Monday, November 7, 2016

Ravindran article with Laxmanasamy photo

துணைவேந்தர் கைது சொல்லும் உண்மைகள்! - கோபாலன் இரவீந்திரன்

திங்கள், 7 நவ 2016

05.11.2016 அன்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜவடேகர் அவர்கள் கோயம்புத்துர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி நிகழ்ச்சியில் இரண்டு முக்கியமான கருத்துகளை தனது உரையில் முன்வைத்தார் என்பது பத்திரிகை செய்தி. “அதிகளவில் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்கள் தேவை. அரசு அதற்கான நடவடிக்கைளை எடுக்கும். இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற உயர்கல்வி அமைச்சகத்தின் வழி காட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்”.
மாண்புமிகு ஜவடேகர் இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும் என்று சொல்லும் முதல் நபர் அல்ல. கடந்த 10 வருடங்களாக நமது நாட்டின் ஜனாதிபதிகளாலும், பிரதம மந்திரிகளாலும், மத்திய/மாநில கல்வி அமைச்சர்களாலும், பெரு வணிக உயர்கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை அண்டி இயங்கும் இந்திய ஊடகங்களாலும் சொல்லப்பட்டு வரும் விஷயம், ‘இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர வரிசை பட்டியலில் இல்லை. இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும்’.
இவர்கள் இதை சொல்ல நம்பியிருக்கும் உலக உயர்கல்வி தர வரிசை பட்டியல்கள், உலகத்தின் முன்னணி கல்வியாளர்கள் உருவாக்கிய பட்டியல்கள் அல்ல. பெரு வணிக ஊடகங்களும், உயர்கல்வி ஆய்விதழ்களையும், நூல்கள் மற்றும் பட்டியல்களைப் பதிப்புக்கும் வணிக நிறுவனங்களும் இணைந்து, உயர்கல்வி தளத்தை சந்தைப்படுத்த எடுத்த / எடுக்கும் முன்னெடுப்புகளின் ஊடே விளைந்தவைதான் இவை.
இன்று இந்திய ஊடகங்களும், அமைச்சர்களும் சிலாகித்து சுட்டிக்காட்டும் உலக உயர்கல்வி தர வரிசை பட்டியல்கள் Times Higher Education Rankings மற்றும் QS World University Rankings. உலக மயமாக்கல் உயர்கல்வியை எவ்வாறு சந்தைப்படுத்துகிறது என்பதற்கான உதாரணங்கள் இவை. Elsevier எனும் முன்னணி ஆய்வு பதிப்பகமும் Times Higher Education Surveyயும் அண்மையில் கைகோர்த்து கொண்டபோது சொல்லப்பட்ட விஷயம், ‘இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி அவற்றின் உயர்கல்வி தளங்களையும் பெரும் சந்தைகளாக மாற்றும். நாம் இணைவது இவற்றை கைப்பற்றத்தான்’.
Times Higher Education Survey மற்றும் QS World University Rankings போல, 28 உலக உயர்கல்வி தர வரிசை பட்டியல்கள் உலா வரும் காலத்தில் நமது உயர்கல்வி கொள்கைளை செதுக்குபவர்களும், உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று பேசும் அமைச்சர்களும், அதிகாரிகளும் பேச மறுப்பது, இந்தியப் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு / எந்த காலகட்டத்தில் யாரால் செயல் இழக்க செய்யப்பட்டன என்பதாகும்.
உயர்கல்வித்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் பேச மறுப்பது தரமான, வெளிப்படையான, ஊழலற்ற பேராசிரியர் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்கள் பற்றி. தன்னாட்சி பல்கலைக்கழகங்களிடம் இருந்து எவ்வாறு பறிக்கப்பட்டது என்பது பற்றி இவர்கள் என்றும் பேசியது இல்லை. மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களிடம் இடையே ஏன் அளவில்லா நிதிசார் ஏற்றதாழ்வுகள் என்ற கேள்விகளை இவர்கள் எழுப்பியது கிடையாது.
