Friday, August 3, 2012

டெசோ மாநாட்டு மைய கருத்து விளக்க "கையேடு" பின்னால் இருக்கும் "கை"கள் எவை?


     ஆகஸ்ட் 2 ஆம் நாள் "முரசொலி" ஏட்டில்,திமுக தலைவர் கலைஞர் எழுதிய
கடிதத்தில், பத்து நாட்கள் கழித்து நடைபெறவுள்ள "டெசோ" மாநாட்டின் "மையக்
கருத்தை விளக்கும் கையேடு" என்று "தீம் பேப்பரை" குறிப்பிடுகிறார். அதே
கடிதத்தில் 29 -07 -2012 தேதியிட்ட "தினமலர்" ஏட்டை மேற்கோள் காட்டி, இலங்கை
தீவை "சீனா" பங்கு போடுகிறது என்றும், "அம்பாத்தோட்டம்" துறைமுகத்தை
செல்வாக்கு செலுத்துகிறது என்றும், அதனால் "தனுஷ்கோடி" அருகே இலங்கை கடல் படை
முகாம் அமைக்க இருக்கிறது என்றும், ஆகவே ராமேஸ்வரம்  மீனவர்களுக்கு
"ஆபத்து"எனவும், அதுபற்றி "டெசோ" மாநாடு ஆய்வு செய்யும் என்றும்
எழுதியுள்ளார். சீனா இலங்கை தீவை தனக்கு "சந்தையாக்கி" கொள்வதை எந்த நேரத்தில்
எழுதியுள்ளார்?  இந்தியாவிலிருந்து அதன் மத்திய அமைச்சரவையில்  இருந்து அதன்
வணிக அமைச்சர் "ஆனந்த சர்மா"  இருபத்தைந்து அதிகாரிகளுடன் கொழும்பு சென்றுள
நேரத்தில் இதை குறிப்பிடுகிறார். அதுவும் "இந்திய வணிக கண்காட்சியை"
கொழும்பில் ஆகஸ்ட் 3 முதல் மூன்று நாட்களுக்கு நடத்த அந்த அமைச்சர்
சென்றுள்ளார் என்பது அறிந்து இதை எழுதுகிறார்.

                அந்த கண்காட்சியில் 108 இந்திய முதலாளிகளின் பெரும்
நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன என்பது தெரிந்த் பிற்பாடு இதை
எழுதுகிறார்.அதுவும் அமைச்சர் ஆனந்த சர்மா,இலங்கை அரசத் தலைவர் ராஜபகசேவை
சந்திக்க இருக்கிறார என்று தெரிந்த பிறகு இதை எழுதுகிறார். அப்படியானால் இந்த
நேரத்தில் இப்படி ஒரு கடிதத்தை உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் எழுதக் காரணம்
என்ன?  இலங்கை தீவை சந்தையாக்க  துடிக்கும் சீனாவை எதிர்த்து அதை இந்திய
முதலாளிகளின் "சந்தையாக்க" எண்ணியே அவர் எழுதியுள்ளார் என்பதைத் தவிர வேறு
என்ன  இருக்க முடியும்? சரி.கருணாநிதி காங்கிரசுடன் சேர்ந்து மத்திய அரசில்
"ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்" இருக்கிறார். அதனால் அப்படித்தான் சிந்திக்க
முடியும். அதற்காகத்தான் எழுத முடியும். அதை ஏன் "டெசோ" மாநாடு பற்றிய தனது
கடிதத்தில் எழுதினார்? அவருக்கு தமிழக மீனவர்கள் மீது அப்படி ஒரு "அக்கறை".
அதனால்தான் எழுதினார் என்றே வைத்து பார்த்தாலும் அதுவும் எடுபடவில்லை. ஏன்
என்றால் அவர் குறிப்பிடும் "தனுஷ்கோடி" பகுதியில் "இந்திய கடல்படை முகாம்"
ஒன்று அமைக்க வேண்டும் என்று, மீனவர்களை காப்பாற்றும் பெயரில் அவர்கள்  அந்த
"டெசோ மாநாட்டு மையக் கருத்து கையேட்டில்" "பரிசீலனக்கான பரிந்துரைகள்" என்ற
தலைப்பில், "பத்தாவது" கோரிக்கையாக எழுதியுள்ளார்கள்.. அதாவது அந்த 'கையேடு"
ஆங்கிலத்திலும், தமிழிலும்,அவரே இன்றைய கடிதத்தில் சொல்வது போல, ஜூலை 16 ஆம்
நாளே :ஊடகங்களுக்கு" கொடுக்கப்பட்டு விட்டது. அதாவது அந்த கையேடும், அதிலுள்ள
"தனுஷ்கோடி கடல்படை முகாமும்" முன்பே திட்டமிடப்பட்ட டில்லியின் திட்டங்கள்.
அதிலேயே அந்த "கை ஏட்டிலேயே"அவர்கள் "தனுஷ்கோடி கடல்படை முகாம்"பற்றி எழுதி
வெளியிட்டு விட்டு, ஏதோ தங்களுக்கு சம்பந்தம் இல்லாத தினமலர் ஏட்டில், ஜூலை 29
ஆம் நாள் வெளியிடப்பட்ட செய்தியை வைத்து பேசுவது போல ஏன் பேசவேண்டும்? தங்களது
திட்டம் ஒன்று, உடன்பிறப்புகளுக்கும் , பொதுமக்களுக்கும், யதார்த்தத்தில்
ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரியவேண்டும் என்பதைத் தவிர வேறு எப்படி
இருக்க முடியும்?

                      அதுவும் ஏன் அவர் "தினமலர்" ஏட்டை மேற்கோளுக்கு எடுக்க
வேண்டும்? இதேபோல மூன்று வாரங்களுக்கு முன்பே கலைஞர் அவர்கள், இதே முரசொலி
ஏட்டில், தனது  கடிதத்தில்,"தினமணி" ஏட்டை மேற்கோள் காட்டி இதே சீனாவின்
செல்வாக்கு சிங்களத் தீவில் வளர்வதை சுட்டிக் காட்டியிருந்தார். வழக்கமாக
"தினமணி , தினமலர்" ஏடுகளை "அவாள்" ஏடுகள் எனச்சாடும் கலைஞர் அவர்கள், அந்த
ஏடுகளை "அதிமுக சார்பு" ஏடுகள் என வசைபாடும் கலைஞர் இப்போது, இந்திய அரசின்
"மறைமுக" திட்டங்களை அமுல்படுத்த அந்த ஏடுகளிடம், "அடைக்கலம்" தேடி செல்வது
ஏன்?  அப்போதுதான் தங்களது திட்டம் எதிர்தரப்பாலும் சுட்டிக் காட்டப்டுகின்றன
என்பதை அவர "நிரூபிக்க" முடியும். ஆனால் அந்த குறிப்பிட்ட ஏடுகள் தங்களது
"டில்லி விசுவாசத்தை"என்றைக்குமே  மாற்றிக் கொண்டவர்கள் அல்ல. செல்வி.ஜெயலலிதா
தனது சட்டமன்ற தீர்மானத்தில், இலங்கை அரசு மீது, "பொருளாதாரத் தடைகளை"
அறிவிக்க டில்லிக்காரர்களை கேட்டுக் கொண்டதும், அதையே திரும்ப, திரும்ப
சொல்லிவருவதும், நடக்கும் வேளையிலே, ராஜபக்சே அரசுடன் "வணிக உறவுக்கு"
அழுத்தம் தரும் ஒரு இந்திய அரசில் அங்கம் வகிக்கும் கலைஞர், கொழும்பில்
கண்காட்சி நடக்கும் நேரத்தில், "இந்திய முதலாளிகளின் சந்தைப் போட்டி எதிரியான
சீனாவை" பற்றி குறிப்பிடுவதும், அதற்கு மேற்கண்ட ஏடுகளையே மேற்கோள்
காட்டுவதும், ஒரு திட்டமிட்ட "பொருளாதார லாபம்" தேடும் முயற்சிதானே தவிர ,
அதில் "ஈழத் தமிழர் நலனோ, தமிழக மீனவர் நலனோ" சிறிது கூட இல்லை.

