Wednesday, November 23, 2011

வால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.

வால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.
இன்று மாலை மத்திய அமைச்சகத்தில் கொண்டுவர இருக்கும் "திட்டம்" இந்தியாவில் உள்ள சாதாரண சில்லறை வணிகர்களை ஒழிப்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி இந்திய சந்தையை அமெரிக்காவின் ஏகபோக பன்னாட்டு நிறுவனமான "வால்மார்ட்" கைகளில் ஒப்படிக்க உள்ள தந்திரம். அமைச்சகம் முன்னால் வைக்கப்பட்டுள்ள நூற்று பத்து பக்கங்களில் "ஆயிரம் கொடிகளை" மூலதனமாக போடும் நிறுவனமே இந்தியாவின் பெரு நகரங்களில் "பெரும் பல்முனை அங்காடிகளை" நிறுவ அனுமதி அளிக்கப்பட்டு என்று உள்ளது. அதாவது அமெரிக்காவின் கார்பொரேட் ஆக இருக்கும் "வால்மார்ட்" நிறுவனத்தை உள்ளே நுழைய விடுவது மட்டுமல்ல, அதற்கு போட்டியாக எந்த ஒர் நிறுவனமும் வந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக உளது என தெரிகிறது.


பத்துலட்சம் மக்கள் தொகை உள்ள அனைத்து நகரங்களிலும் இனி "வால்மார்ட்" மாத்திரமே சந்தையை "கபளீகரம்" செய்யும். வால்மார்ட் நிறுவனம் தனது "தொழிலாளர்களை" நடத்துவது, மற்றும், நுகர்வோரின் உரிமைகளுக்கு மதிப்பு அழிப்பது ஆகிய விசயங்களில், "கடுமையான கெட்டபெயரை" சம்பாதித்து உள்ளது. இப்போது இருந்துவரும் "சில்லறை வணிகர்கள்- நுகர்வோர்" என்ற உறவு ஒரு ஆரோக்கியமான உறவாகும். நுகர்வோர் கைகளில் காசு இருக்கும் போது அதற்கு தகுந்தாற்போல பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோருக்கு தேவைப்படும்போது, அத்தகைய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோரின் கைகளில் இருக்கும் சிறிய அளவு காசுக்கு தகுந்தாற்போல பொருள்களை "பொட்டலம்" கட்டி வாங்கிக் கொள்ளலாம். இது இந்தியாவின் கிராமங்கள் சார்ந்த, விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில், நுகர்வோரின் தேவைகளையும், வாங்கும் சக்தியையும் பொறுத்து நடத்தப்படும் "பரிவர்த்தனை". ஆனால் ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம்தான் அத்தகைய பொருள்களை விற்கும் என்ற நிலை வந்துவிட்டால், நுகர்வோருக்கு ஒரு "உத்திரவாதமான" ஆரோக்கியமான உறவு வணிகர்களுடன் இல்லாமல் போய்விடும்.

இயந்திரமயமான ஒரு உறவில் என்னதான் அழகான பைகளில் சாமான்களை வாங்கினாலும், அவை நுகர்வோரின் திருப்தியை நிரப்புமா? ஏழை, எளிய நுகர்வோர்கள் அதிகம் உள்ள நமது நாட்டில் ஆரோக்கியமான உறவுடன் கூடிய வணிகம் மட்டும்தானே நுகர்வோரின் தேவையை சரியாக நிரப்ப முடியும்? இது "மனித உறவு" சம்பந்தப்பட்டது. நிலப்பிரபுத்துவ நில உறவுகளை இன்னமும் வைத்துக் கொண்டு, முழு முதலாளித்துவ பழக்கங்களுக்கு எப்படி செல்ல முடியும்? இந்த மத்திய அரசின் முயற்சி, கேள்விப்படும்போது "படாடோபமாக" தெரியலாம். ஆனால் நடைமுறையில் இந்திய நுகர்வோரை "வஞ்சிக்கின்ற" ஒரு செயலே.

சில்லறை வர்த்தகத்தை அழிக்கவரும் அமைச்சரவை கூட்டம்.

