Sunday, June 17, 2012

பிரணாப் முகர்ஜி என்ற தமிழினக் கொலைகாரர் வருகிறாராமே?

பிரணாப் முகர்ஜி என்ற தமிழினக் கொலைகாரர் வருகிறாராமே?
      ஈழத்தமிழர்களை ஒன்றரை லட்சம் பேரை கொன்று குவித்தவர்களில், டில்லிக்கு முக்கிய பங்கு என்று உலகத்தமிழினம் கூறிவந்தாலும், அதில் சிலரை முக்கியமாக சொல்வார்கள். அவர்கள் எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், நிருபமா ராவ், மன்மோகன்சிங், ப.சிதம்பரம், என்று பட்டியலிடப்பட்டால் அதில் முக்கிய ஆளாக "பிரணாப் முகர்ஜி" இருப்பார். மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை இந்த பிரனாபிற்கு உண்டு. ஏன் என்றால் இவர் மஹிந்த ராஜபக்சேவிற்கு அண்ணன் முறை வேண்டும்.இவர்தான் கருணாநிதியை ஆவப்போது சந்தித்து , ஈழப்பிரச்சனை பற்றி பேசி, அதில் கருணாநிதியை "சமாதானம்" செய்யும் எல்லா வேலையும் "திறம்பட" செய்தவர். அதை அவ்வப்போது கருணாநிதியே கூற நாம் க்ட்டிருக்கிறோம். 

                     சிங்களவர்கள், வங்காளத்திலிருந்தும், அதன் எல்லையில் ஒரிசாவிலிருந்தும் சென்ற ஒரு இனத்தவர் என்று நம்புகிறார்கள். அதனால்தான் இந்த பிரணாப் மகிந்தாவின் அண்ணன் என்று நாம் குறிப்பட வேண்டியுள்ளது. அத்தகைய ஒரு தமிழர் ரத்தம் குடித்த கரங்களுக்கு சொந்தக்காரர் இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் நிறுத்தபடுவதே அவமானம்.  அவர் வாக்கு கேட்டு தமிழக தலைநகருக்கு வருவது அதைவிட அவமானம். நாம் என்ன செய்யப் போகிறோம்?

கோவிலில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்?

கோவிலில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்?
    ஆன்மிகம் அதிகமாக நமது முதல்வரது மனதில் திரண்டோடும். அதனால் அவர் ஆட்சிக்கு வந்ததும், ஆன்மீக உணர்வில், கோவில்களில் எல்லாம் "இலவச உணவு" போடுவார். இந்த முறை "கோவிலுக்கு வருபவர்கள் செருப்பு வைக்க இலவசம்" என்று அறிவித்தார். அது எல்லா கோவிலக்ளிலும் உடனடியாக அமுலுக்கு வந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலிலும், அதேபோல செருப்பு வைக்க இலவசம் என்ற நடைமுறை பெரும் பெயரை அந்த முதல்வருக்கு பெற்று தந்தது. இப்போது நிலை என்ன? செருப்பு வைக்கும் இடத்திலும் "காசு" வாங்குகிறார்கள். அதற்கு யார் காரணம்? கபாலீஸ்வரர் கோவிலின் அரங்காவலர்தானே பொறுப்பு? யார் இந்த அறங்காவலர்? 

                       அப்போலோ மருத்துவமனையின் பண்கால்லி முதலாளி, விஜயகுமார் ரெட்டி தான் அந்த அறங்காவலர். ஒரு தலைமை அறங்காவலர் நியமிக்கப்பட்டால், நான்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி இன்னமும், நன்கு அறங்காவலர்களை நியமிக்க வில்லை. ஏன்? அறநிலையத்துறை தானே அவர்களை நியமிக்க வேண்டும் அறநிலையத்துறையை மிரட்டி, அப்போலோ முதலாளி, தன்னை தவிர யாரையும் நியமிக்க விடாமல் தடுக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. அபப்டியானால் அறநிலையத்துறை "பக்தர்களுக்கு" பட்டை நாமம் போடுகிறதா? அறநிலையத்துறையின் துணை ஆணையராக ஒருவர் பொறுப்புக்கு வந்து, ஆண்டுக்கு ஐம்பது லட்சம் லாபம் கிடைக்க வழி செய்தால், அவரை "இணை ஆணையர்" பொறுப்புக்கு உயர்த்துவது வழக்கமாம். காசு வரவை வைத்தே இங்கே ஆன்மிகம் தழைத்தோங்குகிறது. அதனால் பக்தர்களை "துன்புறுத்தி" துணை ஆணையர் வசூல் செய்கிறார்.

