மயிலை மாங்கொல்லை யில் திமுக வின் கலை இலக்கிய பேரவை பொறுப்பாளர் கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் தென்சென்னை கலை இலக்கிய பேரவை ஒரு கூட்டத்தை நேற்று நடத்தியது. அதில் கனிமொழி இரண்டு நிமிடம் மட்டும் வரவேற்புரை பேச, ஸ்டாலின் பத்து நிமிடம் பேச, கலைஞர் நாற்பது நிமிடம் பேசினார். ஜெ .விற்கு அடிக்கு பதிலடி என கொடுத்ததாக உடன்பிறப்புகள் பெருமை பட்டனர். அவர் உரைக்கு பிறகும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் " தஞ்சை வறண்டு போச்சு""தமிழகமே இருண்டு போச்சு" " கோட்டைக்குதானே விடுப்பு" ' அம்மா, கொடநாட்டுல இருப்பு" என்று ஆடி, பாடினார்கள். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்கும் ஒரு எசப்பாட்டு. " தஞ்சை வறண்டதுக்கும், தமிழகமே இரூண்டதுக்கும், டெல்லி போட்ட பட்டை. அது கலைஞர் முட்டு கட்டை " என்றும் பாடப்படுகிறதே?
Friday, January 18, 2013
Monday, January 7, 2013
பாலியல் வன்முறையற்ற உலகு -உங்கள் பொறுப்பு ?
பாலியல் வன்முறையற்ற உலகு -உங்கள் பொறுப்பு ?
பாலியல் வன்முறை என்பது காம இச்சை மற்றும் காம வெறியின் வெளிப்பாடா ?
மரண தண்டனை தான் இதற்குப் பதிலா ?
வேதியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்வது தான் தீர்வா ?
பெண்கள் மட்டும் தான் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்களா ?
பாலின சிறுபான்மையினர் ,சிறுவர் ,சிறுமியர் மீதான பாலியல் வன்முறை குறித்து சிந்திக்கும் வேளை இது தானே ?
பெண்களின் பாதுகாப்பு என்பதற்கு மாற்றாக அவர்களை மதிக்கும் காலம் எப்போது ?
பெண்கள் மீதான வெறுப்பு என்பது பாலியல் வன்முறையின் கோர வடிவமா ?
வேகமான நீதியா?அல்லது நியாயமான நீதியா ?
இவை இரண்டும் கிடைக்க நமது பங்களிப்பு என்ன?
பாலியல் தொடர்பான சமூக மதிப்பீடுகளில் மாற்றங்களை உருவாக்க ஊடகங்கள் பங்கேற்கும் வேளை இது தானே?
"பாலியல் வன்முறையற்ற உலகு - உங்கள் பொறுப்பு ?"
குறித்த விவாதத்திற்கு, மாநில மக்கள் சிவில் உரிமைக் கழகம் (P.U.C.L) உங்களை அழைக்கிறது .
நாள் : ஜனவரி 09, 2013 (புதன்கிழமை)
நேரம் :மாலை 5-00 மணியளவில்
இடம் : சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகம்-கருத்தரங்கு அறை.
பேச்சாளர்கள்
வ .கீதா, எழுத்தாளர்.
சீலு ,பெண்கள் இணைப்பு குழு,
நாகசைலா,வழக்கறிஞர்,
சசிகுமார், ஆசியன் ஊடகவியல் கல்லூரி,
வி.சுரேஷ் ,அகில இந்திய பொதுசெயலாளர்,
பாலமுருகன் ,மாநில செயலாளர்.
வி.சுரேஷ் ,அகில இந்திய பொதுசெயலாளர்,
பாலமுருகன் ,மாநில செயலாளர்.
அனைவரும் வருக .
---
Monday, December 31, 2012
முஸ்லிம் தமிழர்களும் தமிழினமே.
