Monday, May 16, 2011

மோடி, நாயுடு, அஜித்சிங், பரதன் எல்லாம் ஒரே அணியா?

ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவிற்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வந்திருந்தார். அவர் எப்படி வரலாம்? மதவெறிக் கொலைகள் செய்தவர் என்ற குரல் எழும்பியுள்ளது. ஆனால் அவர் சிபியை யின் டி.ராஜாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அது தவிர சிபிஐ யின் அகில இந்திய பொதுச்செயலாளரான ஏ.பி.பரதன் வந்திருந்தார். தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் முதல்வரும், தலைவருமான, சந்திரபாபு நாயுடு வந்திருந்தார். ராஷ்ட்ரிய லோக்தள் தலைவர் அஜித்சிங் வந்திருந்தார். இப்படி பிரபல அகில இந்திய தலைவர்கள் வந்திருந்தார்கள்.

மோடி வந்ததால், பிஜேபி யுடன் அம்மா போகப்போகிறார் என்றால், நாயுடு வந்ததால் மூன்றாவது அணியுடன் போகப்போகிறார் என்றும், பரதன் வந்ததால் மூன்றாவது அணிதான் என்றும், அஜித்சிங் வந்ததால் காங்கிரசுடன் போகலாம் என்றும் கூறிக் கொள்ளலாம் அது அரசியல் தெரியாதவர்களின் கூற்றாக மாறிவிடும். கலைஞர் தனதுமுக்கிய நிகழ்வுகளுக்கு, சொநிஆவையும், மன்மோகனையு அழைக்கும்போதே, எடியூரப்பாவையும் அழைத்தார் அல்லவா, அதுபோன்ற அரசியல் இது. இன்னமும சொல்லப்போனால், அந்த கலிஞரின் முயற்சிக்கு இந்து பதில் என்றும் கூறலாம். கலைஞர், பிஜேபி தலைவர் இல.கணேசன் வீட்டிற்கு சென்று, பிறந்த நாள் வாழ்த்து கூறினார் ல்லவா, அதற்கு இது பதில் என்றும் சொல்லலாம்.

இதுதான் ஆளும்வர்க்க பாணி. எம்.ஜி.ஆர் எப்படி கேபிடலிசம், சோசலிசம், எல்லாம் சேர்ந்து அண்ணாயிசம் என்று கூறினாரோ, அந்த பாணி. ஜெக்கு எப்படியாவது கலைஞருக்கு பதில் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் சோனியாவுடன் தேநீர் என்ற புதிய பாணி. கலைஞருக்கும் அப்படியே.

,.

செம்மொழி நிறுவனம் ஏன் துள்ளி குதிக்கிறது?

இன்று " செம்மொழி நிறுவனம்" அதன் " நூலகத்துடன்"புதிய ஆட்சி வந்தபிறகு, பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து அகற்றப்பட்டு, " கட்டி முடிக்கப்படாத" புதிய வளாகத்தில் கொண்டுபோய் வைக்கப்பட்டுள்ளது .அங்கு இன்று ஒரு அழைப்பிதழை விநியோகம் செய்தார்கள். அதில் வருகிற வெள்ளிக் கிழமை ஒரு கருத்தரங்கிற்கு " கனிமொழி" அழைக்கப்பட்டுள்ளார் என்றும், { கனிமொழிக்கு டில்லி சிபியை நீதிமன்றத்தில் பினைக்கான வழக்கு அன்றுதான் வருகிறது} " பெரிய கண்ணகி சிலையும்" அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ஏன் இப்படி அந்த பேராசிரியர் ராமசாமி செய்கிறார்?

கல்வெட்டு கட்டினீர், கட்டிடத்தை முடித்தீரா?