                              அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்கள் தங்களுக்கு
தொல்லை தரும் சிங்கள கடல்படைக்கு, சற்றும் குறையாமல் "இந்திய கடல் படையும்,
கடலோர காவல் படையும்" செயல்படுவதை பல முறை எடுத்து கூறிவிட்டனர். அவர்களது
"தொல்லைகள்" அடையாள அட்டை விநியோகத்தில் தொடங்கி, சுதந்திர நடமாட்டத்தை
தடுத்தல், மற்றும் மீனவ பெண்களின் சுதந்திரத்தில் தலையிடல் வரை நீண்டு வருவதை
நன்கு உணர்ந்தவர்களாக மீனவர்கள்  இருக்கிறார்கள். அந்த மீனவர்கள் கலைஞரையோ,
அவர் அங்கம்வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையோ, இந்திய கடல் படையையோ,
நம்புவதாக இல்லை. ஆனாலும் அந்த மீனவர்களது பெயரைச் சொல்லி, தனுஷ்கோடி கடல்படை
முகாமில் தொடங்கி, அந்த கடல்பகுதியை "ராணுவ பயன்பாட்டிற்கு" ஒப்படைக்க எண்ணும்
"தெற்காசிய ராணுவ வியூகம்" அதில் அடங்கி இருக்கிறது. அப்படிப்பட்ட தெற்காசிய
ராணுவ வியூகத்தை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த "அமெரிக்கா" முற்படுவதையும்
நாம் இங்கே கணக்கில் எடுத்து பார்க்க வேண்டும். ஆகவே "டெசோ"மாநாடு இந்திய
அரசின் இலங்கை சந்தைக்கு மட்டுமின்றி,  அமெரிக்கா--இந்திய கூட்டு ராணுவ
வியூகத்தை "இந்தியப் பெருங்கடலில்" ஏற்படுத்துவதற்கும், ஒரு களம் அமைத்து
தரும் என்பதே அவர்களது நோக்கம்.


                     இந்த டெசோ மாநாட்டு கையேடு "அரசியலற்றதாக" இருக்கிறது.
அதாவது, "தமிழீழம்" ப்ற்றி இந்த மாநாடு பேசாது என்பதுதான் வெளிப்படையாக
வெளிவந்தது. ஆனால் இந்திய அரசு வழக்கமாக பேசிவரும் "1987 இன்
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்" பற்றியோ, டில்லி பேசும் 13 வது அரசியல் சட்டத்
திருத்தம் பற்றியோ, வடக்கு-கிழக்கு பகுதிகளை ஒன்றுபடுத்துவது பற்றியோ" இந்த
டெசோ கையேடு பேசவில்லை. சிங்கள காலனியாக்கம் வடக்கே நடப்பதை, மனித உரிமை
பாணியில், வடக்கே சிங்களர்களது குடியேற்றம் பற்றி எடுத்து சொல்லும் இந்த டெசோ
கையேடு, "வடக்கு-கிழக்கு பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்றுவது"
என்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் கூற்றைகூட கூறவில்லை. ஆனால் ஒரு மணிநேரம் மாவே
சேனாதிராசாவுடன் பேசிய கலைஞர் "உங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வழியைத்தான்
டெசோ மாநாடு பின்பற்றும்" என்று கூறியாதாக சுமந்த்ரன் எம்.பி. நியு இந்தியன்
எக்ஸ்ப்ரஸ் ஏட்டிற்கு நேர்காணல்  கொடுத்துள்ளார். டி.ஏன்.ஏ. நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள டில்லி அதிகாரிகளது "பச்சைக்கொடி"
மாநாட்டில் கலந்து கொள்ள கிடைத்த்து தெரிகிறது.


                  இதற்கிடையே "நூறு" கல்வியாளர்களது கையெழுத்துடன், மன்னார்
பேராயர் ராயப்பு சோசப்பு முதல் கையெழுத்திட, ஒரு மனு,  டி.ஏன்.ஏ. நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு அனுப்பபட்டுள்ளது.அதில் " ஒற்றையாட்சி இலங்கையில்
இருக்கும்போது, எப்படி பிராந்திய கவுன்சில்" தேதல்களில் கலந்து கொள்ள
முடியும்?என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு கேள்விகள்
எழுந்துள்ளபோது, எதையுமே எடுத்து சொல்லாத "அரசியலற்ற" கையேடு யாரால், எதற்காக
இந்த டெசோ மாநாட்டிற்கு தயார் செய்யப்பட்டது? தெளிவாக இந்திய வெளிவிவகாரத்
துறையின் உளவுத துறையான "ரா" என்ற அமைப்பின் கைவரிசைதான் எனப் புரிந்தாலும்,
எதற்காக அவர்கள் இந்த நேரத்தில் இப்படி ஒரு மாநாட்டை கூட்ட சொல்லவேண்டும்?
 ஒருபுறம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ்-திமுக கூட்டணியை
வெற்றிபெற வைக்க "ஈழத் தமிழர் ஆதரவு" வாக்குகள் தேவை என்பது, சென்ற
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தரும் படிப்பினை அப்படி ஒரு நெருக்கடி
திமுகவிர்க்கோ, கான்கிரசிர்க்கோ, இருக்கலாம். அனால் "ரா" என்ற உளவுத் துறைக்கு
என்ன நிர்ப்பந்தம்?


                  நீண்டகாலமாக இலங்கை பிரச்சனையில், அமெரிக்கா, இந்தியாவையே
சார்ந்து நின்று, இலங்கையை கையாண்டு வந்தது. அல்லது கண்காணித்து வந்தது.
அது வன்னிப்போர் துவக்குகளை மவுனித்த பிறகு, அமேரிக்க அரசு பிரமுகர்களால்
பகிரங்கமாக கூறப்பட்டது.ஆனால் சமீபத்தில் அமேரிக்க தலைவர்கள், அதாவது
அய்.நா.மனித உரிமை கவுன்சில் தீர்மானத்திற்கு பிறகு, நேரடியாக இந்திய உதவியை
பெறாமலேயே ராஜபக்சே அரசை கையாள தொடங்கி விட்டனர். அது ஹிலாரி கிளிண்டன்
நேரடியாக ராஜபக்சேவை தொடர்பு கொண்டு, "பொன்சேகாவை" விடுதலை செய்ய சொன்னதும்,
அதை ராஜபக்சே உடனே நிறைவேற்றியதையும் கவனித்தால் புரிய முடியும்.கொழும்பில்
உள்ள ஆட்சியாளர்களுக்கும், நேரடியாக வாஷிங்க்டனுடன்  தொடர்பு என்பது
இனிக்கிறது என்று டில்லி கண்டு கொண்டது. ஏற்கனவே கோத்தபாயே, பசில், பொன்சேகா
ஆகியோர் அமேரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதை நாம் நினைவில் நிறுத்திக்
கொள்ள வேண்டும்.


