நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் சென்னையில் பிப்-4 இல் தனது முதல் அறிமுக கூட்டத்தை தியாகராய நகர் தேவர் திருமண மண்டபத்தில் நடத்தியது. அதன் அமைப்பாளர் பேரா.சரஸ்வதி தலைமை தாங்க, பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, தியாகு, திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன், மருத்துவர் எழிலன், அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் உரையாற்றினர்.இடையில் திடீரென நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் உருத்திரகுமார் தனது உரையை இணையதள திரை மூலம் நியூ யார்க் நகரிலிருந்து ஆற்றினார். அதில் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் தொடங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து அந்த கூட்டத்தின் ஒரு உரையாளராக கலந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.
முதலில் ஈழப்போரில் உயிர் துறந்த போராளிகளுக்கும், அப்பாவி மக்களுக்கும் கூட்டம் அஞ்சலி செலுத்தியது. தலைமை உரையாற்றிய பேரா.சரஸ்வதி, நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் என்ற அந்த கூட்ட தலைப்பிற்கு அழகான விளக்கத்தை தந்தார். ஆயுதம் தாங்கிய ஈழப்போரின் பின்னடைவுக்கு பின் தமிழர்கள் சோர்ந்துவிடாமல், அரசியல் அரங்கில் ஒரு அனைத்துநாட்டு வடிவம் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவி இருப்பதன் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொண்டார். புதிதாக விடுதலை பெற்றுள்ள தெற்கு சூடான் அரசு நாடு கடந்த தமிழீழ அரசை அங்கீகரித்திருப்பதை சுட்டி காட்டினார். தாங்கள் தொடங்கி இருக்கும் தோழமை மையம் இந்தியளவில் அந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக அதன் அங்கீகாரத்தை உலகம் தழுவிய அளவில் பெறுவதற்காக பாடுபடும் என்றார். அதன்பிறகு தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு அந்த தமிழீழ அரசின் செயல்பாடுகளின் தேவையை விளக்கினார்.
அடுத்து உரையாற்ற தமிழக இளைஞர் இயக்க தலைவர் மருத்துவர் எழிலன் தொடங்கினார். அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆணைய துணை தலைவர் பேரா.நாகநாதனின் மைந்தன் என்பதால் கூட்டம் அதிக ஆர்வத்துடன் அவர் எடுத்துவைத்த சஐதிகளை கவனித்தது. எழிலன் சூடான் நாடு எப்படிப்பட்ட சூழலில் சிக்கி இருந்தது என்று விளக்கினார். வட சூடானில் உள்ள அரபிகள் பணம் படைத்தவர்களாக என்னை வளம் மிக்க நிலங்களை ஆள்பவர்களாக
இருஹ்தார்கள் என்றார். அவர்கள் தெற்கு சூடானில் இருந்த பழங்குடி மக்களை குதிரையில் சென்று சாட்டை கொண்டு அடித்து வேலை வாங்கினர் என்றார். அதனால் கொந்தளித்த அந்த மக்கள் பெரும்பாலும் கிறித்துவ மதம் சார்ந்தவர்களாக இருந்த அந்த தெற்கு சூடான் மக்கள் தங்கள் விடுதலைக்காக சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தை நடத்தி முப்பத்தைந்து ஆண்டுகள் போராடினர் என்றார்.அவர்களது போராட்டம் எழ தமிழர்களின் போராட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படவேண்டும் என்றார். அந்த நாடு இப்போது கருத்துகேட்பு வாக்கெடுப்பில் சுதந்திர நாடாக ஆகியுள்ளது என்றார். அத்தகைய நாட்டின் அழைப்பு நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பெரும் அங்கீகாரத்தை அனைத்து நாட்டு தளத்தில் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மேலும் பேசிய மருத்துவர் எழிலன், இங்கும் தோழமை மையம் பல்வேறு கொள்கைகள் கொண்ட பல அமைப்புகை சேர்ந்தவர்களால் இணைக்கப்பட்டிருப்பினும் ஒரு குறைந்த பட்ச போது வேலை திட்டத்தின் கீழ் செயல்படவேண்டும் என்றார். அடுத்து பேசிய ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, தெ.சீ.சு.மணி என்று அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் மக்கள் சிவில் உரிமை கழகம் என்ற பி.யு.சீ.எல். என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அகில இந்திய மனித உரிமை அமைப்பின் தேசிய குழு உறுப்பினர் என்றும் கூறப்பட்டது. அவர் மாவோ கூறிய மேற்கோளான," போர் என்பது ஆயுதம் தொக்கும் அரசியல், அரசியல் என்பது ஆயுதம் தோக்காத போர்" என்று கூறி தொடங்கினார். வன்னியில் நடந்த நான்காவது போர் ஒரு தற்காப்பு போராக இருந்ததை, புலிகள் கிழக்கிலிருந்து திருநப அழைக்கப்பட்டதையும், மன்னர் தாக்குதல்களினால் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் புலிகள் இருந்த வன்னி பகுதிக்குள் புகலிடம் தேடி வந்ததையும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கடைச்யாக முள்ளிவாய்க்கால் என்று அவர்கள் இடம் பெர்ந்ததையும் குறிப்பிட்டு தற்காப்பு போரை புலிகளின் தலைமை தெரிந்தே நடத்தியது என்றும் அதனால் ஏற்படும் அனைத்து நாட்டு அரசியல் போராட்டத்தை போராளிகளின் தலைமை புரிந்தே இருந்தது என்றும் வாதிட்டார். அதன் விளைவே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்றார். ஆயுதப்போராடத்தையும், அரசியல் போராட்டத்தையும் எதிர் எதிராக காணக்கூடாது என்றார்.
