Sunday, July 14, 2013

வன்னியர் பெண்களும் தருமபுரி போராட்டத்தில்....

வன்னியர் பெண்களும் தருமபுரி போராட்டத்தில்....
    நேற்றைய  "நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் " ஏடு  ஐந்தாவது பக்க செய்தி இது. நாம் மீண்டும், மீண்டும் கூறி வருகிறோம். இளவரசன்-திவ்யா "காதலும்", அதில் திவ்யா தந்தை, திவ்யாவின் கணவர் இளவரசன் ஆகியொரீன் "சாதலும்" "சாதி" பிரச்சனை மட்டுமல்ல. அடியாழத்தில், அது "இளைய தலைமுறையினருக்கு எதிரான போர்" என்பது புரியும். அதுவும் இளம் பெண்களுக்கு எதிரான குறிப்பான போர். அதிலும் "வன்னிய பெண்களுக்கு" எதிரான போர். "நாடக காதல்", "ஜீன்ஸ் காதல்", "கூலிங்க்ளாஸ் காதல்" ஆகியவை ஒரு குறிப்பிட்ட கட்சியை எதிர்த்து என்று கூறப்பட்டாலும், தலித் சமூகத்தை எதிர்த்து என்று புரியப்பட்டாலும், அது " வன்னியப் பெண்களை" இழிவு படுத்தும் "சொல் அம்புகள்" இல்லையா? அதை தொடுத்தவர்களை எதிர்த்து போரில், நிர்கவேண்டியவர்கள் வன்னியப் பெண்கள் இல்லையா?  அதுதான் தொடக்கி உள்ளது. அந்த செய்தியில் சில வன்னியப் பெண்களை நேர்காணல் செய்து எழுதி உள்ளார்கள் 

Friday, July 5, 2013

பூக்கள பறிக்காதீங்க, காதல முறிக்காதீங்க.....


       இளவரசன் மரணம் ஏன் ? உங்கள் சமூகத்தால்  அதன் சாதி திமிறால், உங்கள் சீரழிந்த அரசியலால் அதன் வாக்குகள் பெறுவதற்கு சாதி வெறியை தூண்டும் கேவலத்தால், சொந்த சமூகத்தின்  பெண்களை உங்களது "உடமைகளாக" எண்ணும்  அழுகிப்போன பண்பாட்டால், முற்போக்கு பேசிக் கொண்டு பிற்போக்காக செயல்படலாம் என்று தமிழ் மக்கள் பலரையும் அனுமதித்து, நடமாட விட்டுள்ள, இழிநிலையால், நீதிமன்றம் வந்தாலும் பெண்ணை ஆண்கள் அன்பாகவே மிரட்ட முடியும் என்ற அசிங்கத்தை பொதுமக்கள் கேள்வி கேட்காமல் இருக்கும் முதுகெலும்பு அற்ற சூழலால், நெருக்கடியில் உள்ள தாய்க்கும், மகளுக்கும், கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றாத "நீதிமான்களின்" அளவற்ற அக்கறையால், "நேர்மையான அன்பு " இந்த புழுத்துப் போன புவியில் இல்லாததால், சாதியின் பெயரில் "சண்டியர் தனம் " அனுமதிக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள இழி பிறவிகளுடன் வாழ "தகுதியற்றவனாக" ஆகிவிட்டதால், ஏற்பட்ட மரணம்தானே? 
       ஒன்று புரிந்து விட்டது. இளைய தலைமுறை மீது,"முதிய தலைமுறையின் சாதி அரசியல்" ஒரு போரை கட்டவிழ்த்து  விட்டுள்ளது.அந்த போரை சந்திக்க இளைய தலைமுறை  தயாராக வேண்டும். அதிலும், இளைய தலைமுறையின் இளம் பெண்கள் முன் நின்று சந்திக்க வேண்டும். உங்களுக்கு முதிய தலைமுறையின் பெண்கள் துணை நிற்பார்கள்  ஏன்  என்றால், அவர்கள் ஏற்கனவே இந்த ஆணாதிக்க சாதிய வெறியர்களை சந்தித்து விட்டு வந்தவர்கள்  இளம் பெண்கள் கைகளில்தான் இந்த உலகம் இருக்கிறது. மாவோ கூறியது போல , "இளைஞர்களே, நீங்கள்தான் உலகை உருவாக்க இருப்பவர்கள்.நாங்களும்தான். ஆனால் இறுதி ஆய்வில் நீங்கள்தான் " நினைவில் வையுங்கள்.  

