" நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை மையம்" சென்னையில் மே 17 ஆம் நாள், " முள்ளிவாய்க்கால் படுகொலை கண்டனப் பொதுக்கூட்டம்" ஒன்றை நடத்தினர். நடத்திய இடம் சென்னையில் பெருந்திரளாக மீனவ மக்கள் வாழும் "வட சென்னை--காசிமோடு " பகுதி. ஏற்பாடு செய்தவர்கள் " இந்திய மீனவர் சங்கம் " என்ற மீனவர் அமைப்பு. "தோழமை மையம்" சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பு இத்தகைய கூட்டங்களை நடத்தத்தொடங்கி உள்ளனர். கூட்டத்தின் முக்கிய நிகழ்வு, அதில் " ராமநாதபுரம் " சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட, " ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ". கலந்து கொண்டு முழங்கியது.இவர் " மனித நேய மக்கள் கட்சி"யின் ஒருங்கிணைப்பாளர்.இந்த இயக்கம், அதன் மூல இயக்கமான, " தமிழ்நாடு முஸ்லிம் முன்ன்ற கழகம்" என்ற மைப்புடன் சேர்ந்து, பெரும் அளவில் அவர்களது கொடிகளுடன், ஏப்ரல்-30 ஆம் நாள் சென்னையில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை மையம்" நடத்திய மாபெரும் பேரணியில், சென்னை கடற்கரை சாலையில் கலந்து கொண்டவர்கள்.
அந்த பேரணியிலேயே, முஸ்லிம் தமிழர், இந்து தமயொழர், கிறித்துவ தமிழர், அனைவரும் தமிழர்களே என்று முழக்கம் எழுப்பியவர்கள் இவர்கள். ஆகவே அவர்களது தலைவர், தான் சட்டமன்ற உறுப்பினராக டேஹ்ர்ந்தேடுக்கப்பட்ட பிறகு, கலந்துகொள்ளும் முதல் கூட்டமே இதுதான் என்று அறிவித்த போது, கைதட்டல் எழுந்ததில் ஆச்சர்யமில்லை. தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட " ஜவாஹிருல்லா" முள்ளிவாய்க்கால் பற்றி கூறும்போது, அங்கே நடந்தது ஒரு " தமிழின அழிப்பு" என்று அழுத்தம், திருத்தமாக தெரிவித்தார். அந்த இனப்படுகொலையை, ஆடஹ்ரித்து நடத்தியவர்கள், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்றார். அதனுடன் கூட்டணி சேர்ந்துள்ள திமுக அந்த இன அழிப்பில் பங்காளி என்றார். அன்றைய முதல்வர் கருணாநிதி, உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடி, ராஜபக்சேக்கு ஒத்துழைத்தார் என்றார்.
ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவால், தோற்கடிக்கப்பட்ட " அசன் அலி" என்ற முன்னாள் எம். எல்.ஏ. ராஜபக்சேவின் நண்பர் என்று பெருமையாக தன்னைப்பற்றி சொல்லிக்கொள்பவர் என்பதையும் சுட்டிக் காட்டினார். அதனால் அந்த தொகுதியில் ராஜபக்சேவை தோற்கடித்து ஜவாஹிருல்லா வெற்றி பெற்றிருக்கிறார். ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர், ஏப்ரல் 2 ஆம் நாள் கடலுக்கு சென்ற போது, அவர்களை பிடித்து சிங்கள கப்பல்படை " உலக கோப்பை மட்டைப்பந்து " விளையாட்டில் படுகொலை செய்ததை அவர் சுட்டிக்காட்டி, அந்த கொலைகளை மறைத்த தமிழக முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்றார். அதை சட்டமன்றத்தில் எழுப்புவேன் என்றார். படுகொலைகளை தேர்தல் நேரத்தில் மறைத்துவிட்டு, அதற்கு நட்ட ஈடு மட்டும் ஒன்பது நாட்களில் எப்படி அறிவிக்க முடிந்தது என்று கேட்டார்.
எம்.எல்.ஏ. கெட்ட அந்த கேள்வியை ஏற்கனவே அந்த கூட்டத்தில் மீனவர் தலிவர்கள் தயாளன், ரூபேஷ், மகேஷ் ஆகியோர் கேட்டிருந்தனர். அடுத்து " இந்திய தவ்ஹித் ஜமாஅத் " தலைவர் எஸ்.எம். பாக்கர் அதேபோல முழங்கினார். முஸ்லிமா, கிருத்துவா, இந்துவா என்பதல்ல, எல்லோரும் "தமிழர்கள்" என்றார்.அந்த கூட்டத்தில் " நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை மையம் " அமைப்பாளர் பேரா.சரஸ்வதி பேசினார்.அவர் நாடு கடந்த அரசை பற்றியும், தோழமை மையம் பற்றியும் செயல்பாடுகளை விளக்கினார். வழக்கறிஞர் பாண்டிமாதேவி, ஊடகவியலாளர்களான அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி, மே 17 இயக்க திருமுருகன், மீனவப்பென் வள்ளியம்மாள், தியாகு, மோகனவேலன் ஆகியோரும் உரையாற்றினர். மே 18 ஆம் நாள் " தோழமை மையம்" காஞ்சிபுரத்தில் தனது பொதுக்கூட்டத்தை, பெரியார் தூண் அருகே "தமிழர் உலகம்" அமைப்பின் தமிழினியன் ஏற்பாட்டில் நடக்க இருக்கிறது.
Wednesday, May 18, 2011
Subscribe to:
Posts (Atom)