இந்தியாவில் 1930இல் நோபல் பரிசு பெற்ற முதல் அறிவியாலாளர் சர் சி.வி.இராமன். இவர் படித்தது, பட்டம் பெற்றது, உலகத்தர ஆய்வு செய்தது Times Higher Education Survey மற்றும் QS World University Rankings இல்லாத காலகட்டத்தில் இயங்கிய உலகத்தர நிலையில் இருந்த சென்னை மாநிலக் கல்லூரியிலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும். காரணம், அன்று உயர்கல்வித்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும், பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்களை சந்தைப்படுத்தவில்லை. மோசமான / போலி முன்னெடுப்புகளை அமலாக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கும், உயர் கல்வியாளர்களுக்கும் இடையே அவரவர் தளங்களின் எல்லைகள் பற்றிய அறிவார்ந்த, கண்ணியமான உறவுகள் இருந்தன.
(சர்.லட்சுமண சுவாமி)
இதற்கு உதாரணமாக, அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களுக்கும் சென்னை பல்கலைக்கழகத்தில் 27 ஆண்டுகள் துணைவேந்தராக இருந்து உலகத்தர உயர்கல்வி முறைமைகளை தமிழ்நாட்டில் சாத்தியப்படுத்திய சர் லட்சுமண சுவாமிக்கும் இருந்த அறிவார்ந்த, கண்ணியமான உறவை கூறலாம். சென்னை பல்கலைக்கழகத்தில் அவர் காலத்தில் பணியாற்றிய எனது மூத்த பேராசிரியர்கள் சொல்லக் கேட்டது, இன்று நாம் கனவிலும் நினைக்க இயலாத சம்பவங்கள். முதல்வர் காமராஜர் அவர்களின் நெருங்கிய நண்பர் தனது மகனுக்கு சென்னை மாநிலக் கல்லூரியில் அரசியல்துறை பேராசிரியர் வேலைக் கேட்டு சிபாரிசுக்கு வருகிறார். முதல்வர் காமராஜர் அவரிடம் சொல்லியது: “சென்னை மாநிலக்கல்லூரி பேராசிரியர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கட்டுப்பாட்டில் வருவது. முதல்வராகிய நான் அதில் தலையிட முடியாது. எனது நெருங்கிய நண்பர் சர் லட்சுமண சுவாமி சென்னை பல்கலையில் துணைவேந்தராக இருக்கிறார். அவரது பல்கலையில் அந்தத் துறை பதவி காலியாக இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்”.
1962 இந்திய - சீன போர் நிவாரண நிதி சேகரிக்க சென்னை பல்கலை விடுதி மாணவர்கள், முதல்வர் காமராஜர் அவர்களை விடுதிக்கு அழைத்தார்கள். சர் லட்சுமண சுவாமி, சென்னை பல்கலையில் துணைவேந்தராக இருந்த காலத்தின் எழுதப்படாத விதி: எந்த அரசியல்வாதியும் துணைவேந்தரின் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழகத்துக்கு உள்ளே வரக்கூடாது. துணைவேந்தரின் செயலர் இதை மாணவர்களிடம் சுட்டிக்காட்டி, ‘துணைவேந்தரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக நேரும். உடனே முதல்வர் காமராஜர் அவர்களின் செயலரிடம் சொல்லி அழைப்பை ரத்து செய்ய சொல்லுங்கள்’ என்றார். மாணவர்கள், முதல்வர் அலுவலகம் சென்றவுடன் முதல்வர் காமராஜர் அவர்களை பேச அழைத்தார்கள். தகவலைக் கேட்டவுடன், மாணவர்களிடம் முதல்வர் காமராஜர் சொல்லியதாவது, ‘உங்களது துணைவேந்தர் சொல்வது சரியே. அவர் சொல்லை நீங்கள் மதிக்க வேண்டும். நானும் மதிக்க வேண்டும். நாளை உங்கள் விடுதிக்கு வெளியே நிற்கிறேன். நீங்கள் இந்திய - சீன போர் நிவாரண நிதியை வழங்கலாம்’ என்றார். அவர் அவ்வாறே செய்தார்.
அதே தமிழ்நாட்டில், இன்றைய பத்திரிகை செய்தி கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஜந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பதாகும். இச்செய்தி தமிழகத்தில் துணைவேந்தர் நியமனங்கள், கடந்த 25 வருடங்களாக எத்தகைய சீரழிவை எட்டியுள்ளன என்பதை சுட்டிக்காட்டுவதாகும்.
