Thursday, January 31, 2013

குழம்பிய கமலில் மீன்பிடிக்கும் அரசியல்வாதிகள் அம்போ ஆகினரா?

குழம்பிய  கமலில் மீன்பிடிக்கும் அரசியல்வாதிகள் அம்போ ஆகினரா?
        ஆளும்கட்சிக்கு எதிராக வரிந்து கட்ட எண்ணிய காங்கிரஸ் தலைமையிலான அரசின் உள்துறை அமைச்சர் ஷிண்டே, தமிழக அரசின் "தடையை"  ஒரு "அரச பயங்கரவாதம்" என்று கூறியுள்ளார் அவர்கள் டாவின்சி கோடுக்கும், சல்மான் ரஷ்டிக்கும், தஸ்லிமா நஸ்ரீனுக்கும்  தடை வித்தித்தால் அது நாட்டில் உள்ள மிதியை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கையாம். அதை விட ஒரு திரைப்படம் அதிகமாக அப்பாவி மக்களை தட்டி எழுப்பி "ஆவேசம்" கொள்ள செய்யும் என்று தமிழக அரசு தஹ்டையை தஹ்ர்காளிகமாக அறிவித்தால் அதுவே "அரச பயன்கரவடஹம்" ஆகும். என்னய்யா அரசியல் இது? மற்ற  கட்சி ஆட்சிக்கு ஒரு அறிவுரை. உங்களுக்கு ஒன்றா?  அது டில்லியின் எதிரொலி என்றால் சென்னையில் சில அரசியல்வடஹிகள் கொதித்து எழுந்துள்ளனர். 

                 கலைஞர் கண்டனம். கமலை ஜெயலலிதாவிற்கு நாற்ப்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே பிடிக்காது. அய்யா கலிஞர் அவர்களே உங்களுக்கு தெரியுமா? இரண்டு  முன்னாள் ஜெயா டிவி. நடத்திய எம்.ஈஸ்விச்வனாதன் இசை விழாவில், நேரு  ஸ்டேடியத்தில், கமழும், ரஜினியும்  தமிழக முதல்வர் அருகே இருபுறமும் அமர்ந்துகொண்டு அவரை புகழ்ந்து பேசினார். என்னய்யா அரை  வேக்காடுத்தனமான விவாதம்?  சரி. இன்னொருவர் விஜயகாந்த். அவர் இதுதான் வாய்ப்பு என்று எதோ பேச, "தி.ஹிந்து" எட்டில் இன்று "எம்.ஜி.ஆர். கொண்டுவர முயற்சித்த திரைப்பட தஹ்டை சட்டம்" பற்றி வந்துவிட்டது. விஜயகனத் கூறிய "ஏறிவந்த ஏணியான திரையுலகை எட்டி உடஹிக்கும் ஜெயலலிதா"  என்றார் அசொர்கள் அவரது "கருப்பு எம்.ஜி.ஆர்." படம் காட்டுவதற்கு எம்.ஜி.ஆரே.இப்படி ஒரு படி மேலே போய் , தடை சட்டம் கொண்டுவர முயற்சி எடுத்தவர் என்ற செய்தி வந்துள்ளது. அதனால் முஸ்லிம் மக்களை  அவமானப்படுத்தி   படம் எடுப்பதுதான் கருத்துரிமை என இந்த அரசியல்வாதிகள் கூருவார்களா?  முதல்வரின் அறிக்கைக்கு பிறகு இவர்களது விவாதங்கள் அர்த்தமற்று போய்விட்டனவே? 

Wednesday, January 30, 2013

பொய் சொல்லாதீங்க நடிகரே?


     இன்று காலஹாசன் கொடுத்த ஊடகப் பேட்டியில் தான் இந்த படத்தால் கடும் நட்டத்தை அடைந்திருப்பதாகவும் கூறி, ஐயோ பாவம் என்ற அனுதாபத்தை அள்ளி வாங்க தொடங்கியுள்ளார். அதனால்தான் நாம சில உண்மைகளை சொல்லியாக வேண்டும். அதாவது பொதுவாக திரை துறையில் "காப்பீடு" இல்லை. ஆனால் ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஓடும்படம் தோடர்ந்து ஓட முடியாத நிலை. ஆகவே சிலர் ஏற்பாடு செய்து, ஒரு திரைப்பட காப்பீடு தயாரா செய்தனர். அடஹ்ர்க்கு பெயர்" காட்சிபடுத்தலில், காப்பீடு" { Exibiting  Insurance }  இந்த காப்பீடு திரையிடப்பட்ட படங்களா போராட்டம் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டால், முதல் மூன்று நாட்களுக்கு வந்த "வசூலை" கணக்கெடுத்து, அதன் சராசரியை நான்காம் நல படம் திரையிட முடியாத நாளுக்கு அளிக்க வகை செய்கிறது. இந்த "காட்சிப்படுத்தலில் காப்பீடு" என்ற ஒன்றை இந்த படத்தின் முதல் தயாரிப்பாளரான, " பட்லூரி வெங்கடேஸ்வர பிரசாத் ரெட்டி" ஏற்கனவே "பதிவு" செய்துவிட்டார். ஆகவே படம் எந்த நிலையிலும், "நட்டத்தை" அடையாது என்ற உண்மை கமலஹாசனுக்கு தெரியும்.

