கேரள முற்போக்கு மாநிலம். அங்கே சிவப்பு சிந்தனைகள்தான் செல்வாக்கு செலுத்துகின்றன எனற கருத்து நாடு முழுவதும் உண்டு. ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் அல்லது இடதுகள் என்றுதான் அங்கே மாறி, மாறி வெற்றிபெறும். அதனால் நிரந்தர முற்போக்கு மாநிலம் என்பது உணமியல்ல.ஆனால் சமீபத்திய சட்டப்பேரவை தேர்தல் அதை மேலும் கூடுதலாக கேள்விக் குள்ளாக்கியுள்ளது. நாயர்கள் சாதியின் சங்கம் தனது வாக்குகள் வி.எஸ்.அச்சுதானந்தத்திற்கு எதிராக போடப்பட்டுள்ளது என்று சீ.பி.எம்.ற்கு எதிராக பேச, உடனே சிபிஎம் காரர்கள் "நாயர் சங்கங்களை" மாநிலமெங்கும் உடைக்க, அதிலிருந்து பலர் வெளியேறி வர,ஒரே களேபாரம். என்.எஸ்.எஸ். என்று சொல்லப்படும் நாயர் சமூக சேவை நிறுவனம்தான் அப்படி களேபாரத்தில் சிக்கியுள்ளது. அவர்களுக்கு என்ன அப்படி செல்வாக்கு? என்று கேட்கவேண்டும். நாற்பத்தி இரண்டு ஆண்டுகளாக இந்த என்.எஸ்.எஸ். அமைப்பு சிபிஎம் என்ற இடது சாரி கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு அதன் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது.
பிறகு என் இந்த முரண்பாடு? பாலகிரிஷா பிள்ளை என்ற ஒரு காங்கிரச்காறரை, " பாம் ஆயில் " வழக்கில் வி.எஸ். அச்சுதானந்தன் உள்ளே தள்ளினார் அல்லவா? உச்சநீதிமன்றம் வரை சென்று அதை சாதித்தார் அல்லவா? அதை யாரை எல்லாம் எதிர்த்து செய்தார் தெரியுமா? முதலில் அந்த வழக்கை தொடரக்கூடாது என்று சிபிஎம் மாநில செயலாளர் பினராய் விஜயன் உட்பட கூறியும், அதை எதிர்த்து முதல்வர் அச்சுதானந்தன் அதை சாதித்தாரே? அது நாயர் சங்க தலைவர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கி விட்டது. ஆனாலும் நாயர்கள் சிபிஎம் ற்கு எதிராக காங்கிரசுக்கு வாக்கு அளிக்கவில்லை என்று இப்போது தெரிகிறது. அவர்கள் பிஜேபி க்கு தங்கள் வாக்குகளை அளித்ஜ்ததால் பிஜேபி ஒரு நாலு இடத்தில் வெற்றிபெறும் என்கிறார்கள். அதனால் சிபிஎம் ற்கு நட்டமாகும் வாகுகள் போட்டியாளர் காங்கிரசுக்கு போய்சேரவில்லை.காங்கிரஸ் கட்சி பணம் வாங்கிக் கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்ததாக ஒரு முதுபெரும் காங்கிரஸ் தலைவர் ராமச்சந்திரன் புகார் எழுப்பினார். இது காங்கிரசுக்கு இருந்த மரியாதையை கெடுத்து விட்டது. ஏன் என்றால் புகார் எழுப்பியவர் சோனியா வரை காசு வாங்கி விட்டதாக கூறிவிட்டார். ஏற்கனவே ரமேஷ் சென்னிதாலாவுக்கும், ஊமன் சாண்டிக்கும் ரொம்ப நல்ல பெயர் பாருங்கள்.
