிடாமல், விரட்டிவிட்டன. தமிழர்களை சாமி கும்பிடக் கூட அனுமதிக்காமல், விரட்டிவிட்டன. ஆயிரத்திற்கு மேல் ம.திமுக. உட்பட தமிழக ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்துள்ளனர். அந்த அளவுக்கு காங்கிரஸ் ஆட்சி ராஜபக்சேவை பாதுகாக்க எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லும் என நிரூபிக்கிறது.

                      அதேபோல நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை அதுவும் பீகார் காரர்களை திரட்டி, புத்தகயா கொவில்முன்பே ஆர்ப்பாட்டம் செய்த பீகார் மாநில எம்.எல்.ஏ .சோம பிரகாஷ் சிங் அவரது ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தமிழக திமுக தலைமை மேடை போட்டு, சென்னையிலேயே கருப்பு சட்டை அணிந்த ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இவர்களது கூட்டணி ஆட்சிதானே டில்லியில் இருந்துகொண்டு, மகிந்தாவிற்கு  "சிவப்பு கம்பளம்" விரிக்கிறது? ஆமாம். லண்டன் தமிழர்கள்  இதேபோல ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு கொடுத்த பொது, அந்த அரசு அவரை " வராதே" என்று தடுத்ததே? மலேசியா நாட்டில் தமிழர்கள் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போது, அங்குள்ள மலேசியா அரசு அவரது வருகையை "ரத்து" செய்ததே? இந்திய  அரசு மட்டும் ஏன்  எதிர்ப்பு வந்தாலும் அனுமதிக்கிறது? திமுக நடுவணரசில்  இருந்தும்கூட ஒன்றும் செய்ய முடியவில்லையா? அல்லது ஒன்றும் செய்ய  விரும்பவில்லையா?

ராஜபக்சேக்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இரண்டு பீகார் சட்டப்பேரவை சுயேச்சை உறுப்பினர்கள்,

பீகார் மாநிலத்தில் புத்தகயா செல்லும் ராஜபக்சேக்கு, அங்கேயே, இன்று 500 மக்களை திரட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் இரண்டு பீகார் சட்டப்பேரவை சுயேச்சை உறுப்பினர்கள், சோமப்ரகாஷ் சிங்கும், பரஸ்தாதாவும் நமது நண்பரான டில்லியில் உள்ள ஊடகவியலாளருக்கு, இந்தியில் கொடுத்த நேர்காணலின் தமிழ் ஆக்கம்.

சோம் பிரகாஷ் .( சுயேட்சை எம் எல் ஏ  ,ஒபர தொகுதி ஔரங்காபாத் மாவட்டம் ,பீகார்)

 ஊழலுக்கு எதிராக போராடுவதற்காகவே காவல் துறை அதிகாரி என்ற தமக்கு மிகவும் பிடித்த  வேலையை விட்டு சட்டசபை உறுப்பினராக மாறியவர் சோம பிரகாஷ் ஜி.( http://indiatoday.intoday.in/story/bihar-cop-turned-mla-wants-to-quit-politics/1/218042.html)

ராஜபக்சேயின் இந்திய வருகைக்கு  ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் திரு சோம பிரகாஷிடம்
டெல்லி நிருபர் ஒருவர் பேட்டி எடுத்த போது  ,அவர் கூறியதாவது:

ஒருபீஹாரியாகவோ தமிழனாகவோ நின்று நான் எதிர்க்கவில்லை. ஒரு நல்ல இந்திய குடிமகனாக  மனசாட்சி உள்ள மனிதனாக இருந்து   செய்ய வேண்டியதை செய்கிறேன். அவ்வளவு தான் . ராஜபக்சே ஒரு விருந்தாளியாக தான் இங்கு வருகிறார் . நம் அரசும் அப்படி தான் அவரை வரவேற்கவும் உள்ளது . இப்படி வரவேற்கும் அவர் எப்படி ப்பட்டவர் என்பது தான் எங்களை எதிர்க்க வைத்திருக்கிறது., 

அவர் ஒரு போர் குற்றவாளி . அப்படிப்பட்ட ஒருவரை விருந்தாளியாக வரவேற்பது பகவான் புத்தரை ஏளனப்படுத்துவதை போன்றது.  எநை வெற்றி பெற வைத்து சட்ட சபைக்கு அனுப்பிய மக்களிடம் எனக்கு ஒரு கடமை இருக்கிறது. அதனால் அரசின் இத்தகைய செயலை ஜனநாயக முறையில் எதிர்ப்பது அரசுக்கு நாங்கள் கொடுக்கும் ஒரு message கூட தான். 