                       இந்த சூழலில் கொழும்பு, மன்னார் மாவட்ட சம்பூர் அனல்
மின் நிலையத்தை இந்தியாவிற்கு தர ஒப்புக்கொண்டு, பிறகு இலங்கை மாறுகிறது என்ற
பேச்சு வந்துவிட்டது. இந்தியாவிடம் ஒப்புக் கொண்ட ஐம்பதாயிரம் வீடுகள் கட்டும்
திட்டமும் அப்படியே நிற்கிறது. இதற்கெல்லாம் இந்திய அரசு இலங்கை அரசை
"நெருக்கடி" கொடுத்தே வழிக்கு கொண்டுவரவேண்டும் என நினைப்பது, ஒரு " பெரிய
சகோதர மனோபாவம்தான்". அது இந்திய அரசுக்கு உண்டு என்பதில் இரண்டு கருத்து
இருக்க முடியாது. அதற்காகத்தான் "ரா"அமைப்பு, ஒரு டெசோ வேண்டும் என்று
நினைக்கிறது.அதேநேரம் வருகிற நவம்பரில் அய்.நா.மனித உரிமை கவுன்சிலில்,
ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எந் அளவுக்கு இலங்கை அமுல்படுத்தியது
என்று கேள்வி கேட்கும் கூட்டம் நடக்க இருக்கிறது அதற்கு இந்தமுறை
கூட்டத்தளைமையாக அமரப்போவது இந்திய அரசு.அதனால் அதை கூறி இலங்கையை
நிர்ப்பந்திக்கலாம். அதற்காகவே இந்திய "தேசிய புலனாய்வு கழக" ஆலோசகரான
சிவசங்கர் மேனன் ஜூன் இறுதியில் கொழும்பு சென்று வந்தார்.

                          அதேசமயம் அந்த டெசோ மாநாட்டை ஏன் ராஜபக்சே பெரிதாக
"அலட்டிக் கொள்ளவில்லை?" இந்த டெசோ மாநாடு ராஜபக்செவிர்க்கும், ஒரு விதத்தில்
"நன்மை" பாவிக்கிறது. எப்படி? சமீபத்தில் ராஜபக்சே லண்டன் சென்று தமிழர்களின்
எதிர்ப்பை பெற்று திரும்பியது ஏன்? எதிர்ப்பு இருக்கும் எனத் தெரியும்போது ஏன்
சென்றார்? ஏற்கனவே லண்டனில் பல்கலை கழக  உரை நிகழ்த்த முடியாமல் திரும்ப
ஓடிவந்ததை ஏன் மறந்தார்? அவர் மறக்கவில்லை.இந்த முறையும் எத்ரிப்பு இருக்கும
என்பது அவருக்கு தெரியும். பிறகு ஏன் போய் திரும்பினார்?


                     தென்னிலங்கையில் இப்போது அல்லது சமீபத்தில் ராஜபக்செமீது
சிங்களர்களின்  கோபம் கூடி வருகிறது.அதுவும் அமேரிக்க நிர்ப்பந்தத்தில்
பொன்சேகாவை விடுதலை செய்தபிறகு, அந்த "ராஜபக்சே எதிர்ப்பு சிங்களர்கள்"
பொன்சேகா  பின்னால் "திரள"தொடங்கி விட்டார்கள். அதை எப்படி உடைப்பது? அமேரிக்க
"தேர்வான" பொன்சேகாவை எப்படி ஓரங்கட்டுவது ? அதற்காகவே தமிழர்களின் எதிர்ப்பை
நேரில் சந்தித்து, தென்னிலங்கை சிங்களர் மத்தியில் தனக்கு இருந்த
எதிர்ப்பையே "ஆதரவாக"மாற்றி விட்டார் ராஜபக்சே. அதேபோல இந்தியாவில்
காங்கிரசின் கூட்டணியான திமுக "டெசோ"நடத்தி காங்கிரசிற்கு உதவும்போது, அந்த
டெசோவிற்கு, "எதிர்ப்பு" தெரிவித்து இலங்கையில் ராஜபக்சே வின் கூட்டணி
கட்சியான "ஜாதிக உறுமைய", அதன்மூலம் ராஜபக்சேவிற்கு உதவுகிறது. இதன்ப்மூலம்
சிங்களர்கள் மத்தியில் ராஜபக்சே வின் "ஆதரவு" கூடும் என்பதே அவர்களது
எதிர்பார்ப்பு. இவ்வாறு ஒவ்வொரு "அசைவும்" அரசியலாக நடக்கும்போது, "அரசியலற்ற"
ஒரு "கையேடு" வைக்கும் "கை" கள், "கை" சின்னத்தார் தவிர வேறு யார்?

               இந்த நேரத்தில் ஒன்றை நாமும் நினைவு படுத்தி கொள்ள வேண்டும்.
அதை நமக்கு "இந்திய அமைதி காக்கும் படையின்" ராணுவ உளவுத்துறை தலைவராக இருந்த
கேப்டன் ஹரிஹரன் நினைவு படுத்தி உள்ளார். அதாவது கடந்த ஜூலை 29 ஆம் நாள்
எனபது,  இந்திய ராணுவம் ஈழத் தமிழர்  பகுதிக்குள் நடத்திய "ராணுவ தலையீட்டின்"
இருபத்தைந்தாம் ஆண்டு நினைவு நாள்.அதை அவர் "தி ஹிந்து" ஆங்கில நாளேட்டில்
கட்டுரையாக எழுதியுள்ளார். "இந்திய ராணுவ தலையீடு" என்ற சொல்லை பயன்படுத்தி
உள்ளார்.  அதமூலம் நமக்கு அந்த "கொடுமை நாட்களை" நினைவு படுத்தி விட்டார்.
ஆகவே  முதலில் ஈழத் தமிழர்கள் மீது "இன அழிப்பு போரை" நடத்தியது இந்திய அரசே
என்பதை நாம் நினைவு படுத்த அதுவே நல்லதொரு சான்று.

சீ.பி.அய். அறிககையை கேள்வி கேட்கும் தடவியல் நிபுணர்.


    இன்று வழக்கறிஞர் சங்கரசுப்பு வின் மகன் சதிஷ்குமார் மரணத்தை பற்றிய உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில், இத்தனை நாள் கழித்து நீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தனகளது ஏழு அறிக்கைகளை சீ.பி.அய். முன்வைத்து. அதில் ஆறு அறிக்கைளில் "கோளை" என்பதற்கான சான்றுகள் இருப்பதாக கூறிய சீ.பி.அய். இப்போது "தற்கொலை"என்று அந்த மரணத்தை வர்ணித்துள்ளது.இதற்க்கான காரண, காரியங்கள் மிகவும் வேடிக்கையாக சீ.பி.அய்.யால் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் மீதான கேள்விகளை இன்றைய ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் வழகக்ரிஞர்களுடன், "தடவியல் நிபுணர்" பிரபல சந்திரசேகர் கேட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

                 மரணம் பற்றிய "போஸ்ட் மார்டம் அறிக்கை"  என்ன கூறுகிறது என்று அவர்கள் முன்வைத்தார்கள். அதாவது சதிஷ்குமாரின் கழுத்தில் ஆழமான நான்கு வெட்டுகள் ஒரு கூர்மையான் ஆயுதத்தால் அறுக்கப்பட்ட அடையாளம் உள்ளது. அதை சீ.பி.அய். தற்கொலை என்று கூறுவதற்காக, "தானே ஒரு பாதி பிளேடால்" அவர் அறுத்து கொண்டார் என முடிக்கிறார்கள். ஒரு அரை பிளேடால் ஆழமான இரண்டு செண்டிமீட்டார் ஆழம் கொண்ட  வெட்டை ஏற்படுத்தமுடியுமா? என தடவியல் நிபுணர் கேட்டார். அதுவும் அதுபோல "நான்கு" இரண்டு செண்டிமீட்டார் ஆழமுள்ள வெட்டுகளை எப்படி "தானே" அறுத்து கொள்ள முடியும் என்றும் கேட்டார். அரை பிளேடு என்பது ஒரு செண்டிமீட்டார் அகலம் கொண்டதுதான் என்றார். நீளமான கத்தி இல்லாமல், அதற்கும் ஒரு பிடி இல்லாமல் கழுத்தை அறுக்க முடியாது என்றார். அதனால் வெளி சக்திகள்தான் அதை செய்திருக்க வேண்டும்  எனும்போது, எப்படி அது ஒரு "தற்கொலையாக " இருக்கும்? 

