Monday, July 11, 2011

கொலையை திசைதிருப்பும் கருப்பு ஆடு?

வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் "சதிஷ்குமார் " படுகொலை செய்யப்பட்டது அனிவருக்கும் தெரிந்த உண்மையாக ஆகிவிட்டது. சதிஷ்குமார் கொலையில் மறைந்து கிடக்கும் மர்மங்களை ஒவ்வொன்றாக "முடிச்சு அவிழ்க்க" சீ.பி.ஐ. விசாரணை உதவும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். சாதாரண வட்டார காவல்துறையால் கவனம் செலுத்தி ஒரு கொலையை கண்டுபிடிக்க "திணறும்போது" மாநில அரசு அந்த வழக்கை "சீ.பி.சீ.ஐ.டி.இடம் ஒப்படைக்கிறது. அதேசமயம் வழக்கை க்மொடுத்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள், வழக்கை சரியாக வட்டார அல்லது மாநில காவல்துறையினர் கையாள மாட்டார்களோ என்று சந்தேகப்பட்டால் அவர்கள் மத்திய அரசின் கையில் உள்ள "சீ.பி.ஐ. விசாரணையை" கோருகின்றனர். அவ்வாறு சிபியை கைகளில் கொடுக்கப்படும் வழக்குகள் சரியான "குற்றவாளியை" கண்டுபிடித்துவிடும் என்பது ஒரு நம்பிக்கை.

இந்த "சதிஷ்குமார்" படுகொலையில் முதலில் "காணமல் போனவர்" என்பதாகத்தான் காவல்துறை தனது கவன்த்தை காட்டியது. ஏழாம் நாள் காணாமல் போனால், இரண்டு நாட்கள் பெற்றோர்களும், அவருக்கு துணையாக நண்பர்களும், வழக்கறிஞர்களும், இறங்கி " நீதிமன்றத்திலும், தெருவிலும், வழக்கு போடுவதும், போராடுவதும்" என்று தமிழகம் முழுக்க திரண்டு தங்கள் ஒற்றுமையை காட்டிய பிறகுதான், நீதிமன்ற உத்தரவும், "பிணப் பரிசோதனைக்கு" சிறப்பு மருத்துவரை நியமித்ததும், சிபிஐ கைகளில் வழக்கை கொடுப்பதும் என்று "தீர்ப்புகளை" வழங்கியது.இது "சாதாரண" குடிமக்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. அதாவது பிரபல வழக்கறிஞர் வீட்டில் "காவல்துறை அத்துமீரலோ" அல்லது "சமூகவோரித்த" அத்துமீரலோ நடக்கும்போது, போராடி, வழக்காடி கிடைக்கின்ற தீர்ப்புகள் சாதாரண குடிமக்களுக்கு கிடைப்பதில்லை என்றால், அத்தகைய ஒரு "சமூகத்தை" எதிர்ஹ்த்டுதான் சங்கரசுப்பு போராடிவருகிறார். அவரை "நக்சலைட்" என்றும், "மாவோவாதி" என்றும் காவல்துறை முத்திரை குத்துகிறது.


இப்போது அம்பலமாகி இருக்கும் செய்தி மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. கொல்லப்பட்ட சதிஷ்குமார் "தற்கொலை" செய்துகொண்டதாக "பொய்யான" சாட்சிகளை உருவாக்க "திருமங்கலம் காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்பாபு" முயற்சி செய்தது அம்பலமாகி உள்ளது. அதாவது இந்த சுரேஷ்பாபு பதிமூன்றாம் தேதி ஏரியில் கிடைத்த "சதீஷ் சடலத்தை" கிடைத்த உடனே ஊடகத்தார் முன்பும், பெற்றோர் முன்பும் " விசாரணை அறிககையை" அதாவது சடலத்தின் உடலில் கிடைத்த "தடயங்களை குறிக்கும் அறிககையை" பதிவு செய்யாமல் மாலை நேரத்தை கடக்க விடுகிறார். பிறகு இரவு மூன்று மணிக்கு அந்த அறிககையை தயார் செய்கிறார். அதில் சடலத்தின் சட்டை பையில் "இரண்டு செவன் ஒ கிளாக் பிளேடு" இருந்ததாக எழுதுகிறார். இது சடலம் கிடைத்த மாலை நேரத்தில் எடுக்கப்பட்ட எந்த புகைப்படத்திலும், காணொளியிலும் காணவில்லை. அடுத்த நாள் " போஸ்ட்மார்டம் " செய்வதற்கு நீதிமன்றம் சிறப்பு மருத்துவரை அனுமதித்த பிறகு, அந்த "போஸ்ட்மார்டம் அறிக்கையிலும்" தடயமாக அப்படி பிளேடுகள் இருந்ததாக காட்டப்படவில்லை. பிறகு " சிபியை விசாரணையில் கேட்டால் முன்னுக்கு பின் முரணாக அந்த சுரேஷ் பாபு" கூறுகிறார்.

ஆனால் "பதினாறாம் தேதி" நீதிமன்றம் சிபியை விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு இந்த சுரேஷ்பாபு "நீதிமன்றத்தில் இரண்டு செவன் ஒ கிளாக் பிளேடுகளை" கொண்டுவந்து ஒப்படைத்துள்ளார். ஏன் இப்படி அவர் செய்யவேண்டும்? வருக்கு பின்னால் இருக்கும் "பெரிய தஹிகாரி" யார்? "தமிழக காவல்துரியின் உயர் அதிகாரி" எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும், கீழே இருக்கும் பலம் கொண்ட அதிகாரிகள் "ஐந்து ஆண்டுகள் கருப்பு ஆடுகளாக "செயல்பட்டு பழகிப் போனவர்கள் இந்த "படுகொலையின்" பின்னே இருக்கிறார்களா? அவர்களுக்கு சிறிய அதிகாரி சுரேஷ்பாபு உதவி செய்கிறாரா? "பழிவாங்கும் படலத்தை" வழக்கறிஞர் குடும்பம் மீது "பாய்ச்சியுள்ள" காவல்துறையின் "கருப்பு ஆடுகள்" யார்? யார்? இதுற்ற்ஹான் சொபயை விசாரணையில் வரவேண்டும். "தாமதமில்லாமல்" அது வெளி வருமா?