வெற்றிபெற்றது கணினி தமிழ் வளர்ச்சி மாநாடு
ஞாயிறு காலை தொடங்கிய கணினி தமிழ் வளர்ச்சி மாநாடு தொடக்கிய நிலையிலேயே, அரசு செயலாளர் உட்பட, பல அரசுதரப்பு அதிகாரிகள் மேடையில் காட்சி அளித்தும், முதல் வரிசையில் அமர்ந்திருந்ததையும் காண முடிந்தது. அதுவே மாநாட்டின் வெற்றியை பறை சாற்றுவதாக அமைந்தது. அதையும் தாண்டி தமிழ் அறிஞர்கள் பலர் குறிப்பாக "பலகலைக்கழக தமிழ் ஆய்வாளர்களும், மாணவர்களும்" கலந்துகொண்டது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. .மொழியியல் அறிஞரும், முன்னாள் சென்னை பலகலை கழக தமிழ்த் துரையின் தலைவருமான ந.தெய்வசுந்தரம் தலைமையில் மாநாடு தொடங்கியது.கண்ணன் "மதிநிறைந்த நன்னாளில்" என்று தொடங்கினார். அன்று மார்கழி முதல் நாள். மார்கழி மாதம் எப்படி ஓசோன் என்ற 'பிராணவாயு மணடலத்தை"வலுப்படுத்தும் தன்மையை கொண்டதோ, அந்த மண்டலம் வலுப்பெறும் பாணியில் "கணினி தமிழும் வலுப்பெறும்" என்று இந்த மாநாடு கட்டியம் கூறியதோ?
தெய்வசுந்தரம் தனது வரவேற்புரையில் "பல கணினி வழி தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களையும்" சுட்டிக் காட்ட தவறவில்லை. அடுத்து பேசிய "தமிழ் வளர்ச்சி துறை / அறநிலைய துறை / செய்தி துறை ஆகியவற்றின் அரசு செயலாளர் திரு. ராசாராம் பேச தொடங்கினார். தொடக்கத்திலேயே, "இந்த மாநாட்டின் கதாநாயகனான தெய்வசுந்தரம் அவர்களே" என்று விளித்து ஆரம்பித்தது, சிறப்பாக இருந்தது. தமிழ் அறிஞர்களுக்கு இப்படி ஒரு சிறப்பை கொடுக்கும் அளவில் அரசு செயலாளர் உரையாற்றுகிறாரே? என்ற எண்ணம் அண்மைக்கு வந்தது. அப்படியானால் அவர் கூறியதுபோல தமிழக முதல்வர் உடனடியாக "கணினி தமிழ் வளர்ச்சிக்கு" ஒரு தொகையை ஒதுக்கி, தமிழ் வளர்ச்சிக்கு உண்மையாகவே உதவுவார் போன்ற தோற்றம் வந்தது. அதுவே மாநாடு முழுவதும் நமக்கு வரும் அளவில், அரசு தரப்பு பிரமுகர்கள் ஒவ்வொருவரும் பேசியது ஆறுதலாக இருந்தது.
அடுத்து அருள் நடராசன் பேச வந்தார். அவர் தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்பு துரையின் இயக்குனர். அவர் "தான் தெஇவசுனடரத்தின் மாணவர் என்றும், தங்களுக்கு உலக மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கியை அறிமுகம் செயடஹ்வைரே பேராசிரியத் டேஹிவசுந்தரம் என்றும் கூறினார். அதேபோல அவரது முயற்ச்சியில் கணினி தமிழ் வளர்ச்சிக்கு அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று தஹ்ருவோம் என்று உறுதி கூறினார்.
தஞ்சை தமிழ் பலகளிக்கழக துணை வேந்தர் திருமலை பேசினார். அவர் மதுரை பலகலையில் இருக்கும் போது, பேராசிரியர் தெஇவசுண்டரத்தை அழைத்து, ஆர்வமிகு பேச்சு ஒன்றை அமைத்ததாகவும், அதேபோல எப்போதும் அவர் மீது பெரும் பற்று கொண்டிருப்பதாகவும், அது தெஇவசுண்டரத்திர்க்கெ தெரியாதுஎ ன்றும் கூறி வியக்க வைத்தார். அதேபோல தான் மேடையிலேயே அரசு செயலாளரிடம், பேராசிரியர் தெய்வசுந்தரம் இப்போது ஒய்வு பெற்று இருப்பதால், நாம் அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும், அதருக்கு அரசு செயலாளர் ராசாராம் "என்ன செய்யவேண்டும். சொல்லுங்கள்" என்று கேட்டதாகவும் தஞ்சை தமிழ் பலகலையில் அவரை கவுரவ பேராசிரியாக நியமிக்க வேண்டும் என்று கூறியதாகவும், அவரும், செய்யுங்கள் என்று ஒப்புதல் கொடுத்ததாகவும் கூறி கைதட்டலை பெற்றார்.
தஞ்சை தமிழ் பலகளிக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் குணாகரன் பேசினார். அவர் தமிழின் கணினி வளர்ச்சி என்றால் என்ன என்பதை எளிமையாக ஆதரங்களுடன் விளக்கம் தந்தார். அன்றைய காலை
அமர்வு நிறைவுற்றது .