தமிழினப் படுகொலை ஈழத்தில் நடத்தப்பட்டது. அதை அரங்கேற்றியவர்கள் சிங்கள பேராண்மை வாதிகள். அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்கள் இந்திய அரசு உட்பட இருபது பெரும் வல்லரசு நாடுகளின் அரசாங்கங்கள். போரில் தமிழர்களை தற்காலிகமாக அவர்கள் வென்று இருக்கலாம் போரில் அவர்கள் ஆயுத பலத்தால் மட்டுமே வெற்றியை எட்டினார்களா? இல்லையே? அவர்களது உளவுத்துறை தம்ஜிஹர்கள் வாழும் சிறு பகுதிக்குள், நிலம் வழியாகவும், வான் வழியாகவும் உளவு பார்த்ததே? அதற்க்கு இந்திய ராடார் கருவிகளும், இந்திய உளவு துறையும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்ததே? அவ்வாறு தம்ஜிஹர்களை உலக அரங்கில் தனிமைப்படுத்தியதால் தான் ஈந்த எதிரிகளால் வெற்றியை தற்காலிகமாக எட்ட முடிந்தது? அதற்காக அவர்கள் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேறிய வர்களையும், பயன்படுத்திக் கொண்டார்களா? இல்லையா? அதற்காக தம்ஜிஹர்கள் எல்லோரும் துரோகிகள் என்றோ கிழக்கு மாகான தமிழர்களா துரோகிகள் என்றோ கூறமாட்டோம் அல்லவா? அதில் சிலர் செய்த தவறுகளுக்காக, துர்கொகத்திர்காக ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தை நாம் குறை சொல்ல மாட்டோமே? நமக்குதான் காரணம் புரிகிறதே?
அதுபோலத்தான் போர் நேரத்தில் யாழ்ப்பாணத்தை விட்டு, முஸ்லிம் தமிழர்கள் வெளிஎடர்ப்பட்டதும் நடந்தது இல்லையா? நாம் சிலரை சந்தேகப்படுவது போர் நேரத்தில் தவிர்க்க முடியாதது. அந்த நெருக்கடி நேரத்தில் நம்மிடம் சில சரியாகவும், தவரகாவும் கட்டளைகள் வரலாம் அவற்றை சரியானது என்று கூருவதர்க்கான காரணங்களும் நிறைய இருக்கின்றன என்பது அண்மைக்கு தெரியும். ஆனாலும் புண்பட்ட உள்ளங்களை எப்படி ஆற்றுவது? எப்படி மீண்டும் பிரிந்த உள்ளங்களை சேர்ப்பது? அது பெரிய கடினமான் அசெயல் இல்லையா? சிங்களம் முஸ்லிம் தமிழர்களையும், முஸ்லிம் அல்லாத தமிழர்களையும் பிரித்து நிருற்ற்ஹ்துவதில் இதுவரை வென்று விட்டதே? இந்திய அரசும் அதன் உளவுத்துறையும் கூட அந்த அபன்னிகளை செவ்வனே செய்யும் திறமை உள்ளவர்கள்தானே ? அதை முறியடிக்க, முஸ்லிம் தமிழர்கள், இந்து தமிழர்கள், கிருத்துவ தமிழர்கள், மதமற்ற தமிழர்கள், நாத்திக தமிழர்கள் என்ற அனைவரும் தமிழர்களே என்ற முழக்கத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வீதிகளில் நான்கள் கிளப்பி வருகிறோம். எங்களுடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி இந்திய தவுஹித் ஜமாஅத் ஆகிய அமைப்புகளும் பேரணிகளில் கலந்துகொண்டு, கூட்டங்களில் கலந்துகொண்டு இடெஹ் முழக்கத்தை எழுப்புகிறார்கள். அதவே இலங்கையில் உள்ள இந்திய தவுஹித் ஜமாத்தின் தொடர்பு அமைப்பு, இலங்கை தீவின் கிழக்கு, வடக்கு மாகனங்களில் பிற தமிழர்களுடன் யைந்து செயல்பட்டு வருகிறார்கள்
நான்கள் சென்னையில் கத்தோலிக்க பேராயர் தலைமையில், அனைத்து கிருத்துவ அமைப்புகளின் தலைவர்களையும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும், பல இந்து அமைப்புகளையும் இணைத்து "அனைத்து மத தமிழ மக்கள் என்ற பெயரில், ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் இந்து, கிருத்துவ, முஸ்லிம் வழிபாட்டு தளங்களை இடிக்கிரறாக்கள் என்று குரல் கொடுத்தோமே? அதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய தவுஹித் கமாத் பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய லீக், ஆகியவற்றின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்களே? எங்களுடன் அவர்கள் தமிழீழத்திற்கு ஆதரவு குரல் எழுப்பி வருகிரரகளே? இப்போது 28 ஆம் நாள் மலேசியாவில், கோலாலம்பூரில் நடந்த "இரண்டாவது தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும்" இந்திய தவுஹித் ஜமாஅத் தலைவர் எசெம்.பாக்கர் கலந்துகொண்டு, முஸ்லிம்கள் மதத்தால் வேறுபட்டாலும் தமிழர்கள்தான் என்றும் தமிழீழம் அடைந்தே தீருவோம் என்றும் பேசினாரே? இந்த நாம் வேண்டாமா? இங்கே ஏற்கனவே அ.மார்க்ஸ் போன்றவர்கள் முஸ்லிம்களை விடுற்ற்ஹளைப் புலிகள்தான என்று செய்து சிங்களத்திற்கு உதவி வருகிறார்களே? நாமும் அத்தகைய வேளைகளில் "பலியாகக்" கூடாது அல்லவா? ஆகவே கடந்த காலத்தில் நடந்தவற்றை ஆராய்வது தவறு அல்ல. பல நியாயங்களை போர் நேர நீதிகளை, போர் இல்லா சூழலில் பலருக்கும் புரியவைப்பது கடினம்,. ஆகவே நாம் எப்படி அணுக வேண்டும் என்பதில் கவனம் தேவை
Sunday, December 30, 2012
மலேசியாவில் நடந்த இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு.