             அதேபோல மரணம் தண்ணீரில் "மூழ்கியதால்" ஏற்படவில்லை என்று "போஸ்ட் மார்டம்" அறிக்கை கூறிவிட்டது. ஆகவே தண்ணீரை அந்த உடல் குடிக்கவில்லை. டயடம் சோதனை மூலம் அது நிரூபிக்கப் பட்டுள்ளது. அப்படியானால் "மக்கார்ஸ்" என்ற   புழுக்கள்  தோன்றியுள்ளன என்று கூறுவது எப்படி? அந்த புழுக்கள் தண்ணீரில் இல்லாத உடலில் "புண்" இருக்கும் இடத்தில் தோன்றக் கூடியவை. அவை முட்டை போட்டு, லார்வா பருவம் அடைந்து, அதன்பிறகு, புழுவாக நெளிய ஐந்து நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் அண்ட் சதிஷ்குமார் காணமல் போன பிறகு, "ஆறாவது நாளில்தான்" அவரது உடல் அண்ட் ஏரியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எப்படி மிதந்த பிணத்தின் முதுகில் கூட, புண் மீது நெளியும் புழுக்கள் அந்த இஅரண்டு நாட்களுக்குள் உருவாகும்? தஹ்ரையில் கொன்று போட்டு வைத்திருக்கும் பிணத்தில் மட்டும்தான் அது உருவாக்க முடியும். அபப்டியானால் அது எப்படி தற்கொலை? 

              தானே தன்னை வெட்டிக் கொண்டு, சதிஷ்குமார் தண்ணீருக்குள் தானே விழுந்து விட்டான் என்றும், ஒரு விலங்கு தண்ணீருக்குள் இழுத்து சென்றது என்றும் சீ.பி.அய். தரப்பு கூறுகிறது. அபப்டியானால் முதலை மட்டும்தான் தண்ணீரில் உள்ள விலங்கு. அது அய்.சீ.எப். ஏரியில் கிடையாதே? இவ்வாறு பல கேள்விகள் இருப்பதால் தற்கொலை என்ற வாதத்தை ஏற்கமுடியாது. ஆகவே ஒரு "மருத்துவ,சட்ட ஆலோசனை குழு"வை அமைத்து நீதிமன்றம் இதை ஆய்வு செய்யவேண்டுமே ன்றார் தடவியல் நிபுணர் சந்திரசேகர். அதேபோல வெளிநாட்டு தஹ்டவியல் நிபுணர்களை அந்த குழுவில் சேர்த்து விசாரணை செய்யவேண்டும் என்றார்.
                                

Wednesday, August 1, 2012

டெசோ மாநாடு "தீம் பேப்பர்" அரசியலற்று இருப்பது ஏன்?

டெசோ மாநாடு  "தீம் பேப்பர்"  அரசியலற்று இருப்பது ஏன்?
      இலங்கை அரசை இந்திய ரசின் மூலமாகத்தான் அமெரிக்கா கவனித்தும் வந்தது, கையாண்டும் வந்தது. சமீப மாதங்களில் அதில் ஒரு மாற்றம். அமெரிக்கா நேரடியாக இலங்கை அரசை கையாள ஒரு வாய்ப்பு அதற்கு கிடைத்து விட்டது. அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கையை கையாளும் "தீர்மானம்" வெற்றி பெற்ற பிறகு, இலங்கை அமெரிக்காவிற்கு "நேரடியாகவே" அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கலாமே என்று எண்ணத்தான் செய்யும். அமெரிக்காவும் ஏன் நாம் நேரடியாக ஐலன்கையை கையாலாகக் கூடாது என்று எண்ணத்தான் செய்யும். அப்படி இரண்டு அரசுகளுமே எண்ணி விட்டன. அதற்கு நம் நாட்டிலிருந்து வாஷின்க்டனுக்கு அனுப்பப்பட்ட "நிருபமா ராவ்" ஒரு "கிரியா ஊக்கி" யாக செயல்பட்டதாக தெரிகிறது.  அதாவது இந்த நிருபமா ராவ் இந்தியாவின் வெளிவிவகார துறையின் செயலாளராக செயல்பட்டு வ்நதபோதுதான்,அவர் இலங்கை விசயத்தில் "தேர்ச்சி" பெற்றார். அதை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்சேவிடம்  நலன் காக்கும் பிரதிநிதி ஆனார். இவர் அமெரிக்காவிற்கு இந்தியாவின் "தூதராக" நியமிக்கப்பட்டவுடன், அங்கே சென்று "ஹிலாரி கிளிண்டனின்" நேரடி தொடர்புக்கு சென்றார்.  இவர் அமெரிக்காவிற்கு கிளம்பும்போது, டில்லி இவருக்கு "பிரிவு உபசாரம்" நடத்தவில்லை. மாறாக கொழும்பிற்கு இவரை வரவழைத்து, மஹிந்த ராஜபக்சே ஒரு "பிரிவு உபசார விழா" நடத்தினார். பிறகு இந்த நிருபமா ராவ் யாருக்கு விசவாசமாக இருப்பார்? 


                           ஆகவே நிருபமா ராவ் மஹிந்த பற்றி கூறிய நல்ல கருத்துகளை ஏற்றுக் கொண்ட "ஹிலாரி கிளிண்டன்" நேரடியாக மஹிந்தாவிடமே பேசினார். பொன்சேகாவை விடுதலை செய்யச்சொன்னார். இலங்கையின் சட்டப்படி, நீதிமன்றம் "தண்டித்த" ஒருவரை, அந்த நாட்டின் "அதிபர்" அதாவது "அரசத் தலைவர்" விடுதலை செய்யலாம். அதன்படியே பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார். பொன்சேகா ஒரு அமெரிக்கா குடிமகன். மகிந்தவின் சகோதரர்களான "கோத்தப்பாயேவும், பசில் ராஜபக்சேயும்" அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்கள். ஆகவே அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்வதில் இலங்கை அரசுக்கு பெரியதொரு தடங்கல் கிடையாது.  அதனால் இந்திய அரசை "அவமதிக்கும்" செயல்களை "தாராளமாக" செய்யத் தொடங்கியது. அதன் ஒரு அம்சமே மன்னார் மாவட்டத்தில் ஒப்புக்கொண்ட அனல் மின் நிலையத்தை இந்தியா தொடங்க அனுமதி தராமல் இழுத்து வந்த செயல்.  அதுபோலவே   நூற்றுக்கு மேற்பட்ட இந்திய பொருள்களை தடை செய்ததாக வந்த அறிவிப்பும். அதனால் வெகுண்டெழுந்த இந்தியா ஒருபுறம் 'சிவசங்கர மேனனை" அனுப்பி பேசுவதும், இன்னொருபுறம் கருணாநிதியிடம் கூறி "டெசோ" மாநாடு நடத்த சொல்வதும். இதற்க்கு பெயர் " கேரட்டும், தடியும்" என்ற கொள்கை என்று இந்தியாவின் "ராஜதந்திரம்" கூறுகிறது. 