                  சிறப்பு வழிபாடு என்று ஒன்றை வைத்து அடஹ்ர்க்கு அதிக 'காசு வசூலிப்பதை" சென்ற திமுக அட்சி நடைமுறையில் வைத்திருந்தது. அப்போது சிறப்பு வழிபாட்டு கட்டணம் என "நூறு" ரூபாயை வாங்கி வந்த்ஜார்கலாம். ஜெயலலிதா ஆட்சியில் அது வெறும் "பத்து" ரூப்பஎன குறைக்க பட்டதாம். அதையும்கூட இப்போது அதிகாரிகள் கூட்டி விட்டார்கள் என்று பக்தர்கள் புலம்புகிறார்கள். இப்போது சிறப்பு வழிபாட்டிற்கு, இருபது ரூபாயும், நூறு ரூபாயும் வாங்குகிறார்கள் என்று பக்தர்களின் குரல் ஒழிக்க தொடங்கி உள்ளது. கோவில் ஓடியவர்களின் கூடாரமாக ஆக்க கூடாது என்று முன்னாள் முதல்வர் வசனம் எழுதினார்.இப்போது அதிகாரிகளே அந்த கொடியவர்களாக மாறுகிறார்களா? சிவன் கோவிலுக்கே "பட்டை நாமமா?". 

பள்ளி கல்வித்துறையில் அதிகாரிகளின் ஊழல்     அமைச்சர் சீ.வி.சண்முகம் பள்ளி கல்வி துறைக்கு அமைச்சராக போடப்பட்டார். அவரது தம்பி கே.கே.நகரில் உட்கார்ந்துகொண்டு, ஒரு லட்சம், இரண்டு லட்சம் ஏன் ஆகாசு பெற்றுக்கொண்டு, ஆசிரியர்களின் "மாற்றல்  உத்தரவுகளை" பைசல் செய்தார். அதை நாம் ஊடக வாயிலாக பல முறை அம்பலப்படுத்தினோம். அதன்பிறகு அந்த இலாக்க மாற்றப்பட்டது. உண்மையில் அமைச்ஹ்ச்சர் சீ.வி.சண்முகத்திற்கு டேஹ்ரியாமல் அல்லது அவரது ஒப்புதல் இல்லாமல் அவரது அதம்பி இந்த ஊழல் வெளியாயி செய்துவந்தார் என்றும் அவர்தான் இவரை விழுப்புரத்தில் வெற்றிபெற வேலை செய்தார் என்பதால் அமைச்சரால் எதுவும் கேட்கமுடியாமல் போய்விட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் அதன்பிறகு அமைச்சர்கள் ஊழல் செய்வதை அரசு கவனிக்கிறது என்ற நிலையில், அதிகாரிகள் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கிவிட்டார்கள்.

                 இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் வரை "நிர்வாக" காரணங்களுக்காக என்ற பெயரில் "பலப்பல" மாற்றல் உத்தருவுகளை அதிகாரிகள் போட்டுள்ளனர். கல்வி இயக்கக ஆணையர் "சபீதா"விற்கு டேஹ்ரியாமலேயே இது நடக்கிறது. அதாவது "துணை ஆணையர்" தான் இத்தகைய வேளைகளில் அசகாய சூரராக இருக்கிறார். துணை ஆணையர் தொடங்கி, " தலைமை கல்வி அதிகாரி" வரை னைவரும் ஊழலில் பங்கு வாங்குகிறார்கள் என்கிறது நேரடி செய்தி. அவர்கள் ஒவ்வொரு ஆசிரியரின் மாற்றல் உத்தரவுக்கும்,குறைந்தது  "ஒரு  லட்சம்" அல்லது பெண் ஆசிரியர்களை தங்களது இச்சைக்கு அழைப்பது என்ற கேவலத்தை செய்து வருகிறார்கள்.திமுக ஆட்சியில்,  அமைச்சர் தங்கம் தென்னரசு கைகளுக்கு செல்லாமல், உதவியாளர்கள் காசு அடித்து "ஆசிரியர் பணி"யை விலைக்கு  விற்று வந்தார்கள். நாம் ஊடகத்தில் அமபல்ப்படுத்தி வந்தோம்.கருணாநிதி கூப்பிட்டு அமைச்சர் மூலம் ஒரு "ஏழாயிரம் " ஆசிரியர்களுக்கு மூப்பு அடிப்படையில் வேலை என்பதை "இலஞ்சக்காசு" வாங்காமல் நிறைவேற்றினார். 