                       தெரிந்த இந்த உண்மையை, நடிகர் வெளியே சொல்லமால், தனக்கு நட்டம் என்றும், அதனால் சமூகமே என்னை பார்த்து "இறக்கப்படு" என்றும் குரல் கொடுப்பது எப்படி சரி? கமல் அவர்களே, நாங்கள் எல்லோருமே உங்கள் ரசிகர்கள்தான். உங்கள் படங்களைத்தான் விரும்பி எப்போதும் பார்ப்போம். ஆனால நேநேகள் யாரோ சொன்னதற்காக யாருக்கோ உதவி செய்வதற்காக, ஒரு படத்தின் கதையை, நீங்களே விஜய் டி.வி.யில் சொன்னதுபோல, பொங்கலன்று உங்கள் பேட்டியில் கூறியது போல, அமெரிக்காவிற்கு இந்த படத்தின் கதையை முழுமையாக, வசனங்களுடன் அனுப்பி வைத்து, அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகே, 2011 இலேயே  தொடங்கிவிட்டேன் என்கிறீர்கள் அதுதான நாங்கள் கேட்பதும். எதற்காக அமெரிக்க நம் நாட்டில் திரைடவேண்டிய படத்தை, அதுவும் முஸ்லிம்கள் பற்றிய படத்தை, ஒப்புதல் கொடுத்து  வேண்டும்? 

                 இதில் ஒரு அரசியல் இருக்கிறது. அதாவது அமெரிக்காவின் நலன் என்ற அரசியல் இருக்கிறது. அதிலும், "ரா" அமைப்பை நியாயப்படுத்தும் அரசியலும் இணைந்தே  இருக்கிறது. அதனால்தான் முஸ்லிம் தமிழர்களை, பிற தமிழர்களிடமிருந்து "பிரிக்கும் வேலையை" இந்த படம் மூலம் அழகாக செய்ய முனைந்துள்ளார்கள். அதில் இனம் புரியாமலும் கமல் ஈடுபட்டிருக்கலாம். ஆனால  இரண்டு அனடுகளுக்கு முன்பு கொழும்பில் நடந்த,"இந்திய சர்வதேச திரைப்பட விழா" என்ற ஐ.எப். எப்.ஐ. என்ற மைப்பின் விழாவிற்கு அனுப்ப ஒப்புக்கொள்ளாதே என்று கமல்  முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது நினைவிருக்கிறதா?   அப்போதே கமல் அவர்களே உங்களது "ஈழத் தமிழர் எதிர்ப்பு நிலையை நாங்கள் சுட்டி காட்டவில்லையா? அதுதான் ஐன்று முஸ்லிம் தமிழர்களையும், முஸ்லிம் அல்லாத தமிழர்களையும் பிரிக்க நினைக்கும்  சிங்களத்திற்கும், இந்திய நடவனரசின் உளவு துறைக்கும் "சேவை" செய்வது போல இந்த படம் அமைந்துள்ளது. அதேபோல அமெரிக்காவின் "பயங்கரவாத எதிர்ப்பு உலகப் போரை" ஆதரிப்பதாக இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க "தான்" பயங்கரவாதம் செய்து விட்டு, அதை இஸ்லாமியர்கள் மீது பழி போடும் அல்லவா? அந்த வேலையை கமல் அவர்கள் மூலம் செய்ய வைத்துள்ளார்கள். 

             கமல் சொல்வது ஒள இந்த படம் 2011 இலேயே தயாரிக்க தொடக்கி விட்டது. அதாவது ப.சிதம்பரம் உள்துறையில் இருக்கும் போதே அவரது ஆலோசனையின் பேரில் தொடங்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவரும் இப்போது காங்கிரஸ் காரர்களை அனுப்பியும், களிகரிடம் கூறியும் இந்த படத்திற்கு ஆதரவு கொடுக்கிறார். கலைஞரும்  செய்த "போர் குற்றங்கள்" அம்பலமாக கூடாது என்று இப்போது கமலுக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கிறார். ஆகவே இது தமிழின ஒற்றுமையை விரும்பும் அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டிய படம். 

Tuesday, January 29, 2013

கமலஹசனை ஆதரிக்கும் ஆங்கில ஏட்டு தலையங்கம் சரியா?

கமலஹசனை ஆதரிக்கும் ஆங்கில ஏட்டு  தலையங்கம் சரியா?
       இன்றைய ஆங்கில எடு "தி ஹிந்து" கமலாஹசனின் விஸ்வரூபம் படத்திற்கு ஆதரவாகவும், தமிழக அரசின் "தஹ்டைக்கு" எதிராகவும், படம் பார்த்துவிட்டு, கமலஹாசன் சில சமாதன பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்றும் கூறிய நீதியரசர் வார்த்தைகளுக்கு எதிர்ப்பு கொடுத்தும் ஒரு தலையங்கத்தை தீட்டியுள்ளது. அவர்களுக்கு தெரிந்த செய்திகளிலிருந்து அவர்கள் ஒரு" அக்ருத்துரிமை பாதுகாப்பு" நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள். ஐயோ, பாவம். கமல் படத்தை எதிர்க்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக "பொது மக்கள் அபிப்பிராயம்" எழுந்துள்ளது என்பது உணமைதான்.அதில் சிலருக்கு லாபம் உண்டு. என்ன லாபம்?  தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்குள், "முஸ்லிம் தமிழர்களையும், முஸ்லிம் அல்லாத தமிழர்களையும்" பிரித்து நிறுத்துவதில் சில சக்திகளுக்கு லாபம் உண்டு. எப்படிப்பட்ட சக்திகளுக்கு? தமிழின ஒற்றுமை மதங்களை தாண்டி வந்துவிடக்கூடாது என்று விரும்பும் சக்திகளுக்கு அப்படி ஒரு விருப்பம் உண்டுதானே? அவர்கள் யார்?  இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளாதவர்கள்  அதாவது காஷ்மீரிகளின், நாகர்களின்,மிசோக்களின், அச்சாமியர்களின், மணிப்புரிகளின், பஞ்சாபிகளின் தேசிய இன அடையாளங்களை ஏற்றுக் கொள்ளாமல், இருக்கும் சக்திகளுக்கு, தமிழினமும் மதங்களை தாண்டி ஓன்று பட்டு விடக்கூடாதே என்ற எண்ணம் இருக்கத்தானே செய்யும்?