                   இந்தியைய அரசிற்கு வேறொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் வந்த தீர்மானத்தின், செயல்பாடு, வருகிற நவம்பர் மாதம் கூடும், மனித உரிமை கவுன்சிலில் விவாதத்திற்கு வருகிறது. அந்த கூட்டத்திற்கு இந்திய அரசே தலைமை தாங்க இருக்கிறது. அதனால் அதை வைத்து சிவசங்கர மேனன் ராஜபக்சேவிடம் "பேரம்" பேசியிருக்கிறார். அதையொட்டி இந்திய வணிக அமைச்சர் ஆனந்த சர்மா "நூற்றி எட்டு" இந்திய கம்பெனிகளை அழைத்துக் கொண்டு, இலங்கை சென்று வணிகம் பேச செல்கிறார். அதேபோல ராஜபக்சேயும், "கற்ற பாடங்கள், மற்றும் நல்லிணக்க ஆணையம்" கூறியுள்ள "பரிந்துரைகளை" அமுல்புத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இவ்வாறு இரண்டு நாட்டு அரசுகளும், தங்களுக்குள் சமரசம் செய்துகொள்ள "ஈழத்தமிழர்" விவகாரம் ஒரு கருவியாக பய்டன்படுத்தப் படுகிறது. அதேபோல இந்திய வெளிவிவகார துறையின் உளவு துறையான "ரா" அமைப்பு, கலைஞரின் "டெசோ" மாநாட்டிற்கு, ஒரு "தீம் பபேர்" தயரா செய்து கொடுத்துள்ளது. அந்த தீம் பேப்பரில் எந்த ஒரு தீர்வும் தமிழர் பிரச்சனைக்கு இல்லாதது அதிர்ச்சியை அளிக்கிறது. 

                    வழக்கமாக 1987 இன் , ராஜீவ் காந்தி---ஜெயவர்தனே ஒப்பந்தம் கூறும், வடக்கு--கிழக்கு ஒன்றுபடுதல்; பற்றியும் அந்த தீம் பேப்பரில் இல்லை. அதை ஒட்டி இந்திய அரசு கூறிவரும் "பதின்மூன்றாவது சட்ட திருத்தம்" பற்றியும் அந்த தீம் பேப்பரில் இல்லை. "அதிகார பகிர்வு" என்று நமது  வெளிவிவகார துறை கூறிவரும் சொற்களும் அந்த தீம் பேப்பரில் இல்லை. அய்யா, "தமிழம்" தான் இருக்காது. அதற்காக எந்த ஒரு அரசியல் தீர்வுக்கான முயர்ச்சியுமா இருக்காது? அந்த அளவுக்கு "அரசியலற்ற" ஒரு அறிக்கையாக அது இருக்கிறது. அதாவது கருணாநிதிக்கு இதுபோதும  என்று அந்த "ரா" அதிகாரிகள் எண்ணிவிட்டார்கள் போலும். அல்லது எந்த விதத்திலும் இந்த தீம் பேப்பர் இரு நாட்டு  அரசுகளுக்கும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதோ தெரியவில்லை. இப்படியாக ஈழத் தமிழர் வாழ்நிலை என்பது மீண்டும் ஒருமுறை வருகிற பன்னிரெண்டாம் தினம் "கேலிக்குரியதாக" ஆக்கப்பட இருக்கிறது. 

                       இங்கே காங்கிரசின் கூட்டணி மூலம் டெசோ நடத்துவதும், அங்கே உள்ள ராஜபக்சேவின் கூட்டணியான புத்த பிக்குகளின் கட்சி மூலம் அந்த டெசோ விற்கு தடை கோருவதும், இரண்டு அரசுகளுக்குள் உள்ள "ப்னிப்போர்". ஆகவே தமிழர்கள் இந்த இந்திய தந்திரத்தை புரிந்து கொள்ளப் போகிறார்களா? இல்லையா"  

                      

Monday, July 30, 2012

சென்னை ஆர்ப்பாட்டம் சிவந்தனின் கோரிக்கையை தாண்டி சென்றது.


      ஞாயிறு அன்று மாலை சென்னையில் "உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்ற புதிய அமைப்பிலிருந்து இளைஞர்கள் வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் புதிய செய்திகளை விவாதத்திற்கு கொண்டு வந்தது. அதில் அன்றைய நாள் அதாவது ஜூலை 29 என்ற நாளின் முக்கியத்துவம் பேசப்பட்டது. அன்றைய நாள் "இருபத்தைந்து ஆண்டுகளுக்கு" முன்பு  "துன்பத்தை" ஏற்றுமதி செய்த நாள் என்பதை நினைவு கூறினார்கள். அந்த துன்பத்தின் பெயர் "இந்திய ராணுவம்" என்று வர்ணிக்கப்பட்டது. 1987 ஆம் அண்டு இதே நாளில்தான்  "இந்திய அமைதி பாதுகாப்பு படை" என்ற பெயரில் ஒரு இந்திய மிதி கொல்லும் படை, ஈழத்திற்கு, வடக்கு மாகனத்திர்க்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அது ராஜீவ் காநதி என்ற ஒரு மாபெரும் "சிந்தனையாளரின்" செயல்பாடு. 

              அவர் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்தை செயல்படுத்த, ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள போராளிகளின் கைகளை "நிராயுத பாணியாகக" சிங்களத்தால் முடியாது என்பதை உணர்ந்து, அதற்காக "சீக்கிய, மராத்திய" படைகளை இந்திய ரானுவத்திளிருட்ன்ஹு "பொறுக்கி" எடுத்து, இலங்கை தீவிற்கு அவர் அனுப்பிவைத்த நாள். அந்த நாளை குறிப்பிட்டு எழுதும், இந்திய ராணுவ தளபதி ஹரிஹரன் ஜூலை 28  ஆம்நாள் "தி ஹிந்து" நாளேட்டில் ஒரு கட்டுரை வடித்துள்ளார். தமிழ் டேஹ்ரியாத இந்தியப்படைதான் "ஆக்கிரமிப்பை" அஞ்சாமல் "தமிழ் பகுதிகளில்" செய்யமுடியும் என்ற இந்திய "தன்ம்திரம்" பலித்தது. அந்த கட்டுரையில் ஹறிஹரன் குறிப்பிடும்போது  "ராணுவ தலையீடு" என்ற சொள்ளை பயன்படுத்துகிறார். அதாவது அவர் அமைதியை ஏற்படுத்த சென்ற படை என்று " சான்றிதழ்" கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, 1971  இல் இதே போன்று இந்திய ராணுவம் "கிழக்கு பாகிஸ்தான்" பகுதிக்குள் நுழைந்தது என்பதை அவர் ஒப்பிடுகிறார். அதில் கிழக்கு பாகிஸ்தானில், இந்தியப்படை பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து நுழைந்தது என்கிறார். அதை இலங்கை சாகசத்திற்கு ஒப்பிடும்போது, இலங்கையின் "வடக்கு,கிழக்கு" மாகாணங்களில் இருந்த "ஈழப்போராளிகளை" இல்லாமல் செய்ய என்றும் குறிப்பிடுகிறார். அந்த "டேஹ்ளிவு" நமது அரசியல்வாதிகள் பலருக்கு இல்லாமல்போனதுதான் விசித்திரம்.

