Saturday, November 12, 2011

இம்ரான் பாகிஸ்தானில் எழுகிறாரா?

இந்த வாரம் இம்ரான்கான் வாரம் என்று சொல்லும் அளவுக்கு, அந்த முன்னாள் மட்டைபந்து விளையாட்டு குழாமின் தலைவர், இந்நாள் அரசியல்வாதி அதிகமாக விவாதிக்கப்படுகிறார்.சீ.என்.என்.-அய்.பி.என். தொலைகாட்சியில் பிரபலமான கரன் தாபர் நடத்தும் "டெவில்ஸ் அட்வகேட்" என்ற நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அரசியல் தலைவர் இம்ரான்கானை கேள்வி கேட்கிறார். சென்ற வாரம் "ஐம்பதாயிரம்" மக்களுக்கு மேல் திரட்டி ஒரு மாபெரும் பேரணியை அமெரிக்காவின் மிரட்டலுக்கு சவால் விடும் அளவுக்கு இம்ரான்கான் தனது கட்சி பதாகையின் கீழ் நடத்தி காட்டினார்.

தனது பேட்டியில் இம்ரான் தான் பிரதமராக வந்தால், தனக்கு கீழ் ராணுவத்தை கொண்டுவருவேனஎன்றார். ராணுவமும், அய்.எஸ்.அய்.யும் பிரதமருக்கு கீழ் படிய வேண்டும் என்றார். இன்று பலூசிச்தானிலும், கராச்சியிலும் கூட, இராணுவமே ஆட்சி செய்கிறது என்றார். பாகிஸ்தானில் ஒரு பயங்கரவாத நடவடிக்கையும், உள்ளேயும், வெளியேயும் இல்லாமல்செய்துவிடுவேன் என்றார்.இளைஞர்களையும், பெண்களையும் அரசியல்படுத்துவதே அடஹ்ற்கான வழி என்றார். இளைஞர்கள் இப்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றார். இவ்வளவு முற்போக்காக பேசுகிறாரே என்று நாம் ஆச்சர்யப்ப்படும்போது, அதுபற்றி பாகிஸ்தானில் இருந்து ஊடகவியலாளர் பணிகளைகவனித்த, பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டபோது , அருகில் இருந்து அதுபற்றி எழுதிய ஆங்கில ஊடகவியலாளர் நிரூபமா சுப்பிரமணித்திடம் கேட்டேன்.

அவர் கூறிய கருத்துக்கள் இன்னமும் வித்தியாசமாக இருந்தது. அங்கே இம்ரான்கானை "அழகான தலிபான்" என்றே அழைப்பார்களாம். அது மட்டுமின்றி, " இம்தா டிம்" என்றும் அழைப்பார்களாம். அதாவது ஆள் கொஞ்சம் விவரக் குறைவு என்பார்களாம். இம்ரான் வெறும் அமெரிக்கா எதிர்ப்பு மட்டுமல்ல, தலிபான் ஆதரவு என்றார் நிரூபமா. ராணுவத்தின் செல்வாக்கில்தான் தானும் இருப்பதே அவருக்கே தெரியாது என்றார். பெரும் கூட்டத்தை கூட்டும் ஒரே அரசியல்வாதியாக இம்ரான் இப்போது இருக்கிறார் என்றார்.இந்தியாவின்மேல் இம்ரானுக்கு நம்பிக்கை இல்லை என்றார். இதுதான் எபகிச்தான் பொதுமக்களின் அபிப்பிராயம் என்று நாம் நினைத்துக் கொண்டோம். காஷ்மீர் பிரச்னையை இந்திய அரசிடம் விடுவதை இம்ரான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். நாமும்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று எண்ண வைத்தது.

காமன்வெல்த் விளையாட்டு--இலங்கை, இந்தியா தோல்வி.

காமன்வெல்த் விளையாட்டை நடத்துகிறேன் பேர்வழி என்று ஊழல் தேசம் எனப் புகழ் பெற்ற இந்தியா, ச்நேர ஆண்டு டில்லியில் ஒரு மாபெரும் எழுபதாயிரம் கோடி ஊழலில் சிக்கி மாட்டிக் கொண்டு முழிக்கிறது. சிறைக் கம்பிகளை எண்ணும் காங்கிரஸ்காரர் சுரேஷ் கல்மாடி அதற்கு சாட்சியாக திகாரில் "ஒன்று,இரண்டு" சொல்லிக் கொண்டுள்ளார். தேனை எடுத்தவன் கையி நக்காமல் விடுவானா என்பது மன்மோகன் அரசை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. ஆகவே ௨௦௧௮ ஆம் ஆண்டு வார இருக்கும் காமன்வெல்த் விளையாட்டை எப்படி கைப்படறி காசு அடிக்கலாம் என்பதே டில்லிக்கு கவலை.அதற்காக இலங்கையை தயார் செய்தது.

இலங்கைக்கு வருகிற கமான்வேழ்த் விளையாட்டு நடத்த அனுமதி தரவேண்டும் என்று இந்தியா வரிந்து கட்டியது. அதனால் இந்திய அரசுக்கு எண்ண லாபம்? டில்லியில் காமன்வெல்த் விளையாட்டில் ஒப்பந்தங்கள் பெற்ற பெரும் புள்ளிகள் இன்னமும் இந்தியாவில் கையி நக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் எப்படியாவது இலங்கைக்கு வாங்கி கொடுத்து, அதில் தங்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கொடுக்க தொந்தரவு செய்தார்கள். இலங்கை அதிபரும் தங்களுக்காக "உலக அரங்கில் அவ்வப்போது பிணை எடுக்கும் இந்தியா" சாப்பிட்டு விட்டு போகட்டும் என்றும், மீதி கறிகளை தாங்கள் தின்னலாம் என்றும் திட்டமிட்டனர். காமன்வெல்த் நாடுகள் மொத்தம் எழுபத்து ஒன்று. அவர்கள் மத்தியில் விளையாட்டை எந்த நாட்டில் நடத்துவது என்று வாக்கு எண்ணிக்கைக்கு விடப்பட்டது.