ஐயோ. புதிய தலைமை செயலக கட்டிடத்தை, வளாகத்தை விட்டு,விட்டு பழைய தலைமை செயலக கட்டிடத்தையே, பயன்படுத்துவதா? ஆயிரக்கணக்கான கோடிகள் பணம் என்னாவது? என்று மிகுந்த அக்கறையுடன், அரசுக்கு நட்டம் ஏற்படுத்த விரும்பாத உள்ளங்கள், திமுக பக்கத்திலிருந்து மிகுந்த ஆதங்கத்துடன் குரல் எழுப்புகிறார்கள். நியாயமான குரல் போல தெரிகிறதே? என்று நாமு வினவினோம். அந்த " சொல்லப்படும் புதிய தலைமை செயலகம்" கட்ட ஒப்பந்தம் எடுத்த கீழக்கரை ஈ.டி.ஏ.முதலாளி சலாலுதீன், திமுக தலைமைக்கு மன்னிக்கவும் மன்னர் குடும்பத்திற்கு எவ்வளவு கையூட்டுடன் இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்? இப்படி ஒரு " ஊழல்" [ஆற்றிய விசாரணை தேவைப்படுகிறதே? அப்படி விசாரணையை தூண்டிவிடத்தான் ஒருவர் நீதிமன்றத்தில், " எப்படி மாற்றலாம் தலைமை செயலகத்தை" என்று வழக்கு போட்டிருக்கிறாரா?

இந்த " சலாலுதீன்" , ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா? என்று சிபிஐ யை கேட்க வேண்டியிருக்கிறதே? அதுமட்டுமின்றி, வானளாவிய அளவில் புகழப்பட்ட " கலைஞர் காப்பீட்டு திட்டம்" இந்த " சலாலுதீன்" கையில்தானே கொடுக்கப் பட்டுள்ளது? இப்படி பிரபலமடைந்த " ஊழல் மன்னரின்" கட்டுமானங்களை பயன்படுத்தினால், அதுவும் புதிய அரசின் அனைத்து தலைமை காரிடங்களுக்கும் பயன்படுத்தினால், நாளை சிபியை விசாரணை வரும்போது, அதாவது இந்த கட்டிட விசயமாக வந்துவிட்டால், அதற்கு பதில் சொல்ல வேண்டியதும் " புதிய அரசுதானே"? இது எதற்குடா வம்பு என்று எண்ணிவிட்டார்களோ என்னவோ?


ஆமாம். ஏதோ கட்டி முடித்துவிட்ட கட்டிடத்தை பயந்படுத்தவில்லைஎநப்துபொல இந்த மனிதர்கள் பேசுகிறார்களே? இன்னமும் பாதி கூட கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தை எப்படி " புதிய தலைமை செயலகம்" என்று ஆளும் கும்பல் அறிவித்து " திறப்பு விழா" கொண்டாடினார்கள்? அதற்கும் இந்த நாட்டின் பிரதமர், ல்கன்கிராஸ் தலைவர், கர்நாடக முதலைமைச்சர் ஆகியோர் வந்தார்கள்? திறப்பு விழா நடத்தி ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஏன் இன்னமும் முடிக்கப்படவில்லை அந்த கட்டிடம்? அதில் எதாவது ஊழல் இருக்கிறதா? கட்டப்படாத கட்டிடத்தை " கட்டிய கட்டிடம் போல" திரைப்பட கலைஞரை வைத்தூ " தோட்டா தாரணி" செட் போட்டு சினிமா போல அந்த முதல்வர் செய்தாரே? அது எல்லாம் எந்த கணக்கில் வரும்? அந்த செலகிகளை யார் ஏற்றுக்கொள்வது?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் பல்லாயிரக் கணக்கான கோடிகளை கொள்ளையடித்த " குடும்பம்" அந்த மக்கள் பணத்தை விரயம் செய்ததற்கு " நட்ட ஈடாக" திரும்ப செலுத்தவேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்க மாட்டார்களா? புதியா ஆட்சியாளர்களுக்கு, ஊழலை எத்ரித்து வாக்களித்த மக்கள், எப்படி இந்த " ஊழல்கள் மிகுந்த" கட்டப்படாத கட்டிடத்தை பயன்படுத்துவதை ஏற்பார்கள்? மாகளது விருப்பத்தை, புதிய ஆட்சியாளர்கள் மத்தித்தால், உடனடியாக இந்த " கட்டப்படாத கட்டிட" செங்கல்களை எண்ணுவதற்கு விசாரணை ஆணையம் போடவேண்டும். அந்த கட்டிடத்தில் சட்டமன்றத்தை, தலைமை செயலகத்தை நடத்தாமல் மட்டும் விட்டால் போதாது. " கல்வெட்டு கட்டிய முதல்வர், கட்டிடத்தை முடிக்காதது ஏன்" என்று விசாரணை ஆணையம் அமைத்து சோதிக்க வேண்டும்.