             அப்போதும் இந்த ஊழல் அதிகாரிகள், வேண்டும் என்றே "எங்களுக்கு காசுதராமலே வேலை பெற்று விட்டீர்களா? உங்களை தள்ளி, தள்ளி பணியில் அமர்த்திவிடுகிறோம். மாற்றல் உத்தரவு வேண்டும் என்றால் ஒரு லட்சம் கொடுங்கள்" என்று கேட்க தொடங்கினார்கள். இப்போதும் அந்த வேலையைத்தான் அதிகாரிகள் பார்க்கிறார்கள். இப்போது "மாற்றல் உத்தரவுகளை" உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கு போட்டுவருகிறார்கள். இதுவரை பி.டி. ஆசிரியர்களுக்கு மாற்றல் உத்தரவுகளை போடவில்லை. இப்போது கபில்சிபல் போட்ட உத்தரவுபடி, "தகுதி தேர்வு" கட்டாயம் நடத்த வேண்டும் என்பதை, தமிழக கல்வித்துறை அதிகாரிகள் வசமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். தகுதி தேர்வுகளுக்கு வெற்றிபெற "மூன்று லட்சம்" என்பது அவர்களது கணக்கு. அதில்குளிர் காய்கிறார்கள்.அதில்தங்களுக்கு ஒரு லட்சம்தான் வரும் என்றும் மீதிப்பணம், "மேலே" போய்விடுகிறது என்றும் அவர்கள் பகிரங்கமாக ஆட்சியாளர்கள் மீதே பழியை போட்டுவருகிறார்கள். இதை உடனேயே ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு நல்ல பெயர். இல்லாவிட்டால், அவர்களது இஷ்டம்/ 

                       . 

நில அபகரிப்புக்கு எதிராக : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


நில அபகரிப்புக்கு எதிரான தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழி போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் தேசமெங்கும், கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைத்தீவில், தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரத்து நிற்கின்ற சிறிலங்கா இராணுவத்தினர், தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை திட்டமிட்ட வகையில் அபகரித்து வருகின்றமை, சமீபத்திய காலங்களில் தீவிரமடைந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள், இத்தகைய நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கஙை நடாத்த இருப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, தமிழர் வாழும் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்களை, சமாந்திரமாக முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் மீதான, இனவாதிகளின் அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னாரில் இடம்பெற்றிருந்த சாத்விகவழியிலான போராட்டத்திற்கு வலுவூட்ட தமிழர்கள் வாழும் தேசமெங்கும், தோழமையோடு சர்வத வழிபாட்டு விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் தொடர்சியாக தமிழர் தாயகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நில அபகரிப்பு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு சமாந்திரமாக, இப்போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்கின்றது.

தமிழர் வாழும் தேசம் யாவும், நமது புதிய போர்களம் என்ற அடிப்படையில், உலகந்தழுவியரீதியில், தாயக மக்களுக்கு எமது தோழமையுணர்வினைத் தெரிவிப்பதோடு, தாயகத் தமிழர்களின் போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்ல, உலகத் தமிழர்களின் போராட்டங்கள் வழிகோலுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தலித் பணத்தை பிடுங்கி பார்ப்பனர்களுக்கு சேவையா?    தமிழ்நாடு போககுவரத்து கழகம் பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிகமாக விவரம் தெரியும் என்று நினைக்கிறீர்களா? அதிகாரிகள் சொல்வதை கேட்கும் "ஆமாம்" சாமி என்கிறீர்களா?  சென்னை போககுவரத்து கழகத்தை உதாரணமாக பார்ப்போமா? "வெள்ளை" பெயர்ப் பலகை என்பது குறைந்த காசு பயணச்சீட்டு கொண்ட பேருந்து. "தாழ்த்தலாம்", "விரைவு பேருந்து" என்பவை அதிக காசை "அடித்து பிடுங்கும்" பேருந்துகள். அதிலும் "இருக்காய்" இருக்கும் லட்சணத்தில், மனிதன் அமர முடியாது. அதாவது நீண்ட கால் கொண்ட ஆறடி உள்ள எந்த மனிதனும் இந்த டீலக்ஸ் பேருந்துகளில் முறையாக முழுமையாக அமர முடியாது. திமுக ஆட்சியில் நேரு அமைச்சராக இருக்கும்போதே இந்த "கோளாறு" ஆரம்பமானது. அந்த நேருவே அந்த இருக்கைகளில் அமர முடியாது. அப்படிப்பட்ட இருக்கைகள். ஆயிரம் முறை சென்ற ஆட்சியில் கொரிப்பார்த்தும் எந்த நிவாரணமும் கிடைக்க வில்லை. இப்போதும் அப்படியே.