இலங்கை தனது அம்பாந்தோட்டையில் நடத்துவது என்றும் அதில் இந்தியாவிற்கு நூறு பில்லியன் டாலருக்கு அதாவது ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு, இந்தியாவிற்கு ஒப்பந்தங்களை தாரை வார்ப்பது என்றும் முடிவானது. அதற்காக மட்டை பந்து விளையாட்டு வீரர் முத்தையா முரளீதரனை அனுப்பி சக காமன்வெல்த் நாடுகள் மத்தியில் பேசி சரி செய்ய முயன்றனர். அதற்கு யாரும் அசைந்ததாக தெரியவில்லை. ஆஸ்திரேலியா தனது "தங்க கடற்கரையில்" நடத்துவோம் என்று வாக்கு கேட்டனர். எழுபது நாடுகள் தான் வாக்களித்தன. தலைவர் தனது வாக்கை போடவில்லை. அதில் "நாற்பத்தேழு" வாக்குகள் ஆசிதிறேளியாவிற்கும், இருபத்து மூன்று வாக்குகள் மட்டுமே இலங்கைக்கும் விழுந்தன.

காமன்வெல்த்நாடுகளின் அடுத்தவிளையாட்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்று வாக்கெடுப்பில் முடிவானது. இலங்கையுடன், இந்தியாவும் வாக்கெடுப்பில் தோற்றது. காமன்வெல்த் நாடுகள் முன்னால் இந்தியாவின் மரியாதை அதோகதி ஆகிவிட்டது.ஏற்கனவே காமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடாக து நடந்த சென்ற வாரமே "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்" அதில் கலந்து கொண்டது ஒரு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

2 ஜி ஊழல் போதாதென்று இப்போ 3 ஜி ஊழல் தொடர்கிறதா?

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைவரிசை ஊழலில் சிக்கிய, சிக்கப் போகும் முன்னாள்மத்திய அமைச்சர்கள் திஹார் சிறைக்குள்ளும், சிறைக்கு வெளியேயும், மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். அதன் விசாரணை தொடங்கி விட்டது. சவான் நிறுவனம் ஏலம் எடுத்து யாருக்கு எண்ண கொடுத்தது என்பதும் விசாரணையில் வெளிவரும். அப்போது தமிழ்நாட்டிலிருந்து சென்று திஹார் சிறைக்குள் அடைபட்டிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் கலைஞர் தொலைக் காட்சிக்கு வந்த இருநூறு கோடி ரூபாயை யார் வாங்கினார் என்று சொல்லப்போவதில்லை. ஆனால் இன்னொருவர் அதுபற்றி சொல்லப்போகிறார்.

ஆறுமுறை அந்த மும்பை நபர் சென்னையில் வந்து யாரை சந்தித்தார் என்பதும் வெளியே வரப் போகிறது. கொடுத்தவரே சொன்னால் மட்டும்தான் நாடு ஏற்றுக் கொள்ளும் போல் தெரிகிறது. இந்த ஊழலில் சம்பந்தம் இல்லாத கனிமொழி இதில்போய் மாட்டப் பட்டுள்ளார். ஊழல் பற்றிய கோப்புகளை எடுத்து கொண்டு ஒவ்வொரு அரசியல் தலைவர்களிடமும் அலைந்து கொடுத்து, தான் கட்சியிலும், அமைச்சரவையிலும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கொண்டவர் எங்கே சிக்குவார் என்று தெரியவில்லை. அதற்குள் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை வரிசை ஊழல் பற்றிய செய்திகள் வரத் தொடங்கி விட்டன.


மூன்றாம் அலைக்கற்றை வரிசை கொண்டுவர, கட்டுப்பாட்டு சிகரங்கள் கட்டப்பட வேண்டும். அவற்றை கட்டுவதற்கு ஏலம் எடுத்தது யார் தெரியுமா? ஒரு பெங்களூர்வாசி. அவர்தான் செல்வி. கலைஞரின் முதல் மகள். தயாளுவின் அன்பு செல்வி. அழகிரி, மற்றும் ஸ்டாலினின் அன்பு தங்கை. முரசொலி மாறனின் தம்பி செல்வத்தை மணம் முடித்தவர். இவர் பெங்களூரில் இருக்கிறார். இவரை சந்திக்க கலைஞர் பெங்களூர் செல்லும்போதெல்லாம் போவது உண்டு. அந்த செல்வியின் பெயர் நேற்று சென்னை மாநகர காவல் ஆணையத்தில் மூன்று ஜி ஊழலில் மோசடி செய்யப்பட்டவர்களின் புகாரில் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

செல்வி பல பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மூன்றாம் அலைவரிசை "கட்டுப்பாட்டு சிகரங்களை" உருவாக்க ஏலம் எடுத்தார். ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் அப்படி இந்தியா முழுவதும் கட்டுப்பாட்டசிகரங்கள்கட்டப்படவில்லை. கண்ட்ரோல் டவர்கள் கட்டாமலேயே மூன்றாம் தலைமுறை அலைவரிசை கொடுக்கப்பட்டு வரும் விந்தை இந்த நாட்டில்நடந்துவருகிறது. இரண்டாம்அலைவரிசையில் சிக்காத, முன்னாள் மன்னர் குடும்பத்தினர் மூன்றாம் அலைவரிசை ஊழலில் சிக்குகிரார்களா?