Sunday, May 15, 2011

சாதிக் கட்சிகள் சாதித்தனவா?

இந்தமுறை சட்டமன்ற தேர்தலில், பெரும் அரசியல் கட்சிகளின் கூட்டணிகளுக்கு எதிராக," சாதிக் கட்சிகள்" சிலவும் போட்டியிட்டன. அப்படி போட்டியிட்டதில் குறிப்பிட்டு சொல்லப்போனால் " பச்சமுத்து உடையார் தலைமையிலான "இந்திய ஜனநாயக கட்சி", " தேவநாதன் தலைமையிலான " யாதவ மகா சபா" போன்றவற்றை குறிப்பிடலாம். முதலாமவர் தனது உடையார் சாதியை நம்பி, நின்றார். அவர் அமைத்த கூட்டணியில், ஜான்பாண்டியன், சிவகாமி ஆகியோரும் உண்டு. அவரது கூட்டணி 84 இடங்களில் நின்றது. தேவநாதனின் அமைப்பு, 53 யிடங்களில் நின்றது.அவர்களது எதிர்பார்ப்புக்கு ஒப்ப, ஒவ்வொரு தொகுதியிலும் 10000 என்றும், 20000 என்றும் வாங்கிவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் 2000 எனவும், 4000 எனவும்,வாங்கியிருக்கிறார்கள்.

இதேபோல, தேவா கட்சியும் 2000 வாக்குகளை மட்டுமே சில தொகுதிகளில் பெற முடிந்திருக்கிறது.ஆனால் தேவநாதன் தான் நின்ற " நாங்குநேரியில்" 12000 வாக்குகள் பெற்று வென்ற கட்சிக்கும், தோற்ற கட்சிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஒத்த வாக்குகள் பெற்றுள்ளார். ஏன் எதிர்பார்த்த அளவு " சாதி கட்சிகள்" சாதிக்க வில்லை? எல்லாம் " அலை" தான் காரணம். " இலை கட்சிக்கு இந்த முறை வீசியது அலைதானே?

Saturday, May 14, 2011

கலைஞரின் வாழ்நாள் சாதனை.

கலைஞர் கருணாநிதி, தனது வாழ்நாளில், தான் வாழும் நாளிலேயே, ஒரு மாபெரும் சாதனையை சாதித்துள்ளார். அண்ணாவால் தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கமான " திராவிட முன்னேற்ற கழகத்தை" தனது வாழ்நாளிலேயே, கழகத்தின் வாழும் நாளிலேயே, ஒரு பெரும் இழுக்குக்கு உள்ளாகியுள்ளார். தானும் அரசியல் சாணக்கியத்தனத்தால் இந்திய அரசையே நிர்ப்பந்தம் செய்யும் அளவுக்கு " தகுதி" பெற்று இருக்கும் போதே, தனது கழகத்தை ஒரு குடும்பம் என்று வர்ணித்து வந்த கலைஞர் அதையே சற்றமாற்றி, தனது "குடும்பமே கழகம்" என்று நிரூபித்த காரணத்தால், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாற்று சிந்தனைக்கு வித்திட்டு இருக்கிறார்.