                    அப்படியானால் 1987 இன் இந்தியப்படையின் இலங்கை நுழைவு, ஒரு "ஆக்கிரமிப்பே" என்பது புரியும்.அதன் இருபத்தைந்து ஆன்டுகள் நிறைவுறும்போது, அந்த கொடுமைகளை நமக்கு நினைவு படுத்தும் விதத்தில் எழுதுகிறர ஹரிஹரன். யார் இந்த ஹரிஹரன்? அவர்தான் இந்திய அமைதி காக்கும் படையின், "ராணுவ உளவுத்துறை தலைவர்". அதனால் அந்த விவகாரத்தை அவர் எழுதும்போது, அதுவும், சென்னையின் ஆங்கில இதழில் எழுதும்போது, அதுவும், "ராணுவ தலையீடு" என்று எழுதும்போது, அந்த அகத்துறை முக்கியத்துவம் பெறுகிறது. ஏன் என்றால் அவரது "ஆலோசனையின்"பேரிலேயே சமீபத்தில், "விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டது". கிழக்கு பாகிஸ்தானை விடுதலை செய்ய இந்தியப்படை உதவியதை, அதன்மூலம் "வங்காள தேசம்" உருவாக்கியதை, அவர் இலங்கை தீவில் நுழைந்து, தமிழர் படையை நிராயுதபாணியாக்க முயன்றதை ஒப்பிடுகிறார். முன்னதில் வெற்றி என்றும், பின்னதில் "தோல்வி" என்றும் குறிப்பிடுகிறார். அதனால்தான் இன்றுவரை "புலிகளின் தடைக்கு" எழுகிறார் போலும்?
                    
                   அதன்மூலம் இந்தியப்படைதான் ஈழத்தமிழர் மீதான முதல் "இன அழிப்பு போரை"நடத்தியது என்பதை மரிமுகமாக ஒப்புக்கொள்கிறார். ஆகவே இந்திய அரசுதான் முதல் இன அழிப்பு போரை 1987 இலேயே "தொடங்கியது" என்பதையும், அதன்பிறகே ராஜபக்சே, "இன அழிப்பு போரை" நடத்தினான் என்பதையும் உலகத் தமிழர்கள் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நினைவை அவர்கள் கொண்டாடும்போது, நாம் நினைவு படுத்தி பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதை இளைஞர்கள் நடத்திய  அந்த சென்னை ஆர்ப்பாட்டம் சுட்டி காட்டியது, உண்மையிலேயே "சிறப்பாக" இருந்தது. ஆகவே  லண்டனில் "சிவன்தான்" எப்படி தன் நாட்டு "அதிபர்" தங்கள் மக்களையே "இன அழிப்பு" செய்துவிட்டு லண்டன் வருகை செய்வதையும், இனவெறி இலங்கை ஒலிம்புயக் போட்டிகளில் விளையாட தகுதி அற்றது எனபதை சுட்டி காட்டுகிறாரோ, அதேபோல இந்த தமிழ் இளைஞர்கள், சென்னையில் இருந்து கொண்டு, அததகைய ஒரு இன அழைப்பு போரை தங்கள் இந்திய அரசு செய்ததை "நினைவு" படுத்தினார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. 

             அடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக மல்லை சத்தியா, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் வீர சந்தானம, நடிகரும், இயக்குனருமான களஞ்சியம், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன், பெரியார் திராவிட கழக அன்பு தனசேகரன்,ஆகியோர் இங்கே இரண்டு வாரம் கழித்து நடத்த இருக்கும் "மாநாடு என்ற கூத்தை" பற்றியும் சுட்டாமல் இல்லை. அந்த டெசோ மாநாடு நடத்த கலைஞர் முன்வைத்துள்ள " தீம் பேப்பர்" என்ற கருத்து தாள்" , தெளிவாக "வச்டக்கு-கிழக்கு மாகாண அதிகபட்ச சுயாட்சி"பற்றி குறிப்பிடுகிறது என்பதையும் ஆர்ப்பாட்டத்தில் அம்பலப்படுத்தினார்கள். அந்த தீம் பேப்பரை "தயாரித்து" கொடுத்தது இந்திய வெளிவிவகார  துறையின், உளவு துறையான "ரா" என்பதையும் அங்கே தெளிவு படுத்தினார்கள். அந்த "ரா" மைப்பிர்க்கு தொடர்ந்து  முன்னாள் ராணுவ தளபதி ஹரிஹரனும், முன்னாள் சென்னை பலகலைகழக அரசியல் துறைத்  தலைவர் பேராசிரியர்  சூரியனாரயணனும், " திங்கு டான்க் " என்ற "சிந்தனை வங்கிகளாக" செயல்படுகிறார்கள் என்பதையும் எடுத்து சொன்னார்கள். அதனால் "டெசோ" என்பது ஒரு "ரா" அமைப்பின் வழிகாட்டலே எனபது தெளிவானது.அதனால் கலைஞர் "தமிழீழம்"கனவு வைத்திருக்கிறாரா? இல்லையா? என்பதோ, அதை தீர்மானத்தில் கொட்னுவருகிறாரா? இல்லையா? என்பதோ விவாதமே இல்லை என்றும், டெசொவின் தீம் பேப்பர் தெளிவாக "ராஜிவ்காந்தி-ஜெயவர்தனே ஒப்பந்தத்தை" ஒட்டிய  "அதிகபட்ச சுயாட்சிதான்" பேசுகிறது என்பது பற்றியும், நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

                   இந்த நேரத்தில் ஒரு முக்கிய  அறிக்கை ஈழத்து கல்வியாளர்கள் "நூறு பேர்" கையெழுத்திட்டு வெளிவந்துள்ளது. அதில் அவர்கள் "எப்படி ஒரு ஒற்றையாட்சி ரசில், பிராந்திய கவுன்சில்கள்" செயல்பட முடியும்? என்றும், ஆகவே அவடரின் டேஹ்ர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என்றும், "வடக்கு-கிழக்கை" தமிழர் தாய் நிலமாக அங்கீகரிக்கும் ஒரு அரசாட்சிதானே வேண்டும் என்றும், எழுதியிருக்கிறார்கள். இத்தகைய பிரச்சனைகளை "தான் டெசொவில்' விவாதிப்பேன் என்று கலிஞர் கூறுகிறாரா? அல்லது அங்குள்ள தமிழ் மக்களுக்கு உடனே உணவும், உறைவிடமும் தேவை என்பதால் அதைமட்டுமே விவாதிக்கும், "தொண்டு நிறுவனம்" போல நடத்துவேன் என்கிறாரா? ஹரிஹரன் கூட தனது கட்டுரையில் தமிழருக்கான "அதிகார பகிர்வு" பற்றி பேசுகிறார். அதற்கு காரணம் இப்போது இலங்கை விசயத்தில் இதுவரை டில்லியை கலந்துய் செய்துவந்த வாஷிங்க்டன் இப்போது, டில்லியை கை கழுவி விட்டுவிட்டு, கொழும்புடன் குலாவி வருகிறது என்ற டில்லியின் கோபமே ஹரிஹரன் கட்டுரை என்பதும் நமக்கு புரிய வேண்டும். 


            அதையும் தாண்டி, "வாக்கு கொடுத்த" மன்னார் மாவட்ட சம்பூர் அனல் மின் நிலையத்தை இந்தியாவிற்கு கொடுக்காமல், பாகிஸ்தானிற்கு கொடுக்க கொழும்பு எத்தனித்து விட்டது என்பதும் "ரா" அமைப்பை எரிச்சலூட்டி, அதுவே "டெசொக்களை" உருவாக்க வழி வகுத்திருக்கும். ஆனாலும் அய்.நா. சபையின், மனித உரிமை கவுன்சிலில், கொண்டுவரப்பட்ட  "இலங்கை தீர்மானம்" அடுத்த கட்டத்திற்கு, நவன்பர் கூட்டத்தில் வார இருக்கிறது. அப்போது இந்திய ரசுதான் அந்த கூட்டத்திற்கு "தலைமை" தாங்க இருக்கிறது. அதையே வாய்ப்பாக வைத்து இந்திய அரசு 'சிவசங்கர் மேனன் பயணம்" போன்ற ஒன்றாக "டெசோ" மாநாட்டையும் ராஜபக்சே அரசிடம் "பேரம்" பேச பயன்படுத்துகிறது என்பது மிகையல்ல. ஆகவே தமிழர்களே "டெசோ" எச்சரிக்கை மணியை உலகம் முழுக்க கொண்டு செல்லுங்கள். 