                              யார் அவர்கள்? இப்போதைக்கு நமக்கு அவர்கள் யார் என்ற கேள்விக்கு இந்திகாரர்கள் என்றோ வாடா இந்தியர்கள் என்றோ, கூறத் தோன்றினாலும், அது எப்படி உண்மையாக இருக்கும்? ஏன்  என்றால் அவர்கள் எல்லோரும் மக்கள் ஆயிற்றே? ஒரு  பேசும் மக்கள் எப்படி மடற மொழி பேசும் மக்களுக்கு எதிராக இருப்பார்கள்?  அதனால அது தவறான காரணம். அப்படியானால் அந்த தேசிய இன விரோத, தமிழின விரோத சிந்தனைகள் குடி கொண்டிருப்பது யாரிடம்? எதனிடம்?  யோசித்து பாருங்கள். இத்தனை பெரிய இந்தியாவை கட்டிக் காக்க வேண்டும் என்றால், இந்திய பேரரசு, எத்தனை தந்திரங்களை கையாள வேண்டும்? தேசிய இனனக்ளின் சுய நிர்ணய உரிமையை அன்மதிக்க அதனால முடியுமா? அதேபோல தமிழின ஒற்றுமையை அதனால அங்கீகரிக்க ம் முடியுமா? ஏற்கனவே 
காஷ்மீர் தேசிய இன உரிமையை அடக்க முஸ்லிம், இந்து என்று பிரச்சனையை திசை திருப்பிய அனுபவம் இந்திய  இருக்கிறது அல்லவா? அதுபோல தமிழ்நாட்டிலும் அவர்கள்  என்று  அல்லவா? அதற்கு  என்ன அவசரம்? 

                                    ஈழப்பிரச்சனையை  அடக்க சிங்களர்கள், முஸ்லிம் தமிழர்கள், முஸ்லிம் அல்லாத தமிழர்கள் என்ற பிரிவினையை அகலப்படுததி  டவென்றார்கள்.  அதை புரிந்து  கொண்ட தமிழ்நாட்டு தமிழர்கள்   மதங்களை தாண்டி    தமிழர்களை ஒற்றுமை vபடுத்தி அருகிரர்கள். அது  இலங்கை அரசையும்  அதை    ஆதரிக்கும் இந்திய   அரசையும் பாதிக்கும்  ஆகவே தமிழ்நாட்டில் மத ரீதியாக தமிழர்களை பிளவுபடுதத   அதன்  "உளவு துறை யான் ரா  வும்   முயற்சி   மாட்டார்களா ? அதுதான் இந்த திரைப்படத்தால் நடந்துள்ளது.

Monday, January 28, 2013

கமலஹாசன் வென்றாரா? தோற்றாரா?

கமலஹாசன் வென்றாரா? தோற்றாரா?
   பலருக்கும்  உண்மை நிலை தெரிவதில்லை நடந்து கொண்டிருக்கும் சர்ச்ச்ஹை வெறுமனே முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கலாமா? கூடாதா? என்று மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள் இன்று நேற்றா கமல் முஸ்லிம்களை தாக்கி படம் எடுக்கிறார்? உன்னைப்போல் ஒருவனும் அதுதானே? சரி.கமல் மட்டுமா? விஜயகாந்த் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஒவ்வொரு படத்திலும் பாகிஸ்தான் காரர்கள் என்று முஸ்லிம்களை வர்ணித்து, இவர் வீரமாக அப்போர் புரிந்து வெல்வாரே? அது என்ன ரகம்? இப்படி எல்லோருமே ஏன்  இப்படி எடுக்கிறார்கள்?அதிலும் இந்த படத்தில், "ரா" ஆளாக கமல் வருவது எதனால்? அவர் அமெரிக்க சி.ஐ.ஏ . விற்கு உதவுவது எதனால்? அதாவது முஸ்லிம் எதிர்ப்பு என்பதை தாண்டி, ஆபாகநிச்தான், பின்லேடன், ரா, அமெரிக்க வருவதிலிருந்து என்ன தெரிகிறது? இது திட்டமிட்ட அரசியல் படம். அதிலும் "ரா" மீதுதமிழர்கள் மத்தியில் "இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு உதவியவர்கள்"  என்ற அவப்பெயர் இருக்கும்போது, தான் எ"ரா" அதிகாரியாக வந்து அந்த உளவு நிறுவனத்தை நியாயப்படுத்த எடுத்த படம். அதற்கு  பொது புத்தியில் உலா வரும், தலிபான், பின்லேடன், ஆகியோரை பயன்படுத்தி, இந்திய நாட்டை காப்பாற்ற  வந்த தியாகி போலவும், தீவிரவாதிக்கு எதிர்ப்பு போலவும் "பாவலா" காட்டும் ஒரு திட்டம் இதில் இருக்கிறது. அதாவது அமெரிக்காதான்  பின்லேடனை வால்ர்த்து என்ற உணமையோ, ஆப்கானில் அமெரிக்கா  படை எடுத்து எண்ணை  வளங்களை கொள்ளை அடிக்க என்பதையோ, அழுத்தமாக கூறாத படம். "ரா'வின் முழு  ஆதரவு பெற்ற படம்.

