Sunday, December 30, 2012


மலேசியாவில் நடந்த இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு. 

         மலேசியாவில் பெட்டாலிங்  ஜெயாவில் உள்ள தோட்ட  மாளிகையில், டிசம்பர் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை இஅர்ண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடந்தது. பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், புதிய தமிழகத் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி இணை அமைப்பாளராக செயல்பாடா அந்த மாநாடு நடந்தது. மாநாட்டின் இயக்குனராக பொண்ணுரங்கன் செயல்பட்டு மாநாட்டை வழிநடத்தினார். மாநாட்டிற்கு, உலகம் முழுவதிலும் இருந்து தமிழ பேராளர்கள் வந்திருந்தனர்.லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை, நார்வே,தென்னாப்பிரிக்கா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து, பல பேராளர்கள் வந்திருந்து கலந்து கொண்டு உரையாற்றினர்.மலேசியா நாட்டின் எதிர்க் கட்சி கூட்டணியின் தலைவர் டத்தோ.அன்வர் இப்ராஹீம் மாலையில் மாட்டில் கலந்துகொண்டு, சிறப்புரை  நிகழ்த்தியது முக்கிய நிகழ்வாக காணப்பட்டது.

            திருவள்ளுவர் சிலைக்கு கிருஷ்ணசாமி சால்வை போர்த்த, பேராசிரியர் ராமசாமி அதற்க்கு மாலை அணிவிக்க, மாநாட்டு வாயிலில் மலேசியா நாட்டு கொடியேற்றி, முழக்கங்கள் எழுப்பி, மாநாட்டை தொடங்கினார்கள்.விநூஷா,தனது பரதநாட்டிய நிகழ்வின் மூலம் மாநாட்டு அரங்கை உர்ச்சாகப்படுத்தினார்..மாநாட்டின் வரவேறப்பு உரையை நிகழ்த்திய தமிழச்சி என்ற காமாட்சி துரைராஜ், மிக நேர்த்தியான விளக்கத்துடன் பேராளர்களை வவேற்றார். தமழர்கள் உலகம் முழுவதும் படும் துன்பங்களை கூறி, நம்பிக்கை நட்ச்சத்திரமாக தமழீழ தேசியத்  தலைவர் மேதகு.வே.பிரபாகரன் நிகழ்த்தி காட்டிய தமிழீழ விடுதலை, தற்காலிகமாக பின்னடைவை சந்தித்திருந்தாலும், எதிர்காலம் ஒளிமிக்கது, அதற்கான பணிகளை துரிதப்படுத்துவோம் என்றார். மாநாட்டின் இயக்குனர் பொன்னுரங்கன் உலகத் தம்ழிகர் பிரச்சனைகள்,உள்ளூர் மலேசிய மண்ணின் பிரச்சனைகள், கோவையில் நடந்த முதல் மாநாடு, இன்று நடத்தப்படும் மாநாட்டின் நோக்கம் என்று விளக்கமாக உரையாற்றினார்.தமிழர்கள் எங்கணும் நிலம் இழந்ததையும்,ஏமாளித்தனமாக இருப்பதையும் அப்பது அவர் சுட்டிக் காட்டினார். அடுத்து மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் பேசினார்..மாநாட்டு செயலாளர் மலேசியாவின் சாமுவேல்ராஜ் பேசினார்.அடுத்து உரையாற்றிய பேராசிரியர் ராமசாமி உணர்ச்சிவசப்பட்டு, ஈழத்தமிழர் இன அழிப்பில் பங்கு கொண்ட இந்தியா தன்னை வரவிடாமல் 'தடை" செய்துள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.மருத்துவர்  கிருஷ்ணசாமி, மலேசிய எம்.பி. மனோகரன்,ஆகியோர் உரையாற்றினர். 

 இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மா.வே.சேனாதிராஜா, சிறிதரன், அரியேந்திரன்,யோகேஸ்வரன் ஆகியோரும், அவர்களுடன் பேராளர்களும் வந்திருந்தனர்    தமிழ்நாட்டிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியாவிற்கான நாடாளுமன்ற உறப்பினர் பேராசிரியர் சரஸ்வதி, புதுக்கோட்டை குருமூர்த்தி, டி.எஸ்.எஸ்.மணி, அரிமாவளவன், வழக்கறிஞர்.பார்வேந்தன்,ஆகியோர் தங்களுடைய உரைகளை நிகழ்த்தினர்.அவர்களுடன் மேலும் பத்து பேராளர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தனர்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆஸ்திரேலியா பிரதிநிதி மாணிக்கவாசகம், தனது உரையில் புலம் பெயர்ந்த தமிழர்களின் கோரிக்கைகளை எடுத்து கூறினார்.யாழ்ப்பாண எம்.பி. மா.வே.சேனாதிராஜா,தாங்கள் உள்நாட்டு சுயநிர்ணய உரிமையை வேண்டுவதாகவும், அதற்கு மேல் தங்களால் கோர இயலாது என்றும், மாநாடு "தமிழீழம் தான்" தீர்வு என்ற கருத்தை முன்வைக்கும் நிலையில் தாங்கள் பெரும் ஆறுதல் அடையலாம், என்றாலும், வெளி சுயநிர்ணய கோரிக்கையை  புலம்பெயர்ந்தோர் முன்வைக்கின்றீர்கள் என்றும் கூறினார். அரியேந்திரன் எம்.பி.தங்களது  தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களுக்கு  நாடாளுமன்ற உரையையும் தாண்டி, இலங்கையின் புலனாய்வு துறையான, "பயங்கரவாத புலனாய்வு துறை"யின் நான்காவது மாடியிலும் பேசவேண்டிய கட்டாயம் உண்டு என்று  அங்கெ தனைகளுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை பகிர்ந்து கொண்டார். "காணொளி" மூலம் மாட்டு ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த "நாடுகடந்த தமிழீழ ரசாங்கத்தின் தலைமை அமைச்சர் உருத்திரகுமார்,உரை" ஒன்று காட்டப்பட்டது.அதில் அவர் மாநாட்டை வாழ்த்தியதோடு மட்டுமின்றி, தமிழீழமே ஒரே தீர்வு என்பதை, " தங்களது தாகம் தமிழீழ தாயகம்" என்று முடித்தார்.  


           பேராசிரியர் சரஸ்வதி தனது உரையில் மாநாட்டில் மேடையில் பெண் பேச்சாளர்களை அமர்த்தவில்லை எனபதை சுட்டிக் காட்டினார்.இந்திய தவுஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முஸ்லிம் தம்ஜிஹர்களும், தமிழர்கள்தான் என்பதை வலியுறுத்தினார். மலேசியா நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம், தனது உரையில்,தங்களது  மக்கள் கூட்டணி இலங்கை இன அழிப்பை கண்டிக்கிறது என்றும், அது உள்நாட்டு பிரச்ச்னை அல்ல என்றும், அது அனைத்துலக மனித உரிமை மீறல் என்றும், இலங்கை தம்ஜிஹர்களின் அடிப்படை உரிமைகளுக்கு தாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம் என்றும் கூறினார். அன்வர் இப்ராஹீம் அடுத்த மலேசியாவின்  பிரதமாராக வருவார் என்று மாநாட்டில் பலரும் பேசினார்கள். அனவரும் தான் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு வர  விரும்புவதாக கூறினார்.மாநாடு பல தீர்மானங்களை நிறைவேற்றியது.அவற்றில் மலேசியா நாடு கடந்த ஐ.நா.மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தபோது,நடுநிலை வகித்ததை மாநாடு பெருமிதம் கொள்கிறது என்றும், வருகிற மார்ச் மாதம் வரும் அதே ஐ.நா.வின் மனித உரிமை கழக கூட்டத்தில், மலேசியாவும், இந்தியாவும், அனைத்து நாட்டு சுதந்திரமான விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, போராடும் யாழ்ப்பாண பலகளிக் கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேறியது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்கீகரிக்கக் வேண்டும் என்றும் கோரப்பட்டது. மலேசியாவில் தமிழர்களுக்கான அபல்லிகளை அதிகரிக்கவேண்டும் என்றும் கோரப்பட்டது.இரவு பத்து மணிக்கு மாநாடு இனிது முடிந்தது. மிக்கேல் தமழரசன் நன்றி கூறினார்.