நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமார் காணொளி நேர்காணல்.
சென்னையில் இன்று மதியம் 2-20 க்கு ,நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியாவிற்கான நாடாளுமன்ற உருப்பினரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மைய அமைப்பாளருமான பேராசிரியர் சரஸ்வதி ஏற்பாடு செய்திருந்த "காணொளி நேர்காணல்" திராவிட விடுதலை கழக அலுவலகத்தில், மைலாப்பூரில் நடந்தது. அவ்வமயம் அமெரிக்காவின் நியுயார்க்கிலிருந்து, உரூத்தர குமார் உரையாற்றினார். சென்னை ஊடகவியலளார்களுக்கு, வணக்கம் கூறிவிட்டு, தமிழகத்தில் நடந்துவரும் "மாணவர் போராட்டத்தை" பாராட்டினார். மாணவர்கள் மட்டுமே ஒரு இனத்தின் விடுதலைக்கு, எழுச்சியை ஏற்படுத்தும் சக்திகள் என்றார். மாணவர்களால மட்டுமே, இந்திய அரசை நிர்ப்பந்திக்க முடியும் என்றார். இலங்கையில் ஈழத் தமிழர் மீது நடந்தது ஒரு "இன ஒழிப்பே", "இனப் படுகொலையே" என்பதை பலமுறை வலியிறுத்தினார். அத்தகைய இனப் படுகொலையை எதிர்த்து ஐ.நா.மனித உரிமை கழகத்தில், இந்திய அரசு "அனைத்துலக சுயாதீனமான விசாரணையை" முன்னெடுக்க வலியுறுத்தும் வகையில், தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்பதை, "தாய் தமிழகம்" மாணவர் போராட்டங்கள் மூலமும், மக்கள் போராட்டங்கள் மூலமும், வலியுறுத்த வேண்டும் என்றார்.
இலங்கை அரசு பெற்ற குழந்தைதான் அங்கு நடந்த "கற்ற பாடங்களும், நல்லிண க்கதிற்கான குழு" என்று கூறினார் அத்தகைய குழு மூலம் எப்படி நியாயமான விசாரணையை நடத்த முடியும்? என்றார். ஆகவே அனைத்துலக சுயாதீனமான விசாரணை வேண்டும் என்றார். திமுக தலைவர், ஐ.மு.கூ. விலிருந்து "வலுவான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவிட்டால் வெளிய்றுவோம்" என்று கூறியிருப்பதை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது என்றார். அந்த முடிவில் திமுக தலைவர் உறுதியாக இருக்க வேண்டும் என்றார். அடுத்த கட்டமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி, "அனைத்துலக விசாரணை, இலங்கை மீது பொருளாதார தடை" ஆகியவற்றை கோரியிருப்பது பாராட்டத்தக்கது என்றார். அதேபோல, ஆளுநர் உரையிலும், முதல்வரின் உரையிலும், "இலங்கையில் நடந்தது ஒரு இனப் படுகொலையே" என்பதை கோரியிருப்பது வரவேற்க தக்கது என்றார். அவரும் மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றார்.
தெற்கு ஆசியாவில் "பிராந்திய அதிகாரமாக திகழும் இந்திய அரசுதான், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்றார். இந்தியா கொண்டுவந்தால் உலக சமூகம், பின்தொடரும் என்றார்.உலக நாட்டு அரசுகள் இலங்கையை எதிரி நாடாக கருத தயாராயில்லை என்றார். தங்களது அரசின் நலனில் நின்று கொண்டு, இலங்கை பிரச்சனையை அணுகுகின்றன என்றார்.அதனால்தான் தெரிந்து இருந்தும், "இனப்படுகொலை" என்ற சொல்லை பயன்படுத்த மறுக்கின்றன என்றார். அவர்கள் தங்களது அரசுகளின் நலனில் நின்று பார்ப்பதை மாற்றி கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றார். அதனால் அவர்களது நலனும், நமது கோரிக்கையும், சேரும் இடங்களை நாம் கண்டு அணுக வேண்டும் என்றார். தமிழீழத்தை பெற்று தர இந்திய முயலவேண்டும் என்றார். தமிழீழத்திற்கு இந்திய அரசு உதவினால், அது காஷ்மீரை இந்தியா தனிநாடாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற குரலை வலுப்படுதுவதாக ஆகுமே? என்ற கேள்விக்கு, காஷ்மீர் விஷயம் வேறு, இலங்கையில் நடந்தது "இனப்படுகொலை" என்றார்.
தாய் தமிழகம், ஈழத் தமிழர்கள், புலம் பெயர்ந்தோர் என்ற மூன்று பிரிவுகளும் இணைந்து போராடும் சூழல் வந்துள்ளது என்றார். புலிகளின் தாகமாக இருந்த "தமிழீழம்" இப்போது, உலக தமிழர்களின் தாகமாக் மாறியுள்ளது என்றார். வடக்கு-கிழக்கு மாகாணங்களில் "இடைக்கால" அரசாங்கம் என்ற கேள்விக்கு,சுனாமி வந்தபோது, அழிவுகளில் சிக்கிய மக்களை மீட்க, புலிகள் உலக சமூகத்தின் உதவிகளை கொழும்பு மூலம் கொடுக்காதீர்கள் என்ற கோரிக்கையை வைத்தார்கள் என்றார். அதேபோல இப்போது "மீள்குடியேற்றம்" விரும்புவோர், கொழும்பு மூலம் அதை கொடுத்தால் அது தமிழ் மக்களுக்கு போய் சேராது என்றார். உலக நாடுகள் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தங்களது "தூதரகங்களை"திறக்க வேண்டும் என்றார். ஐ.நா. மனித உரிமை கழக தீர்மானத்திற்கு, ஐரோப்பியநாடுகளின் ஆதரவை தாங்கள் திரட்டி உள்ளதாக கூறினார். முத்துகுமார் முதல் மணி வரை தமிழகத்தில் "ஈழத் தமிழருக்காக" உயிரை ஈகம் செய்தவர்களுக்கு வணக்கம் கூறினார். "தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்" என்று கூறி முடித்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ஒரு "சுதந்திரத்திற்கான தொகுப்பை"தயாரிக்கிறது என்றும் அதை வருகிற முள்ளிவாய்க்கால் தினத்தன்று அமெரிக்காவின் "பிளிடல்பியாவில் "வெளியிடுவோம் என்றும் கூறினார். அதற்கு முதலில் ஒரு "கையேடு" வெளியிட்டுள்ளோம் என்று கூறி அதை, பேராசிரியர் சரஸ்வதி ஊடகவியலாளர்களிடம் விநியோகம் செய்தார்.