நம் மனிதர்களை கொன்றவரை மாலை அணிவித்து வரவேற்பதை எக்காரணம் கொண்டும்  நியாயப்படுத்தவே முடியாது.  . ஆனால் எங்களின் போராட்டங்களும் மற்றும் அமைதியாகவும் அரசுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் இருக்கும்.


பரஸ் தாதா ( சுயேட்சை எம் எல் ஏ  ,ரத்லம் தொகுதி , மத்திய பிரதேஷ்  )

ஒரு engineer ஆக பணியாற்றி பிறகு அரசியலுக்கு வந்தவர்..  அவர் கூறுகையில் ,

தமிழின அழிப்பை பயங்கரமாக அரேங்கேற்றி  உலக நாடுகளின் முன் போர் குற்றவாளியாக நிற்கும் ஒருவரை நம் ஊரின் விருந்தினராக வரவேற்பதை ஒருபொழுதும் ஏற்று கொள்ள முடியாது. இந்தியா மகா நாடு அமைதியின் ஊர் . அமைதிக்கு பேர் பெற்ற ஊர். அந்த மகத்துவத்தை நாம் ஏற்றுகொள்ள வேண்டும் 

 இலங்கையில் கொடூரங்களை நடத்தி அந்த ஊரின் அமைதியையே நொறுக்கிய ஒருவரை இங்கு அரசு விருந்தாளியாக வரவேற்பது  அகிம்சை , அமைதி, அன்பு , போன்ற கொள்கைகளை உள்ளடக்கிய புத்த மதத்தை, புத்தரை இழிவுப் படுத்துவது தான் என்பதில் எந்த சந்தேகவும் .இல்லை . நாங்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவோம். ஆப்கானிஸ்தானை போலவே பிற மதங்கள் மீதும் நம்பிக்கைகள் மீதும் வெறுப்பை உமிழும் நாடாக மாறி விட்டது இலங்கை.

Saturday, February 2, 2013

கமல் இறங்கி வந்துபேச, இவ்வளவு முயற்சி தேவைப்பட்டதோ?

கமல்  இறங்கி வந்துபேச, இவ்வளவு  முயற்சி தேவைப்பட்டதோ?
        நேற்று கமலுடைய ஆட்கள்  பேச வருகிறோம் என்றனர். அதை  முஸ்லிம் அமைப்புகள்  ஏற்கவில்லை. தாங்கள்  கமலஹாசன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே  பேசி சுமுகமாக முடிக்க முடியும் என்ற கருத்தை  முஸ்லிம் அமைப்புகள் அழுத்தமாக வைத்தனர். கமல்  தானே எழுதி, தானே இயக்கி, தானே நடித்த படத்தில் வரும் காட்சிகளை பற்றி விவாதித்து முடிவெடுக்க, கமல்தானே வரவேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை வைத்தன. அதனால அதை மறுக்க முடியாமல், மும்பை சென்ற கமல் இன்று மதியம் சென்னை திரும்பினார். மதியத்திற்கு  மேலே , உள்துறை செயலாளர் முன்னிலையில், முஸ்லிம் அமைப்புகளுடன் பேச அமர்ந்தார்.

                         பதினைந்து பிரதிநிதிகள் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக பேச அமர்ந்தனர். உள்துறை செயலாளர் ராஜகோபால்  அமர்ந்தார்.  முஸ்லிம் அமைப்பினர் பதினைந்து பேரும்  பேசினால் முறைப்படுத்த முடியாது என முடிவுக்கு வந்தனர். பதினைந்து பேரில், ஐந்து பேர் மட்டும் பேசட்டும்  என்றும் மற்றவர்கள் ஏதாவது பேச வேண்டும் என்றால், அந்த ஐந்து பேரிடம் கூறி அவர்களை பேச வையுங்கள் என்றும் பேச்சுவார்த்தைக்கான முறை வகுக்கப்பட்டது  ஐந்து பேராக, மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ .பேரா.ஜவாஹிருல்லா,  இந்திய தவுகித் ஜமாஅத் முனீர், ஒருங்கிணைப்பாளர் அனீபா, எஸ்.டி.பி.ஐ. பார்கவி, ஜமாஅத் இ இஸ்லாம் [ஹிந்த்] சிக்கந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மற்றவர்கள் பார்வையாளர்களாய் அமர்ந்தனர்.  பேச்சுவார்த்தை மூன்று மணி நேரம் நீண்டது. 

