Thursday, October 14, 2010

தண்ணீர் உரிமை மனித உரிமை என்று ஐ.நா.சொல்கிறதே?

நம்ம ஊர்காரங்களுக்கு காது கேட்கலையோ என்னவோ. இல்ல. நம்ம ஊர் பற்றி இந்த ஐ.நா.காரங்களுக்கு இன்னமும் தெரியல்லையோ என்னவோ. திடீர்னு, தண்ணீர் உரிமைய மந்த உரிமையா அறிவ்ச்சிருக்காங்க. மனித உரிமைல இன்னும் எதை, எதை சேர்க்க போறாங்களோ தெரியல்ல. நம்ம ஊர்ல அதாவது தமிழ்நாட்டுல, இப்போ வாட்டர் பாட்டில் வாங்காதவங்க யாரு இருக்காங்க? நகரத்தில உள்ளவங்க நல்ல தண்ணீ கிடைகல்லேன்னு வாங்கறாங்க அப்படின்னு வச்சுகிட்டாலும், கிராமத்துலேர்ந்து நகரம் வர்றவங்களும், ஒரு தண்ணி போத்தல கைல எடுத்துக்கிட்டு வாராகளே? காசு குடுத்து தண்ணி குடிக்கிறோம் பாத்தியளா அப்படின்னு காட்டுதுக்காகவா? இது ஒரு பேஷனா போயிருச்சா? இன்னிக்கி தண்ணீர் உரிமை பற்றி உலகமெங்கும் ஊடகங்களில் கொண்டுவரும் நாள் என்று சொன்னாங்க. அதனால நாமும் கொஞ்சம் பார்க்கலாம்.
இந்த ஆண்டு ஜூலை-28 ஆம் நாள் புதன்கிழமையன்று, ஐ.நா. தண்ணீர் உரிமையை ஒரு மனித உரிமை என்று பிரகடனப்படுத்தியது. ஏற்கனவே மனித உரிமைகளுக்கான ஒரு பிரபஞ்சம் தழுவிய பிரகடனத்தை, இதே ஐ.நா. பொது சபை 1948 ஆம் ஆண்டில், 58 உறுப்பு நாடுகளின் ஒப்புதலோடு நிறைவேற்றியது. அதே ஐ.நா.பொதுசபை, இப்போது அறுபத்திரண்டு ஆண்டுகள் கழித்து, தண்ணீர் உரிமை, மனித உரிமையே என்ற தீர்மானத்தை 192 நாடுகள் இருந்த சபையின் ஒப்புதலோடு நிறைவேற்றியிருக்கிறது. அது தண்ணீரையும், கழிவு அகற்றளையும் ஒரு அடிப்படை மனித உரிமையாக அங்கீகரித்துள்ளது. இந்த தீர்மானம் சிக்கலானது என்று நிரூபிக்கும் அளவில், இதற்கு ஆதரவாக 122 நாடுகளும், வாக்களிகாதவர்களாக 41 நாடுகளும் இருந்தன. ஒருவரும் இதை எதிர்த்து வாகளிக்கவில்லை. அதேநேரம் இந்த தீர்மானம் ஒரு ஏழை நாடுகள், பணக்கார நாடுகள் முரண்பாடு என்பதாக பார்க்கப்பட்டது. அதாவது ஒரு வடக்கு---தெற்கு முரண்பாடாக கருதப்பட்டது. அமெரிக்கா எதிர்பார்த்தபடியே ஆதரவு வாக்கை அளிக்கவில்லை. மாறாக வாக்களிக்காமல் இருந்துவிட்டது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆச்திரயா, கனடா, கிரீஸ், ஸ்வீடன், ஜப்பான், இஸ்ரேல், தென்கொரியா, லக்சம்பர்க், நெதர்லாந்து, டென்மார்க், அயர்லாந்து, ஆகியவை பணக்கார, தொழில்வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுடன் சேர்ந்து வாகளிகாமல் இருந்துவிட்டன. ஆனால் அவர்களுடன் வளரும் நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில், போட்ஸ்வானா, எதியோபியா, கென்யா, லெசோதோ, சாம்பியா, கயானா, ட்ரினிடா, தொபகா சேர்ந்துகொண்டன. இந்த தீர்மானத்தை கொண்டுவந்த பொலிவியா, மனித உரிமைகள் முழுமையாக உருவான ஒன்றாக இருப்பதில்லைஎனவும், அவை யதார்த்தத்தையும்,எதிர்பார்ப்பையும் வைத்தே வளர்க்கப்படுகின்றன என்றும் கூறினார். அனைத்துநாட்டு பொருளாதார, சமூக,பண்பாட்டு மாநாட்டில் முடிவு செய்தது போல, கல்விக்கான உரிமையும், வேலைக்கான உரிமையும் எப்படி மனித உரிமையோ அதுபோல, தண்ணீருக்கும், கழிவு அகற்றலுக்கும் உள்ள உரிமையும் அடிப்படை மனித உரிமைதான் , என்று அவர் விளக்கம் அளித்தார்.