மலேசியாவில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில், டிசம்பர் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை இஅர்ண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடந்தது. பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், புதிய தமிழகத் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி இணை அமைப்பாளராக செயல்பாடா அந்த மாநாடு நடந்தது. மாநாட்டின் இயக்குனராக பொண்ணுரங்கன் செயல்பட்டு மாநாட்டை வழிநடத்தினார். மாநாட்டிற்கு, உலகம் முழுவதிலும் இருந்து தமிழ பேராளர்கள் வந்திருந்தனர்.லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை, நார்வே,தென்னாப்பிரிக்கா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து, பல பேராளர்கள் வந்திருந்து கலந்து கொண்டு உரையாற்றினர்.மலேசியா நாட்டின் எதிர்க் கட்சி கூட்டணியின் தலைவர் டத்தோ.அன்வர் இப்ராஹீம் மாலையில் மாட்டில் கலந்துகொண்டு, சிறப்புரை நிகழ்த்தியது முக்கிய நிகழ்வாக காணப்பட்டது.
திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணசாமி சால்வை போர்த்த, பேராசிரியர் ராமசாமி அதற்க்கு மாலை அணிவிக்க, மாநாட்டு வாயிலில் மலேசியா நாட்டு கொடியேற்றி, முழக்கங்கள் எழுப்பி, மாநாட்டை தொடங்கினார்கள்.விநூஷா,தனது பரதநாட்டிய நிகழ்வின் மூலம் மாநாட்டு அரங்கை உர்ச்சாகப்படுத்தினார்..மாநாட் டின் வரவேறப்பு உரையை நிகழ்த்திய தமிழச்சி என்ற காமாட்சி துரைராஜ், மிக நேர்த்தியான விளக்கத்துடன் பேராளர்களை வவேற்றார். தமழர்கள் உலகம் முழுவதும் படும் துன்பங்களை கூறி, நம்பிக்கை நட்ச்சத்திரமாக தமழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் நிகழ்த்தி காட்டிய தமிழீழ விடுதலை, தற்காலிகமாக பின்னடைவை சந்தித்திருந்தாலும், எதிர்காலம் ஒளிமிக்கது, அதற்கான பணிகளை துரிதப்படுத்துவோம் என்றார். மாநாட்டின் இயக்குனர் பொன்னுரங்கன் உலகத் தம்ழிகர் பிரச்சனைகள்,உள்ளூர் மலேசிய மண்ணின் பிரச்சனைகள், கோவையில் நடந்த முதல் மாநாடு, இன்று நடத்தப்படும் மாநாட்டின் நோக்கம் என்று விளக்கமாக உரையாற்றினார்.தமிழர்கள் எங்கணும் நிலம் இழந்ததையும்,ஏமாளித்தனமாக இருப்பதையும் அப்பது அவர் சுட்டிக் காட்டினார். அடுத்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் பேசினார்..மாநாட்டு செயலாளர் மலேசியாவின் சாமுவேல்ராஜ் பேசினார்.அடுத்து உரையாற்றிய பேராசிரியர் ராமசாமி உணர்ச்சிவசப்பட்டு, ஈழத்தமிழர் இன அழிப்பில் பங்கு கொண்ட இந்தியா தன்னை வரவிடாமல் 'தடை" செய்துள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.மருத்துவர் கிருஷ்ணசாமி, மலேசிய எம்.பி. மனோகரன்,ஆகியோர் உரையாற்றினர்.
இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மா.வே.சேனாதிராஜா, சிறிதரன், அரியேந்திரன்,யோகேஸ்வரன் ஆகியோரும், அவர்களுடன் பேராளர்களும் வந்திருந்தனர் தமிழ்நாட்டிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியாவிற்கான நாடாளுமன்ற உறப்பினர் பேராசிரியர் சரஸ்வதி, புதுக்கோட்டை குருமூர்த்தி, டி.எஸ்.எஸ்.மணி, அரிமாவளவன், வழக்கறிஞர்.பார்வேந்தன்,ஆகியோர் தங்களுடைய உரைகளை நிகழ்த்தினர்.அவர்களுடன் மேலும் பத்து பேராளர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தனர்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆஸ்திரேலியா பிரதிநிதி மாணிக்கவாசகம், தனது உரையில் புலம் பெயர்ந்த தமிழர்களின் கோரிக்கைகளை எடுத்து கூறினார்.யாழ்ப்பாண எம்.பி. மா.வே.சேனாதிராஜா,தாங்கள் உள்நாட்டு சுயநிர்ணய உரிமையை வேண்டுவதாகவும், அதற்கு மேல் தங்களால் கோர இயலாது என்றும், மாநாடு "தமிழீழம் தான்" தீர்வு என்ற கருத்தை முன்வைக்கும் நிலையில் தாங்கள் பெரும் ஆறுதல் அடையலாம், என்றாலும், வெளி சுயநிர்ணய கோரிக்கையை புலம்பெயர்ந்தோர் முன்வைக்கின்றீர்கள் என்றும் கூறினார். அரியேந்திரன் எம்.பி.தங்களது தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற உரையையும் தாண்டி, இலங்கையின் புலனாய்வு துறையான, "பயங்கரவாத புலனாய்வு துறை"யின் நான்காவது மாடியிலும் பேசவேண்டிய கட்டாயம் உண்டு என்று அங்கெ தனைகளுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை பகிர்ந்து கொண்டார். "காணொளி" மூலம் மாட்டு ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த "நாடுகடந்த தமிழீழ ரசாங்கத்தின் தலைமை அமைச்சர் உருத்திரகுமார்,உரை" ஒன்று காட்டப்பட்டது.அதில் அவர் மாநாட்டை வாழ்த்தியதோடு மட்டுமின்றி, தமிழீழமே ஒரே தீர்வு என்பதை, " தங்களது தாகம் தமிழீழ தாயகம்" என்று முடித்தார்.
பேராசிரியர் சரஸ்வதி தனது உரையில் மாநாட்டில் மேடையில் பெண் பேச்சாளர்களை அமர்த்தவில்லை எனபதை சுட்டிக் காட்டினார்.இந்திய தவுஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முஸ்லிம் தம்ஜிஹர்களும், தமிழர்கள்தான் என்பதை வலியுறுத்தினார். மலேசியா நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம், தனது உரையில்,தங்களது மக்கள் கூட்டணி இலங்கை இன அழிப்பை கண்டிக்கிறது என்றும், அது உள்நாட்டு பிரச்ச்னை அல்ல என்றும், அது அனைத்துலக மனித உரிமை மீறல் என்றும், இலங்கை தம்ஜிஹர்களின் அடிப்படை உரிமைகளுக்கு தாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம் என்றும் கூறினார். அன்வர் இப்ராஹீம் அடுத்த மலேசியாவின் பிரதமாராக வருவார் என்று மாநாட்டில் பலரும் பேசினார்கள். அனவரும் தான் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு வர விரும்புவதாக கூறினார்.மாநாடு பல தீர்மானங்களை நிறைவேற்றியது.அவற்றில் மலேசியா நாடு கடந்த ஐ.நா.மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தபோது,நடுநிலை வகித்ததை மாநாடு பெருமிதம் கொள்கிறது என்றும், வருகிற மார்ச் மாதம் வரும் அதே ஐ.நா.வின் மனித உரிமை கழக கூட்டத்தில், மலேசியாவும், இந்தியாவும், அனைத்து நாட்டு சுதந்திரமான விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, போராடும் யாழ்ப்பாண பலகளிக் கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேறியது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்கீகரிக்கக் வேண்டும் என்றும் கோரப்பட்டது. மலேசியாவில் தமிழர்களுக்கான அபல்லிகளை அதிகரிக்கவேண்டும் என்றும் கோரப்பட்டது.இரவு பத்து மணிக்கு மாநாடு இனிது முடிந்தது. மிக்கேல் தமழரசன் நன்றி கூறினார்.
