Tuesday, December 18, 2012

காலச்சுவடு நடத்திய மொழிபெயர்த்த புத்தக வெளியீடு தரும் படிப்பினைகள்.


      இப்போதும் பிணங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பெயரை நாம் தொடர்ந்து கொடுத்து, அந்த ஆங்கிலேய எழுத்தாளர் பிராநிசி ஹாரிசன் எழுதிய "Still counting the  death " என்ற ஆங்கில பெயர் கொண்ட புத்தகத்துக்கு உயிருள்ள  பொருளை ஏற்படுத்தவேண்டும் என்று நினைக்கும் வேளையில், அந்த மொழிபெயர்ப்பு என்ற முக்கிய பணியை எடுத்து, பொறுப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ள "காலச்சுவடு" இதழ்காரர்கள், அந்த புத்தகத்தை "சாட்சிகள் இல்லாத யுத்தத்தின் சாட்சிகள்" என்ற பெயருடனேயே வெளியிட்டார்கள். சென்னை அன்னாசாலையில் உள்ள புக்போயன்ட் அரங்கில் 15 ஆம் நாள் சனிக்கிழமை அந்த வெளியீடு மாலையில் நிகழ்ந்தது. முதலில் கவிதை அரங்கமாக ஈழத்தமிழர் வாழ்நிலை பற்றிய அல்லது போர் தந்த வலிகள் பற்றிய கவி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

                        ஒரு ஆழமான விசயத்தின் மீதான வரலாற்று சாட்சிகளை முன்வைக்கும் தமிழர் அல்லாத பெண் எழுத்தாளரின் புத்தகத்தை தமிழாக்கி தரும் நிகழ்வில், கவி அரண்களை முதற்கட்டமாக ஒழுங்கு செய்த பதிப்பகத்தாறன ஏற்பாட்டாளர்களை பர்ரட்டவே செய்ய வேண்டும். அதிலும் சுகிர்தராணி கவிதை படிக்கிறார் எனும்போது செல்ல வேண்டும் என்ற அவா எழுந்தது. ஏற்கனவே ஊடகவியலாளர் கூட்டம் நடத்தப்பட்ட போது, எழுத்தாளரும், ஊடகவியலாளருமான பிரான்சிஸ் ஹாரிசன் உடன் ஊஅடவியலாலர்  கூட்டம் முடிந்த பிறகு நான் எழுப்பிய கேள்விகளில், ஒரு கேள்விக்கு நல்ல பதிலாக, "ஆமாம் அது போரிலிருந்து தப்பி வந்தவர்கள் கொடுத்த நேர்கானல்கள்தான்" என்றும், அதனால் அவை "உண்மை சார்பே தவிர, ஒரு சார்பல்ல" என்று அவர்கள் கொடுத்த பதில் என்னை திருப்தி படுத்தியது. ஆனால் அதே நேரம், அரசு நடத்திய போரில், தற்காப்பு போரை தவிர்க்க முடியாமல் நடத்த தள்ளப்பட்ட, விடுதலை புலிகளையும் "சமமாக" கணக்கிட்டு "இருபுறமும் நடத்தப்பட்ட போர் குற்றங்கள்" என்று கூறியதை நான் மறுத்தபோது, "அது உங்கள் கருத்து" என்று உலகின் "மனித உரிமை பார்வைக்கே சவால்" விட்டு அவர்கள் பதில் கூறியதை நான ஏற்கனவே சுட்டி காட்டி எழுதியுள்ளேன் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீதே போர் நடத்திய சக்திகளையும்அந்த போரை எதிர்கொண்ட விடுதலை வீரர்களையும் "ஒரே நிலையில்" வைத்து காணும் சர்வ தேசியம் எப்படி மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்க முடியும் என்ற நமது ஆதங்கத்தை அப்போது வெளிப்படுத்தியிருந்தோம். 

                           இப்போது புத்தக வெளியீட்டு விழா என்ற நல்லதொரு நிகழ்வுக்கு வருவோம். கவிதை அரங்கு எதிர்பார்ர்புடன் தொடங்கியது. முதலில் சேரன் கவிதைகள். தனது கவிதையை வரலாற்றின் மேல் பயணம் செய்ய அனுப்பினார். அதை தான் எழுதிய பழைய கவிதை என்றார்.உள்ளபடியே ரசிக்க முடிந்தது. அந்த வரிகளில், வேதனை, வலி, கொடுமை, இன அழிப்பு, பெண்களின் கதறல் எல்லாம் சேர்ந்து இந்த கவிதை இப்படியெல்லாம் பயணம் செய்துலல்தே? என்று வியக்க வைத்து. தனது இரண்டாவது கவிதையை கூறினார். அதில் 2009 ஆம் அண்டு நிகழ்வுகளை வேதனையுடன் வடித்திருந்தார். இந்த நூற்றாண்டுன் முதல் இன அழிப்பு போர் என்ற அவரது மதிப்பீடு  அதில் பதிவாகி இருந்தது. புத்தக வெளியீட்டிற்கு நல்ல தொடக்கம் என்று எண்ணினோம்.

