Sunday, October 23, 2011

ஜெய்தாபூர் அணு உலை எதிர்ப்பு குழு போட்ட சிபிஎம் வாழ்க.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெய்தாபூர் அணு உலை வர இருக்கிறது. அது ஆசியாவிலேயே பெரியது என்கிறார்கள். அப்படியானால் பெரிய அளவில் பாதிப்பு இருக்குமா என்று கேட்டு விடாதீர்கள். அதை பெரும்பான்மையான அந்த வட்டார மக்கள் எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் மட்டுமே ஆதரிக்கிறது. அதற்காக நமது பிரதமர் பிரான்ஸ் நாட்டு பன்னாட்டு மூலதன நிறுவனமான அரவே என்ற மைப்பில் "ஆறு உலைகளுக்கு" ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அந்த குறிப்பிட்ட நிறுவனம் பிரான்ஸ் நாடு அணு உலை மூலம் எழுபத்தைந்து விழுக்காடு மின் தேவையை நிரப்பினாளும்கூட, எப்படி "பாதுகாப்படர் முறையில்" நடந்து கொண்டுள்ளது என்பது சமீபத்தில் அம்பலமாகி விட்டது.


அதாவது பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் அந்த நிறுவனத்தின் "அணு கழிவான உரேனியம் கழிவை" நிலத்தடி நீருக்குள் திரவமாக்கி இறக்கி விட்டதை கண்டுபிடித்து அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அபராதமாக நாற்பதாயிரம் டாலர்கள் தண்டனை கொடுத்துள்ளது. இது எதை காட்டுகிறது? எழுபது விழுக்காடு தங்கள் மின் தேவையை அணு உலைகள் மூலம் நிரப்பி கொள்ளும் ஒரு நாடு, .எந்த அளவுக்கு அந்த அணு உலைகள் விசயத்திலும், அதன் கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் "கவனமாக " இருக்கும் என்று நாம் பெருமை பட்டுகொள்கிறோம். ஆனால் அப்படி கவனம் அங்கே உள்ள அரசாங்கத்திற்கும், அங்கே உள்ள அணு உலைகளை தயாரிக்கும் பெரிய நிறுவனத்திற்கும் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திடம் நமது பிரதமர் ஜெய்தாபூர் அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போட்டார் என்றால் இவை எவ்வளவு பாதுகாப்பானவை? இதனால்தான் சிபிஎம் அப்படி ஒரு பதினைத்து பேர் கொண்ட குழுவை மைத்து அந்த அணு உலைகள பற்றி ஆய்வு செய்ய போகிறது. ஆகவே அது வரவேற்க வேண்டிய செய்திதான்.


ஆனால் அதே சீ.பி.எம். கட்சிக்கு "கூடங்குளம், கல்பாக்கம்" பற்றியும் அதே அளவில் கவலை இருக்க வேண்டும் அல்லவா? ஏன் இல்லை? இது தமிழ்நாட்டில் தமிழர்களை கொள்ள வரும் ஆலை என்பதாலா? அப்படி இருக்காது. இது ரஷ்யா விற்கின்ற அணு உலைகள என்பதால் அவர்கள் இந்த அணு உலைகள எதிர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்று இன்னமும் முடிவு செய்யவில்லையா? அல்லது பிரிந்த காரட் மதுரை வந்தபோது, புகுஷிமாவிற்கு பிறகு தங்கள் கட்சியும் அணு உலைகள பற்றி மறுபரிசீலனைக்கு வந்துவிட்டோம் என்று கூறியதும், உடனேயே சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ஆர். நாங்கள் கூடங்குளம் அணு உலையை எத்ரிக்க வில்லை என்று கூறினாரே அதில் நாம் குழம்பி கொண்டிருப்பதை கண்டு அவர்கள் சிரித்து கொண்டு இருக்கிறார்களா?

பரமக்குடி துப்பாக்கி சூடு, ஆரோக்கியமான சர்ச்சையை சென்னையில் கிளப்பியது.

"சேவ் டமில்ஸ்"சென்னையில் லயோலா கல்லூரி பி.எட.அரங்கில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அது" பரமக்குடி அரசு வன்முறையும், மௌன வன்முறையும்" பற்றியதாக இருந்தது. பலரின் மௌனம் சிலரை அதிகமாக கோபம் ஊட்டி அதுவே " தடுமாறிய" பேச்சுக்கும் இட்டுசெல்லும் என்பதுபோல, நமது வழக்கறிஞர் விஜயேந்திரன் " நஞ்சு கலந்து கொல்ல வேண்டும், மரபணு மாற்ற வேண்டும்" என்று உணர்ச்சி வசப்பட்டார். அதனால் யாருமே அதை பெரிதாக நினைக்கவில்லை. இது "விரக்தியின் உச்சம்" என இருந்துவிட்டார்களா? என்று தெரியவில்லை. ஆனாலும் கூட்ட ஏற்பாட்டாளர் செந்தில் தனது கடமை என்று பதில் சொல்ல வந்தார். விஜயேந்திரன் சந்தேகப்படுவதுபோல, தாங்கள் ஒரு "பணம் வாங்கும் தொண்டு நிறுவனம் அல்ல" என்றார். அதேசமயம் " பெண்களை இழிவுபடுத்தல்" போன்ற சர்ச்சைகளும் இருக்கிறது என்றார்.