                    
                                      ஒரு கட்டத்தில் தனியாக இருபுறமும் பேச வாய்ப்பாக உள்துறை செயலாளர் ராஜகோபால், எழுந்து வெளியே சென்றார். அப்போது சிறிது காரசாரமான பேச்சு, பிறகு புரிந்த உணர்வில் அமைதியாக ஆனது. கமலின் சில முன்வைப்புகளில் முஸ்லிம் பிரதிநிதிகளும், அனுதாபம் கொண்டனர். ஆனால் தனகளது கோரிக்கைகளில் உறுதியாக நின்றனர் விட்டுக் கொடுக்காமல் பேசினர். சில முக்கிய  தவறான காட்சிகளை  கோரி வலியுறுத்தினர். கமல் எதையுமே மறுக்க வில்லை. ஆனால் தான் படத்தை "ஆரோ-3 டி" என்ற முறையில்  குரல்களை ஆக்கியிருப்பதாகவும், அவற்றை நீக்க மீண்டும் வெளிநாடு சென்று அதிகமாக கடினப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனாலும், முஸ்லிம் பிரதிநிதிகள், தனகளது முக்கிய கொரிககிகளை விடவில்லை. 

                    முல்லா உமர் மதுரையிலும் கோவையிலும் இருந்தேன் என்று கூறுவதை நீக்க கோரினர் சரி என்றார் கமல். தீவிரவாதிகள் குரானை படித்து விட்டு அதை மேற்கோள் காட்டி  தீவிரவாத  செயலுக்கு தயார் ஆவதை நீக்க கோரினர். சரி என்றார் கமல். அதுபோனர் காட்சிகளே படத்தில் ஏழெட்டு முறை வருகிறது. அவற்றை நீக்கும் போது  பிரச்சனை எழாது. அதேபோல கமல் தொழுகின்ற காட்சி வருகிறது. அதில் குர்ஆனில் வரும் நல்ல கருத்துகளை கமல் கூறுகிறார். முஸ்லிம் அல்லாதவர் தொழுவதை எதிர்ப்பார்களோ என்று கமல் எண்ணினார்  ஆனால் அது படம்தானே என்றும், கமல் குரானை மேற்கோள் காட்டுவது, நல்ல கருத்துகளைதான் கூறுகிறார்  என்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் அதை  படத்தில் இருக்கலாம்  என்று கருதினர்  இவ்வாறு சில, பல காட்சிகளை அவற்றின்  குரல்களுடன் நீக்க ஒப்புக் கொண்டார். பிரதிநிதிகளும் திருத்தி அடைந்தனர். உள்துறை செயலாளரும் கமலுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அவரது செயல்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டது. 

                                  இத்தகைய காட்சிகளை நெஞ்க்கத்தை முதலிலேயே நீக்க கமல் அமர்ந்து  இத்தனை தூரம்  போயிருக்காது என்று நம்மை நினைக்க தூண்டுகிறது.

Friday, February 1, 2013

கமல் சார், சில சந்தேகங்கள் .....