                   மூன்றாவது கவிஞராக பரமேஸ்வரி வந்தார். பா.பொ சி.அவர்களின் பேத்தி. அவர் போற்குடர்ந்கள் பற்றி கொடுத்த படப்பிடிப்பு, தமிழ் உள்ளங்களை அசைக்கும். விதைகளாக ஆந்த போராளிகள் ஆகிப்போனார்கள் என்பதை கூறி முடிப்பார். அதற்காக கைதட்டல் பெற்றார். அடுத்து சுகிரதராணி வந்தார். அவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்கியத்தை எடுத்துக் கொண்டு சொல் சிலம்பம் ஆடினார். இப்படியும் இதை பார்க்கலாமா? என்று என்ன வைத்தார். ஈழத்தமிழனின் விடுதலைபோர் பற்றிய விவரிப்பில், போர் நடத்திய ரத்த சாட்சிகளை வர்ணித்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு சிந்திக்க வைக்கும் கேள்விகளை தந்தார். அடுத்து வரே "இசைப்ப்ரியா" பற்றிய கவிதையை அனைவரின் உள்ளமும் உருக கூறினார். இசைப்ப்ரியாவின் உடல் பேசியது . அப்பப்பப்பா. தாங்க முடியவில்லை. இசப்ப்ரியா மட்டுமே போர் குற்றத்திற்கான  முக்கிய சாட்சியாக இருப்பார். அந்த அளவுக்கு அந்த கவிதை தாக்கம் தந்தது. இளம்பிறை மேடையில் காணவில்லை. தாமதமாக வந்ததால், பின்னால் மறந்திருந்தார். கவிதை வாசிக்கவில்லை. அடுத்து யுவபாரதி மனிகண்டன். அவரது கவிதையில் ஈழ சூழலுக்கும், இங்கே தமிழ்நாட்டில் இருக்கும் "போலிகளுக்கும்" ஒப்பீட்டு வர்ணிப்பு என்னைக் கவர்ந்தது. 

                         இந்த வரிசயில் இஅர்ண்டவது கவிதை வாசித்த, "தேவேந்திர பூபதி" கவிதை பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன். அவர் ஈழம் பற்றி பாடவில்லை. அவர் "கடல் கடந்து பிழைக்க சென்றவர்கள்" என்று இரண்டு முறை அல்லது அதற்கும் மேலே குறிப்பிட்டார். ஓகோ."மலையக தமிழர் பற்றி" குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொண்டேன். "தேயிலை தோட்டங்களில் தமிழர்கள், வேர்வையையும், ரத்தத்தையும் சிந்தி, வளம் ஏற்படுத்தியதை" குறிப்பிட்டார். சரி. இவர் மைலையக தோட்டத் தொழிலாளர்களான "இந்திய வம்சாவளி" என்று அழைக்கப்படுபவர்களை குறிப்பிடுகிறார் என அறிந்துகொண்டேன். அவர்கள் "தென்னிலங்கையில் சிங்களர் இடையே வாழ்கிறார்கள்" என்பது கவிஞருக்கு தெரியுமா என எனக்குதெரியாது. ஆனால் நாம் பேசும் கவிப்பொருளும், போர் நிகழ்வும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பாரம்பரியமாக வாழும்,ஈழத் தமிழர்கள் பற்றி என்பது அவருக்கு சொல்லப் பட்டதா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இக் சிலபேர் "பிழைக்க போனவனுக்கு என்ன தனிநாடு கேட்குது?" என்று அதிக "அறிவுசாலிகளாக " கேட்கும் கேள்வியும் நினைவுக்கு வந்தது. இந்த கவிஞர் "வணிக வரித்துறையில் ஒரு பெரிய அதிகாரி" என அறிந்தேன். அதற்காக என்ன செய்ய முடியும்? அவருக்கு ஈழத்தமிழர் தான் அந்த நிலத்தின் பாரம்பரிய சொந்தங்கள் என்று டேஹ்ரியாவிட்டால் நாம என்ன செய்முடியும்? 

