Friday, February 10, 2012

சிதம்பர கலைஞர் கூட்டு நடவடிக்கை?

கூடங்குளம் அணு உலையை எப்படியாவது கொண்டுவர பிரதமர் அலுவலகம் ஒரு வேலையை உள்துறை சிதம்பரத்திடம் ஒப்படைத்துள்ளது. அதை செவ்வென செய்ய உள்துறையும் கலைஞரை நம்பி அடி எடுத்து வைத்துள்ளது. திமுக கூடங்குளம் அணு உலையை எதிர்க்காமல் இருந்தா போதும் என்றும், தாங்கள் ஜெ அரசுக்கு நிர்பந்தம் தர திட்டமிடலாம் என்றும் சிதம்பரத்திடம் கைஞர் கூறியுள்ளார் என்பதே தகவல். அதற்கு பிரதி உபகாரமாக புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் ஜெ வின் திட்டத்திற்கு மதிய அரசின் தடையில்லா சான்றிதழை தடுத்து விடுகிறோம் என்றாராம் அந்த உள்துறை. அதையொட்டியே கலைஞரும் தனது கட்சியின் உயர்நிலை குழுவிலும், பொது குழுவிலும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கவும் இல்லை, எதிர்கவும் இல்லை. இவ்வளவு பெரிய கட்சியான திமுக வின் பொது குழுவிற்கு அணு உலை பற்றிய ஒல்கையும இல்லை. கூடங்குளம் பற்றி நிலைபாடும் இல்லை மாறாக தமிழக அரசு விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று இருக்கிறது. இதுதான் திமுக வின் உண்மை நிலையா?

1988 இல் இதே கூடங்குளம் அணு உலை வரபோகிறது என்று அரசு முடிவு செய்த நேரத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பின் அன்றைய தலைவர் ஜி.ஆண்டன் கோம்ஸ் தலைமையில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடந்த போது, முரசொலி ஏட்டின் வார ஏடான "புதைஒயல்" ஏட்டின் அன்றைய ஆசிரியர் ஞானி ஒரு கட்டுரையை கூடங்குளம் அணு உலைக்கு எதிராக எழுதி, அதை படித்த பின் ஞானி முரசொலி மாறனிடம் அது பற்றி பேசி, மாறனும் கலைஞரிடம் எடித்து சொல்லி, அதன் விளைவாகவே அன்றைய கலைஞர் வைகோ விடம் பேசி அவரும் நாடாளுமன்றத்தில் முழங்கியதும அதை அன்றைய கே.பி கந்தசாமியின் தினகரன் ஏடு முதல் பக்கத்தில் அச்சிட்டதும் பசுமையாக நினைவுக்கு வருகிறது. அப்படியானால் எப்படி இப்போது அதே கலைஞரிடமிருந்து இப்படி ஒரு வெளிப்பாடு வருகிறது?

அதுவும் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குவது என்பதாக வருகிறது? பிபரவரி ஒன்பதாம் நாள் முரசொலியில் முதல் பக்கத்தில் கலைஞரே எழுதும் கேள்வியும் நானே, பதிலும் நானே பகுதியில் ஒரு செய்தியை எழுதியுள்ளார் கலைஞர். அது கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக மதுரையில் போராடிய காங்கிரஸ் வழக்கறிஞர் பூசை துறையை தமிழக காவல்துறை எப்படி கைது செய்யலாம் என்று கலைஞர் கேட்கிறார். அதை விளக்கும் போது 1986 இல் கூடங்குளம் அணு உலைக்கு அடிக்கல் நாட்டும் போது என் உதயகுமார் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று ப்பூசைதுரையை சாக்கா சொல்லி கலைஞர் கேட்கிறார். அய்யா கலைஞர் அவர்களே, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே எங்களது எதிர்ப்பையும் அதில் உங்களது பங்களிப்பையும் சற்று எண்ணிப்பாருங்கள் அய்யா. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு களிப்னர் அவர்களே நீங்கள் இதை எதிர்க்கும் போதும், தங்கள் வலது கரத்தில் உள்ள ஆசிரியர் வீரமணி அவர்கள் தனது வார ஏடான உண்மையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு கொடுத்ஹ்டு பல கட்டுரைகளை வெளியிட்ட போதும், எங்களுடன் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பில் திராவிடர் கழகம் கலந்து கொண்டதும் எந்த அந்நிய பணத்தை வாங்கி கொண்டோ, அல்லது எதிர்பார்த்தோ என்று விளக்க முடியுமா???


இப்போது தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க எண்ணி கலைஞர் அவர்களே நீங்கள் கோவையில் உள்ள "சிறு தொழில் கூட்டமைப்பை" தூண்டி விட்டு "மின்வெட்டை" எதிர்த்து போராட்டத்தை தூண்டி விட்டு அதை முரசொலியில் பிபரவரி ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், பதினோராம் நாளும் தலைப்பு செய்தியாக போட்டு, அதன்மூலம் "மின்சாரம் வரவேண்டும் என்றால் அணு உலை வரவேண்டும்" என்ற ஒரு "வக்கணையான" சிதம்பரம் சூத்திரத்தை விற்பனை செய்து வருகிறீர்களே? இது நியாயம்தானா? இப்போது தமிழ்க்ஹா மக்களை மின் வெட்டிற்கு எதிராக தூண்டி விட்டு அதையே அணு உலைக்கு சாதகமாக திருப்பி விட இந்த இரு தலைவர்களும் திட்டமிட்டுள்ளார்கள். அதுவே எழுத்தாளர் சோலையின் கட்டுரை வடிவில், நக்கீரனில் இப்போது வெளி வந்துள்ளது. அதிலும் அமெரிக்கா தோண்டலில் என்று எழுதும் சோலை "மன்மோகனும், திமுகவும்" சேர்ந்து தான் அமெரிக்க- இந்திய அணு ஒப்பந்தத்தை ஆதரித்தவர்கள் எனபதை ஏனோ மறந்து விட்டார். இதே நக்கீரனில் பழைய அணு உலை எதிர்ப்பாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் திமுகவின் நிலையை ஆதரிக்க வேண்டி, அமெரிக்காவுடனான அணு உலை ஒப்பந்தத்தை ஆதரித்து எழுதினர் எனபதையும் ஏனோ மறந்துவிட்டார். எல்லாமே கலைஞரின் உறவுக்கார, செயலாளர் ராஜமாணிக்கம் கூறியதால்தான் சோலை அப்படி எழுதுகிறார் என்று நாம் எப்படி சும்மா பார்த்து கொண்டு இருக்க முடியும்?