இந்திரா நகரும், சத்தியாவாநிமுத்து நகரும் சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகள். அங்கே ஆயிரக்கனக்கில் ஏழை மக்களும், தலித் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த இடம் பிரபல மன்றோ சிலை அருகே உள்ளது. இந்திய ராணுவம் அந்த வட்டாரத்தில் தனது அலுவலகங்களை வைத்திருக்கிறது. அதன் அருகே ராணுவத்தில் வேலை செய்பவர்களது குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அதை " குடிமக்கள் வாழும் இடம்" என்று ராணுவத்தினர் அழைக்கிறார்கள். அந்த இடத்தில் இன்று மதியம் அந்த சம்பவம் சென்னையையே குலுக்கியது. 13 வயது பய்யன் ஒருவன் துப்பாகியால் சுடப்பட்டான் என்பதுதான் அந்த செய்தி. அந்த பய்யன் "மாநகராட்சியில் அடிமட்ட பணியாளரான ஒரு பெண்ணின்" மகன். "சுத்தப்படுத்தும் பணிப்பெண்ணின் மகனை" சுத்தமாக படுகொலை செய்த ராணுவம் என்றுதான் செய்தியை கேள்விப்பட்டோம்.
அந்த பகுதிக்கு விரைந்த போது, ஊடகவியலாளர்களின் கூட்டம் தவிர அங்கே நின்ற குடிசை வாழ் மக்கள் நமது காவல்துறையால் அப்போதுதான் "தடியடி" மூலம் கலைக்கப்பட்டுல்லார்கள் என்று தெரிய வந்தது. "பாதாம் மரத்தில்" காய் பறிக்க எறிய பையனை ராணுவத்தினர் சுட்டு விட்டனர் என்று கேள்விப் பட்டோம். அங்கே வந்த மாநகர ஆணையர் ஊடகங்களை சந்திக்காமலேயே பறந்து விட்டாராம். துணை ஆணையர் தாமரைகாண்ணன் சந்தித்தாராம். அடிபட்டதுதான் நடந்தது என்றாராம். சுட்டுக் கொல்லப்பட்டதை மறைத்தாராம். அடிபட்ட பையனை அவனது உறவினரே மருத்துவமனை எடுத்து சென்றனராம். ராணுவம் அதற்கு கூட உதவவில்லை. அதற்கு பின், ஒரு "ராணுவ அதிகாரி" அங்கே வந்தார். சுவற்றுக்கு வெளியே, சுதந்திரம் இல்லாத ஊடகவியலாளர்கள் காத்திருக்க, அந்த அதிகாரி சுவற்றுக்கு உள்ளே இருந்தே பேசினார். ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதித்து, அவர்களிடம் உரையாட அந்த திகாரிக்கு மனம் இல்லை. கம்பிகள் வழியே காமெராக்களை ஊடகவியலாளர்கள் நுழைத்துக் கொண்டு, ராணுவ திகையின் நேர்காணலை பதிவு செய்தனர்.
" இது ராணுவ குடிமக்கள் வாழும் பகுதி. இங்கே ராணுவத்தினர் யாரும் துப்பாக்கி இல்லாமல்தான் பாதுகாப்பு பணி செய்து வருகிறோம்" என்றார். " அங்கே பொய் வாசலில் பாருங்கள். எங்கள் காவலர்கள் கையில் தடி தான் இருக்கும். நாங்கள் இங்கே துப்பாக்கி இல்லாமல்தான் காவல் காக்கிறோம்" என்றார் அந்த பிரிகேடியரான சஷி நாயர். " இங்கே சில சிறுவர்கள் போயிருக்கிறார்கள். அவர்கள் சுவர் எரிக் குத்தித்து, இந்த வாதாம் மரத்திலிருந்து எதையோ பறிக்கவோ, அல்லது உள்ளே வந்து விளையாடவோ முயற்சித்திருக்கலாம்" என்றார். அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டிருக்கிறது" மற்ற பையன்கள் ஓடிப் போய் விட்டார்கள். ஒரு பையன மாத்திரம் உள்ளேயே மாட்டிக் கொண்டான். அவன் சுருண்டு விழுந்துவிட்டான். அவனை அவனது உறவினர்கள் மருத்துவம்னனைக்கு எடுத்து சென்று விட்டனர்." இவாறு அந்த ராணுவ அதிகாரி கூறினார்.
"அதற்கு பிறகு மருத்துவமனையிலிருந்து அந்த சிறுவனுக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது என்று காவலர்கள் கூறினார்கள்" "யார் சுட்டார்கள் என்று தெரியவில்லை. இங்குள்ள காவல்துரையாகவும் இருக்கலாம். யார் குற்றவாளியானாலும், நாங்கள் விடமாட்டோம். ஏன் மகன் அடிபாட்டதுபோலத்தான் நான் உணர்கிறேன்" என்று ஒரு அரசியல்வாதியைப் போல அந்த ராணுவ பிரிகேடியர் சஷி நாயர் கூறினார். இந்த இந்திய ராணுவம் "தமிழர்களையும், தமிழ்நாட்டு மக்களையும், என்ன ணைத்துக் கொண்டு இருக்கிறது? இங்கொரு காஷ்மீரை உருவாக்கவோ, அல்லது வன்னி பகுதியை உருவாக்கவோ, அல்லது வட கிழக்கு மாநோலத்தைப்போல கையாளவோ முயற்சிக்கிறதா? என்ற கேள்விதான் எழுகிறது.
Sunday, July 3, 2011
Subscribe to:
Posts (Atom)