மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெய்தாபூர் அணு உலை வர இருக்கிறது. அது ஆசியாவிலேயே பெரியது என்கிறார்கள். அப்படியானால் பெரிய அளவில் பாதிப்பு இருக்குமா என்று கேட்டு விடாதீர்கள். அதை பெரும்பான்மையான அந்த வட்டார மக்கள் எதிர்க்கிறார்கள். காங்கிரஸ் மட்டுமே ஆதரிக்கிறது. அதற்காக நமது பிரதமர் பிரான்ஸ் நாட்டு பன்னாட்டு மூலதன நிறுவனமான அரவே என்ற மைப்பில் "ஆறு உலைகளுக்கு" ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அந்த குறிப்பிட்ட நிறுவனம் பிரான்ஸ் நாடு அணு உலை மூலம் எழுபத்தைந்து விழுக்காடு மின் தேவையை நிரப்பினாளும்கூட, எப்படி "பாதுகாப்படர் முறையில்" நடந்து கொண்டுள்ளது என்பது சமீபத்தில் அம்பலமாகி விட்டது.
அதாவது பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் அந்த நிறுவனத்தின் "அணு கழிவான உரேனியம் கழிவை" நிலத்தடி நீருக்குள் திரவமாக்கி இறக்கி விட்டதை கண்டுபிடித்து அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அபராதமாக நாற்பதாயிரம் டாலர்கள் தண்டனை கொடுத்துள்ளது. இது எதை காட்டுகிறது? எழுபது விழுக்காடு தங்கள் மின் தேவையை அணு உலைகள் மூலம் நிரப்பி கொள்ளும் ஒரு நாடு, .எந்த அளவுக்கு அந்த அணு உலைகள் விசயத்திலும், அதன் கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் "கவனமாக " இருக்கும் என்று நாம் பெருமை பட்டுகொள்கிறோம். ஆனால் அப்படி கவனம் அங்கே உள்ள அரசாங்கத்திற்கும், அங்கே உள்ள அணு உலைகளை தயாரிக்கும் பெரிய நிறுவனத்திற்கும் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திடம் நமது பிரதமர் ஜெய்தாபூர் அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போட்டார் என்றால் இவை எவ்வளவு பாதுகாப்பானவை? இதனால்தான் சிபிஎம் அப்படி ஒரு பதினைத்து பேர் கொண்ட குழுவை மைத்து அந்த அணு உலைகள பற்றி ஆய்வு செய்ய போகிறது. ஆகவே அது வரவேற்க வேண்டிய செய்திதான்.
ஆனால் அதே சீ.பி.எம். கட்சிக்கு "கூடங்குளம், கல்பாக்கம்" பற்றியும் அதே அளவில் கவலை இருக்க வேண்டும் அல்லவா? ஏன் இல்லை? இது தமிழ்நாட்டில் தமிழர்களை கொள்ள வரும் ஆலை என்பதாலா? அப்படி இருக்காது. இது ரஷ்யா விற்கின்ற அணு உலைகள என்பதால் அவர்கள் இந்த அணு உலைகள எதிர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்று இன்னமும் முடிவு செய்யவில்லையா? அல்லது பிரிந்த காரட் மதுரை வந்தபோது, புகுஷிமாவிற்கு பிறகு தங்கள் கட்சியும் அணு உலைகள பற்றி மறுபரிசீலனைக்கு வந்துவிட்டோம் என்று கூறியதும், உடனேயே சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ஆர். நாங்கள் கூடங்குளம் அணு உலையை எத்ரிக்க வில்லை என்று கூறினாரே அதில் நாம் குழம்பி கொண்டிருப்பதை கண்டு அவர்கள் சிரித்து கொண்டு இருக்கிறார்களா?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
போலி கம்யூனிஸ்ட்கள் குழப்பி கொண்டு இருக்கிறார்கள், பொதுமக்கள் குழம்பி கொண்டு இருக்கிறோம்.. உண்மையான கம்யூனிஸ்ட்கள் கையை பிசைந்து கொண்டு இருக்கிறார்கள்..
Post a Comment