Wednesday, August 1, 2012

டெசோ மாநாடு "தீம் பேப்பர்" அரசியலற்று இருப்பது ஏன்?

டெசோ மாநாடு  "தீம் பேப்பர்"  அரசியலற்று இருப்பது ஏன்?
      இலங்கை அரசை இந்திய ரசின் மூலமாகத்தான் அமெரிக்கா கவனித்தும் வந்தது, கையாண்டும் வந்தது. சமீப மாதங்களில் அதில் ஒரு மாற்றம். அமெரிக்கா நேரடியாக இலங்கை அரசை கையாள ஒரு வாய்ப்பு அதற்கு கிடைத்து விட்டது. அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கையை கையாளும் "தீர்மானம்" வெற்றி பெற்ற பிறகு, இலங்கை அமெரிக்காவிற்கு "நேரடியாகவே" அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கலாமே என்று எண்ணத்தான் செய்யும். அமெரிக்காவும் ஏன் நாம் நேரடியாக ஐலன்கையை கையாலாகக் கூடாது என்று எண்ணத்தான் செய்யும். அப்படி இரண்டு அரசுகளுமே எண்ணி விட்டன. அதற்கு நம் நாட்டிலிருந்து வாஷின்க்டனுக்கு அனுப்பப்பட்ட "நிருபமா ராவ்" ஒரு "கிரியா ஊக்கி" யாக செயல்பட்டதாக தெரிகிறது.  அதாவது இந்த நிருபமா ராவ் இந்தியாவின் வெளிவிவகார துறையின் செயலாளராக செயல்பட்டு வ்நதபோதுதான்,அவர் இலங்கை விசயத்தில் "தேர்ச்சி" பெற்றார். அதை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்சேவிடம்  நலன் காக்கும் பிரதிநிதி ஆனார். இவர் அமெரிக்காவிற்கு இந்தியாவின் "தூதராக" நியமிக்கப்பட்டவுடன், அங்கே சென்று "ஹிலாரி கிளிண்டனின்" நேரடி தொடர்புக்கு சென்றார்.  இவர் அமெரிக்காவிற்கு கிளம்பும்போது, டில்லி இவருக்கு "பிரிவு உபசாரம்" நடத்தவில்லை. மாறாக கொழும்பிற்கு இவரை வரவழைத்து, மஹிந்த ராஜபக்சே ஒரு "பிரிவு உபசார விழா" நடத்தினார். பிறகு இந்த நிருபமா ராவ் யாருக்கு விசவாசமாக இருப்பார்? 


                           ஆகவே நிருபமா ராவ் மஹிந்த பற்றி கூறிய நல்ல கருத்துகளை ஏற்றுக் கொண்ட "ஹிலாரி கிளிண்டன்" நேரடியாக மஹிந்தாவிடமே பேசினார். பொன்சேகாவை விடுதலை செய்யச்சொன்னார். இலங்கையின் சட்டப்படி, நீதிமன்றம் "தண்டித்த" ஒருவரை, அந்த நாட்டின் "அதிபர்" அதாவது "அரசத் தலைவர்" விடுதலை செய்யலாம். அதன்படியே பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார். பொன்சேகா ஒரு அமெரிக்கா குடிமகன். மகிந்தவின் சகோதரர்களான "கோத்தப்பாயேவும், பசில் ராஜபக்சேயும்" அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்கள். ஆகவே அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்வதில் இலங்கை அரசுக்கு பெரியதொரு தடங்கல் கிடையாது.  அதனால் இந்திய அரசை "அவமதிக்கும்" செயல்களை "தாராளமாக" செய்யத் தொடங்கியது. அதன் ஒரு அம்சமே மன்னார் மாவட்டத்தில் ஒப்புக்கொண்ட அனல் மின் நிலையத்தை இந்தியா தொடங்க அனுமதி தராமல் இழுத்து வந்த செயல்.  அதுபோலவே   நூற்றுக்கு மேற்பட்ட இந்திய பொருள்களை தடை செய்ததாக வந்த அறிவிப்பும். அதனால் வெகுண்டெழுந்த இந்தியா ஒருபுறம் 'சிவசங்கர மேனனை" அனுப்பி பேசுவதும், இன்னொருபுறம் கருணாநிதியிடம் கூறி "டெசோ" மாநாடு நடத்த சொல்வதும். இதற்க்கு பெயர் " கேரட்டும், தடியும்" என்ற கொள்கை என்று இந்தியாவின் "ராஜதந்திரம்" கூறுகிறது. 


