ஜெய்ப்பூரில் பி.யு.சி.எல். மாநாடு- தமிழர்களின் அறுதியிடல்
டிசம்பர் 1,2, தேதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் பி.யு.சி.எல்.என்ற மக்கள் சிவில் உரிமை கழகம் தனது பதினோறாவது அகில இந்திய மாநாட்டை நடத்தியது அதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து முப்பது பிரதிநிதிகள் நவம்பர் 27 மாலையே கிளம்பி சென்று விட்டனர். அவர்கள் பி.யு.சி.எல். அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பேராசிரியர் சரஸ்வதி, பொதுசெயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் சென்றனர் அந்த மாநாட்டிற்கு இந்தியாவின் 20 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் வந்திருந்தனர். ராஜஸ்தான்,உ.பி.,டில்லி மணிப்பூர்,அஸ்ஸாம், கர்நாடக, சத்தீஸ்கர்,ஜார்கண்ட்,பீகார் கேரளா,ஆந்திரா மத்திய பிரதேசம்,உத்தராஞ்சல்,மகாராஷ்டிரா உட்பட வந்திருந்தார்கள் தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி.சுரேஷ் இந்த மாநாட்டில் அகில இந்திய பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது அறிவிக்கப்பட்டது. முதன் முதலாக நெருக்கடி கால நிலையில் சிறைக்குள் ஜெயப்பிரகாஷ் நாராயணனால் தோற்றுவிக்கப்பட்ட பி.யு.சி.எல். அமைப்பிற்கு ஒரு "தமிழர்" அகில இந்திய பொது செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார் என்று பேராசிரியர் சரஸ்வதி பெருமையோடு கூறினார் அதனால் ஈழத் தமிழர்களது உரிமை கோரிக்கைகள் ஒரு அகில இந்திய முக்கியத்துவம் பெரும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. மாநாட்டில் முன்னாள் நீதியரசர் ராசேந்திர சச்சார், அருணா ராய், பி.யு.சி.எல். அகில இந்திய தலைவர் பிரபாகர் சின்ஹா ஆகியோர் பாராட்டு செய்யப்பட்டனர்.
வழக்கறிஞர் சுரேஷ் தனது உரையில் " இலங்கை அரசு ஐநாவின் மனித உரிமை கழகத்தில் " யுனிவர்சல் பிராகரசிவ் ரிப்போர்ட்" களத்தில் பதின்மூன்று நாடுகளால் கேள்வி கேட்கப்பட்டு தினறடிக்கப்பட்டது என்பது நமக்கு தெரியும். ஆனால் அதே "பிரபஞ்சம் தழுவிய முன்னேற்ற அறிக்கை" முன்வைப்பில், நன்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற கணக்கு பார்த்தலில் இந்திய அரசின் முன்வைப்பு அறிக்கையை "நூறு நாடுகள்" கேள்வி கேட்டு மடக்கினர் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் இந்தியாவில் "மதவாதம் " எல்லா மக்களையும் கொடுமைபடுத்துகிறது என்பதாக அகிலம் சுட்டி காட்டுகிறது என்றார். கூடங்குளத்தில் அமைதிவழியில் போராடி வரும் மக்கள் மீது "செடிசன் என்ற அரச துரோக குற்றச்சாட்டுகளை" போட்டு அரசுகள் கொடுமைபடுத்துகின்றன என்றார்.அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து வரும் பி.யு.சி.எல்.இன் அகில இந்திய துணை தலைவர் மருத்துவர் பினாயக் சென்,
உ.பி.மாநில துணை தலைவர் சீமா அவாஸ், போன்றோர் மீதும் அரச துரோக குற்றச்சாட்டுகளை போட்டுள்ளார்கள் என்றார். இது பி.யு.சி.எல்.அமைப்பை எதிராக சித்தரிக்கும் அரசின் செயல்பாடு என்றார்.
அடுத்து மதவாதமும் , பயங்கரவாதமும் என்ற தலைப்பில் பலரும் பேசினர். அதில் "கம்பாட் கம்ம்யுனலிசம் " இதழ் ஆசிரியர் டீஸ்டா பேசியது சிறப்பாக அமைந்தது.அவர் எப்படி குஜராத் மாநில மோடி அரசு முஸ்லிம்களை படுகொலை செய்துவிட்டு, நரோடா பாட்டியா வழக்கில் "விசாரணை நீதிமன்றத்தில்" சாட்சிகளை மிரட்டியது, சாட்சிகளை பாதுகாக்க எப்படி நீதிமன்றம் ஒரு திட்டத்தை வகுத்து என்பதை எடுத்து சொன்னார் விசாரணை நீதிமன்றங்களில் தான் "சட்டம்" உருவாகிறது என்றார்.தமிழனாட்டிளிருந்து பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வருவதாக அறிவிப்பு இருந்தது. அனால் அவர் உடல் நிலை காரணமாக வரவில்லை என்றார்கள் கரானடகா மாநில குல்பர்க்காவில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தபட்ட வன்முறைகளை அந்த மாநில பிரதிநிதிகள் கூறினார் கோவை குண்டு வெடிப்பு காரணமகா சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகள் பற்றி கோவை வழக்கறிஞர் அபு பக்கர் பேசினார்..
