Sunday, June 19, 2011

"ஜெ" அறிவித்த குழுவில், கல்வி வியாபாரிகள்.

வார,வார நமக்குத்தான் எதுவும் புரிவதில்லை. "சமச்சீர் கல்வி" என்றால் என்ன என்று சென்ற ஆட்சியாளர்களுக்கு புரிந்த செய்தியில், கலைஞரின் கவிதைகளும், கட்டுரைகளும் உள்ளடக்கம் என்பதுனமக்கு புரியவில்லை. முத்துகுமரன் குழு அறிககையை அல்லது அவரது பர்ந்துரைகளை ஏற்காமல் இருப்பது சமச்சீர் கல்வி என்பதும் நமக்கு புரியாமல் இருந்தது. அதற்குப் பெயர் " பொதுப் பாடத் திட்டம்தான் " என்பது முற்போக்கு எழுத்தாளர்களுக்கு புரிந்தது போல நமக்கு புரியவில்லை. ஒன்றாம் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் மட்டும் ஏன் அதை கொண்டு வந்தார்கள் என்பது நமக்கு புரியவில்லை.மற்ற வகுப்புகளுக்கு கொண்டுவர நிறைய தயாரிப்புப்பணி அவசியமா என்பது நமக்கு புரிய வில்லை. அப்படியானால் இந்த உச்சநீதிமன்றம எப்படி இரண்டு வாரங்களுக்குள் மற்ற வகுப்புகளுக்கும் தயார் எய்யுங்கள் என்று கூறினார்கள் எனபது நமக்கு புரியவில்லை.


"கல்வியாளர்கள்தானே சமச்சீர் கல்வியை" திட்டமிட முடியும் என்று நாம் நினைத்தால், உச்சநீதிமன்றமும் அப்படி ஒரு அறிவிப்பு கொடுத்தால், தமிழக முதல்வர், " கல்வி வியாபாரிகளை" அந்த குழுவில் நியமித்து இருக்கிறார்களே? அதுவும் புரியவில்லை. முதல்வர் விவரம் தெரியாதவரா? அவர் நியமித்தால் அதில் "அர்த்தம்" இருக்கும் எனபது நமக்கு புரிகிறது. இரணூற்று மூன்று தொகுதிகளின் மக்களது வாக்குகளால் வெற்றி பெற்றவரை நாம் எப்படி சந்தேகிக்க முடியுமெனப்தும் நமக்கு தெரிகிறது. அதனால் அவர் செய்ததில் அர்த்தம் இருக்கும். அது என்ன அர்த்தம்? " கல்வியாளர்கள் என்று அதிகாரிகளால் அடையாளம் காட்டப்பட்டோரில்" இந்த நல்ல " கல்வியாளர்களை" முதல்வர் குழுவிற்காக தேர்ந்தெடுத்து இருப்பாரோ? அதில் வேறு வழி இல்லாமால், "பத்மா சேஷாத்ரி" முதலாளியும், டி.வி.எ.சீ. முதலாளியும் இடம் பெற்று இருப்பார்களோ? அதுதான் புரியவில்லை.


இந்த " மேட்டுக் குடி கல்வி நிலையங்களில்" முதல் தலைமுறை மாணவர்கள் அருகே கூட போக முடியாதே? படித்த பட்டம் பெற்ற பெற்றோர்களை நேரில் நேர்காணல் கண்டுதானே இந்த குறிப்பிட்ட பள்ளிகளில் மாணவர் செர்ர்க்கையை நடத்துவார்கள்? அப்படிப்பட்ட " அனுபவத்தை கொண்டு " யார்கள் "சமச்சீர் கல்வி திட்டத்தை" உருவாக்குவார்களோ? இதுவும் நல்லமுயர்ச்சிதான். "சமச்சீர் கல்வி" வரக்கூடாது என்பதற்காக, "தங்கள் கல்வி நிலையத்தில்" உயர்தர கல்வி கற்றுத்தருவதாக விளம்பரம் செய்தே வியாபாரம் செய்யும் இந்த முதலாளிகள் கையாலேயே " சமச்சீர் கல்வியை" உருஆக்குவது என்பது நல்ல தந்திரம் தானே? "திருடன் கையிலேயே சாவியா?" என்று கீட்டு விடாதீர்கள். "பொதுத் தொகுதியில்" தலித்தை நிறுத்தி வெற்றிபெற வைக்கவில்லையா? அதுபோல எண்ணிக்கொள்ளுங்கள். எண்ணுவது என்னவோ நல்லாத்தான் இருக்கு. ஆனால் யதார்த்தம் கொஞ்சம் இடிக்கிறதே? என்கிறீர்களா?


தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக ஒரு "அரசானை" போட்டுள்ளது. அதில் " தனியார் சுய நிதி கல்வி நிலையங்கள்" வறுமையின் எல்லைக்கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்களுக்கு 25 விழுக்காடு , இடம் ஒதுக்க வேண்டும் என்று இருக்கிறது. மேற்கண்ட "நல்ல கல்வி வியாபாரிகள்" அதை ஒதுக்கி உள்ளார்களா? இனொரு விபரீதமான அரசாணையையும் போட்டுள்ளது.அதில் " கிராமப்புற ஏழை எளிய மாநார்களில், யாரெல்லாம் முதல் மதிப்பெண் பெறுகிறார்களோ, அவர்களில் முதல் "ஐந்து விழுக்காட்டை" அந்த மாவட்ட "சிறந்த தனியார் கல்வி நிலையத்தில்" சேர்த்து, அவர்களுக்கு அரசே மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் கட்டணம் கட்ட வேண்டும்" என்றும் உள்ளது. இது சென்ற ஆட்சியில் " பகிரங்கமாக தனியார் கல்வி வியாபாரிகளை" அங்கீகரிக்கும் அரசானை இல்லையா? சரி. அந்த ஆணையை எத்தனை "தனியார் வியாபாரிகள்" அமுல்படுத்தினார்கள்?


இப்போது "கல்வியாளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள வியாபாரிகள்" அத்தகைய அரசாணைகளை நிறைவேற்றி உள்ளனனரா? கல்வியாளர்கள் என்று நாம் நினைக்கும் "முத்துகுமர்ந்களோ" " எஸ்.எஸ்.ராஜகோபாலன்களோ" கல்வி வியாபாரத்தை எதிர்ப்பதால் " குழுவிற்கு வர தகுதியை இழந்து விட்டார்களோ?" சரி. கலைஞர் ஏற்படுத்திய, " கோவிந்தராஜன் குழு" பள்ளி கட்டணத்தை கறார் செய்ததால், "ரவிராஜ் பாண்டியன்" என்ற சொந்தகார நீதியரசரை சென்ற ஆட்சி கட்டண நிர்ணயத்திற்கு போட்டதே? அவர் சரியாக "ஸ்டாலின் மகள்" கல்வி வியாபாரம் செய்தால் "மழலை படிப்பிற்கே" 24000 ரூபாய் கட்டவேண்டும் என்றும், ஈரோடு பள்ளியில் 32000 ரூபாய் கட்டவேண்டும் என்றும் அறிவித்து உள்ளதே? இது எந்த "சமச்சீர்?"


மொத்தத்தில் இந்த " தனியார் கல்வி வியாபாரிகள்" எல்லோரும் சேர்ந்து கல்வி வணிகத்தை திறம்பட செய்ய முனைந்தால், அடஹ்ர்கு பெற்றோரும், அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருப்பதுமட்டும்தானே புரிகிறது.