Thursday, December 20, 2012

தென்மொழி அம்மா தாமரை, இறைக்குரவனார் நினைவேந்தல் நிகழ்வு.

தென்மொழி அம்மா தாமரை, இறைக்குரவனார் நினைவேந்தல் நிகழ்வு.
            22-12-2012 சனிக்கிழமை  காலை 9-30 மணிக்கு தொடங்கி,  பாவலரேறு  பெருஞ்சித்திரனாரின் மனைவி, அம்மா தாமரையம்மாள்  மற்றும்  திருக்குரல்மணி இறக்குரவனார் அய்யா ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு,  அடையாறு ராஜரத்தினம் அரங்கில்  நடைபெறும். அந்த அரங்கு எம்.ஜி.ஆர்.-ஜானகி பெண்கள் கல்லூரிக்கு எதிரே உள்ளது. பாலம் தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. தென்மொழி இதழிலிருந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நினைவேந்தல் கூட்டத்தில், தமிழ் அறிஞர்கள், தமிழ்தேச உரிமை இயக்கங்களின் தலைவர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தென்மொழி அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள்.

                      தாமரையம்மாள் பற்றி பாவலரேறு  குறிப்பிட்டுள்ள  குறிப்புகளில் .........................

                         எளிமையின் தோற்றத்தாள். வலிமையின் போர்வாள்.
                          ஏழ்மையில் மனங்கோணா என்னொடுந்தேர்வாள் 

                           பொன்னுக்கும், பட்டுக்கும் விழைவில்லா துறவி 
                            பொழுதுக்கும் காலாறா நடைபாவும் இறைவி 
                            சின்னக்கைக்குழந்தைக்கும்  குழந்தையவள் நெஞ்சம் 
                             சீறியெழின்  பெண்புலியின் சீற்றத்தை விஞ்சும்.
                             எனக்கெனவே வாழ்கின்றாள். எனக்கெனவே உயிர்ப்பாள். 
                             இனிவரும் எப்பிறப்பினும் எனைப்பிரிந்து வாழாள்.
                              
                             தாமரையாள் அன்புணர்வுக்கு  அவளன்பே  எல்லை.

 போராளி பொழிலனை  கருவில் சுமந்த தாய், வீரத்தாய்,  என்பதில் நமக்கேன் சந்தேகம். வாருங்கள். வரலாற்றில் பதிவுருங்கள்