அதற்குபிறகு, இளம்பரிதி பேசவந்தார். அவர் தெளிவாக கூட்ட "தலைப்பை" பிடித்து கொண்டார். அதில் உள்ள மௌன வன்முறையை விளக்கினார். "முக நூல்" பக்கங்களில் பல "ஆதிக்க சாதிவெறி சொற்கள்" நடனமாடுவதை எடுத்து ஆதாரம் காட்டினார். உயர்தொழில்நுட்பம் படித்த பிறகும், கேவலமான சாதிவெறி தொடர்வதை அம்பலப்படுத்தினார். தேவர் சமூக படித்த இளைஞர்களில் இப்படியுமா? என எண்ண வைத்தது. அதேபோல "ஒரு பிரபல பேச்சாளர் மற்றும் எழுத்தாளரை" பற்றி கூறியது பலருக்கு அதிர்ச்சியை தந்தது. அந்த பிரபலம் எப்படி பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி பேச அழைத்த இடத்தில் வந்து அது பற்றி தனது "ஒன்றரை மணிநேர" உரையில் பேசாமல், மரண தண்டனை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார் என்று ஆதாரத்துடன் வெளிப்படுத்தினார். பிரபலம் பற்றி தெரிந்தது இவ்வளவுதானா?

அடுத்து "முத்துராமலிங்க தேவரின் உறவுக்காரரான" தினகரன் என்ற எழுத்தாளர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளதை மேற்கோள் காட்டி, இம்மானுவேல் சேகரன் சாதி வெறியில் தான் தேவரால் தூண்டப்பட்டு கொலை செய்யப்பட்டார் எனபதை சுட்டி காட்டினார். அதில் தேவர்களை "ஆந்திராவில் இருந்து வந்தவர்களாக" சொல்லி இருப்பதையும், "தேவேந்திரகுல வேளாளரை" தமிழ் பழங்குடி என்று விளித்திருப்பதையும் மேற்கோள் காட்டினார்.அந்த புத்தகத்தை வெளியிட்ட பிறகு ஒரே மாதத்தில் எப்படி "தினகரனும்" கொலை செய்யப்பட்டார் என்பதையும் கூறினார். "ம.க.இ.க." பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றி ஒன்றுமே செய்யவில்லை என்று அவர் கூறியது அந்த அமைப்பினருக்கு கோபத்தை கொடுத்து, அவர்கள் கடைசியில் வீரசாமி மூலம் தாங்கள் தெரிவித்த கருத்துக்களை காட்டி பேசினர். எப்படியோ இளம்பரிதி பல விசயங்களை புதிதாகவும், சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி விட்டார்.

அதன்பிறகு வ.கீதா பேசினார். அவரும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீதான சாதி ஒடுக்குமுறை வரலாற்றை எடுத்து சொன்னார்.வ.கீதா கீழ தஞ்சையில் திராவிடர் கழகம் உருவாக்கிய சாதி எதிர்ப்பு தளத்தில்தான் பொதுவுடைமைவாதிகள் பயணம் செய்தார்கள் என்றார். அது ஒருபுறம் உண்மை என்றாலும், பொதுவுடைமைவாதிகளும் அன்று "சாணிப்பால், சவுக்கடி" என்பதற்கு எதிராக சீனிவாசராவ் தலைமையில் சாதி எதிர்ப்பையும் சேர்த்து போராட்டம் எடுத்தார்கள் என்று சொல்லியிருக்கலாம். அதேபோல திராவிடர் கழகமும், கீழ தஞ்சையில் " விவசாய கூலிகள்" சங்கம் நடத்தியது என்பதையும் சொல்லியிருக்கலாம். விடுதலை ராஜேந்திரன் அடுத்து பேசினார். அவர் 1883 இலிருந்தே தென் மாவட்டங்களில் நடக்கும் சாதி மோதல்கள் பற்றி கூறினார். அதில் நாடாருக்கும், தேவர்களுக்கும் நடந்த சாதி மோதல்களை கூறினார். அதில் தேவர்கள் நாடார்களை இழிவாக நடத்தியது, அடக்குமுறை செய்தது எல்லாமே விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த முதுகளத்தூர் சாதி அடக்குமுறைகளும் பேசினார். மள்ளர் அல்லது குடும்பர் அல்லது பள்ளர் அல்லது தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களை " தலித்" என்றே அவர் குறிப்பிட்டார். சமீப வன்முறைகளும் "தலித்" மீது என்றே வாதிட்டார். அதுவே சில இளைஞர்களுக்கு "கோபத்தை" ஏற்படுத்தியது.


