சென்ற வாரம் இந்த ஆண்டுக்கான தனது ராணுவ பட்ஜெட்டை சீன நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதில் சென்ற ஆண்டை விட 7.5 விழுக்காடு அதிகமாக நிதி ஒதுக்கியதை காணமுடிகிறது. இது 10 ஆண்டுகளுக்கு என்பதாகவும் கூறப்படுகிறது. சீன மக்கள் குடியரசு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் நடத்தப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் வழக்கமாக தங்களது கட்சியின் பேராயத்தின் மூலம் தலைமையைத் தேர்வு செய்வார்கள். கட்சியின் அடிமட்டத்திலிருந்து, மேல்மட்டம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கூட்டமாக அப்படிப்பட்ட பேராயங்கள் நடத்தப்படும். ஒரு பேராயத்திற்கும் இன்னொரு பேராயத்திற்கும் மத்தியில், முக்கியமான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக பிளீனங்கள் என்ற பெயரில் சிறிய மாநாடுகள், பிரதிநிதிகளைக் கொண்டு நடத்தப்படும். ஆட்சி அதிகாரத் தில் இருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சிகள், அரசாங்கத்தில் வகுக்கப்பட வேண்டிய கொள்கைகளை, இத்தகைய பேராயங்களிலும், பிளீனங்களிலும் முடிவு செய்கிறார்கள். அதுபோல இப்போது நடந்து வரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது மத்தியக் குழுவின் 3வது பிளீனத்தில், பல்வேறு பாதுகாப்பு மிரட்டல்களை சமாளிக்க தாங்கள் தங்களது ராணுவத்தை வலுப்படுத்த வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். தங்கள் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை உயர்த்த அதிகமான நிதியை ஒதுக்கியிருப்பதா கவும் கூறுகிறார்கள். 1999ம் ஆண்டு முதன் முறையாக சீனா தனது ராணுவ பட் ஜெட்டை பெரிய அளவுக்கு உயர்த்தியது. அவர்களது ராணுவத்தின் பெயர் மக்கள் விடுதலைப் படை. அப்படிப்பட்ட தியாகத்திற்கும், எளிமைக்கும் பெயர் பெற்றது. 1978ம் ஆண்டு, உலகத்தில் உள்ள சந்தைப் பொருளாதாரத்துடன் சீனா ஊடாடல் செய்த பிற்பாடு, உலக நாட்டு சரக்குகளை தங்கள் சந்தைக்குள் அனுமதிப்பது என்ற நிலைப்பாட்டை, சீர்திருத்தம் என்ற பெயரில் எடுத்தது. அதற்குப் பிறகு அவர்களுடைய மக்கள் விடுதலைப்படையும், வெளி நாட்டு ராணுவ வர்த்தகத்துடன் தொடர்பு கொண்டது. அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் விவசாயம்,
சொத்துக்கள், உள்நாட்டு உற்பத்திகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் பல பொழுது போக்கு நிறுவ னங்களையும் உள்ளடக்கி அதன் வர்த்தக உறவு வளர்ந்தது. அவர்கள் ராணுவமும் கூட, பணக்கார ராணுவமாக மாறியது. மேல் மட்டத்திற்கும், கீழ் மட்டத்திற்கும் இடைவெளி கூடியது. ஊழல் ராணுவத்திற்குள்ளும் அதிகமாகத் தொடங்கியது. போர் அல்லாத நடவடிக் கைகளிலும் அது ஈடுபடத் தொடங்கியது. அதுவே அவர்களது ராணுவத்தை போராடும் மனஉறுதியிலிருந்து கீழே இறக்கியது. இத்தகைய வணிகமய மாக்கல் தன்மையிலிருந்து, அதை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டு மக்கள் சீன குடியரசின் 60வது ஆண்டு விழாவில், அவர்களது ராணுவத்தின் அணி வகுப்பில் பெண் போர்ப்படை வீரர்களும் சென்றார்கள். அப்படிச் சென்றவர்கள் அழகுப் பதுமை களாக தங்களை அலங்கரித்துக் கொண்டு சென்றது, சீன ராணுவத்தின் வரலாற்றில் புதிய மாற்றமாக தென்பட்டது. வழமை யாக சீன ராணுவத்திற்கும், இந்திய ராணுவத் திற்கும் ஒப்பீடு செய்பவர்கள், சீன ராணுவத்தின் எளிமையான தன்மையைப் போற்றுவார்கள். இப்போது நிலைமை மாறியிருக்கிறது.
அதே போல சீனாவினுடைய ஒவ்வொரு அணுகுமுறையும் மாறியிருப் பதை நாம் காணமுடிகிறது. 1962ம் ஆண்டு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் எல்லைப் பிரச்சினையை யொட்டி ஒரு போர் நடந்தது. அடுத்து இந்தியாவுடன் போர் நடக்குமானால் அது தரைப்படைப் போராக மட்டுமல்லாமல், வானிலும், கடலிலும் 3 முனைகளிலும் நடக்கும் போராக இருக்கும் என்பதாக சீனத்தளபதி கள் கருதுகிறார்கள். அதற்கான ஏவுக ணைகளைக் கூட, அவர்கள் தயார் செய்தி ருக்கிறார்கள். சீனாவின் அணு ஆயுத கொள்கையில் கூட, முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கையிலிருந்து மாறி, ஒரு அணு ஆயுத சக்தி கொண்ட நாடு கொண்டுள்ள நோக்கத்திற்கோ, தாக்குதலுக்கான தயாரிப் பிற்கோ எதிராகப் பயன்படுத்தலாம் என்று கூறத் தொடங்கியுள்ளனர். இந்தியா இப்போது ஒரு அணு ஆயுத நாடு. 3500 கி.மீ. தூரம் வரை அக்னி 3 ஏவுகணைகளை ஏவக்கூடிய தகுதியுள்ள நாடாக இந்தியா உருவாகியுள்ளது. அதே போல சீனாவின் கடல்படை, இந்தியப் பெருங்கடலில் வலுவடைந்து வருகிறது. சோமாலியா நாட்டிலிருந்து இயங்கும் கடற் கொள்ளையர்களை எதிர்கொள்வ தில் கூட, இந்திய கப்பல் படையும், சீனக் கப்பல் படையும் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தானில் இருக்கும் குவாடார் என்ற ஆழ்கடல் துறைமுகத்தை சீனா கட்டிக் கொடுத்திருப்பதால், எந்த நேரமும் அதை அவர்கள் பயன்படுத்த முடியும். சீனாவின் ராணுவ பட்ஜெட்டில், கப்பல் படை பெருமளவு தொகையைப் பெற்றுள் ளது.
இத்தகைய சூழலில்தான் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன், அம்பாத் தோட்டை துறைமுகப் பணிகளை கையில் எடுத்து செயல்படும் சீன அரசாங் கம், தெற்காசிய பிராந்தியத்தில் மோதல் வருமானால் அந்த இடத்திலிருந்து தாக்குதலை நடத்த, சீனக்கப்பல் படைக்கு பயன்படுத்திக் கொள்வதில் தயங்கப் போவதில்லை. ஏற்கனவே சைனீஸ் குளோபல் டைம்ஸ் என்ற இணையதள இதழில் கூறியிருந்தது போல, இந்துமகா சமுத்திரத்தில் ஒரு மேலாண்மை நிலையினை பெறுவதற்கு சீனா முனைகிறது என்ற அச்சம் இந்திய அரசிடம் ஏற்பட்டுள்ளது என்ற செய்தி இங்கே கவனிக்கத்தக்காதாக இருக்கிறது. அம்பாத்தோட்டை துறைமுகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஆகும் செலவில் 85 விழுக்காட்டை சீன நாட்டின் எக்ஸ்சிம் வங்கி வழங்கியிருக்கிறது என்ற செய்தியும் கவனிக்கத்தக்கது. அதில் 5000 கோடி ரூபாயை சீனா போட்டுள்ளது. வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்தை ஆழப்படுத்துவதிலும் சீனா முக்கியப் பங்கு வகுக்கிறது. இந்தியாவைச் சுற்றி சீனா முன் எடுக்கும் ஒவ்வொரு திட்டத்தையும், "ஒரு முத்து' என்று சீனா அழைக்கிறதாம். நீண்ட கால முத்துமாலை உத்திகள் என்று சீனா செயல்படுத்தி வருவதை, ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் சீனாவிற்கும் இந்தி யாவிற்கும் இடையிலான எல்லைத் தகராறை தவறான புரிதல்கள் அல்லது மாறுப்பட்ட புரிதல்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச் சர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் கூறியிருக்கிறார். அதுபோல ஒரு தற்காப்பு அணுகுமுறையை இந்திய அரசு எடுத்து வருவது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இலங்கைத் தீவில், திரிகோணமலை துறைமுகத்திலும், மன்னார் எண்ணை வளங்களிலும், சீன அரசுடன் இந்திய அரசுக்கு இருக்கின்ற போட்டி, இரு அரசுகளும் ஒரு கோட் பாடற்ற ஒற்றுமையுடன், சிங்கள பேரினவாத அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றன என்ற செய்தி வருந்தத் தக்கதாக இருக்கிறது.
ஈழத்தமிழின அழிப்பு போரில் தொடர்ந்து கொழும்பில் உள்ள அதிகாரத் திற்கு, சீன அரசு ஆதரவு கொடுப்பது நமக்கு ஆச்சரியமல்ல. ஆனால் அதே இன அழிப்புப் போருக்கு, இந்திய அரசு கொடுக்கின்ற ஆதரவு எந்த வகையிலும், இந்தியாவிற்கு ஆதரவான விசயமல்ல. மாறாக தற்போதைக்கு சீன அரசுடன் இந்திய அரசுக்கு இருக்கின்ற போட்டியில், சில வெற்றிகள் கிடைக்கலாம். ஆனால் ஈழத்தமிழர்களின் ஆதரவு மட்டுமே இந்தியாவிற்கு பயனுள்ள ஒன்று என்பதை இத்தகைய சூழ்நிலையிலாவது, இந்திய அரசும், அரசியல்வாதிகளும் புரிந்து கொள்வார்களா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
உலக அரங்கில் சந்தைப் போட்டி யிலும், தெற்காசிய அளவில் செல்வாக்கு போட்டியிலும், இந்தியாவிற்கு சீனாதான் எதிர்நிலையில் உள்ளது. இலங்கை அரசு சீன அரசுடன் நெருங்கி இருக்கும் வேளையில், ஈழத்தமிழர்களின் ஆதரவு நிலையைப் பெறுவது மட்டுமே இந்திய அரசுக்கு உண்மையான பாதுகாப்பு என்பதை நாம் வலியுறுத்த கடமைப் பட்டுள்ளோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment