சென்னை ஊடகமே கேரள அரசின் பொய்யை பரப்ப உதவுவதா?
கடந்த சில நாட்களாக சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு இணையதளத்தின் மீது சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கில ஏட்டிற்கு பெறும் கோபம் வந்துவிட்டது. அந்த இணைய தளத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரையை காரணம் காட்டி, அந்த கட்டுரையாளர் மீதும், அதன் ஆசிரியர் மீதும், அதன் வெளியீட்டாளர் மீதும் அவதூறு வழக்கு தொடுப்போம் என அந்த பிரபல நாடு தழுவிய ஆங்கில ஏட்டின் சென்னை பதிப்பிலிருந்து வழக்கறிஞர் அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில் முதல் அறிக்கையில் ஒரு கோடி ரூபாய் நட்டஈடு கேட்டும், இரண்டாவது அறிக்கையில் "நூறு கோடி" நட்ட ஈடு கேட்டும் மிரட்டல் விடப்பட்டுள்ளது.
அந்த இணைய தளம் பெயர் வீகென்ட் லீடர். { www .weekendleader .com } அந்த கட்டுரையார் பெயர் "ராதிகா கிரி". அவர் statesman என்ற ஆங்கில ஏட்டின் சிறப்பு ஊடகவியலாளர். அவர் தனது கட்டுரையில் ஏன் இந்த சென்னை ஆங்கில ஏட்டில் முல்லைபெரியார் விசயத்தில் " சார்பற்ற நிலை" எடுக்காமல் கேரள சார்பு நிலை எடுக்கிறார்கள்? என்று வினவி இருக்கிறார். அதற்கு அந்த டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டின் சென்னை பிரிவில் எல்லா பொறுப்புகளிலும் "மலையாளிகள்" இருப்பதுதான் காரணமா? என்றும் கேட்டிருக்கிறார். முல்லை பெரியார் பெயரையே ஏன் அவர்கள் முல்லபெரியார் என்று மலையாள உச்சரிப்பில் போடவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். ஏற்கனவே எம்ஜீஆர் காலத்திலேயே 1978 இல் திட்டமிட்டு கேரள மலையாள மனோரமா ஏட்டில் "பீதியை" உருவாக்க எழுதியதையும் அப்போது அந்த கருத்தை கேரள மின்சார வாரிய தலைவர் பரமேஸ்வரன் நாயர் கூறியதையும் எடுத்து காட்டி இருக்கிறார்.
இத்தகைய உண்மை கருத்துக்களை கொண்ட கட்டுரை சென்னை ஆங்கில ஏடான "டைம்ஸ் ஆப் இந்தியா" ஏட்டிற்கு "சூட்டை" கிளப்பி விட்டது. அதனால்தான் அவர்கள் வீகன்ட்லீடர் இணைய தள ஏட்டிற்கு மிரட்டலாக "நூறு கோடி" நட்ட ஈடு கேட்டு வக்கீல் நோடிஸ் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அந்த சென்னை பதிப்பு டைம்ஸ் ஆப் இந்தியா தனது "சார்பு நிலையை" மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. அதை இன்று அவர்களது ஏட்டின் வெளியீடுகள் காட்டிவிட்டன. அதை வின் காட்சி ஊடக செய்திகளும், நிஜங்களும் நிகழ்ச்சியில் நாங்களும் சொல்லிவிட்டோம்.
இன்றைய இதழில், எல்லா நாளேடுகளும், ஆங்கில ஏடுகளான தி ஹிந்து, நியு இந்தியன் எக்ஸ்ப்ரஸ், டெக்கான் கிரநிகள் உட்பட தமிழ் ஏடுகளும், "சட்டசபை தீர்மானத்தை" முதல் செய்தியாக வெளியிட்டுள்ளன. அதாவது முல்லைபெரியார் பற்றிய
தமிழக சட்டமன்ற தீர்மானம் ஒரு வரலாற்று ரீதியான முக்கியத்துவம் கொண்டது என்று புரிந்து கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.எல்லா கட்சிகளும் ஒட்டுமொத்தமாக் சேர்ந்து தமிழக முதல்வரின் தீர்மானத்திற்கு "துணையாக" நிற்கும் மகத்தான நிகழ்வை நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய "ஊடக கடமையை" சரியாக செய்துள்ளன. ஆனால் இந்த சென்னை பதிப்பு "டைம்ஸ் ஆப் இந்தியா" மட்டும் அந்த செய்தியை "ஒன்பதாம் பக்க" செய்தியாக ஆக்கி, அதற்கு முதல் பக்க கீழ்பகுதியில் ஒரு "தொடர்பை" கொடுத்துள்ளது. ஏன் இந்த விபரீத புத்தி? இது "மலையாள இனஉணர்வா?" இப்படி ஒரு கேள்வியை அனைவரும் எழுப்ப எதுவாக அந்த செய்தி வெள்யீடு உள்ளது.