                   சரி.கமலுக்கு நட்டமா? பிவி.பி. என்ற பரபுளி வெங்கடேஸ்வர பிரசாத் என்ற ஆந்திர ரெட்டியார் இந்த படத்திற்கு  60 கோடி குடுத்துள்ளார். தயாரிப்பாளராக இருந்தார். கமல் வழக்கம் போல படம் எடுபடும் எனத் தெரிந்த பிறகு, அவரை நிதி வழங்குபவராகவும், தானே தயாரிப்பலராகவும் புது வேடம் புனைந்தார். அப்போது தனது 60கோடியை திருப்பி தந்து விட்டு தான் தமிழக திரையரங்குகளில் திரையிடவேண்டும் என்று பி.வி.ஒய். எழுதி வாங்கி விட்டார். அதனால்தான் டி.டி..எச்.என்று கமல் இழுத்தடித்தும், இப்போது தமிழகத்திற்கு வெளியே திரையிடவதும் நடக்கிறது. இப்போது புரிகிறதா? கமலின் சூட்சுமம்? அதையும் தாண்டி படத்தை கமல் "காப்பீடு" என்ற இன்சுரன்ஸ் செய்துவிட்டார். ஆகவே "நட்டம்" வராது. இது எப்படி இருக்கு? அவருக்கு போய்  நட்டம்னு பேசறீங்களே அய்யா?   

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது......

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது......
      மதுரை அஞ்சாநெஞ்சன் என்று  திமுகவினரால் புகழப்படும், மு.க.அழகிரியின்  பிறந்த நாள் 39 ஆம் தேதி வருகிறது. அதற்குள் சென்னையிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இன்று காலை நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்  எட்டில் முதல் பக்கத்திலேயே ஒரு சுவரொட்டியை போட்டு விளக்கம் தந்துள்ளனர். அதில்" இங்கே பரமசிவனும் இல்லை. நாங்கள் கருடரும் இல்லை. நடப்பது ராம நாடகம்." என்று அழகிரி படத்தை பெரிதாக போட்டு ஒட்டியுள்ளனர். அதற்கு என்ன அர்த்தம்?  "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது. கருடா சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சவுக்கியமே. கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது." இந்த கண்ணதாசன்  பாடல் வரிகள்தான் அதன் பொருள். அப்படியானால் பரமசிவன் கருணாநிதி என்றும், கருடன் அழகிரி என்றும், பாம்பு தளபதி என்றும், ராம நாடகம் என்பது ராமாயணத்திலே அண்ணனை காட்டுக்கு அனுப்பி விட்டு தம்பி பரதனுக்கு முடிச்சொட்ட நினைப்பது என்றும் நீங்கள் புரிந்து கொண்டால் நாம் என்ன செய்ய?

                            அடுத்த சுவரொட்டி. "கண்ணகி சிலம்பும், மனோகரனின் விலங்கும், வீழ்ந்ததா? வீழ்த்தியதா?" இந்த சுவரொட்டியும், நேரடியாலவே. கண்ணகி கால் சிலம்பால்,வீழ்த்தப்பட்டான் சேர மன்னன்   என்ற பொருளை நேரடியாக தருகிறது.இதில் அழகிரி படம் பெரிதாக போடப்பட்டுள்ளது. அடுத்து வழமை போல," தொடர்களின் தாமே. தொண்டர்களின் ஏற்றமே" என்ற சுவரொட்டி. அடுத்து, அழகிரி படத்தை பெரிதாக போட்டு," அதுக்கும் மேலே. அதுக்கும் மேலே. அதுக்கும் மேலே. அண்ணன் எங்க உசுருலே" என்பதாக ஒரு சுவரொட்டி. மேற்கண்ட அசுவரோட்டிகள் ஒரு செய்தியை அழகிரி பிறந்த நாள் நேரம் சொல்லத்தான் செய்கிறது.  
               
 அதற்க்கு பதில் சொலவதுபோல நேற்று திருவண்ணாமலை திருமணத்தில் கலைஞர் பேசும்போது, "கட்டுப்பாடு கழகத்திற்கு முக்கியம். அதை யார் மீறினாலும், அவர்கள் எவ்வளவு நெருக்கமாக் ஏனக்கு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். இது எதற்காக?

Friday, January 25, 2013

குடியரசு தலைவர் அவர்களே,

குடியரசு தலைவர் அவர்களே,
     தங்களது நாளைய உரை பல உண்மைகளையும் பல பொய்களையும் கொண்டுள்ளதாக இருக்கிறதே? நேநேகள் இந்த 64 ஆவது குடியரசு தின உரையில், கூறியுள்ளதுபோல, இந்தியா சுதந்திரம் பெற்றது, தனது குடிமக்களுக்கு சுதந்திரத்தை மறுப்பதற்காக அல்ல எனபது உணமைதான். அதை நீங்கள் நீண்ட காலம் நிதி அமைச்சராகவும், பல துறை அமைச்சரகாவும் இருந்தபோது உணர்ந்தீர்களா என்படஹ்ர்கு எங்களிடம் ஆதாரம் இல்லைதான். ஆனால இன்று குடியரசு தலைவராக ஆனா பிறகு, அதை உணர்ந்துள்ளீர்கள் என்று நம்புகிறோம். பல நூற்றாண்டுகளில் சாதிக்காததை இந்த அறுபது ஆண்டுகளில் சாதித்துள்ளதாக நீஙகள் கூறுவதில் எதோ இடிக்கிறதே? அது கற்பனை இல்லையா? நீங்கள் பெண்களுக்கான சமத்துவம் பற்றி டில்லி பெண் மாணவி மரணத்தை ஒட்டி, உலகமே ஐ.நா. சபை உட்பட எதிர்லித்த பிறகு, வருத்தபட்டிருப்பதை  நம்புகிறோம். ஆனால் உங்கள் முன்னாள் தோழர்களான மன்மொஹனும், சோனியாவும் அந்த பெண்ணின் உடலை வைத்துக் கொண்டு சிங்கபூர், டில்லி விமான அணிலயம் அதிகாலை எரிப்பு என்று "அரசியல் விளையாட்டு" விளையாடிதை இந்திய மக்கள் உட்பட இந்த உலக மக்கள் யாருமே ஏற்றுக் கொள்ள வில்லையே? அது உங்களுக்கு தெரியுமா? 