Saturday, June 22, 2013

மனிதாபிமானம் மரண தண்டனையை நீக்கிவிடும்


     இன்று  ஒரு புதிய செய்தி. பழைய செய்திதான் என்றாலும் அது "இரண்டு உயிர்களை "காப்பாற்றியுள்ளது என்பதால் புதிய செய்தி. இந்திய தவுஹித் ஜமாஅத் நடத்திய "ஊடகவியலாளர் கூட்டதில் " அறிவிக்கப்பட்ட செய்தி. குவைத் நாட்டில் நம்மூர் பசங்க இரண்டு பேரை, முத்துபேட்டை சுரேஷ் மற்றும் காளிதாசுக்கு, ஒரு கொலை வழக்கில் மரண தணடனை கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கையை சேர்ந்த முஸ்லிம் தமிழ் பெண் "சித்திக் மூசா " கொலையை செய்ததாக இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் "பிரமிளா தேவி" க்கு ஆயுள் தனடனையும், இந்தியாவை சேர்ந்த சுரேஷ் மற்றும் காளிதாசுக்கு மரண தனடனையும் அறிவிக்கப்பட்டது. இதுஇ இஸ்லாமிய சட்டப்படி "கொலைக்கு பதில் கொலை" என்பதாக வர்ணிக்கப்பட்டது. ஆனால் அதே இஸ்லாமிய சட்டத்தில், "பாதிக்கப்பட்ட குடும்பம்" மன்னித்துவிட்டால் "மரண தண்டனை ரத்து" என்பதாகவும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, "இரத்த பணம்" என்ற "தஹ்ண்ட பணத்தை" குற்றம் இழைத்தவர்கள் சார்பாக கொடுத்துவிட்டால், அதை பாதிக்கப்பட்ட்ட குடும்பம் ஏற்றுக் கொண்டால்  மன்னிப்பு வழங்கலாம்  என்றும் அதில் இருக்கிறது. இதை இந்திய தவுஹித்  ஜாமாத தலைவர் எஸ்.எம்பாக்கர், இன்று குர்ஆனில் இருந்து படித்து காட்டினார் 

           அதன்படி இந்த மேற்குறிப்பிட்ட கொலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், "பன்னிரண்டு லட்சம்" ரூபாயை, "பாதிக்கப்பட்ட குட்ம்பய்த்திர்க்கு" 2011 ஆம் ஆண்டிலேயே  கட்டியிருக்கிறார்கள்  அதை பற்றிய "ஆவணங்கள்" குவைத்தில் உள்ள இந்திய ஹைகமிசனுக்கு  அனுப்ப[[அட்டும் கூட அவர்கள் அதை குப்பையில் போட்டு விட்டார்கள் என்றும் கூறினார்  இப்போது இருவருக்கும் "தூக்கு" உறுதியான பிறகு, கடைசி நேரத்தில், இந்திய தஹ்வுஹித் ஜமாத்  அமைபபினர், "பிர்தொஸ், இலங்கையில் உள்ள  ஷெராபுதின்" ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தேடி பிடித்து, அவர்களை கூட்டிவந்து, கொழும்பில் உள்ள  "குவைத்" தூதரகத்தில், பேசவைத்து, முதலில், மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். குவைத்தில் உள்ள இந்திய தவுஹித் ஜமாதின்  பைசல் இந்திய தூதரகத்திற்கு படையெடுத்து, பழைய ஆவணங்களை  தூசு தட்ட வைத்து, கொழும்பில் இருந்த ஷெராபுதின்  இலங்கை அரசத் துறைகளிடம் சண்டை போட்டு, ஆவணங்கள் ட்டிஹயார் செய்து, அவசர, அவசரமாக அனுப்பிவைத்து, மரண தணடனையை இருவருக்கும் "ரத்து" செய்ய வைத்துள்ளனர். இதில் இந்திய தூதரம்தான் "அக்கறையற்று " இந்த இரண்டு உயிர்களையும் "காப்பாற்றாமல்" இருந்தது என்பதே அவர்களது குற்றச்சாட்டு.