Wednesday, December 26, 2012
தமிழ்நாட்டு பேராளர்கள் மலேசியா பயணம்
உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு மலேசியாவில் வருகிற வெள்ளிக் கிழமை 28 ஆம் நாள் நடைபெற உள்ளது. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோவையில் ம் இன அழிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடத்திய செம்மொழி மாநாட்டிற்கு எதிராக, மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டின் கோடியை அப்போது பெற்றுக் கொண்ட மலேசியா நாட்டு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அடுத்த மாநாட்டை மலேசியாவில் நடத்த உறுதி செய்தார். அப்போது கோவை மாநாட்டிற்கு வந்திருந்த மலேசியாவின் 100 க்கு மேற்பட்ட பேராளர்கள் அதே உறுதியை எடுத்தனர். அந்த கோடி தோழர் வீர சந்தானத்தால், வரையப்பட்டது. அந்த கோவை மாநாட்டில் கலந்துகொண்ட மலேசியாவின் நாடாளுமன்ற உறப்பினர் குலசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிவநேசன், குணசேகரன், குலசேகரன், மற்றும் பொன்னுரங்கன், கலையரசன், டைகர் கண்ணன் சாமுவேல்ராஜ், குமார், போன்றோர் மலேசியாவில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். 2011 இல் மலேசியாவில் நாடிபெருவதாக இருந்த இந்த மாநாடு இப்போது 2012 இல் நடக்கிறது. அதற்க்கான பணிகளை தமிழ்நாட்டை சேர்ந்த புதுக்கோட்டை குருமூர்த்தி திறம்பட ஊக்குவித்துள்ளார். சென்ற மாதம் பேராசிரியர் சரஸ்வதியும் குருமுர்த்தியுடன் மலேசியா சென்று இந்த மாநாட்டு பணிகளை செய்து வந்தார்.
கோவையில் நடந்த முதல் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த மருத்துவர் கிருஷ்ணசாமி, பேராசிரியர் சரஸ்வதி, இந்திய தவுஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்பாக்கர், குருமூர்த்தி, டி .எஸ்.எஸ்.மணி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஆகியோரும் இந்த மலேசியா மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுவிட்டனர்.புலமைப் பித்தன், யாடவர் மகாஜன சங்கம் தலைவர் தேவநாதன், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் திருமதி பத்மாவதி ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுவிட்டனர். உலகம் எங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் பலரும் மாநட்டில் கலந்துகொன்ம்டு சிறப்பான முடிவுகளை எடுக்க உள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் மனத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். தமிழர்கலம் அரிமாவளவன், தூயவன் ஆகியோரும் வருகின்றனர்.
Monday, December 24, 2012
சிங்கள ஆண் ராணுவம், மலையகத் தமிழர் மீதும் ஆக்கிரமிப்பு.
தொடர்ந்து சிங்கள ஆண் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கையில் தொடர்வதால் அங்கு வாழும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்நிலையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று உலகமே அதிர நாம் கூறிவருகிறோம். ஈழத்தில் தமிழ்ப் பெண்கள் "தொண்ணூறு ஆயிரம் பேர்" விதவைகளாக இருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் "காவல்துறை" செய்யும் பணிகளைக் கூட, ராணுவத்தின் மூலம் செய்யவைப்பது என்பது, சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு சிறு பிரச்சனைகளுக்கும் அந்த சிங்கள ஆண் இராணுவத்தினரின் அனுமதி பெற்றுக் கொண்டுதான் செயல்பட முடியட்டும் எனபது பெரும் இடையூறுகளை அன்றாடம் மக்களுக்கு ஏற்படுத்துகிறது. அது "மக்கள் வாழும் பகுதிகளை ராணுவ மயமாக்கல்" என்ற கொடுமையான "போர் சூழலை" போர் இல்லா நேரத்திலும் அமுலாக்குவது என்று நாமும் கத்தி வருகிறோம். அதை சிறிதும் சட்டை செய்யாத மஹிநதா அரசு அவர்களின் பாதுகாப்பு செயலாளரான கோத்தப்பாயே மூலம், "அதிகமாக ராணுவத்திற்கு ஆள் எடுத்து விட்டோம் என்றும் அதனால் அவர்களுக்கு வேலை கொடுக்க இப்படி செய்கிறோம்" என்றும் விளக்கத்தை கொடுத்தது இது கேவலமான ராணுவமயமாக்களை நியாயப்படுத்தும் அகங்கார பேச்சு.
வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் குறிப்பாக பல்லாயிரக்கணக்கான விதவை தமிழ் பெண்கள், வெளியே செல்ல முற்படும்போது, சிங்கள ஆண் இராணுவத்தினரின் "ஒப்புதல்" பெற்றே, கடை,கன்னிக்கோ, இயற்கை உபாதைகளை கழிக்கவோ சிறுமிகள் பள்ளிக்கு செல்லவோ பெண்கள் பணிகளுக்கு சென்று வரவோ முடியும் என்றால் இது என்ன ஆட்சி? ராணுவ ஆட்சிதானே? அதேபோல இப்போது பல்கலைக் கழக மாணவர்களை கைது செய்து வைத்திருப்பது தவறு என்று கூறிய பலகளிக் கழக ஆசிரியர்களையும் சிங்கள ஆண் ராணுவம் கொடுமை செய்ய தொடக்கி விட்டது. பலாலி ராணுவ முகாமுக்கு அந்த ஆசிரியர்களான ஆண்ங்களையும் பெண்களையும் வரவழைத்து, அவர்கள் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக பேசக் கூடாதுஎ ன்று மிரட்டியுள்ளது. இது சிங்கள ஆண் ராணுவ ஆக்கிரமிப்பை "பலகளிக் கழகத்திர்க்குள்ளும்" நீட்டிப்பதை பட்டவர்த்தத்னமாக காட்டுய்கிறது.
இப்போது அடுத்த "தாக்குதல்" மலையக மக்களான, இந்தியவம்சாவளியான "தோட்டத் தொழிலாளர்கள்" மீது அதே சிங்கள ஆண் ராணுவம் தொடங்கியுள்ளது.தென்னிலங்கையில் உள்ள மலையக பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக அந்த சிங்கள ஆண் ராணுவம் தனது முகாம்களை அமைத்து மலையக தமிழர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இது மலையாக தமிழ் பெண்கள் "இயற்கை உபாதைகளுக்கு" சுதந்திரமாக வெளியே செல்லக்கூட தடுக்கிறது அல்லது சிங்கள ஆண் ராணுவ வீரர்களால் உற்று பார்க்க வைக்கிறது. அதற்கு பயந்து எத்தனை நாள்தான் தமிழ் பெண்கள் வெளியே செல்லாமல் இருக்க முடியும்? மலையக மக்களின் வீடுகள் தோட்டங்களில் அமைந்துள்ளதால் அவை "வரிசையாக" கட்டப்பட்டிருக்கும். அங்கே ராணுவ முகாம் ஒன்றை அமைத்தால் அவர்கள் அந்த பெண்களின் போக்குவரத்தை, முழுமையாக கண்காணித்து வருவர். அப்படி ஒரு மாத காலமாக அங்குள்ள மலையகப் பெண்கள் தாங்கள் எப்படி சிங்கள ஆண் ராணுவப் பிடிக்குள் "மாட்டிக் கொண்டுள்ளோம்" என்று பல கதைகளை சொல்லுகிறார்கள் முதலில் சிங்கள தேசத்தை "நட்பு நாடு" என்று கூறும் இந்திய அரசியல்வாதிகள் "ராணுவ ஆட்சியை" தமிழ் மக்கள் மீது 'திணிப்பதை" நிறுத்த சொல்லி, தங்களது நட்பு ஆட்சியாளர்களுக்கு கூறுவார்களா? நடுவணரசில் அங்கம் வகிக்கும் திமுக அதுபற்றி நடவனரசின் தலை அமைச்சருக்கு கூறி ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஈழத் தமிழர் வாழ்விடங்களையும் மலையகத் தமிழர் வாழ்விடங்களையும் காப்பாற்ற உதவுவார்களா?
Subscribe to:
Posts (Atom)
