எல்லோரும் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது சரியா? இல்லையா? என்று சர்ச்சை செய்துவரும் வேளையில் சென்னையில் இன்று " சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்ற அமைப்பை அறிவித்து,பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தினர். அதில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன், உணவு பொருள்கள் விநியோக சங்கங்களின் தலைவர், மற்றும் உலக தமிழர் பேரமைப்பின் பொருளாளர், தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபரும், நில உடமையாலருமான சென்னை வாழ் பிரமுகர் சந்தரேசன், அறிவியலாளரும், திருவனந்தபுரம் பிரமுகரும், அணு உலைகளின் ஆய்வுகள் மூலம் அணு பாதிப்பு கதிர்வீச்சை கருவி கொண்டு அளந்து விளக்கும் விஞ்ஞானியும், கர்நாடகாவில் கிகா அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் இப்போது ஈடுபட்டு வருபவரும், இருபத்தைந்து ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்துடன் தன்னை இணைத்து கொண்டவருமான வி.டி.பத்மநாபனும், முதலில் பேசினர்.
வி.டி.பத்மநாபன் தான் தயாரித்த "பவர் பாயிண்ட் பிரசெண்டேசனை" சென்னை பத்திரிகையாளர் மத்தியில் திரையில் போட்டு காண்பித்தார். அதில் அணு உலைகள் கூடங்குளத்தில் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்றும் விளக்கினார். அணு உலைகளுக்கு எப்படி எரிபொருளான யுரேனியும் முக்கியமோ, அதுபோல நல்ல சுத்தமான தண்ணீரும் முக்கியம் என்றார். அதாவது அயோடின் இல்லாத,கணிமதன்மை இல்லாத தண்ணீரை "குளிரூட்ட" அணு உலைகளுக்கு சுற்றி ஓடவிடும் போது மட்டும்தான் "அணு உலைகளிலிருந்து" வெளிவரும் வெப்பமான "கதிர்வீச்ச்சு" கட்டுப்படும் என்ற உண்மையை போட்டு உடைத்தார். இதையே கூறித்தான் அணு உலைக்கு ஆதரவான விஞ்ஞானிகளும் நம்மை பயமுறுத்த, அந்த குளிரூட்டல் தஹ்டுக்கப்பட்டால் இப்போதே கூடங்குளத்தில் விபரீதம் ஏற்படுத்தப்படும் என்று அறிக்கை விட்டு வருகின்றனர்.
அத்தைகைய தண்ணீரை கூடங்குளம் அணு உலைகள் பெறுவதற்கு எண்ண ஏற்பாடு என்று அவர் நிர்வாகத்தை கேட்டார். அப்படி ஒரு நாளைக்கு 2500 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவை என்றார். அதற்கு நிர்வாகம் எண்ண ஏற்பாடு செய்துள்ளது என்று கேட்டார். இத கேள்வியை வி.டி.பி. ஒரு கருத்தரங்கில் வட மாநிலத்தில் கேட்ட போது மறுநாளே கூடங்குளம் அணு நிர்வாக தலைவர் காசிநாத் பாலாஜி, தாங்கள் எட்டாயிரம் கியூபிக் மீட்டார் தண்ணீரை "கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில்" கொண்டு வார இருப்பதாக ஒரு மழுப்பல் அறிககையை கொடுத்தார் என்றார். அதுவும் போதாது. பத்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இவர்களால் கூடங்குளத்தில் கொண்டுவரப்பட்டாலும் எந்த நேரத்திலும் அவை "பழுதுபடலாம்" என்றார். அப்போது மாற்று ஏற்பாடு தண்ணீருக்கு எங்கே இருக்கிறது என்று வினவினார்.
அதற்காக "பேச்சிப்பாறை அணைக்கட்டு" தண்ணீரையோ, "கோதையாறு அணிக்கட்டு" தண்ணீரையோ எடுத்து வார அணு உலை நிர்வாகம் ஆசைப்பட்டால் அங்குள்ள விவசாயிகள் எப்படி அனுமதிப்பார்கள்? ஏற்கனவே பேச்சிப்பாறை விவசாயிகளின் "பாசன பாதுகாப்பு சங்கம்" 1987 இலிருந்தே தங்கள் தண்ணீரை எடுப்பதை எதிர்த்து போராடி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அணு உலையை சிறிது, சிறிதாக செயல் இழக்க செய்து, "இருபத்து நாலு மணி நேரத்தில்" வெடிக்க செய்யும் என்று அறிவியலாளர் பத்மநாபன் விளக்கினார். இத்தகைய பெரும் தடங்களை வைத்துக் கொண்டுதான் இவர்கள் கூடங்குளம் அணு உலையில் "பாதுகாப்பு" பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள் என்பது அம்பலமானது.