நாளை மாலை இந்தியாவில் உலா வரும் சில்லறை வர்த்தகங்களுக்கு சாவுமணி அடிப்பதற்காக மத்திய அமைச்சரவை கூடப் போகிறது. அதாவது சில்லறை வர்த்தகத்தில் "அந்நிய நேரடி மூலதனத்தை" உள்ளே நுழைப்பதற்காக ஒரு "நூற்று பத்து" பக்கம் கொண்ட அறிககையை தயார் செய்து "நிதி அமைச்சகம்" மத்திய அமைச்சகம் கையில் கொடுத்துள்ளது. அந்த பக்கங்களை படித்துக்கொண்டு வந்து மத்திய அமைச்சரவை நாளை மாலை கூடி, அதுபற்றி முடிவெடுக்க வேண்டும். அதில் எந்த துறைகளில் எல்லாம் அந்நிய நேரடி மூலதனம் வரலாம் என்று எழுதப்பட்டுள்ளது. விவசாயம், மற்றும் அனைத்து பல் [பொருள்களிலும் அந்நிய மூலதனம் "ஐம்பத்தொரு" விழுக்காடு வரை வரலாம் எண்மரு அதில் குறிப்பு கொடுக்கப் பட்டு=ள்ளது. இது அந்த துறைகளில் இருக்கும் சில்லறை வணிகத்தை ஓரங்கட்டிவிடும்.

ஏதோ அந்நிய மூலதனத்திற்கு தாங்கள் "கட்டுப்பாடு" வித்திப்பது போல அந்த அறிக்கையில் "படம்" காட்டியுள்ளார்கள். அதாவது அந்நிய நேரடி மூலதனம் "ஐம்பத்தொரு" விழுக்காடு வரிதான் வரவேண்டும். "பத்து லட்சம்" மக்கள் தொகை இருக்கும் நகரங்களில்தான் வரவேண்டும். அதாவது அந்நிய நேரடி மூலதனத்தில் இயங்கும் "பல்பொருள் அங்காடிகள்" அதாவது சூப்பர் மார்கட்டுகள் சிறிய நகரங்களில் வரக்கூடாது என்றும், பத்து லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே வரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள்ளது. இது ஒரு மாபெரும் "ஏமாற்று வேலை". ஏன் என்றால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளும், அதாவது பெரிய, மற்றும் நடுத்தர நகரங்களும் இந்த "பட்டியலில்" வந்துவிடும். அங்கெல்லாம் இருக்கும் சில்லறை வணிகர்கள் "கடைகளை மூடிவிட்டு" ஓட வேண்டி வரும்.

ஏதோ நிபந்தனைகள் போட்டு அந்நிய நேரடி மூலதனத்தை கட்டுப்படுத்துவது போல " ஏமாற்று வேலை" செய்வதற்காக இந்த கொள்கை முடிவை எடுக்கப் போகிறார்கள். இது இந்தியாவையே "கூறு போட்டு" பன்னாட்டு மூலதன வணிகர்களுக்கு விற்பதற்காக உள்ள ஏற்பாடு. "வால்மார்ட்" போன்ற உள்ள ஏகபோக, பன்னாட்டு மூலதன முதலைகளிடம் இந்திய உள்நாட்டு சந்தையை ஏலம் விடுகின்ற ஒரு செயல்திட்டம். இதை நிறைவேற்ற விடாமல் இங்குள்ள வணிகர்களும், மக்களும், நாடாளுமன்றவாதிகளை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். .

கார்பரேட் அதிகாரம், அரசியல் அதிகாரத்தை விட உயர்ந்தது.?

கனிமொழி பிணைகாக, திமுக தலைவர் கலைஞர் டில்லி சென்று மன்மோகனையும், சோனியாவையும் சந்தித்து நெஞ்சுருக பேசிவிட்டு வந்தார். ஆனாலும் பாட்டியாலா நீதிமன்றம் என்ற விசாரணை நீதிமன்றத்திலும், டில்லியின் உயர நீதிமன்றத்திலும் கனிமொழிகான பிணை மறுக்கப்பட்டது. இது அரசியல் அதிகாரத்தின் தோல்வி அல்லது அரசியல் அதிகாரம் தன்னால் பிரிதொரு அதிகாரத்தை எதிர்த்து செயல்பட முடியாத விளைவு. சீ.பி.அய். வழக்கறிஞர் கனிமொழிக்கு பிணை கொடுக்க மறுப்பு கூறவில்லை எனு அறிவித்த பின்னாலும், நீதிமன்றங்கள் மசியவில்லை. உச்சகட்ட அதிகாரம் அரசியல் அதிகாரம்தான் என்று எண்ணியவர்கள் எல்லாம் இந்த நிகழ்வை எப்படி விவரிப்பது என்று திணறிப் போனார்கள். ஏதோ ஒரு அதிகார சக்தி இடை மறிக்கிறது என்று மட்டுமே புலம்பினார்கள்.


ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற கார்பொரேட் காரர்கள் தங்கள் கணக்கு சரிதான் என்று நிரூபிக்கும் முகத்தோடு இன்று "ஐந்து குற்றம் சாட்டப்பட்ட கார்பொரேட் அதிகாரிகளுக்கும்" பிணை கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பிணை கொடுக்காத உயயர்நீதிமன்றத்தை கடிந்து கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படையே "பிணை கொடுக்க சொல்கிறது" என்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை கண்டித்துள்ளது. ஏதோ உச்சநீதிமரத்தின் நீதியரசர்கள் பலரும், சனி, ஞாயிறு கிழமைகளில் "சிறப்பு விமானங்கள்" மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கும் "உல்லாசபுரிகளுக்கும்" அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே இந்த பிணை கிடைத்ததா? அப்படி ஒரேயடியாக சொல்லமுடியாது.

ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முடியும்.கார்பொரேட்கள் "பலம் வாய்ந்தவை". அதனால் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையே பிணை கொடுப்பதுதான் என்ற வார்த்தை முத்துக்கால் சாதாரண மனிதனுக்கு சார்பாக வந்து விழுந்துள்ளன. எப்படியோ. கார்பொரேட்கள், அரசியல்வாதிகளை விட, பலம் வாய்ந்தப்வர்கள் என்பது இதில் நிரூபணம் ஆகிறது.

நீதிபதி ஷைனி ஒரு கொடுங்கோலனா?

டில்லி பாட்டியாலா நீதிமன்றம். கனிமொழி உட்பட விசாரிக்கப்படும் சீ.பி.அய். நீதிமன்றம். தொடர்ந்து கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் பிணை மறுக்கப்படும் இடம். இப்போது அந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமரம் அழைத்து வராமலேயே திஹார் சிறை சென்று விசாரிக்கப் போகிறேன் என்று அந்த ஷைனி அறிவிக்கிறார். இது எண்ண புது கதை?

கனிமொழி மீது போடப்பட்ட வழக்குகளில், சில பொருந்தாது என்று சீ.பி.அய். வழக்கறிஞரே கூறிவிட்டார். அதாவது 120 ௦ [பி] என்ற ராஜா துரோக பிரிவுடன் சேர்த்து படிக்கப்படும் 409 என்ற பிரிவான மோசடி வழக்கு கனிமொழிக்கு பொருந்தாது என்று சீ.பி.அய்.. வழக்கறிஞர் பாட்டியாலா நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற பிணை விசாரணையிலும் கூறிவிட்டார். மீதி பிரிவுகளில் உள்ள வழக்குகள் கனிமொழியை குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் உள்ளே வைக்கும் தண்டனையை கொடுக்கும் வழக்குகள். ஆனால் அவரோ, அந்த ஆறு மாதத்தை இப்போதே விசாரணை காலமாக கழித்து விட்டார். இதை கூட கணக்கிடாமல் அவரையும் சேர்த்து திஹார் சியரிக்குள்ளே விசாரிப்பேன் என்று கூறும் நீதிபதி ஒன்று மனநோய் கொண்டவார்கவோ, அல்லது கொடிய மனது கொண்டவராகவோ இருக்கவேண்டும். எப்படியானாலும் அவர் சட்டப்படி நடக்க வில்லை எனபது மட்டும் திண்ணாம்.

அப்படியானால் அந்த நீதிபதிக்கு பின்னால் இருப்பவர் யார்? அந்த சயனி என்ற நீதிபதிக்கு கனிமொழி மீதோ, தாத்தா கலைஞர் மீதோ என்மத ஒரு கோபமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வரத்து நண்பர்கள் யாரோ, அல்ல்லது அவருக்கு பெருத்த அளவில் பின்புலமாக இருப்பவர் யாரோ கனிமொழி வெளியே வந்து விடக் கூடாது என்று சதி செய்ய எவ்ண்டும்? யார்? யார்? யார்? அது யார்? என்று நாம் கேட்டால் ராஜாத்தி அம்மா போட்டு உடைக்கிறார். அவரது குறி முழுவதும் கே.டி. சகொக்களை சுட்டுகிறது.