Wednesday, November 23, 2011

கார்பரேட் அதிகாரம், அரசியல் அதிகாரத்தை விட உயர்ந்தது.?

கனிமொழி பிணைகாக, திமுக தலைவர் கலைஞர் டில்லி சென்று மன்மோகனையும், சோனியாவையும் சந்தித்து நெஞ்சுருக பேசிவிட்டு வந்தார். ஆனாலும் பாட்டியாலா நீதிமன்றம் என்ற விசாரணை நீதிமன்றத்திலும், டில்லியின் உயர நீதிமன்றத்திலும் கனிமொழிகான பிணை மறுக்கப்பட்டது. இது அரசியல் அதிகாரத்தின் தோல்வி அல்லது அரசியல் அதிகாரம் தன்னால் பிரிதொரு அதிகாரத்தை எதிர்த்து செயல்பட முடியாத விளைவு. சீ.பி.அய். வழக்கறிஞர் கனிமொழிக்கு பிணை கொடுக்க மறுப்பு கூறவில்லை எனு அறிவித்த பின்னாலும், நீதிமன்றங்கள் மசியவில்லை. உச்சகட்ட அதிகாரம் அரசியல் அதிகாரம்தான் என்று எண்ணியவர்கள் எல்லாம் இந்த நிகழ்வை எப்படி விவரிப்பது என்று திணறிப் போனார்கள். ஏதோ ஒரு அதிகார சக்தி இடை மறிக்கிறது என்று மட்டுமே புலம்பினார்கள்.


ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற கார்பொரேட் காரர்கள் தங்கள் கணக்கு சரிதான் என்று நிரூபிக்கும் முகத்தோடு இன்று "ஐந்து குற்றம் சாட்டப்பட்ட கார்பொரேட் அதிகாரிகளுக்கும்" பிணை கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பிணை கொடுக்காத உயயர்நீதிமன்றத்தை கடிந்து கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படையே "பிணை கொடுக்க சொல்கிறது" என்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை கண்டித்துள்ளது. ஏதோ உச்சநீதிமரத்தின் நீதியரசர்கள் பலரும், சனி, ஞாயிறு கிழமைகளில் "சிறப்பு விமானங்கள்" மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கும் "உல்லாசபுரிகளுக்கும்" அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே இந்த பிணை கிடைத்ததா? அப்படி ஒரேயடியாக சொல்லமுடியாது.

ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முடியும்.கார்பொரேட்கள் "பலம் வாய்ந்தவை". அதனால் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையே பிணை கொடுப்பதுதான் என்ற வார்த்தை முத்துக்கால் சாதாரண மனிதனுக்கு சார்பாக வந்து விழுந்துள்ளன. எப்படியோ. கார்பொரேட்கள், அரசியல்வாதிகளை விட, பலம் வாய்ந்தப்வர்கள் என்பது இதில் நிரூபணம் ஆகிறது.

1 comment:

Anonymous said...

நீதித்துறையின் லட்சணத்தை தெரிந்துகொள்ள மற்றொரு உதாரணம்.

Post a Comment