அடுத்து சமீபத்திய இரு பத்தாண்டுகளாக, இடது சாரிகள் வரக்கூடாது என்பதற்காக பிஜேபி நிற்காமல், விஎஹ்பி காரர்கள் நேரடியாக காங்கிரசுக்கு வேலை செய்வார்கள். அதன்மூலம் காங்கிரஸ் வெற்றி பெரும். ஆனால் இந்த முறை, பிஜேபி பல இடங்களில் நின்று இடதுகளுக்கு எதிராக வரும் இந்துத்துவா வாக்குகளையும் காங்கிரசுக்கு வரவிடாமல் செய்துவிட்டனர். இது நாடாளுமன்றத்தில் பல விசயங்களில் ஏற்பட்ட ஒரே நிலைப்பாடா என்று தெரியவில்லை.அதேசமயம் வி.எஸ். நிற்கும் மலம்புழாவில் பிஜேபி தனது வேட்பாளரை திரும்ப பெற்றுவிட்டது. அதேபோல கிறித்துவர் வாக்குகளை நம்பித்தான் காங்கிரஸ் கேரளாவில் தொடர்ந்து வெற்றி பெறும். இந்த முறை ஊமன் சந்தியும, ரமேஷ் சென்னிதாலாவும் தங்களை கலந்து கொள்ளாமல் வேட்பாளர்களை நிறுத்தியதாக கிறித்துவ பாதிரியார்கள் புகார் சொல்லி ஒரு பதினாலு தொகுதிகளில் வாக்குகளை திருப்பி விட்டார்கள்.அதனால் காங்கிரசுக்கு விழும் பாரம்பரிய கிறித்துவ வாக்குகள் விழ வாய்ப்பில்லை.
முஸ்லிம் வாக்குகளை பொறுத்தவரை, வழமையாக மதானி குழு மட்டும் சிபிஎம் ஆதரவாக இருக்கும். பாபுலர் பிரண்டு ஆப் இந்தியா கான்க்கியர்சுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் இந்த முறை ஆருக்கு மேற்பட்ட இடங்களில் அவர்களது எஸ்.டி.பி.ஐ. என்ற புதிய அரசியல் கட்சி நின்று வாக்குகளை பிரித்திவிட்டது. அதனால் காங்கிரசுக்கு நட்டம். தவிர ஜமாதி இஸ்லாம் { ஹிந்த்} என்ற பிரபல பாரம்பரிய சமூக மைப்பு வழமையாக காங்கிரஸ் உறவில் உள்ள "இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு" தான் வாக்களிக்கும். இந்தமுறை குன்ஜாலன்குட்டி ஐஸ்க்ரீம் பார்லர் வழக்கில் சிக்கி அசிங்கப்பட்ட பிறகு, ஜமாதி குழுவின் ஆதரவு சிபிஎம் ற்கு போய்விட்டது. அதுவேறு இடதுகளுக்கு புதிய லாபம். இவை எலாவற்றிலும் வி.எஸ்.அச்சுதானதம் உயர்ந்து நிற்கிறார். அவரை வீழ்த்த நினைத்த " பின்றை விஜயன்" என்ற சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் தோற்று வருகிறார்.
வி.எஸ்.ற்கு பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ஊழல்களை கட்சி செயலாளர் செய்தாலும் வி.எஸ். எதிர்கிறார் என்ற பெயர் இருக்கிறது. பாம் ஆயில் வழக்கில் அகில இந்திய அளவில் சீ.வி.சீ. தலைவராக நியமிக்கப்பட்டவரையே காலி செய்தவர் வி.எஸ். தவிர கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு கிராமத்திலும் வீட்டு மனை இல்லாதவர்களுக்கு வீட்டு மனையும், வீடும் கட்டிகொட்த்த ஆட்சி என்றும், ஆடு, மாடு வாங்கி கொடத்த ஆட்சி என்றும் நற்பெயர் இருக்கிறது. வேறு அவ்ழியே இல்லாமல் சீ.பி.எம். தலைமை, பின்றை சொல் கேளாமல், வி.எஸ். ஐ ஆடஹ்ரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அதனால் இடது சாரிகள் கூட்டணி வெற்றி பெற்றாலும், அது வி.எஸ். இன் வெற்றியே தவிர வேறல்ல. அவர் ஊழலுக்கு எதிரானவர் என்ற கருத்தில் கேரள மக்கள் இருக்கிறார்கள்.
Wednesday, May 11, 2011
Subscribe to:
Posts (Atom)