உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு மலேசியாவில் வருகிற வெள்ளிக் கிழமை 28 ஆம் நாள் நடைபெற உள்ளது. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோவையில் ம் இன அழிப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடத்திய செம்மொழி மாநாட்டிற்கு எதிராக, மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டின் கோடியை அப்போது பெற்றுக் கொண்ட மலேசியா நாட்டு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அடுத்த மாநாட்டை மலேசியாவில் நடத்த உறுதி செய்தார். அப்போது கோவை மாநாட்டிற்கு வந்திருந்த மலேசியாவின் 100 க்கு மேற்பட்ட பேராளர்கள் அதே உறுதியை எடுத்தனர். அந்த கோடி தோழர் வீர சந்தானத்தால், வரையப்பட்டது. அந்த கோவை மாநாட்டில் கலந்துகொண்ட மலேசியாவின் நாடாளுமன்ற உறப்பினர் குலசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிவநேசன், குணசேகரன், குலசேகரன், மற்றும் பொன்னுரங்கன், கலையரசன், டைகர் கண்ணன் சாமுவேல்ராஜ், குமார், போன்றோர் மலேசியாவில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். 2011 இல் மலேசியாவில் நாடிபெருவதாக இருந்த இந்த மாநாடு இப்போது 2012 இல் நடக்கிறது. அதற்க்கான பணிகளை தமிழ்நாட்டை சேர்ந்த புதுக்கோட்டை குருமூர்த்தி திறம்பட ஊக்குவித்துள்ளார். சென்ற மாதம் பேராசிரியர் சரஸ்வதியும் குருமுர்த்தியுடன் மலேசியா சென்று இந்த மாநாட்டு பணிகளை செய்து வந்தார்.
கோவையில் நடந்த முதல் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த மருத்துவர் கிருஷ்ணசாமி, பேராசிரியர் சரஸ்வதி, இந்திய தவுஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்பாக்கர், குருமூர்த்தி, டி .எஸ்.எஸ்.மணி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஆகியோரும் இந்த மலேசியா மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுவிட்டனர்.புலமைப் பித்தன், யாடவர் மகாஜன சங்கம் தலைவர் தேவநாதன், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் திருமதி பத்மாவதி ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுவிட்டனர். உலகம் எங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் பலரும் மாநட்டில் கலந்துகொன்ம்டு சிறப்பான முடிவுகளை எடுக்க உள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் மனத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். தமிழர்கலம் அரிமாவளவன், தூயவன் ஆகியோரும் வருகின்றனர்.