இப்போது பூனை கடைசியாக பையை விட்டு வெளியே வந்துவிட்டது. நள்ளிரவில் தொடக்கி கலைஞர் டி.வீ. அலுவலகம் சி.பி.ஐ.யால் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்காகத்தான் அந்த மீனவர் போராட்டத்தை மன்னர் குடும்பம் நடத்தியதா? என்று இப்போது கேட்கிறார்கள். கலைஞருக்கு இரண்டு நாள் முன்பே இப்படி ஒரு சீ.பி.ஐ. சோதனை கலிஞர் டி.வீ.க்கு வரப்போவது தெரியும். அதனால்தான் 106 மீனவர்கள் இலங்கையில் பிடிபட்டதை பயன்படுத்தி, ஒரு போராட்ட நாடகத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை இறக்கிவிட்டு, அதன்மூலம் மத்திய அரசை பயமுருத்ஜ்த முயன்றார். ஆனால் அதுகூட காங்கிரஸ் அரசை அச்சப்படுத்தவில்லை. அவர்கள் ஒரு இரபத்தி நாலு மணி நேரம் கழித்து தாங்கள் எண்ணிய சோதனையை சீ.பி.ஐ. மூலம் நடத்திவிட்டனர்.
வழக்கமாக கருணாநிதி தனக்கு பிடிக்காத கூட்டணி கட்சியினரை தொகுதி கொடுத்து விட்டு, பிறகு உள்ளடி வேலை செய்து தோற்கடிப்பார். ஆனால் சோனியாவோ, மக்கள் மத்தியில் கலைஞரை தோற்கடித்தது விட்டு பிறகு கூட்டணி கட்டுகிறார்கள். ஏட்டிக்கு போட்டியாக எல்லாம் நடக்கிறது.
Thursday, February 17, 2011
Subscribe to:
Posts (Atom)