அடுத்து பேசிய வேப்தமிழ்துனியா ஊடகவியலாளர் அய்யநாதன், ஈழப்போராட்ட வரலாற்றில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு பொதுமக்கள் பெரும் அளவில் வாக்களித்த காலம் தொட்டு இன்று உலக அளவில் புலம் பெயர்ந்த தமிழர் இடையே என்பது நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையே நாடு கடந்த தமிழீழ அரசு என்றார். அதற்கான அங்கீகாரத்தை உலக அரங்கில் இன்று தெற்கு சூடான் கொடுத்திருப்பது போல பெற்றுத்தர நாம் போராடவேண்டும் என்று நாடு கடந்த தனிழீழ அரசு தோழமை மையத்தை தாங்கள் தொடங்கி இருக்கும் காரணம் பற்றி விளக்கினார்.
அடுத்து அந்த தேவர் மண்டபம் ஆச்சர்யத்தில் மூழ்க இணையதளம் மூலம் அங்கிருந்த திரையில் தோன்றி நாடு கடந்த தமிழீழத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் ருத்திரகுமார், ருத்ரா என்ற பெயர் அறிவுப்புடன் பேசினார். அதில் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் பேரா.சரஸ்வதி தலைமையில் தொடங்கப்பட்டுள்ளதர்க்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். தனது உரையில் தேசிய தலவரின் விருப்பத்திற்கினங்க இந்த அரசியல் களத்தில் தாங்கள் நிற்பதை கூறினார்.தெற்கு சூடானின் மக்கள் விடுதலை இயக்கம் எப்படி தங்களது அரசு தொடக்க நிகழ்விலேயே கலந்து கொண்டது என்பதை தெரிவித்தார். தமிழக கடற்கரை ஓரம் மீனவர்கள் சிகல கடற்படையால் கொலை செய்யப்படுவதையும், சமீபத்தில் புபவனம் ஜெயகுமார் கழுத்து நேரிக்கப்பட்டநிலையில் சிங்கள கடல் படையால் கொல்லப்பட்டதையும் குறிப்பிட்டு தங்கள் அரசு சார்பாக கண்டனம் தெரிவித்தார். சிங்கள பௌத்த பேரினவாத அரசு எவ்வாறு தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல் மூலம் இந்திய அரசின் மீது தாக்குதல் நடத்துகிறது என்று கூறினார். இந்திய நடுவன் அரசு சிங்கள அரசுக்கு உதவி செய்து அதன்மூலம் தமிழர்களை அழிப்பதற்கு ஒத்த்டுழைப்பு கொடுத்து ஒரு மாய நம்பிக்கையில் இருக்கிறது என்று விளக்கினார். ஆனால் சிங்களம் இந்தியாவை நம்பவில்லை என்றார்.