                         அடுத்து நீங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி கவலை கொண்டுள்ளதாக கூறப்போகிறீர்கள்.   உற்பத்திக்கான ஆலைகளை உர்வாக்காமல், அமெரிக்க, ஐரோப்பா சார்பான கார்போறேட்களின் பின்புல ஆலைகளை இந்திய நாட்டில் ஏற்படுத்தி, இங்குள்ள இளைஞர்களை "சார்பிலேயே" நிறுத்த முயலும் தங்களது சகாக்களான மன்மோகன், மாண்டக் அலுவாலியா, சிதம்பரம் ஆகியோரின் சதிகள் எங்களுக்கு தெரிந்தது போலவே உங்களுக்கும் தெரியும் . தாங்கள்  நிதி அமைச்சராக இருந்து  எதிர்த்த   வோடாபோன் வரி விவகாரத்தை, தந்திரமாக் உங்களை நிதி அமைச்சர் நாற்காலியை விட்டு கழட்டிவிட்டு, தான் அங்கே  உட்கார்ந்து, அதே வோடாபோனுக்கு வரி விலக்கு கொடுத்துள்ள சிதம்பரம் பற்றி எங்களுக்கு மட்டுமா தெரியும்? உயங்களுக்கும் தானே தெரியும், தாத்தா? என் தாத்தா இப்படி? 

                   சரிபோகட்டும். நீங்கள் குடியரசு தலைவர் என்பதால் இப்படியும், அப்படியும் ஆடித்தான் ஆகவேண்டும். அடுத்து இந்தியாவில் சாதி,மதம்  வேறுபாடுகள் இல்லாமல் வளர்ந்துள்ளதாக எப்படி முழு பூசணிக்காயை  சோற்றில் மறைக்க முயல்கிறீர்கள்? எங்கள்   உள்ள ஒரு அரசியல்வாதி, உங்களுடன் சென்ற அமைச்சரவையில் இருந்த குடும்பம்  கூறினால் கோபப்படபோகிறார்கள். அவர்கள் பகிரங்கமாகவே, எந்த அரசியல் கட்சி சாதிப்பார்வை இல்லாமல்  இருக்கிறது?  என்று  ஊடகங்களில் சவால்  விடும் அளவுக்கு ஒரு முன்னாள் மத்திய அமைச்சரை  செய்து வைத்துள்ளார்கள்.  உங்கள் பழைய சகாதான்  அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஈ, காக்கை   கூட இல்லாததால் அவர்களால் உங்கள்   முடியவில்லை  இல்லாவிட்டால் திராவிடக்  இல்லாத, காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இல்லாமல் இருப்பார்களா? ஆகவே தாத்தா கொஞ்சம் அக்கம்  பார்த்து பேசுங்கள் எல்லோரும் சிரித்துவிடப் போகிறார்கள்.     

Thursday, January 24, 2013

சென்னை பலகலைக் கழகத்தில் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள்

சென்னை பலகலைக் கழகத்தில் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் 
                    இன்று  மதியம் மூன்று முப்பதுக்கு சென்னை பல்கலிக் கழக, நூற்றாண்டு கட்டிடத்தில் உள்ள, தனத்தை பெரியார் அரங்கத்தில்,  மொழிப் போர் ஈகிகள் நினைவாக, " மொழி உரிமை--மொழி அடையாளம்--தொடர்பியல்" என்ற கருத்தரங்கு நடைபெற்றது. பலகலைக்  கழகத்தின் இரண்டு துறைகளான "இதழியல்--தொடர்பியல் துறையும்" , ' அரசியல்--பொது நிர்வாகம துறையும்," சென்னை பி.யு.சி.எல். உடன் சேர்ந்து  ஏற்பாடு செய்திருந்தனர். சென்னை பலகலைக்  கழகத்தின் புதிய துணை வேந்தர் இரா.தாண்டவன் தலைமை தாங்கினார்.  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக் கழக  மேனாள் துணை வேந்தர்கள் க.ப.அறவாணன், வேதகிரி சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் உரையாற்றினர். வரவேற்புரை வழங்கிய "இதழியல்-தொடர்பியல் துறை தலைவர்" பேரா.ரவீந்திரன், மொழி அடையாளம் இன்றியமையாதது என்றார். உலக நாடுகளில் மொழி உரிமை என்பது எவ்வாறு போராடப்பட்டது என்றார். தந்தை  பெரியார் காலத்தில் இருந்து இந்தி எதிர்ப்புபோராட்டம் வளர்ந்ததை சுட்டி காட்டினார். குடியரசு இதழ் வெளிக் கொண்டுவந்த கட்டுரைகளை ஆதாரம் காட்டினார். அவரது ஏற்பாட்டில், அருகே திரையில்," இந்தி எதிர்ப்பு போரில் தங்கள் உயிரை துறந்த ஈகிகளது படங்கள் ஓடின". அடுத்து பேசிய நெல்லை பலகளிகழக மேனாள் துணை வேந்தர் க.ப. அறவாணன் தனது அண்ணாமலை பலகலைக் கழக மணாவ்ர் பருவ, இந்தி எதிர்ப்பு போராட்டம்  பற்றி கூறினார். இன்னமும் தமிழுக்கு ஆட்சி மொழி மரியாதை கிடைக்கவில்லை என வருந்தினார் 180 பேர் தங்கள் உயிரை தமிழுக்காக அழித்துக் கொண்டனர் என்றார்.பல நாடுகளை சுட்டிக் காட்டி, அங்கெல்லாம்  இருக்கும் மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழியாக பங்கெடுப்பதை எடுத்து சொன்னார். கனடாவில்  இருக்கும் பன்னிரண்டு மாநிலங்களில் ஒன்றில் மட்டுமே புழங்கும், பிரான்சு மொழியையும், ஆங்கில மொழியையும் ஆட்சி மொழி ஆக்கியுள்ளதை சுட்டிக் காட்டினார். மயிலாப்பூர் கடலுக்கு வங்காள  விரிகுடா, சேரன் கடலுக்கு அரபிக் கடல், தமிழ் மகா சமுத்திரத்திற்கு இந்து மகா சமுத்திரம், தமிழ் கோடிக்கு, தனுஷ்கோடி, தமிழ்மேச்வரத்திர்க்கு, ராமேஸ்வரம் என்றும்  எப்படி பெயர் வைக்கலாம் என்று வினவினார்.