Saturday, July 28, 2012

உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று சென்னையில்

உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று சென்னையில் ஊடகவியலாளர்களின் கூட்டத்தை நடத்தியது. 


அதில் இயக்குனர் புகழேந்தி, உ.த.பா.இ.அமிபாளர்கள் சூரியா, ராஜா, ஸ்டாலின், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.மகேஷ், வேல்முருகன் கட்சியை சேர்ந்த முன்னாள் ச.ம.உ. காவேரி,ஆகியோர் கலந்துகொண்டனர்.இன்று காலை நடந்த ஊடகவியலால்கள் கூட்டத்தில் நாளை ஞாயிறு  மாலை நாலு மணிக்கு சென்னை வள்ளுவர் கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்த அமைப்பு அறிவித்தது. எதற்காக இந்த நாளை தேர்வு செய்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, 1987 ஆம் ஆண்டு இதே ஜூலை 29 ஆம் நாள்தான் "இந்திய அமைதிப்படை" என்ற பெயரில் இந்திய அரசின் ஆக்கிரமிப்பு போர் ஈழ மண்ணில் தொடங்கியது என்றும் அது நடந்து " இருபத்தைந்து" ஆண்டுகள் நிறைவு ஆகிவிட்டன என்றும், "முதல் இனப்படுகொலையை" ஈழத்தமிழர்கள் மீது அப்போது தொடங்கியது இந்தியப்படைதான் என்றும், அதற்கு பிறகே ராஜபக்சே அரசு இன அஹிப்பை செய்தது என்றும், அதனால் ராஜபக்சேவின் நாட்டு வீரர், வீராங்கனைகளை லண்டன் அனைத்து நாட்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாட அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையை, வைத்து நடத்தும் ஆர்ப்பாட்டத்தை அந்த முதல் சோக நாளிலியே வைத்துள்ளோம் என்றும் அந்த மைப்பின் ஒரு ஒருங்கிணைப்பாளரான ராஜா ஸ்டாலின் கூறினார்.

சென்னையிலும் லண்டன் அனைத்து நாட்டு ஒலிம்பிக் ஆட்டத்திற்கு கோரிக்கை


          சென்னையில்  தமிழின இளைஞர்கள் ராஜா ஸ்டாலின் மற்றும் சூரியாவின் நண்பர்கள் இணைந்து ஒரு புதிய அமைப்பை ஏற்ப்படுத்தி உள்ளனர். அதற்கு " உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த இயக்கம் ஐநூறு இளைஞர்கள் அம்பத்தூரில் கூடியபோது உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூரில் த்ஜோடன்கிய இந்த இளைஞர்களது இயக்கம், இன்று சென்னை மையப்பகுதிக்கு வந்துள்ளது. தனது சமூக, அரசியல், இன பயணத்தில், இந்த இயக்கம் நாளை சென்னை பத்க்திரிகையாளர் மன்றத்தில் சேப்பாக்கத்தில் ஒரு "ஊடகவியலாளர் கூட்டத்தை" நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த கூட்டத்தில் லண்டனில் நடக்கும் அனைத்து நாட்டு ஒலிம்பிக் ஆட்டத்திற்கு சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். ஏற்கனவே லண்டனில் ஈழத் தமிழ் இளைஞர் சிவானந்தா அனைத்க்து நாட்டு ஒலிம்பிக் போட்டிக்கு, "போர்க் குற்றங்களில்" ஈடுபட்ட இலங்கை சிங்கள அரசின் பங்களிப்பை தடை செய்யவேண்டும் என்று கோரியும், காமன்வெல்த் நாட்டு வரிசையிலிருந்து இலங்கையை, இங்கிலாந்து அரசு நீக்க வேண்டும் என்று கோரியும், ஐந்து நாட்களாக பட்டினிப்போர் நடத்தி வருவது இந்த சென்னை இளைஞர்களை அதே கோரிக்கை மீது போராட தூண்டியுள்ளது. ஆகவே இவர்கள்  , ஞாயிறு அன்று சென்னை மையப்பகுதியில் உள்ள "வள்ளுவர் கோட்டத்தில்" ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர். அதற்கு முன்பு இந்த செய்தியின் நியாயத்தை பொதுமக்களுக்கு  எடுத்து சொல்ல சனிக்கிழமை காலை பதினோரு மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்ப 


                    இந்த இளைஞர்களது முன்முயர்ச்சியை புரிந்துகொண்ட, பல அரசியல், சமூக, பண்பாட்டு தலைவர்கள் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, "ஏன் அனைத்து நாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சிங்கள அரசை தடை செய்யவேண்டும்?" என்பதுபற்றி விளக்க . அவர்களில் திரைப்பட இயக்குனர்கள்  மணிவண்ணன், புகழேந்தி தங்கராஜ், , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் மலை சத்தியா, பெரியார் திராவிடக் கழக , தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி { நிறுவனர்-வேல்முருகன் ] , தலித் தலைவர் ரேவதி நாகராஜ், ஆகிய இந்தியப் பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.ஏ.மகேஷ், , தமிழக முன்னேட்டிற கழகம் அதியமான்,மற்றும் உலக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சூரியா, ராஜச்டலின் ஆகியோர் கலந்து கொள்க. இது தமிழக இளைஞர்கள் இடையே  ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Wednesday, July 25, 2012

மிரண்டாரா? மிரட்டுகிறாரா? கலைஞர் பற்றிய ஒரு ஆய்வு.


     நாம் கலைஞர்  சிதம்பரத்தின் டில்லிகார தர்பார் மிரட்டலுக்கு பயந்துதான் டெசோ மாநாட்டில் "தமிழீழம்" தீர்மானம் இருக்காது என்று கூறுவதும், தமிழர்களிடம் தனிமைப்படுவது கண்டு மிரண்டு, இல்லை, இல்லை நான் தமிழீழத்தை இன்னமும் கனவாக கொண்டுல்லீன் என்று மாற்றி, மாற்றி, கூறுவதும் செய்கிறார் என்றுதான் எண்ணிவந்தோம். ஆனால் அதை கலைஞரின் சீடராக குடும்ப ரீதியில் அன்றிலிருந்து, இன்றுவரை இருந்தவரான ஒரு வழக்கறிஞர் கடுமையாக மறுக்கிறார். தான் கலைஞரை அன்று முதளின்ருவரை கவனித்து வருவதாகவும், அவர் மிரளவில்லை, நம்மை மிரட்டுகிறார் என்றும் வர்ணிக்கிறார். எப்படி? என்று நாம் கேட்டால், ஒரு வரலாற்றையே அவர் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார். 