              அதை கூறும்போது, பாக்கர் "மூன்று தமிழர் உயிர்கள்" ராஜீவ் கொலையில், தவிப்பதை எடுத்து கூரினார்ட். நளினிக்கு "தூக்கி, ஆயுளாக" குறைப்பதற்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சோனியா காந்தி, எழுதிய மன்னிப்பு கடிதத்தில், கொடுத்துள்ள மன்னிப்பை ஏற்று,ஏன் "மூன்று தமிழர் உயிரை" காப்பாற்றாமல் 'கருணை மனுவை" குடியரசு தலைவர்கள் பரிசீளிக்கிரார்கள்? என்று கேட்டார். இச்லமைஒய சட்டத்தில் உள்ள  மனிதாபமணம் கூட, இந்திய அரசிடம் இல்லையே? என்றார். நாகப்பட்டினம் எம்.பி. ஏ.எஸ்.கே.விஜயன்  முயர்ச்சியும் இந்த வழக்கில் தொடர்ந்து இருந்தது என்றும் ஆனாலும் கடைசி நேரத்தில், அந்த "தஹ்னபாப்பணம்" பெற்று, மனிப்பு கொடுத்த சான்றுகளே,   இரண்டு உயிர்களையும் காப்பாற்றியது என்று, சுரேஷின் மனைவி, அனுசுயாவும் அழுதுகொண்டே இன்று கூறினார்.  இதுதான் "முஸ்லிம் தமிழர்களும் முஸ்லிம் அல்லாத தமிழர்களும்" இலங்கையிலும் இந்தியாவிலும் இணைந்து பணியாற்றும் பொது கிடைக்கும் உயிர் பாதுகாப்பு . அதுவே "தமழின" பாதுகாப்பு. இந்த இரண்டு தமிழினமும் இணையவே  முடியாது என்று "மேடை தோறும்" கூறிவரும் "அறிவாளிகளுக்கு" இது ஒரு சாட்டையடி.  , "சிங்களத்திற்கு" மரண அடி 

Sunday, June 16, 2013

தோழர் மணிவண்ணன் மரணம் கூறும் பாடங்கள்


       இயக்குனர், திரைக்கலைஞர் மணிவண்ணன் அவர்களது மரணம் நண்பர்கள் பலர் இடையே தொடர்ந்து இரண்டு நாளாக விவாதத்தை கிளப்பியுள்ளது. நேற்று தோழரது மரணம் கேள்விப்பட்டவுடன், பி.யு.சி.எல். கூட்டத்தில் இருந்த நாங்கள் உடனே ஒரு இரங்கலை அங்கேயே பதிவு செய்து விட்டு, மாலையும், கையுமாய், தோழரைக் காண, அவர் வீடு சென்றோம். நேற்று மாலை நல்ல கூட்டம் அங்கே அலைமோதிய நேரம். பேராசிரியர் சரஸ்வதி,[பி.யு.சி.எல். மாநில தலைவர்], மாவட்ட பொருளாளர் பாரதி விஜயன், நான், முகேஷ், எம்.ஜி.ஆர்.டி.வி.ஹமித், கவிஞர் சுமித்ரா[ நாம் தமிழர்] அனைவரும் சென்று மாலை வைத்தோம். இன்று இறுதி ஊர்வலம் சென்று, இடுகாட்டில் தோழரை எரியூட்டும் வரை நின்று, மீனவர் சங்கம் மகேஷ், வழக்கறிஞர் அருள், நான் ஆகியோர் திரும்பினோம். ஆனால் தோழரது நினைவுகள் மீண்டும் மீண்டும் "பகிர்ந்து கொள்ள" வேண்டியது என்று உணர்ந்தோம். அவரது இழப்பு "பொதுவாழ்க்கைக்கு" பெரும் இழப்பு, வேறு ஒருவர் அவரது இடத்தை நிரப்ப முடியாது என்றும், பேசிக் கொண்டோம். எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாக உணர்ந்தேன். "தோழர்,தோழர்" என்றுதான் என்னை அழைப்பார்.
           1976 இல் முதன்முறையாக, கோவை சி.ஐ.டீ. பொறியியல் கல்லூர்ரி விடுதியில் சந்தித்தேன். நான் அப்போது, சாருமசும்தார் வழி, நக்சல்பாரி கட்சியின் தலைமறைவு தோழர். அவர் "சாரு எதிர்ப்பு" நக்சல்பாரி கட்சியின் முழு நேர ஊழியர். அதன்பிறகு, 1989இல்  மதுரை வங்கி கொள்ளைக்காக சில தோழர்களை குறிப்பாக பெங்களூரு ஆசிரியர் வீரமணியை, காவல்துறை "சித்திரவதை" செய்வதற்கு எதிரான "உண்மை அறியும் குழு" அனுப்ப, உதவி பெற சென்றோம். அபபோ து அவர் பிரபல இயக்குனர். பழைய கதைகளை பகிர்ந்து கொண்டோம். நீண்டபயணம் சுந்தரம், சுப வீரபாண்டியன்,இன்று மாவோயிச  தலைவர் என்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் விவேக், ஆகியோருடன் நான் சென்ற நேரம். பழைய கோவை சந்திப்புகளை பகிர்ந்து கொண்டோம். 
                  இப்போது 2009, மீண்டும் எங்கள் சந்திப்புகளை அதிகப்படுத்தியது. "ஈழம்" அதற்கு காரணமாக இருக்கிறது. நிறைய பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது. அவரது பணிகளுக்கு எனது உதவியையும் எனகளது முயற்சிகளுக்கு அவரது உதவிகளையும் பகிர்ந்து கொண்ட காலம்  "புலிகளை" ஆதரிக்கும் இந்த காலத்தில், "நீங்கள் முன்பு மறுத்த சாருமசும்தார் வழியான "அழித்தொழிப்பை"  இப்போது ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று நான் வினவினேன். முழுமையாக் "ஆம்" என்றார். " இனவிடுதலை போரை" உள் வாங்கிய  ஒரு தோழர், "வர்க்கபோரின்" உயர் கட்டங்களையும் புரிந்து கொண்டு டுதானே ஆகவேண்டும். எனக்கு "தோழர் மறைவு" தனிப்பட்ட இழப்பும் கூட. ---தெ.சி.சு.மணி.