இந்த செய்தியில் மறைந்திருக்கும் வினா: லட்சுமண சுவாமியும், மு.வா-வும், மால்கம் ஆதிசேஷய்யாவும் உலகத்தர துணைவேந்தர்களாக மட்டும் இன்றி, தாங்கள் தலைமை வகித்த பல்கலைக்கழகங்களையும் உலகத்தரத்துக்கு உயர்த்திய தமிழ்நாட்டில், இந்த பத்திரிகை செய்தியை சாத்தியப்படுத்தியது ராதாகிருஷ்ணன்கள் மட்டும்தானா? கடந்த 20 வருடங்களாக உயர்கல்வித்துறையை நிர்வாகம் செய்த அரசியல்வாதிகளுக்கு இந்த சீரழிவில் சம்பந்தம் இல்லையா? இவர் மட்டும்தான் குற்றவாளியா? மற்ற குற்றவாளிகள் இவர் போல் பத்திரிகை செய்தி ஆவார்களா?
தமிழகத்தில் எப்போது இந்தச் சீரழிவு ஆரம்பித்தது? 27 வருடங்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சர் லட்சுமண சுவாமி அவர்களைத் தேர்ந்தெடுத்தது / நியமனம் செய்தது அன்றைய அரசு அல்ல; அமைச்சர்கள் / அரசியல் இடைத்தரகர்கள் அல்ல; அன்று ‘தேடல் குழு’ கிடையாது. சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்கள்தான் அவரை மறுபடியும், மறுபடியும் தேர்ந்தெடுத்தார்கள். அவரது தகுதி மற்றும் அவர் சென்னை பல்கலைக்கழகத்தை எவ்வாறு கட்டற்ற அறிவாற்றல் தளமாக மாற்றினார் என்பதுதான் அவர்களது மதிப்பீட்டு காரணியாக இருந்தது. அவரது கடைசி நியமனக் காலத்தில், தமிழக அரசு விதிகளை மாற்றி சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் குறுக்கீடு செய்யும்போது, மேற்குறிப்பிட்ட சீரழிவு ஆரம்பித்தது.
ஆனால், 1980களின் இறுதிவரை துணைவேந்தர் நியமனங்களில் பெரிய அளவில் அரசியல் மற்றும் பணம் சார் குறுக்கீடுகள் இல்லை என்று அக்கால பேராசிரியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்கள் கருத்தில் 1990கள் அரசியல் குறுக்கீடுகள் வேர் கொண்ட காலம். 2000கள் அரசியல் மற்றும் பணம் சார் குறுக்கீடுகள் மட்டற்ற அளவில் துணைவேந்தர் நியமனங்களில் விளையாடி தமிழகப் பல்கலைக்கழகங்களை கீழ்நிலைப் பாதையில் தள்ளிய காலம்.
தமிழகப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் சங்கங்களும், முன்னாள் துணைவேந்தர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் இச்சீர்கேடுகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவதும், பொது வெளியில் செயல்படுவதும் பாராட்டுக்குரியது. ஆனால், இதுவரை எந்த பலனையும் அவர்களின் எதிர்வினைகள் கொடுக்கவில்லை என்பது வேதனையளிக்கும் விஷயம்.
மேற்குறிப்பிட்ட விஷயங்களுடன், நாம் இணைத்து பார்க்க வேண்டியது கடந்த 30 வருடங்களாக தமிழகத்தில் வேர் கொண்ட உயர்கல்வி தனியார் மயமாக்கல், அரசு பல்கலைக்கழகங்களை, அரசு மருத்துவமனைகள் எதிர் கொண்ட பாதையில் பயணிக்க வைக்கும் செயல். நம்மில் பலர் மனங்களில் விதைக்கப்பட்ட / விதைக்கப்படும் கருத்தியல், “தனியார் மருத்துவமனைகள் தரமானவை, சிறந்தவை. அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கானவை, தரமற்றவை” என்பதாகும். உயர்கல்வி தனியார் மயமாக்கல் அரசின் கொள்கைகளாலும், ஊடகங்களின் விளம்பர பங்களிப்பினாலும் வளர்த்தெடுக்கப்பட்டதால், இன்று பொதுமக்கள் கருத்து வளர்ச்சியில் இத்தகைய தவறான கருத்துகள் வேரூன்றியுள்ளன. அரசு பல்கலைக்கழகங்களும் இத்தகைய தவறான கருத்தியலுக்குப் பலியாகும் காலம் ஆரம்பித்து விட்டது எனலாம். “தனியார் பல்கலைக்கழகங்கள் சிறந்தவை. அரசு பல்கலைக்கழகங்கள் ஏழைகளுக்கானவை, தரமற்றவை” என்ற கருத்தியல் ஊடகங்களாலும், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விளம்பரப்படுத்தும் தர வரிசை பட்டியல் ‘சாதனைகளாலும்’ ஒவ்வொரு கல்வியாண்டின் ஆரம்பத்திலும் மாணவர்கள் / பெற்றோர்கள் மனங்களில் விதைக்கப்படுவது நாம் அறிந்தது.