கமல் சார், சில சந்தேகங்கள் .....
      நீங்கள் உங்கள் படத்தை தொடங்கும்போதே, "இது உண்மையில் நடந்த கதை" என்று போட்டிருக்கிறீர்களாமே? உங்கள் படத்தை நேநேகள் காட்டி பார்த்த முஸ்லிம் தலைவர்கள் கூறினார்கள். அப்படியானால் மதுரையிலும், கோவையிலும், ஆப்கானின் தலிபான் தலைவர் முல்லா உமர் தங்கியிருந்தேன் என்று உங்கள் படத்தில் கூறுவது உண்மையில் நடந்ததா? அந்த எழுத்துக்களை கேரளாவில் திரையிடும்போது நீக்கி விட்டீர்களாமே? ஏன்  சார், உண்மைகளை சொல்கிறோம் என்ர்பதை நீக்கினீர்கள்? அப்படியானால் முல்லா உமர் தம்ன்கியிருந்ததாக உள்ள அந்த இரண்டு ஊர்களும் ஏற்கனவே மத மோதல்களில் மோசமான விளைவுகளை சந்த்திதனவே? மீண்டும் அப்படி எழும்ப அது வழி வகுக்காதா? நீங்கள்  ஆய்வு பல செய்துதான் படத்தின் கதையை தயாரா செய்தேன் என்கிறீர்கள். அப்படியானால் உங்களுக்கு அந்த ஆய்வுக்கு உதவியவர்கள் கொடுத்த தகவல்களை உண்மை என்றோ, பொய் என்றோ எதோ ஒரு வகையில் எடுத்து க் கொள்ளலாமா? பொய் என்றால் அவர்கள் அதாவது தகவல் தந்தவர்கள் வேறு எதோ நோக்கத்தில் அவ்வாறு கொடுத்திருக்கலாம் அல்லவா? 

                                   கமல் சார், உன்களுக்கு நினைவு இருக்கிறதா> ராஜீவ் கொலை பற்றி, ஒரு மலையாளப்படம்  2002 நேரம் வந்ததே? மிஷன் 99டேஸ் என்பது அதன் பெயர். அதை மேஜர் ரவி என்ற மலையாளி இயக்கினாரே?  அவரது படத்திற்கு அப்போதே நீங்கள் பாராட்டு கொடுத்தீர்களே?  அந்த மேஜர் ரவி "இந்திய அமைதி படை" என்ற, தமிழர்களை கொலை செய்யும் ராணுவம் ஆயிற்றே? அதில் மேஜராக இருந்த ரவி, தமிழர் விரோத போக்கு கொண்டவர் ஆயிற்றே? அவர் அங்கு பொய் வடக்கு, கிழக்கு இலங்கையில் ஈழத் தமிழரை கொலைகள் செய்டஹ்து மட்டுமின்றி, அதையே ஒரு படமாக  "மிஷன் 99 டேஸ் " என்ற பெயரில் எடுத்து என்ன நோக்கம் கொண்டது?  அந்த மேஜர் ரவி உங்கள் நண்பர் ஆனாரே?  நீங்கள் "ஆளவந்தான்" பாடத்தில் நடிக்க வைத்தீர்களே? அவரும் அந்த படத்தை தயார் செய்வதில் ஆலோசனைகளை வழங்கினாரே? அப்படிப்பட்ட நேஜோர் ரவி போன்ற "இந்திய  அமைப்பதை" மேஜோர்களை வைத்துக் கொண்டு நேநேகள் ஆலோசனைகளை  அது இப்படித் தானே இருக்கும்? அது ஒடுக்கப்பட்ட சமூகம் மீது இழிவை ஏற்படுத்த செய்யுமல்லவா? இப்போது புரிகிறதா? நேநேகள் எங்கே நிற்கிறீர்கள் என்று? நாங்கள்  கூறுவது எப்படி தவறாகும்? 

Thursday, January 31, 2013

குழம்பிய கமலில் மீன்பிடிக்கும் அரசியல்வாதிகள் அம்போ ஆகினரா?

குழம்பிய  கமலில் மீன்பிடிக்கும் அரசியல்வாதிகள் அம்போ ஆகினரா?
        ஆளும்கட்சிக்கு எதிராக வரிந்து கட்ட எண்ணிய காங்கிரஸ் தலைமையிலான அரசின் உள்துறை அமைச்சர் ஷிண்டே, தமிழக அரசின் "தடையை"  ஒரு "அரச பயங்கரவாதம்" என்று கூறியுள்ளார் அவர்கள் டாவின்சி கோடுக்கும், சல்மான் ரஷ்டிக்கும், தஸ்லிமா நஸ்ரீனுக்கும்  தடை வித்தித்தால் அது நாட்டில் உள்ள மிதியை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கையாம். அதை விட ஒரு திரைப்படம் அதிகமாக அப்பாவி மக்களை தட்டி எழுப்பி "ஆவேசம்" கொள்ள செய்யும் என்று தமிழக அரசு தஹ்டையை தஹ்ர்காளிகமாக அறிவித்தால் அதுவே "அரச பயன்கரவடஹம்" ஆகும். என்னய்யா அரசியல் இது? மற்ற  கட்சி ஆட்சிக்கு ஒரு அறிவுரை. உங்களுக்கு ஒன்றா?  அது டில்லியின் எதிரொலி என்றால் சென்னையில் சில அரசியல்வடஹிகள் கொதித்து எழுந்துள்ளனர். 