அங்கே நடந்தது "தேவர்-பள்ளர்" மோதல் என்றும், அதை அப்படியே விவரிக்க வேண்டும் என்றும், "தலித்" என்ற சொல் பரந்த வேறு பொருளுக்கு இட்டு சென்றுவிடும் என்றும், அதனால் அங்கே இருக்கும் முரண்பாட்டை சரியாக எடுத்து சொன்னதாக் ஆகாது என்றும் அவர்கள் கூறினர். எப்படி சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்ல கூடாது என்றும் பதில் வ்ந்தது. அந்த சமூகத்தில் இவர்கள் சிலர்தான் என்றும் க்ருத்து வந்தது. அது அனைத்து தேவேந்திரகுல வேளாளர்களிடமும் இருக்கிறது என்று கூறியதற்கும் எதிர்ப்பு வந்தது. குட்ம்பமாரை மற்றவர்கள் எப்படி புரிந்துகொண்டிருக்கிறர்கள் என்பதும் தலைநகரில் உள்ள அறிவுஜீவிகளிடம் எப்படி கருத்து இருக்கிறது என்பதும் அங்கே வெளிப்பட்டது. அந்த சமூகம் எப்படி தங்களை அழைத்து கொள்ள விரும்புகிறார்களோ அப்படி அவர்களை அழைக்க நமது அறிவுஜீவிகள் தயார் இல்லையா? என்று தெரியவில்லை. அதில் ஒரு மள்ளர் "தலித் என்றால் பெண்களும்" உண்டல்லவா? என்றார். அபப்டியானால் அங்கே நடந்த "தேவர்-பள்ளர்" மோதலை "மறவர் பெண்களையும் சேர்த்து உச்சரிக்கும் தலித் " என்ற் வார்த்தை மூலம் எப்படி சரியாக வெளிப்படுத்த முடியும்? என்று வினவினார். அது என்னமோ அறிவுபூர்வமாக பட்டது.


பெயரில் என்ன இருக்கிறது என்று ஒரு கேள்வி வந்தது. பெயரில் "வரலாறு, பண்பாடு, போர், போர்க்களம், வீரசாவு" இத்தனையும் இருக்கிறது என்று நாம் பதில் சொல்ல வேண்டி வந்தது. "உழவர் பெருங்குடியின் போர்ப்படைபிரிவுதான் "தேவேந்திரகுல வேளாளர்கள்" என்று நான் சொன்னதை பலரும் ரசிக்க வில்லை என்று தெரிந்தது. வரலாறுகளை புத்தகங்களில் படித்து தொகுக்கலாம்.நிகழ்வுகளை உண்மை அறியும் குழுக்கள் மூலம் சில நாள் அங்கே சென்றுவ்ந்ததால் தெரிந்து கொண்டு திருப்தி அடையலாம். ஆனால் ஒடுக்கப்பட்டமக்களது வரலாற்று நிலை பற்றியும், போர் தொடுக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தை பற்றியும், அந்த சமூகத்துடன் ஆழமாக வாழ்ந்துதானே கற்று கொள்ள முடியும்? இப்படி நமக்கு புரிவது எல்லாமே தவறு என்று அறிவுஜீவிகள் கருதலாம். அறிவுஜீவிகளின் கருத்துதான் எழுதப்படும். பேசப்படும். பதிவு செய்யப்படும். இதுதான் ஐன்றைய நிலைமை.

போர்களத்தை சந்திக்கும் உழவர் கூட்டம் தனக்கு ஆதரவாக வந்திருக்கும் சக்திகளுடனும், நகர்ப்புற அறிவுஜீவிகளுடனும், அமர்ந்து தங்கள் மதிப்பீட்டை அவர்களும் புரியும் வண்ணம் கூறுவதற்கான "உத்திகளை" இன்னமும் உருவாக்க வில்லை என்றும், எந்த மொழியில் அவர்களையும் தங்கள் உணர்வுகளை ஏற்று கொள்ள செய்யவேண்டும் என்று இன்னமும் அறிந்திருக்க வில்லை என்றும் பேசி கொண்டு வெளியே வந்தோம். ஆனாலும், ஏற்பாடு செய்திருந்த அமைப்பும், பேசிய பேச்சாளர்களும், கலந்து கொண்டோரும் மாற்று சமூகத்தை சேர்ந்த ஆதரவு சக்திகள் என்பதையும், அது வரவேற்கதக்கது எனபதையும் வந்திருந்து கோபப்பட்ட இளைஞர்கள் உணர்ந்து கொண்டனர்.எபப்டியோ அது ஒரு நல்ல ஆரோக்கியமான் சர்ச்சை என்றே புரிந்தது.