அந்த ஏட்டின் சென்னை பதிப்பை பார்த்து நாம் சில கேள்விகளை கேட்க வேண்டும். செல்வி.ஜெயலலிதாவின் "கொடும்பாவியை" எரித்த கேரள வெறியர்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? எங்கள் முதல்வரது தீர்மானம் உங்களுக்கு அவ்வளவு "கசக்கிறதா?". இந்த செய்தியை "ஓரங்கட்டி" வெளியிடும் அளவு கூட "கேரளாவிலிருந்து தமிழக தேவாரம் பகுதிக்கு" ஓடிவந்த தமிழர்கள் செய்தியை நீங்கள் மட்டும் வெளியிட வில்லையே? அது ஏன்? தி ஹிந்து கூட அதை வெளியிட்டதே? அதேபோல இதே சென்னை பதிப்பான நியு இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஏட்டில் வெளியிடப்பட்ட "கேரள மனித உரிமை ஆணைய" கருத்தையோ, கேரள அரசு வழக்கறிஞரின் கருத்தையோ, கேரள உயர்நீதி மன்றத்தில் நிபுணர் குழு சார்பாக "பரமேஸ்வரன் நாயர்" முன்வைத்த கருத்தையோ இந்த சென்னை பதிப்பு "டைம்ஸ் ஆப் இந்தியா" ஏன் வெளியிடவில்லை? அவை எல்லாமே கேரளாகாரர்களால் கூறப்பட்ட "தமிழக அரசின் நிலை சார்பான" கருத்துக்கள என்பதனாலேயே?
இப்படி ஒரு ஏடு "ஒரு சார்பு நிலை" எடுக்கலாமா? தமிழ்நாட்டில் விற்க வேண்டும் என்று கருதிகூட அந்த இதழால் "சார்பற்ற நிலை எடுத்து உண்மைகளை" போட முடிய வில்லையே? அது ஏன்? அதற்கு "இன வெறி" காரணமாக இருக்கிறதா? சரி. அப்படி உண்மை செய்திகளை சார்பற்ற நிலையில் வெளியிட முடியவில்லை. கேரள டிரச்போர்ட் போன்ற விளம்பரங்கள் வாங்கி போடுவதற்காக என்றுகூட நாம் இறங்கிவந்து ஏற்றுக்கொள்வோம். ஆனால் வீகன்ட்லீடர் இணைத்தளம் மீது அனுப்பிய வக்கிள்நோடிசில் கூறியுள்ளபடி அவர்களிடம் "தேசிய உணர்வு, நாற்றுபற்று" இருப்பதாகவும் தெரியவில்லையே? இன்று அவர்களது ஏட்டில் முதல் பக்கத்தில் அவர்கள் முதல்வரின் சட்டபேரவை தீர்மானத்தை வெளியிடவில்லை என்ற் அக்குற்றம் இருக்கும்போதே, வண்ண, வண்ண படங்களுடன் முதல் பக்கத்திலேயே, "சென்னையில் மலையாள படங்களுக்கு சினிமா கொட்டகைகள் தடை" என்று போட்டு பயந்துபோய் தடை செய்துள்ள சென்னை சினிமா கொட்டகைகளை " கலவரம்" மூட்டும் நோக்கத்தோடு அசிங்கப்படுத்தி செய்தி வெளியிடிருக்கிரார்களே? அது ஏன்?
அவர்களுக்கு செல்வி.ஜெயலலிதா தலைமையிலான அரசின் "சட்ட ஒழங்கை" கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? தலைநகர் சென்னையில் மட்டும்தான் "தமிழர்-மலையாள" பிரச்சனை அடிதடி ஆகாமல் இருக்கிறது என்ற "நல்லெண்ணத்தை" கெடுக்க எண்ணுகிறார்களா? பிரதமரும், உச்சநீதிமன்றமும் கூறிய பிறகு, ஊமன் சாந்தியே அமைதியாகி விட்டார். ஆனால் இவர்கள் சென்னையில் ஊடகத்தை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் போலிருக்கிறதே? இங்கே ஒரு "ரத்த மோதலுக்கு" தயார் செய்கிறார்களா? இதுபோல்தானே "டேம் 999 " எடுத்த ஷோகன் ராய் அண்ணன்காரன் "விமல் ராய்" இங்கே சென்னை "ஆசிய நெட்" தலைவராக இருந்துகொண்டு அந்த ஊடகத்திலே "பீதியை" கிளப்புகிற வேலையை செய்ததையும், அவர் தம்பி மூலம் படம் எடுத்து கேரள மக்களை பீதி அடைய செய்ததையும் "தாமதமாக " நாம் உணர்ந்து "திட்டமிட்ட சகோதரர்களின் "சதியா" என்று வினாவை எழுப்பி
வருகிறோம். அதேபோல்தான் இவர்களும் செய்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் அந்த ஏடு, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் எதற்காக "பாதுகாப்பு" கேட்டார்கள்? தாங்கள் "தவறான, தமிழ் மக்களுக்கு விரோதமான" செய்திகளை வெளியிடுகிறோம் என்று அவர்களுக்கே தெரிந்ததால்தானே கேட்டார்கள். மதுரையில் இருந்து இன்னொரு ஆங்கில ஏட்டின் நிருபர் "கேரளாவில் விரட்டப்பட்ட" தமிழர்கள் பற்றி எழுதினால் எதற்காக இவர்களது சென்னை பதிப்பின் அலுவலகத்திலிருந்து அவரை "மிரட்ட வேண்டும்?". இப்படி சென்னையில் அமர்ந்துகொண்டே "தவறுகள் செய்யாதீர்கள்" என எச்சரிக்கை செய்கிறோம்.
இதே ஏட்டில் இருக்கின்ற ஒரு முக்கிய ஆசிரியர் "யாழ் சென்று போர் நேரத்தில்" நேர்மையான செய்திகளை வெளியிட்டதையும் நாங்கள் மறக்கவில்லை. ஆகவே எல்லா இன மக்கள் மத்தியிலும் "நல்லவர்கள்-கெட்டவர்கள்" இருவரும் இருக்கிறார்கள். நாங்கள் இந்த எட்டிலும் நல்ல, நேர்மையான சார்பற்ற ஊடகவியலாளர்களை எதிர்பார்க்கிறோம்.
Friday, December 16, 2011
Subscribe to:
Posts (Atom)