அதன்மூலம், திமுக என்ற மாபெரும் இயக்கத்தை, தமிழ்நாட்டு மண்ணிலேயே, " சட்டப் பேரவையில் எதிர்க் கட்சி " தகுதி" யில்கூட இருக்க விடாமல் செய்த சாதனை அல்லவா செய்திருக்கிறார்? இது ஒரு " வாழ்நாள் சாதனையல்லவா?".

சாதி,மதங்களை தாண்டியது ஜெயலலிதாவின் வெற்றி.

தேர்தல் கட்சிகள் தாங்கள் வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு பெற்ற சாதிகளை சேர்ந்த வேட்பாளர்களையே அந்தந்த பகுதிகளில் நிறுத்துவார்கள். இது வழமையான ஒன்றுதான். இந்த நடைமுறையில் " சாதி மறுப்பு" பேசும் எந்த கட்சியும் மாற்றி சிந்திப்பதில்லை தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே " சாதி மறுப்பு " அதிகமாக பேசுவார்கள். பேசுபவர்கள் எல்லாம் செய்பவர்கள் இல்லை என்று நீங்கள் கூறலாம்.. ஆனால் தமிழ்நாட்டில் " அதிகம் பேசுகிறார்களே". எப்படி சொல்லாமல் இருப்பது?


அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் வழக்கமாக எல்லா தொகுதிகளைப் பற்றிய நிலைமையை கணிக்கும் போதும " அந்த சாதி வாக்குகள் இவர்களுக்கு" என்பதாக கணிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே கணிக்க முடியாமல், எல்லா சாதிகளையும், மற்றும் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் செல்வி.ஜெயலலிதாவிற்கு அதாவது அவர்களது கூட்டணிக்கு வாகளித்திருக்கிரார்கள். இது பல தொகுதிகளின் ஆய்வில் தெளிவாக தெரிகிற உண்மை. அதற்கு தாரணம் வேண்டும் என்றால், தென் மாவட்டங்களில் குறிப்பாக, விருதுநகர் மற்றும் தூத்திக்குடி மாவட்டங்களில், நாயுடு சாதி மக்கள் அதாவது கம்மா நாயுடு சாதி மக்கள், தேவர் சாதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இந்த முறை, கோவில்பட்டி மற்றும் சாத்தூர் தொகுதிகளில், அதே கம்மா நாயுடு சாதி மக்கள், தேவர் சாதியை சேர்ந்த அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளார்கள்.


கோவில்பட்டியிலாவது நின்ற அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராசு, உள்ளூர்காரர். அவரை எதிர்த்து வேலை செய்தது, தேவர் சாதியில் அந்த பகுதியில் பிரபலமான கடம்பூர் ஜமீன் என்று அழைக்கப்படும் அதேகட்சியான அதிமுகவை சேர்ந்த கடம்பூர் மாணிக்க ராஜ்தான். அவர் ம.நடராசன் குழு என்பது வேறு விஷயம்.ஆனால் கம்மா நாயுடு மக்கள் கடம்பூர் ராஜுக்கு வாக்களித்து வெற்றிபர வைத்துள்ளார்கள். சாத்தூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் தேவர் என்பது மட்டுமல்ல, அவர் சிவகங்கையை சேர்ந்தவர், மதுரையில் வாழ்பவர், என்றாலும் அவருக்கு கம்மா ஆண்யுடு சாதி மக்களும் சேர்ந்து வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளார்கள்.