அமெரிக்காவின் பிரதிநிதியோ, இந்த தண்ணீருக்கும், கழிவு அகற்றலுக்கும் ஆன தீர்மானத்தில் உலக நாடுகள் மத்தியில் ஒரு கலந்துரையாடலின் மூலம் ஒத்த கருத்தை எட்டி அதன்பிறகு, இப்போது ஐ.நா.வின் மனித உரிமை கழகத்தில் ஜெனிவாவில் நிலுவையில் உள்ள தீர்மானத்தை முழுமையாக ஆக்குவோம் என்று கூறி இப்போதைக்கு தப்பித்துக்கொண்டார். எப்படியோ தண்ணீரை வணிக பொருளாக, குறிப்பாக மக்களுக்கு தேவைப்படும் குடி தண்ணீரை வணிகப்போருளாக ஆகும் ஏகாதிபத்திய நோக்கத்தை ஆதரித்து நிலை எடுப்பவர்களும் அங்கு அடையாளம் காணப்பாட்டனர். அனைத்து நாட்டு சட்டத்தில் தண்ணீரையும், கழிவு அகற்றலையும் ஒரு மனித உரிமையாக பார்ப்பதற்கான அம்சமே இல்லை என்பது அமெரிக்க பிரதிநிதியின் வாதமாக இருந்தது. ஆனாலும் சுத்தமான குடிநீரும், கழிவு அகற்றலும் அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

வாழ்க்கை வாழ்வதற்கான உரிமை என்ற அடிப்படையில் தண்ணீருக்கான மற்றும் கழிவு அகற்றலுக்கான உரிமை வருகிறது என்றும், ஆகவே அதை மனித உரிமை என்று கூறுவது இந்த பொருளில்தான் என்றும் அதனால் அதை உடனே ஏற்றுக்கொள்ளும் வகையில் அனைத்துநாட்டு சட்டம் எழுதப்பட வேண்டும் என்றும் வாதாடப்பட்டது. தண்ணீர் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதும் பலமாக பேசப்பட்டது. குடிதண்ணீருக்கு விலை கூவி விற்க கூடாது என்று பலரும் ஐ.நா. சபையில் பேசினார்கள். பல லட்சம் லிட்டர் தண்ணீர் தினசரி குழாய் கசிவினால் மட்டுமே வீணாகி போகிறது என்றும் சிலர் கூறினார்கள். சிங்கபூரும், பிலிப்பைன்சின் மணிலாவும், கம்போடியாவின் நாம்பென்னும், ஏற்கனவே தங்கள் குடிமக்களுக்கு தண்ணீரையும், கழிவு அகற்றலையும், மனித உரிமை என்று அறிவிப்பதற்கு முன்பே இனாமாக கொடுத்துவருகிறார்கள். நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் இதையெல்லாம் இலவசமாக கொடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் இவை உணமையிலேயே உலகம் அறிந்த மனித உரிமைகள்.

தண்ணீருக்கான நீதி என்ற ஒரு முழக்கம் இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகமயமாக்கலும், தனியார்மயமாக்கலும், தாராளமயமாக்கலும் இன்று உலக அளவில் தண்ணீரை தனியார் வணிகத்திற்கு தாரை வார்த்துவிட்டது உலகம் முழுவதும் 130 கோடி மக்களுக்கு, சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. அதேபோல 250 கோடி மக்களுக்கு கழிவு அகற்றலுக்கான வசதிகள் கிடைக்கவில்லை. உலக வங்கி கணக்குப்படி, 2025 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு, சுத்தமான குடிநீர் கிடைக்காத நிலை உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா சுமார் 120 கோடி மக்கள்தொகையை கொண்ட நாடு. அதாவது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள்தொகை கொண்ட நாடு. இங்கே உணவு பாதுகாப்போ, தண்ணீர் தேவையோ, மக்களுக்கு இயற்கை மூலாதாரங்கள் மீது உரிமை இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் கிடைக்கப்பெறும். ஆனால் இங்கே நிலம், தண்ணீர், காடுகள், நதிகள், கடல் ஆகியவற்றின் மீது பொது மக்களுக்கு உரிமை இல்லாத சூழல் ஏற்படுத்தப்படட்டு வருகிறது.

