Sunday, June 17, 2012

கோவிலில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்?

கோவிலில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்?
    ஆன்மிகம் அதிகமாக நமது முதல்வரது மனதில் திரண்டோடும். அதனால் அவர் ஆட்சிக்கு வந்ததும், ஆன்மீக உணர்வில், கோவில்களில் எல்லாம் "இலவச உணவு" போடுவார். இந்த முறை "கோவிலுக்கு வருபவர்கள் செருப்பு வைக்க இலவசம்" என்று அறிவித்தார். அது எல்லா கோவிலக்ளிலும் உடனடியாக அமுலுக்கு வந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலிலும், அதேபோல செருப்பு வைக்க இலவசம் என்ற நடைமுறை பெரும் பெயரை அந்த முதல்வருக்கு பெற்று தந்தது. இப்போது நிலை என்ன? செருப்பு வைக்கும் இடத்திலும் "காசு" வாங்குகிறார்கள். அதற்கு யார் காரணம்? கபாலீஸ்வரர் கோவிலின் அரங்காவலர்தானே பொறுப்பு? யார் இந்த அறங்காவலர்? 

                       அப்போலோ மருத்துவமனையின் பண்கால்லி முதலாளி, விஜயகுமார் ரெட்டி தான் அந்த அறங்காவலர். ஒரு தலைமை அறங்காவலர் நியமிக்கப்பட்டால், நான்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி இன்னமும், நன்கு அறங்காவலர்களை நியமிக்க வில்லை. ஏன்? அறநிலையத்துறை தானே அவர்களை நியமிக்க வேண்டும் அறநிலையத்துறையை மிரட்டி, அப்போலோ முதலாளி, தன்னை தவிர யாரையும் நியமிக்க விடாமல் தடுக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. அபப்டியானால் அறநிலையத்துறை "பக்தர்களுக்கு" பட்டை நாமம் போடுகிறதா? அறநிலையத்துறையின் துணை ஆணையராக ஒருவர் பொறுப்புக்கு வந்து, ஆண்டுக்கு ஐம்பது லட்சம் லாபம் கிடைக்க வழி செய்தால், அவரை "இணை ஆணையர்" பொறுப்புக்கு உயர்த்துவது வழக்கமாம். காசு வரவை வைத்தே இங்கே ஆன்மிகம் தழைத்தோங்குகிறது. அதனால் பக்தர்களை "துன்புறுத்தி" துணை ஆணையர் வசூல் செய்கிறார்.

                  சிறப்பு வழிபாடு என்று ஒன்றை வைத்து அடஹ்ர்க்கு அதிக 'காசு வசூலிப்பதை" சென்ற திமுக அட்சி நடைமுறையில் வைத்திருந்தது. அப்போது சிறப்பு வழிபாட்டு கட்டணம் என "நூறு" ரூபாயை வாங்கி வந்த்ஜார்கலாம். ஜெயலலிதா ஆட்சியில் அது வெறும் "பத்து" ரூப்பஎன குறைக்க பட்டதாம். அதையும்கூட இப்போது அதிகாரிகள் கூட்டி விட்டார்கள் என்று பக்தர்கள் புலம்புகிறார்கள். இப்போது சிறப்பு வழிபாட்டிற்கு, இருபது ரூபாயும், நூறு ரூபாயும் வாங்குகிறார்கள் என்று பக்தர்களின் குரல் ஒழிக்க தொடங்கி உள்ளது. கோவில் ஓடியவர்களின் கூடாரமாக ஆக்க கூடாது என்று முன்னாள் முதல்வர் வசனம் எழுதினார்.இப்போது அதிகாரிகளே அந்த கொடியவர்களாக மாறுகிறார்களா? சிவன் கோவிலுக்கே "பட்டை நாமமா?". 

No comments:

Post a Comment