Monday, May 20, 2013

தமிழ் தேசிய போராளி பறம்பை அறிவன் மரணம்

தமிழ் தேசிய போராளி பறம்பை அறிவன் மரணம்
      பரமக்குடியை சேர்ந்தவர் "பறம்பை அறிவன்"> இவர் பெருஞ்சித்திரனாரின் "உலகத் தமிழர் முன்னேற்ற கழகத்தில்" வேகமாக பணியாதிரி வந்தவர். கடைசி காலம் வரை தமிழ் மொழி மீதும், தமிழ் இனம் மீதும் ஆழமான பற்றுடன் அமைதியாக தனது பணிகளை செய்து வந்தவர். நேற்று { 19-05-2013] மதுரையில் இவர் காலமானார். அப்போது அவருக்கு வயது "எழுபத்தி ஏழு"  இன்று காலை பதினோரு மணிக்கு இவரது அடக்கம் நடைபெற்றது.
                    பறம்பை அறிவனது இயற்பெயர் "நளபதி" இவர் பரமக்குடியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். உலகத் தமிழர் முன்னேற்ற கழகத்தில் இணைந்து பணியாற்றும் பொது, இவர் உண்மையிலேயே "சாதிகள் தாண்டிய "தமிழின ஒற்றுமையை" நம்பினார். அதை செயலில் செயல்படுத்தி காட்டினார்  1980 இல் ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்குலத்தொருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே பெரும் சண்டை வெடித்தது .முக்குலத்தோர் சமூகத்தில் பிறந்திருந்தாலும், தாழ்த்தப்பட்டோரை சகோதரர்களாக பாவித்த  "நள பதி"அவர்களது நியாயங்களுக்காக போராடினார். அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்காக பாடுபடுகிறார் என்பது அந்த பகுதியில் ஒரு பெரிய செய்தியாக  எடுத்து கொள்ளப்பட்டது. தமிழின உணர்வுகளுக்காக மட்டுமின்றி, வர்க்க போராட்டத்திற்காகவும் நள பத்தி வாத்தியார் போராடினார். அதற்காக அவர் நக்சல்பாரி இயக்கத்தில், இந்திய பொதுவுடமை கட்சி[ மா.லெ ]இல் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த கட்சி அன்று உருவாக்கிய "தாழ்த்தப்பட்டோர் உரிமை சங்கம்" என்ற அமைப்பின் பணிகளிலும் ஈடுபட்டார். அங்கு அப்போது, இன்று மறைந்துவிட்ட சந்கையாதாஸ் தலைமையில் , அந்த சங்கம் செயல்பட்டுவந்தது. அந்த சங்கம் மூலம் தான் இன்றைய  "இமானுவேல் பேரவை" தலைவர் சந்திரபோஸ் அன்று பி.சி.மாறன் என்ற பெயரில், மேடை பேச்சாளராக றிமுகம் ஆனார். அத்தகைய ஒரு சமூகப்பணியை பறம்பை அறிவன் செய்துவந்தார். தலைமறைவு கட்சியின் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 1985 இல் இந்திய படையை  இலங்கைக்கு அனுப்ப பல தமிழின தலைவர்கள் "கோரிக்கை" வைத்த போது  "தேசிய இனங்களை அடக்கும் இந்திய அரசின் படை இலங்கை செல்லக் கூடாது" என்ற  நக்சல்பாரி இயக்கத்தின் கொள்கையை தோழர் நளபதி உயர்த்தி பிடித்தார். அந்த கோரிக்கையை வைத்து  "குமரி முதல் சென்னை வரை " இந்திய மக்கள் முன்னணி நடத்திய  "முற்றுகை போர்" பயணத்தில் விநியோகம் செய்ய "ஈழம் எரிகிறது" என்ற நூலை "சனநாயக மாணவர் முன்னணி" சார்பில்  தலைமறைவு இயக்கத்தினர் தாயரித்த போது, அந்த நூலை  "தொகுத்து கொடுத்தவர்" தோழர் பறம்பை அறிவன். இத்தனை செயல்பாட்டு தன்மைகளையும் கொண்ட தோழர் பறம்பை அறிவன்  கடைசிவரை எளிமையாக ஆடம்பரம் ஏதும் இல்ல்லாமலேயே  வாழ்ந்து வந்தார். அவரது வாழ்க்கை உள்ளபடியே ஒரு "பாடம்".