                 கலைஞர் கண்டனம். கமலை ஜெயலலிதாவிற்கு நாற்ப்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே பிடிக்காது. அய்யா கலிஞர் அவர்களே உங்களுக்கு தெரியுமா? இரண்டு  முன்னாள் ஜெயா டிவி. நடத்திய எம்.ஈஸ்விச்வனாதன் இசை விழாவில், நேரு  ஸ்டேடியத்தில், கமழும், ரஜினியும்  தமிழக முதல்வர் அருகே இருபுறமும் அமர்ந்துகொண்டு அவரை புகழ்ந்து பேசினார். என்னய்யா அரை  வேக்காடுத்தனமான விவாதம்?  சரி. இன்னொருவர் விஜயகாந்த். அவர் இதுதான் வாய்ப்பு என்று எதோ பேச, "தி.ஹிந்து" எட்டில் இன்று "எம்.ஜி.ஆர். கொண்டுவர முயற்சித்த திரைப்பட தஹ்டை சட்டம்" பற்றி வந்துவிட்டது. விஜயகனத் கூறிய "ஏறிவந்த ஏணியான திரையுலகை எட்டி உடஹிக்கும் ஜெயலலிதா"  என்றார் அசொர்கள் அவரது "கருப்பு எம்.ஜி.ஆர்." படம் காட்டுவதற்கு எம்.ஜி.ஆரே.இப்படி ஒரு படி மேலே போய் , தடை சட்டம் கொண்டுவர முயற்சி எடுத்தவர் என்ற செய்தி வந்துள்ளது. அதனால் முஸ்லிம் மக்களை  அவமானப்படுத்தி   படம் எடுப்பதுதான் கருத்துரிமை என இந்த அரசியல்வாதிகள் கூருவார்களா?  முதல்வரின் அறிக்கைக்கு பிறகு இவர்களது விவாதங்கள் அர்த்தமற்று போய்விட்டனவே? 

Wednesday, January 30, 2013

பொய் சொல்லாதீங்க நடிகரே?


     இன்று காலஹாசன் கொடுத்த ஊடகப் பேட்டியில் தான் இந்த படத்தால் கடும் நட்டத்தை அடைந்திருப்பதாகவும் கூறி, ஐயோ பாவம் என்ற அனுதாபத்தை அள்ளி வாங்க தொடங்கியுள்ளார். அதனால்தான் நாம சில உண்மைகளை சொல்லியாக வேண்டும். அதாவது பொதுவாக திரை துறையில் "காப்பீடு" இல்லை. ஆனால் ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஓடும்படம் தோடர்ந்து ஓட முடியாத நிலை. ஆகவே சிலர் ஏற்பாடு செய்து, ஒரு திரைப்பட காப்பீடு தயாரா செய்தனர். அடஹ்ர்க்கு பெயர்" காட்சிபடுத்தலில், காப்பீடு" { Exibiting  Insurance }  இந்த காப்பீடு திரையிடப்பட்ட படங்களா போராட்டம் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டால், முதல் மூன்று நாட்களுக்கு வந்த "வசூலை" கணக்கெடுத்து, அதன் சராசரியை நான்காம் நல படம் திரையிட முடியாத நாளுக்கு அளிக்க வகை செய்கிறது. இந்த "காட்சிப்படுத்தலில் காப்பீடு" என்ற ஒன்றை இந்த படத்தின் முதல் தயாரிப்பாளரான, " பட்லூரி வெங்கடேஸ்வர பிரசாத் ரெட்டி" ஏற்கனவே "பதிவு" செய்துவிட்டார். ஆகவே படம் எந்த நிலையிலும், "நட்டத்தை" அடையாது என்ற உண்மை கமலஹாசனுக்கு தெரியும்.

