சென்னை பலகலைக் கழகத்தில் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள்
இன்று மதியம் மூன்று முப்பதுக்கு சென்னை பல்கலிக் கழக, நூற்றாண்டு கட்டிடத்தில் உள்ள, தனத்தை பெரியார் அரங்கத்தில், மொழிப் போர் ஈகிகள் நினைவாக, " மொழி உரிமை--மொழி அடையாளம்--தொடர்பியல்" என்ற கருத்தரங்கு நடைபெற்றது. பலகலைக் கழகத்தின் இரண்டு துறைகளான "இதழியல்--தொடர்பியல் துறையும்" , ' அரசியல்--பொது நிர்வாகம துறையும்," சென்னை பி.யு.சி.எல். உடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர். சென்னை பலகலைக் கழகத்தின் புதிய துணை வேந்தர் இரா.தாண்டவன் தலைமை தாங்கினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக் கழக மேனாள் துணை வேந்தர்கள் க.ப.அறவாணன், வேதகிரி சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் உரையாற்றினர். வரவேற்புரை வழங்கிய "இதழியல்-தொடர்பியல் துறை தலைவர்" பேரா.ரவீந்திரன், மொழி அடையாளம் இன்றியமையாதது என்றார். உலக நாடுகளில் மொழி உரிமை என்பது எவ்வாறு போராடப்பட்டது என்றார். தந்தை பெரியார் காலத்தில் இருந்து இந்தி எதிர்ப்புபோராட்டம் வளர்ந்ததை சுட்டி காட்டினார். குடியரசு இதழ் வெளிக் கொண்டுவந்த கட்டுரைகளை ஆதாரம் காட்டினார். அவரது ஏற்பாட்டில், அருகே திரையில்," இந்தி எதிர்ப்பு போரில் தங்கள் உயிரை துறந்த ஈகிகளது படங்கள் ஓடின". அடுத்து பேசிய நெல்லை பலகளிகழக மேனாள் துணை வேந்தர் க.ப. அறவாணன் தனது அண்ணாமலை பலகலைக் கழக மணாவ்ர் பருவ, இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி கூறினார். இன்னமும் தமிழுக்கு ஆட்சி மொழி மரியாதை கிடைக்கவில்லை என வருந்தினார் 180 பேர் தங்கள் உயிரை தமிழுக்காக அழித்துக் கொண்டனர் என்றார்.பல நாடுகளை சுட்டிக் காட்டி, அங்கெல்லாம் இருக்கும் மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழியாக பங்கெடுப்பதை எடுத்து சொன்னார். கனடாவில் இருக்கும் பன்னிரண்டு மாநிலங்களில் ஒன்றில் மட்டுமே புழங்கும், பிரான்சு மொழியையும், ஆங்கில மொழியையும் ஆட்சி மொழி ஆக்கியுள்ளதை சுட்டிக் காட்டினார். மயிலாப்பூர் கடலுக்கு வங்காள விரிகுடா, சேரன் கடலுக்கு அரபிக் கடல், தமிழ் மகா சமுத்திரத்திற்கு இந்து மகா சமுத்திரம், தமிழ் கோடிக்கு, தனுஷ்கோடி, தமிழ்மேச்வரத்திர்க்கு, ராமேஸ்வரம் என்றும் எப்படி பெயர் வைக்கலாம் என்று வினவினார்.
அடுத்து சென்னை பலகலைக் கழக தமிழ் துறை பொறுப்பு தலைவர் அரங்க ராமலிங்கம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த வரலாற்றை சுட்டினார். இன்னமும் இந்தி ஆதிக்கம் செலுத்துவதையும், நடுவணரசு இந்தியை திணிப்பதையும் எடுத்து கூறினார். சென்ற முறை ஆட்சிக்கு வந்தபோது செல்வி ஜெயலலிதா, தஞ்சை உலகத் தமிழர் மாநாட்டில், "நான்காவது தமிழாக அறிவியல் தமிழ் இருக்கும்" என குறிப்பிட்டதை கூறி, கணினி தமிழை வளர்க்க முதல்வரிடம் துணை வேந்தர் கூறவேண்டும் என்றார். மேனாள் நெல்லை பல்கலைக் கழக துணை வேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம் பேசும்போது, மொழி உரிமையை விட்டு விடக்கூடாது என்றும்,இந்திய ஒன்றியம் எப்படி ஒரு மொழியை மட்டுமே ஆட்சி மொழியென அறிவிக்கலாம் என்றும் கேட்டார். அதை மத்திய அரசு என்று கூப்பிடக்கூடாது என்றார். அனைத்து தென்னிந்திய மொழிகளும், ட்ஃஈறாஆஈடா மொழிகள் என்றும் அவை ஒன்று பட்டு, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து போராட வேண்டும் என்றார். அய்க்கிய மாநிலங்களின் இந்திய அரசு என்று அழைக்க வேண்டும் என்றார். இந்தியை எதிர்த்து போராட அன்றைய தலைவர்கள் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக பயன்படுத்தினர் என்றார். அதனால்தான் ஆங்கிலம் தமிழுடன் பயிற்று மொழியாக இருக்கிறது என்றார். அண்ணாவின் பங்கு மொழிப்போரில் இருந்தது பற்றி கூறினார்.
சென்னை பல்கலை கழக மேனாள் மலையாளம் துறை தலைவர் ராசேந்திர பாபு, மலையாளமும் இந்தியால் ஒடுக்க ப்படுகிறது என்றார்.ஆனால் அங்கெ போராட்டம் இல்லை; தமிழ்நாட்டில்தான் மொழிக்காக உரிமை போராட்டம் நடந்துள்ளது என்றார். தனக்கு தெரிந்தாலும் தமிழுக்ககதன்கள் உயிரை கொடுத்தவர்கள் பற்றி, கேரளா உட்பட தென் இந்தியா முழுவதும் மக்களுக்கு தெரியாது என்றும், அதை எடுத்து செல்லவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தங்கள் மலையாளம் விரைவில் செம்மொழி மரியாதையை வாங்க இருக்கிறது என்றார். அடுத்து ஏற்பாட்டாளர்களில் ஒருவரான "அரசியல்-பொது நிர்வாகம் துறை தலைவர்" ராமு மணிவண்ணன் உரையாற்றினார். முஜிபுர் ரஹ்மான் முதலில் இந்தியாவிற்காக, பிறகு பகிச்தாநிர்காக பிறகு தனது மொழியான வந்காலத்திர்கா போராடினார் என்றார். அரசியல் உரிமையை விட்டு கொடுக்க கூடாது என்றும், மொழி உரிமை ஒரு அரசியல் உரிமை என்றும் கூறினார். மொழி ஒரு இனத்தின் அடிப்படை அடையாளம் என்பதை விளக்கினார். பிறகு பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகன் பூங்குன்றன் பேசினார். அவர் அரசியல்வாதிகள் தவிர, தமிழ் அறிஞர்களின் பங்கு இந்தி எதிர்ப்பு போரில் எப்படி இருந்தது என்பதை விளக்கினார்.
அடுத்து கருத்தரங்கிற்கு தலைமை ஏற்ற சென்னை பல்கலைக் கழக புதிய துணை வேந்தர் தாண்டவன் பேசினார். அவரது ஒன்பதாம் வகுப்பு காலத்தில் இந்தி எதிர்ப்பு போரில் தனது அண்ணன் ரெங்கசாமி கலந்து கொண்டதையும், தான் விவரம் அறியா பருவத்திலும், போகலூர் ஒற்றில் பள்ளியில் இந்தி எதிர்ப்பு போரில் கலந்து கொண்டதையும் கூறினார். சரளமாக கடந்த கால நடைமுறையில் ஆசான்களாக இருந்த இரண்டு மேனாள் துணை வேந்தர்களை பாராட்டினார். எல்லா மொழிகளுக்கும் சம உரிமைவேண்டும் என்றார் பச்சையப்பன் கல்லூரி வாழ்க்கை, க.ப.அற்வானனுடன் இருந்த கடந்த கால மாணவன்-ஆசிரியர் உறவு என்று விளக்கினார். இன்றைய தமிழக முதல்வர் இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த சின்னசாமிக்கு சிலை வைக்க இரண்டு மாதம் முன்னால் அறிவித்ததை பாராட்டி, முதல்வர் கொண்டுள்ள தமிழ் பற்று பற்றி, வேதகிரி அவருக்கு நெருக்கமான தலைவரிடம் போய் கூறட்டும் என்று கருனநிதி பற்றி கூறினார்.
பின்னர் பேசிய பேரா.திருமாவளவன் தான் ஒரு ஆங்கில ஆசிரியராக இருந்தும், தமிழுக்காக அண்ணாமலை பலகலை க் கழகத்தில், 1965 இல், அறவாணன் வகுப்பு தொழனாக் இருந்தடஹியும் அங்கெ இந்தி எதிர்ப்பு போரில் செயல்பட்டதையும் கூறினார். சுய ஆய்வு ஒவ்வொருவருக்கும் தேவை என்றும், தமிழில் முழு பெயரையும் வைத்ஹ்டுக் கொள்ளுங்கள் என்றும், ஒப்பம் போடும்போது தமிழில் போடுங்கள் என்றும் கூறினார். வங்காளம் இந்த நாட்டில் தொடர்பு மொழியாக வர இருந்தது என்றும் வந்திருந்தாள் நாம் இந்தியை எதிர்த்து அல்ல வங்காளத்தை எதிர்த்து போராடி இருப்போம் என்றார். பேரா.வ.ஐ.சுபிரமணியன் எவ்வாறு தமிழுக்கு நின்றார் என்று கூறினார். இடையில் துறை தலைவர் ரஈந்திரன் பேரா. வ.ஐ. சுப்பிரமணியன் பற்றி அவர் எப்படி மனிதவள மேம்பாட்டு அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம் , திராவிடத்தை ஜன கண மன பாட்டிலிருந்து நீக்கி விட்டீர்கள் என்றால் , தாங்கள் கூறுவது போல " திராவிட பல்கலை க் கழகம்" என்பதிலிருந்து நானுன் திராவிடத்தை நீக்குகிறேன் என்று கூறியதை எடுத்து சொன்னார்.
கடைசியாக பேசிய டி.எஸ்.எஸ்..மணி, பி.யூசி.எல். எப்படி இந்த கருத்தரங்கை பல்கலை க் கழக இரு துறைகளுடன் இணைந்து செய்தது என்று விளக்கினார். எவ்வாறு கணினி இந்தியை வளர்க்க பணத்தை கொட்டும் நடவனரசு, தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் ஒடுக்குகிறது என்றும், தேவை ஒரு "அனைத்து மொழிகளின் ஒன்றுபட்ட போராட்டம், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து" என்று முடித்தார்