Thursday, April 18, 2013

முஸ்லிம் தமிழர்கள் என்றால் ஏன் அப்படி பயப்படுகிறார்கள்?


     அய்யா. தமிழ் இந்துவாய் இருந்தால் என்ன? தமிழ் கிருத்துவராய் இருந்தால் என்ன? தமிழ் முஸ்லிமாய் இருந்தால் என்ன? மதமற்ற தமிழராய் இருந்தால் என்ன? தமிழ் நாத்திகராய் இருந்தால் என்ன? தமிழர்தானே? அவர்களது மொழி தமிழ்தானே? அவர்களது உணர்வு ஒன்றுதானே? அனேகமாக அவர்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியாதே? அப்படி இருக்கும்போது எப்படி அவர்களுக்குள் நீங்கள் பிரித்து வைக்க முடியும்? இப்படி நாம் கேட்டால், அது கொழும்புக்கும், டில்லிக்கும்  புரியவில்லை. காரணம் என்ன? அவர்கள் இந்த மத வேறுபாடுகளை வைத்து, தமிழர்களை நிரந்தரமாக பிரித்து வைத்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். எண்ணுவது என்ன, எண்ணுவது? பிரித்து வைத்து விட்டோம் அல்லவா? என்று இறுமாநது கூறுகிறார்கள்.பல பத்து ஆண்டுகளாக் இந்த மத வேறுபாடுகளை பயன்படுத்தி, பிரித்து வைத்து, அதன்மூலம் "தமிழ் ரத்தம்" குடித்தவர்கள் மீண்டும் இப்போது இந்த மத வேறுபாடுகளை கடந்து, தமிழர்கள் "மதம் தாண்டி" ஒன்றுபடுவதை எப்படி "சகித்து கொள்வார்கள்?".  

            அதனால்தான் அந்த சென்னை சந்திப்பு, அவர்களுக்கு "கிலியை" ஏற்படுத்தி விட்டது. "புலியை விட கிலியை" ஏற்படுத்திய ஒரு "அரசியல் சந்திப்பாக" அவர்கள் அதை கணக்கு போடுகிறார்கள். அது என்ன சந்திப்பு?. அய்யா. யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.அவர் "தனிப்பட்ட" பணிகளுக்காக சென்னை வந்திருந்தார். அப்போது சில முஸ்லிம் நண்பர்கள் "வாங்க, ஓட்டலுக்கு சாப்பிட" என்று அழைத்தார்கள். அப்படியே சாப்பாட்டுநேரம் பல நண்பர்களையும் சந்திக்கலாம் என்றனர்.இங்கே ஒரு "முஸ்லிம் கூட்டமைப்பு" இருக்கிறது என்பதோ, அது சமீபத்தில்தான் உருவானது என்பதோ, அது அமெரிக்க தூதரகம் முன்னால் பெரும் போராட்டத்தை நடத்தியது என்பதோ, விஸ்வரூபம் படத்திற்கு எதிராக போராடி, முதல்வர் முன்னிலையில் பேசி "தீர்வு" கண்டது என்பதுவோ, பெரமபலூரில் "குழந்தை திருமண விவகாரத்திற்காக" மாவட்ட அடசியாளரை எதிர்த்து கூட்டாக போராடியது என்பதோ, அந்த யாழ்ப்பாண எம்.பி.க்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. வந்த இடத்தில் சந்தித்தோம் எனபதே அவரது புரிதலாக் இருந்திருக்கு வேண்டும். 