ரிசோர்ஸ் அரசியல் என்ற தலைப்பில் "இயற்க்கை மூலாதாரங்களை வைத்து நடத்தப்படும் அரசியல்" என்ற அடுத்த அமர்வில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் பற்றி, தூத்துக்குடி பேராசிரியர் பாதிமாபாபு பேசினார். அப்போது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஓராண்டாக மட்டுமே நடப்பதாக மத்திய அரசு கூறுவது பொய் என்றார்.இரூபத்து ஐந்து ஆண்டுகளாக நடக்கிறது என்றார். நெல்லை நாகர்கோவில் தூத்துக்குடி கன்யாகுமரி என "பல்லாயிரக்கணக்கான மக்களை கொண்ட பேரணிகளும் மாநாடுகளும்", 1987,88,89 ஆம் ஆண்டுகளில் நடந்துள்ளன என்று நாடு தழுவிய பிரதிநிதிகளிடம் எடுத்து சொன்னார்.வழக்கறிஞர் நகசைலா உச்சநீதிமன்ற வழக்கில், கூடங்குளம் அணு உலை வரக்கூடாது என வாதம் செய்வதை பாடிமாபாபு எடுத்துக்கூறினார்.மக்கள் அச்சத்தின் காரணமாக அணு உலையை எதிர்க்கவில்லை அறிவியல் தெளிவுடன் எதிர்க்கிறார்கள் என்று தூத்துகுடியில் நடந்த போராட்டங்களையும் சுட்டி காட்டினார் விதி மீறலில் ஈடுபடவதாக வரும் குற்றச்சாட்டுகளை, சரி செய்துவிடலாம் என்று அரசும் நீதிமன்றமும் நினைக்கலாம் என்றும் ஆனால் அங்கெ நடப்பது "சட்ட மீறல்கள்" என்பதே பி.யு.சி.எல்.இன் பார்வை என்றார். சி.ஆர்.இசட் என்ற1991இன் "கடலோர ஒழுங்குபடுத்தல் மண்டலம்"விதிகளையும், 1994இன் ஈ.ஐ.ஏ என்ற " சுற்றுசூழல் தாக்கம் பற்றிய மதிப்பீடு" அறிக்கை என்ற சட்டத்தையும் அமுல்படுத்தாமல். என்.பி.சி.எல். என்ற
"இந்திய அணு சக்திகார்போரசன் லிமிடட்" என்ற அணு சக்தி துறையால் உருவாக்கப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு பொருந்தக்கூடிய சட்டங்களை அமுலப்டுத்தா இந்த ஆலை "சட்டவிரோதமானது" என்று ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளினார்
அடுத்து இந்தியாவில் இருக்கும் மக்கள் விரோத சனநாயக விரோத சட்டங்களான "ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்", சட்டவிரோத கூடுதல் தடுப்பு சட்டம்" சட்டிஸ்கர் பாதுகாப்பு சட்டம்" "தேசிய பயங்கரவாத தடுப்பு சட்டம்" எல்லை பாதுக்கப்பு படைக்கான சட்ட திருத்தம். ரயில்வே பாதுகாப்பு படைக்கான சட்ட திருத்தம் போன்ற சட்டங்கள் பற்றி பல மாநில பிரதிநிதிகள் கடுமையாக தாக்கி பேசினர் பி.யு.சி.எல். வரலாற்றில் தமிழ்நாடு என்று டிஎஸ் எஸ் மணி பேசினார். அதில் 1981 ஆம் ஆண்டு சென்னையில் "முதல் தேசிய செயற்குழு"நடந்தது என்றும்,அப்போது சோ ராமசாமி மாநில பி.யு.சி.எல். தலைவராக இருந்தார் என்றும்,அதில் நக்சல் வன்முறையையும், காவல்துறையின் வன்முறையையும் ஒன்றாக பார்க்கவேண்டும் என்ற விவாதம் வந்தது என்றும், க்ப்ப்ரினார். அப்போது தேசிய செயற்குழு உறுப்பினர்களாக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், சத்யனரயன்சிங், போன்றோர் அதை எதிர்த்து காவல்துறையின் வன்முறைதான் "மூல காரணம்" என்று பேசியதையும் சுட்டி காட்டினார்.அப்போது அருண் செளரி பி/யு.சி.எல்.இன் அகில இந்திய பொது செயலாளராக இருந்தார் என்றார்.
இரண்டுநாள் மாநாடும் இந்தியாவின் மனித உரிமை காலத்திற்கு பெரிதும் உதவும் என்ற என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் திரும்பினர்.