அதேபோல " தேவேந்திர குல வேளாளர்கள்" குறிப்பாக தென்மாவட்டங்களில் "தேவர் சாதி" வேட்பாளர்களுக்கோ, அதேபோல "தேவர் சாதி" மக்கள், " தேவேந்திர குல வேலாலர்களுக்கோ" சம்மீப காலமாக உறுதியாக வாக்களிக்க மாட்டார்கள். இந்த முறை, "புதிய தமிழகம்" அதிமுக கூட்டணியில் சேர்ந்தவுடன், அவர்கள் இவர்களுக்கும், இவர்கள் அவர்களுக்கும் முழுமையாக வாக்களித்துள்ளார்கள். அதே மாதிரி, வடக்கு மாவட்டங்களில், வழமையாக " அதி திராவிடர்கள்" வன்னியர் சாதி" வேட்பாளர் களுக்கும், " வன்னியர் சாதி" மக்கள், " அதி திராவிடர் வேட்பாளர்களுக்கும்" வாக்களிக்க மாட்டார்கள். இந்த முறை, " பாமகவும், விசிகவும் சேர்ந்து நிரபதால், இருவரும் இருவருக்கும் வாக்களித்து, திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பார்கள் என்ற கலைஞரின் தந்திரம் தோற்று, பதிலாக இரண்டு சாதி கட்சிகளின் வாக்குகளும், தேமுதிக என்ற விஜயகாந்த் கட்சிக்கும், அதிமுக விற்கும் விழுந்துள்ளது என்ற உண்மை, சாதிகளை தாண்டி மக்கள் சிந்தித்திருப்பதையே காட்டுகிறது.



இப்படியாக் தமிழ்நாட்டு மக்கள் ஜெயலலிதாவின் கூட்டணிக்கு அளித்துள்ள வாக்குகள், உள்ளபடியே " மன்னர் குடும்ப ஆட்சியை" வீழ்த்த வேண்டும் என்ற வெறியையே மக்கள் கொண்டிருததை காட்டுகிறது. அதற்கான அலை வீசியதையே தெளிவாக்குகிறது. இந்த அலைக்கு முன்னால் சாதியாவது, மதமாவது?

Thursday, May 12, 2011

விடுதலைப் புலிகள் தலைவர் படம் வைத்து வாக்குகேட்ட இயக்கம்.

தமிழ்நாட்டில் ஒரு மாத காலமாக் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரைகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு கட்சியும் தங்களது பரப்புரைகளில், பல தலைவர்களது படங்களை போட்டு விளம்பரங்கள் செய்வதும், சுவரொட்டிகள் ஒட்டுவதுமாக இருந்தனர். அத்ய்தகைய கட்சிகளில், இயக்கங்களில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றும், அங்கீகரிக்கப்படாத ஆனால் பதிவு செய்யப்ப்பட்ட கட்சிகள் என்றும் தேர்ர்தலில் நின்றன. சில அமைப்புகள் பதிவு செய்யப்படாத நிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, தேவநாதன் யாதவ் தலைமையிலான," யாதவ் மகா சபா". அதனால் அவர்கள் ஜார்கண்டில் உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்சாவிடம் அவர்களது சின்னமான " வில் அம்பு" பெற்று அதையே தங்களது சின்னமாக பயன்படுத்தி தேர்தலில் நின்றனர்.

அதேசமயம் எல்லா கட்சிகளையும் போல அவர்களுக்கும், பல தலைவர்களின் படங்களை போட்டு விளம்பரம் செய்யவேண்டிய கட்டாயம் வந்தது. அதில் காமராஜ், அம்பேத்கர், காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், அழகு முத்து கோன், சுந்தரலிங்கம், என்று பல தலைவர்கள் படங்களை போடும்போது நினைவாக " தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் படத்தையும்" போட்டு விளம்பரங்கள் செய்தனர். சுவரொட்டிகளையும் "பிரபாகரன்" படத்துடன் ஒட்டினர். தமிழ்நாட்டில் நடந்த டேஹ்ர்தலில் இந்த ஒரே இயக்கம்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் படத்தை தாங்கள் நின்ற 53 தொகுதிகளிலும் ஒட்டி, விளம்பரப்படுத்தி பணி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது தமிழின ஆரவல்ர்களால் பாராட்டப்[டுகிறது..