                              அடுத்து சென்னை பலகலைக் கழக தமிழ் துறை பொறுப்பு தலைவர்  அரங்க ராமலிங்கம்  இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த வரலாற்றை சுட்டினார். இன்னமும் இந்தி ஆதிக்கம் செலுத்துவதையும்,  நடுவணரசு  இந்தியை திணிப்பதையும் எடுத்து கூறினார். சென்ற முறை ஆட்சிக்கு வந்தபோது செல்வி ஜெயலலிதா, தஞ்சை உலகத் தமிழர் மாநாட்டில், "நான்காவது தமிழாக அறிவியல் தமிழ் இருக்கும்" என குறிப்பிட்டதை கூறி, கணினி தமிழை வளர்க்க முதல்வரிடம் துணை வேந்தர் கூறவேண்டும் என்றார். மேனாள் நெல்லை பல்கலைக் கழக துணை வேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம் பேசும்போது,  மொழி உரிமையை விட்டு விடக்கூடாது என்றும்,இந்திய ஒன்றியம்  எப்படி ஒரு மொழியை மட்டுமே ஆட்சி மொழியென அறிவிக்கலாம் என்றும் கேட்டார்.  அதை மத்திய அரசு என்று கூப்பிடக்கூடாது என்றார். அனைத்து தென்னிந்திய மொழிகளும், ட்ஃஈறாஆஈடா மொழிகள் என்றும் அவை ஒன்று பட்டு, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து போராட வேண்டும் என்றார். அய்க்கிய மாநிலங்களின் இந்திய அரசு என்று அழைக்க வேண்டும் என்றார். இந்தியை எதிர்த்து போராட அன்றைய தலைவர்கள் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக பயன்படுத்தினர் என்றார். அதனால்தான் ஆங்கிலம் தமிழுடன் பயிற்று  மொழியாக இருக்கிறது என்றார். அண்ணாவின் பங்கு மொழிப்போரில் இருந்தது பற்றி கூறினார்.

          சென்னை பல்கலை கழக  மேனாள் மலையாளம் துறை தலைவர் ராசேந்திர பாபு, மலையாளமும் இந்தியால் ஒடுக்க ப்படுகிறது என்றார்.ஆனால் அங்கெ போராட்டம் இல்லை; தமிழ்நாட்டில்தான் மொழிக்காக உரிமை போராட்டம் நடந்துள்ளது என்றார். தனக்கு தெரிந்தாலும் தமிழுக்ககதன்கள் உயிரை கொடுத்தவர்கள் பற்றி, கேரளா உட்பட  தென் இந்தியா முழுவதும் மக்களுக்கு தெரியாது என்றும், அதை எடுத்து செல்லவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தங்கள் மலையாளம் விரைவில் செம்மொழி மரியாதையை வாங்க இருக்கிறது என்றார். அடுத்து ஏற்பாட்டாளர்களில் ஒருவரான  "அரசியல்-பொது நிர்வாகம் துறை தலைவர்" ராமு மணிவண்ணன் உரையாற்றினார். முஜிபுர் ரஹ்மான் முதலில் இந்தியாவிற்காக, பிறகு பகிச்தாநிர்காக  பிறகு தனது மொழியான வந்காலத்திர்கா போராடினார் என்றார்.  அரசியல் உரிமையை விட்டு கொடுக்க கூடாது என்றும், மொழி உரிமை ஒரு அரசியல் உரிமை என்றும் கூறினார். மொழி ஒரு இனத்தின் அடிப்படை அடையாளம் என்பதை விளக்கினார். பிறகு பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்  மகன் பூங்குன்றன் பேசினார். அவர் அரசியல்வாதிகள் தவிர, தமிழ் அறிஞர்களின் பங்கு இந்தி எதிர்ப்பு போரில் எப்படி இருந்தது என்பதை விளக்கினார். 

                       அடுத்து கருத்தரங்கிற்கு தலைமை ஏற்ற சென்னை பல்கலைக் கழக புதிய துணை வேந்தர் தாண்டவன் பேசினார். அவரது ஒன்பதாம் வகுப்பு காலத்தில் இந்தி எதிர்ப்பு போரில் தனது அண்ணன் ரெங்கசாமி கலந்து கொண்டதையும், தான் விவரம் அறியா பருவத்திலும், போகலூர் ஒற்றில் பள்ளியில் இந்தி எதிர்ப்பு போரில் கலந்து கொண்டதையும் கூறினார். சரளமாக கடந்த கால நடைமுறையில் ஆசான்களாக இருந்த இரண்டு மேனாள் துணை வேந்தர்களை பாராட்டினார். எல்லா மொழிகளுக்கும் சம உரிமைவேண்டும் என்றார்  பச்சையப்பன் கல்லூரி வாழ்க்கை, க.ப.அற்வானனுடன்  இருந்த கடந்த கால மாணவன்-ஆசிரியர் உறவு என்று விளக்கினார். இன்றைய தமிழக முதல்வர்  இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த சின்னசாமிக்கு சிலை வைக்க இரண்டு மாதம் முன்னால்  அறிவித்ததை  பாராட்டி, முதல்வர் கொண்டுள்ள தமிழ் பற்று பற்றி, வேதகிரி அவருக்கு நெருக்கமான தலைவரிடம்  போய்  கூறட்டும்  என்று கருனநிதி  பற்றி கூறினார். 