அதாவது நிலங்களை விவசாயத்தில் ஈடுபடும் மக்களான தலித், மற்றும் ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கைகளில் இருந்து தனியார் ஆதிக்க சாதி பண்னையார்களோ, தனியார் ஆலைகளின் முதலாளிகளோ, அரசாங்க உதவி மூலம் பன்னாட்டு மூலதன கம்பனிகளோ, கைப்பற்றி அதில் தங்களது லாப நோக்க வேலைகளுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதற்கு அரசாங்கங்களும் சட்டத்தை காரணம் காட்டி ஒத்துழைக்கிறார்கள். இநத்தகைய முயற்சிகளில் கிராம மக்களின் பொது இடங்கள் பறிபோகின்றன. அவைதான் குடிநீருக்கான தேவைகளை நிவர்த்தி செய்து வந்தன என்பதை அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை. அது தவிர குளங்கள், ஏரிகள், ஆகியவை இன்றைய அரசாங்கத்தால் முறையாக பராமரிக்க படுவதில்லை. ஒவ்வுறு கோவில் அருகிலும், குளங்களை அன்றைய மூதாதையர்கள் ஏற்படுத்தி வைத்தனர். ஆனால் இன்றைய அரசுகள் அது பற்றி கவலை படுவதில்லை.

அதுமட்டுமின்றி இந்த அரசியல்வாதிகள் தங்கள் கைகளுக்கு மக்கள் கொடுத்த அதிகாரம் வந்த பிறகு, மக்களுக்கு குடிதண்ணீர் கொடுக்க வேண்டுமே எனப்தி பற்றி கூட கவலைபடுவதில்லை. அதன் விளைவாக மக்கள் அனுபவித்து வரும் காடுகளை இவர்கள் பன்னாட்டு மூலதன நிறுவனகளுக்கு தாரை வார்த்து விடுகின்றனர் அதுபோல நதிகளை கூட இவர்கள் தனியாருக்கு ஏலம் போட்டு விடுகின்றனர் என்று சொன்னால் நம்புவீர்களா? சத்தீஸ்கரில் ஒரு நதியை தனியாருக்கு ஏலம் போட்டு கொடுத்துள்ளனர். அதன் விளைவு அந்த லாப நோக்கம் கொண்ட தனியார் அங்கு படகில் செல்வோரை, அந்த நதி நீரால் நிலத்தடி நீர் கிடைத்து அதன் மூலம் விவசாயம் செய்வோரை எல்லோரையும் தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்த தொடங்கி விட்டனர். அதுபோல இங்கே குளங்களையும், ஏரிகளையும் பராமரிக்காத அரசாங்கம், கடல் நீரை குடி நீராக ஆக்குகிறோம் என்ற பெயரில் மீண்டும் தனியார் முதலாளிகுக்கு தாரை வார்க்கும் வேலையை செய்கிறது.

இவை எல்லாமே சந்தையில் தண்ணீரை வணிக பொருளாக ஆக்குவதில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. அதேபோல சில சுற்று சூழலை கெடுக்கும் ஆலைகளை அதாவது நாசகார ஆலைகளை, அதாவது ஆபத்தான ஆலைகள் என்று அரசால் அறிவிக்கப்பட்ட ஆலைகளை அதாவது நச்சு ஆலைகளை கொண்டு வந்து மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் நிருவவதால், அவை னியாத்தடி நீரையும், கடல் நீரையும் கெடுத்து குட்டி சுவராக ஆக்கி விடுகின்றன. அதுதான் ஸ்டெரிலைட் ஆலை விசயத்திலும், தூத்துக்குடி நகரில் நடந்துள்ளது. அதன் விளைவாக அந்த வட்டாரம் முழுக்க குடி தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கடல் நீர் கடுமையாக கேட்டு விட்டது. உதாரணமாக அங்கே உள்ள தெற்கு வீரபாண்டிய பட்டினத்தில் இன்றுள்ள சூழலில், குடி நீர் கிடைக்காமல் ஒவ்வொரு நாளும் பல லாரிகளில் குடி நீர் ஏற்றிவந்து கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த செயற்கை குடிநீர் தட்டுப்பாடுக்கு ஒரு நல்ல உதாரணமாக அமையும். இந்த நிலைதான் கோகோ கோலா ஆலை அமைந்துள்ள கங்கை குண்டான் நிலைமையும். அங்கும் குடி நீர் கடுமையாக பதிக்கப்பட்ட கிராமங்கலாக அங்குள்ள கிராமங்கள் மாறிவிட்டன.

இந்த இழி நிலையை போக்க குடிநீருக்கான ஒரு போரை பொது மக்கள் தான் தொடங்க வேண்டும். அதுவே ஐ.நா. சபை தீர்மானத்தை தண்ணீர் எனபது மனித உரிமையே எனபதை உண்மையாக ஆக உதவும். .