Sunday, October 23, 2011

டில்லி ஊடகத்தார் "கதை" விடுவார்களா?

இன்று காலை டெக்கான் கிரோனிகள் ஆங்கில ஏட்டில் திமுக தலைவர் கலைஞர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்தது பற்றிய செய்தி எல்லா ஏடுகளும் போல வெளிவந்துள்ளது. ஆனால் மடர்வர்கள் எழுதாத "சில விடயங்களை" இந்த ஏடு எழுதியுள்ளது. அதாவது சோனியாவை சந்திக்கும்போது, கருணாநிதி அதிகம் பேசவில்லை என்றும், ராஜாத்தி அம்மாள்தான் அதிகமாக தன் ஆதங்கங்களை பற்றி பேசினார் என்றும் அதை தம்மிழிளிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து டி.ஆர்.பாலு கூறினார் என்றும் எழுதியுள்ளனர். இது மிகச் சிறந்த "கற்பனை" என்று சம்பந்தப்பட்ட வட்டரங்கள கூறுகின்றன.
எப்படி இருக்கீங்க என்று வழமைபோல அன்னை சோனியா கேட்டதற்கு, மகளை சிறைக்கு அனுப்பி விட்டு எப்படித்தான் இருப்பேன் என்று கூறியதாக மாட்டுமே அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றபடி கலைஞத்தான் பல செய்திகளை பேசிக் கொண்டிருந்தார் என்கின்றனர்.


முதலில் கருணாநிதி அதிகம் பேசவில்லை எனபது அந்த தலைவருக்கு தரப்படும் "இழுக்கு". அடுத்து சோனியாவிடம் தனது "ஆதங்கங்களை" நிறைய கூறினார் என்று ராசாத்தியை கூறுவதும், அதை சோனியா செவிமடுத்தார் என்று கூறுவதும், திட்டமிட்டு "இட்டுக் கட்டி" அவர்களது பேச்சுவார்த்தையை "கொச்சைப்படுத்தும்" முயற்சி. அடுத்து உடன் சென்ற "தயாநிதி மாறன்" சோனியாவை காண உள்ளே செல்லவில்லை என்ற உண்மையை எடுத்து சொல்லும்போது, "ராஜாத்தி" தடுத்து விட்டார் என்று அந்த ஏடு கூறியுள்ளது. இது நிலைமை பற்றிய புரிதல் இல்லாதவர் எழுதியுள்ளாரோ என்று எண்ண தோன்றுகிறது.

தயாநிதி மாறன் மீது விசாரணை நடைபெறும் வேளையில், சீ.பி.அய். சோதனைகளையும் விசாரணையையும் தொடங்கி உள்ள நேரத்தில், அடுத்து "கைது" அவருமா? என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்திக்க தயாநிதி முயற்சி செய்வாரா? சோனியாவின் ஆலோசகர்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, அதை வரவேற்பார்களா? அதனால் கலைஞருடன் தயாநிதி சமீப வழக்கம் போல், வாகன வரிசையில்சென்றது உண்மையாக இருந்தாலும், மன்மோகனை சந்திக்கும் போதும், சோனியாவை சந்திக்கும் போதும் உள்ளே செல்லவில்லை என்பதுதான் உண்மை. அதைவைத்து கதை எழுதுவது டில்லி ஊடகத்தாருக்கும் வழமையாகி விட்டதே?

இதேபோல டில்லி ஊடகத்தார்கள் பல நேரங்களில் தாங்கள் உருவாக்கிய கதைகளில் மாட்டி கொண்டுள்ளார்கள். இந்த கதை தமிழ்நாட்டை பற்றியது என்பதாலும், தமிழ்நாட்டு மூத்த அரசியல்வாதியின் குடும்பம் பற்றியது என்பதாலும், காங்கிரஸ்-திமுக உறவு பற்றியது என்பதாலும், நடக்காததை நடந்ததாக வெளியிட் யாருக்கும் உரிமையில்லை எனப்துய் மட்டுமல்ல, திரித்து எழுதத் யாற்றுக்கும், எப்போதுமே உரிமையில்லை என்பதால், ஆங்கில ஏடுகள் வெளியிடுவதால் எல்லாமே உண்மையாகிவிடாது என்று கூறத்தான் நாம் குறுக்கே விழுந்து சொல்ல வேண்டி இருக்கிறது.

4 comments:

M.Mani said...

கொள்ளைக்கார குடும்ப வக்கீலா தாங்கள்?

மு.சரவணக்குமார் said...

அவருடைய கருத்தை பதிவாக சொல்லியிருக்கிறார், ஏற்புடையதாக இல்லையென்றால் கருத்தின் மீது உங்களின் விமர்சனத்தை வையுங்கள். அதை விடுத்து தனிப்பட்ட முறையில் அவரை கேலி செய்வது போல் பேசுவதால் எதை நிறுவிட விரும்புகிறீர்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்கிறீர்கள் மணி!

MANASAALI said...

\\\சீ.பி.அய். சோதனைகளையும் விசாரணையையும் தொடங்கி உள்ள நேரத்தில், அடுத்து "கைது" அவருமா? என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில்,\\\

அடுத்த கைது அவருமா? என்றெல்லாம் யாரும் பேசவில்லை. கேடி சகோதரர்களை இன்னும் ஏன் சி.பி.ஐ கைது செய்யாமல் இருக்கறது என்று தான் பேசிக்கொள்கிறார்கள்.

Maniblog said...

எம்.மணி கேலி பேசியது தவறு அல்ல. மு.சரவணன் அவர்களே உங்கள் கருத்து சரிதான். ஆனாலும் எம்.மணி போன்றோர் கருத்து நாட்டில் பெரும்பான்மையினரிடம் இருக்கிறது. ஏன் என்றால் முன்னாள் மன்னர் குடும்பத்திற்குள் ஆண் ஆதிக்க குடும்பம், பெண் தலைமை குடும்பம் என்று இருப்பதும் அதில் ஆண் ஆதிக்க குடும்பத்தினர் செய்யும் கெடுதல்களுக்கும் பெண் தலைமை குடம்பத்தினர் தண்டிக்கப்படுவதும், அதை பார்த்து கிழத் தந்தை வருந்துவதும் அவருக்கு புரிய வாய்ப்பில்லை. அந்த ஆணாதிக்கவாதிகள் ஊடகங்களில் விளையாடுவதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நம்மக்கு தெரிந்த ஒரு உண்மை என்னவென்றால் குடும்ப சண்டையை தாண்டி அந்த குடும்பத்தில் "பாலின வேறுபாடு " இன்றி அனைவரும் திட்டமிட்ட "கொள்ளைகாரர்கள்" என்ற நமது கருத்து அவருக்கு தெரியாமல் இருக்கிறது. பரவாயில்லை. கொள்ளையை எதிர்க்கவேண்டும் என்று எம்.மணி எதிர்பார்ப்பது நல்லதுதானே.

Post a Comment