                  முதலில் கலைஞருக்கும், ப.சிதம்பரத்திற்கும், இன்று உள்ள உறவு ஒருவரை ஒருவர் "மிரட்டும்" நிலையிலில்லை என்கிறார் அப்படியானால் இதுபோல இருக்கிறது என்ருய் கேட்டால், அது கலந்து ஆலோசிக்கும் நிலையில் இருக்கிறது என்கிறார். அதாவது இரண்டு பேருமே தமிழீழத்தை போருத்தவரியிலும், விடுதலை புலிகளை பொருத்தவரையிலும், ஒரே கருத்து கொண்டவர்கள்  என்பது அவரது வாதம்.இது மறுக்க முடியாத ஒன்றுதான். . தமிழீழம் என்ற சொல் இப்போது யாரால் உரைக்கப்பட்டாலும்  நாம் அவர்களை உற்று பார்த்து உண்மையிளுரைக்கிரார்களா? அல்லது தமிழ்நாட்டு மக்களை கவர உரைக்கிரார்களா? என்று காணவேண்டிய நேரம்.ஏன் என்றால் அங்கே ஈழத்தில் கருவி ஏந்தி வெற்றிகரமாக போராடி, வன்னி பகுதியையே விடுதலை செய்து "தமிழீழ அரசாங்கத்தை ஏற்படுத்தி, புலிகள் தலைவர் உலக வரலாடறி படைத்த காலத்தில், கடல் தாண்டி இருந்து கொண்டு "தமிழீழம்" பேசினாலும் அவர்கள் அந்த மண்ணில் உண்மையாக நிலைத்திருக்கும் ஒரு தமிழீழத்தை ஆதரிக்கிறார்கள் என்றே பொருள்படும். அனால் இன்று உள்ள சோக நிலையில், அதுவும், கடல் தாண்டிய மண்ணில் இருந்துகொண்டு தம்ஜிஹீழம் பேசினால், அது வேற்று முழக்கத்திற்காகவும் பேச முடியும். ஆகவே பேசுபவர்கள் "யார்" என்ற கண்காணிப்பு அவசியம் தேவைப்படுகிறது.

                      அதிலும் நிதர்சனமாக் இருந்த நிலைத்து இருந்த தமிழீழ மண்ணில், சிங்க பேரினவாத ராணுவத்தை இறக்கிவிட்டு, தமிழீழ மண்ணை அந்நியனுக்கு காட்டிக்கொடுக்க கடல் கடந்த நாட்டில் இருந்துகொண்டே "சாதித்து" காட்டியவர்கள் தமிழீழம் பேசினால் சந்தேகப்படாமல் எப்படி இருக்க முடியும்? கிளிநொச்சியில் ஒரு சுதந்திர ராசாங்கம். அதில் தமிழீழ தேசியத் தலைவருக்கு தலைமை அலுவலகம். அருகே வயல்வெளிகளில், தமிழீழ விவசாயிகள் உழுது, பாடுபட்டு, நெல் வித்தைத்து, வழமையான விவசாய பூமியாக அதை ஆக்கி, தம்ஜிஹீழ மக்களுக்கு சோறு கொடுத்த சூழல். அந்த விளை நிலங்களுக்கு விவசாயம் செய்ய கடன் கடுக்கும் ஒரு தமிழீழ வங்கி. சிங்கள ராணுவத்தை தாண்டி, "தாண்டிக்குளம்" எல்லையில், ஒரு "கடவு சீட்டு" பெரும் அலுவலகம்.அங்கே துவக்கு ஏந்திய இளம்புலிப்படை. கிளிநொச்சிக்கும், முல்லை தீவிற்கும், யாழிலிருந்தும் மற்ற  மாவ்ட்டங்களிளிருந்தும், கிளம்பி சென்று தமிழீழ மாநாகர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்காளன ஆண்,பெண் "வாத்திகள்". அவர்களை வழிநடத்த ஒரு தமிழீழ கல்வித்துறை. சாலைகளை பராமரித்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சட்டம் ஒழுங்கை சீர் செய்யவும், ஒரு தமிழீழ காவல்துறை. இப்படி ஒவ்வொரு துறையையும் கட்டி ஆண்ட ஒரு தமிழீழ அரசாங்கம். அப்படிப்பட்ட அரசாங்கத்தை "அழித்து விட்டு" இப்போது, எப்படியடா தமிழீழம் பேசத் துணிந்தாய்? இதுவல்லவோ தமிழனின் கேள்வி.


                         உலகமே அதிசயிக்கும் வண்ணம் தமிழீழ அரசாங்கத்தை கட்டிக் காத்த எங்கள்  த்மிழீழ தேசியத் தலைவரை அங்கீகரிக்காமல் எந்த "வாயால்" நீ தமிழீழ அரசாங்கம் பற்றி பேசுகிறாய்? என்று தமிழன் கேட்க மாட்டானா? ஆகவே அந்த கலைஞர் இன்று தமிழீழம் பற்றிய தீர்மானம் கொண்டுவராமல் இருக்கும் முடிவு, பயந்து அல்ல, நம்மை பயமுறுத்தவே என்கிறார் அந்த உடன்பிறப்பு. அதனால்தான் அவர் மிரள வில்லை, நம்மை மிரட்டப் பார்க்கிறார் என்று விவரிக்கிறார். சிதம்பரமும், கருணாநிதியும் இணைந்து அரைமணிநேரம் கலந்து பேசி, அதன்பிறகு, மறுநாள் "தமிழீசம் தீர்மானம் வராது"என்று ஊடகவியலாளர்களை அழைத்து நிதானமாக ஒரு தலைவன் சொல்கிறான் என்றால் அது இருவரும் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது நடத்தும், "உளவியல் போர்" இல்லையா? என்பதே அவரது வாதம். . கலைஞரே டில்லியின் "புலிக்கு தடை" என்ற சட்டத்தை கண்டு மிரண்டுவிட்டார், அகவே உடன்பிறப்பே, நீயும் மிரண்டு விடு, என்றும், ஆகவே வைகோவிற்கும், சீமானுக்கும், எந்த நேரமுமந்த சட்டத்தின் கொடுவாள் பாயலாம் என்பதால், தமிழர்களே நீங்களும் இப்போதே பயந்து விடுங்கள் என்று உரைப்பதை புரிந்துகொள்ள வில்லையடா? என்று அந்த நண்பர் கேட்கிறார்.

                ஆகா.எதனை பெரிய விளக்கம். அந்த எம்மாற்றி வரும் தலைவனை சரியாக புரிந்து கொண்ட விளக்கம். இதுபோலத்தானே இதே தலைவர், எம்ஜி.ஆர். ஆட்சி காலத்தில், மதுரையில் ரேஸ் கோர்ஸில் நடத்திய டெசோ மாநட்டில், வாஜ்பாய், ஏன்.டி.ஆர். முன்னிலையில், முழக்கம் போட்டு காவலர்களுக்கு எதிராக கொந்தளித்த தந்து கட்சி தொண்டர்களை பார்த்து, மைக்கை பிடித்துகொண்டு, "உங்களை காவல்துறையிடம் சொல்லி அடிக்க சொல்லுவேன்" என்று பகிரங்கமாக மிரட்டினார். இப்போதும் டெசோ மான்மாடு என்று வந்தவுடன் அந்த "புத்தி" அதாவது உளவுத்துறை, காவல்துறை சார்ந்த புத்தி மீண்டும் வந்து விட்டதால், தமிழீழ தீர்மானத்தை திரும்ப பெறுவதாக பயம் காட்டி தொண்டர்களை மிரட்டுகிறாரே? அப்படி தமிழர்களை மிரட்டினால் யாரும் இங்கே"தமிழீழம்"பற்றி பேச மாட்டர்கலேன்ரும், அதனால் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்  நேரத்தில்,:ஈழம்" ஒரு விவாதப்பொருளாக ஆக்கப்படாமல் இருக்குமெனவும் அந்த இரண்டு "மேதைகளும்" எண்ணித்தான் இப்படி ஒரு கரடியை அவிழ்த்துவிட்டுள்ளார்.