Friday, June 8, 2012

நெஞ்சுக்கு நீதி சொல்ல முடியுமா தலைவரே?



    இந்திய கம்யுனிஸ்டு  கட்சி தா.பாண்டியன் கலைஞர் பற்றி ஈழ பிரச்சனையில் தமிழர்களை சவிளிருந்துகாப்பாற்ற எதுவும் செய்யவில்லை என்று திருவாரூர் சென்று கூறியதற்கு, அடுக்கடுக்காக கலைஞர் முரசொலியில் பதில் எழுதி உள்ளார். ஒவ்வொரெஉ நாளையும் குறிப்பெடுத்து, ஒவ்வொரு செயலையும் பட்டியல் போட்டு, கலைஞரும், திமுகவும் எப்படியெல்லாம் ஈழத்தமிழர் பிரச்சனையில் தீர்மானங்கள் போட்டும், ராசினாமாக்களை வாங்கியும், மழையிலும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தியும், மன்மோகன் சிங், சோனியா காந்தி, சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, ஆகியோரிடம் கலைஞர்  பேசினார் எனப்தை எல்லாம் எடுத்து கூறியிருக்கிறார்.  அந்த டில்லி தலைவர்கள், ராஜபக்சேவிடம் பேசியதையும், அந்த டில்லி தலைவர்கள் வாக்குறுதி கொடுத்ததையும் எடுத்து கூறியிருக்கிறார். அய்யா, தலைவர் கலைஞர்  அவர்களே, நீங்கள்  கூறியுள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், அந்த டில்லி தலைவர்கள் வாக்குறுதி கொடுத்த பின் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியாதா தலைவரே?


            உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை உங்களுக்கு மட்டும் எப்படி தலைவரே டேஹ்ரியாமல் போனது? டில்லிகாரர்கல்தான் இலங்கை அதிபரிடம் சொல்லி ஈழத்தமிழர்களை ஒட்டுமொத்தமாக பலி வாங்க சொன்னார்கள் என்பது உங்களுக்கு மட்டும் இன்னமும் புரியவில்லையா தலைவரே? மன்மோகன் ராஜபக்சேவிடம் பேசினார் எனக்க கூறும் கலைஞர், ராஜபக்சே அந்த பேச்சிற்கு பிறகு என்ன செய்தான் என்று என் கூறவில்லை? சிதம்பரம் கலைஞரிடம் வாக்குறுதி கொடுத்த பிறகு, ஈழத்தில் எந்த அளவுக்கு "இனப்படுகொலை" வெறி பிடித்து நடத்தப்பட்டது என்று கலைஞர் என் கூறவில்லை? 

          அனைத்து கட்சி தலைவர்களை டில்லிக்கு அழைத்து சென்று மன்மோகன் சிங்கிடம் பேசவைத்ததை கூறும் கலைஞர் அவர்களே, அந்த பேச்சுவார்த்தைக்கு கடைசி வரையில் செல்வாரா, மாட்டாரா என்று இருத்த தா.பாண்டியனும் கடைசி நேரத்தில் வெளிநாட்டிலிருந்து வந்து டில்லியில் உங்களுடன் கலந்து கொண்டாரே கலைஞர் அவர்களே? அப்போது என்ன நடந்தது? மன்மோகனை நம்பி நிறைய பேசிய தா.பாண்டியன் பேச்சிற்கு வெறும் தலையசைத்து கொண்டிருந்த மன்மோகன் பற்றி கலைஞர் அவர்களே நீங்கள் தா.பாண்டியனிடம் என்ன கூறினீர்கள்? தேவையில்லாமல் கடினப்பட்டு அந்த ஆளிடம் இன்ற்ஹா அளவுக்கு எடுத்து சொன்னீர்களே? எண் அபயன்? என்று நேநேகள் கேட்டதாக கூறப்படுகிறதே? உண்மையா? தலைவரே?  அதற்கு பிறகு கழக தலைவர்களிடம் "நான் மட்டும் எதிர்கட்சியாக இருந்தாள் இந்த பிரச்சனையை வைத்து பயங்கரமாக மத்திய இசை ஆட்டி படைததிருப்பேன் "என்று நீங்கள் கூரிநீர்கலாமே? உண்மையா தலைவரே? 


                    இப்படி நீங்கள் நாடகத்தை பெரும் ளவு நடத்தியதால்தானே அங்கே ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளானார்கள்? எப்படி அதை மறக்க முடியும்? அல்லது மறைக்க முடியும்? தா.பாண்டியன் கூரியிற்றுப்பது ஒரு பகுதிதானே? உங்களையும் சேர்த்து அங்கு நடந்த இனப்படுகொலை போரில் ஒரு "சாட்சியாக" அல்ல, போர்குற்றம் புரிந்தவர்களின்" பட்டியலில் போடவேண்டும் என்று உலக தமிழர்கள் பேசுவது காதில் விழுகிறதா, தலைவரே?