முன்னாள் அமைச்சரும், திமுக வின் முக்கிய பிரமுகரும், கட்சிக்குள் ஸ்டாலின் குழுவின் ஒரு வலுவாய்ந்த பிரமுகரும், திருச்சியின் முடிச்சூடா மன்னருமான கே.என்.நேருவின் நிழலான ராமஜெயம் நேற்று காலை நடைபயிற்சி செல்லும்போது, அவரது வீடு உள்ள தில்லைநகரின் பத்தாவது குறுக்கு தெருவிலிருந்து அதிக தொலைவு செல்லும் முன்பே, நிறைய பேர் நடபயிர்ச்சி செய்யும் வேளையிலேயே கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேருவிற்கு பணம் சேர்க்கும் பலம், வணிகம் செய்யும் பலம், அடியாள் சேர்க்கும் பலம், தேர்தல் பனி செய்யும் பலம், திருச்சி நகர் எங்கும் மாவட்டம் எங்கும் காவல்துறையை செல்வாக்கு செலுத்தி அனைத்தையும் ஆளும் ஆள் பலம் தம்பி ராமஜெயம்தான். அப்படிப்பட்ட ராமஜெயத்தை தூக்கி சென்று கொலை செய்து விட்டார்கள்.எதற்காக? என்ற கேள்விக்கு ஆளாளுக்கு ஒரு கதையை சொல்கிறார்கள்.
முதலில் நேற்று முட்டை ரவி குழுவினர் என்றனர். முட்டை ரவி கள்ளர் சமூகத்தவர். அவரைகாவல்துரை ரவுடி என்றது. காவல்துறையே "போலி துப்பாக்கி சூட்டில்" சுட்டு கொன்றது. அது நடந்தது திமுக ஆட்சியில்.முட்டை ரவி ஸ்ரீதர வானடையாருக்கு தேர்தல் பனி ஆற்றியவர். அவருக்கு எதிராக நேரு செயல்படுவதை கண்டித்தவர். அதற்காக வரத்து கொலையை காவல்துறை மூலம் தூண்டி விட்டவர் என்று, ராமஜெயத்தை குற்றம் சாட்டினால், அந்த முட்டை ரவி இறந்த பிறகு அவரது ஆள் என்று குணா சிறையில் இருந்து கொண்டே திட்டமிட்டிருப்பார் என்றனர். அதுவும் வெறும் கற்பனை என்று ஆகிவிட்டது. அடுத்து திருச்சி அருகே மணப்பாறை அருகே வையம்பட்டியில் ஒரு காருடன் இரண்டு ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் ஐது ஆண்டுகளுக்கு முன்பு எரித்து கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் சிறையில் இருந்த " குடமுருட்டி சேகர்" இரண்டு நாள் முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு கொடுத்த வாக்குறுதி படி ராமஜெயம் கொலையை செய்ய சொன்ன உடனே கொடுத்த பணம் தவிர மீதி பணம் கொடுக்க வில்லை, என்பதால் அவரது பழி வாங்கும் நடவடிக்கை என்றனர். அதுவும் இல்லை என்றாகி விட்டது.
நேருவையும், ராமஜெயத்தையும் நில மோசடி வழக்கில் கைது செய்யாமல் இருக்க ஐந்து மாதம் முன்னாள், ராவணனிடம், அவர் கேட்ட பத்து கோடி கொடுக்காமல், தான் ஒப்புக்கொண்ட ஏழு கொடியையும் கொடுக்காமல், இரண்டு கோடி மட்டுமே ராமஜெயம் கொடுத்தார் என்பதால், கோவை சிறையிலிருக்கும் சசிகலா சொந்தம் ராவணன் ஏற்பாடு செய்து, கூலி படை வைத்து கொன்று விட்டார் என்றனர். அதற்கும் ஆதாரம் இல்லை. திருச்சி அறிவாலயம் கட்ட அடுத்தவர் நிலத்தை பறித்ததால், பறி கொடுத்தவர் ஏற்பாடு என்றனர். அதுவும் இல்லை என்று கூறிவிட்டார்கள். சொந்தகாரர் நெப்போலியன் பெரம்பலூர் தொகுதியை ராமானுஜத்திற்கு கிடைக்காமல் ஆ.ராஜா மூலம் பிடுங்கி விட்டார். பிறகு மத்திய மைச்சராகவும் ஆகிவிட்டார். இது அந்த வட்டார திமுகவிற்குள் உள்ள உல் முரண்பட்டு. தனது தாயார் சாவுக்கு வந்த நேபோலியானை இழிவு படுத்தி ரானஜெயம் அனுப்பினார். அதேபோல சொந்தகார ரெட்டியார்கள் முன்னாள் அசிங்கம் செய்ற்ற்ஹு இன்னொரு முறை அனுப்பினார். அகவே நேபோலியானுக்கு ராமஜெயம் மீது கோபம். நெப்போலியன் தனது குடும்பத்தை அமெரிக்காவில் நிரந்தரமாக் தானாக வைத்து விட்டு, இப்போது அமெரிக்க "பச்சை அட்டை" வாங்கி விட்டு போய்விட்டார். ஆகவே அவர்தான் ஆள் வைத்து செய்தாரா? என்றனர். அதுவும் இல்லை என்றாகி விட்டது.
சமீபத்திய அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் வந்த இடை தேர்தலில், ,நேரு மீண்டும் நின்றபோது, ராமஜெயம் பத்து கோடி செலவழித்ததால் ஆத்திரப்பட்ட ஆளும் தரப்பினர் என்றார்கள். அதுவும் இல்லை என்றாகி விட்டது. எப்படியோ காவல்துறையினர் போலத்தான் இருந்தார்கள் என்று கடத்தல்காரர்கள் பற்றி வட்டார் சாட்சிகள் கூறுகின்றன. நடைபயிற்சியில் கொலை செய்வது என்பது, அரசியல்வாதிகட்கு,வழமையான் ஆபத்துதான் என்றால், எம்.கே.பாலன் சென்னையில், தா..கிருஷ்ணன் மதுரையில், ஆலடி அருணா நெல்லையில் இப்போது ராமஜெயம் திருச்சியில் என்றால், ஊருக்கு ஒருவராய் கொலை செய்வார்களோ? என்று எண்ண தோன்றும். ஒவ்வொரு செயலுக்கும் பதிலடி கொடுத்தால் எத்தனைகொலைகள் விழும்?
Friday, March 30, 2012
Subscribe to:
Posts (Atom)