                        கூட்டம் முடிந்த பிறகு, இதே கேள்வியை எனக்குள் எழுந்ததை, நான் அறிவிப்பு செய்த கவிதா விடமும், சுகிரதராணி, மணிகண்டன், சேரன் ஆகியோரிடமும் வினவினேன். யாருமே பூபதி கவிதை எதை "பாடுபொருளாக" வைத்து படிக்கப்பட்டது என்று கவனித்தது போல தெரியவில்லை. கவனிக்கிறோம் இனி என்றார்கள். ஏற்பாட்டாளர்கள் இது பற்றி அதிகம் கவலை கொல்ல்வதில்லையா? பதிப்பகம் என்றால், வணிக பயன்பாட்டு மட்டுமே இல்லையே? இது படைப்பாற்றல் சம்பந்தப்பட்டது ஆயிற்றே?  அடுத்து சேரனும், சதானந்த மேனனும் பேசினார்கள். குர்டிஷ் இனத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து பயங்கரவாதி என்று முத்திரை குத்தி, சித்திரவதை செய்து, அவரை ஆப்கான் எடுத்து வந்து அங்கும் சித்திரவதை செய்த கதையை விளக்கினார். அரசுகள்தான் பயங்கரவாதிகளே தவிர, தனிநபர்கள் அல்ல என்றார். ஆனால் அரசுகள் தனிநபர்களை பயங்கரவாதம் என்று கோருகின்றன என்ற விளக்கத்தை தந்தார். உலகப் போர் நடத்தியவர்களை யாரும் கேள்வி கேட்கவில்லை.
இலங்கையை கேள்வி கேட்க ஏற்கனவே போர் குற்றம் செய்துவரும் நாடுகளால் முடியவில்லை என்றார். நிதி நிறுவனங்கள் மாபெரும் குற்றங்களை செய்கின்றன என்றார். தேசிய அரசுகள்தான் அதிகம் குற்றங்களை செய்கின்றன என்றார். 

 குர்டிஷ் இனம் போன்றோர், ஈழத் தமிழர் போன்றோர் உலகில் நாடுகள் இல்லாத, அரசுகள் இல்லாத இனங்கள் என்றார். அத்தகைய இனங்களுக்கு சர்வதேச மைப்புகளில் இடம் இல்லை என்றார். ஐ.நா.சாய் இன்று ஈழப்போரில் குற்றம்  செய்துள்ளது அம்பலப்பட்டுள்ளது என்றார். அதை நாம் ஒரு தளத்தில் எதிர்க்க வேண்டும் என்றும், அதே ன்றத்தில் இன்னொரு தளத்தில்  அதே ஐ.நா.வை இருக்கும் அனைத்து நாட்டு நிறுவனம் அதுதான் என்பதால் பயன்படுத்தவும் வேண்டும் என்றார். இந்த விவரம் இங்கே சிலருக்கு இல்லாமல், எதிர்த்தால் மட்டுமே "பெரிய ஆள்" ஆகலாம் கணக்கு போடுகிறார்களே? என எண்ண தூண்டியது. அடுத்து சதானந்த மேனன் வந்தார். நூலை பெற்றுக் கொண்டவர் அவர். சதானந்த மேனன் 1970 ஆண்டுகளின் மனித உரிமை ஆர்வலர், ஊடகவியலாளர். அவரை அன்றுமுதல் தெரியும் என்பதால் அவரது உரையை கவனமாக அகவந்த்தேன். ஆங்கிலத்தில் உரை ஆற்றினாலும் அவருக்கு இருக்கும் மனித உரிமை பற்று வெளியே வந்தது. ஒவ்வொரு டேஹ்சிய இனப் போராட்டங்களும், எதிரியை மேலும் மேலும் வலுப் படுத்த தூண்டுகிறது என்று எதிரிகளை அமபலப்படுத்தினார். ஆனாலும் அதில் இழப்பை சந்திப்பவர்கள் ஆள்வோரே என்றார்.

                         நேரடி சாட்சிகளை ஆவணப்படுத்துவது போரில் வெற்றி பெற்றோருக்கும், தோல்வியை சந்தித்தவர்களுக்கும், மிகவும் முக்கியம் என்றார். அந்த பணியை இந்த புத்தகம் செய்திருப்பதை சுட்டிக் காட்டினார். புத்தகத்தின் எழுத்தாளர் பிரான்சிஸ் ஹாரிசன் இதை ஒரு முக்கிய சாட்சியாக போற்குற்றங்களின் விசாரணையில் வைக்கமுடியும் என்று நம்புவதை நாம் எண்ணி பார்க்கிறோம். அனைத்து நாட்டு சமூகம் இந்த பெருக்கு ஒரு சாட்சொயாக் உள்ளது என்றும், மவுன சாட்சியாக் அவர்கள் இருந்ததை குற்றமாக கூறிய சதானந்தா மேனன் "இந்தியாவும் அந்த சமூகத்தில் ஒரு அங்கம் எனபது வெட்ககரமானது " என்று அமபலப்படுத்தினார். முன்னாள் தலைமை நீதியரசர் சமீபத்தில் காஷ்மீர் பற்றி கூர்யா சொற்களை, இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்துவிட்டால் காஷ்மீர் பிரச்சனை இருக்காது என்ற கருத்தை சுட்டிக் காட்டி  இரு அரசுகளின் செயல்களையும் சதானந்த மேனன் அம்பலப்படுத்தினார். எல்லை ரீதியான தேசிய இனம் பற்றியும், இன்று உலகில் வளரும்  நாடுகள் தாண்டிய மனித ஊடாடல் பற்றியும் அவர் குறிப்பிட்டார். எபப்டியோ, நாமும் நல்ல செய்திகளை அசைபோட இந்த ஹாரிசன் புத்தக் வெளியீடு உதவியதே என்று எண்ணிக் கொண்டு வெளியேறி வந்தோம்.