"மின்னணு கருவிகளில் தமிழ் பயன்பாடு" என்ற தலைப்பில் அடுத்த மறவு பன்னிரண்டு மணிக்கு தொடங்கியது. அதில் ராம்கி அய்யா தலைமை ஏற்று, இப்போது இருக்கும் இழி நிலையில், தமிழ் தமிழ்நாட்டில் பேச்சு மொழியிலும் எழுத்து மொழியிலும், ஊடக மொழியிலும், வழக்காடு மனறத்திலும், பித்ரு மொழி நிலையிலும், இல்லாமல் இருப்பதை வேதனையுடன் எடுத்து சொன்னார். மெல்ல, மெல்ல சாகும் நிலையில் தமிழ் இருப்பதை எடுத்து கூறினார். தமிழ் அருதியியல் அவ்ள்ளுனர் நாக.இளங்கோ அடுத்து பேசினார். அவரும் தமிழ் கண்ணினியில், இணையத்தில் முன்னேறி இருப்பதாக கூரபப்டுவது ஒரு "மாயையே" என்று விளக்கினார். தேனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜெச்வின் பிரசிசிடா பேசினார். அவரும் தமிழ் இன்று இருக்கும் வலரா நிலையி சுட்டி காட்டினார். எப்படி கிராமப்புறங்களில், இணையமமே எட்டா கனியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். அடுத்து பேசிய ராஜ்குமார் பழனிச்சாமி, சில செய்திகளை கூறி பார்வையாளர்களை உசுப்பிவிட்டார். தொடர்வண்டி துறையில் நடுவண் அரசு "பயணச்சீட்டிலும், வண்டியில் ஓட்டும் பயணிகள் பட்டியலிலும்" தமிழில் எழுதாமல் இருப்பது தமிழ் மட்டுமே தெரிந்த ஏழை மக்களுக்கு பெரும் துன்பமாக இருக்கிறது என்றார். கடைகளில் கொடுக்கும் " பொருள் விலை சீட்டுகளில்" தமிழில் இல்லை என்ற குறையை தமிழனின் குறை என்றார்.
புதுச்சேரி ஊடகவியலாளர் சுகுமாரன் பேசினார். அவரும் தமிழின் பயன்பாடு எந்த அளவில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பதை எடுத்து சொன்னார். அடுத்து பேசிய தெ சீ.சு.மணி, இந்த கணினி தமிழ் என்பதை கற்காதவர்கள், இன்றைய உயர் தொழில்நுட்ப காலத்தின் "எழுத்தரிவடர்வர்கள்" போல ஆகி விடுகின்றனர் என்றார். இந்த மாநாடு வெறும் தமிழ் வளர்ச்சி மட்டுமல்ல என்றும், கணினி இந்தியின் அடக்குமுறை எல்லா இந்திய மொழிகள் மீதும் இருக்கிறது என்றும், இந்த மாநாட்டின் மூலம் தமிழ் அதை எதிர்ப்பதற்கான முதல் குரலை எழுப்பியுள்ளது என்றும், நாம் எல்லா இந்திய மொழிகளின் ஒற்றுமையை கட்டி கணினி இந்தி நம்மை அடக்க முயல்வதை எதிர்த்த போராட்டத்தை கட்டமைக்க வேண்டும் என்றும் கூறினார். அதனால் இது அடுத்த கட்ட இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரின் பரிமாண வளர்ச்சி என்றார். மொழியை இனத்தை விட்டு பிரித்து பார்க்க முடியாது என்றும், அதனால் நாலாம் வன்னி போருக்கு பின்னால், தமிழ்நாட்டில் எழுந்துள்ள இன உணர்ச்சியை பயன்படுத்தி, "தம்" பிடித்து, தமிழ் வளர்ச்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.செந்தமிழ் சொர்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கக பேராசிரியர் மா.பூங்குன்றன் தேவக தமிழின் இன்றைய நிலையம், நாம் செய்யவேண்டிய வேலைகளையும் பட்டியலிட்டார்.
அந்த அமர்வில் பேசவேண்டிய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பேராசிரியர் அரணமுருவல் அடுத்த அமர்வில் தனது கருத்துக்களை ஆவேசமாக பதிவு செய்தார். இரண்டாம் அமர்வு கணினி தமிழ் வளர்ச்சி திட்டம் என்ற தலைப்பில் நடந்தது. அதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ தலைமை தாங்கினார். குறிப்பான் திட்டங்களை முன்வையுங்கள் என பேச்சாளர்களை கேட்டுக் கொண்டார். சென்னை பலகளிக்கழக முன்னாள் பேராசிரியர் வ.நாகராசன் இணையம் மூலம் ஒரு வகுப்பே எடுத்தார். அண்ணா பலகலையின் முன்னாள் பேராசிரியர் வி.கிருஷ்ணமூர்த்தி, கனடாவின் வாட்டர்லூ ஓல்களைக் கழக பேராசிரியர் சி.இரா.செல்வகுமார், அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் மா.கணேசன், மலாய் பல்கலைக் கழக பேராசிரியர் சோ.சுப்பிரமணி, சிங்கப்பூர் பேராசிரியர் ராஜெச்வரன் பூபாலன்,திராவிட பலகளிக் கழகம் பேராசிரியர் கோ.பாலசுப்பிரமணியன், மதுரை பல்கலை பேராசிரியர் உமாராஜ், புதுவை காஞ்சி மாமுனிவர் ஆய்வுமையம் பேராசிரியர் நா.இளங்கோ ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவு விழாவில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குனர் முனைவர் சேகர், சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ.விசயராகவன், ஆகியோர் தமிழ்நாடு அரசு விரைவில் இந்த மாநாட்டி கோரிக்கைகளை ஏற்றக் கொண்டு அமுல் படுத்தும் என்று உறுதி கூறினார். அது ஒரு ஆறுதலாக் இருந்தது. உத்தமம் செயலாளர் எ.இளங்கோவன், தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் ராசேந்திரன்,கணித் தமிழ் சங்கம் தலைவர் சொ.ஆனந்தன் ஆகியோரும் உரையாற்ற, செந்தமிழர் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் முனைவர் மு.கண்ணன் நன்றி கூறி இனிதே முடித்தார்.