                            பின்னர் பேசிய  பேரா.திருமாவளவன்  தான் ஒரு ஆங்கில ஆசிரியராக இருந்தும், தமிழுக்காக அண்ணாமலை பலகலை க் கழகத்தில், 1965 இல், அறவாணன் வகுப்பு தொழனாக் இருந்தடஹியும் அங்கெ இந்தி எதிர்ப்பு போரில் செயல்பட்டதையும் கூறினார். சுய ஆய்வு ஒவ்வொருவருக்கும் தேவை என்றும், தமிழில் முழு பெயரையும் வைத்ஹ்டுக் கொள்ளுங்கள் என்றும், ஒப்பம் போடும்போது தமிழில் போடுங்கள் என்றும் கூறினார். வங்காளம் இந்த நாட்டில் தொடர்பு மொழியாக வர இருந்தது என்றும் வந்திருந்தாள் நாம் இந்தியை எதிர்த்து அல்ல வங்காளத்தை எதிர்த்து போராடி இருப்போம் என்றார். பேரா.வ.ஐ.சுபிரமணியன் எவ்வாறு தமிழுக்கு நின்றார் என்று கூறினார். இடையில் துறை தலைவர் ரஈந்திரன் பேரா. வ.ஐ. சுப்பிரமணியன் பற்றி அவர் எப்படி  மனிதவள மேம்பாட்டு அமைச்சர்  முரளி மனோகர் ஜோஷியிடம் , திராவிடத்தை  ஜன  கண மன பாட்டிலிருந்து நீக்கி விட்டீர்கள் என்றால் , தாங்கள் கூறுவது போல " திராவிட பல்கலை க் கழகம்" என்பதிலிருந்து நானுன் திராவிடத்தை நீக்குகிறேன் என்று கூறியதை எடுத்து சொன்னார். 

                                   கடைசியாக பேசிய டி.எஸ்.எஸ்..மணி, பி.யூசி.எல். எப்படி இந்த கருத்தரங்கை பல்கலை க் கழக இரு துறைகளுடன் இணைந்து செய்தது என்று விளக்கினார்.  எவ்வாறு கணினி இந்தியை வளர்க்க பணத்தை கொட்டும் நடவனரசு, தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும்  ஒடுக்குகிறது என்றும்,   தேவை ஒரு   "அனைத்து மொழிகளின்  ஒன்றுபட்ட போராட்டம், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து" என்று முடித்தார்                                  

Tuesday, January 22, 2013

சிறையில் இருந்த அகதிகள் ஒன்பது பெரும் பிணையில் விடுதலை.

சிறையில் இருந்த அகதிகள் ஒன்பது பெரும் பிணையில் விடுதலை.
                  செங்கல்பட்டு  சிறப்பு அகதிகள் முகாமில் துன்பப்பட்ட  36 ஈழத் தமிழர் அகதிகளை விடுதலை செய்ய வேண்டி, அவர்கள் நடத்திய பட்டினிப் போரில், கடைசிவரை பட்டினி கிடந்த ஒன்பது அகதிகளையும் காவல்துறை கைது செய்து, புழல் சிறையில் அடைத்திருந்தார்கள். அவர்களை பிணையில் விடுதலை செய்ய வேண்டி, பி.யு.சி.எல். அமைப்பின் வழக்கறிஞர் சந்தோஷ், நீதிமன்றத்தில் முறையிட்டார். பட்டினிப்போர் நடத்தமாட்டோம் என்றால் விடுவிக்கிறேன் என்ற நீதியரசரின் வேண்டுகோளை, வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டார். அதையொட்டி, அவர்கள் ஒன்பது போரையும், சொந்த பிணையில் நீதியரசர் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் நினைவாக ....

மொழிப்போர்  தியாகிகள்  நினைவாக ............
             மொழி உரிமை--மொழி அடையாளம்--தொடர்பியல் கருத்தரங்கு.
             ---------------------------------------------------------------------------------------------------------
  சென்னை பி.யு.சி.எல்., சென்னை பலகலைக்கழக தொடர்பியல் துறை மற்றும் அரசியல் துறையுடன் இணைந்து நடத்தும்  அரங்கம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
  நாள்: 24-01-2013. வியாழக்கிழமை. நேரம்: சரியாக 3 மணிக்கு.
  இடம்: சென்னை பலகலைக் கழகம் மெயின் கட்டிடம் எப்-50 தந்தை பெரியார் அரங்கம்.
       தலைமை : முனைவர்.ஆர். தாண்டவன். துணை வேந்தர், சென்னை பலகலைக் கழகம்
         வரவேற்பு: முனைவர்..ஜி ரவீந்திரன் துறைத் தலைவர், ஊடகம் மற்றும தொடர்பியல்.
              சிறப்புரை: முனைவர்.க ப  அறவாணன் மேனாள் துணை வேந்தர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழக்கம்.
  முனைவர்.  வேதகிரிசண்முகசுந்தரம்,, மேனாள் துணை வேந்தர், நெல்லை மனோன்மணியம் பலகலைக்கழகம்.
                       எம். பூங்குன்றன், தென்மொழி அவையம்.
                       பேரா.மணிவண்ணன், துறை தலைவர், அரசியல் மற்றும் பொது நிர்வாகம்.
                      பேரா.திருமாவளவன்.மேனாள் முதல்வர், அம்பேத்கர் கலைக் கல்லூரி.
                      டி .எஸ்.எஸ்.மணி, .பி.யு.சி.எல்.-சென்னை-காஞ்சி-திருவள்ளூர் மாவட்டக் குழு.
                    பேரா.சி.ஜி.  ராசேந்திரபாபு ,மேனாள் துறை தலைவர், மலையாளம்.
                     பேரா.ஆர்.ராமலிங்கம், துறை தலைவர், தமிழ் துறை. சென்னை பலகலை.
                   