தவறான துணைவேந்தர்களின் நியமனங்கள் பல்கலைக்கழகங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பவை. பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் அல்ல. பள்ளிகள் அல்ல. பல்கலைக்கழகம் என்பது இரண்டாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட அருமையான கருத்தியல். இந்த கருத்தியல் பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்திலும், காஞ்சிப் பல்கலையிலும், தக்ஸிலா பல்கலையிலும் கட்டற்ற அறிவாற்றல் தளங்களை உருவாக்கியது. கட்டற்ற அறிவாற்றல் தளங்கள்தான் ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வசிக்கும் சமூக கூட்டத்தினை அறிவார்ந்த சமூகமாக மாற்றும். அந்த நாட்டை, மற்ற நாடுகளின் பார்வையில் வல்லமை மிக்க, வளர்ச்சி பாதையில் செல்லும் நாடாக மாற்றும். பல்கலைக்கழகங்கள் கட்டற்ற அறிவாற்றல் தளங்களாக செயல்படும்போது அவை அச்சமூகங்களின் மனசாட்சியாகவும், அவற்றை நெறிப்படுத்தும் காரணிகளாகவும் மாறுகின்றன. உலகம் போற்றிய சிறந்த தத்துவ அறிஞர்கள், விஞ்ஞானிகள், சமூகவியல் அறிஞர்கள் 1960-70கள் வரை பல இந்தியப் பல்கலைக்கழகங்களில், அவை கட்டற்ற அறிவாற்றல் தளங்களாக இருந்தபோது இருந்தார்கள் என்பது வியப்பான விஷயம் அல்ல; நாம் மறந்த வரலாறு. புது டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்த மரபின் எச்சமாக பல சிக்கல்களுக்கு இடையே இயங்குவது வியப்புதான்.
தவறான / தகுதியில்லாத பல்கலைக்கழகத்தின் கருத்தியல் பற்றிய புரிதல் அற்ற நபர்கள் துணைவேந்தர்களை தேர்ந்தேடுக்கும் தேடல் குழுக்களில் இடம் பெறும்போதும் அல்லது அத்தகைய நபர்கள் துணைவேந்தர்களாக பல்கலைக்கழகங்களில் நுழையும்போதும், மேற்குறிப்பிட்ட கருத்தியல் புதைக்குழிக்குள் தள்ளப்படுகிறது. உயர்கல்வி சார் துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இந்த கருத்தியலை வளர்த்தெடுக்காமல், பல்கலைக்கழகங்களைப் பட்டங்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகளாக கடந்த 50 வருடங்களாக வளர்த்தெடுத்து வந்திருப்பது கண்கூடு. இன்றைய காலகட்டத்தில் பல்கலைக்கழகங்களில் கட்டற்ற அறிவாற்றல் தளங்களை உருவாக்கும் பணி முடக்கப்பட்டு, அவை உயர்நிலை கல்லூரிகளாகவும் / கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அமைப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய மாற்றத்தை துரிதப்படுத்த நியமிக்கப்படுபவர்கள்தான் தரமற்ற துணைவேந்தர்கள்.
இன்றைய தேவை: மேற்குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்து நமது பல்கலைக்கழகங்களை, தரமான இந்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதுதான். அவற்றை உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற்ற விழைவது நகைப்புக்குரியது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
கட்டுரையாளர் குறிப்பு: கோபாலன் இரவீந்திரன், MA.,MPhil.,PhD.,
டிஜிட்டல் கலாச்சாரங்கள், திரைப்படம் கலாச்சாரங்கள் மற்றும் டையாஸ்போரிக் கலாச்சாரங்கள் துறை தலைவர் மற்றும்
சென்னை பல்கலைக்கழக ஆசிரியப் பேரவையின் பொது செயலாளர்.

மேலும்: