கூடங்குளம் எதிர்பாளர்களை "சந்தித்தால்" பிரதமர் " மாறிவிடுவாரா?".
இன்று முதல்வர் செல்வி.ஜெயலலிதா கூறியபடி, "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை சென்னையில் "தலைமை செயலாளரை" சந்திக்க வைத்து, பிறகு நாளை அதிகாலை விமானத்தில், அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் டில்லி சென்று "தலைமை அமைச்சரை" சந்திக்க ஏற்பாடு செய்துவிட்டார்.அந்த "குழுவில்" இருப்பவர்கள் பலரும் "எந்த காரணத்திற்காக" சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது நமக்கு விளங்கவில்லை. அதில் அதிமுக.வை சேர்ந்த எம்.பி. கள் தம்பிதுரையும், மைத்ரேயனும் இருக்கிறார்கள். அவர்கள் 'அணு உலை" பற்றி தேர்ச்சி பெற்றவர்களா என்பது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. அதனால் 'அரசியல் காரனங்களுக்காகத்தான்" அவர்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். வருகிற "நாடாளுமன்ற டேஹ்ர்தலை" மனதில் வைத்து அவர்கள் அதிமுக சார்பாக "காங்கிரஸ்" கட்சியை "நெருக்குவதற்காக" சேர்க்கப்பட்டுள்ளார்களா ?
அடுத்து அதில் இணைக்கப்பட்டுள்ளவர்கள், சீ.பி.அய். கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா. அவர் 'சமீபத்தில்" பழைய அணு உலை மூலம் மின்சாரம் என்ற ஆதரவு நிலையை "மாற்றிக்கொண்டு " அணு உலை எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் ஒரு 'அரசியல் தலைவர்". அவரை இணைத்ததன் மூலம் "சீ.பி.அய். உடன் அதிமுக விற்கு" உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான "உறவு" என்பது இங்கே மன்மோகனை "நெருக்கி" அம்பலப்படுத்த உதவும் என்று ஜெயலலிதா என்னலாம். அடுத்து வருபவர் அ.இ.ச.ம.க தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. இவர் அதிமுக நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார். அடுத்து "கூடங்குளம் இருக்கின்ற தொகுதியின் எம்.எல்.ஏ. யான தேமுதிக வை சேர்ந்த " மைகேல் ராயப்பன்". இவர்தான் "பிரதமரிடம்" தொகுதி மக்களின் நிலைமையை சொல்ல முடியும். அதன்மூலம் "தேமுதிக வும், காங்கிரசும்" நாடாளுமன்ற டேஹ்ர்தலில் "கூட்டணி" சேர முடியாமல் அவர்களையும் மத்திய அரசுக்கு எதிராக நிறுத்த முடியும் என்று முதல்வர் நினைக்கலாம்.
பா.ஜ..க .வின் மாநில செயலாளர் 'சரவணப்பெருமாள்" இதில் இணைக்கப்பட்டுள்ளார். அதாவது "காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்" பா.ஜ.க.வும் பயன்படும் என்ற ரீதியில் இது இருக்கலாம். .ஆனால் "புதிய தமிழகம்" கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. இதில் இணைக்கப்படவில்லை. அவரும் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்" என்பது மட்டுமின்றி, அவரது தொகுதியான "ஓட்டப்பிடாரம்" கூடங்குளம் அருகே இருப்பதும், 'ஆபத்தினால்" அந்த தொகுதி" மக்களும் அச்சப்படுவதும் முதல்வருக்கு "கவனத்துக்கு வரவில்லை" என்று நாம் சௌகரியமாக "நினைத்துக் கொள்ளலாம்".இனி வர "நாடாளுமன்ற தேர்தலுக்கும்" கூட்டணியில் கிடையாது என்று "அர்த்த்தமா" என்பது நமக்கு தெரியாது.
அடுத்து நாகர்கோவில் கத்தோலிக்க பேராயர் 'பீட்டர் ரெமிஜியாஸ், தூத்துக்குடி கத்தோலிக்க பேராயர் யுவான் அம்ப்ரோஸ், பாளையம்கோட்டை சி.எஸ்.அய். பேராயர் ஜே.ஜே. கிருஸ்துதாஸ், இடிந்தகரை பங்கு தந்தை ஜெயக்குமார், கூத்தங்குழி பங்கு தந்தை ரக்ஷக நாதன், ஆகியோர் "கிருத்துவ பாதிரிகலாகவும், ஆயர்களாகவும்" இருக்கிறார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்யாகுமரி மாவட்ட மீனவர்கள் "கத்தோலிக்க பரதவர் ம,அற்றும் முக்குவர்கழக " இருப்பதால் அவர்களது "போராட்டத்தை" கிருத்துவ "மத போதகர்களது" தலைமையில் "நடப்பதாக" தப்புக் கணக்கை போடும் 'அரசுகள்" இந்த "போதகர்களின்" சொற்களை கேட்காமல் "மக்கள்" நாளை போராடுவார்கள் என்று "எதிர்பாராதது" கெடு வாய்ப்புதான்.
நாகர்கோவில் உதயகுமார், தூத்துக்குடி புஷ்ப ராயன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் "பட்டினிப்போரை " நடத்துவதில் முன் நின்றார்கள் என்பது அரசின் "கணக்கு". சரிதான். அனால் இவர்கள் "வெளிநாட்டு பணம் வாங்கும் அரசுசாரா நிறுவனத்தை" சேர்ந்தவர்கள் எனபதால் எப்படியும் "மிரட்டி விடலாம்" என்ற கணக்கு அரசிடம் இருக்கிறது. .கூடங்குளம் வழக்கறிஞர் "சிவசுப்பிரமணியம்" சேர்க்கப் பட்டுள்ளார். அவர் கூடங்குளத்தில் உள்ள ரவி தலைமையிலான "மக்கள் பாதுகாப்பு யொயக்கத்தை" சேர்ந்தவர் என்பதால் "வளையாமல் நிற்பார்" என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவை சேர்ந்த "லிட்வின்" சேர்க்கப் பட்டுள்ளார். அவர் தனது இயக்கத்தின் மூலம் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில்" 1988 முதலே இருப்பதால் 'சமரசமாக" வாய்ப்பு இல்லை.அடுத்து "ஆண்டன் கோமேஸ்". சேர்க்கப்பட்டுள்ளார். இவர் "கூடங்குளம் அணு உள்;அய் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அதற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் வழிகாட்டப்பட்டு, ௧௯௮௮ இலேயே "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற ஒரு "தமிழ்நாடு-புதுச்சேரி" மாநிலங்களின் கூட்டமைப்பை கட்டி நடத்தி பெரும் அளவில் செயல்பட்டு அவ்ருபவர். அதனால் அவரை "சமரசம்" செய்ய முடியாது. ஆனால் "தந்திரமாக" அவரை முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க செல்லும்போது, "கிருத்துவ போதகர்கள்" சண்டைக்காரர்" என்று சேர்க்கவிடவில்லை...
ஒட்டுமொத்த "மீனவர்களும்" சேர்ந்து "போராடுவதால்" ஆண்டன் கோமேஸ் மீனவர் திர்ஹளைவராகவும் இருப்பதால் சேர்க்கவேண்டும் என்று இப்போது "இரு அரசுகளும்" கருதி விட்டன போல இருக்கிறது. இதுதவிர சேரன்மாதேவி ஜேசுராஜ், ஸ்ரீரங்கனாயகபுரம் பாலக்ருஷ்ணன், ஆகியோரும் முன்னோடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த "குழுவில்" பிரதமை சந்திக்க செல்கின்றனர். இதில் "அணு உலை ஆதரவு" அரசியல் வெல்லுமா? அணு உலை எதிர்ப்பு அரசியல் வெல்லுமா" நாடாளுமன்ற தேர்தலுக்கான "மாநில கட்சி, மத்திய கட்சி அரசியல்கள் வெல்லுமா? என்பதே கேள்வி.
Thursday, October 6, 2011
Subscribe to:
Posts (Atom)