                       தெரிந்த இந்த உண்மையை, நடிகர் வெளியே சொல்லமால், தனக்கு நட்டம் என்றும், அதனால் சமூகமே என்னை பார்த்து "இறக்கப்படு" என்றும் குரல் கொடுப்பது எப்படி சரி? கமல் அவர்களே, நாங்கள் எல்லோருமே உங்கள் ரசிகர்கள்தான். உங்கள் படங்களைத்தான் விரும்பி எப்போதும் பார்ப்போம். ஆனால நேநேகள் யாரோ சொன்னதற்காக யாருக்கோ உதவி செய்வதற்காக, ஒரு படத்தின் கதையை, நீங்களே விஜய் டி.வி.யில் சொன்னதுபோல, பொங்கலன்று உங்கள் பேட்டியில் கூறியது போல, அமெரிக்காவிற்கு இந்த படத்தின் கதையை முழுமையாக, வசனங்களுடன் அனுப்பி வைத்து, அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகே, 2011 இலேயே  தொடங்கிவிட்டேன் என்கிறீர்கள் அதுதான நாங்கள் கேட்பதும். எதற்காக அமெரிக்க நம் நாட்டில் திரைடவேண்டிய படத்தை, அதுவும் முஸ்லிம்கள் பற்றிய படத்தை, ஒப்புதல் கொடுத்து  வேண்டும்? 

                 இதில் ஒரு அரசியல் இருக்கிறது. அதாவது அமெரிக்காவின் நலன் என்ற அரசியல் இருக்கிறது. அதிலும், "ரா" அமைப்பை நியாயப்படுத்தும் அரசியலும் இணைந்தே  இருக்கிறது. அதனால்தான் முஸ்லிம் தமிழர்களை, பிற தமிழர்களிடமிருந்து "பிரிக்கும் வேலையை" இந்த படம் மூலம் அழகாக செய்ய முனைந்துள்ளார்கள். அதில் இனம் புரியாமலும் கமல் ஈடுபட்டிருக்கலாம். ஆனால  இரண்டு அனடுகளுக்கு முன்பு கொழும்பில் நடந்த,"இந்திய சர்வதேச திரைப்பட விழா" என்ற ஐ.எப். எப்.ஐ. என்ற மைப்பின் விழாவிற்கு அனுப்ப ஒப்புக்கொள்ளாதே என்று கமல்  முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது நினைவிருக்கிறதா?   அப்போதே கமல் அவர்களே உங்களது "ஈழத் தமிழர் எதிர்ப்பு நிலையை நாங்கள் சுட்டி காட்டவில்லையா? அதுதான் ஐன்று முஸ்லிம் தமிழர்களையும், முஸ்லிம் அல்லாத தமிழர்களையும் பிரிக்க நினைக்கும்  சிங்களத்திற்கும், இந்திய நடவனரசின் உளவு துறைக்கும் "சேவை" செய்வது போல இந்த படம் அமைந்துள்ளது. அதேபோல அமெரிக்காவின் "பயங்கரவாத எதிர்ப்பு உலகப் போரை" ஆதரிப்பதாக இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க "தான்" பயங்கரவாதம் செய்து விட்டு, அதை இஸ்லாமியர்கள் மீது பழி போடும் அல்லவா? அந்த வேலையை கமல் அவர்கள் மூலம் செய்ய வைத்துள்ளார்கள். 

             கமல் சொல்வது ஒள இந்த படம் 2011 இலேயே தயாரிக்க தொடக்கி விட்டது. அதாவது ப.சிதம்பரம் உள்துறையில் இருக்கும் போதே அவரது ஆலோசனையின் பேரில் தொடங்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவரும் இப்போது காங்கிரஸ் காரர்களை அனுப்பியும், களிகரிடம் கூறியும் இந்த படத்திற்கு ஆதரவு கொடுக்கிறார். கலைஞரும்  செய்த "போர் குற்றங்கள்" அம்பலமாக கூடாது என்று இப்போது கமலுக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கிறார். ஆகவே இது தமிழின ஒற்றுமையை விரும்பும் அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டிய படம்.