           ஆனால் தமிழ்நாடு முஸ்லிம்களுக்கு அப்படி அல்ல. அவர்கள் இலங்கை விவகாரங்களை உற்று கவனித்து வருபவர்கள். அது மட்டுமின்றி,கொழும்பில் "ஹலால்" உணவு முறையை "தடுத்த" சிங்கள பவுத்த பிக்குகளின் முயற்ச்சியை உற்று கவனிப்பவர்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் உருவாகும் தமிழின உணர்வுகளுடனும், சிங்கள எதிர்ப்பு உணர்வுகளுடனும், இரண்டற கலந்தவர்கள். சிங்கள பவுத்த "பிக்குகள்" தம்புள்ள பள்ளிவாசலை இடித்த போதும், காலி மாவட்ட மசூதியில் சிங்கள காடையர்கள் "நாயை கொன்று ரத்தத்தை தெளித்தபோதும்" பொங்கி எழுந்தவர்கள்.  இப்படி ஏற்கனவே கொதித்து போயிருக்கும் "தமிழ் முஸ்லிம்களுக்கு" சமீபத்தில் நடந்துவரும் முஸ்லிம்கள் மீதான சிங்கள தாக்குதல்கள்  "கோபத்தை "கிளறாதா?

              அதனால்தான் அவர்கள் யாழ்ப்பாண எம்.பி. சென்னை வரும்போது, தங்கள் நண்பர்கள் உடன்வரும்போது, "சந்தித்து" பல "ஆதங்கங்களை" கொட்டிக் கொள்ள வேண்டும் என்று "தயாரிப்புகளுடன்" வந்தார்கள் போலும். அந்த முஸ்லிம் தமிழர்கள்,  சிங்களர்கள் மீது மட்டும் இன்றி, தமிழ் போராளிகள் மீதும் பல "கோபங்களை" கொண்டிருந்தார்கள் என்பது அந்த சந்திப்பில் வெளிப்பட்டது. ஆனாலும் அவர்களுக்கு, "ஈழத் தமிழர்கள்" ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டதை "தாங்கிக் கொள்ள" முடியவில்லை எனபதும் அங்கே  தெரிந்தது.அவர்களது பல கேள்விகளுக்கு பொறுமையாக  அந்த  "யாழ்ப்பாண எம்.பி." பதில் விளக்கம் அளித்ததையும் காண முடிந்தது. அந்த முஸ்லிம் தமிழர்கள் ஒரு செய்தியை கூறினார்கள். தாங்கள் பின்பற்றும்  மார்க்கமான "இசுலாம்" எந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்காக ஆதரவு கொடுக்கும்படி தங்களுக்கு போதித்துள்ளது என்றார்கள். அதனால் பாதிக்கப்படும் "தமிழ் மக்கள்" பக்கம் தான் தாங்கள் நிற்கிறோம் என்றனர்.

                அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, வரலாற்றிலிருந்து பல செய்திகளை சுரேஷ் பகிர்ந்து கொண்டார்.இந்தியவம்சாவளி தமிழர்களான மலையக தோட்ட தொழிலளர்களுக்கு "குடியுரிமை" வழங்க கூடாது என்று "சிங்களம்" முடிவு செய்யும்போது, யாழ்ப்பாண்ததவரான "பொன்னம்பலம்" சிங்களருடன் சேர்ந்து கொண்டு  "இந்திய வம்சாவளிகளுக்கு"  குடியுரிமை கொடுப்பதை மறுத்தாரே? என்று அவர்கள் கேட்டனர். அதற்க்கு பொறுமையாக சுரேஷ், "பொன்னம்பலம் தவிர்த்த, பிற தமிழர் தலைவர்கள், தந்தை செல்வா உட்பட இந்திய வம்சாவளிகளுக்கு ஆதரவாகத்தான்" அன்று இருந்தார்கள் என்ற செய்தியை கூறினார். அது இங்குள்ள முஸ்லிம் தமிழர் தலைவர்களுக்கு திருப்தியாய்  இருந்தது.அடுத்து வழமையாக முஸ்லிம்களை புண்படுத்தி வரும், "மட்டகிளப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பள்ளிவாசலில் "உள்ளே புகுந்த புலிப்படை "சரமாரியாக" தொழுகைக்கு வந்தவர்களை சுட்டு கொன்றதே? என்று கேட்டார்கள். அது ஒரு "நடக்க கூடாத தவறான துயர சம்பவம்தான்" என்று சுரேஷ் கூறினார். ஏற்கனவே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அந்த சம்பவம் பற்றி "ஒரு துன்பியல் நிகழ்வு" என்று தெரிவித்து இருந்தது இங்குள்ள முஸ்லிம் தமிழர்களுக்கும் தெரியும் என்பதால், அந்த பதிலையும் கடினப்பட்டு சீரணித்து கொண்டனர். அடுத்து " யாப்பானத்திளிருந்து முஸ்லிம்களை கெடு நேரம் முடியும் முன்பு வெளியேற்றியது" பற்றிய கேள்வி. அது "தவறான முன்னுதாரணம்" என்றும் சுரேஷ் ஒப்புக் கொண்டார். அதனால் அவர்கள் அவரை நடபுடனே காண தொடங்கினர். மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு சோசப்பு, "முஸ்லிம்களுக்கு காணி கொடுப்பதை எதிர்த்தாரே? "என்று ஒரு கேள்வி வந்தது. அதற்க்கு, ஏற்கனவே முஸ்லிம்கள் இருந்த பகுதியில் சிங்களரை குடியேற்றிவிட்டு, இப்போது திரும்பி வரும் முஸ்லிம்களுக்கு ஏற்கனவே "முஸ்லிம் அல்லாத தமிழர்கள்" வாழ்ந்துவந்த இடங்களை வேண்டும் என்றே அரசாங்கம் ஒத்துக்கியதால் வந்த எதிர்ப்பு என்றும், அதுபோன்ற பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும் சுரேஷ் பதில் தந்தார். அத்தகைய முரண்பாடுகளை சிங்களம் "பிளவுபடுத்தி ஆளும்" தந்திரத்தை கையாள்கிறது என்று இங்குள்ள முச்ல்ம்கள் உணர்ந்துகொண்டனர். 