                   இந்தியைய அரசிற்கு வேறொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் வந்த தீர்மானத்தின், செயல்பாடு, வருகிற நவம்பர் மாதம் கூடும், மனித உரிமை கவுன்சிலில் விவாதத்திற்கு வருகிறது. அந்த கூட்டத்திற்கு இந்திய அரசே தலைமை தாங்க இருக்கிறது. அதனால் அதை வைத்து சிவசங்கர மேனன் ராஜபக்சேவிடம் "பேரம்" பேசியிருக்கிறார். அதையொட்டி இந்திய வணிக அமைச்சர் ஆனந்த சர்மா "நூற்றி எட்டு" இந்திய கம்பெனிகளை அழைத்துக் கொண்டு, இலங்கை சென்று வணிகம் பேச செல்கிறார். அதேபோல ராஜபக்சேயும், "கற்ற பாடங்கள், மற்றும் நல்லிணக்க ஆணையம்" கூறியுள்ள "பரிந்துரைகளை" அமுல்புத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இவ்வாறு இரண்டு நாட்டு அரசுகளும், தங்களுக்குள் சமரசம் செய்துகொள்ள "ஈழத்தமிழர்" விவகாரம் ஒரு கருவியாக பய்டன்படுத்தப் படுகிறது. அதேபோல இந்திய வெளிவிவகார துறையின் உளவு துறையான "ரா" அமைப்பு, கலைஞரின் "டெசோ" மாநாட்டிற்கு, ஒரு "தீம் பபேர்" தயரா செய்து கொடுத்துள்ளது. அந்த தீம் பேப்பரில் எந்த ஒரு தீர்வும் தமிழர் பிரச்சனைக்கு இல்லாதது அதிர்ச்சியை அளிக்கிறது. 

                    வழக்கமாக 1987 இன் , ராஜீவ் காந்தி---ஜெயவர்தனே ஒப்பந்தம் கூறும், வடக்கு--கிழக்கு ஒன்றுபடுதல்; பற்றியும் அந்த தீம் பேப்பரில் இல்லை. அதை ஒட்டி இந்திய அரசு கூறிவரும் "பதின்மூன்றாவது சட்ட திருத்தம்" பற்றியும் அந்த தீம் பேப்பரில் இல்லை. "அதிகார பகிர்வு" என்று நமது  வெளிவிவகார துறை கூறிவரும் சொற்களும் அந்த தீம் பேப்பரில் இல்லை. அய்யா, "தமிழம்" தான் இருக்காது. அதற்காக எந்த ஒரு அரசியல் தீர்வுக்கான முயர்ச்சியுமா இருக்காது? அந்த அளவுக்கு "அரசியலற்ற" ஒரு அறிக்கையாக அது இருக்கிறது. அதாவது கருணாநிதிக்கு இதுபோதும  என்று அந்த "ரா" அதிகாரிகள் எண்ணிவிட்டார்கள் போலும். அல்லது எந்த விதத்திலும் இந்த தீம் பேப்பர் இரு நாட்டு  அரசுகளுக்கும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதோ தெரியவில்லை. இப்படியாக ஈழத் தமிழர் வாழ்நிலை என்பது மீண்டும் ஒருமுறை வருகிற பன்னிரெண்டாம் தினம் "கேலிக்குரியதாக" ஆக்கப்பட இருக்கிறது. 

                       இங்கே காங்கிரசின் கூட்டணி மூலம் டெசோ நடத்துவதும், அங்கே உள்ள ராஜபக்சேவின் கூட்டணியான புத்த பிக்குகளின் கட்சி மூலம் அந்த டெசோ விற்கு தடை கோருவதும், இரண்டு அரசுகளுக்குள் உள்ள "ப்னிப்போர்". ஆகவே தமிழர்கள் இந்த இந்திய தந்திரத்தை புரிந்து கொள்ளப் போகிறார்களா? இல்லையா"