                        தெலுங்கு, கன்னடம், உருது  மொழி அறிஞர்களும் கலந்து கொள்வார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் சிவில் உரிமைக் கழகம் ---சென்னை--காஞ்சி--திருவள்ளூர் மாவட்டக் குழு.

Monday, January 21, 2013

ஆ ச்சரியம்தான்

ஆ ச்சரியம்தான்  கமலஹாசன் இன்று கலைஞரை பாராட்டுபவர், அன்று 17 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி எழுதியிருக்கிறாரா? ஆரியத்தை ஏற்றுக்கொள்ளும் திராவிடம் என்று எழுதுபவர் அதை பகிரங்கமாக "பார்ப்பனீயம்" "நவீன பார்ப்பனீயம்" என்ற சொற்களுடன் எழுதினால் இன்னமும் பொருத்தமாக இருக்காது? இன்று தாழ்த்தப்பட்டோர் அம்ற்றும் பழங்குடிகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும் பொருந்தும்தானே? எப்படியோ. கீழே உள்ள கவிதையை எடுத்து போட்டுள்ள தளபதி ராஜ் அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.

(1996-ல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தலித் சிறுமி தனம், ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் இழந்தார்.

அந்த சிறுமியின் கண் சிகிச்சைக்கு 1996-ல் ரூ 10000/- நிதி உதவி அளித்து, அந்த சிறுமி யின் அவலநிலையை உணர்த்தும், கமல்ஹாசன் எழுதிய கவிதை இது.)

கேடிகள் ஆயிரம் கூட்டணி சேர்ந்து
கேட்டில் வந்து முடிந்தது காண் !

காவியும் நாமமும் குடுமியும் கோசமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்

ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லி புரியும் வேளையிலே

ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டு போனது காண் !

ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி
ஆயிரம் ஆண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண் !

அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கருப்பாய் சிவப்பாய் திரியுது காண் !

சாதியும் சாமியும் சாராயம் போல்
சந்தை கடையில் விற்குது காண் !

சர்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண் !

புத்தன் சொன்ன தம்மிம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண!

Friday, January 18, 2013

திமுக பொங்கல் கலைக் குழு ஆட்டம்


       மயிலை மாங்கொல்லை யில் திமுக வின் கலை இலக்கிய பேரவை பொறுப்பாளர் கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் தென்சென்னை கலை இலக்கிய பேரவை ஒரு கூட்டத்தை நேற்று நடத்தியது. அதில் கனிமொழி இரண்டு நிமிடம் மட்டும் வரவேற்புரை  பேச, ஸ்டாலின் பத்து நிமிடம் பேச, கலைஞர் நாற்பது நிமிடம் பேசினார். ஜெ .விற்கு அடிக்கு பதிலடி என கொடுத்ததாக உடன்பிறப்புகள் பெருமை பட்டனர். அவர் உரைக்கு பிறகும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் " தஞ்சை வறண்டு போச்சு""தமிழகமே இருண்டு போச்சு" " கோட்டைக்குதானே விடுப்பு" ' அம்மா, கொடநாட்டுல இருப்பு" என்று ஆடி, பாடினார்கள். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்கும் ஒரு எசப்பாட்டு. " தஞ்சை வறண்டதுக்கும், தமிழகமே இரூண்டதுக்கும், டெல்லி போட்ட பட்டை. அது கலைஞர் முட்டு கட்டை " என்றும் பாடப்படுகிறதே? 

Monday, January 7, 2013

P.U.C.L. meeting on " Sexual violence free world--your Role?"

பாலியல் வன்முறையற்ற உலகு -உங்கள் பொறுப்பு ?


பாலியல் வன்முறையற்ற உலகு -உங்கள்  பொறுப்பு ?
 
பாலியல் வன்முறை என்பது காம இச்சை மற்றும் காம வெறியின் வெளிப்பாடா ?
மரண தண்டனை தான் இதற்குப் பதிலா ?
வேதியல்  முறையில்  ஆண்மை நீக்கம் செய்வது தான் தீர்வா ?
பெண்கள் மட்டும் தான் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்களா ?
பாலின சிறுபான்மையினர் ,சிறுவர் ,சிறுமியர் மீதான  பாலியல் வன்முறை குறித்து சிந்திக்கும் வேளை இது தானே ?
பெண்களின் பாதுகாப்பு என்பதற்கு மாற்றாக அவர்களை மதிக்கும் காலம் எப்போது ?
பெண்கள் மீதான வெறுப்பு என்பது பாலியல் வன்முறையின் கோர வடிவமா ?
வேகமான நீதியா?அல்லது நியாயமான நீதியா ?
இவை இரண்டும் கிடைக்க நமது பங்களிப்பு என்ன?
பாலியல் தொடர்பான சமூக மதிப்பீடுகளில் மாற்றங்களை உருவாக்க ஊடகங்கள் பங்கேற்கும் வேளை இது தானே?

                                                 "பாலியல் வன்முறையற்ற  உலகு - உங்கள் பொறுப்பு ?"
குறித்த விவாதத்திற்கு,  மாநில  மக்கள் சிவில் உரிமைக் கழகம் (P.U.C.L) உங்களை அழைக்கிறது .

                                                 நாள் : ஜனவரி  09, 2013 (புதன்கிழமை)
                                                 நேரம் :மாலை 5-00 மணியளவில் 
                                                 இடம் : சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகம்-கருத்தரங்கு அறை.
                                                                              பேச்சாளர்கள் 
                                                                              வ .கீதா, எழுத்தாளர்.
                                                                               சீலு ,பெண்கள் இணைப்பு குழு,
                                                                               நாகசைலா,வழக்கறிஞர்,
                                                                               சசிகுமார், ஆசியன் ஊடகவியல் கல்லூரி,
                                                                               வி.சுரேஷ் ,அகில இந்திய பொதுசெயலாளர்,
                                                                               பாலமுருகன் ,மாநில செயலாளர்.
அனைவரும் வருக .

---