டில்லி ஊடகத்தார் "கதை" விடுவார்களா?

இன்று காலை டெக்கான் கிரோனிகள் ஆங்கில ஏட்டில் திமுக தலைவர் கலைஞர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தது பற்றிய செய்தி எல்லா ஏடுகளும் போல வெளிவந்துள்ளது. ஆனால் மடர்வர்கள் எழுதாத "சில விடயங்களை" இந்த ஏடு எழுதியுள்ளது. அதாவது சோனியாவை சந்திக்கும்போது, கருணாநிதி அதிகம் பேசவில்லை என்றும், ராஜாத்தி அம்மாள்தான் அதிகமாக தன் ஆதங்கங்களை பற்றி பேசினார் என்றும் அதை தம்மிழிளிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து டி.ஆர்.பாலு கூறினார் என்றும் எழுதியுள்ளனர். இது மிகச் சிறந்த "கற்பனை" என்று சம்பந்தப்பட்ட வட்டரங்கள கூறுகின்றன.
எப்படி இருக்கீங்க என்று வழமைபோல அன்னை சோனியா கேட்டதற்கு, மகளை சிறைக்கு அனுப்பி விட்டு எப்படித்தான் இருப்பேன் என்று கூறியதாக மாட்டுமே அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றபடி கலைஞத்தான் பல செய்திகளை பேசிக் கொண்டிருந்தார் என்கின்றனர்.


முதலில் கருணாநிதி அதிகம் பேசவில்லை எனபது அந்த தலைவருக்கு தரப்படும் "இழுக்கு". அடுத்து சோனியாவிடம் தனது "ஆதங்கங்களை" நிறைய கூறினார் என்று ராசாத்தியை கூறுவதும், அதை சோனியா செவிமடுத்தார் என்று கூறுவதும், திட்டமிட்டு "இட்டுக் கட்டி" அவர்களது பேச்சுவார்த்தையை "கொச்சைப்படுத்தும்" முயற்சி. அடுத்து உடன் சென்ற "தயாநிதி மாறன்" சோனியாவை காண உள்ளே செல்லவில்லை என்ற உண்மையை எடுத்து சொல்லும்போது, "ராஜாத்தி" தடுத்து விட்டார் என்று அந்த ஏடு கூறியுள்ளது. இது நிலைமை பற்றிய புரிதல் இல்லாதவர் எழுதியுள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது.

தயாநிதி மாறன் மீது விசாரணை நடைபெறும் வேளையில், சீ.பி.அய். சோதனைகளையும் விசாரணையையும் தொடங்கி உள்ள நேரத்தில், அடுத்து "கைது" அவருமா? என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்திக்க தயாநிதி முயற்சி செய்வாரா? சோனியாவின் ஆலோசகர்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, அதை வரவேற்பார்களா? அதனால் கலைஞருடன் தயாநிதி சமீப வழக்கம் போல், வாகன வரிசையில்சென்றது உண்மையாக இருந்தாலும், மன்மோகனை சந்திக்கும் போதும், சோனியாவை சந்திக்கும் போதும் உள்ளே செல்லவில்லை என்பதுதான் உண்மை. அதைவைத்து கதை எழுதுவது டில்லி ஊடகத்தாருக்கும் வழமையாகி விட்டதே?

இதேபோல டில்லி ஊடகத்தார்கள் பல நேரங்களில் தாங்கள் உருவாக்கிய கதைகளில் மாட்டி கொண்டுள்ளார்கள். இந்த கதை தமிழ்நாட்டை பற்றியது என்பதாலும், தமிழ்நாட்டு மூத்த அரசியல்வாதியின் குடும்பம் பற்றியது என்பதாலும், காங்கிரஸ்-திமுக உறவு பற்றியது என்பதாலும், நடக்காததை நடந்ததாக வெளியிட் யாருக்கும் உரிமையில்லை எனப்துய் மட்டுமல்ல, திரித்து எழுதத் யாற்றுக்கும், எப்போதுமே உரிமையில்லை என்பதால், ஆங்கில ஏடுகள் வெளியிடுவதால் எல்லாமே உண்மையாகிவிடாது என்று கூறத்தான் நாம் குறுக்கே விழுந்து சொல்ல வேண்டி இருக்கிறது.