                  அதன்பிறகு இப்போது முஸ்லிம்கள் மீது, சிங்களம் செய்து வரும் அட்டூழியங்கள் பற்றிய கேள்விகள் வந்தன.. இங்குள்ள முஸ்லிம் தமிழர்களுக்கு அங்கே  அன்றாடம் நடக்கும் அனைத்து விசயங்களும் "அத்துபடியாக" இருக்கிறது. மட்டக்கிளப்பில், முஸ்லிம் தமிழ் பெண் ஒருத்தரின், "பர்தா" கிழிக்கப்பட்டது வரை இங்குள்ளவர்கள் தெரிந்து வைத்துள்ளனர் என்பது அங்கே பிரதிபலித்தது.புத்த பிக்குகள் இலங்கையில், "பொதுப்பால சேனா" என்று ஒரு அமைப்பை கட்டிக் கொண்டு இன்று முஸ்லிம் தமிழர்களை எதிர்த்து தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர் என்றும், அந்த அமைப்பை தொடக்கி வைத்தவர் "கோத்தபாயி ராஜபக்சே" என்றும் இங்குள்ள முஸ்லிம்கள் ஆதாரபூர்வமாக தெரிந்து வைத்திருந்தனர். இந்தியாவின் பா.ச.க.கட்சி தலைவி சுஷ்மா ஸ்வராஜ் கொழும்பு சென்றபோது, ராஜபக்சேவிடம் "வைர மாலை" பெற்றதையும், தனியாக அவர ராஜபக்சேவிடம் பேசிவிட்டு வந்த பிற்ப்பாடுதான், முஸ்லிம்கள் அறுபது ஆண்டுகளாக வழிபாட்டு தளமாக நடத்திவரும், "தம்புள்ள" பள்ளிவாசலில், வெள்ளிக் கிழமை தொழுகை நேரத்தில் நுழைந்த புத்த பிக்குகள் அந்த பள்ளியை இடிக்க தொடங்கினர் என்றும் "வரலாற்று சான்றுகளை" அந்த முஸ்லிம் தலைவர்கள் எடுத்து  கூறினார்.

                     சுரேஷ் "பிரமிக்கும்" அளவிற்கு இங்குள்ள முஸ்லிம் தலைவர்கள் "ஆதாரங்களை" கூறினார். தமிழர்களின் "உரிமை" வென்றேடுப்பில், முஸ்லிம் தமிழர்களுக்கு "என்ன கிடைக்கும்?" என்று அவர்கள் வினவினர். தநதை செல்வா ஏற்கனவே, "தமிழர்களின் விடுதலையில், முஸ்லிம்களுக்கு என்று" அவர்கள் விரும்பும் பட்ச்சத்தில், "சுயாட்சி பகுதி" உறுதி செய்யப்படும் என்று அப்போதே கூறியுள்ளார் என சுட்டிக் காட்டினார்.    இது இங்குள்ள முஸ்லிம் தமிழர்களுக்கு ஆரோக்கியமான பதிலாக தெரிந்தது. சமீபத்தில் நடந்த "கிழக்கு மாகான சபை "தேர்தலில், தங்களது "தமிழ் தேசிய கூட்டமைப்பு" அக்குள்ள முஸ்லிம் கூட்டமைப்புடன் சேர்ந்து தேர்தலில் நிற்க முயன்றது என்றும், இருவரும் சேர்ந்து ஆட்சியை கிழக்கில் அமைத்திருக்க முடியும் என்றும், அதில், கிழக்கு மாகான முதல்வராக "ஒரு முஸ்லிம் வருவதை ஏற்றுக் கொள்கிறோம்" என்றும் தாங்கள் கூறிய பிறபாடும்கூட, அங்குள்ள முஸ்லிம் கட்சியினர், ஏற்கனவே ராஜபக்சேவின் கூட்டணியில் இருப்பவர்கள், தனித்து தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிற்பாடு, ராஜபக்சே தலைமையிலான் கூட்டணியில் சேர்ந்துகொண்டு, கிழக்கு மாகான ஆட்சியை அமைத்துள்ளர்கள் என்று சுரேஷ் விளக்கினார்.   இந்த சந்திப்பு பற்றி இந்த வார "இந்தியா டுடே" தமிழ் ஏடு "புதிய கூட்டணி சாத்தியமா? என்று எழுதியுள்ளார்கள்.

                இந்த அளவுக்கு முஸ்லிம் தமிழர்களை, இந்து தமிழர்களும், கிருத்துவ தமிழர்களும் ஏற்றுக் கொண்டு செயலபடும் ஒரு சூழல் நல்லதொரு முன்மாதிரிதான் என்று சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணர்தல் ஏற்பட்டது. இப்படி அனைத்து மத சார்பு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படும் ஒரு ஆக்கபூர்வமான் ஒற்றுமை, இந்த தமிழ் மக்களை ஒடுக்க நினைக்கும் சிங்களத்திற்கு வேண்டுமானால் "ஆத்திரத்தை" கிளப்பலாம். எதற்காக நமமூர் "உளவு துறையினருக்கும்" அதிர்ச்சியை கிளப்ப வேண்டும்? 

Thursday, April 11, 2013

இந்திய இறையாண்மையை காப்பாற்ற இலங்கை எம்.பி.மீது பாய்வீர்களா?


    மதுரையில் மூத்த வழக்கறிஞரும், தென் மண்டல வழக்கறிஞர் சங்க தலைவரும், தமிழ் உணர்வாளருமான ஏ.கே.ராமசாமி மீது, திமுக ஆட்சியில் " புரட்சிகரமாக பேசியதாக? காவல்துறை முறைத்தது. இன்று தமிழக சட்டமன்றமே,"இலங்கை நட்பு நாடு அல்ல" என்று கூறியுள்ளபோது, அதை வழி மொழிந்ததுபோல, காங்கிரஸ் தலைவர்களான வாசன்,ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராசன் ஆகியோரும் இலங்கையில் காமன்வெல்த் கூட்டம் நடக்க கூடாது என்றெல்லாம் முழங்க, மதுரை வழக்கறிஞர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி மேடையில் பேசினார் என்று, வழக்கு பதிவு செய்திருப்பது எந்த வகையில் நியாயம்? நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேற்று மதுரையில் சாலை மறியல் செய்து, " தவறான விவரம்" என்று வழக்கை திரும்ப பெற கோரினர். 

      அதேநேரம், நேற்று 10-04-2013 இலங்கை நாடாளுமன்றத்தில், ராஜபக்சேவின் கட்சியான யு.பி.எப்.ஏ என்ற ஐக்கிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த எம்.பி.யான ஜே.ஆர். சூரியபெருமா "இந்தியாவை ஆள்வது ஒரு பலவீனமான தவளை" என்று கூறிவிட்டு, "சோவியத் யூனியன் போலைந்தியாவும் துண்டு, துண்டாக உடையவேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றும் பேசியுள்ளார். நட்பு நாடு என்றால் இப்படி பேச, அதுவும் இலங்கை நாடாளுமன்றத்திலேயே பேச, அதிபர் ராஜபக்சே அனுமதிப்பாரா? சிங்களம் இந்தியாவை உடைக்க விரும்புகிறது. ஈழம் இந்தியாவிற்கு நேச நாடாக இருக்கிறது என்பதை நடுவணரசு  உணராவிட்டால், ஏ கே.ஆர். போன்றோர் மீது நடுவணரசு போட சொல்லும் வழக்குகள் தமிழகத்தில் புரட்சியையே தூண்டிடும்.முதலில் இலங்கை சிங்கள எம்.பி.மீது வழக்கு பட நடுவணரசு தயாரா/