அடுத்து பேசவந்த இந்திய தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், முஸ்லிம்களான தாங்களும் தமிழர்கள்தான் என்றார். இலங்கையில் வாழும் முஸ்லிம்களில் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு தமிழர்கள்தான் என்று விளக்கினார். ஈழத்தமிழர் தொடர்ந்து அழிக்கப்பட்டதையும், இப்போது வாழ்வதற்கே வழி இன்றி துன்பப்படுவதையும் விளக்கும் போது அழுது விட்டார்.அது கேட்ட மேடையில் அமர்ந்திருந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் அழுதுவிட்டார். மலையாக தனிழர்கலான இந்திய வம்சாவழி தமிழரும், இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களும், எழத்தமிழர்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார். முஸ்லிம்கள் ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களுடன் இணைந்தே போராடினர் என்றும், சிங்கள சதியால் அவர்கள் இருவரும் பிரிக்கப்பட்டனர் எனவும் கூறினார்.
அடுத்து உரையாற்றிய கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன் தாங்கள் பெங்களூருவில் மற்றும் கர்நாடக தமிழ்நாடு எல்லையில் நடத்திய ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை தெரிவித்தார். ஆயுதப்போராட்டம் மூலம் விடுதலை அடைவதை விட்டுவிடக்கூடாது என்றும், இந்திய இசை நம்பக்கூடாது என்றும், அரசியல் போராட்டமும் தேவைதான் என்றும், தமிழ்நாடு பிரிந்து செல்லும் போராட்டம் நடத்தபடவேண்டும் என்றும் கூறினார். பேரா.சரஸ்வதி ராசனது அந்த சொந்த கருத்தை சுட்டிக்காட்டி இந்த தோழமை மையம் ஈழத்தமிழரது அரசு அமைவதற்கான ஒற்றை கோரிக்கையை முன்வைக்கிறது என்று விளக்கினார். அதை அடுத்து பேசிய பெரியார் தி.க.தலைவர் கொளத்தூர் மணி சிறப்பாக ராஜன் எழுப்பிய கேவிகளுக்கு விடை பகன்றார். அதாவது அவரவர்களது தனி கொள்கைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள டத்தை கணக்கில் கொண்டு அதற்குள் நின்று அத்தகைய ஒரு அரசின் அங்கீகாரத்தை உலக ளவில் பெற போராடும் என்றார். ஏற்கனவே இந்திய அரசு கண்ட பாரதம்தான் புலிகளின் கொள்கை என்று பொய் சொல்லி வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார். புலிகளின் மீதான தடையாய் ஆய்வு செய்ய போடப்பட்ட தீர்ப்பாயம் முன்பு இந்திய அரசு புலிகளின் தொடர்ச்சியே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்று திசை திருப்பும் வேலையை சேதத்தையும் சுட்டிக்காட்டினார்.
நிறைவு உரை நிகழ்த்திய திரைப்பட இயக்குனர் மணிவன்னான், நாடு கடந்த தமிழீழ அரசு அப்ற்றி சந்தேகங்களை கிளப்பியவர்களை நாம் கோபப்படவேண்டாம் என்றும், அத்தகைய சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார். பல்வேறு கேள்விகளை அனைத்து நாட்டு தளத்தில் கிளப்பிவருவதால், இத்தகைய சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாது என்றும் விளக்கினார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரே என்று விளித்து, நீங்கள் அங்கீகாரத்திற்காக பல அரசுகளிடம் பேசுங்கள், அதேசமயம் எங்களுக்கு வழிகாட்டுங்கள் அதே கோரிக்கைகளுக்காக நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆயத்தமாக உள்ளோம் என்று முத்தைப்பாக கூறியது பெரும் அளவில் வரவேற்கப்பட்டது.
சென்னை எங்கும் இந்த அறிமுக கூட்டத்திர்க்கான சுவரொட்டிகள் தென்பட்டன. ஆயிரக்கணக்கில் துனடரிக்கைகளும் விநியோகம் செய்யப்பட்டன. கூட்ட அரங்கு அருகே அகில இந்திய பார்வார்டு பிளாக் அமைப்பினர் ஒட்டியிருந்த சுவரொட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்த்தது. அதில் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் படமும், முத்துராமலிங்க தேவர் படமும், மூக்கையா தேவர் படமும் போட்டு, நேதாஜி வழியில் உருவான நாடு கடந்த தமிழீழ அரசுக்கு முதல் அங்கீகாரம் அளித்த சுதந்திர தெற்கு சூடன் அரசுக்கு ன்றி என்று அறிவித்திருந்தது வித்தியாசமாக இருந்தது.
---------- Forwarded message ----------
Saturday, February 5, 2011
Subscribe to:
Posts (Atom)