அடுத்து மனித நேய மக்கள் கட்சியின் போது செயலாளர் அப்துல் சமத் பேசினார். இவர் கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். அதனால் அங்குள்ள நிலைமைகளை விளக்கினார். எந்த அளவுக்கு கல்பாக்கம் அணு உலைகளின் " கதிரியக்க கசிவுகள்" அங்குள்ள கிராமங்களில் "புற்று னையை" ஏற்படுத்தி உள்ளது என்று பட்டியலிட்டார். மருத்துவர் புகழேந்தி அது பற்றி உண்மை விவரங்களை கூறியதற்காக அந்த அணு உலை நிர்வாகம் அவர் மீது குறி வைத்து வழக்குகளில் சிக்க வைக்க திட்டமிடுவதும் அங்கே தெரிய முடிந்தது. இப்போது புதிய "ஈனுலை" என்று ஒரு உலையை கொண்டுவர முயர்ச்சிப்பதை எத்ரிக்க வேண்டும் என்றார். கல்பாக்கம் மக்கள் படும் அவதி போதுமென்றும், அந்த கொடுமை கூடன்குலத்திற்கும் வேண்டாம் என்றும் கூறினார்.
அடுத்து பேசிய இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் யாரிடம் கேட்டு இவர்கள் கூறுகின்ற யுரேனியத்தை உள்ளே கொடன்னு வந்தார்கள் என்றார். அமெரிக்காவிற்கு முழுவதும் அடிமை ஆவதும், அணுகுண்டு தயாரிக்க திட்டமிடுவதும் இவர்களது முயற்சியா? என்று வினவினார். அதை அடுத்து மக்கள் சிவில் உரிமை கழகத்தின்{ பி.யு.சீ.எல்.} தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி பேசினார்.அவரது இருபத்தைந்தாண்டு கூடங்குளம் எதிர்ப்பு போராட அனுபவங்களை கூறினார். இந்த எதிர்ப்பு இப்போது உருவானந்து என்பதே ஒரு பொய் என்றார்.இத்தனை ஆண்டுகளாக மக்களது கவலையை போக்க அரசுகள் முயற்சி செய்யாதது யார் தவறு என்று கேட்டார்.
1962 ஆம் ஆண்டு அணு சட்டப்படி இவர்கள் அனைத்தையும் அணு சக்தி துறைக்கு மட்டுமே ரகசியமாக வைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். 2005 ஆம் ஆண்டு "தகவல் பெரும் உரிமை சட்டம்" உருவானதை நினைவு படுத்தி, பகுஷிமா விபத்திற்கு பிறகு அந்த தகவல் பெரும் உரிமையை மக்களுக்கு அளித்து உண்மையை அரசு கூறவேண்டும் என்றார். அதற்கான மைச்சரவை தீர்மானந்தை தமிழக அரசு போட்டதற்காக மத்திய "அய்.மு.கூ. அரசு " தமிழ்நாட்டை பழி வாங்குகிறது என்றார். அதற்காக அணு சக்தி துறை மூலமும், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மூலமும், பல கோடி பணத்தை செலவழித்து "அணு உலை ஆதரவை" கிளப்பி விடுகிறார்கள் என்றார். 1998 ஆம் ஆண்டு நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் உள்ள "ஊடகத்துறை வசம்" ஒரு கோடி ரூபாய் தருகிறோம், அணு பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள் எனு லஞ்ச்ச்மா கொடுக்க முயன்றதை சுட்டி காட்டினார். இப்போது அதுவே பல நூறு கோடி லஞ்சமாக மாறிவிட்டது என்றார். ஆகவே அணு உலை ஆதரவாலர்களுக்குதான் பல கோடி ரூபாய் வருகிறது என்றார்.
அமெரிக்கா அணு சக்தி சட்டத்தை அதாவது 123 சட்டத்தை அமுலாக, பல அணு உலைகளை இந்தியாவிற்கு கொண்டுவர பல நூறு கொடிகளை, அமெரிக்கா அணு உலை அதாரவுக்கு செலவழிக்கிறது என்றார். அதையே அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது பழி போட திசை திருப்புகிறார்கள் என்றார். மக்கள் இயக்கத்தை யாரும் ஒச்சைப்படுத்த முடியாது என்றார். அடுத்து பேசிய பறையர் பேரவை ஏர்போர்ட் மூர்த்தி, தானும் கல்பாக்கம் பகுதிகாரர்தான் என்று கூறி, தன்கள் பகுதியில் எத்தனை சொந்த கற்ற தலித்துகள் கல்பாக்கம் அணு உலை கதிர் வீச்சால் "புற்று நோய் " வந்து அவதிப்படுகிறார்கள் என்று விளக்கினார்.
மொத்தத்தில் "கிருத்துவர்கள் மட்டுமே எதிர்ப்பதாக" பொய்யை கிளப்பிவிட்ட அர்சுதுரைக்கு, கிருத்துவர் அல்லாத பல முக்கிய பிரமுகர்கள் இந்த சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம் என்ற அமைப்பை உருவாக்கி இருப்பது பெரும் "பதிலடியாக" இருக்கும்.
Friday, November 25, 2011
Subscribe to:
Posts (Atom)