                        இப்போது ஒரு கண்டுபிடிப்பு எழுந்துள்ளது. கண்ணகிநகர். இந்த நகர் ஏழை, எளிய மக்களை சென்னைக்குள் இருந்து வீட்டு வேலைகள், சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, ஒட்டி வந்தவர்களை, கூவம் நதி ஓரம் குடி இருக்கிறீர்கள் என்று சொல்லி, ரயில்வே பாதை வருகிறது என்ற பெயரிலும், மாநகரை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரிலும், "வேயே" தொக்கி எரிந்து, ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் வீடு தருகிறோம் என விரட்டி அடித்தார்கள். அந்த கண்ணகி நகருக்கு செல்லும் பேருந்துகளில், என் அதிகமாக "டீலக்ஸ் பேருந்துகளும், எக்ஸ்ப்ரெஸ் பேருந்துகளும்" அனுப்படுகின்றன? அந்த இருவகை பேருந்துகளும் "அதிக கட்டணம்" வசூலிக்கும் ப[இருந்துகள் என்பது செந்தில் பாலாஜிக்கு தெரியாதா? அல்லது கண்ணகி நகர் மக்கள் ஏழை எளிய மக்கள் என்பதும், அவர்கள் இன்னமும் அன்றாட கூலி வேலைக்கு, சென்னை நகருக்குள் வந்துபோக பேருந்துகளை பயபடுத்துகிரார்கள் என்பது செந்தில் பாலாஜிக்கு தெரியாதா? அவர்களுக்கு ஏன் அதிகமாக "வெள்ளை பெயர்பலகை" கொண்ட "சாதா கட்டண" பேருந்துகளை அதிகமாக அனுப்ப அவரால் முடியவில்லை? ஏழை மக்களை இப்படி "சோர்ந்டி வாழை" ஏன் அவர் நினைக்கிறார்? 


                  அதேசமயம் அதே பேருந்து கழகம், மைலாபூர், மந்தவெளி, பெசன்ட் நகர், தி நகர்,   மடிப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு அதிகமாக "சாதா கட்டணம்" கொண்ட வெள்ளை நிற பெயர் பலகை கொண்ட பேருந்துகளை அனுப்பும் ரகசியம் என்ன? அந்த அபகுதிகளில் "பார்ப்பனர்கள்" அதிகம் வாழ்கிறார்கள் என்பதுதான் காரணமா? அபப்டியானால் பார்ப்பனர்களுக்கு "குறைந்த செலவில்" சேவை செய்ய, தலித்துகள் "தலையில்" கட்டண "சுமையை" ஏற்றுவதுதான் அமைச்சரின் பணியா? அமைச்சருக்கு தெரியாமல் "அதிகாரிகள்" அப்படி ஒரு திருட்டு வேலையை செய்கிறார்களா? எபப்டியோ தலித்துகளுக்கு கடினமும், பார்ப்பணர்களுக்கு சலுகையும் நடிமுரையில் "பேருந்து தடம்" வரை நீண்டுள்ளது என்பது கவனிக்கதக்கது.அதேசமயம் மந்தவெளி, தீநகர், மடிப்பாக்கம், பெசன்ட் நகர் என்று பார்ப்பனர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள "வசதிபடைத்த பார்ப்பனர்களுக்காக" குளிர் சாதன பேருந்துகளும் கவனமாக விடப்படுகின்றன. அந்த பாதைகளில் தீலக்சுகளும், விரைவு வாகனங்களும் அடைத்து கொள்வதில்லை. இப்போது புரிகிறதா? அதிகாரிகளும் "பார்ப்பனீய" மனயொபாவத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதை?